Thursday, July 1, 2010

ஒரு தலைக் காதலன் கடத்தல்

"என்னைய கடத்தல் காரி ஆக்கி விட்டானே படு பாவி பய" என்று சொல்லும் போது எதிர் முனையிலே கேட்டுக் கொண்டு இருந்தவன் உள்ளம் உடைந்தே விட்டது, கடத்தலிலே பத்து சதவீதம் பணம் தள்ளுபடி பண்ண வேண்டும் என்று மனதிலே நினைத்துக் கொண்டான், இன்னும் அவள் அழுவதை கேட்டுக் கொண்டு இருந்தால் காசு வாங்க முடியாத நிலை ஆகி விடும் என்பதாலே, வளவளத்தாவிடம்

"அழுவாதீங்க அக்கா, நீங்க சீக்கிரம் வாங்க, நாம நேரிலே பேசிக்கொள்ளலாம்"

வளவளத்தாவின் கண்ணீருக்கு காரணம் என்ன கொண்டவனா, இல்லை மனதை கொள்ளை கொண்டவனா? இனி பார்ப்போம். 

அலைபேசியை வைத்து விட்டு அடுத்த அரைமணி நேரத்திலே வளவளத்தா ஊருக்கு ஒதுக்கு புறமா இருந்த பாழடைந்த மண்டபம் வந்து இறங்கினாள். இரவு எட்டுமணி நல்ல கும் இருட்டாக இருந்தாலும், வளவளத்தாவுக்கு காத்து கருப்பு பயமே இல்லை, ஏன்னா பார்க்கிற எல்லோரும் அவளை கொஞ்சம் வடிவுன்னு நினைச்சாலும், அவள் எப்போதுமே கருப்பு அடிச்ச காத்து மாதிரி இருக்கிறதா நினைத்து கொள்வதாலே, அவளுக்கு பயம் இல்லை.

வளவளத்தைவை வரவேற்க சிகப்பு கம்பளம் இல்லைனாலும், சிகப்பு சட்டை போட்ட கடத்தல் ஆசாமி அழைத்து சென்றான், உள்ளே சென்றதும், பச்ச சட்டை, மஞ்ச சட்டை ஆசாமிகள் வணக்கம் வைத்தார்கள்.

"அவனை எங்கே"

"யக்கா, நாங்க இப்பத்தான் நாலு சாத்து சாத்தி, அவனை எழுப்பி விட்டு இருக்கோம், சரியான தூங்கு மூஞ்சியா இருப்பான் போல, கடத்தின கவலையே இல்லாம தூங்குறான்"

நேராக அவன் இருந்த அறைக்கு சென்றார்கள்.அறையிலே இருந்தவன் வளவளத்தாவைப் பார்த்ததும்.

"வா வளவள இப்பத்தான் வாரியா?"

"என்ன வளவள ?"

"இப்பத்தான் வடிவேலு நகைச்சுவை காட்சி பார்த்து விட்டு வந்த மாதிரி இருக்கு!!"

"அதிகமா பேசினே குடலை உருவி மாலையாய் போட்டுக்குவேன்"

உடனே மஞ்ச சட்டை "வளவளத்தாக்கா நீங்க கிட்னியை எடுக்கணுமுன்னு சொன்னீங்க, இப்ப குடலையும் எடுக்க சொல்லுறீங்க, குடல் எங்க இருக்கு?"

பதிலுக்கு பச்சை சட்டை "கிட்னி எடுக்க போற வழியிலே தான் இருக்குடா?"

"அப்ப சரி" என்று மஞ்ச சட்டை 

பச்சை சட்டை தலையை பிடித்துக் கொண்டு "வளவளத்தாக்கா என் பொழைப்பிலே மண் அள்ளிப் போடுறீங்க"

"என்னடா சொல்லுற!!!!"

"உங்க கல்யாண மாலை எல்லாம் என்கிட்டே இருந்து தான் வாங்குவேன்னு சொன்னீங்க, உங்க கல்யாணத்திலே குடல்ல மாலை போட்டா, என் மாலையை என்ன செய்ய"

"பச்ச மாலையை பத்தி அப்புறமா பேசி முடிவு எடுக்கலாம், முதல்ல இந்த ஆசாமியைக் கவனிக்கலாம்"

சொல்லிட்டு அறையிலே இருந்தவனிடம் "உலக அழகா,நான் உனக்கு எழுதின காதல் 
கடிதங்களைஎல்லாம் கொடுன்னு எத்தனை தடவை சொல்லுறது,மயிலே மயிலே இறகு போடுன்னு கேட்டுப் பார்த்தேன், அதான் இப்ப உன்னை மலை ஏத்திட்டேன்" 

"யக்கா இவனுக்கு போடுற ரெண்டு மாலைக்கும் சேத்து கணக்கு வச்சிக்கலாம்"

"வளவளத்தா நீ எவ்வளவு காதல் கடிதம் எழுதி இருக்கிறாய் உனக்கு கண்டிப்பா தெரிய வாய்ப்பு இல்லை, எனக்கு தெரியும், ஒரு லட்சத்தி முப்பத்தி மூணு ஆயிரம் கடிதங்கள் எழுதி இருக்கிறாய், அதை எல்லாம் கையிலே எடுத்திட்டு வர முடியாதது, ஆட்டோ அனுப்பி விடுன்னு சொல்லி நான் எத்தனை தடவை சொல்லுவது"

"உன்னையை ஆட்டோவிலே அள்ளிப் போடும் போதே சொல்லி இருந்தா, கடிதத்தையும் சேத்து அள்ளிக் போட்டு இருப்பாங்களே?" 

"என்னைய சுமோவிலே அள்ளிப் போட்டுட்டு வந்தாங்க"

இதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்த பச்ச சட்டை "ஒ" ன்னு கதறி அழுறாரு, சுத்தி நின்னவங்களுக்கு என்ன எதுன்னு புரியலை, உடனே வளவளத்தா அவரிடம்

"இப்ப ஏன் ஒப்பாரி வைக்குற?"

"இது கண்ணீர் இல்லை கடத்தல் கண்ணீர், லட்சம் காதல் கடிதம் வந்த ஒருத்தரை கடத்திட்டு வந்து இருக்கேன்னு நினைச்சி ரெம்ப பெருமையா இருக்கு,யக்கா உடம்பிலே இருக்கிற எல்லாத்தையும் ஆட்டையப் போட்டாலும், அவர் கை விரலை மட்டும் விட்டு வையங்க ஆட்டோ கிராப் வாங்கணும்"

"பச்ச சட்டை அண்ணே உங்க ஆதரவுக்கு நன்றி, வளவளத்தா கிட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்க, அதுக்கு பின்னால நீங்க என்னைய உங்க இஷ்டபடி செய்யுங்க"

"யக்கா, சாகப் போறவன் கடைசி ஆசை, என்னன்னு தான் கேளேன்"

"ஹும் .. கேட்டு தொலை"

"நீ எனக்கு ஒரு லட்சம் காதல் கடிதம் எழுதி இருக்க, நான் உனக்கு எத்தனை கடிதம் எழுதி இருக்கேன்"

"ஏலேய் வெண்ணை .. எழுதின உனக்கு தெரியலைன்னு, எங்க அக்காட்ட கணக்கு கேட்குறியோ?"

"எனக்கு தெரிஞ்ச வரை, நான் அவளுக்கு ஒரு காதல் கடிதமும் எழுதலை, அதான் கேட்கிறேன்"

பச்ச சட்டை, மஞ்ச சட்டை, சிகப்பு சட்டை முன்று பேரும் சேர்ந்து 

"அப்படியா"

"எப்படி நான் பதில் போட முடியும், ஒரு கடிதம் எழுதி கொடுத்திட்டு, அதுக்கு பதில் கடிதமா நாலு கடிதம் அவளே எழுதி கொடுத்துக்குவா,என்னோட கடிதத்துக்கு இப்படி பதில் எழுதுவியா .. 
இப்படி பத்தி எழுதுவியா ன்னு சொல்லியே நாலு கடிதம் கொடுப்பா ?,அதுக்குள்ளே ஒரு வாரம் முடிந்து விடும், அடுத்த காதல் கடிதம் எழுதி மறுபடியும் காதல் கடித வாழ்க்கை சுழற்சி 
முறையிலே வரும்,இதெல்லாம் உண்மையான்னு கேளுங்க"

பச்ச சட்டை, மஞ்ச சட்டை, சிகப்பு சட்டை முன்று பேரும் சேர்ந்து 

"என்ன ஒரு லட்சம் கடிதம் எழுதியும், பதில் கடிதம் எழுதாம இருக்கியா?, வளவளத்தக்கா இது கண்டிப்பா ஒரு தலைக் காதல் தான்,இனிமேலயும் இவனை விட்டு வைக்கக்௬டாது"

"நீ ஒரு லட்சம் கடிதம் எழுதிகிட்டே இருந்ததாலே, கிளிக்கு இன்னும் ரெக்கை முளைக்கலை, என்னோட தான் இருக்குன்னு நினைச்சிகிட்டு சும்மா இருந்தேன், ஆனா ஒரு வாரமா கடிதம் இல்லாததாலே கிளிக்கு ரெக்கை முளைத்து விட்டதொன்னு சந்தேகத்திலே நான் நேத்து ஒரு கடிதம் எழுதினேன், ஆனா இன்னைக்கு என்னை கடத்திட்டே,இந்தா நான் எழுதிய கடிதம்."

கடித்தைதை வாங்கி வளவளத்தா 

தாமதமா 
வந்த 
உன் 
கடிதத்தை 
என்ன செய்ய ?

"வளவள நீ வரி வரியா சொல்லுறதைப் பார்த்தால் கவிதை மாதிரி இருக்கு!!!"

"பச்ச,மஞ்ச சிகப்பு ஆட்டம் முடிஞ்சு போச்சி நீங்க போகலாம்,நான் இவன்கிட்ட 
கொஞ்சம் தனியா பேசணும்"

"நாங்க வெளியே இருக்கவா?"

"இல்ல வீட்டுக்கு போங்க"


"வளவள என்மேல கோபமா?"

"ஹும்.."

"சரி வா,அமெரிக்காவிலே போய் கனவுப் பாட்டு பாடுவோம்"


24 கருத்துக்கள்:

ILA(@)இளா said...

ஆஹ் என்ன படம் அது..? நீலக்குயில்’னு ஒரு படம்.. அது மாதிரியே இருக்கு

sriram said...

இதுலேந்து என்ன தெரியுதுன்னா, நாம மூணு பேரும்தான் உலகிலேயே மகா வெட்டிகள்னு தெரியுது
(நான், நசரேயன் மற்றும் இளா)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நசரேயன் said...

// sriram said...
இதுலேந்து என்ன தெரியுதுன்னா, நாம மூணு பேரும்தான் உலகிலேயே மகா வெட்டிகள்னு தெரியுது
(நான், நசரேயன் மற்றும் இளா)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//

தல ராணுவ ரகசியத்தை எல்லாம் வெளிய சொல்லக்௬டாது.. நமக்கு எதிரிகள் அதிகம்

sriram said...

என்னமோ சொல்ல வர்றீங்கன்னு நெனைக்கறேன், என்ன சொல்ல வர்றீங்கன்னுதான் புரியல
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நசரேயன் said...

//என்னமோ சொல்ல வர்றீங்கன்னு நெனைக்கறேன், என்ன சொல்ல வர்றீங்கன்னுதான் புரியல
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

நீங்க ஒரு ஆள் தான் கதைய(?) தெளிவா படிச்சி இருக்கீங்க

கே.ஆர்.பி.செந்தில் said...

வளவலத்தாலும் சூப்பர் ..

ILA(@)இளா said...

//வளவலத்தாலும் சூப்பர் ..//
எப்படிங்க செந்தில் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம.. சே சே

நசரேயன் said...

////வளவலத்தாலும் சூப்பர் ..//
எப்படிங்க செந்தில் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம.. சே சே
July 1, 2010 2:50:00 PM EDT //

யோவ் .. உண்மையச்சொல்ல சொல்ல விட மாட்டீங்களே

வானம்பாடிகள் said...

சொல்லாம விட்டது இது:

கடிதத்தை படிச்சிட்டிருந்த வளவளத்தா “ஏன் கருப்பா? ஒரு லட்சத்துக்கும் மேல கடிதம் எழுதினேனே. ஒரே ஒரு பிழை இருந்திச்சா? இந்த ஒரு கடிதத்துல ஒரு பத்தியிலேயே இவ்வளவு பிழை. இதுல உனக்கு அமெரிக்காவில கனவு பாட்டு கேக்குதா?” என்று வெளியே போன பச்சை, செவப்பு சட்டைய கூப்புட்டு அடிக்க சொன்னாள். அப்போ ஓடினவந்தான். இப்போ அமெரிக்காவில வந்து இப்புடி இடுகை போட்டு தேத்திக்கிறேன்.

இதானே:)). கதை சூப்பர். முக்கியமா பிழை ஒன்னும் கண்ணில் படலை.:)))

நசரேயன் said...

//இதானே:)). கதை சூப்பர். முக்கியமா பிழை ஒன்னும் கண்ணில் படலை.:)))//

அண்ணே மெய்யாலுமேவா?

பா.ராஜாராம் said...

//"எப்படி நான் பதில் போட முடியும், ஒரு கடிதம் எழுதி கொடுத்திட்டு, அதுக்கு பதில் கடிதமா நாலு கடிதம் அவளே எழுதி கொடுத்துக்குவா,என்னோட கடிதத்துக்கு இப்படி பதில் எழுதுவியா ..
இப்படி பத்தி எழுதுவியா ன்னு சொல்லியே நாலு கடிதம் கொடுப்பா ?,அதுக்குள்ளே ஒரு வாரம் முடிந்து விடும், அடுத்த காதல் கடிதம் எழுதி மறுபடியும் காதல் கடித வாழ்க்கை சுழற்சி
முறையிலே வரும்,இதெல்லாம் உண்மையான்னு கேளுங்க"//

:-)))

மொத்த இடுகையும் ஜாலி பாஸ். கொள்ளக் கூட்ட பாஸ்.

Chitra said...

கடித்தைதை வாங்கி வளவளத்தா

தாமதமா
வந்த
உன்
கடிதத்தை
என்ன செய்ய ?

"வளவள நீ வரி வரியா சொல்லுறதைப் பார்த்தால் கவிதை மாதிரி இருக்கு!!!"


...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம காமெடி!

ஹேமா said...

//தாமதமா
வந்த
உன்
கடிதத்தை
என்ன செய்ய ?//

என்னமா ஒரு கவிதை.தமிழ்மணம் போட்டிக்கு அனுப்புங்க நசர் !

நல்ல வேளை....குடல் கிட்னி எல்லாம் எடுக்கமுதல் ஒருதலைக் காதல் கடிதங்களைப் பற்றிப் பேசினபடியால நல்லதொரு கவிதையோட காதல் கை கூடியிருக்கோ !

வாழ்க வாழ்க வளவளத்தா காதல் வாழ்க.அந்த *அவன்* யாரு நசர் !

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...எல்லாருக்கும் ஒருதலை தானேங்க இருக்கும்?!!

சந்தனமுல்லை said...

ஸ்..ப்பா...கடைசி வரைக்கும் படிச்சேன்...என்ன படம்னு கண்டுபிடிக்க முடியலை...நீங்களே சொல்லிடுங்க..ப்லீஸ்! :))

சந்தனமுல்லை said...

வன்முறை கொஞ்சம் ஓவரா இருக்கு...அவ்வ்வ்!

அமைதிச்சாரல் said...

வளவளத்தாவின் ஒருதலைக்காதல் வாழ்க.(கிட்னி,குடலுடன் பத்திரமாக).

:-)))))

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

pinkyrose said...

vettiya katha elutha neram iruku en blog pakkam vara mattum neram illiyo?
hello mister olunga mariyathaya vanthu karuthu sollitu ponga illa oru nalaiku 10 post pottu unga mailku anupi vachurvan

pinkyrose said...

vettiya katha elutha neram iruku en blog pakkam vara mattum neram illiyo?
hello mister olunga mariyathaya vanthu karuthu sollitu ponga illa oru nalaiku 10 post pottu unga mailku anupi vachurvan

Anonymous said...

//வளவளத்தைவை//

எதுக்கு வம்பு. வானம்பாடிகள் ஐயா மாதிரி நானும் எழுத்துப்பிழை எதுவும் கண்ணுக்கு தெரியலைன்னு சொல்லிக்கறேன் :)

அப்பாவி தங்கமணி said...

//sriram said...இதுலேந்து என்ன தெரியுதுன்னா, நாம மூணு பேரும்தான் உலகிலேயே மகா வெட்டிகள்னு தெரியுது
(நான், நசரேயன் மற்றும் இளா)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

உண்மை மட்டும் பேசும் தினமா பாஸ்... வெரி குட்... I appreciate it

ராஜ நடராஜன் said...

நான் தூங்கப் போறேன்!

வில்லன் said...

//"வளவளத்தா நீ எவ்வளவு காதல் கடிதம் எழுதி இருக்கிறாய் உனக்கு கண்டிப்பா தெரிய வாய்ப்பு இல்லை, எனக்கு தெரியும், ஒரு லட்சத்தி முப்பத்தி மூணு ஆயிரம் கடிதங்கள் எழுதி இருக்கிறாய், அதை எல்லாம் கையிலே எடுத்திட்டு வர முடியாதது, ஆட்டோ அனுப்பி விடுன்னு சொல்லி நான் எத்தனை தடவை சொல்லுவது"//

அட சனியன்களா இப்படி வேலைவெட்டி இல்லாம ஒரு லட்சத்தி முப்பத்தி மூணு ஆயிரம் கடிதங்கள் எழுதினா சோத்துக்கு மண்ணைத்தான் திங்கணும்....