சொல் அணியும் பதிவர்களும்
கதை, கட்டுரை, மொக்கை, சூர மொக்கை, மரண மொக்கை,கவுஜ, மொக்கை கவுஜை இப்படி பலதரப்பட்ட துறைகளில் ஆராட்சி செய்தது ஞான பீட விருது, சாத்திய பீட விருது என்று பல விருதுகளை வாங்கி குவித்து இருந்தாலும், தமிழ்ல பல ஆண்டுகளாக எழுதிவந்தாலும் தமிழுக்கு இன்னும் சேவை செய்யலையே என்று ஒரு ஏக்கம், ஊத்திக்க எதுவும் இல்லாமல் அப்படியே குடித்த நெப்போலியன் போல மனதை குமட்டியது, அந்த குமட்டலின் குமுறலே இந்த கொலைவெறி.இதைப் படிக்கிறவங்களுக்கு ரத்தக் கொதிப்பு வரலாம், இதயம் நிக்கலாம், இருந்தாலும் நிர்வாகம் எதையும் பற்றி கவலைப் படாது.மருந்தும் வாங்கி தராது, ஏன்னா நிர்வாகமே திவால்.
அபச்சொல், பழிச்சொல், பண்புச்சொல் இப்படி பலவற்றை கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் சொல்அணின்னு எங்கயோ கேள்விப்பட்ட ஞாபகம் இருக்கும், நாம பார்க்க போறது தமிழ் இலக்கணத்திலே வரும் சொல் அணி தான். என்னைப் போன்ற எழுத்தாளர்(?)களின் எழுதும் எழுத்தின் சொல்லழகும்,அதிலே புதைந்து இருக்கிற பொருள் அழகையும் சொல்லுறதுதான் அணி, ஒரு வாக்கியத்தோட இல்ல பாட்டோட சொல்லையும், பொருளையும் அணிந்து வருவது அணி(?). அவரு அப்படி எழுதி இருக்காரு, இப்படி எழுதி இருக்காரு, அதிலே உள்குத்து இருக்குன்னு
சொல்லுறதும் அணிதான்(?).ஆக எழுதுற எல்லோருமே தனக்கு தெரியாமலே எதாவது ஒரு அணிவைகையிலே எழுதுறாங்க(?)
அணியிலே பலவகைகள் இருக்கும் போது சொல் அணிக்கும் மட்டும் ஏன் இவன் சொம்பு அடிக்கிறான்னு கேக்கலாம், மத்த அணிகள் எல்லாம் பின்னால வரும்.பொட்டி தட்டுறவங்க, எப்படி தான் கோடு(code) கிழிச்சாலும், அவங்களுக்கு தெரியாமலே அது திட்ட மாதிரியிலே(Design pattern) வருவது போல,நாம அன்றாடம் பயம் படுத்தும் வார்த்தைகளிலே அணிகள் நமக்கு தெரியாமலே வருகிறது.
இந்த சொல் அணியை ஆறு வகையாப் பிரிக்கலாம்,அதன் வகைகள் எதுகை, மோனை, சிலேடை, மடக்கு, பின்வருநிலை, அந்தாதி. பல வருடத்துக்கு முன்னாடி படிச்சி இருப்பீங்க, இப்ப ஒவ்வொரு வகைப் பற்றி பார்க்கலாம்.
எதுகை:
அவன் அவளுக்கு அவலம், இவனுக்கு அவள் தேவதை.
நாக்கு பாக்குன்னதும் பக்குன்னுது பக்கி,பக்கி,
மேல இருக்கிற ரெண்டு வரியைப் பார்த்தீர்கள் என்றால் இரண்டாவது எழுத்து ஒவ்வொரு வார்த்தைளிலும், ஒரே மாதிரி இருக்கும், இப்படி ஒரு வசனத்திலோ, கவுஜையிலே இரண்டாவது எழுத்து ஒழுங்கு பட வந்தால் அது எதுகை, வசனம் தானே இருக்கு, கவுஜை எங்கன்னு நீங்க கேட்கலாம், மேல உள்ள வசனத்தை வரி வரியா போட்டா கவுஜை,வரி வரியா போட்டதை மறுபடி ஒரு தடவை படிச்சா எனக்கு தாகூர் மாதிரி நோபல் பரிசே கிடைக்கும்
மோனை:
கண்ணே கரும்பே
கண்ணால் காணவில்லை
கவுஜையால் கண்டேன்
காதலைக் கண்டேன்
கருவாடாகி காணமப்போனேன்
மேல இருக்கிற அகில உலகப் புகழ் பெற்ற கவிதையிலே, முதல் எழுத்தை நல்லா உத்துப் பார்த்தா ஒழுங்கு பட வருகிறது, அப்படி வந்தா அதுக்கு பேரு மோனை.
இதை எப்படி ஞாபகம் வைப்பது, எதுகையிலே வருகிற "எ" ன்னா எடுபிடி, எப்போதும் பின்னால வருவான், அதனாலே அது ரெண்டாவது எழுத்து. அது ரெண்டுன்னா மோனை முன்னாடி,மேனா மினிக்கி எப்போதும் முன்னாடி வருவா. அதாவது முதல் எழுத்து.இதோட எதுகை மோனைக்கு மங்களம் பாடியாச்சி, இனிமேல வருவது சிலேடை.
சிலேடை:
ஒரு சொல்லையோ வாக்கியத்தையோ பிரிக்க பிரிக்க ஏகப்பட்ட பொருள் தருகிற மாதிரி சொல்லுறது. உள்குத்து மேல உள்குத்து வைத்து சொல்லுறது சிலேடை(?).
"அவன் துண்டை எடுத்து கொடுத்தான் அவள் வாங்கிகொண்டாள்."
அவன் என்பது யாராகவும் இருக்கலாம், கடைக்காரர், கட்டுனவரு, கடலை போடுறவரு இப்படி யாரானாலும் இருக்கலாம்.
துண்டுக்கு இன்னொரு விளக்கம் என்னன்னு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கனவிலாதவன் = கனவில்+ஆதவன்
கனவிலாதவன் = கனவு + இல்லாதவன்
மேல இருக்கிறதைப் பிரிச்சா ரெண்டு அர்த்தம் வருது பாருங்க
மடக்கு:
ஒரு வாக்கியத்திலே தொடர்ந்து வருகிற ஒரே உள்குத்து வேற பொருள்ள வரும். விளக்கம் வேணுமா ?
உள்குத்து உள்குத்து (திரும்ப திரும்ப திரும்ப படிங்க)
ஒரு வாக்கியத்திலே வருகிற உள்குத்து, ஒரே சொல்லா இருந்தாலும், இடத்துக்கு இடம் பொருள் வேறுபாடும், அதாவது ஒரே சொல்லைப் பயன் படுத்தி
பல உள்குத்துக்களை திணிக்கலாம். அதுவே பின்வருநிலை(பின்னால் வருகின்ற நிலைப்பாடு(?))
இந்த உள்குத்தை மூணு வைகயாப் பிரிக்கலாம்
என்னைய எல்லாம் இப்படி கருத்து சொல்ல வச்ச அணி வாழ்க
2 க்கும், 3 க்கும் எடுத்துகாட்டு ஏன் சொல்லலைன்னு நீங்க கேட்க மாட்டீங்க, இருந்தாலும் நானே சொல்லுறேன், பரீட்சையிலே எல்லா கேள்விக்கும் விடை எழுதி பழக்கம் இல்லை, இடுகைக்கு எழுதுவேனா?
ஒரு வரியின் முடிவிலே, அடுத்த வரியின் ஆரம்பம்.
கண்ணுக்கு காவல் காதல்
ஆதிஅந்தம் என்று ஏன் இல்லன்னு தெரியலை, எனக்கு தெரிஞ்ச அறிவுக்கு நான் சொல்லுறேன், அதாவது ஒரு வரியின் முதல் வாக்கியம், அடுத்த வரியின் முடிவு வாக்கியமா வச்சா, அடுத்த வரியின் ஆரம்பம் ஒரு புது வார்த்தையா இருக்கும்.
29 கருத்துக்கள்:
பின்றீங்க...
கண்ணே கரும்பே கண்ணால் காணவில்லை கவுஜையால் கண்டேன் காதலைக் கண்டேன் கருவாடாகி காணமப்போனேன்
yeppo thirumbi varuvenga
மேல உள்ள வசனத்தை வரி வரியா போட்டா கவுஜை,வரி வரியா போட்டதை மறுபடி ஒரு தடவை படிச்சா எனக்கு தாகூர் மாதிரி நோபல் பரிசே கிடைக்கும்
seekiram kuduthidalam
ஊத்திக்க எதுவும் இல்லாமல் அப்படியே குடித்த நெப்போலியன் போல மனதை குமட்டியது, அந்த குமட்டலின் குமுறலே இந்த கொலைவெறி
::)))
அவன் அவளுக்கு அவலம், இவனுக்கு அவள் தேவதை.
நாக்கு பாக்குன்னதும் பக்குன்னுது பக்கி,பக்கி,
inime yethugai monai nu pesuven
கனவில்லாதவன் = கனவில்+ஆதவன்
கனவிலாதவன் அப்படின்னுதான வரும்?!
வர வர, யாரோ நியூயார்க் இரயிலடியில எழுதித் தர்றாங்க போல?!
சூப்பரா இருக்கு...
avvvvvvvvvv
:(((((((((
ஏண்ணே நல்ல விசயம் சொல்லியிருக்கீங்க. அதை மக்களுக்குப் புரியிற மாதிரி சினிமாப்பாட்டு விளக்கம் குடுத்திருக்கலாம்ல?
ஆனா ஒண்ணு.. என்னதான் இப்பிடி எல்லாம் இடுகை போட்டாலும் எளக்கிய அணித்தலைவர் பதவியெல்லாம் கிடைக்காது சொல்லிட்டேன்.
தளபதியின் தங்கு தடையற்ற தமிழ்நடை(!!!) தங்களின் தமிழார்வத்தை தரம்பிரித்து ........ (எதோ தளபதிய பத்தி மோனை - அணில எழுதலாமேன்னு ... இதுக்கு மேல முடியல....)
///நாக்கு பாக்குன்னதும் பக்குன்னுது பக்கி,பக்கி///
நான் வேற தனியா சொல்லனுமாக்கும் :))) ROFL
// sakthi said...
கண்ணே கரும்பே கண்ணால் காணவில்லை கவுஜையால் கண்டேன் காதலைக் கண்டேன் கருவாடாகி காணமப்போனேன்
yeppo thirumbi varuvenga////
சக்தி: எத்தனை பேர வேணாலும் அழைத்துக் கொண்டு வாங்க.. ஆனா பாருங்க... முதல் போணி என்னுதுதான்.. நல்லா நறுக்குன்னு கொட்டனும் நடு மண்டையிலே... சரியா.. :-)))
/சாத்திய பீட விருது/
சாத்துற சாத்துல உமக்காகத்தான் ஆரம்பிக்கணும். அது சாகித்திய அகாதமி.
அதென்ன எளக்கியம் மேலயே ஒரு கண்ணு:))
//எதுகையிலே வருகிற "எ" ன்னா எடுபிடி, எப்போதும் பின்னால வருவான், அதனாலே அது ரெண்டாவது எழுத்து. அது ரெண்டுன்னா மோனை முன்னாடி,மேனா மினிக்கி எப்போதும் முன்னாடி வருவா.//
இதைவிட எளிமையா ஒருபய சொல்லி கொடுக்க முடியாது தல!
கண்ணே கரும்பே கண்ணால் காணவில்லை கவுஜையால் கண்டேன் காதலைக் கண்டேன் கருவாடாகி காணமப்போனேன்
...... அய்யா...... எங்கேயோ போயிட்டீங்க..... செம்மொழி மாநாட்டில, உங்களை கூப்பிட்டு, உங்கள் புலமையை கௌரவிக்காம போயிட்டாங்களே என்று ஒரே வருத்தமாக இருக்கிறது.....
என்னா தெளிவு! என்னா விளக்கம்! என்னா இலக்கியம்! என்னா இலக்கணம்! தமிழ் வாழ்க!
//.. எதுகையிலே வருகிற "எ" ன்னா எடுபிடி, எப்போதும் பின்னால வருவான், அதனாலே அது ரெண்டாவது எழுத்து. அது ரெண்டுன்னா மோனை முன்னாடி,மேனா மினிக்கி எப்போதும் முன்னாடி வருவா ..//
எப்படி இப்படியெல்லாம்..??!!
சூப்பரா இருக்கு...
//நாக்கு பாக்குன்னதும் பக்குன்னுது பக்கி,பக்கி, //
இஃகி இஃகி
எங்க தமிழ் வாத்தியாரு எல்லாம் தப்பு தப்பா இஃகி இஃகி
எங்க தமிழ் வாத்தியாரு எல்லாம் தப்பு தப்பா சொல்லிக்கொடுத்துகினாரோ...
shabba kannak kattudhe
இஸ்கோல்ல கூட இப்படியெல்லாம் சொல்லித் தந்ததில்லையே!??
ஏங்க என்னாச்சி உங்கள நம்பி கட நடத்தினா இப்படியா நட்டாத்துல விடுவீங்க?
//வர வர, யாரோ நியூயார்க் இரயிலடியில எழுதித் தர்றாங்க போல?//
அங்கயுமா!!!??
/அசோகர் மரம் நட்டார்//
ஹல்க் பாடி போல அவருக்கு அப்படியே மரத்த நட்டிருக்காரு பாருங்க!
இதை ஒரு மாசம் முன்னாடி போட்டிருந்தா, தமிழறிஞர் அப்படின்னு செம்மொழி மாநாட்டுக்காவது கூப்பிட்டிருப்பாங்க
எபப்டி இப்படி மெனகெட்டு...ம்ம்ம் என்னமோ போங்கப்பா
//சின்ன அம்மிணி said...
இதை ஒரு மாசம் முன்னாஇதை ஒரு மாசம் முன்னாடி போட்டிருந்தா, தமிழறிஞர் அப்படின்னு செம்மொழி மாநாட்டுக்காவது கூப்பிட்டிருப்பாங்க///
haa haa haaa...ithu ithu
யோவ்... :-))))
சிரிச்சுக்கிட்டே இருக்கேன் நசரு .. ரெண்டு மூணு தடவை வந்து படிப்பேன்.
fantastic! :-)))
அண்ணே சான்ஸே இல்ல.. பின்னு பின்னுன்னு பின்றீங்க.. உங்களுக்கு கண்ட மேணிக்கு எல்லா பீட விருதும் தரலாம் :)
//பந்தத்துக்கு காவல் தங்க நகை
தங்க நகைக்கு காவல் சேட்டு கடை.//
அய்யோ.. அய்யோ.. அய்யோ :)
இனி யாராச்சும் சொல்லுவீங்க...எழுத்துப் பிழை,கருத்துப்பிழைன்னு !கலக்கிட்டீங்க நசர் !
உண்மையில இதுதான் பதிவு !
ungalukku ilakkana piriyannu peru vachidalaamaa?-meerapriyan.blogspot.com
Post a Comment