Friday, March 6, 2009

திகிலூட்டும் பேய் - வயது வந்தவர்களுக்கு மட்டும்

வருஷம் 1960 காரவீடு

நடு இரவு மணி ஓன்று, ஐயோ யாராவது ஓடிவாங்களென்னு ஒரு குரல், ஐயோ பாவி மகளே இப்படி பண்ணிட்டியே, இதுக்காகவா உன்னை சீராட்டி தாலாட்டி வளர்த்தேன்.

அதே வருசத்திலே இரண்டு மாதம் கழித்து,நடு இரவு மணி ஓன்று

நான் உன்னை என்ன பண்ணினேன், நீ இருக்கும் போதுதான் எங்களை நிம்மதியா இருக்க விடலே, செத்தும் எங்க நிம்மதியை கெடுக்க பேயா அலையுறியே.

அதே நாள் அதி காலை 5 மணி, மணியக்கார ஐயா..ஐயா.. இங்க வாங்களேன், அம்மா.. அம்மா என் அழ ஆரம்பித்தாள்.

"அட..சீ இப்ப என்ன இழவு விழுந்து விட்டதுன்னு காலங்காத்தாலே ௬ப்பாடு போடுறே"

"ஐயா அம்மா நம்மளை விட்டு போய்ட்டாங்க, நீங்களே வந்து பாருங்க, அவளுடன் சென்ற மணியன் உத்திரதிலே தன் மகள் மரித்த அதே கயிரிலே தன் மனைவியும் தொங்குவதை பார்த்தார்."

வருஷம் 2008
ஒரு மாதத்திற்கு முன்

வீட்டிலே யாராவது இருக்காங்களா?

வீட்டின் உள்ளே இருந்து ராஜாமணி அம்மாள் வெளியே வந்தாள்.
'ஐயா நீங்க யாரு என்ன வேணும்?"

அம்மா,என் பேரு கருப்பையா, இந்த ஊருக்கு புதுசா வந்திருக்க வாத்தியாரு, நான் ஓட்டு பட்டியல் தயார் செய்கிறேன், உங்க வீட்டுல இருக்கிற எல்லோரோட பெயரையும் சொல்லுங்க"

எங்க வீட்டுல மொத்தம் மூணு பேரு, தனது பெயரையும், தன் மகன் பெயரையும் சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அவளின் மனநிலை புரிந்து கொண்ட வாத்தியார், "உங்க வீட்டுக்காரர் பேரு எழுதி இருக்கிற சீட்டு இருந்தா கொடு"

தனது குடும்ப அட்டையை எடுத்து கொடுத்தாள், அதிலே உள்ள பெயரை பதிவு செய்துவிட்டு, பெயரை ஒருதடவை வாசிக்கிறேன்னு சொல்லி விட்டு அவர் வாசிக்கும் போது தன் கணவன் பெயரை கேட்டதும், "ஐயா அவரு பேரு அது இல்லைங்கோ"

குழப்பமாக அவளை பார்த்து விட்டு " என்னம்மா சொல்லுற?"

"ஆமாங்க அவ சொல்லுறது உண்மைதான்" என் தன் பின்னால் இருந்து வந்த குரலுக்கு சொந்தக்காரரை திரும்பி பார்த்தார்.

சரி.. இப்ப உங்க பேரு என்ன?

"ஐயாவுக்கு குடிக்க காப்பி தண்ணி கொடு"

காப்பி தண்ணி எடுத்துவர ராஜாமணி சென்றதும், இப்ப என் பேரு ஜெபத்துரை, இதுக்கு எல்லாம் காரணம் எங்க வீட்டிலே இருக்கிற பேய்தான்.

பேய்க்கும் பேருக்கும் என்ன சம்பந்தமுன்னு தெரியலையே?

அதை என்ன ஐயா கேட்குறீங்க, இந்த மேல் வீட்டுல இருக்கிற பேயை அடிச்சி விரட்ட நான் பண்ணாத சடங்கு இல்லை, கேரளா நம்புதிரிகளை எல்லாம் வச்சி ஓட்டிப்பாத்திட்டேன், காசு காலியானதுதான் மிச்சம், அப்புறமா ஒரு பாதிரியாரிடம் சொன்னேன், அவரு வந்து ஜெபம் பண்ணின பாத்தாரு அப்படியும் போகலை, ஒரு வேளை பேரையும் சாமியையும் மாத்தினா போகுமான்னு மாத்திகிட்டேன். ஆனா பேய் போன பாடு இல்லை, இப்பக் ௬ட மசூதிக்கு போய் ஒரு ஆளை பார்த்து விட்டு வாரேன். அவரு நாளைக்கு வந்து பார்கிறேன்னு சொல்லி இருக்கார்.

எதோ சொல்ல வந்த வாத்தியார், உங்களுக்கு ஆட்சோபனை இல்லைனா நான் மேல் வீட்டை பார்க்கலாமா?

ஐயா வேண்டாம்... உங்களை பேய் அடிச்சிரும்

இதே வீட்டுல இருக்கிற உங்களை அடிக்காத பேய் எண்ணை என்ன செய்யும்?

பதில் சொல்ல முடியாமல் அவரை மாடிக்கு அழைத்து சென்றான், மாடியை சுற்றி பார்த்து விட்டு
இங்கே பேய் இருக்குன்னு எப்படி சொல்லுறீங்க?
பகல்ல அவ்வளவா நடமாட்டம் இருக்காது, ராத்திரி பாக்கனுமே அதோட ஆட்டத்தை, ஒரே கொலுசு சத்தமும் ஆட்டமுமா இருக்கும், செத்துப் போன என் தங்கச்சிக்கும், அம்மாவிற்கும் என் மேல ரெம்ப பாசம் அதுதான் அடிக்கடி நீயும் எங்க ௬ட வா ன்னு அடிக்கடி சொல்லுவாங்க.

வாத்தியார் வீட்டின் அமைப்பை கவனித்து கொண்டு இருந்ததால் ஜெபத்துரையின் வார்த்தைகளை காதில் வாங்கி கொள்ளவில்லை, வீட்டை நன்கு கவனித்து விட்டு ஒரு இடத்தில் கை வைத்தார். வைத்ததும் தூக்கி எறியப்பட்டார்.விழுந்தவர் நினைவை இழந்தார்.

வாத்தியார் நினவு எழுந்து எழும் போது அவரை சுற்றி ஒரு பெரிய ௬ட்டம் இருந்தது, பெரியவர் ஒருவர் "வழி விடுங்க நல்லா காத்து வரட்டும்", ௬ட்டம் கலைய ஆரம்பித்தது

இன்று

வாத்தியார் ஐயா, நீங்க தான் என் கண் கண்ட தெய்வம், என்னோட நீண்ட நாள் குறையை தீர்த்து வச்ச மகராஜன் நீங்க தான்.p>

நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க ௬டாது, எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான், பேய் ஓட்ட செலவழித்த ரூபாயை வீட்டை திருத்த செலவு செய்து இருந்தால் உங்க பிரச்சனை எப்பவோ தீர்ந்து போய் இருக்கும். மாடி வீட்டுல பேய் இருக்குன்னு யாருமே அங்கே போகாததினாலே வீட்டுல ஓட்டை விழுந்து மின்சார கசிவு ஏற்பட்டு இருக்கு, அதனாலே வருகிற சத்ததாலே அது பேய் தான்னு நீங்க முடிவு பண்ணீட்டீங்க. இதே மாதிரி போய் கொண்டு இருந்தால் நீங்க மாறுவதற்கு மதமே இருக்காது. எதையும் ஆழமா சிந்திங்க, செயல் படுங்க வெற்றி உங்க பக்கம் தான். சரி..சரி நேரமாச்சு நான் பள்ளிக் ௬டம் போகணும் வாரேன்

செல்லும் வழியிலே "வாத்தியாரு முரட்டு ஆசாமிடா அடங்காத கார வீட்டு பேயையே அடிச்சி விரட்டி பிட்டாரு, இனிமேல பேய் ஓட்ட வாத்தியாரை தான் ௬ப்பிடனும்" என்று சொல்வதை கேட்க முடிந்தது

79 கருத்துக்கள்:

பழமைபேசி said...

நாந்தான் முதல்....

பழமைபேசி said...

//வருஷம் 1960 காரவீடு//

பயங்கர காரமோ?

பழமைபேசி said...

//அவளுடன் சென்ற மணியன் //

அவ்வ்வ்வ்வ்வ்.... இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி!

பழமைபேசி said...

//இனிமேல பேய் ஓட்ட வாத்தியாரை தான் ௬ப்பிடனும்"//

மாடுமேய்ப்பர் வாத்தியார் ஆயிட்டாரா? அது எப்போ??

Anonymous said...

அசத்தல்...கத முடிச்சிருச்சா? ஆமா அது எந்த ஊரு பேய்?

சின்னப் பையன் said...

//எதையும் ஆழமா சிந்திங்க, செயல் படுங்க வெற்றி உங்க பக்கம் தான்.//

அரசியல்வாதி மாதிரி பேசறாரே....

நாமக்கல் சிபி said...

//செல்லும் வழியிலே "வாத்தியாரு முரட்டு ஆசாமிடா அடங்காத கார வீட்டு பேயையே அடிச்சி விரட்டி பிட்டாரு, இனிமேல பேய் ஓட்ட வாத்தியாரை தான் ௬ப்பிடனும்" என்று சொல்வதை கேட்க முடிந்தது//

நம்ம மக்கள் அடங்க(திருந்த) மாட்டாங்க!

நாமக்கல் சிபி said...

என்ன இந்த வாரம் பேய் வாரமா?

நாமக்கல் சிபி said...

//வயது வந்தவர்களுக்கு மட்டும்//

இந்த பில்டப்பு எதுக்கு?

Anonymous said...

சரி..சரி நேரமாச்சு நான் பள்ளிக் ௬டம் போகணும்
//
விடுங்கப்பா அவரை. சும்மா சும்மா பிடிச்சிக்கிட்டு. பேய் வாத்தியாரை கிட்ட வச்சா பயம் வராதா?

ஆவி அம்மணி said...

ஹைய்யா! எங்களைப் பத்தின பதிவு!

Mahesh said...

ஏம்வே.... நல்லாத்தானெவே இருந்தீரு? இப்பம் பேயோட்டப் போயிடியளா?

ஆவி அண்ணாச்சி said...

கூப்பிட்டீங்களா?

ரொம்ப நாளா தூங்கிட்டோம் போல!

நல்ல வேளை எழுப்பி விட்டீங்க!

ஆதவா said...

ஒரே திகிலோ.... இருங்க படிச்சுட்டு வாரேன்..

ஆதவா said...

நல்ல பதிவு... ஆனா நான் பயப்படல.....எங்க வீட்டுக்கு எதிர்வீட்ல தூக்கு போட்டு ஒருத்தர் தற்கொலை பண்ணிக்கிட்ட்டார்.. அதுக்கப்பறமா அந்த தெருவே பண்ண அலம்பல் இருக்கே!!!!

என்னதான் உண்மையச் சொன்னாலும் நம்பாத கூட்டங்களை என்ன செய்யறது....... வாத்தியார் பாடம் எடுத்தாலும் படிக்காத பசங்க....

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

சந்தனமுல்லை said...

//பழமைபேசி said...
//வருஷம் 1960 காரவீடு//

பயங்கர காரமோ?
//

LOL!

சந்தனமுல்லை said...

உங்க கதையைப் படிச்சாவது சமூகம் திருந்தினா சரி! :-)

RAMYA said...

நசரேயன் படிக்கலாமா பயமா இருக்கு !!!

RAMYA said...

//

"ஐயா அம்மா நம்மளை விட்டு போய்ட்டாங்க, நீங்களே வந்து பாருங்க, அவளுடன் சென்ற மணியன் உத்திரதிலே தன் மகள் மரித்த அதே கயிரிலே தன் மனைவியும் தொங்குவதை பார்த்தார்//

நசரேயன் நிஜமாவே பயமுறுத்தறீங்க
தனியா இருக்கும் போது இதை போய்
நான் படிச்சுட்டு அட !!!

RAMYA said...

//
திகிலுட்டும் பேய் - வயது வந்தவர்களுக்கு மட்டும்
//

ஏன் இப்படி பீதியை கிளப்பறீங்க ???

RAMYA said...

//
அதை என்ன ஐயா கேட்குறீங்க, இந்த மேல் வீட்டுல இருக்கிற பேயை அடிச்சி விரட்ட நான் பண்ணாத சடங்கு இல்லை, கேரளா நம்புதிரிகளை எல்லாம் வச்சி ஓட்டிப்பாத்திட்டேன், காசு காலியானதுதான் மிச்சம், அப்புறமா ஒரு பாதிரியாரிடம் சொன்னேன், அவரு வந்து ஜெபம் பண்ணின பாத்தாரு அப்படியும் போகலை, ஒரு வேளை பேரையும் சாமியையும் மாத்தினா போகுமான்னு மாத்திகிட்டேன். ஆனா பேய் போன பாடு இல்லை, இப்பக் ௬ட மசூதிக்கு போய் ஒரு ஆளை பார்த்து விட்டு வாரேன். அவரு நாளைக்கு வந்து பார்கிறேன்னு சொல்லி இருக்கார்.
//

இதை படிக்க பாவமா இருந்திச்சி
அப்போ பேய் தானா ??

அ.மு.செய்யது said...

வந்தேன்.........

RAMYA said...

//
எதோ சொல்ல வந்த வாத்தியார், உங்களுக்கு ஆட்சோபனை இல்லைனா நான் மேல் வீட்டை பார்க்கலாமா?

ஐயா வேண்டாம்... உங்களை பேய் அடிச்சிரும்

இதே வீட்டுல இருக்கிற உங்களை அடிக்காத பேய் எண்ணை என்ன செய்யும்?
//

ரொம்ப தைரியமான ஆளுங்க இவரு
என்னைய மாதிரி இல்லை.

RAMYA said...

//
பதில் சொல்ல முடியாமல் அவரை மாடிக்கு அழைத்து சென்றான், மாடியை சுற்றி பார்த்து விட்டு
இங்கே பேய் இருக்குன்னு எப்படி சொல்லுறீங்க?
பகல்ல அவ்வளவா நடமாட்டம் இருக்காது, ராத்திரி பாக்கனுமே அதோட ஆட்டத்தை, ஒரே கொலுசு சத்தமும் ஆட்டமுமா இருக்கும், செத்துப் போன என் தங்கச்சிக்கும், அம்மாவிற்கும் என் மேல ரெம்ப பாசம் அதுதான் அடிக்கடி நீயும் எங்க ௬ட வா ன்னு அடிக்கடி சொல்லுவாங்க.
//

ஐயோ பயந்து வருதே பேய் இப்பத் எல்லாம் சொல்லுமா??
எனக்கு தனியா இருக்கவே பயமா இருக்கு.

என்னை சுத்தி எல்லாரும் பேய் கதையா சொல்லறாங்கப்பா

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
வந்தேன்.........
//

WELCOME அ.மு.செய்யது!!

RAMYA said...

//
வாத்தியார் வீட்டின் அமைப்பை கவனித்து கொண்டு இருந்ததால் ஜெபத்துரையின் வார்த்தைகளை காதில் வாங்கி கொள்ளவில்லை, வீட்டை நன்கு கவனித்து விட்டு ஒரு இடத்தில் கை வைத்தார். வைத்ததும் தூக்கி எறியப்பட்டார்.விழுந்தவர் நினைவை இழந்தார்.வாத்தியார் நினவு எழுந்து எழும் போது அவரை சுற்றி ஒரு பெரிய ௬ட்டம் இருந்தது, பெரியவர் ஒருவர் "வழி விடுங்க நல்லா காத்து வரட்டும்", ௬ட்டம் கலைய ஆரம்பித்தது

//

அதானே வழி விட்டாதானே காத்து வரும் என்னா ஆளுங்கப்பா ??

வழியை விட்டு குறுக்க நிக்க வேண்டாம்
ஒண்ணுமே தெரியலை இவங்களுக்கு !!

அ.மு.செய்யது said...

//வருஷம் 1960 காரவீடு//

கார வீடா...இதென்ன புதுசா இருக்கு..

RAMYA said...

//

இன்று

வாத்தியார் ஐயா, நீங்க தான் என் கண் கண்ட தெய்வம், என்னோட நீண்ட நாள் குறையை தீர்த்து வச்ச மகராஜன் நீங்க தான்.

//

இல்லையா பின்னே வாத்தியாருன்னா சும்மாவா??

அவருக்குன்னு ஒரு இமேஜ் இல்லே ??

RAMYA said...

//
நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க ௬டாது, எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான், பேய் ஓட்ட செலவழித்த ரூபாயை வீட்டை திருத்த செலவு செய்து இருந்தால் உங்க பிரச்சனை எப்பவோ தீர்ந்து போய் இருக்கும். மாடி வீட்டுல பேய் இருக்குன்னு யாருமே அங்கே போகாததினாலே வீட்டுல ஓட்டை விழுந்து மின்சார கசிவு ஏற்பட்டு இருக்கு, அதனாலே வருகிற சத்ததாலே அது பேய் தான்னு நீங்க முடிவு பண்ணீட்டீங்க. இதே மாதிரி போய் கொண்டு இருந்தால் நீங்க மாறுவதற்கு மதமே இருக்காது. எதையும் ஆழமா சிந்திங்க, செயல் படுங்க வெற்றி உங்க பக்கம் தான். சரி..சரி நேரமாச்சு நான் பள்ளிக் ௬டம் போகணும் வாரேன்

//

சூப்பர், நெத்தி அடி நசரேயன் இங்கே தான் நீங்க நின்னுட்டீங்க,

அட எவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க நல்ல மெசேஜ் நசரேயன்

RAMYA said...

//
செல்லும் வழியிலே "வாத்தியாரு முரட்டு ஆசாமிடா அடங்காத கார வீட்டு பேயையே அடிச்சி விரட்டி பிட்டாரு, இனிமேல பேய் ஓட்ட வாத்தியாரை தான் ௬ப்பிடனும்" என்று சொல்வதை கேட்க முடிந்தது

//

அட இப்படி வேறே புரளியை கிளப்பிட்டாங்களா??

பாவம் வாத்தியாரு !!

அ.மு.செய்யது said...

இப்ப தான் ஃபுல்லா படிச்சேன்...சூப்பரா இருக்குங்க சிறுகதை....

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//வருஷம் 1960 காரவீடு//

கார வீடா...இதென்ன புதுசா இருக்கு..

//

செய்யது அது சிமென்ட் போட்ட தரை போட்ட வீடு போல அதைத்தான் கார வீடுன்னு சொல்லறாங்க .

கார --> வழக்கொழிந்த சொல்லுன்னு வச்சிக்கோங்க.

அ.மு.செய்யது said...

முள்ல மாட்டின சட்டையை பேயின்னு நினைச்சி திரும்பி பாக்க தைரியம் இல்லாம மூச்சடைச்சி செத்து போன பிச்சைக்காரர் கதையை சின்ன வயசுல படிச்சிருக்கேன்.

அதே எஃபெக்ட் உங்க கதையில...செம‌ ஃப்ளோங்க..

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
இப்ப தான் ஃபுல்லா படிச்சேன்...சூப்பரா இருக்குங்க சிறுகதை....
//

ஃபுல்லாவா?? வேண்டாம், வேண்டாம்

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
முள்ல மாட்டின சட்டையை பேயின்னு நினைச்சி திரும்பி பாக்க தைரியம் இல்லாம மூச்சடைச்சி செத்து போன பிச்சைக்காரர் கதையை சின்ன வயசுல படிச்சிருக்கேன்.

அதே எஃபெக்ட் உங்க கதையில...செம‌ ஃப்ளோங்க..

//

இந்த கதையும் super இருக்குதே
செய்யது இதே வச்சி ஒரு பதிவு
போட்டு இருக்கலாமே!!

அ.மு.செய்யது said...

//RAMYA said...
//
அ.மு.செய்யது said...
//வருஷம் 1960 காரவீடு//

கார வீடா...இதென்ன புதுசா இருக்கு..

//

செய்யது அது சிமென்ட் போட்ட தரை போட்ட வீடு போல அதைத்தான் கார வீடுன்னு சொல்லறாங்க .

கார --> வழக்கொழிந்த சொல்லுன்னு வச்சிக்கோங்க.
//

ஓஹ்.......இண்பரமேசன் இஸ் வெல்த்...நன்றி டீச்சர்.

RAMYA said...

செய்யது வந்த வேலை முடிஞ்சி போச்சு நான் போரேன்!!

ஹா ஹா பாத்தீங்கள நீங்க போற இடத்துலே விளக்கம் சொன்னேன், இதுக்கு ஒரு treat தரனும் சரியா??

அ.மு.செய்யது said...

//"ஐயாவுக்கு குடிக்க காப்பி தண்ணி கொடு"//

எனக்கும்ங்க..

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//"ஐயாவுக்கு குடிக்க காப்பி தண்ணி கொடு"//

எனக்கும்ங்க..
//

அதெல்லாம் கேட்டா பேய் வரும் பரவா இல்லையா ??

அ.மு.செய்யது said...

//RAMYA said...

ஹா ஹா பாத்தீங்கள நீங்க போற இடத்துலே விளக்கம் சொன்னேன், இதுக்கு ஒரு treat தரனும் சரியா??//

Treat பிஸ்கட் தான...கண்டிப்பா வாங்கி தர்றேன். ஒன்லி டென் ருப்பீஸ்.//

அ.மு.செய்யது said...

//RAMYA said...
//
அ.மு.செய்யது said...
//"ஐயாவுக்கு குடிக்க காப்பி தண்ணி கொடு"//

எனக்கும்ங்க..
//

அதெல்லாம் கேட்டா பேய் வரும் பரவா இல்லையா ??
//

பேயா...........?? ஏற்கெனவே நசரேயன் பதிவ அர்த்த ராத்திரியில படிச்சதுக்கே இன்னும் எஃபெக்ட் காட்டுது...

போங்க போய் ஒட்டு போடுங்க
பாவம் கஷ்டப்பட்டு எழுதி இருக்காரு
கொஞ்சம் கூட பயம் இல்லாமே!!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//RAMYA said...
//
அ.மு.செய்யது said...
//"ஐயாவுக்கு குடிக்க காப்பி தண்ணி கொடு"//

எனக்கும்ங்க..
//

அதெல்லாம் கேட்டா பேய் வரும் பரவா இல்லையா ??
//

பேயா...........?? ஏற்கெனவே நசரேயன் பதிவ அர்த்த ராத்திரியில படிச்சதுக்கே இன்னும் எஃபெக்ட் காட்டுது...

//

நானு கூட பயந்து கிட்டேதான் உக்காந்து இருக்கேன் இடத்தை விட்டு எழுந்திருக்கவே பயந்து வருது!!

அ.மு.செய்யது said...

// RAMYA said...
//
அ.மு.செய்யது said...
முள்ல மாட்டின சட்டையை பேயின்னு நினைச்சி திரும்பி பாக்க தைரியம் இல்லாம மூச்சடைச்சி செத்து போன பிச்சைக்காரர் கதையை சின்ன வயசுல படிச்சிருக்கேன்.

அதே எஃபெக்ட் உங்க கதையில...செம‌ ஃப்ளோங்க..

//

இந்த கதையும் super இருக்குதே
செய்யது இதே வச்சி ஒரு பதிவு
போட்டு இருக்கலாமே!!
//

ஆஹா..நானா தான் உளறிட்டனா...

இத கொஞ்சம் பில்டப் பண்ணி நசரேயன்கு ஒரு எதிர்பதிவு போட்ருக்கலாமே !

அ.மு.செய்யது said...

ஓட்டு போட்டாச்சி.......ரெண்டாயிரம் எப்ப ?

அ.மு.செய்யது said...

//RAMYA said...
செய்யது வந்த வேலை முடிஞ்சி போச்சு நான் போரேன்!!
//

எஸ்ஸா.......

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
ஓட்டு போட்டாச்சி.......ரெண்டாயிரம் எப்ப ?

//

நசரேயன் வரட்டும் வாங்கி தரேன்
எனக்கும் வேணும் 2000 ஆயிரம்!!

RAMYA said...

50

RAMYA said...

ஹா ஹா இப்படி ஏமாந்து போனீங்களா??

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//RAMYA said...
செய்யது வந்த வேலை முடிஞ்சி போச்சு நான் போரேன்!!
//

எஸ்ஸா.......
//

ஆமா நான் போரேன் !!

அ.மு.செய்யது said...

//RAMYA said...
ஹா ஹா இப்படி ஏமாந்து போனீங்களா??
//

இதெல்லாம் செல்லாது செல்லாது...நீங்க போயிட்டீங்கனு நினச்சி கேசுவலா ஆஃப் அடிக்கலாமுனு பார்த்தா...

Anonymous said...

யாருப்பா அது நைட்ல...பொறில வச்ச வடைய காணோம்.

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//RAMYA said...
ஹா ஹா இப்படி ஏமாந்து போனீங்களா??
//

இதெல்லாம் செல்லாது செல்லாது...நீங்க போயிட்டீங்கனு நினச்சி கேசுவலா ஆஃப் அடிக்கலாமுனு பார்த்தா...

//

நாங்க இங்கே தான் இருந்தோம் அப்போ அதன் அடிச்சோம் ஐம்பது

RAMYA said...

//
பெருச்சாளி said...
யாருப்பா அது நைட்ல...பொறில வச்ச வடைய காணோம்.
//

செய்யது வடையை காணோமாம்
எடுத்து இருந்தா கொடுத்திடுங்க
எனக்கு பயந்து வருது.

ஆவி அம்மணி said...

ம்ஹூம்! வடை போச்சே!

ஆவி அம்மணி said...

//இதெல்லாம் செல்லாது செல்லாது...நீங்க போயிட்டீங்கனு நினச்சி கேசுவலா ஆஃப் அடிக்கலாமுனு பார்த்தா..//

அட! விளையாட்டுல இதெல்லாம் சகசமுங்க!

ஆவி அம்மணி said...

//நாங்க இங்கே தான் இருந்தோம் அப்போ அதன் அடிச்சோம் ஐம்பது//

ஐம்பது அடிச்ச தோழி ராமய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஆவி அம்மணி said...

50 அடிக்கிறதா பெருசு!

நைண்டியாவது அடிக்கணுங்க! அப்பத்தான் ஒரு கெத்து!

அ.மு.செய்யது said...

// RAMYA said...
//
பெருச்சாளி said...
யாருப்பா அது நைட்ல...பொறில வச்ச வடைய காணோம்.
//

செய்யது வடையை காணோமாம்
எடுத்து இருந்தா கொடுத்திடுங்க
எனக்கு பயந்து வருது.
//

ஒரு வடைக்கெல்லாமா பயப்படுவீங்க..

அ.மு.செய்யது said...

//ஆவி அம்மணி said...
ம்ஹூம்! வடை போச்சே!
//

நைட்டு 12 மணிக்கு மேல பின்னூட்டம் போடுறதினால தான் இந்த பேர வைச்சிங்களோ !!!!!

இப்ப தான் லேசா பயம் வருது...

அ.மு.செய்யது said...

//ஆவி அம்மணி said...
50 அடிக்கிறதா பெருசு!

நைண்டியாவது அடிக்கணுங்க! அப்பத்தான் ஒரு கெத்து!
//

யு மீன் கட்டிங் ??????

குடுகுடுப்பை said...

முடிவுதான் நச் நசரேயன் தெரியுரார்.

Unknown said...

ரொம்ப திகில் தான் ...

Unknown said...

நம்மள திருத்தவே முடியாதப்பா!

\\வாத்தியாரு முரட்டு ஆசாமிடா அடங்காத கார வீட்டு பேயையே அடிச்சி விரட்டி பிட்டாரு, இனிமேல பேய் ஓட்ட வாத்தியாரை தான் ௬ப்பிடனும்\\

அது சரி(18185106603874041862) said...

//
மாடி வீட்டுல பேய் இருக்குன்னு யாருமே அங்கே போகாததினாலே வீட்டுல ஓட்டை விழுந்து மின்சார கசிவு ஏற்பட்டு இருக்கு, அதனாலே வருகிற சத்ததாலே அது பேய் தான்னு நீங்க முடிவு பண்ணீட்டீங்க.
//

ஐயா, வலைத் தளபதி, உங்க அக்கிரமம் தாங்க முடியல....மின்சார கசிவு ஏற்பட்டா சத்தம் வருமா?? புச்சு புச்சா கதை விடறீங்களே :0))

ஹேமா said...

நசரேயன்,ஏன் இப்பிடியெல்லாம் பயமுறுத்துறீங்க.இப்போ விடியற்காலை 3.45am ஆகுது எனக்கு.
இன்னும் தூங்கல நான்.

இனி...பேய்...தூக்கம் போயே போச்சு.வீபூதி நிறைய அள்ளிப் பூசிக்கிட்டேன்.

ஹேமா said...

இனி உங்க பதிவைப் படிக்கப்போறேன்.ஐயோ..வேணாம்.
நாளைக்குப் பாக்கலாம்.
பயம்...மா இருக்கு.

அத்திரி said...

அண்ணாச்சி சூப்பர்....... சரி அந்தப்பேய் மோகினி பேய் தான......

புதியவன் said...

//செத்துப் போன என் தங்கச்சிக்கும், அம்மாவிற்கும் என் மேல ரெம்ப பாசம் அதுதான் அடிக்கடி நீயும் எங்க ௬ட வா ன்னு அடிக்கடி சொல்லுவாங்க.//

இது தான் பேய் பாசமா...?

புதியவன் said...

///"வாத்தியாரு முரட்டு ஆசாமிடா அடங்காத கார வீட்டு பேயையே அடிச்சி விரட்டி பிட்டாரு, இனிமேல பேய் ஓட்ட வாத்தியாரை தான் ௬ப்பிடனும்" //

ஹா...கலக்கல் முடிவு...

sakthi said...

superb story

sakthi said...

superb story

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

Suresh said...

nalla pathivu nanba, nanum pathivu potu ullan ungala mathiri makkalin asirvathathudan, padithu pidithal potunga vote :-)

Aero said...

heroin amma eppadi sethuthu?.

pai adichithanada?

வில்லன் said...

யோவ் பேய் வெரட்ட என்ன கூப்பிட சொலுங்க. எனக்கு நெறைய வித்தை தெரியும். அந்த வாத்தியார் பொழைக்க தெரியாத மனுஷன். ஒரு விசயத்த கப்புன்னு புடிச்சுட்டு பணம் பண்ண தெரியாத மாங்கா மடையன். அழகா வாத்தியார் வேலைய ராஜினாமா பண்ணிட்டு ஒரு வேலையும் பாக்காம பேய் ஓட்டுறேன்னு சொல்லிட்டே பணத்த புடிங்கிட்டு ஆயுள் முழுக்க செட்டில் ஆகியீருக்கலாம். தப்பு பண்ணிட்டார்.

Rathna said...

இந்த கதையை நீங்கள் எழுதியது 2009ஆம் வருடம், ஆனால் நான் படித்தது இன்றைக்குத்தான், எப்போ படித்தால் என்ன, 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று குறிப்பிட்டிருப்பது படிப்பவர்களை இழுக்க வைக்க உங்களது யுக்தி. பேய் என்பதே இல்லை என்பது பொய், ஆனால் எல்லாவற்றையுமே மக்கள் தங்களது அதிகமான பயத்தின் காரணமாக பேய் எனக் கருதுவது அறியாமை.