Wednesday, March 11, 2009

முன் நவினத்துவம் - ஆரம்பம்

முன்னுரை : இந்த கதை பின்னொரு காலத்திலேயே நடப்பதாக ஒரு கற்பனை.



ஜி வீட்டிலே பெரிய விவாதம் ஓடிக்கொண்டு இருந்தது, அது அவரோட தலைமையிலே நடந்து கொண்டு இருந்தது.அந்த காலத்திலேயே அனைவரும் தங்கள் பெயர்களை சுருக்கி ஒரு வரியில் வைத்து கொள்வது நடைமுறை.

"எனக்கு இந்த "லாட்டோ சேன்ஜ்*" சுத்தம்மா பிடிக்க வில்லை"

ஜி மனைவி, "அங்கே வேலை செய்யுற எனக்கே பிடிக்க வில்லை, இருந்தாலும் அரசாங்க விதியை மீற முடியுமா?"


"அதிலே வெளிவரும் பட்டியலை திருட முடியுமா?"


"இந்த கேள்வியை எத்தனை தடவை கேட்டாலும், இதே பதில் தான், அந்த பட்டியல் தயாரிக்கிறது ஒரு சூப்பர் கம்ப்யூட்டர், அதிலே இருந்து வெளிப்படும் தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைத்திருக்கும், அது இந்திய அரசாங்க அதிகாரிகளின் பார்வைக்கு நேரடியாக செல்லும், அனைத்து உத்தரவுகளும் அங்கிருந்தே வரும்"


"சரி.. சரி எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்.." வாசல் வரை சென்றவள், திரும்பி வந்து


"எங்கே என் ஷூ மோட்டார்*" என் கேட்கும் போது வாசலில் வாகன சத்தம் வருகிறது, ஷூ வை கழட்டி விட்டு வீட்டுக்குள்ளே ஜோ நுழைகிறாள்.


ஜோ அம்மா "எத்தனை தடவை சொல்லுவது என் ஷூ எடுத்திட்டு போகாதேன்னு"


ஜோ, அம்மாவின் அர்ச்சனைகளை காதில் வாங்கி கொள்ளாமல் வீட்டிற்குள் சென்று பிரிட்ஜ் லே இருந்து காலரி மாத்திரைகளை* எடுத்து விழுங்கினாள்.


"அம்மா, நீ இன்னைக்கு அலுவலகத்துக்கு லேட், அதனாலே உன் சம்பளம் கட்டு"


இதற்க்கு பதில் ஏதும் ௬றாமல் தன் ஷூ வை மாட்டி கொண்டு விரைந்தாள்.


என்னம்மா நீ டெல்லிக்கு போகலையா?"



அப்பா தெரிஞ்சு பேசுகிறாரா, இல்லை தெரியாமல் பேசுகிறாரா என்ற குழப்பத்துடன்


"நான் போகலை"


"கல்லூரிக்கு?"


"என் ஷூ மோட்டரை சரி பண்ணிட்டு போகணும் "


"சரியாத்தான் இருக்கு"


அப்படியா!! என்ன பிரச்சனை? எப்படி சரி பண்ணுனீங்க?


என்று அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளுக்கு ஒரு பதில் கொடுத்தார்
"உன்னோட அவரசர பிரச்சனைதான்,நீ போகிற அவசரத்திலே சரியா கவனிக்கலை"


ஜோ வுக்கு இருந்த குழப்பம் சந்தேகமாக மாறியது, நான் வெளியே போக ௬டாது என்பதற்காக போடப்பட்ட சதியா என்று என்ன ஆரம்பித்தாள்

"புளியங்குடியிலே இருந்து டெல்லிக்கு விமான நேரம் 15 நிமிஷம்"

"ஹும் என்னப்பா"

"புதுசா விமான சேவை விட்டு இருக்காங்க, அது பேப்பர் ல போட்டு இருக்குன்னு சொல்லுறேன்."


இன்னைய தேதிக்கு எங்க ஊருல ரயில்லே இல்லை பிற்காலத்திலே விமானம் எல்லாம் வருமுன்னு சொன்னா என்னை மாதிரி எருமை எல்லாம் யாரோ ப்ளைன் ஓட்டுதுன்னு சொன்னா நம்பவா முடியும்


ஜி ௬றியதை எல்லாம் காதில் வாங்காமல் எதோ நினைத்தவளாய் கல்லூரிக்கு கிளம்பினாள் ஜோ.


அவள் விரல் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது, அதை எடுக்காமல் விட்டு விட்டாள், மீண்டும் அழைப்பு வந்தது இம்முறை ஜி க்கு வந்தது


************************************************************************

*காலரி மாத்திரை : அந்த காலத்திலேயே விவசாயம் எல்லாம் அழிந்து உணவு பொருட்கள் மாத்திரை வடிவிலே வந்தது

*ஷூ மோட்டார்:காலில் மாட்டி கொண்டு செல்லும் வாகனம்

(மீண்டும் சந்திப்போமா அடுத்த பாகத்தில்)


35 கருத்துக்கள்:

கபீஷ் said...

வொய் இந்த கொலைவெறி?

priyamudanprabu said...

*காலரி மாத்திரை : அந்த காலத்திலேயே விவசாயம் எல்லாம் அழிந்து உணவு பொருட்கள் மாத்திரை வடிவிலே வந்தது

*ஷூ மோட்டார்:காலில் மாட்டி கொண்டு செல்லும் வாகனம்

///////


ஆத்தீ என்ன சொல்லுதீகா!!!??

அது சரி(18185106603874041862) said...

//
இன்னைய தேதிக்கு எங்க ஊருல ரயில்லே இல்லை
//

இந்த நக்கல் தான வேணாங்கிறது...அது என்ன ரயிலே இல்லன்னு சொல்றீங்க?? அப்ப உங்க ஊர்ல பஸ்சு இருக்கா??

நட்புடன் ஜமால் said...

காலரி மாத்திரை மேட்டர் போல வேறு பெயர்களில் படித்தோ/பார்த்தோ உண்டு

ஆனால்!ஷூ மோட்டர் - இந்த மேட்டர் அருமை அண்ணா!

நல்ல கற்பனை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல கற்பனை

புதியவன் said...

//அவள் விரல் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது//

கைபேசி...விரல் பேசியாகிடுமா...ம்ம்ம்...நல்ல கற்பனை...

சின்னப் பையன் said...

//கபீஷ் said...
வொய் இந்த கொலைவெறி?
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்...

குடுகுடுப்பை said...

க என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம்.
க=கபீஷ்

Arasi Raj said...

ஆத்தீ நீங்க புளியங்குடிகாரவுகளா...ஆத்தீ நம்ம ஊருக்கு பக்கத்துல வந்துட்டீகளே..

நாயனகாரவுகளெ அப்டியே பொன்னாத்தா பதிவுல உங்களை கூப்பிட்டுருக்கேன்....கொஞ்சம் எட்டி பாக்குரீகளா ?

http://sandaikozhi.blogspot.com/2009/03/blog-post_11.html

ஸ்ரீதர்கண்ணன் said...

"புளியங்குடியிலே இருந்து டெல்லிக்கு விமான நேரம் 15 நிமிஷம்"

அப்படியா !!!!!!!!!!!!

அப்துல்மாலிக் said...

நல்ல கற்பனை

தொடருங்கள்

சந்தனமுல்லை said...

ஆகா....சுஜாதா இடத்தைப் பிடிக்கும் முயற்சியா?!! :-)

நல்ல கற்பனை..அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்!

http://urupudaathathu.blogspot.com/ said...

கத கேளு கத கேளு...

http://urupudaathathu.blogspot.com/ said...

பார்ரா....


கேக்குறவன் கேணயனா இருந்தா...

( சென்சார் செய்யப்பட்டது )

http://urupudaathathu.blogspot.com/ said...

எப்படி இப்படி எல்லாம்??

எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி குடுக்குறது??

http://urupudaathathu.blogspot.com/ said...

///கபீஷ் said...

வொய் இந்த கொலைவெறி?///

நானும் கூவிக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒ....


இதுக்கு பேரு தான் "முன் நவினத்துவமா???

Anonymous said...

இன்னிக்கு தான் திருவண்ணாமலைக்கு போய் விட்டு வந்தேன். பிறகு படித்து விட்ட பின்னுட்டம் ஓ.கே. வா நண்பா?

Anonymous said...

ரெடி 1

Anonymous said...

2

Anonymous said...

3

Anonymous said...

25-வது நான் தான்.

ஆதவா said...

நீங்க கதைய முடிச்சிட்டீங்களா இல்லையா?

விஞ்ஞான புனைக்கதைகள் எழுத நல்ல கற்பனை வேணும்... அது உங்களிடம் இருக்கிறது... ஆனா, அதுக்காக, புளியங்குடியிலருந்து டெல்லிக்கு 15 நிமிஷமெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்... (சொல்லமுடியாது,, நடந்தாலும் நடக்கலாம்..)

ஹேமா said...

//காலரி மாத்திரை : அந்த காலத்திலேயே விவசாயம் எல்லாம் அழிந்து உணவு பொருட்கள் மாத்திரை வடிவிலே வந்தது

*ஷூ மோட்டார்:காலில் மாட்டி கொண்டு செல்லும் வாகனம்//

நசரேயன்,முன் - பின் நவீனத்துவம்ன்னு கற்பனைக்குதிரையை பறக்கவிடுறீங்களே!எதிர்காலச் சித்தர் மாதிரி.இப்பிடியெல்லாம் வருமா...தாங்குமா உலகம்!

//ஆத்தீ என்ன சொல்லுதீகா!!!??//

நல்லாருக்கு.

Anonymous said...

முன் நவீனத்துவமா???

Anonymous said...

முன் நவீனத்துவமா???

கபீஷ் said...

//குடுகுடுப்பை said...
க என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம்.
க=கபீஷ்

//

குகு, ஆபீஸ்ல வேலை மட்டும் தான் பாக்குறேன் பதிவு படிக்கரதில்லன்னு சொன்னா நம்பவா போறீங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

விஞ்ஞானக் கதை - நல்லா இருக்கு நண்பரே.. தொடருங்க..

Poornima Saravana kumar said...

யம்மாடியோவ்!!!!

Poornima Saravana kumar said...

பின் நவீனத்துவம் போய் முன் நவீனத்துவம் வந்தாச்சா?????

Poornima Saravana kumar said...

//ஷூ மோட்டார்:காலில் மாட்டி கொண்டு செல்லும் வாகனம்//

எனக்கு படிக்கும் போதே புரிஞ்சுகிச்சு நீங்க இதைத் தான் மென்சன் பன்றீங்கன்னு!!!(அவ்ளோ அறிவு நாங்க:))

வில்லன் said...

//"புளியங்குடியிலே இருந்து டெல்லிக்கு விமான நேரம் 15 நிமிஷம்"//

அப்படியே சந்தில சிந்து படிருரீரே நீறு. உங்கள மாதிரி ஆளுங்க இருக்கும் போது, நூறு வருஷம் ஆனாலும் உங்க ஊருல ஏர்போர்ட் வர போறதே இல்ல. சத்தியம் கூட பண்ணுவேன்.

வில்லன் said...

//*காலரி மாத்திரை : அந்த காலத்திலேயே விவசாயம் எல்லாம் அழிந்து உணவு பொருட்கள் மாத்திரை வடிவிலே வந்தது //

தப்பா காலரா மாத்திரைன்னு வாசிச்சுபுட்டேன். ஓரே கொலப்பமாகிடுத்து. எப்படிடா காலரா மாத்திரைன்னு சாப்பிட்டு காலத்த ஓட்ட முடியும்னு.

Unknown said...

லாட்டோ சேன்ஜ்????????

Unknown said...

மிகவும் அருமை.
நசரேயன் நீங்கள் தான் தமிழ்நாட்டின் அடுத்த சுஜாதா.
இந்த மாதிரி விஞ்ஞான கதைகள் தொடர்ந்து எழுதவும்.
நன்றி.