Thursday, February 26, 2009

அமெரிக்காவிலே தமிழுக்கு இருட்டடிப்பு

அமெரிக்காவிலே நமக்கு எல்லாம் ரெம்ப காலத்துக்கு முன்னாடி வந்து துண்டை போட்டு தங்கி இருக்கும் சிங்கங்களும்(சீக்கியர்), குஜ்ஜு மக்களும் வந்து "இந்தி" யா விலே இந்தி மொழி மட்டுதான் இருக்கிற மாதிரி ஒரு மாயை உருவாக்கி வச்சி இருக்காங்க.

எப்படி நம்ம நாயரை சந்திர மண்டலம் போன டீ கடையில் சந்திக்கலாமோ, அதே மாதிரி இவங்க ரெண்டு பேரையும் அமெரிக்காவிலே இருக்கிற குக் கிராமங்களிலும் பார்க்கலாம். வந்த மக்கள் வேலையோட வேலையா ஹிந்திக்கும் நல்லா வேலை செய்து இருக்கிறார்கள்.

நாடோடியா வந்த ரெண்டு கும்பலும் நாட்டையே ஆளுற மாதிரி வளைச்சி சொத்து சேத்து வச்சி இருக்காங்க, அவங்ககிட்ட வேலை பார்க்கும் என்னை மாதிரி ஒரு சில கருப்பு அண்ணாச்சிமார்கள் ஒருசில ஹிந்தி வார்த்தை தெரிந்து வைத்து கொள்வார்கள்.நம்ம ஊருக்காரர்களை பார்த்தல் "நமஸ்தே" ன்னு சொல்லி குஸி படுவாங்க

இங்க உள்ள ஆபிரிக்கன் அமெரிக்கன் மக்கள் எல்லாம் என்னை மாதிரி கருப்பா இருக்கிறதாலே அவங்களை செல்லமா நான் கருப்பு அண்ணாச்சி ன்னு ௬ப்பிடுவேன்

ஒருமுறை ரயிலில் பிரயாணம் செய்யும் போது ஒரு அண்ணாச்சி என்னை பார்த்து "நமஸ்தே" ன்னு சொன்னாரு.நானும் பதிலுக்கு ஒரு "நமஸ்தே" போட்டு வைத்தேன். உடனே ஒரு ஹிந்தி பாட்டு என்கிட்டே போட்டு காட்டினார், அந்த பட்டை எங்கையே கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தால் "ரோஜா" படத்தோட ஹிந்தி பாட்டு.பாட்டோடு நிக்காம இவரு "இந்தி" யா விலே பெரிய இசை அமைப்பாளர் இவரு பேரு ஏ.ஆர் ரகுமான்கான்.

நான் சொன்னேன் அவரு பேரு ஏ.ஆர் ரகுமான். அந்த கருப்பு அண்ணாச்சி என்கிட்ட ஹிந்தி படவுலகிலே இருக்க எல்லாரோட பெயரும் "கான்" ன்னு முடியும் சாருக்கான்,அமீர்கான் மற்றும் சல்"மான்" கான் உட்பட அடங்கும்.

இப்படி சொல்லுகிறவரிடம் நான் என்னத்தை சொல்ல, நம்ம பங்காளி நாட்டுக்கு சொந்தக்காரர் இம்ரான்கான் இருக்காருன்னு சொல்லமுடியுமா?
இங்கே உள்ள பெண்களுக்கு புடவைன்னா என்னன்னு தெரியாதோ அதே மாதிரி கிரிக்கெட்ன்னா யாருக்கும் தெரியாது.

ஹிந்தி படவுலக மக்கள் ஹாலிவுட்காரன் படத்தை திருப்பி அவனுக்கே போட்டு எனக்கு ஆஸ்கர் கொடுன்னு...எனக்கு ஆஸ்கார் கொடுன்னு.. சண்டை போடுற மாதிரி, இவரு நம்ம பாட்டையே எனக்கு திருப்பி போட்டு ஹிந்தி பாட்டுன்னு சொன்னாரு.

அமெரிக்கா வந்த புதுசிலே இங்க உள்ள மக்கள் எல்லாம் காதுல சங்கிலி மாதிரி ஒன்னை மாட்டி பாட்டு கேட்டுகிட்டு இருக்காங்கன்னு நானும் ஒன்னை வாங்கி வச்சி இருந்தேன், நல்ல வேளை "ரோஜா" வோட தமிழ் பாட்டு இருந்தது அதிலே,அதை அவருக்கு போட்டு காட்டினேன்.

பாட்டை கேட்டுட்டு அண்ணாச்சி "நல்லா பாட்டை காப்பி அடிச்சி இருக்கீங்க" ன்னு சொன்னாரு.அண்ணாச்சி ரெம்ப பொறுமையை சோதிக்கிறார்னு தமிழ் கலந்த இந்திய வரலாறை எனக்கு தெரிஞ்ச வரையிலே அவுத்து விட்டேன்.

ஐயா இந்தியாவிலே 200 க்கு அதிகமான மொழி பேசுறாங்க, அதுல ஒன்னுதான் இந்தியும், தமிழும்.அதோட நிக்காம தமிழ் மொழி, லத்தின், கிரேக்க மற்றும் ஹீப்ரு மொழி யைப்போல மிக பழைமையான மொழி, இந்த உலகத்திலே வாழும் தொன்மை மொழி தமிழ்ன்னு சொன்னேன். அதோட இன்னு ஒன்னையும் சேத்துகிட்டேன், திருக்குறள் பைபிள்க்கு அடுத்த படியாக உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்படும் ஒரு நூல்னு சொன்னேன்.

இவ்வளவு சொல்லியும் மனுஷன் என்னை கொஞ்சம் ௬ட நம்பலை, உடனே அவரிடம் தற்காப்புக்கு வச்சி இருந்த ஒரு பத்து ரூபாயை கட்டி இதிலே
உள்ள எல்லா மொழியும் அரசாங்க மொழிகள்னு சொன்னேன்.
அவரு நம்ம ஊரு மொழிகளோட எழுத்தை எல்லாம் பாத்துட்டு

"இதுல எந்த சிலேபி உங்க சிலேபின்னு கேட்டாரு?". அதிலே தமிழைக் காட்டி
"இது தான் எங்க சிலேபின்னு" சொன்னேன்.

அவரு கேட்கவே ரெம்ப சுவாரசியமா இருக்கு, நான் இது நாள் வரையிலே "இந்தி" யா வில் இந்தி மட்டும் தான் பேசுவாங்கன்னு நினைச்சு கிட்டு இருதேன். சமிபத்திலே ஆஸ்கர் விருது வாங்கிய ஏ.ஆர் ரகுமான் நல்ல வேளை "எல்லா புகழும் இறைவனுக்கேன்னு தமிழ்ல சொன்னாரு.அந்த புகழ் இறைவனுக்கு மட்டுமல்ல தமிழுக்கும் தான்.

தமிழ் மக்கள் இருக்கும் போதே இப்படி ஒரு விஷ பிரச்சாரம் ஹிந்திக்கு பண்ணுகிற மக்கள் மத்தியிலே நாமே எல்லாம் வெளியே வரலைன்னா தமிழ் மொழியை ஏட்டுலே இருந்தே அழிச்சிடுவாங்க போல!!!!!!!


57 கருத்துக்கள்:

பழமைபேசி said...

தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு, தமிழில் தட்டு! நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டு மட்டும் உயரும்!!

வேத்தியன் said...

வந்துட்டேன்...

வேத்தியன் said...

"இதுல எந்த சிலேபி உங்க சிலேபின்னு கேட்டாரு?". அதிலே தமிழைக் காட்டி
"இது தான் எங்க சிலேபின்னு" சொன்னேன்.//

சிலேபின்னா மொழியா கருப்பு அண்ணாச்சி???
:-)

வேத்தியன் said...

என்னங்க பண்றது???
இவகளுக்கு இப்பிடியெல்லாம் வெளக்கி சொன்னா தான் புரியுது போல???

? said...

//சிங்கங்களும்(சீக்கியர்), குஜ்ஜு மக்களும் வந்து "இந்தி" யா விலே இந்தி மொழி மட்டுதான் இருக்கிற மாதிரி//

இவர்களின் தாய்மொழிகூட இந்தி இல்லை.பஞ்சாபியும் குஜராத்தியும்தான்.

ஆனால் தமிழனின் மொழி பற்றை கண்டு மெய் சிலிர்க்கிறது!!!! :-)

சந்தனமுல்லை said...

:-)))

//உடனே ஒரு ஹிந்தி பாட்டு என்கிட்டே போட்டு காட்டினார், அந்த பட்டை எங்கையே கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தால் "ரோஜா" படத்தோட ஹிந்தி பாட்டு.//

இந்தக் கொடுமை எனக்கும் நடந்தது..போன்-லே..அதுவும் ஒரு தைவான் காரன் பாடினா எப்படி இருக்கும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

//உடனே ஒரு ஹிந்தி பாட்டு என்கிட்டே போட்டு காட்டினார், அந்த பட்டை எங்கையே கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தால் "ரோஜா" படத்தோட ஹிந்தி பாட்டு.//

ஆமா.....சூப்பர்!

சந்தனமுல்லை said...

//ஹிந்தி படவுலக மக்கள் ஹாலிவுட்காரன் படத்தை திருப்பி அவனுக்கே போட்டு எனக்கு ஆஸ்கர் கொடுன்னு...எனக்கு ஆஸ்கார் கொடுன்னு.. சண்டை போடுற மாதிரி,//

lol!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யோ சொல்லாதீங்க.. ட்ரயின்ல ஒரு ஹிந்திக்காரர் என்கிட்ட சொல்றாரு .. எந்த பாட்ட போட்டாலும் இது ஹிந்தில இருக்கு இருக்குன்னு... அய்யா அதெல்லாம் தமிழிலிருந்து போனது தான்னு சொன்னா விளங்கிக்கவே இல்லை.. ஆனா அடிக்கடி வருவாராம் சென்னைக்கு அதனால.. மெலடியில் பாட்டு வந்தா இளையராஜாவோடதுன்னு மட்டும் தெரியுமாம்..

ரகுமான் தவிர்த்த பலரோட தமிழ் பாடல்கள் பேர் சொல்லாம ஹிந்தியில் காப்பி அடிக்கிராங்க.. இனி வருசத்தை பாருங்கய்யான்னு சொல்லனும்..எது முதல்ல வந்ததுன்னு.. :(

Vijay said...

நாம் குஜராதி மக்களிடமிருந்தும் சீக்கியரிடமிருந்தும், ஏன் ஆங்கிலயேரிடமிருந்தும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது. நாம் சும்மா தமிழ் தமிழ்னு தான் சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர, தமிழை மற்ற மாநிலங்களுக்கு நாடுகளுக்குப் பரப்பவில்லை. உலகத்தின் ஒரே ஒரு நாட்டில் மட்டும் பேசப் பட்டுக் கொண்டிருந்த மொழியான ஆங்கிலேயம் இன்று உலகம் முழுவதும் எப்படிப் பரப்பப்பட்டது? அதற்காக நாம் மற்ற நாடுகள் மீது படையெடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வேறு ஊருக்குப் போகும் போது, நாம் அந்த ஊரின் கலாசாரத்தோடு ஐக்கியம் ஆகிவிடுகிறோம். ஆனால், ஹிந்தி மக்கள் அந்த ஊர் மக்களையும் தமது கலாசாரம் மொழியோடு இணைக்கப் பார்க்கிறார்கள். உலகிலுள்ள எத்தனையோ நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, ஃபிஜி, மருஷியஸ், தென் ஆப்பிரிக்கா, ஏன் மேற்கிந்தியத் தீவில் கூட தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நம் மொழியை பரப்ப ஒன்றுமே செய்ய வில்லை. அதனால், மற்றவன் சாமர்த்தியனாக இருக்கிறான் என்று அவன் பொறாமைப் படாமல், நாம் ஏன் இவ்வளவு அசடாக இருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்து விழித்தெழ வேண்டும்.

பழமைபேசி said...

//நாம் ஏன் இவ்வளவு அசடாக இருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்து விழித்தெழ வேண்டும்.
//

சபாசு...

சின்னப் பையன் said...

//நாம் ஏன் இவ்வளவு அசடாக இருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்து விழித்தெழ வேண்டும்.
//

சபாசு...சபாசு...

Anonymous said...

அமெரிக்காவிலேயே தமிழ் இருட்டடிப்பு காரணம் ஹிந்திக்காரர் நல்ல காமெடி!!!
நாம் தான் காரணம்

அமெரிக்காவில் பாகிஸ்தானியர்கள் , வங்கலியார்கள் , இந்தியர்கள் எல்லாம் பொதுவாக ஹிந்திக்காரர் "தேசி" என குறிபிடுவதும் உண்டு .


பாகிஸ்தானியர்கள்இகும் , வங்களிகும் இதில் வருத்தம் உண்டு .


தமிழ் மக்கள் இருக்கும் போதே இப்படி ஒரு விஷ பிரச்சாரம் ஹிந்திக்கு பண்ணுகிற மக்கள் மத்தியிலே நாமே எல்லாம் வெளியே வரலைன்னா தமிழ் மொழியை ஏட்டுலே இருந்தே அழிச்சிடுவாங்க போல!!!!!!!

இதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதயே முக்கியம்.


விஜய் சொனதுபோல "மற்றவன் சாமர்த்தியனாக இருக்கிறான் என்று அவன் பொறாமைப் படாமல், நாம் ஏன் இவ்வளவு அசடாக இருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்து விழித்தெழ வேண்டும்." உண்மை.

யன்திரனுக்கு காத்திருக்கும் தமிழ் சமுதாயத்திடம் இதை எதிர்பார்கலமா !!!!!!

மனோ

அ.மு.செய்யது said...

நான் சொன்னேன் அவரு பேரு ஏ.ஆர் ரகுமான். அந்த கருப்பு அண்ணாச்சி என்கிட்ட ஹிந்தி படவுலகிலே இருக்க எல்லாரோட பெயரும் "கான்" ன்னு முடியும் சாருக்கான்,அமீர்கான் மற்றும் சல்"மான்" கான் உட்பட அடங்கும். //

குப்ளாகான் உட்பட...

ஆதவா said...

இந்தி" யா விலே இந்தி மொழி மட்டுதான் இருக்கிற மாதிரி ஒரு மாயை உருவாக்கி வச்சி இருக்காங்க.

அடப்பாவமே!!! இந்தியைவிட, தமிழ் இனிமையும், பழமையும் கூட!!!!

ஆதவா said...

பரவாயில்லையே!!! நீங்கள் தமிழை வெளிநாட்டில் நிலைநாட்டுகிறீர்கள். வாழ்த்துகள்.

ஆதவா said...

ஏ.ஆர் ஆல... இப்போ தமிழும் எல்லோருக்கும் தெரியவரது ரொம்ப பெருமை

அ.மு.செய்யது said...

//தமிழ் மக்கள் இருக்கும் போதே இப்படி ஒரு விஷ பிரச்சாரம் ஹிந்திக்கு பண்ணுகிற மக்கள் மத்தியிலே நாமே எல்லாம் வெளியே வரலைன்னா தமிழ் மொழியை ஏட்டுலே இருந்தே அழிச்சிடுவாங்க போல!!!!!!!//

பகீர்னு கீதுபா...

Anonymous said...

என்னத்த பண்ணுவது, இங்க(அமெரிக்கா) இருக்க தமிழ் மக்கள் ஷில பேர், உங்க மொழியில எப்படி வணக்கம் சொல்றதுனு வேற்று மொழிக்காரன் கேட்டா.....'நமஷ்க்கார்' இல்லாட்டி 'சுவீட் காரம்' -னு சொல்ராங்க.......
இதவிட டெல்லில இருக்க நம்ம் ஆளுங்க பண்ணும் கூத்து இருக்கே.....ம்.... அத சொல்லவே ஒரு பிளாக் வேணும்.

குடுகுடுப்பை said...

இந்தியான்னா வெளிநாடுகளில் இந்தி மற்றும் பாலிவுட் மட்டும்தான் தெரியும். சீன அனுபவத்திலும் இதுதான் எனக்கு தெரிந்தது.தமிழர்களின் போராட்டம் தான் இன்னும் தென்னிந்திய மொழிகளை உயிரோடு வைத்திருக்கிறது, அதே போல் வங்காளம் கிழக்கே, மற்ற மொழிகளை இந்தி விரைவில் முழுங்கிவிடும்.தமிழை ஆங்கிலம் அதற்கு முன்னால் விழுங்காமல் இருக்க வழி இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

S.R.Rajasekaran said...

அர்ரே ஹிந்தி மாலும் நகி மாலும் .அப்பே நான் மாலு வைக்கிறது.அர்ரே பையா நமக்கு கோவில் மட்டும் கெட்ட தெரியும் நடிகைக்கு

Arasi Raj said...

ஹா ஹா......எங்க ஊர்ல இத்தனை மொழிகள் இருக்குன்னு சொன்ன..........Crazy-ன்னு தான் சொல்றானுங்க...

உங்களுக்குள்ள எப்டி தகவல் பரிமாற்றம் நடக்கும்னு கேள்வி வரும்

டேய்..இந்திய மொழியாக ஹிந்தி இருக்குடா....தமிழனைத் தவிர எல்லா இந்தியனுக்கும் நல்லா ஹிந்தி பேச வரும்...அதுனால ஹிந்தியும் ஆங்கிலமும் தெரிஞ்ச ஆளுங்க எங்க பக்கத்தில இருந்தா நாங்க ஆங்கிலத்தில சொல்றதை அவன் ஹிந்தில மொழி பெயர்ப்பன்னு சபீனா போட்டு விளக்கனும்

பதி said...

//இந்தி" யா விலே இந்தி மொழி மட்டுதான் இருக்கிற மாதிரி ஒரு மாயை உருவாக்கி வச்சி இருக்காங்க. //

உண்மை. இதனை நானும் பல இடங்களில் அனுபவித்து உள்ளேன். "இந்தி"யாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளதையும் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம், பழக்கவழக்கங்கள், வரலாறு உள்ளதென தவறாமல் விளக்குவேன்.

"இந்தி"யா என்பது ஒரு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை போன்றது என நில அமைப்பையும் கூறி விளக்குவேன். :)

இப்பொழுது எல்லாம் என் பேராசிரியரே, காலையில் நான் Bonjour சொல்லும் முன் "வணக்கம்" என தெளிவாக சொல்கின்றார் !!!!

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

//"அமெரிக்காவிலே தமிழுக்கு இருட்டடிப்பு"//

தமிழ்நாட்டுல தமிழுக்குப் பேரொளி வீசுது... நல்ல வேளை! இல்லைன்னா என்ன ஆகுறது?

ILA (a) இளா said...

தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு, தமிழில் தட்டு! நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டு மட்டும் உயரும்!!//

Sathyarajkumar எழுதின கதை ஒன்னு இருக்கு. வணக்கம்னு தலைப்பு இதே மாதிரிதான்

ஹேமா said...

நசரேயன் கை குடுங்க.ரொம்ப சந்தோஷமா இருக்கு.
"இவன் தான்தமிழன்"ன்னு
சாதிச்சுக் காட்டிட்டீங்க.உங்க மன ஓர்மத்துக்கு ஒரு வணக்கம்.

ஹேமா said...

சிலேபி=மொழி.கொஞ்சம் இருங்க எழுதி வச்சுக்கிட்டேன்.இப்பவே போய் ஜமால் கிட்ட சொல்லிட்டு வரேன்.
அவர் இந்தச் சொல்லைப் போட மறந்துட்டார்ன்னு நினைக்கிறேன்.

இவ்....ளோ தமிழ் தெரிஞ்சிருக்கு.
ஒரு கவிதை கேட்டேன் உப்புமடச் சந்தில.ம்ம்ம்...போடலியே!

Mahesh said...

//நாம் ஏன் இவ்வளவு அசடாக இருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்து விழித்தெழ வேண்டும்.
//

சபாசு...சபாசு...சபாசு...சபாசு...

கிரி said...

//இங்க உள்ள ஆபிரிக்கன் அமெரிக்கன் மக்கள் எல்லாம் என்னை மாதிரி கருப்பா இருக்கிறதாலே அவங்களை செல்லமா நான் கருப்பு அண்ணாச்சி ன்னு ௬ப்பிடுவேன்//

:-))))))))))

அத்திரி said...

//"இதுல எந்த சிலேபி உங்க சிலேபின்னு கேட்டாரு?". அதிலே தமிழைக் காட்டி
"இது தான் எங்க சிலேபின்னு" சொன்னேன்.//

:-))))))))))))))))))

எட்வின் said...

//தமிழ் மொழியை ஏட்டுலே இருந்தே அழிச்சிடுவாங்க போல!!!!!!!//
அத்தனை எளிதில் விட்டு குடுத்துருவோமா என்ன?

//"இந்தி" யா விலே இந்தி மொழி மட்டுதான் இருக்கிற மாதிரி ஒரு மாயை உருவாக்கி வச்சி இருக்காங்க.//

இவனுக எப்போவுமே இப்படித் தான்... இங்க இருந்து போனவங்க தான ஹேமமாலினி,ஸ்ரீதேவி... இப்போ இந்தி திரை உலகில இருக்கிற பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பெரும்பாலானவர்களும் தமிழர்களே... நம்ம ரஹ்மான்,சந்தோஷ் சிவன்,ஒளிப்பதிவாளர் மணிகண்டன், கஜினியை வைத்து ஹிந்தி திரை உலகை அதிர வைத்த இயக்குனர் முருகதாஸ்.... இன்னும் முகம்/பெயர் தெரியாத பலர். ஆனா அத எல்லாம் சொல்லமாட்டனுக சப்பாத்தி பசங்க.

தமிழர்கள் தமிழர்களுக்குள்ளாக தமிழில் பேசினாலே தமிழை காப்பாற்றி விடலாம்... நம்ம ஆளுங்க அதயே செய்யிறது இல்லையே பாஸூ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

///தமிழ் மக்கள் இருக்கும் போதே இப்படி ஒரு விஷ பிரச்சாரம் ஹிந்திக்கு பண்ணுகிற மக்கள் மத்தியிலே நாமே எல்லாம் வெளியே வரலைன்னா தமிழ் மொழியை ஏட்டுலே இருந்தே அழிச்சிடுவாங்க போல!!!!!!!///

:-)))))))))))))
இந்தியாவிலமட்டும் வடக்கே எப்படி இருக்காம்?

Anonymous said...

அத்திரி said...
//"இதுல எந்த சிலேபி உங்க சிலேபின்னு கேட்டாரு?". அதிலே தமிழைக் காட்டி
"இது தான் எங்க சிலேபின்னு" சொன்னேன்.//

:-))))))))))))))))))
//
சூப்பர்!

பழமைபேசி said...

//தமிழர்கள் தமிழர்களுக்குள்ளாக தமிழில் பேசினாலே தமிழை காப்பாற்றி விடலாம்... நம்ம ஆளுங்க அதயே செய்யிறது இல்லையே பாஸூ...//

குடுகுடுப்பை???

Unknown said...

போன பக்கமெலாம் முன்னேறுபவன் தமிழந்தான். ஆனா என்ன அந்த அந்த வட்டாரப் போக்குகளோட ஒன்றிட போயி தமிழை அப்படியே மறந்திட மாதிரி ஆயிறது. என்ன பண்ண சில சமயம் உதையும் வாங்க வேண்டிய மாதிரி ஆயிறது.

எங்கயாவது குண்டுவெடிப்பு , பிளேன் உளுவறது, கட்டடம் இடியறது அப்படின்னா அங்கயும் ரெண்டுபேர் தமிழந்தான்.

ஒற்றுமை வேணும் , அதோட கொஞ்சம் பவர் வேணும்.

(சம்பந்தம் இல்லாதவங்களெலாம் மகாத்மா பேரை இணைத்து
நானும் அந்த குடும்பம் அப்படினு சொல்லறாங்க இல்லையா அதுபோல.)

இல்லைனா தமிழன் எப்பவுமே "தமிழில் ஒரு வார்த்தை சொன்னதுக்கே
பெரிசா பீத்திக்கறமாதிரி ஆயிரும்".

Unknown said...

மேலும் தமிழை வளர்க்க ஒரே ஒருத்தர் மனசு வச்சாப் போதும்.

யார் அவர் ?

ஒரு காலத்தில் இந்தியா முழுக்க டிவினா அது தூர்தர்சனோட நேசனல்
ஒளிபரப்பு மட்டுமே. அதுவும் எந் நேரமும் இ ந்திமட்டுமே .

அதைக்கண்டு கொதித்து தனியாக தமிழுக்கென ஒரு டீவியை ஆரம்பித்தவர்.

அவர்தான் உலகத்தமிழர்களின் தலைவரின் பேரன் .

எப்படி அவரால் முடியும் ?!

உங்களுக்கு நன்றாக நினைவிருக்கும் என்று நினைக்கிறோம்.

94 வரை இ ந்தியாவில் , குறிப்பாக தமிழகத்தில் எப்.எம் ஆரம்பிக்காத வரை

சென்னையிலும், திருச்சியிலும் ஒரு வானொலி நிலையம் விவிதபாரதி
என்று இரு ந்தது. அதில் என்ன செய்தார்கள்.

எந் நேரமும் இந்தி திரைப்பட பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பினார்கள்.

பிரைவேட் வானொலி வந்ததிற்க்கு பின்பு கோவையில் மட்டுமே தமிழுக்கு
மாற்றினார்கள்.அதுவும் முழுவதுமாக அல்லாமல் இடையிடையே இந்தி
சொருகலுடன்.

அப்ப இந்தியா முழுவதும் வானொலி நிலையங்களை வைத்திருக்கும்
சன் குரூப் தன் வானொலியில் இடையிடையே தமிழை தமிழ்ப்பாடலை
ஒலிபரப்பினால் தமிழின் மகத்துவம் நன்றாக இ ந்தியா முழுவதும் விளங்கும்
அல்லவா ?

தமிழும் வளரும் அல்லவா ?

நாம் அவருக்கு இதை உணர்த்தவேண்டும் அல்லவா?

நீங்களே முடிவெடுங்கள்.

Anonymous said...

agrrr kodumaiya irukkee...

Aero said...

arumayana message da...

Jeyapalan said...

//"இந்தி" யா விலே இந்தி மொழி மட்டுதான் இருக்கிற மாதிரி ஒரு மாயை உருவாக்கி வச்சி இருக்காங்க.//

இது பற்றி நான் முன்னொரு முறை எழுதியிருந்தேன். இதற்குக் காரணம் நீங்கள் சொல்வது போல் முன்பே வந்து சேர்ந்த மக்கள் அல்ல. இந்தியத் ததுஉதரகங்கள் தான். இவர்கள் தான் இந்த மாயையை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள். அரச உதவியுடன் தான் இந்தத் திணிப்பு இந்தியாவை பற்றி ஏற்படுத்தப் படுகிறது. இங்கே சென்று இந்தியக் கலை பண்பாடு பற்றியோ இந்திய மொழிகளில் பத்திரிகைகளோ கேட்டுப் பாருங்கள் புரியும்.

Unknown said...

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு ...

Unknown said...

தமிழர்களை விட, ஹிந்தி பேசுபவர்களிம் மொழி பற்று அல்லது வெறி அதிகம்.

Anonymous said...

42

Anonymous said...

43

Anonymous said...

44

Anonymous said...

45

Anonymous said...

ready start 46

Anonymous said...

47

Anonymous said...

48

Anonymous said...

49

Anonymous said...

50-வது நான் தான். சரி அப்புறம் வர்ரேன்.

வில்லன் said...

என்னமோ போங்க நீங்க என்ன சொன்னிங்களோ அவரு (நம்ம கருப்பன்னாச்சி) என்ன புரிஞ்சுகிட்டரோ!!!... எப்படியோ சரியாய் அவரு புரிஞ்சிருந்தா சந்தோசம் தான்.

வில்லன் said...

// பழமைபேசி said...
//நாம் ஏன் இவ்வளவு அசடாக இருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்து விழித்தெழ வேண்டும்.
//

சபாசு...//

இதுக்காக தமிழ்ல பொட்டிதட்ட முடியாதுடோய்!!!! அதுக்கு இங்கிலீசு தான் வேற வழியே இல்ல.

தமிழர் நேசன் said...
This comment has been removed by the author.
தமிழர் நேசன் said...

உங்களை போல் அயல் நாட்டிலும், தமிழுக்காக கவலைப்படும் அண்ணாச்சிகளை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.. எனக்கு தெரிந்த சிலர் (தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள்) தமிழ் நாட்டிலேயே தமிழை புறக்கணிக்கின்றனர்!!

நீங்கள் அமெரிக்காவில் தமிழை சிறந்த மொழி என்று விளக்க முயன்றதிபோல், காலக்கொடுமை நான் சென்னையில் செய்ய வேண்டியதாயிற்று!

http://tamilarnesan.blogspot.com/2009/02/blog-post_09.ஹ்த்ம்ல்

பதிவிற்கு நன்றி..

Poornima Saravana kumar said...

//இதுல எந்த சிலேபி உங்க சிலேபி //

தமிழுக்கு வந்த சோதனையைப் பாருங்க சாமீ!!!!

ஹேமா said...

நசரேயன்,எங்கே காணோம்?

Unknown said...

அமெரிக்காவிலும் தமிழை வாழவைத்த நசரேயன் வாழ்க!!!