அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்புவோருக்காக
அமெரிக்க பொருளாதாரத்திலே கீறல் விழுந்து, அது ஓட்டை ஆகி வெடிச்சு அவிங்க டவுசரை கழட்டி விட்டது, அதனாலே எந்த கம்பெனியாவது திவால் ஆகாம இருந்தால் அதுவே பெரிய விசயமா பேசுற அளவுக்கு ஆகிப்போச்சு.பெரிய பெரிய மன்னாதி மன்னர்கள் எல்லாம் மண்ணை கவ்வி மஞ்ச கடிதாசி கொடுத்து தலையிலே துண்டை போட்டு கிட்டு அலைய வேண்டியதாகிப் போச்சு, இப்படி இவங்களே கோவணத்தோடு சுத்துற நிலைமையிலே நமக்கு எப்படி பேன்ட்,சட்டை கிடைக்கும்.
ஒரு பக்கம் கந்து வட்டிக்கு கடன் கொடுத்த அமெரிக்க அரசாங்கம், கொடுத்தவங்க தலையிலே ஏறி உக்காந்துகிட்டு தலையிலே இருந்து கால் வரை குடைச்சல் கொடுக்குது, வாங்கினவங்க எல்லாம் வேலியிலே போற ஓணான் வேட்டியிலே விழுத்த கதையா நெளியுராங்க. இந்த பிக்கள் பிடுங்கல் தாங்காம வேலை செய்யுறவங்களை எல்லாம் சொல்லாம கொள்ளாம தூக்கி புடுராங்க. ரெண்டு கட்டிடம் விழுந்ததுக்கே மூனு வருஷம் மூச்சி விடமுடியலை, இப்ப அடியே விழாம அஸ்திவாரம் ஆடிப்போச்சி.
இந்த பறக்கும் குதிரையை நம்பி வாஸ்து படி வீடு வாசல் வாங்கின நம்மவர்கள் பேந்த, பேந்த.. மலங்க..மலங்க(கோவி அண்ணனும், பழமை அண்ணனும் சகட்டு மேனிக்கு விளக்கம் கொடுத்து இருக்காங்க) முழிக்க வேண்டிய நிலைமை. விளைவு பல கழகங்களுக்கு தாவி கடைசியிலே தாய் கழகத்திலே தஞ்சம் அடைகிற மாதிரி தாய் நாட்டுக்கு படை எடுக்க வேண்டிய நிலைமை.
இதிலே நம்ம ஊரு கம்பெனி வழியா வந்து அப்புறமா கிளிக்கி ரெக்கை முளைச்சி பறந்து போகிறமாதிரி வந்த கம்பெனிக்கு கல்தா கொடுத்தவர்களும், ஆள்த் தேவை அதிகம் இருக்கும் போது எனக்கு மட்டுமல்ல எனக்கும், என் பெண்டாட்டிக்கும், எனக்கு பொறக்க போற பிள்ளைக்கும் வேலை கொடுத்தா தான் வருவேன் அடம் பிடிச்சி வந்தவர்களும் அடங்கும். பச்ச அட்டைக்கு துண்டு போட்டு காத்து இருந்தவங்களுக்கு சிகப்பு அட்டையை காட்டி விடுகிறார்கள்.ஆக வேற வழி இல்லாம திரும்பி போக வேண்டிய சூழ்நிலை.
பிரச்சனை போறதிலே இல்லை, இப்படி ஒரு பிரமிக்க வைக்கும் கட்டமைப்பு வசதிகளிலே பழகிப்போன நமக்கு கொஞ்ச நாள் பிடிக்கும் நம்ம ஊரு வசதிக்கு ஒத்துழைக்க,இங்க கார் ஓட்டும் போது மஞ்ச விளக்கை பார்த்து உடனே நிறுத்துவோம், நம்ம ஊரிலே சிகப்பு விளக்கு போட்டாலும் நிக்காம கார் ஓட்ட கொஞ்ச நாள் ஆகும்
அடுத்து இருக்கிற பெரிய பிரச்னை வேலை எல்லாம் கிடைக்குது, ஆனா அனுபவத்திற்கு ஏற்ற வேலையா இருக்குமா ன்னு கேள்வி கேட்க வேண்டிய நிலைமை, நம்ம ஊருல வேலையிலே 5 வருஷ அனுபவம் வந்துட்டா, நான் ப்ராஜெக்ட் டமேஜெர், நான் ஆர்கிடேக்ட் நான் எப்படி கோட்(code) அடிக்கமுடியும் கேள்வி கேட்கிறோம், ஆனா இங்கே பாட்டிமார்கள் எல்லாம் பல் செட்டை கழட்டி வச்சி கோட் அடிக்காங்க.
ஆனா நம்ம ஊரிலே கணினி துறையையே கெடுத்து வச்சி இருக்காங்க, ஆறு வருஷ அனுபவம் இருக்குன்னு சொல்லுறீங்க இன்னும் நீங்க இன்னுமா டெவெலப்பர் , இப்படி இருக்கிற லட்சணத்திலே திரும்பி போறவங்க சி.ஈ.ஒ, சி.டி.ஒ கிடைச்சா சந்தோசமா இருக்கும்னு நினைக்கிற அளவுக்கு ஆகிப்போச்சு.
ஊருக்கு போகும் போது சந்தோசமா போனாத்தானே, திரும்பி சந்தோசமா வரமுடியும், அமெரிக்க பொருளாதாரம் தலைவர் மாதிரி குதிரை, எப்படி தலைவர் பாபாவிலே படுத்து சந்திரமுகியிலே குதியையா வீறு கொண்டு எழுந்தாரோ, அதே மாதிரி இன்னைக்கு படுத்திருக்கிற அமெரிக்க பொருளாதார குதிரை விரைவில் வீறு கொண்டு எழும்.அதனாலே இப்ப பொட்டிய கட்டிக்கிட்டு போறவங்க நிச்சயம் திரும்பி வருவாங்க
39 கருத்துக்கள்:
me the first
முதன் முதலில் நாந்தேனா
நல்ல அலசல்
பொருளாதாரம்பற்றி
இப்படி இவங்களே கோவனதோட சுத்துற நிலைமையிலே நமக்கு எப்படி பேன்ட்,சட்டை கிடைக்கும்.
//
அப்போம் வேட்டி சட்டையாவது கிடைக்குமா நண்பா?
//இங்க கார் ஓட்டும் போது மஞ்ச விளக்கை பார்த்து உடனே நிறுத்துவோம், நம்ம ஊரிலே சிகப்பு விளக்கு போட்டாலும் நிக்காம கார் ஓட்ட//
ஹா ஹா
//ரெண்டு கட்டிடம் விழுந்ததுக்கே மூனு வருஷம் மூச்சி விடமுடியலை, இப்ப அடியே விழாம அஸ்திவாரம் ஆடிப்போச்சி.
//
சரியா சொன்னீங்க தல
ஊருக்கு போகும் போது சந்தோசமா போனாத்தானே. திரும்பி சந்தோசமா வரமுடியும்.
//
ஆமா...ஆமா...
நல்ல அலசல்...
//5 வருஷ அனுபவம் வந்துட்டா, நான் ப்ராஜெக்ட் டமேஜெர், நான் ஆர்கிடேக்ட் நான் எப்படி கோட்(code) அடிக்கமுடியும் கேள்வி கேட்கிறோம், ஆனா இங்கே பாட்டிமார்கள் எல்லாம் பல் செட்டை கழட்டி வச்சி கோட் அடிக்காங்க.//
ம்ம்..உண்மைதான்..விருப்பமிருந்தால் மட்டுமே மேலாண்மைத்துறையில் செல்கிறார்கள்!
நண்பரே, பழமை ஒருவிதமா சொல்றாரு, நீங்க வேறு விதமா சொல்றீங்க..
யார் சொல்றத நம்புவதுங்க...
// ஒரு பக்கம் கந்து வட்டிக்கு கடன் கொடுத்த அமெரிக்க அரசாங்கம், //
அங்கேயும் மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி எல்லாம் உண்டுங்களா?
// விளைவு பல கழகங்களுக்கு தாவி கடைசியிலே தாய் கழகத்திலே தஞ்சம் அடைகிற மாதிரி //
நச்சுன்னு சொல்லியிருக்கீங்க.
உதாரணம் பிரமாதம்
//விரைவில் வீறு கொண்டு எழும்//
kamalhaasan Style அ ப்டிச்சிக்கோங்க.. வெல்ல்.. நம்ம்பிக்கை..
4த் ஃகுவார்ட்டர் ஆவலாம்ங்க.
// பெரிய பிரச்னை வேலை எல்லாம் கிடைக்குது, ஆனா அனுபவத்திற்கு ஏற்ற வேலையா இருக்குமா ன்னு கேள்வி கேட்க வேண்டிய நிலைமை, நம்ம ஊருல வேலையிலே 5 வருஷ அனுபவம் வந்துட்டா, நான் ப்ராஜெக்ட் டமேஜெர், நான் ஆர்கிடேக்ட் நான் எப்படி கோட்(code) அடிக்கமுடியும் கேள்வி கேட்கிறோம், //
நாம கேட்கிறோமே இல்லையோ, கூட இருக்கிறவங்க நல்லாவே சொல்லி கொடுத்து உசுப்பேத்தி விட்டுடுவாங்க..
hai frnd, i saw ur blog id in dhivya site. unga kita oru vishayam solanum. don't delete this comment. plz do post it in ur blog.
dhivya has steald all our writings. naanga kastapatu yosithu ezudhum stories ellam thirudi potu irukaanga.
plz refer this site. naanga elorum ezudhiya story iruku. including en vasam naan illai. she changed the title and charecters names. unga elorukum idhu theriyanumnu soli thaan am posting this.
plz neengalum indha maadhiri cheating-ku thunai poga vendam.
http://amutha.wordpress.com/2009/03/07/copying-our-stories/
indha maadhiri asingamana persons kooda irukaanganu neenga elorum therindhu kolla vendam.if u respect us plz do help us friend. becoz idhu engalin vilai uyarndha eluthu.idhai thiruda naanga anumadhika mudiyaadhu. naanga elorum evlo comments potu kooda still shez doing the same thing.
PLEASE CONSIDER OUR REQUEST
நல்ல பாசிடிவ் எண்ணம்.... நல்ல படியா முன்னுக்கு வந்தா எல்லாருக்கும் நிம்மதி..
நல்ல பதிவு நசரேயன். அமெரிக்க சூழ்நிலை குறித்து ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் சொல்வது போல, திடீர்ன்றூ வீறுகொண்டு எழுந்தால் அது இந்தியாவுக்கும் நன்மையாகத்தான் இருக்கும். உலகமே பொருளாதாரத்தில் மந்தமாக இருப்பது கொஞ்சம் குறையச் செய்யும். தொடர்ந்து வரும் உங்களது அமெரிக்க பதிவுகள் நீங்க அமெரிக்காவில் இருப்பதைச் சொல்லுகிறது!!! ஹி ஹி (பெரிய கண்டுபிடிப்பு!!)
\\பிரச்சனை போறதிலே இல்லை, இப்படி ஒரு பிரமிக்க வைக்கும் கட்டமைப்பு வசதிகளிலே பழகிப்போன நமக்கு கொஞ்ச நாள் பிடிக்கும் நம்ம ஊரு வசதிக்கு ஒத்துழைக்க,இங்க கார் ஓட்டும் போது மஞ்ச விளக்கை பார்த்து உடனே நிறுத்துவோம், நம்ம ஊரிலே சிகப்பு விளக்கு போட்டாலும் நிக்காம கார் ஓட்ட கொஞ்ச நாள் ஆகும்\\
அருமையா சொல்லி இருக்கீங்க நிதர்சணத்தை ...
நானும் அவுட்சோர்சிங் கம்பெனில வேலை பாத்த வரைக்கும் கோடு அடிச்சதில்லை.ராத்திரி பகலா பெங்களூரூக்கு பேச்சுதான்.இப்ப காலம் மாறிப்போச்சு.
அருமையான தலைப்பு, நல்லதொரு பதிவு...
உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி எங்கும்,எதிலும் தாக்கம்.சுவிஸ் ல் அந்தத் தாக்கம் இன்னும் அவ்வளவாகத் தெரியவில்லை.
பார்ப்போம்.
//பிரச்சனை போறதிலே இல்லை, இப்படி ஒரு பிரமிக்க வைக்கும் கட்டமைப்பு வசதிகளிலே பழகிப்போன நமக்கு கொஞ்ச நாள் பிடிக்கும் நம்ம ஊரு வசதிக்கு ஒத்துழைக்க//
அப்படியில்லைங்க அண்ணோவ்!வேரே நமது ஊர்ங்கிறதால எந்த ஊருக்குப் போனாலும் மீண்டும் நம்ம ஊருக்குப் போனாலும் உடம்பும் மனமும் பழக்கப்பட்டுப் போகும் என்பது எனது எண்ணம்.பொருளாதாரத்தை மட்டும் பேலன்ஸ் செய்துகிட்டா போதும்.
தன்னம்பிக்கை ஊட்டியிருக்கீங்க
//ஆனா இங்கே பாட்டிமார்கள் எல்லாம் பல் செட்டை கழட்டி வச்சி கோட் அடிக்காங்க.//
:-))))))
தன்னம்பிக்கை ஊட்டியிருக்கீங்க
//இவங்களே கோவணத்தோடு சுத்துற நிலைமையிலே நமக்கு எப்படி பேன்ட்,சட்டை கிடைக்கும்//
அவங்க கோவணத்த உருவி சட்ட தைக்க நாம என்னா அரசியல்வாதிகளா ???
சரி விடுங்க மனச தேதிக்குவோம்.
//ஆனா நம்ம ஊரிலே கணினி துறையையே கெடுத்து வச்சி இருக்காங்க//
வேறயாரோ வந்து கெடுக்க வில்லை - எல்லாம் நம்ம மக்க தான்.
//எப்படி தலைவர் பாபாவிலே படுத்து சந்திரமுகியிலே குதியையா வீறு கொண்டு எழுந்தாரோ,//
அப்ப அடி பலம்னு சொல்லவறீங்க...
//அதனாலே இப்ப பொட்டிய கட்டிக்கிட்டு போறவங்க நிச்சயம் திரும்பி வருவாங்க//
நம்ம ஊருக்கா?
நல்ல ஆறுதல் பதிவு. நன்றி.
நல்ல பதிவு நண்பரே..
வாழைப்பழத்தில் ஊசி :))
//
இப்படி இவங்களே கோவணத்தோடு சுத்துற நிலைமையிலே நமக்கு எப்படி பேன்ட்,சட்டை கிடைக்கும்.
//
நியாயமான கேள்வி தான்.. :)
அமெரிக்கா ஒரு சந்தை நீங்கள் அங்கே சென்று உங்கள் திறமையை விற்றீர்கள் அவ்வளவே, தற்சமயம் அங்கே சரக்குக்கு மதிப்பில்லாத பொழுது வேறு எங்கே தேவைப்படுதோ அங்கே சென்று விற்க வேண்டியது தான்.
அமெரிக்கா இன்னும் 10 வருடத்துக்கு எந்திரிக்காது!
அச்சடித்த பணம் அவர்களை மேலும் வீங்க வைத்துவிட்டது!
வால்பையன் said...
அமெரிக்கா இன்னும் 10 வருடத்துக்கு எந்திரிக்காது!
-------
இன்னது பத்து வருஷத்துக்கு எந்திரிக்காதா...அட பாவமே.....
வீடு வாசல் ...பேந்த, பேந்த.. மலங்க..மலங்க... :((
நல்லது நடந்தா சரிதான்....
டவுசருன்னு இருந்தா அது கிழியறது தான்...நாம ஒட்டுப் போட்டு அதையே திருப்பி போட்றது தான்....ரொம்ப நல்ல டவுசரா இருந்தாலும் எத்தினி நாளு தாங்கும்....கொஞ்ச நாளு கிழிஞ்ச டவுசரோட திரிய வேண்டியது தான்...அப்புறமா வேற டவுசர் வாங்காமயா போகப் போறோம்??
உள்ளேன்!
:)
அண்ணாச்சி ஊருக்கு எப்ப வர்றீங்க......
அற்புதமான பதிவு... குடுகுடப்பையும் எழுதியிருக்கார் இதேமாதிரி ஒரு பதிவு ரெண்டும் நல்லாருக்கு... நான் இலங்கையில இருந்தாலும் அமெரிக்க கம்பனிதான்... உதுகளை வாசிக்க எனக்கு வயத்த கலக்குது...
//பிரச்சனை போறதிலே இல்லை, இப்படி ஒரு பிரமிக்க வைக்கும் கட்டமைப்பு வசதிகளிலே பழகிப்போன நமக்கு கொஞ்ச நாள் பிடிக்கும் நம்ம ஊரு வசதிக்கு ஒத்துழைக்க,இங்க கார் ஓட்டும் போது மஞ்ச விளக்கை பார்த்து உடனே நிறுத்துவோம், நம்ம ஊரிலே சிகப்பு விளக்கு போட்டாலும் நிக்காம கார் ஓட்ட கொஞ்ச நாள் ஆகும்//
முற்றிலும் உண்மையான கருத்து நசரேயன்...
மீ ஃபர்ஸ்ட்டு கமெண்ட்...நெக்ஸ்ட்டு பெரிய கமென்ட்டு...யூ வெய்ட்டு (எவ்ளோ கிலோவா..இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சலே இல்ல) அண்ட் வாட்ச்சு (டைட்டனா, டாகரா...அட இன்னும் நக்கல் முடியலையா)
//அதனாலே இப்ப பொட்டிய கட்டிக்கிட்டு போறவங்க நிச்சயம் திரும்பி வருவாங்க//
என்ன ஒரு தன்னம்பிக்கை! வாழ்க, வளர்க, வெல்க!
Post a Comment