Friday, March 20, 2009

பம்பாய் படமும் அதன் விளைவும்

பம்பாய் படம் வெளிவந்த நேரம் நான் கல்லூரியிலே குப்பை கொட்டி கிட்டு இருந்தேன், நண்பர்கள் எல்லோரும் ௬ட்டமா படம் பார்க்க ஓசியிலே என்னையும் ௬ட்டிட்டு போனாங்க, படம் பாத்து விட்டு வந்த உடனே எனக்கு மட்டுமல்ல எங்க நண்பர்களுக்கு எல்லாம் காதல் வெறி கொலை வெறி ஆகிவிட்டது.நான், ராமநாதபுரம் நண்பர்,சென்னைக்காரன் எல்லோருக்கும் காதல் சுரம் வந்து விட்டது, சென்னைக்காரன் கல்லூரியிலே புதுசா தேத்துன பெண்ணோட பேச போய்விட்டான்.ராம்நாடு ராஜாவுக்கு அப்பத்தான் ஒரு தலை காதல் முளைச்சி இருந்தது, அதை எப்படி ரெண்டு தலையா மாத்துறதுன்னு யோசனை பண்ணி கொண்டு இருந்தான்

நான் வழக்கம் போல ஆள் கிடைக்காததாலே மனசுல முன் பதிவு செய்த என்னோட பள்ளி காதலியை நினைக்க ஆரம்பித்தேன். நாங்க அடுத்து என்ன பண்ணலாமுன்னு யோசனை பண்ணி கொண்டு இருந்த நேரம், சேலம் நண்பன் ஒருத்தர் கையிலே துண்டை போட்டு கிட்டு வந்தாரு, நாங்க அவனை நிறுத்தி

"என்ன மச்சான் ஆச்சி"

"பம்பாய் படம் பார்த்து எனக்கு காதலி போதை அதிகமாகி தேய்ப்பு பொட்டியை வச்சி அவ பேரை கையிலே எழுதிகிட்டேன், அந்த எழுத்து அழியக் ௬டாதுன்னு கையிலே துண்டு போட்டு இருக்கேன் னு சொன்னான் "

உடனே நான் "மச்சான் பசங்க எல்லாம் அடாவடியா நடவடிக்கை எடுத்து கிட்டு இருக்காங்க, நாம எதாவது செய்யணும்"

ராம்நாடு நண்பன் "டேய் கரி பால் டி, நீ ஏற்கனவே தீயில் இருந்து வந்தவன் மாதிரி தான் இருக்கே, உனக்கு இதெல்லாம் தேராது,அந்த பெண்ணோட கல்லூ ரிக்கு வேணுமுனா ஒரு காதல் கடிதம் எழுதலாம்"

மச்சான் ஒரு தலையா காதலிச்சாலும், ரோமியோ மாதிரி யோசனைடா னு நான் சொன்னேன்,உடனே ஒரு பேப்பர் எடுத்து நாலு பக்கத்து காதல் மழை பொழிஞ்சு புட்டேன்,அப்ப இப்பவிட கொஞ்சம் பரவாஇல்லாமல் எழுத்து பிழையோட எழுதினேன்.கடிதம் எழுதி கொரியர்ல அனுப்பி போய் சேர்ந்த அத்தாட்டியும் வாங்கி விட்டேன், அந்த பெண் கையெழுத்து போட்ட சீட்டை ரெண்டு மாசம் தலையிலே வச்சி தூங்கினேன்.தப்பி தவறி மழை வந்து நான் நினைஞ்சாலும் ரசிது நினையாம பாத்துக்குவேன்

கல்லூரி விடுமுறையிலே ராம் நாடு,சென்னை, தூத்துக்குடி நண்பர்கள் எல்லோரும் குற்றாலம் செல்ல எங்க வீட்டுக்கு வந்தாங்க,தூத்துக்குடி நம்பனுக்கு புதுசா பீடி அடிக்க கத்து கொடுத்து இருந்தேன். அவன் எங்க ஊருக்கு போனதும் வீட்டிலே பையை போட்டு விட்டு உடனே வெளியே போய் புகை பிடிக்கணுமுன்னு சொன்னான்.நான் வழக்கமா போற டீ கடைக்கு போனேம், கடைக்காரன் என்னை பார்த்து முறைச்சி கிட்டே டீ போட்டான்.

கொஞ்ச நேரத்திலே கடைக்கு முன்னாடி ஏகப்பட்ட ௬ட்டம், நான் கடைகாரரிடம்

அண்ணே, "இன்னைக்கு ௬ட்டம் களை கட்டுது"

அவரு "அவங்க டீ குடிக்க வரலை, உன் முதுகிலே டின் கட்ட வந்து இருக்காங்க, பேசாம புற வாசல் வழியா ஓடிப்போடு, உன்னால உன் நண்பர்களும் அடி வாங்க
௬டாதுன்னு சொல்லுறேன்"

அதை கேட்டு அப்பவே எனக்கு காய்சல் வந்து, அங்கே ஓடின ஓட்டம், நேர வீட்டுல சுருண்டு படுத்து கிட்டேன்

மாலையிலே என்னை பார்க்க வந்த உள்ளூர் நண்பனிடம் விவரம் கேட்டேன்.

உன்னையெல்லாம் கரும் புள்ளி, செம் புள்ளி குத்தி கழுதை மேல எத்தி ஊருக்குள்ளே வலம் வர உடனும், நீ அந்த புள்ள படிக்கிற கல்லூரிக்கு எழுதின கடிதத்தை உடைச்சி பிரிச்சி படிச்ச கல்லூரி வார்டன், அதை பிரின்சிபல் கிட்ட காட்டி, அந்த பெண்ணை ஆறு மாசம் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.காதல் கொய்யப்பழம் மாதிரி தானா கனியனும், நீயா கனிய வைக்க முடியாது.


இப்படி அறிவுரை வசனம் எல்லாம் பேசினான், எல்லாம் முடிஞ்ச பின்ன, கடிதத்தோட விட்டியா அந்த பெண்ணோட வீட்டுக்கு தினமும் 100 போன் கால் பண்ணி இருக்கிறாய்.

ராம் நாடு நண்பன் " டேய் இதெல்லாம் சொல்லவே இல்லை, இப்பத்தானே தெரியுது எப்படி ரூம் ல இருந்த காசு எல்லாம் காணாம போகுதுன்னு"

"இல்லை மச்சான், நான் பன்னலை"

உள்ளூர் நண்பன் "பனை மரத்துக்கு கிழே நின்னுகிட்டு, நீ பால் தான் குடிக்கன்னு சொன்னா எப்படி?

நான் "இப்ப என்னடா செய்ய?"

"நீ கொஞ்ச நாள் ஊருக்கு வெளியே தலை காட்டாம இரு, இல்லை உன் தலை யை எடுத்து புடுவாங்க"

"சரி.. சரி விபரம் சொன்ன எனக்கு சரக்கு அடிக்க காசு கொடு " என்று என்னிடம் 100
ரூபாய் வாங்கிட்டு போய்ட்டான்

ராம் நாடு நண்பன் "அட ங் கொய்யால, இவன் கொய்யப் பழ கதை இதுக்கு தான் சொன்னனா?"

ஒரு தப்புக்கு ஒன்னு தப்பு போனஸ் மாதிரி இதுவும் சேர்ந்து விட்டது.நான் கால் பண்ணலன்னு சொல்லுவதை நம்ப ஆள் இல்லை, இன்றை வரைக்கும் அது உண்மையத்தான் இருக்கு.அதுக்கு அப்புறம் நான் வீட்டை விட்டு வெளியே வரவில்லை, நண்பர்களை எல்லாம் குற்றாலம் தனியே அனுப்பி விட்டு கல்லூரிக்கு ஓடினவன் தான் ஆறு மதத்துக்கு ஊருக்கு வரலை.அதன் பின் வந்தாலும் நாடு ராத்திரிலே வருவேன், போவேன்.அந்த சம்பவத்திற்கு பின் நானும் ஒரு முடிவுக்கு வந்தேன், இனிமேல காதலை கடிதத்துல சொல்லக் ௬டாதுன்னு

இன்றைக்கும் என் வீட்டிலே நான் போன் பன்னலைனா "யார் யாருக்கோ 100 கால் போடுவீங்க,எனக்கு ஒரு கால் போடமுடியாதா?


52 கருத்துக்கள்:

சந்தனமுல்லை said...

:-))))

ஆதவா said...

ஹாஹ.அ.... நண்பர்களோடு உரையாடுவதை அழகான நடையில் கொடுத்திருக்கீங்க... படிக்கப்படிக்க சுவாரசியமா இருந்தது!!

Ravee (இரவீ ) said...

அடங் கொய்யால ....

Ravee (இரவீ ) said...

//அந்த சம்பவத்திற்கு பின் நானும் ஒரு முடிவுக்கு வந்தேன், இனிமேல காதலை கடிதத்துல சொல்லக் ௬டாதுன்னு//
பிறகு எப்படி ?

இராகவன் நைஜிரியா said...

// இன்றைக்கும் என் வீட்டிலே நான் போன் பண்ணைலைன்னா "யார் யாருக்கு 100 கால் போடுவீங்க,எனக்கு ஒரு கால் போடமுடியாதா?//

தேவைத்தான் இது..

பழி ஓரிடம், பாவம் ஓரிடமா...

பழமைபேசி said...

//பண்ணைலைன்னா //

பண்ணையில என்ன தளபதி?

கீழை ராஸா said...

யார் யாருக்கோ 100 பின்னூட்டம் போடறீங்க எனக்கு போடக்கூடாதா...?

என்ன இந்த பதிவின் காரணத்தை நான் கண்டு பிடிச்சிட்டேனா..?

ஹேமா said...

//ராம்நாடு ராஜாவுக்கு அப்பத்தான் ஒரு தலை காதல் முளைச்சி இருந்தது, அதை எப்படி ரெண்டு தலையா மாத்துறதுன்னு யோசனை பண்ணி கொண்டு இருந்தான்.//

நீங்கதான் இருக்கீங்களே .அப்புறம் என்ன குறை அவருக்கு !ஐடியா மன்னன் நீங்க.

ஹேமா said...

//சரி.. சரி விபரம் சொன்ன எனக்கு சரக்கு அடிக்க காசு கொடு " என்று என்னிடம் 100
ரூபாய் வாங்கிட்டு போய்ட்டான்.//

உங்ககிட்டேயேவா ?குடுத்தீங்களா?

ச்சின்னப் பையன் said...

ஹாஹா....

:-))))

ச்சின்னப் பையன் said...

//"யார் யாருக்கு 100 கால் போடுவீங்க,எனக்கு ஒரு கால் போடமுடியாதா//

சரி வுடுங்க.. இனிமே பக்கத்து அறையில் இருந்தாலும் தொலைபேசி பேசிக்கிட்டே இருங்க... அவ்வ்வ்..

நட்புடன் ஜமால் said...

ஐயா!

நல்ல மருந்து உங்கள் பதிவுகள்

வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டு போகும்

நட்புடன் ஜமால் said...

\\தேய்ப்பு பொட்டி\\

iron boxஆ

நட்புடன் ஜமால் said...

\\இன்றைக்கும் என் வீட்டிலே நான் போன் பன்னலைனா "யார் யாருக்கு 100 கால் போடுவீங்க,எனக்கு ஒரு கால் போடமுடியாதா?\


ஹா ஹா ஹா

எல்லோர் போலவே நான் மிகவும் இரசித்தேன் இதை

நட்புடன் ஜமால் said...

\\கீழை ராஸா said...

யார் யாருக்கோ 100 பின்னூட்டம் போடறீங்க எனக்கு போடக்கூடாதா...?\\

ஹா ஹா ஹா

ராஸா ராஸா

கீழை ராஸா

புதியவன் said...

//அண்ணே, "இன்னைக்கு ௬ட்டம் களை கட்டுது"

அவரு "அவங்க டீ குடிக்க வரலை, உன் முதுகிலே டின் கட்ட வந்து இருக்காங்க, பேசாம புற வாசல் வழியா ஓடிப்போடு, உன்னால உன் நண்பர்களும் அடி வாங்க
௬டாதுன்னு சொல்லுறேன்"//

ஹா...ஹா...ஹா...ஒவ்வொரு வரியிலும் காமெடி கலக்கல்...

புதியவன் said...

//இன்றைக்கும் என் வீட்டிலே நான் போன் பன்னலைனா "யார் யாருக்கோ 100 கால் போடுவீங்க,எனக்கு ஒரு கால் போடமுடியாதா?//

இது உங்கள் காமெடியின் உச்சம்...

SUREஷ் said...

//"சரி.. சரி விபரம் சொன்ன எனக்கு சரக்கு அடிக்க காசு கொடு " என்று என்னிடம் 100
ரூபாய் வாங்கிட்டு போய்ட்டான்//

ALL IN THE GAME

thevanmayam said...

பம்பாய் படம் வெளிவந்த நேரம் நான் கல்லூரியிலே குப்பை கொட்டி கிட்டு இருந்தேன், நண்பர்கள் எல்லோரும் ௬ட்டமா படம் பார்க்க ஓசியிலே என்னையும் ௬ட்டிட்டு போனாங்க, படம் பாத்து விட்டு வந்த உடனே எனக்கு மட்டுமல்ல எங்க நண்பர்களுக்கு எல்லாம் காதல் வெறி கொலை வெறி ஆகிவிட்டது.///

ஆஹா! ஹீரோயின் ஒடி வருகிற சீன் பாத்த ஜூரமா?

thevanmayam said...

சென்னைக்காரன் கல்லூரியிலே புதுசா தேத்துன பெண்ணோட பேச போய்விட்டான்.///

கல்லூரியில் கேட்ட அருந்தமிழ் வார்த்தை!”தேத்துன”

thevanmayam said...

கலக்கீட்டீங்க..

ஸ்ரீதர்கண்ணன் said...

யார் யாருக்கோ 100 கால் போடுவீங்க,எனக்கு ஒரு கால் போடமுடியாதா?

:))))))))

புல்லட் பாண்டி said...

அட... சொன்னா வெட்கக்கேடு..... போனவாரம்தான் நான் பம்பாய் படம் பாத்தேன்... இந்துவும் முஸ்லிமும் கசமுசா பண்ணிக்கலாம்னு சொல்லி நம்மட சைட் அடிக்கற ரேஞ்சை கூட்டியதற்காக நமக்கு பெரிய சந்தோசம்.... காதல் காட்சிகள் அற்புதம்... எனக்Nகு யாரையாவது லவ் பண்ணினா என்னண்ணு தோணிச்சு....

கடைசியா ஒரு புதிர விடுவிக்கவே இல்லயே ... உண்மையா யாருங்க அந்த காசு திருடி கோல் போட்டது...?

T.V.Radhakrishnan said...

:-)))))

Anonymous said...

sami enakku uru unmai therinjaganum.
100 thadavai yaru call pannunathu?
.
puliangudi yil enga irukkenga?
naanum puliangudi than.
.

தத்துபித்து said...

sami enakku uru unmai therinjaganum.
100 thadavai yaru call pannunathu?
.
puliangudi yil enga irukkenga?
naanum puliangudi than.

அபுஅஃப்ஸர் said...

//பம்பாய் படம் வெளிவந்த நேரம் நான் கல்லூரியிலே குப்பை கொட்டி கிட்டு இருந்தேன்//

உண்மைய ஒத்துக்கிட்டீங்க போல‌

அபுஅஃப்ஸர் said...

நண்பர்களிடம் அடித்த அரட்டை விவரிக்க வார்த்தையில்லை, அதுதான் உண்மையும் கூட‌

அபுஅஃப்ஸர் said...

//"சரி.. சரி விபரம் சொன்ன எனக்கு சரக்கு அடிக்க காசு கொடு " என்று என்னிடம் 100
ரூபாய் வாங்கிட்டு போய்ட்டான்
/

ஹா ஹ

அபுஅஃப்ஸர் said...

//நான் கால் பண்ணலன்னு சொல்லுவதை நம்ப ஆள் இல்லை, இன்றை வரைக்கும் அது உண்மையத்தான் இருக்கு///

நா நம்புறேன் தல, நீங்க 200 கால் போட்டுருப்பீங்க, ஹி ஹி எல்லாம் எக்ஸ்பீரியன்ஸ்தான்

அபுஅஃப்ஸர் said...

//யார் யாருக்கோ 100 கால் போடுவீங்க,எனக்கு ஒரு கால் போடமுடியாதா?
//

மறக்க மாட்டாங்களே... அட்லீஸ்ட் ஒரு போனாவது போட்டு சும்மாவாச்சும் பிஸி அப்புறம் பண்ணுறேனு சொல்லிட்டு வெச்சிடுங்க... ஹி ஹி எப்படி நம்ம ஐடியா

ஜோதிபாரதி said...

|:):):)

அசோசியேட் said...

"அட ங் கொய்யால, இவன் கொய்யப் பழ கதை இதுக்கு தான் சொன்னனா?"


வெவரமான பார்ட்டி..

உருப்புடாதது_அணிமா said...

ஹா ஹா ஹா

Poornima Saravana kumar said...

//இன்றைக்கும் என் வீட்டிலே நான் போன் பன்னலைனா "யார் யாருக்கோ 100 கால் போடுவீங்க,எனக்கு ஒரு கால் போடமுடியாதா?
//

ஹி ஹி ஹி...
:))))))))))))))))))))))))))

ஒரே சந்தோசமா இருக்கு:)))

MayVee said...

Neegalum ennaiye madiri 1000 murai bulb vangiya aburva sigamaniya???

naala irukku ppa intha padivu...

MayVee said...

"Ravee (இரவீ ) said...
அடங் கொய்யால ...."

appadina enna meaning uncle....

MayVee said...

"பம்பாய் படம் வெளிவந்த நேரம் நான் கல்லூரியிலே குப்பை கொட்டி கிட்டு இருந்தேன்"

naan app sixth illati seventh padithu kondu irunthen.....

sari...
app neenga UG pannittu irunthingala illa PG pannittu irunthingala

Mahesh said...

ஹாஹா....

:))))))))))))))))))))))))))))))

அ.மு.செய்யது said...

////அந்த சம்பவத்திற்கு பின் நானும் ஒரு முடிவுக்கு வந்தேன், இனிமேல காதலை கடிதத்துல சொல்லக் ௬டாதுன்னு//

எஸ் எம் எஸ் அனுப்பலாங்க..

அ.மு.செய்யது said...

//\\இன்றைக்கும் என் வீட்டிலே நான் போன் பன்னலைனா "யார் யாருக்கு 100 கால் போடுவீங்க,எனக்கு ஒரு கால் போடமுடியாதா?\

ஹா.ஹா..


//\\கீழை ராஸா said...

யார் யாருக்கோ 100 பின்னூட்டம் போடறீங்க எனக்கு போடக்கூடாதா...?\\//


நுண்ணரசியல் ????

ஸ்ரீமதி said...

:)))))))))))))

வில்லன் said...

அடடா ரொம்ப நாலா எதிர் பார்த்த சமாசாரம் ஆச்சே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

படிச்சுட்டு வந்து நெறைய பின்னுட்டம் போடுறேன்.

வில்லன் said...

//"பம்பாய் படம் பார்த்து எனக்கு காதலி போதை அதிகமாகி தேய்ப்பு பொட்டியை வச்சி அவ பேரை கையிலே எழுதிகிட்டேன், அந்த எழுத்து அழியக் ௬டாதுன்னு கையிலே துண்டு போட்டு இருக்கேன் னு சொன்னான் "//

யோவ்!!!!!!!!!!!!! பொட்டியை வச்சி அவ பேரை கையிலே எழுத முடியாது....... வேணும்னா முதுகுல எழுதலாம்.

வில்லன் said...

//இன்றைக்கும் என் வீட்டிலே நான் போன் பன்னலைனா "யார் யாருக்கோ 100 கால் போடுவீங்க,எனக்கு ஒரு கால் போடமுடியாதா?//

சரிதான.... இதுல என்ன சடவு வேண்டிகெடக்கு உமக்கு.......

உண்மை கண்டிப்பாய் ஒருநாள் வெளியே வரும். முடிஞ்சா நான் தெரிஞ்சவங்க மூலமா வெளிக்கொணர பாக்குறேன்.............................

வில்லன் said...

//உன்னையெல்லாம் கரும் புள்ளி, செம் புள்ளி குத்தி கழுதை மேல எத்தி ஊருக்குள்ளே வலம் வர உடனும்,//

இத பன்னுனாங்கள இல்லையா.

இதுவே எங்க ஊற இருந்தா எத்தன வருஷம் ஆனாலும் தெருமன்ன சடில வச்சு ஊற சுத்தி வர வச்சுருவாங்க.........நம்ம கம்பீரமா முன்னால நடக்க பின்னால ஒரு ஊர்வலமே வரும் கோஸம் போட்டுக்கிட்டு.

வில்லன் said...

//உன் முதுகிலே டின் கட்ட வந்து இருக்காங்க, பேசாம புற வாசல் வழியா ஓடிப்போடு, உன்னால உன் நண்பர்களும் அடி வாங்க
௬டாதுன்னு சொல்லுறேன்"

அதை கேட்டு அப்பவே எனக்கு காய்சல் வந்து, அங்கே ஓடின ஓட்டம், நேர வீட்டுல சுருண்டு படுத்து கிட்டேன்//

ஊடு புகுந்து முதுகிலே டின் கட்டினங்களா இல்லையா??????????

வில்லன் said...

Ravee (இரவீ ) said...
//அந்த சம்பவத்திற்கு பின் நானும் ஒரு முடிவுக்கு வந்தேன், இனிமேல காதலை கடிதத்துல சொல்லக் ௬டாதுன்னு//
பிறகு எப்படி ?


100 கால் போட்டு தான்

வில்லன் said...

// புல்லட் பாண்டி said...
அட... சொன்னா வெட்கக்கேடு..... போனவாரம்தான் நான் பம்பாய் படம் பாத்தேன்... இந்துவும் முஸ்லிமும் கசமுசா பண்ணிக்கலாம்னு சொல்லி நம்மட சைட் அடிக்கற ரேஞ்சை கூட்டியதற்காக நமக்கு பெரிய சந்தோசம்.... காதல் காட்சிகள் அற்புதம்... எனக்Nகு யாரையாவது லவ் பண்ணினா என்னண்ணு தோணிச்சு....

கடைசியா ஒரு புதிர விடுவிக்கவே இல்லயே ... உண்மையா யாருங்க அந்த காசு திருடி கோல் போட்டது...?//

யோவ் தலைவா!!!!!!!!!!!!!!!!!!!!

காசு திருடி "கால்" போடிங்களா இல்ல "கோல்" போடிங்களா

வில்லன் said...

ஐயா நான்தான் அரை செஞ்சுரி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வில்லன் said...

அப்ப நீங்க!!!!!!! ஒங்க கனவுல ஒரு நாலு கூட "ஹம்மா ஹம்மா" பாட்டு பாடவே இல்லையா. ஐயோ பாவம்.

வில்லன் said...

சரி.. சரி படிச்சி பின்னுட்டம் போட்ட எனக்கு சரக்கு அடிக்க காசு கொடு (ஒரு நூறு டாலர்)

வில்லன் விமர்சன குழு