ரயிலில் மஞ்சள் அழகியுடன்
நான் பெரும்பாலும் ரயில் பயணங்களில் யாரிடமும் பேசுவதில்லை, ஏன்னா நான் பேச ஆரம்பித்த உடனே அவங்க பேச முடியாது, நான் போடுகிற மொக்கையிலே அடுத்த ரயில் நிறுத்ததிலே பயணத்தை ரத்து செய்துட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.அதனாலே சாப்பிடவும், கொட்டாவி விடவும் வாய் திறப்பேன்.
அன்றைக்கு பெங்களூர்ல இருந்து சென்னைக்கு ரெண்டாம் வகுப்பிலே பயணம் செய்து கொண்டு இருந்தேன்.நான் எழுதுகிற பதிவுக்கு வருகிற மாதிரி ௬ட்டம் குறைவாத்தான் இருந்தது.ரயில் கிளம்பும் போது நறுமண வாசனையோடு ஒரு வசந்த காற்று வந்தது, அந்த பக்கம் நான் பார்க்கும் போது மஞ்சள் நிற உடையிலே திறந்த தலை முடியுடன் ஒரு பெண் எனக்கு எதிரே இருந்த இருக்கைக்கு எதிரே வந்து அமர்ந்தாள், பாண்டிய மன்னனுக்கு வந்த பெண்ணின் ௬ந்தலின் மணம் இயற்கையா செயற்கையா என்கிற சந்தேகமே எனக்கு வரவில்லை.
சாதரணமாகவே என்னை விட கொஞ்சம் நிறம் அதிகம் இருக்கும் பெண்கள் எல்லாம் அழகியாக தோன்றும் எனக்கு அவள் பேரழகியாக தோன்றினாள்.அதனாலே படிக்கிறவங்க யாரவது இருந்தால் கொஞ்சம் எதிர் பார்ப்பை குறைத்துக் கொள்ளவும். நான் என்ன செய்ய என் ரசனை அப்படி !!.இப்படி ஒரு அழகிக்கு எவ்வளவு பேரு துண்டு போட்டு காத்து கிட்டு இருக்காங்களோ!! என் மனசுலே நினைத்து கொண்டு நான் அமைதியானேன்.ஆனால் என் மனது அலை பாய்ந்தது
சிறிது நேரம் கழித்து "ஹலோ"
மீண்டும் ஹலோ.. ஹலோ என்றவள் என் முகத்தின் முன் அவள் காந்த கைகள் மேலும் கீழும் ஆடிக்கொண்டு இருந்தது.
"நீங்க என்னைத்தான் ௬ப்பிட்டீர்களா, நான் நீங்க யாரிடமோ கைபேசியிலே பேசுகிறீர்கள் என் நினைத்தேன்" .அவள் தங்க நிற கையிலே ஒரு ஆங்கில புத்தகம் இருந்ததையும் கவனித்தேன்.
"இந்த தண்ணி பாட்டிலை கொஞ்சம் திறந்து கொடுக்க முடியுமா?"
அதை வாங்கி திறந்து அவள் கையிலே கொடுத்தேன், அவள் குடித்து விட்டு
நான் இங்கிலீஷ் நாவல் நிறைய படிப்பேன், அதிலேயும் சிட்னி ஷேல்டோன் எழுதியது, நீங்க ஏதாவது அவரோடது படிச்சி இருக்கீங்களா? என்னிடம் கேட்டாள்.
படிச்சி இருக்கேன்னு சொல்லி மானம் போகிறதை விட உண்மையை சொல்லலாமுன்னு
"எனக்கு சட்னி தான் தெரியும் சிட்னி ஷேல்டோன் எல்லாம் தெரியாது"
ஒரு சிரிப்பு சிரித்து விட்டு "யு ஆர் சோ பன்னி"
"நல்லவேளை நீங்க என்னை பன்னினு சொல்லலை"
மீண்டும் சிரித்து விட்டும் "உங்களுக்கு நகைசுவை உணர்வு அதிகம், ஐ லைக் யு"
அதை கேட்டதும் மனசு கொஞ்சம் தடம் புரண்டு தான் போச்சு, என் மனசுலே இடமே இல்லாவிட்டலும் தக்கல்ல அவள் என் மனதிலே இடம் பிடித்தாள்.
"எனக்கு பிடிச்ச நாவல் பொன்னியின் செல்வன், சிவகாமின் சபதம், ஹும்.. அதோட அருமை எல்லாம் உங்களுக்கு எல்லாம் தெரியாது"
"இங்கிலீஷ் நாவல் படிச்சா தமிழ் நாவல் படிக்க மாட்டாங்கன்னு நீங்களே முடிவு பண்ணினா எப்படி?"
நந்தினிக்கும், குந்தவைக்கும் உள்ள வித்தியாசத்தை கல்கி ரெண்டு வரியிலே அழக சொல்லி இருப்பார், அது தெரியுமா?
"நரகத்துக்கு போகிறவனை சொர்கத்துக்கு கொண்டு போய் சேர்ப்பாள் குந்தவை, நரகத்தையே சொர்க்கம் என்று நம்ப வைப்பாள் நந்தினி "
"கைய கொடுங்க ரெம்ப சரியா சொன்னீங்க" கை யை என் முன் நீட்டினாள்.
அவள் மனசைத்தான் தொட முடியாது, கையாவது தொட்டுக்கலாமுன்னு கையை கொடுத்தேன். அவள் கையை தொடும் முன் இன்னொரு கரம் என்னை தொட்டது,
"என்னங்க இந்த பொண்ணுகிட்ட ரெம்ப கலாட்டா பண்ணுறீங்க"
"அடப்பாவி நான் கடலை வருக்கிறது, அதுக்குள்ளேயும் உனக்கு பொறுக்க முடியலையா?" அப்படின்னு சொல்லவந்து
"நாங்க சும்மா பேசிகிட்டு இருக்கோம்" னு சொன்னேன்.
"ஒரு பெண்ணு தனியே இருந்தால், உடனே ஆரம்பிச்சுடுவீங்களே, இவன் தான் காவலிப்பய, உனக்கு எங்கே போச்சு புத்தி"
என்னை மட்டுமல்ல அவளையும் திட்ட ஆரம்பித்தான்.
பெண்கள் முன்னால் வீரத்தை காட்டும், ஆண்களுக்கு நானும் விதி விலக்கு அல்ல என்பதை போல கொஞ்சம் குரலை உயர்த்தி
"உன் வேலையை பாத்துகிட்டு போ" அதுக்கு பதில் வாயாலே சொல்லலை, என் கண்ணத்திலே ரெண்டு பளார்..பளார் ன்னு போட்டான். நான் கண்ணத்தை தடவி கொண்டு அரண்டு போய் நின்றேன்.
பரத் என்ன காரியம் பண்ணுறீங்க, ஐ ஹெட் யு..ஐ ஹெட் யு.. என்று சொல்லி விட்டு
இவரு என் காதலன், எங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு சின்ன பிரச்சனை, அதை எப்படி சரி செய்யன்னு யோசிச்சப்ப உங்களைப்பார்த்தேன்.நீங்க ஒரு மஞ்ச மாக்கான் மாதிரி இருந்தீங்க, நிலக்கல்லுக்கு புடவை கட்டிவிட்டாக் ௬ட நாலு மணி நேரம் நின்னு ரசிக்கிற மாதிரி யான ஆளு,காதலை கனவுல ௬ட காணாத காஞ்ச மாடு மாதிரி. உங்க கிட்ட பேசினால் போறமையிலே மறுபடி என் கிட்ட பேசுவான்னு நினைச்சேன்.
"இதுக்கு நீங்க என்னை செருப்பாலே அடித்து இருக்கலாம்"
"என்னை மன்னிச்சிடுங்க அண்ணா"
எனக்கு எங்கயோ புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படம் பார்த்த ஞாபகம் வந்தது.என் மூஞ்சிலே அம்புட்டு விவரம் இருக்குன்னு அன்றைக்கு தான் எனக்கே தெரிஞ்சது.
இனிமேல அங்கே இருந்தால் அவள் மேலே கோபம் தான் வருமென நினைத்து, அந்த இடத்தை விட்டு வெளியேறினேன், போகும் முன் அவள் காதலன் பரத்துக்கு ஒரு அறை விட்டேன், இந்த முறை நான் அடித்தது என் வீரத்தை காட்ட மட்டுமே.
தக்கலில் வந்தவள் தன்னாலே வெளியே போனாள்,அடுத்த ரயில் நிறுத்ததிலே நான் இறங்கி பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்ப பெங்களூர்க்கு நான் திரும்பி போனேன்
99 கருத்துக்கள்:
//"யு ஆர் சோ பன்னி"//
சுப்பிரமணியன்சாமி பன்னி என்று யாரும் சொல்லவில்லையா தளபதியாரே?
ரொம்ப நல்லா இருந்துச்சு. அடி வாங்கினதும் கொடுத்த்தும்.
//
அந்த பக்கம் நான் பார்க்கும் போது மஞ்சள் நிற உடையிலே திறந்த தலை முடியுடன் ஒரு பெண் எனக்கு எதிரே இருந்த இருக்கைக்கு எதிரே வந்து அமர்ந்தாள்,
//
தொறந்த வீடு கேள்வி பட்ருக்கேன்...அது என்ன திறந்த தலைமுடி?? :0))
//
"உன் வேலையை பாத்துகிட்டு போ" அதுக்கு பதில் வாயாலே சொல்லலை, என் கண்ணத்திலே ரெண்டு பளார்..பளார் ன்னு போட்டான். நான் கண்ணத்தை தடவி கொண்டு அரண்டு போய் நின்றேன்.
//
ஸ்ஸ்ஸ்ஸ்.....யப்பா திருப்தியா இருக்குடா சாமி :0))
இந்த கதைக்கு நீங்க "ரயிலில் பயணங்களில்"னு தலைப்பு வச்சிருக்கலாம்...வீட்ல இருந்தாலும் அடி விழுது...ரோட்ல நடந்தாலும் அடி விழுது...ட்ரெயின்ல போனாலும் டிக்கட் வாங்கிட்டு வந்து அடிக்கிறாய்ங்க...உங்களப் பார்த்தாலே எல்லாருக்கும் அடிக்கணும்னு தோணுமா?
:0))
//சாதரணமாகவே என்னை விட கொஞ்சம் நிறம் அதிகம் இருக்கும் பெண்கள் எல்லாம் அழகியாக தோன்றும் எனக்கு//
நமக்கு என்று போட்டுக் கொள்ளுங்கள்
நம்பிட்டோம்
ரொம்ப நல்லா இருந்துச்சு. அடி வாங்கினதும் கொடுத்த்தும்
:-)))))))))))
மொதல்ல அட்டெண்டன்ஸ்.. :)
//
பாண்டிய மன்னனுக்கு வந்த பெண்ணின் ௬ந்தலின் மணம் இயற்கையா செயற்கையா என்கிற சந்தேகமே எனக்கு வரவில்லை.
//
ஏன்.. ஏன்? அந்த கூந்தல்ல மனமே வரலியா?
//நான் பெரும்பாலும் ரயில் பயணங்களில் யாரிடமும் பேசுவதில்லை, ஏன்னா நான் பேச ஆரம்பித்த உடனே அவங்க பேச முடியாது, நான் போடுகிற மொக்கையிலே அடுத்த ரயில் நிறுத்ததிலே பயணத்தை ரத்து செய்துட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.அதனாலே சாப்பிடவும், கொட்டாவி விடவும் வாய் திறப்பேன்.//
தெரியாதா என்ன.இணையத்தில பதிவு போடுற எல்லாருக்கும் தெரியும்.அழ அழ மொக்கையா பின்னூட்டம் போட்டு ஐயோ... முடிலன்னு சொல்ல வைக்கிற ராசா நீங்கன்னு.
//இப்படி ஒரு அழகிக்கு எவ்வளவு பேரு துண்டு போட்டு காத்து கிட்டு இருக்காங்களோ!! என் மனசுலே நினைத்து கொண்டு நான் அமைதியானேன்.ஆனால் என் மனது அலை பாய்ந்தது//
ஏங்கண்ணா...வூட்ல தங்க்ஸ் இந்தப் பதிவைப் பத்தாங்களாண்ணா.
***********************************
//"இதுக்கு நீங்க என்னை செருப்பாலே அடித்து இருக்கலாம்"
"என்னை மன்னிச்சிடுங்க அண்ணா"//
அசத்தல் டயலாக்.
ரொம்ப நல்லா இருந்துச்சு. அடி வாங்கினதும் கொடுத்த்தும்
:-)))))))))))
ரிப்பிட்டு
-- கிருஷ்ணா
நல்லா இருந்துச்சு.
//என் முகத்தின் முன் அவள் காந்த கைகள் மேலும் கீழும் ஆடிக்கொண்டு இருந்தது.
//
காந்தக் கண்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்...
காந்தக் கைகள்...ம்...இதுவும் நல்லா இருக்கு...
//போகும் முன் அவள் காதலன் பரத்துக்கு ஒரு அறை விட்டேன், இந்த முறை நான் அடித்தது என் வீரத்தை காட்ட மட்டுமே.//
இது...இது...சரியான பதிலடி...
//அவள் தங்க நிற கையிலே//
ஆனாலும் வர்ணனை கொஞ்சம் ஓவரு தான்.
//அவள் மனசைத்தான் தொட முடியாது, கையாவது தொட்டுக்கலாமுன்னு கையை கொடுத்தேன்//
இப்படி எத்தன பேரு கெளம்பிர்க்கீங்க...
//"அடப்பாவி நான் கடலை வருக்கிறது, அதுக்குள்ளேயும் உனக்கு பொறுக்க முடியலையா?"//
கோல மாவுல கோலம் போடலாம்.
ஆனா கடல மாவுல கடல போட முடியாது.
குட் வொர்க் நசரேயன்..ரசித்தேன்.
அய்யய்யொ... இப்பிடி ஆகிப் போச்சே!!! அவிங்க போதைக்கு உங்களை ஊறுகாய் ஆகிட்டாங்களா?
அப்பாடி... இன்னுங் கொஞ்சம் பெட்ரொல் ஊத்தியாச்சு... அடுத்து யார் கடைக்குப் போலாம்?ம்ம்ம்...
காதலை கனவுல ௬ட காணாத காஞ்ச மாடு மாதிரி. உங்க கிட்ட பேசினால் போறமையிலே மறுபடி என் கிட்ட பேசுவான்னு நினைச்சேன்.
"இதுக்கு நீங்க என்னை செருப்பாலே அடித்து இருக்கலாம்"
"என்னை மன்னிச்சிடுங்க அண்ணா"
:))))))))))))))))))))
நான் எழுதுகிற பதிவுக்கு வருகிற மாதிரி ௬ட்டம் குறைவாத்தான் இருந்தது.//
இது எப்போ நடந்திச்சு???
:-)
சாதரணமாகவே என்னை விட கொஞ்சம் நிறம் அதிகம் இருக்கும் பெண்கள் எல்லாம் அழகியாக தோன்றும் எனக்கு அவள் பேரழகியாக தோன்றினாள்.//
அட,
பின்னுறீங்க போங்க...
:-)
நான் இங்கிலீஷ் நாவல் நிறைய படிப்பேன், அதிலேயும் சிட்னி ஷேல்டோன் எழுதியது, நீங்க ஏதாவது அவரோடது படிச்சி இருக்கீங்களா? என்னிடம் கேட்டாள்.//
நானா இருந்தா அந்த இடத்தை அப்போவே காலி பண்ணிட்டு போயிருந்திருப்பேன்...
"எனக்கு சட்னி தான் தெரியும் சிட்னி ஷேல்டோன் எல்லாம் தெரியாது"//
என் இனம் சார் நீங்க...
:-)
மீண்டும் சிரித்து விட்டும் "உங்களுக்கு நகைசுவை உணர்வு அதிகம், ஐ லைக் யு"//
ஓகே ஓகே..
இனித்தான் மேட்டரே..
ரெடி, ஸ்டார்ட் மியுசிக்...
"உன் வேலையை பாத்துகிட்டு போ" அதுக்கு பதில் வாயாலே சொல்லலை, என் கண்ணத்திலே ரெண்டு பளார்..பளார் ன்னு போட்டான். நான் கண்ணத்தை தடவி கொண்டு அரண்டு போய் நின்றேன்.//
அடப்பாவமே...
"இதுக்கு நீங்க என்னை செருப்பாலே அடித்து இருக்கலாம்"
"என்னை மன்னிச்சிடுங்க அண்ணா"//
அண்ணாவா???
அப்போ மேட்டர் அவ்ளோ தானா???
நானா இருந்தா வடிவேலு ரேஞ்சுல மிரட்டி இருப்பேன்...
அவ்வ்வ்வ்வ்...
போகும் முன் அவள் காதலன் பரத்துக்கு ஒரு அறை விட்டேன், இந்த முறை நான் அடித்தது என் வீரத்தை காட்ட மட்டுமே.//
தில்லு....
நம்பிட்டோம்...
அருமையான கதைங்க...
ரொம்ப ரசிச்சேன்...
வாழ்த்துகள்...
சூப்பர் பாஸ்... அருமை...
கடைசியா வடிவேலு கதைதானோ எண்டு பாத்தா
கடைசில ஒரு சொட்டை குடுத்துட்டு வந்திட்டீங்க...வெரி குட் ..
நானா இருந்தா அந்த பெட்டையோட தலமுடிய வெட்டியிருப்பன்...
நல்ல சுவையக எழுதியிருக்கீங்க... :)
//"யு ஆர் சோ பன்னி"//
he he nanum nerya vati itha solli sirika vachi irukan he he
amma kadasiya vitinga parunga adi i like it, figure kedaikalai nu ana piragu adichitathu than correct he he
ungala mathiri alungalukku than figure correct panna pathu valigal nu oru post draft pani irukan seikiraame poduran
apprum evalvu alagha iruntha book panmala irupanga namma pasanga.. 6std sorry 3rd std la irunthu future figure nu book pani navuthuranga..
namaku kuppai muniamma than :-) enna solringa
உன் வேலையை பாத்துகிட்டு போ" அதுக்கு பதில் வாயாலே சொல்லலை, என் கண்ணத்திலே ரெண்டு பளார்..பளார் ன்னு போட்டான். நான் கண்ணத்தை தடவி கொண்டு அரண்டு போய் நின்றேன்.//
neegalum vadivelu mathiri aidtengale aiyyo pavam
//பெண்கள் எல்லாம் அழகியாக தோன்றும் எனக்கு //
உங்களுக்குமா... !!
நான் அப்புறம் வாரேன்.இப்பத்தான் அலுவலகத்துக்கு வந்தேன்.
//போகும் முன் அவள் காதலன் பரத்துக்கு ஒரு அறை விட்டேன், இந்த முறை நான் அடித்தது என் வீரத்தை காட்ட மட்டுமே.
//
தல நீங்க நம்ம இனம், இன்னாப்பூ அடிவாங்கினு சும்மா தேமேனு இருந்தீங்கனு நினைத்தேன்
//பாண்டிய மன்னனுக்கு வந்த பெண்ணின் ௬ந்தலின் மணம் இயற்கையா செயற்கையா என்கிற சந்தேகமே எனக்கு வரவில்லை//
அடப்பாவிமக்கா இதெவேறு நோட்டமிடுவீங்களோ
//இந்த தண்ணி பாட்டிலை கொஞ்சம் திறந்து கொடுக்க முடியுமா?"
//
இப்படிதானே ஆரம்பிக்கும் விபரீதமே
//படிச்சி இருக்கேன்னு சொல்லி மானம் போகிறதை விட உண்மையை சொல்லலாமுன்னு
"எனக்கு சட்னி தான் தெரியும் சிட்னி ஷேல்டோன் எல்லாம் தெரியாது"
//
ஹா ஹா ஹா
சிரிக்கனுமுன்னா உங்க பதிவுகள் சேமித்து வைத்து கொள்ளனும்
மிக அருமைங்க.
hmmnn Lastlee thirupi aduchuteengalee... Nalla irunhtathu
//"எனக்கு சட்னி தான் தெரியும் சிட்னி ஷேல்டோன் எல்லாம் தெரியாது"//
என்னை வம்புல ஏன் மாட்டி விடுறீங்க.குறுக்கால போனவன் என்னன்னு கேட்டு சிரிச்சிட்டுப் போறான் என் சிரிப்பை பார்த்து:)
//நிலக்கல்லுக்கு புடவை கட்டிவிட்டாக் ௬ட நாலு மணி நேரம் நின்னு ரசிக்கிற மாதிரி யான ஆளு//
அவள விடுங்க கழுத!நாம புடவை கட்டினா நாலு மணி நேரம் நின்னு ரசிக்கிற பொண்ணுகளே இருக்குதுங்க:)
ஹையா ஒரே தமாசா ஜாலியா சூப்பரா இருந்துச்சு ...
உங்க பதிவை சொல்லல ...
நீங்க அடி வாங்குனத சொன்னேன் ...
தொடருங்கள்
(இந்த தொடருங்கள் அடி வாங்குறதுக்கு இல்ல ..
பதிவெழுதுறதுக்கு...)
அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)
போகும் முன் அவள் காதலன் பரத்துக்கு ஒரு அறை விட்டேன், இந்த முறை நான் அடித்தது என் வீரத்தை காட்ட மட்டுமே.//
:)))))))))))))))
//குடுகுடுப்பை said...
ரொம்ப நல்லா இருந்துச்சு. அடி வாங்கினதும் கொடுத்த்தும்.
//
ரிப்பீட்டு!
//"என்னை மன்னிச்சிடுங்க அண்ணா"//
அவ்வ்வ்வ்வ்வ்வ்!
50
அருமை!
அடப்பாவமே.. உங்க அனுபவம்னு நினைச்சு படிச்சேன்.... கடைசியிலதான் தெரிஞ்சது அது கதைன்னு!!! இருந்தாலும் இப்படியா???
அப்படியே என்னை நம்ப வெச்சதுக்கு பாராட்டுக்கள்
தல அட்டகாசம் போங்க. எப்படி உங்களாள மட்டும் இப்படி யோசிக்க முடியுது?
//
நான் பெரும்பாலும் ரயில் பயணங்களில் யாரிடமும் பேசுவதில்லை, ஏன்னா நான் பேச ஆரம்பித்த உடனே அவங்க பேச முடியாது, நான் போடுகிற மொக்கையிலே அடுத்த ரயில் நிறுத்ததிலே பயணத்தை ரத்து செய்துட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.அதனாலே சாப்பிடவும், கொட்டாவி விடவும் வாய் திறப்பேன்.
//
இது ஒரு ஆரோக்கியமான முடிவுதான்
விமானத்தில் வரும்போது பக்கத்தில் உள்ளவர்களிடம் ரந்து பண்ணினீங்கன்னு வச்சுக்கோங்க.
உங்களை என்ன செய்வாங்கன்னு உங்களுக்கே தெரியும் :)
அதனாலே வரும்போது அடக்கி வாசிச்சு வாங்க :))
//
அன்றைக்கு பெங்களூர்ல இருந்து சென்னைக்கு ரெண்டாம் வகுப்பிலே பயணம் செய்து கொண்டு இருந்தேன்.நான் எழுதுகிற பதிவுக்கு வருகிற மாதிரி ௬ட்டம் குறைவாத்தான் இருந்தது
//
ஐயோ பாவம், நாங்களும் தான் இதே இங்கே சொல்லிக்கறோம்!!
:))
//
ரயில் கிளம்பும் போது நறுமண வாசனையோடு ஒரு வசந்த காற்று வந்தது,
//
வரும் வரும் இதெல்லாம் மட்டும் வாசனை நல்ல தெரியுமாக்கும்
வீட்டுலே தங்க்ஸ் ஏதாவது கேட்டா ஏன் பேந்த பேந்த முழிக்கிறீங்க ??
//
அதனாலே படிக்கிறவங்க யாரவது இருந்தால் கொஞ்சம் எதிர் பார்ப்பை குறைத்துக் கொள்ளவும். நான் என்ன செய்ய என் ரசனை அப்படி !!.இப்படி ஒரு அழகிக்கு எவ்வளவு பேரு துண்டு போட்டு காத்து கிட்டு இருக்காங்களோ!! என் மனசுலே நினைத்து கொண்டு நான் அமைதியானேன்.ஆனால் என் மனது அலை பாய்ந்தது
//
பாயும் பாயும் பின்னாடியே அவங்க வீட்டுகாரரு வராராம்
ரொம்ப அலைச்சல் தான். :)
ட்ரிங் ட்ரிங் ஹல்லோ த்ங்கமனிங்களா??
கொஞ்சம் எங்க வீட்டுக்கு வாங்க
முக்கியமான ஒருவரை பற்றி வத்தி வைக்க வேண்டி இருக்கு :))
என்னா பூரி கட்டையா? அப்போ சரி....
//
சிறிது நேரம் கழித்து "ஹலோ"
மீண்டும் ஹலோ.. ஹலோ என்றவள் என் முகத்தின் முன் அவள் காந்த கைகள் மேலும் கீழும் ஆடிக்கொண்டு இருந்தது.
//
ஐயோ பாவம் உங்க கைகள் என்ன இரும்பா??
சரி ஏழரை பிடிச்சு ஆட்டுதுன்னு நினைக்கறேன் :))
ஒழுங்கா ஊரு போயி சேருங்க இல்லே??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
"நீங்க என்னைத்தான் ௬ப்பிட்டீர்களா, நான் நீங்க யாரிடமோ கைபேசியிலே பேசுகிறீர்கள் என் நினைத்தேன்" .அவள் தங்க நிற கையிலே ஒரு ஆங்கில புத்தகம் இருந்ததையும் கவனித்தேன்.
//
தங்க நிறம் இது கொஞ்சம் ஓவரா இல்லே??
என்ன தைரியம் இந்த மாதிரி..... :))
//
இந்த தண்ணி பாட்டிலை கொஞ்சம் திறந்து கொடுக்க முடியுமா?"
அதை வாங்கி திறந்து அவள் கையிலே கொடுத்தேன், அவள் குடித்து விட்டு
//
ரொம்ப வீரன்,
பாட்டிலை திறந்து கொடுத்து விட்டு அப்படியே கொஞ்சம் தண்ணியை குடிச்சிட்டு கொடுக்க வேண்டியது தானே??
நமக்கு தான் தண்ணி என்றால் தான் ரொம்ப பிடிக்குமே :)
அப்புறம் என்னா ??
//
"எனக்கு சட்னி தான் தெரியும் சிட்னி ஷேல்டோன் எல்லாம் தெரியாது"
//
நம்ப கதாநாயகன் உண்மை விளம்பி
அதான் சட்னின்னு சொல்லிட்டாரு :))
//
ஒரு சிரிப்பு சிரித்து விட்டு "யு ஆர் சோ பன்னி"
//
அது சரி, நல்ல வேலை வேறே ஏதாவது சொல்லலை போங்க !!
//
மீண்டும் சிரித்து விட்டும் "உங்களுக்கு நகைசுவை உணர்வு அதிகம், ஐ லைக் யு"
//
சரி சரி சனி சங்கடத்தை உண்டு பண்ணிடுச்சு போல :))
//
அதை கேட்டதும் மனசு கொஞ்சம் தடம் புரண்டு தான் போச்சு, என் மனசுலே இடமே இல்லாவிட்டலும் தக்கல்ல அவள் என் மனதிலே இடம் பிடித்தாள்.
//
மனசு மட்டும்தானே நான் தண்டவாலமே தடம் புரண்டு போச்சேன்னு நினைச்சேன் :))
//
"இங்கிலீஷ் நாவல் படிச்சா தமிழ் நாவல் படிக்க மாட்டாங்கன்னு நீங்களே முடிவு பண்ணினா எப்படி?"
//
என்னா ஆச்சு திடீர்ன்னு இப்படி எல்லாம் கேள்வி ??
//
நந்தினிக்கும், குந்தவைக்கும் உள்ள வித்தியாசத்தை கல்கி ரெண்டு வரியிலே அழக சொல்லி இருப்பார், அது தெரியுமா?
"நரகத்துக்கு போகிறவனை சொர்கத்துக்கு கொண்டு போய் சேர்ப்பாள் குந்தவை, நரகத்தையே சொர்க்கம் என்று நம்ப வைப்பாள் நந்தினி "
//
இந்த கதை எதுக்கு சொன்னீங்க
ஏதோ உள் குத்து இருக்கிறது போல இருக்கே!!
அந்த மஞ்ச காட்டு மைனாவுக்கு இது புரியலையே??
//
"கைய கொடுங்க ரெம்ப சரியா சொன்னீங்க" கை யை என் முன் நீட்டினாள்.
அவள் மனசைத்தான் தொட முடியாது, கையாவது தொட்டுக்கலாமுன்னு கையை கொடுத்தேன். அவள் கையை தொடும் முன் இன்னொரு கரம் என்னை தொட்டது,
//
அட இதுக்குதான் அந்த பிட்டா??
அது சரி நடக்கட்டும் நடக்கட்டும் :))
//
"என்னங்க இந்த பொண்ணுகிட்ட ரெம்ப கலாட்டா பண்ணுறீங்க"
"அடப்பாவி நான் கடலை வருக்கிறது, அதுக்குள்ளேயும் உனக்கு பொறுக்க முடியலையா?" அப்படின்னு சொல்லவந்து
//
நினைச்சேன் வில்லங்கம் வீதிலே இல்லே, உங்க பக்கத்துலேயே இருக்குன்னு.
அது சரியா போச்சு. ம்ம்ம் அப்புறம் என்னா ??
//
"நாங்க சும்மா பேசிகிட்டு இருக்கோம்" னு சொன்னேன்.
"ஒரு பெண்ணு தனியே இருந்தால், உடனே ஆரம்பிச்சுடுவீங்களே, இவன் தான் காவலிப்பய, உனக்கு எங்கே போச்சு புத்தி"
//
சூப்பர் அடைமொழியோட பேசி இருக்காரு சும்மா இருந்திருக்கலாமா??
//
என்னை மட்டுமல்ல அவளையும் திட்ட ஆரம்பித்தான்.
//
நல்ல வேலை பாரபட்சம் இல்லாமே திட்டி இருக்காரு :))
//
அவள் மனசைத்தான் தொட முடியாது, கையாவது தொட்டுக்கலாமுன்னு கையை கொடுத்தேன். அவள் கையை தொடும் முன் இன்னொரு கரம் என்னை தொட்டது,
//
அட இதுக்குதான் அந்த பிட்டா??
அது சரி நடக்கட்டும் நடக்கட்டும் :))
//
எங்கெ நடக்கிறது.. ந்ல்லா படிங்க அதுக்கு ம்முன்னே இன்னொரு கரம்.னு வருது :))))
75 :)))))
வாவ்... யாரவது துண்டு போட்டு வச்சிருந்தா மன்னிச்சுடுங்கோ :)
//
பெண்கள் முன்னால் வீரத்தை காட்டும், ஆண்களுக்கு நானும் விதி விலக்கு அல்ல என்பதை போல கொஞ்சம் குரலை உயர்த்தி
//
அது சரி, இதெல்லாம் எப்போ அப்பு??
திருமணத்திற்கு முன் அல்லது திருமணத்திற்கு பின்???
//
"உன் வேலையை பாத்துகிட்டு போ" அதுக்கு பதில் வாயாலே சொல்லலை, என் கண்ணத்திலே ரெண்டு பளார்..பளார் ன்னு போட்டான். நான் கண்ணத்தை தடவி கொண்டு அரண்டு போய் நின்றேன்.
//
ஆஹா அருமையான பரிசு, லேசா பல்லு ஆடுதோ ??
இருக்கும் இருக்கும் :))
//
"உன் வேலையை பாத்துகிட்டு போ" அதுக்கு பதில் வாயாலே சொல்லலை, என் கண்ணத்திலே ரெண்டு பளார்..பளார் ன்னு போட்டான். நான் கண்ணத்தை தடவி கொண்டு அரண்டு போய் நின்றேன்.
//
ஆஹா அருமையான பரிசு, லேசா பல்லு ஆடுதோ ??
இருக்கும் இருக்கும் :))
//
பரத் என்ன காரியம் பண்ணுறீங்க, ஐ ஹெட் யு..ஐ ஹெட் யு.. என்று சொல்லி விட்டு
இவரு என் காதலன், எங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு சின்ன பிரச்சனை, அதை எப்படி சரி செய்யன்னு யோசிச்சப்ப உங்களைப்பார்த்தேன்.நீங்க ஒரு மஞ்ச மாக்கான் மாதிரி இருந்தீங்க, நிலக்கல்லுக்கு புடவை கட்டிவிட்டாக் ௬ட நாலு மணி நேரம் நின்னு ரசிக்கிற மாதிரி யான ஆளு,காதலை கனவுல ௬ட காணாத காஞ்ச மாடு மாதிரி. உங்க கிட்ட பேசினால் போறமையிலே மறுபடி என் கிட்ட பேசுவான்னு நினைச்சேன்.
//
அது சரி விவரம் தெரியாம ஏன் இந்த பிரச்சனை ??
முடிஞ்சி போச்சா??
ஆரம்பிச்ச இடத்துலே நிக்கறீங்களே??
ஹையோ ஹையோ :))
//
எனக்கு எங்கயோ புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படம் பார்த்த ஞாபகம் வந்தது.என் மூஞ்சிலே அம்புட்டு விவரம் இருக்குன்னு அன்றைக்கு தான் எனக்கே தெரிஞ்சது.
//
என்னா பாட்டு அது?? ஆஹா அரை பலமோ??
அதான் ஏதோ பாட்டு எல்லாம் நினைவிற்கு வருது.
சரி சரி , அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா :))
//
இனிமேல அங்கே இருந்தால் அவள் மேலே கோபம் தான் வருமென நினைத்து, அந்த இடத்தை விட்டு வெளியேறினேன், போகும் முன் அவள் காதலன் பரத்துக்கு ஒரு அறை விட்டேன், இந்த முறை நான் அடித்தது என் வீரத்தை காட்ட மட்டுமே.
//
எதுக்கு எதெல்லாம், வீரன், சூரன், குப்பன்:))
ஹா ஹா ரொம்ப நல்ல இருந்திச்சு
அரை வாங்கியதும் சூப்பர், அரை கொடுத்தக்டும் சூப்பர் :))
//
தக்கலில் வந்தவள் தன்னாலே வெளியே போனாள்,அடுத்த ரயில் நிறுத்ததிலே நான் இறங்கி பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்ப பெங்களூர்க்கு நான் திரும்பி போனேன்
//
அவள்தான் போய்ட்டாளே அப்புறம் ஏன் ரயிலை விட்டு எறங்கனும் ?
இது ஒன்னும் சரியா படலையே??
நல்லாத்தான் போயிகி்டடிருந்திச்சு. வந்தான் பாருங்க அந்த வில்லன்... பாவம், கைக்கு (கைகுலுக்க)எட்டியது வாழ்கைக்கு எட்டலை...
"என்னை மன்னிச்சிடுங்க அண்ணா"////
ஐயோ நெஞ்சு வெடிக்குதே...ரத்தம் கொதிக்குதே ....
விழுந்து விழுந்து சிரித்தேன்....அவங்க போதைக்கு நீங்க ஊறுகாய்
//"என்னை மன்னிச்சிடுங்க அண்ணா"//
))))))
நிஜ கதை தானே? ;) :PPP
//"எனக்கு சட்னி தான் தெரியும் சிட்னி ஷேல்டோன் எல்லாம் தெரியாது"//
சரியான சோத்து மாடா இருபீறு போல (எங்க பத்தான்கிளாஸ் வாத்தியார் அடிகடி அப்படிதான் திட்டுவாரு. சின்ன வயசு பாடம் பசு மரத்தாணி போல மனசுல பதிஞ்சுட்டு). அப்படியே அத ஒங்கல சொல்லிட்டேன்
//இவரு என் காதலன், எங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு சின்ன பிரச்சனை, அதை எப்படி சரி செய்யன்னு யோசிச்சப்ப உங்களைப்பார்த்தேன்.நீங்க ஒரு மஞ்ச மாக்கான் மாதிரி இருந்தீங்க, நிலக்கல்லுக்கு புடவை கட்டிவிட்டாக் ௬ட நாலு மணி நேரம் நின்னு ரசிக்கிற மாதிரி யான ஆளு,காதலை கனவுல ௬ட காணாத காஞ்ச மாடு மாதிரி. உங்க கிட்ட பேசினால் போறமையிலே மறுபடி என் கிட்ட பேசுவான்னு நினைச்சேன்.//
அப்படியா சொன்னா அவ. நீறு கம்பு குச்சிக்கு சேலைய சுத்தி விட்டா கூட ஜொள்ளு வடிசுட்டு பத்து நேரம் திரும்பிலபாப்பிரு.
//இனிமேல அங்கே இருந்தால் அவள் மேலே கோபம் தான் வருமென நினைத்து, அந்த இடத்தை விட்டு வெளியேறினேன், போகும் முன் அவள் காதலன் பரத்துக்கு ஒரு அறை விட்டேன், இந்த முறை நான் அடித்தது என் வீரத்தை காட்ட மட்டுமே.//
யாரு யார அடிச்சா??? நீறு அவன அடிசிரா, இல்ல அவன் அவ முன்னாடி இன்னும் கொஞ்சம் வீரத்த காட்ட மறுபடியும் உமக்கு காட்டினானா??????? உண்மைய சொல்லும்யா
// குடுகுடுப்பை said...
ரொம்ப நல்லா இருந்துச்சு. அடி வாங்கினதும் கொடுத்த்தும்.//
தப்பு சார். தலைவரு வாங்க மட்டும் தான் செய்வார். கொடுத்து பழக்கமே இல்ல வாழ்கைல.
As same as my favourite quote:
Gets and forgets.
No gives and forgives.
/ பழமைபேசி said...
//"யு ஆர் சோ பன்னி"//
சுப்பிரமணியன்சாமி பன்னி என்று யாரும் சொல்லவில்லையா தளபதியாரே?//
// பழமைபேசி said...
//"யு ஆர் சோ பன்னி"//
சுப்பிரமணியன்சாமி பன்னி என்று யாரும் சொல்லவில்லையா தளபதியாரே?//
பழமைபேசியார்
எதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல. இருந்தாலும் எங்க தலைவர பன்னின்னு (PIG) திட்ட கூடாது.
சிறப்பான பதிவு
எச்சரிக்கையும் கூட
வெளுத்து வாங்கியிருக்கீங்க
விறுவிறு திரைக்கதை
சண்டைகாட்சிகளும் அருமை
கலக்கீட்டிங்க போங்க
ரெடி
100-வது நான் தான்.
ரொம்பத்தான் அசிங்கப் படுத்துறாய்ங்க! கன்னத்தில வலி ஜாஸ்தியோ?
யு ஆர் சோ ஃபன்னி!
Post a Comment