மாணவர்களுக்கு எச்சரிக்கை
நான் படிச்ச கல்லூரி திருச்சி க்கு பக்கத்திலே ஒரு குக் கிராமம், அங்கே எங்களுக்கு குடிக்க தண்ணி கிடைக்காதேன்னு நான் நண்பர்களை வற்புறுத்தி பக்கத்திலே இருக்கிற எங்க ஊர் மாதிரி ஒரு பெரிய ஊரிலே வாடகைக்கு அறை எடுத்து தங்கினோம், அங்கிருந்து கல்லூரி க்கு பேருந்திலே பயணம் செய்வோம், நாங்க 8 பேர் தங்கி இருந்தோம்
நாங்க ௬ட்டமா போகிறதும், வாரதும், சத்தம் போடுறதும் எல்லாம் உள்ளூர் தாதாக்கள்னு நினைச்சிகிட்டு இருந்தவங்க காதுல லேசா புகைய ஆரம்பித்தது.
என்னோட சென்னை நண்பர் கொஞ்சம் துடிப்பானவரு, அவரு அலப்பறை தண்ணி போட்டவன் அலப்பறையை விட ரெம்ப அதிகமா இருக்கும், பேருந்துல போகும் போதும் வரும் போதும் திருச்சி செல்லும் கல்லூரி மாணவிகளை கேலி பண்ணுவது எங்க பொழுது போக்கு. நான் என்னதான் அழகு கிளியா இருந்தாலும் என்னை வழக்கம் போல யாரும் சட்டை பண்ணுவதில்லை. நாங்க கிண்டல் பண்ணின மாணவிகளில் ஒருவர் உண்மையான உள்ளூர் தாதாவின் தங்கை, அவங்க லேசா தாதாகிட்ட வத்தி வச்சிட்டாங்க
தாதா வோட அல்லக்கைகள் ஒரு நாள் எங்களை சந்தித்து "தம்பி பேருந்துகளில் கலாட்ட பண்றது நல்லா இல்லை, படிக்க வந்த வேலையை மட்டும் பார்க்கணும்னு" அந்த படிக்காத மேதைகள் அறிவுரை சொன்னார்கள்.
நான் வழக்கம் போல ச்சின்ன பையன் மாதிரி கேட்டு கிட்டு நல்லா தலையை ஆட்டினேன், ஆனா சென்னை நண்பர் வாயை கொஞ்சம் அதிகமா திறந்து.
"என் மேல யாரவது கைவச்சா என்னை சாகடிச்சிடனும், இல்லேன்னா என்னை தொட்டவங்களுக்கு உசுரு இருக்காது" தலைவர் ரஜினி மாதிரி ஒரு குத்து வசனத்தை பேசி புட்டாரு. அதை கேட்டு எனக்கு வயத்தை கலக்க ஆரம்பித்தது, இன்னைக்கு சங்கு நமக்குத்தான்னு நினைச்சேன்.ஆனா அன்றைக்கு அப்படி ஏதும் நடக்கலை
ரெண்டு நாள் கழிச்சி திருச்சி நண்பன் ஒருத்தர் என்னிடம் "என்ன மச்சான் எதாவது பேசினா குத்திடுவேன்னு குத்து வசனம் எல்லாம் பேசி இருக்க ரெம்ப பெரிய ஆளுடா நீ"
"நான் எப்படா சொன்னேன்?"
"அதாண்டா உள்ளூர் அழகியை சைட் அடிச்ச விவகாரத்திலே"
சும்மா வேடிக்கை பார்த்த என்னையே இப்படி சொன்னவங்க, சென்னை நண்பன்
"உள்ளூர் தாதாவை போட்டு தள்ள கத்தியோடு சுத்துறதா" அவரிடம் சொல்லி இருக்காங்க.
இதுக்கு மேல சும்மா இருந்தால் அவரு பட்டத்துக்கு ஆபத்து வந்திடுமுன்னு எங்களை கட்டம் கட்ட நாள் குறிச்சிட்டாங்க.
ஒரு நாள் மாலையிலே சென்னை நண்பன் இன்னொரு நண்பர் குழு தங்கி இருந்த வீட்டுக்கு சரக்கு அடிக்க காசு தேத்த போன வேளையிலே ஒரு கும்பல் எங்க வீட்டுக்குள் வந்தது, நானும், ராம் நாடு நண்பனும் கட்டை பீடி அடிக்க வெளியே போய் இருந்தோம், அறையில் இருந்த போனஸ் நண்பனிடம் சென்னைக்காரன் பத்தி விசாரித்தனர், அவன் இன்னொரு நண்பன் வீட்டு சென்று இருப்பதாக அந்த வீட்டு விலாசத்தையும் கொடுத்தான். நாங்கள் வீட்டுக்குளே வந்தவுடன் போனஸ் நண்பன் விவரம் சொன்னான்.
எங்களுக்கு புரிஞ்சு போச்சு, சென்னைக்காரன் மாட்டினால் சங்கு தான் என் நினைத்து நண்பனை காப்பாற்ற தாதா கும்பலுக்கு முன்னால் அங்கே செல்ல திட்ட மிட்டு ஒரு மிதி வண்டியை எடுத்தோம்.கிளம்புறதுக்கு முன்னாடியே திருச்சி நண்பனும், ராமநாதபுரம் நண்பனும்
"மாப்பிள்ள நீ மட்டும் உன் வாய் திறந்து ஒரு வார்த்த பேசக் ௬டாது என்ன நடந்தாலும் நாங்க பாத்துகிறோம்"
நானும் வேண்டா வெறுப்பா "சரிடா" ன்னு சொன்னேன். நாங்க மிதி வண்டிய எடுத்துகிட்டு வேகமா சென்னை நண்பன் தங்கி இருந்த வீட்டுக்கு தாதா கும்பல் வரும் முன்னே போய் விட்டோம், அவனிடம் விவரத்தை சொல்ல ஆரம்பித்த உடனே போட்டிருந்த சட்டை, பேன்ட்டோடு சென்னைக்கு கிளம்பிட்டான். அவன் அடிச்சி பிடிச்சி ஓடின ஓட்டத்தை ஒலிம்பிக்குல ஓடி இருந்தால் தங்கம் வாங்கி இருப்பான்
அவன் ஓடவும் தாதா கும்பல் வரவும் சரியா இருந்தது, நாங்க எல்லோரும் சென்னை நண்பன் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தோம், வந்த கும்பல் எங்களிடன்
"சென்னைக்காரனை எங்கே டா" உடனே
"திருச்சி நண்பன் சட்டை பையிலே தேடுற மாதிரி தேடினான்"
கும்பல் மறுபடியும்
"டேய் இப்ப ஒழுங்க அவன் எங்கன்னு சொல்லலை உங்க எல்லோருக்கும் சுளுக்கு எடுத்து புடுவோம்"
ராம் நாடு ஜில்லா நண்பன்
"பாஸு இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு, அவன் ஊருக்கு போய்ட்டான்"
உடனே திருச்சி நண்பன்
" அவங்க என்னவோ அடிப்பேன், பிடிப்பேன் ன்னு சொல்லுறாங்க, நீ என்ன மாப்பிள்ளை கெஞ்சிகிட்டு இருக்க, கை யை வைக்கட்டும் பார்ப்போம்" ன்னு சொல்லி முடிக்கலை
அடுத்து ஒரு அஞ்சி நிமிசத்துக்கு எந்திக்க முடியலை அப்படி அடி இடி மாதிரி விழுந்தது. அடி மழை லேசா ஓய்ந்த உடனே எந்திரிச்சி பார்த்தால் அடிச்சவங்க கையிலே எல்லாம் கை குட்டை இருக்கு, திரும்பி என்னைப் பார்த்தால் நான் டவுசரோட நிற்கிறேன், அவங்க கையிலே இருப்பது எல்லாம் நான் போட்டு இருந்த சட்டையும்.லுங்கியும். என்னை மட்டுமல்ல அங்கு நின்ற எல்லா நண்பர்களையும் ஒரு காட்டு காட்டி விட்டு போய் விட்டார்கள்.
எல்லோருக்கும் வீரத் தழும்புகள், எனக்கு மட்டும் ஊமை அடி, தழும்புக்கு மருந்து எல்லாம் போட்டு விட்டு கொஞ்ச நேரம் கழித்து
ராமநாதபுரம் நண்பன்
"டேய் உன்னை அடிச்சது ௬ட பெரிய விஷம் இல்லை, உன் சட்டைய கிழிச்சி பிட்டாங்களே"
திருச்சி நண்பன் "சட்டை மட்டுமல்ல லுங்கியும் தான் போச்சு"
போனஸ் அடி வாங்கிய இன்னொரு நண்பன் "டேய் அவனே விழுந்த அடியிலே அரண்டு போய் இருக்கான், நீ சட்டை லுங்கி ன்னு கவலைப் பட்டு கிட்டு இருக்கீங்க"
ராம் நாடு நண்பன் " பின்ன நான் கவலை படமால் இருக்க முடியுமா?, அவன் போட்டு இருந்தது என் சட்டை டா, நான் 10001 ரூபா என் ஆளுக்கு செலவு பண்ணிட்டேன்னு என் காதலி பரிசா எடுத்து கொடுத்த 50 ரூபா சட்டை"
திருச்சி நண்பன் "அவன் போட்டு இருந்தது என் லுங்கி"
போனஸ் அடி நண்பன் "இவன் போட்டு இருக்கும் டவுசர் ஓடிப்போன சென்னைகாரனோடது. மொத்தத்திலே இவன் வாங்கின அடியை தவிர எதுவும் இவனிதில்லை "
நான், "இப்ப தெரிஞ்சி போச்சுடா நீங்க ஏன் பேசக் ௬டாதுன்னு சொன்னீங்கன்னு"
அந்த சம்பவத்திற்கு அப்புறமா நாங்க எல்லாம் முதியோர் மட்டும்னு போர்டு வைக்காத பஸ்ல தான் போவேம் வருவோம்
68 கருத்துக்கள்:
http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_11.html
வந்து பார்க்கவும்...
அந்த சம்பவத்திற்கு அப்புறமா நாங்க எல்லாம் முதியோர் மட்டும்னு போர்டு வைக்காத பஸ்ல தான் போவேம் வருவோம்
***********
ஹாஹாஹா
\\" அவங்க என்னவோ அடிப்பேன், பிடிப்பேன் ன்னு சொல்லுறாங்க, நீ என்ன மாப்பிள்ளை கெஞ்சிகிட்டு இருக்க, கை யை வைக்கட்டும் பார்ப்போம்" ன்னு சொல்லி முடிக்கலை
அடுத்து ஒரு அஞ்சி நிமிசத்துக்கு எந்திக்க முடியலை அப்படி அடி இடி மாதிரி விழுந்தது\\
மிகவும் இரசித்தேன் ‘தல’
:-)))))))))))))))))
மிகவும் இரசித்தேன் தல...
அட நீங்களா அது, அன்னைக்கு உங்கள அடிச்சதுல நானும் ஒருத்தன்.அதுக்கு அப்புரம் ஒரு காலேஜ் படிக்கிற புள்ளய லவ் பண்ணி அது என்னை திருத்திடுச்சு, இப்போ ஹவுஸ் ஹஸ்பண்டா இங்க அமெரிக்காவில இருக்கேன். மன்னிச்சிருங்க தல, முடிஞ்சா ஒரு நாள் வந்து உங்கள பாக்கிறேன்
//மொத்தத்திலே இவன் வாங்கின அடியை தவிர எதுவும் இவனிதில்லை "
//
நல்லதுப்பா நல்லது இப்படித்தான் இருக்கோனும், நாங்களும் இப்படித்தான் தல
//அந்த சம்பவத்திற்கு அப்புறமா நாங்க எல்லாம் முதியோர் மட்டும்னு போர்டு வைக்காத பஸ்ல தான் போவேம் வருவோம்
//
என்னா தல காலேஜ் பசங்களை எல்லாத்தையும் கூட்டியாந்து ஒரு கலக்கு கலக்கி காலெஜுக்கு IDC வாங்கிகொடுத்து லைஃப் என் ஜாய் பண்ணிருப்பீங்கனு நினைத்தால் ச்சே காலேஜ் ஸ்டூடண்டையே கேவலப்படுத்துட்டீங்கள.. சரி சரி பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி
யாருப்பா அது எங்க நண்பரை அடிச்சது கொஞ்சம் கூட பயம் இல்லமே??
ஹி..ஹி...
இப்படி எல்லாமா அடிவங்குனீங்க...
அய்யோ பாவம்...
பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பது இதுதானோ?
// RAMYA said...
யாருப்பா அது எங்க நண்பரை அடிச்சது கொஞ்சம் கூட பயம் இல்லமே?? //
அங்க மட்டும் என் தங்கச்சி இருந்திருக்கணும்...
நடக்கறத வேற...!!!! -:)
//
அந்த சம்பவத்திற்கு அப்புறமா நாங்க எல்லாம் முதியோர் மட்டும்னு போர்டு வைக்காத பஸ்ல தான் போவேம் வருவோம்
//
இதுதான் நல்ல பிள்ளைங்களுக்கு அடையாளம் எப்படியோ திருந்தினா சரி.
// வேத்தியன் said...
http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_11.html
வந்து பார்க்கவும்... //
அங்கத்தான் வந்துகிட்டு இருக்கேன்...
\\" அவங்க என்னவோ அடிப்பேன், பிடிப்பேன் ன்னு சொல்லுறாங்க, நீ என்ன மாப்பிள்ளை கெஞ்சிகிட்டு இருக்க, கை யை வைக்கட்டும் பார்ப்போம்" ன்னு சொல்லி முடிக்கலை
அடுத்து ஒரு அஞ்சி நிமிசத்துக்கு எந்திக்க முடியலை அப்படி அடி இடி மாதிரி விழுந்தது\\
மறுபடியும் பார்த்த பின்னிடுவாங்கலாம்
உஷாரா இருங்க. சரியா நடக்க முடியுதா??
// RAMYA said...
//
அந்த சம்பவத்திற்கு அப்புறமா நாங்க எல்லாம் முதியோர் மட்டும்னு போர்டு வைக்காத பஸ்ல தான் போவேம் வருவோம்
//
இதுதான் நல்ல பிள்ளைங்களுக்கு அடையாளம் எப்படியோ திருந்தினா சரி. //
முதல்லேயே நல்ல சமத்தான புள்ளதாம்மா...
சேருவார் தோஷம் வேறு ஒன்னுமில்ல
ஆமா அது என்ன கட்டை பீடி
ஒண்ணுமே விளங்கலையே??
// RAMYA said...
ஆமா அது என்ன கட்டை பீடி
ஒண்ணுமே விளங்கலையே?? //
ரொம்ப முக்கியம்.
ரொம்ப வீரானாட்டம் உங்க நண்பர் எதுக்கு வாயை விடனும்.
இப்படி அடி திங்கணும்.
ஆமா அந்த சென்னை பார்ட்டி நீங்கதானே??
ரகசியமா எங்க கிட்டே சொல்லிடுங்கோ!!
// RAMYA said...
ரொம்ப வீரானாட்டம் உங்க நண்பர் எதுக்கு வாயை விடனும்.
இப்படி அடி திங்கணும். //
வாய்ச் சொல்லில் வீரரடி..
// RAMYA said...
ஆமா அந்த சென்னை பார்ட்டி நீங்கதானே??
ரகசியமா எங்க கிட்டே சொல்லிடுங்கோ!! //
இத வேற வெளிப்படையா சொல்லனுமா என்ன?
// "மாணவர்களுக்கு எச்சரிக்கை" //
அனுபவம் பேசுகிறது
//
இராகவன் நைஜிரியா said...
ஹி..ஹி...
இப்படி எல்லாமா அடிவங்குனீங்க...
அய்யோ பாவம்...
பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பது இதுதானோ?
/
அண்ணா வாங்க வாங்க !!
சூப்பர் சொன்னீங்க, பாருங்க எப்படி நம்ப நண்பர் அடி வாங்கி இருக்காருன்னு .
// நான் படிச்ச கல்லூரி திருச்சி க்கு பக்கத்திலே ஒரு குக் கிராமம், //
குக்கோட கிரமத்தில் எல்லாம் போய் ஏன் படிச்சீங்க
இல்லேன்னா ஆட்டோ வரும்.
ஆனா சும்மா சொல்லக்கூடாது நல்லா
யோசிக்கறீங்க.
மீ த 25
சரி கனவு இல்லை ரொம்ப நல்ல அனுபவம்.
சென்னைகாரரு நீங்க இல்லன்னா அவரு இப்போ எங்கே இருக்காரு??
// அங்கே எங்களுக்கு குடிக்க தண்ணி //
அப்பவேவா?
// RAMYA said...
சரி கனவு இல்லை ரொம்ப நல்ல அனுபவம்.
சென்னைகாரரு நீங்க இல்லன்னா அவரு இப்போ எங்கே இருக்காரு?? //
அவரு இவரு இல்லை அப்படின்னா அவரு எவரு?
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
அந்த சம்பவத்திற்கு அப்புறமா நாங்க எல்லாம் முதியோர் மட்டும்னு போர்டு வைக்காத பஸ்ல தான் போவேம் வருவோம்
//
இதுதான் நல்ல பிள்ளைங்களுக்கு அடையாளம் எப்படியோ திருந்தினா சரி. //
முதல்லேயே நல்ல சமத்தான புள்ளதாம்மா...
சேருவார் தோஷம் வேறு ஒன்னுமில்ல
//
You are correct Anna!!!
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
ஆமா அது என்ன கட்டை பீடி
ஒண்ணுமே விளங்கலையே?? //
ரொம்ப முக்கியம்.
//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
அண்ணா பின்னிட்டீங்க !!
// நாங்க ௬ட்டமா போகிறதும், வாரதும், சத்தம் போடுறதும் எல்லாம் உள்ளூர் தாதாக்கள்னு நினைச்சிகிட்டு இருந்தவங்க காதுல லேசா புகைய ஆரம்பித்தது. //
எங்கு புகை இருக்குமோ அங்கு நெருப்பு இருக்கும் என்பது தெரியாதுங்களா?
// என்னோட சென்னை நண்பர் கொஞ்சம் துடிப்பானவரு, //
துடிச்சுகிட்டே இருப்பாரா?
அடிவாங்கி நீங்க துடிச்சத அவரு பார்த்தாரா?
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
ரொம்ப வீரானாட்டம் உங்க நண்பர் எதுக்கு வாயை விடனும்.
இப்படி அடி திங்கணும். //
வாய்ச் சொல்லில் வீரரடி..
//
அதானே இதெல்லாம் நமக்கு தேவையா
எதோ காலேஜ் போனோமா சத்தம் போடாம வேடிக்கை பாத்தொமான்னு இல்லாமே அடி வாங்கிகிட்டு.
ஹையோ ஹையோ, இதெல்லாம் நல்லாவா இருக்கு??
// அவரு அலப்பறை தண்ணி போட்டவன் அலப்பறையை விட ரெம்ப அதிகமா இருக்கும், //
தண்ணி போடாமயே அலப்பறையா...
கலிகாலம் முத்திப் போயிடுச்சுப்பா!!!
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
ஆமா அந்த சென்னை பார்ட்டி நீங்கதானே??
ரகசியமா எங்க கிட்டே சொல்லிடுங்கோ!! //
இத வேற வெளிப்படையா சொல்லனுமா என்ன?
//
சொன்னாதானே சிரிக்கலாம்!!!
// RAMYA said...
அதானே இதெல்லாம் நமக்கு தேவையா
எதோ காலேஜ் போனோமா சத்தம் போடாம வேடிக்கை பாத்தொமான்னு இல்லாமே அடி வாங்கிகிட்டு.
ஹையோ ஹையோ, இதெல்லாம் நல்லாவா இருக்கு?? //
அத வேற வெளியில சொல்லிகிட்டு...
// இராகவன் நைஜிரியா said...
// அங்கே எங்களுக்கு குடிக்க தண்ணி //
அப்பவேவா?
//
அதெல்லாம் எட்டாம் வகுப்பிலேயே ஆமாம்!!
// RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
ஆமா அந்த சென்னை பார்ட்டி நீங்கதானே??
ரகசியமா எங்க கிட்டே சொல்லிடுங்கோ!! //
இத வேற வெளிப்படையா சொல்லனுமா என்ன?
//
சொன்னாதானே சிரிக்கலாம்!!!//
இதுக்கு எல்லாம் கோனார் நோட்ஸ் கேட்பீங்க போலிருக்கு...
எல்லாம் நீங்களேத்தான் புரிஞ்சுக்கணும்
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
சரி கனவு இல்லை ரொம்ப நல்ல அனுபவம்.
சென்னைகாரரு நீங்க இல்லன்னா அவரு இப்போ எங்கே இருக்காரு?? //
அவரு இவரு இல்லை அப்படின்னா அவரு எவரு?
//
ஸ்ஸ்ஸ் அப்பா கண்ணைக் கட்டுதே
அண்ணா 50 ஆகிவிட்டதா???
// RAMYA said...
// இராகவன் நைஜிரியா said...
// அங்கே எங்களுக்கு குடிக்க தண்ணி //
அப்பவேவா?
//
அதெல்லாம் எட்டாம் வகுப்பிலேயே ஆமாம்!! //
எட்டாம் வகுப்பிலேயேவா..
எட்டாம் வகுப்பிலேயே, எட்டக்கூடாதது எல்லாம் எட்டிடுச்சா?
//
இராகவன் நைஜிரியா said...
// நான் படிச்ச கல்லூரி திருச்சி க்கு பக்கத்திலே ஒரு குக் கிராமம், //
குக்கோட கிரமத்தில் எல்லாம் போய் ஏன் படிச்சீங்க
//
ahaa juperu!!!
// RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
சரி கனவு இல்லை ரொம்ப நல்ல அனுபவம்.
சென்னைகாரரு நீங்க இல்லன்னா அவரு இப்போ எங்கே இருக்காரு?? //
அவரு இவரு இல்லை அப்படின்னா அவரு எவரு?
//
ஸ்ஸ்ஸ் அப்பா கண்ணைக் கட்டுதே
அண்ணா 50 ஆகிவிட்டதா??? //
இதுக்கே இப்படியா..
இன்னும் இல்ல..
//
இராகவன் நைஜிரியா said...
மீ த 25
//
அண்ணா நீங்க தான் 25.
50
ஐயா நான்தான் ஐம்பது போட்டேன்!!
// RAMYA said...
50 //
50வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள்
Kalakal pathivu :)
// RAMYA said...
ஐயா நான்தான் ஐம்பது போட்டேன்!! //
90 போடறவங்க மத்தியில, 50 க்கு பெருமை அடிச்சிக்கப் பிடாது
வம்பே வேண்டாம். ஒரு :-)) மட்டும் போட்டுக்கறேன்.
// நான் என்னதான் அழகு கிளியா இருந்தாலும் என்னை வழக்கம் போல யாரும் சட்டை பண்ணுவதில்லை. ///
நோட் த பாயிண்ட் ...
//"என் மேல யாரவது கைவச்சா என்னை சாகடிச்சிடனும், இல்லேன்னா என்னை தொட்டவங்களுக்கு உசுரு இருக்காது"//
சூப்பருங்கறேன் ....
//"நான் எப்படா சொன்னேன்?"//
பாஸ் ... அப்ப நீங்க சுய நினைவுல இல்ல பாஸ்.
//"உள்ளூர் தாதாவை போட்டு தள்ள கத்தியோடு சுத்துறதா" அவரிடம் சொல்லி இருக்காங்க.//
இது சகஜம் தான ...
//அடுத்து ஒரு அஞ்சி நிமிசத்துக்கு எந்திக்க முடியலை அப்படி அடி இடி மாதிரி விழுந்தது. அடி மழை லேசா ஓய்ந்த உடனே எந்திரிச்சி பார்த்தால் அடிச்சவங்க கையிலே எல்லாம் கை குட்டை இருக்கு, திரும்பி என்னைப் பார்த்தால் நான் டவுசரோட நிற்கிறேன், அவங்க கையிலே இருப்பது எல்லாம் நான் போட்டு இருந்த சட்டையும்.லுங்கியும். என்னை மட்டுமல்ல அங்கு நின்ற எல்லா நண்பர்களையும் ஒரு காட்டு காட்டி விட்டு போய் விட்டார்கள்.//
இவங்க எப்போதுமே இப்படி தான் பாஸ்.
//எல்லோருக்கும் வீரத் தழும்புகள், எனக்கு மட்டும் ஊமை அடி, //
மண்ணு ஒட்டல ... மண்ணு ஒட்டல ...
// நான் 10001 ரூபா என் ஆளுக்கு செலவு பண்ணிட்டேன்னு என் காதலி பரிசா எடுத்து கொடுத்த 50 ரூபா சட்டை"//
நல்ல டீலிங் ...
//இவன் வாங்கின அடியை தவிர எதுவும் இவனிதில்லை "//
அட பாவி மக்கா...
//"இப்ப தெரிஞ்சி போச்சுடா நீங்க ஏன் பேசக் ௬டாதுன்னு சொன்னீங்கன்னு"//
சிரிச்சு சிரிச்சு வயத்த வலிக்குது,
சோகமான நிகழ்வ சுவையா சொல்லி இருக்கீங்க.
எப்படி - இப்பவும் 'முதியோர் மட்டும்னு போர்டு வைக்காத பஸ்ல தானா?'.
//
அடுத்து ஒரு அஞ்சி நிமிசத்துக்கு எந்திக்க முடியலை அப்படி அடி இடி மாதிரி விழுந்தது. அடி மழை லேசா ஓய்ந்த உடனே எந்திரிச்சி பார்த்தால் அடிச்சவங்க கையிலே எல்லாம் கை குட்டை இருக்கு, திரும்பி என்னைப் பார்த்தால் நான் டவுசரோட நிற்கிறேன்,
//
ஹி ஹி ஹி :0)))
ஆதிகாலத்துலருந்து இதே பொழப்பு தானா?? நல்ல வேளை, டவுசரு போட்ருந்தீங்க...இல்லாட்டி???
hahahhahaha
nanba I am stranger, I came across this... Romba supera Eluthi irukkinga...Office la Yellaorum yennai oru mathiri parthanga... padichukittu irukkum bothu Yennai Arriyamal Satham pottu serichuttane...very nice keep writing like this!
Thilak ( Nanum antha area college than... from Shanmugha (in between trichy & Thanjavur 1997 batch!)
நான், "இப்ப தெரிஞ்சி போச்சுடா நீங்க ஏன் பேசக் ௬டாதுன்னு சொன்னீங்கன்னு"
:)))))))))))))))))
//மொத்தத்திலே இவன் வாங்கின அடியை தவிர எதுவும் இவனிதில்லை "//
ஹா...ஹா...ஹா...நல்ல காமெடி அனுபவம்...
//குடுகுடுப்பை said...
அட நீங்களா அது, அன்னைக்கு உங்கள அடிச்சதுல நானும் ஒருத்தன்.அதுக்கு அப்புரம் ஒரு காலேஜ் படிக்கிற புள்ளய லவ் பண்ணி அது என்னை திருத்திடுச்சு, இப்போ ஹவுஸ் ஹஸ்பண்டா இங்க அமெரிக்காவில இருக்கேன். மன்னிச்சிருங்க தல, முடிஞ்சா ஒரு நாள் வந்து உங்கள பாக்கிறேன்
//
:-)))
ஒய் செங்குருதி??
சேம் செங்குருதி...
நீங்க மாட்டிகிட்டீங்க..
நான் எஸ்கேப்பிட்டோம்ல...
ஹஹாஅ,,,, படிக்கப்படிக்க சுவாரசியமான சம்பவம்.... தாதாகிட்ட அடி... அதை மறைக்காம சொன்னது நல்ல கடி.
இருந்தாலும் அந்த காதலி வாங்கி கொடுத்த சர்ட்.... அய்யோ அய்யோ!!
////அந்த சம்பவத்திற்கு அப்புறமா நாங்க எல்லாம் முதியோர் மட்டும்னு போர்டு வைக்காத பஸ்ல தான் போவேம் வருவோம்////
ஹிஹிஹி...... இப்பல்லாம் நீங்க சைட் அடிக்கிறதையே நிறுத்திட்டீங்களாமா??? பட்சி சொல்லிச்சி!!
அப்பாடி போஸ்ட் ஆயிடுச்சு....
காலையில No comments இருக்கிறப்ப இருந்து முயற்சி பண்ணினனன்....
செயராம் முன்னோடி மகான்களே வாழ்க,
super da..nalla alumpal...
adivankina kevalatha ivlo velipadaya accept pannikura pathiya...nee rempa nalla vanda....
Ithu unmai kathai
ஜட்டியாவது வாங்குவிங்களா இல்ல அதுவும் எதாவது கொடில தொங்குரத (தொவைக்காதத கூட) எடுத்து போட்டுகுவிங்களா?. ரொம்ப கஷ்டம்டா சாமி.
இதுவே எங்க ஊரா (தூத்துக்குடி) இருந்தா கை கால் போயிருக்கும். அப்புறம் முதியோர் மட்டும்னு போர்டு வைக்காத பஸ்ல இல்ல ஊனமுற்றோர் மட்டும்னு போர்டு வைக்காத பஸ்ல தான் போயிருக்க முடியும்.
// இராகவன் நைஜிரியா said...
ஹி..ஹி...
இப்படி எல்லாமா அடிவங்குனீங்க...
அய்யோ பாவம்...
பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பது இதுதானோ?//
பதிவில் பெரிய ஏமாற்று வேலை. உண்மை என்னன்னா தபிச்சு ஓடினது "தலை" நசரேயன். அடி வாங்கினது சென்னைகாரன். எனக்கு நல்லா தெரியும் அவர. இந்த கதைய என்னிடம் அவரே சொல்லி இருக்கார். அவரு ரொம்ப நல்லவரு.
:)))))))))))))))))))
உங்களது சங்கமம் போட்டி கதை குறித்த எனது எளிய கருத்துக்களை இங்கே உரைத்திருக்கிறேன். ஒரு முறை வாசித்து பாருங்களேன்.
http://paathasaari.blogspot.com/2009/04/blog-post_01.html
valthukkal..
Post a Comment