Friday, January 30, 2009

முத்துக் குமரா..




ரத்த முத்துக்களால்


கோர்க்கப்பட்ட என்பை


செந்தழல்களால் அழித்துக் கொண்ட


காட்சியை கண்ட


எங்கள் கண்ணில்


கண்ணீர் வற்றி


உதிரமே கொட்டியது


முத்துக் குமரா..




நீ சாந்தமாக உறங்கினாலும்


உன் ஆன்மாவை


சாந்தப் படுத்த வழி இல்லையே


முத்துக் குமரா..




தமிழ் அன்னையின்


வம்சத்தை காத்திட உழைத்து


மீளா தூக்கத்தை நீ அடைந்தாய்


முத்துக் குமரா..


ஆனால்


நாங்களோ மீளா


துக்கம் அடைந்த்தோம்




வீழ்ந்த உன்னை


விதைக்க மனமில்லாமல்


உன் நினைவுகளை


நெஞ்சில் வைத்து


காத்துகொள்வோம்.




நீ உன்


அன்னைக்கு மற்றுமல்ல


தமிழ் அன்னைக்கும் தான்


முத்துக் குமரன்..


17 கருத்துக்கள்:

சின்னப் பையன் said...

:-((((((((((

பழமைபேசி said...

நீ உன்
அன்னைக்கு மற்றுமல்ல
தமிழ் அன்னைக்கும் தான்
முத்துக் குமரன்..

RAMYA said...

இந்த சோகம் தீராத சோகமாக
மனதில் வேதனையை கொடுத்து
விட்டது, இன்று அந்த பாதையில்
சென்று வந்தேன் அந்த சகோதரை
காப்பற்ற முடியவில்லை.
இவ்வளவு காவல் துறையினர்
இன்று நிற்கின்றார்களே
ஐயோ நேற்று இந்த நேரம்
உயிருடன் இருந்தனையே சகோதரா
இன்று நீ இல்லையே என்று கண்கள் பணிக்க அப்பகுதியை கடந்து வந்தேன்.

முத்துகுமரா தமிழனுக்காக
தியாகம் செய்த உன் உயிர் தியாகம்
பல உயிகளை காக்குமா ??
காக்க வேண்டும் என்று நான்
வேண்டுகின்றேன்,

உன் ஆன்மா சாந்தி
அடைய வேண்டுகிறேன்.
தயவு செய்து யாரும் இது போல்
எந்த முடிவும் எடுக்காதீர்கள்
கேக்கவோ, பார்க்கவோ, உடலிலும்
மனதிலும் சக்தி இல்லையே !!

இராகவன் நைஜிரியா said...

முத்துக் குமாரனை நினைத்தால் மனது வேதனைப் படுகின்றது.

இனிமேலும் இது போல் உயிர்த்தியாகம ஏற்படாமல் இருக்க வேண்டும் என மனம் வேண்டுகின்றது.

முத்துகுமாரனின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவோமாக..:-(

குடுகுடுப்பை said...

முத்துக் குமாரனை நினைத்தால் மனது வேதனைப் படுகின்றது.

இனிமேலும் இது போல் உயிர்த்தியாகம ஏற்படாமல் இருக்க வேண்டும் என மனம் வேண்டுகின்றது.

முத்துகுமாரனின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவோமாக..:-(

ஹேமா said...

சகோதரர் முத்துக்குமார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொண்டு,
இன்னொரு வேண்டுகோளும் தமிழகத்து என் சகோதரர்களுக்கு.
இனியொரு உயிர் இப்படி அநியாயமாக வேண்டாம் தயவு செய்து.உங்கள் உதவியைத்தான் கேட்டு நிற்கிறோமே தவிர உயிரை அல்ல.எங்களையும் உங்கள் குடும்பத்தவரயும் யாரும் தவிக்க விடாதீர்கள்.

ஹேமா said...

என்றோ யார் செய்த பாவமோ அனுபவிக்கிறோம்.உங்களிடமும் உயிர்க் கடன்பட்டு அந்தக் கடனை எப்படித் தீர்ப்போம் நாம்.

சந்தனமுல்லை said...

//நீ உன்
அன்னைக்கு மற்றுமல்ல
தமிழ் அன்னைக்கும் தான்
முத்துக் குமரன்..//

உண்மைதான் நசரேயன்! அவரது ஆசைகள் நிறைவேறட்டும்!!

Anonymous said...

எதற்காக முத்துக்குமரன் உயிரை நீத்தாரோ அது நிகழ பிரார்த்திக்கிறேன்.

தாராபுரத்தான் said...

சாந்தப் படுத்த வழி இல்லையே

Mahesh said...

:------(

Anonymous said...

இந்த சோகம் தீராத சோகமாக
வேதனையை கொடுத்து
விட்டது.

S.R.Rajasekaran said...

வீழ்ந்த உன்னை
விதைக்க மனமில்லாமல்
உன் நினைவுகளை
நெஞ்சில் வைத்து
காத்துகொள்வோம்

Poornima Saravana kumar said...

முத்துக் குமாரனை நினைத்தால் மனது வேதனைப் படுகின்றது.

Anonymous said...

நீ உன்
அன்னைக்கு மற்றுமல்ல
தமிழ் அன்னைக்கும் தான்
முத்துக் குமரன்..

கிரி said...

//இராகவன் நைஜிரியா said...
முத்துக் குமாரனை நினைத்தால் மனது வேதனைப் படுகின்றது.

இனிமேலும் இது போல் உயிர்த்தியாகம ஏற்படாமல் இருக்க வேண்டும் என மனம் வேண்டுகின்றது.

முத்துகுமாரனின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவோமாக..:-(//

வழிமொழிகிறேன்

வில்லன் said...

யாரிந்த முத்துகுமரா? எனக்கு தெரியாதே!!!!!!!!!!!!!! அட சத்தியமாப்பா.