Wednesday, January 28, 2009

என் முதல் நேர்முகத் தேர்வு

கல்லூரி முடிச்ச உடனே எல்லாரையும் போல சென்னைக்கு பெட்டியை கட்டிக் கிட்டு வந்தேன்.ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயமான சென்னை நண்பனுடன், இத முறை ராமநாதபுரம் நண்பனையும் அறிமுகம் செய்ய வேண்டிய இருக்கு, ஏன்னா அவரு எனக்கு முன்னாடியே வந்து சென்னையிலே துண்டை போட்டு ஒரு குளிர் சாதன பொட்டி தயாரிக்கிற அலுவலகத்திலே வேலையும் வாங்கிட்டாரு,அவரை தொடர்ந்து லால்குடி நண்பனும் அதே அலுவலகத்திலே வேலை வாங்கிட்டாரு.


"மச்சான் சி.வி கொடுத்த உடனே வேலை டா, அதனாலே நீ நாளைக்கு அலுவலகத்துக்கு வா"


அவங்க சொன்னதிலே எனக்கு வேலை கிடைச்சமாதிரியே ஒரு நம்பிக்கை வந்தது, அடுத்த நாள் நண்பனின் அலுவலகத்திற்கு சென்றேன். சி.வி எல்லாம் வாங்கி பாத்து விட்டு, ௬ப்பிடுறோம் உக்காருங்கன்னு சொன்னங்க.


கொஞ்சம் நேரம் கழிச்சி உள்ளே ௬ப்பிட்டாங்க, உள்ளே போனேன் ஒரு ஆள் நாற்காலியிலே உக்கார்ந்து இருந்தாரு,என்னையும் உக்கார சொன்னாரு.


வேர் ஆர் யு புட் ஆப்? ன்னு ஒரு கேள்வியை கேட்டு புட்டாரு


என்னடா இது புட் ஆப்.. படிச்சா மாதிரி ஞாபகம் இல்லையேன்னு, அந்த "வேரை" ஆணிவேரா வச்சி சொல்லவும் ஒரு தயக்கம், அதனாலே முதல் கேள்வியை விட்டு பிடிக்கலாம்னு.


"நீங்க கேட்டது எனக்கு புரியலை சார்" ன்னு சொன்னேன்.மறுபடியும் திருப்பி சொன்னாரு, நானும் அதே பதில் சொன்னேன்.


இப்படி சொன்னதும் கையிலே இருந்த சி.வி கீழே வச்சிட்டு என்னை ஒரு பார்வை பாத்தாரு


"யப்பா நான் நீ படிச்ச பாடத்திலே இருந்து கேட்கலை, நீ எங்க தங்கி இருக்கன்னு கேட்டேன்"

முதல் கேள்வியிலே உண்மை வெளி வந்துவிட்டதேன்னு கொஞ்சம் வருத்தம் தான், ஆனாலும் அவரு ரெம்ப நல்ல மனுஷன் என் மேல உள்ள அபார நம்பிக்கையாலே ரெண்டாவது கேள்வியை கேட்டாரு.

பான்(fan) எப்படி சுத்துது?

இப்படி ஒரு கஷ்டமான கேள்வியை எதிர் பார்க்காத மாதிரி நடிக்க வேண்டிய கடமை, வேற வழி அவரு என்ன கேட்டாலும் பதில் சொல்லத் தெரியாதுன்னு எனக்கு தானே தெரியும்,பயங்கரமா யோசிக்கிற மாதிரி யோசனை பண்ணி.

"சுவிட்ச் போட்டா ஓடும் சார்"

அவரு "வாட்?"

நான் சொன்னது சரியா கேட்கலைன்னு நினைச்சுகிட்டு, ரெம்ப சத்தமா

"சுவிட்ச் போட்டா ஓடும்" ன்னு மறுபடியும் சொன்னேன்.

என் பதிலுக்கு என்ன பதில் சொல்லன்னு அவருக்கு தெரியலை, அமைதியா மேசையிலே இருந்த தண்ணியை எடுத்து குடிச்சாரு.

நான் சரியாத்தான் பதில் சொல்லி இருக்கேன் எனக்கு ஒரே சந்தோசம்.

ஏன்னா தண்ணியை குடிச்சு முடிச்சு விட்டு அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பித்தார்.

இளநிலை மின்னணு பொறியாளர் அதாவது விளக்கமா சொல்லனுமுனா Electronics and communication engineering படிச்ச எல்லோருக்கும் தெரியும் Digital signal processing எவ்வளவு கஷ்டமுன்னு, அதிலே இருந்து அவரு ௬ச்சமே படமா ஒரு கேள்வியை கேட்டு புட்டாரு

ஒரு கேள்விக்கு நல்ல முறையிலே பதில் சொன்னதுக்கு எவ்வளவு பெரிய தண்டனை ன்னு மனசுல நினைச்சுகிட்டு, என்ன பதில் சொல்ல ன்னு யோசித்து பார்த்தேன். ஒன்னும் பிடி படலை.


ஒரு புது முயற்சியா "சிலபஸ்(Syllabus) ல இல்லன்னு" சொல்லிபுட்டேன்.

இதை சொன்ன உடனே அவருக்கு ஒரே மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது, அங்கே அலுவலதிலே வேலை செய்யும் ஒருத்தரை ௬ப்பிட்டு பாட புஸ்தகத்தையும் சிலபஸ்ம் எடுத்து என்கிட்டே காட்ட சொன்னாரு.

உண்மையை கண்டு பிடிச்சுட்டாங்கன்னு மன்னிச்சுடுங்கோ உங்களுக்கு சிலபஸ் தெரியாதுன்னு சொல்லிபுட்டேன்.

என்னை கேள்வி கேட்டவரு என்னிடம் ஏதும் சொல்லலை, என்னிடம் சிலபஸ் காட்டின நபர்

"நீங்க வீட்டுக்கு போகலாம், நாங்க சீக்கிரம் சொல்லி அனுப்புகிறோம்" ன்னு சொல்லி விட்டார்.

ஒரு வழியா வேலை கிடைச்ச சந்தோசம், இனிமேல நண்பர்களிடம் அலுவலகம் செல்வதற்கு தேதி கேட்டு கொள்ளலாம் என மனதில் நினைத்து கொண்டு வீட்டுக்கு நடையை கட்டினேன்

இரவு 10 மணியாகியும் நண்பர்கள் வீடு வந்து சேர வில்லை, ஒரு வழியாக 11 மணிக்கு வந்தார்கள்.
மச்சான் எப்படி என திறமை நான் சந்தித்த முதல் தேர்விலே வெற்றி, உங்களுத்தான் நன்றி சொல்லணும்,அதனாலே நீங்க வர முன்னாடியே சரக்கு வாங்கி வைத்து விட்டேன்.

இருவரும் என்னை ஏற இறங்க பார்த்தார்கள், எதுவும் பேசாமல் உள்ளே சென்று நண்பர் போர்வையை எடுத்து வந்தார்.

"எதுக்கு டா, துவைக்க போகிறாயா?" ன்னு கேட்டு முடிக்கலை.

என தலையிலே போட்டு என்னை துவைக்க ஆரம்பித்தார்கள், அடிக்கும் போதே
"கொலைகார பாவி.. கொஞ்சம் விட்டா ஒரு ஆளை கொலை பண்ணி இருப்பே, உன்னை கேள்வி கேட்டு ரத்த கொதிப்பு அதிகம் ஆகி, அவருக்கு மாரடைப்பே வந்து விட்டது".

நல்ல வேளை உயிருக்கு பயப்படும் படி ஏதும் இல்லன்னு தமிழ் பட டாக்டர் மாதிரி சொன்னான், எனக்கும் கொலை பழியிலே இருந்து விடு பட்ட சந்தோசம்.

என்னை துவைத்தத்தில் சோர்வு ஆகி உற்சாக பானம் அருந்த ஆரம்பித்தார்கள், அதிலே என்னையும் ஊறுகாயாய் சேர்த்து கொண்டார்கள். அடுத்த நாள்களில் வேறு அலுவலகங்களுக்கு நேர்முகத் தேர்விருக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தேன்.

அடுத்த இரு மாதங்களில் நான் கற்று கொண்ட பாடம்.

"நீங்க போகலாம், நாங்க சீக்கிரம் ௬ப்பிடுகிறோம்" ன்னு சொன்னா "உனக்கு வேலை இல்லன்னு" அர்த்தம்.109 கருத்துக்கள்:

RAMYA said...

me the first??

RAMYA said...

இருங்க படிச்சிட்டு வாரேன்!!!

ச்சின்னப் பையன் said...

just miss...

நட்புடன் ஜமால் said...

some பேரூந்து

நட்புடன் ஜமால் said...

அட சில பஸ்பா

நட்புடன் ஜமால் said...

நேர் - முக த்த தேர்வு செய்றாங்களா

Syed Abdul kadhar.M said...

:-)))

ச்சின்னப் பையன் said...

ஹாஹா... ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு... பாவம் அந்த ஆளு!!!!!!!!!!!!!!!!

ஸ்ரீதர்கண்ணன் said...

மறுபடியும் கிளம்பிட்டார்யா இருங்க படிச்சிட்டு வர்ர்றேன்

RAMYA said...

//
வேர் ஆர் யு புட் ஆப்? ன்னு ஒரு கேள்வியை கேட்டு புட்டாரு

//

டக்குன்னு புளியங்குடி
சொல்ல வேண்டியதது தானே
இதுக்கு பேய் முழி முளிப்ப்பங்க

Syed Abdul kadhar.M said...

//இளநிலை மின்னணு பொறியாளர் அதாவது விளக்கமா சொல்லனுமுனா Electronics and communication engineering படிச்ச எல்லோருக்கும் தெரியும் Digital signal processing எவ்வளவு கஷ்டமுன்னு,//

அட...நம்ம ஜாதிக்காரரா நீங்க...சொல்லவேயில்ல..

RAMYA said...

//
என்னடா இது புட் ஆப்.. படிச்சா மாதிரி ஞாபகம் இல்லையேன்னு, அந்த "வேரை" ஆணிவேரா வச்சி சொல்லவும் ஒரு தயக்கம், அதனாலே முதல் கேள்வியை விட்டு பிடிக்கலாம்னு.

//


அப்பவே ஆரம்பிச்சுடீங்களா
ரொம்ப அழிச்சாட்டியம் பிடிச்சவருபா
இந்த நசரேயன்

அ.மு.செய்யது said...

//இளநிலை மின்னணு பொறியாளர் அதாவது விளக்கமா சொல்லனுமுனா Electronics and communication engineering படிச்ச எல்லோருக்கும் தெரியும் Digital signal processing எவ்வளவு கஷ்டமுன்னு,//

அட...நம்ம ஜாதிக்காரரா நீங்க...சொல்லவேயில்ல..

(sorry for the technical defect :-))

RAMYA said...

//
"நீங்க கேட்டது எனக்கு புரியலை சார்" ன்னு சொன்னேன்.மறுபடியும் திருப்பி சொன்னாரு, நானும் அதே பதில் சொன்னேன்.இப்படி சொன்னதும் கையிலே இருந்த சி.வி கீழே வச்சிட்டு என்னை ஒரு பார்வை பாத்தாரு


"யப்பா நான் நீ படிச்ச பாடத்திலே இருந்து கேட்கலை, நீ எங்க தங்கி இருக்கன்னு கேட்டேன்"

//

கேள்வியும் அவரே பதிலும் அவரே
பாவம் அந்த interview பண்ணவரு
யாரு மூஞ்சியிலே முளிச்சாரோ ???

அ.மு.செய்யது said...

//ஒரு புது முயற்சியா "சிலபஸ்(Syllabus) ல இல்லன்னு" சொல்லிபுட்டேன்.//


அவுட் ஆப் போசனா...

நட்புடன் ஜமால் said...

கல்லூரி முடிச்ச உடனே எல்லாரையும் போல சென்னைக்கு பெட்டியை கட்டிக் கிட்டு வந்தேன்\\

டைட்டா கட்னீங்களா

அ.மு.செய்யது said...

//"எதுக்கு டா, துவைக்க போகிறாயா?" ன்னு கேட்டு முடிக்கலை.//

உங்களுக்குள்ள ஏதோ இருந்துர்க்கு..அதான் முன்னாடியே கேட்ருக்கிங்க..

நட்புடன் ஜமால் said...

\\சென்னையிலே துண்டை போட்டு \\

அந்த துண்டு இன்னும் இருக்கா

நட்புடன் ஜமால் said...

\\மறுபடியும் திருப்பி சொன்னாரு\\

எப்படி

சார் - ர்சா - இப்படியா

அ.மு.செய்யது said...

//என தலையிலே போட்டு என்னை துவைக்க ஆரம்பித்தார்கள், அடிக்கும் போதே
"கொலைகார பாவி.. கொஞ்சம் விட்டா ஒரு ஆளை கொலை பண்ணி இருப்பே, உன்னை கேள்வி கேட்டு ரத்த கொதிப்பு அதிகம் ஆகி, அவருக்கு மாரடைப்பே வந்து விட்டது".//

கொல கேஸ் ஆஆஆஆஆ.....

நட்புடன் ஜமால் said...

தேர்வு-ல அவுட்-ஆப் சில பஸ் சொல்லி எஸ்-கேப் ஆன முதல் ஆள் நீங்க தானா.

நட்புடன் ஜமால் said...

\\கொலைகார பாவி.. கொஞ்சம் விட்டா ஒரு ஆளை கொலை பண்ணி இருப்பே\\

கொஞ்சமா - கொஞ்-சமா

கொலை செய்யாத ஆள கொலைகார பாவின்னு யார் சொன்னது

நட்புடன் ஜமால் said...

\\உன்னை கேள்வி கேட்டு ரத்த கொதிப்பு அதிகம் ஆகி, அவருக்கு மாரடைப்பே வந்து விட்டது\\

அவுட் ஆப் சில பஸ் சொன்னா

ரத்த கொதிக்க தான் செய்யும்

RAMYA said...

interview க்கு போயி வேலைக்கு போன்னு சொல்லி
காசு கொடுத்து அனுப்பினா இந்த மாத்ரி
வேலை எல்லாம் செஞ்சீங்களா ???
அது சரி

நட்புடன் ஜமால் said...

\\சி.வி எல்லாம் வாங்கி பாத்து விட்டு, ௬ப்பிடுறோம் உக்காருங்கன்னு சொன்னங்க.\\

சீ.வி.யா

(எதச்சீவுனாங்க)

RAMYA said...

25

நட்புடன் ஜமால் said...

leg-ஜென் ஜுரி நான் தானா

ஸ்ரீதர்கண்ணன் said...

//உன்னை கேள்வி கேட்டு ரத்த கொதிப்பு அதிகம் ஆகி, அவருக்கு மாரடைப்பே வந்து விட்டது".

நல்ல வேளை உயிருக்கு பயப்படும் படி ஏதும் இல்லன்னு தமிழ் பட டாக்டர் மாதிரி சொன்னான், எனக்கும் கொலை பழியிலே இருந்து விடு பட்ட சந்தோசம்.

சூப்பர் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து...... :)

நட்புடன் ஜமால் said...

ரம்யா 25 நம்பர் போட்டது நீங்க தான்

கமெண்ட் போட்டது நானு.

அ.மு.செய்யது said...

// RAMYA said...
25
//

அதுக்குள்ள‌யா..போச்சே..போச்சே..!!!!!!

RAMYA said...

//
என தலையிலே போட்டு என்னை துவைக்க ஆரம்பித்தார்கள், அடிக்கும் போதே
"கொலைகார பாவி.. கொஞ்சம் விட்டா ஒரு ஆளை கொலை பண்ணி இருப்பே, உன்னை கேள்வி கேட்டு ரத்த கொதிப்பு அதிகம் ஆகி, அவருக்கு மாரடைப்பே வந்து விட்டது".

//

சோப்பு தண்ணி எல்லாம் எப்படி
தலைக்கு மேலே குழாய் இருந்துச்சா??

அ.மு.செய்யது said...

// நட்புடன் ஜமால் said...
ரம்யா 25 நம்பர் போட்டது நீங்க தான்

கமெண்ட் போட்டது நானு.
//

இப்டி வேற ந‌ட‌க்குதா..இது போங்கு ஆட்ட‌ம்...

நட்புடன் ஜமால் said...

\\"சுவிட்ச் போட்டா ஓடும் சார்"அவரு "வாட்?"நான் சொன்னது சரியா கேட்கலைன்னு நினைச்சுகிட்டு, ரெம்ப சத்தமா "சுவிட்ச் போட்டா ஓடும்" \\

நடுநிசி 1 மணி - இத படிச்சு சிரிச்சி சிரிச்சி ஹா ஹா ஹா

(சீனாதானன்லாம் பாடக்கூடாது)

RAMYA said...

//
நல்ல வேளை உயிருக்கு பயப்படும் படி ஏதும் இல்லன்னு தமிழ் பட டாக்டர் மாதிரி சொன்னான், எனக்கும் கொலை பழியிலே இருந்து விடு பட்ட சந்தோசம்.

//

ஏதாவது குண்டக்க மண்டக்க
ஆகி இருந்தா களிதான்
பதில் சொல்லாம சொல்லி தப்பிச்சீங்க

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
leg-ஜென் ஜுரி நான் தானா
//

நீங்க‌ளும் இங்கிலிபிசு க‌த்துகிரீங்க‌ளா..

நட்புடன் ஜமால் said...

\\"நீங்க போகலாம், நாங்க சீக்கிரம் ௬ப்பிடுகிறோம்" ன்னு சொன்னா "உனக்கு வேலை இல்லன்னு" அர்த்தம். \\

ரொம்ப நல்லவருன்னூ இதத்தான் சொல்வாங்க

RAMYA said...

//
என்னை துவைத்தத்தில் சோர்வு ஆகி உற்சாக பானம் அருந்த ஆரம்பித்தார்கள், அதிலே என்னையும் ஊறுகாயாய் சேர்த்து கொண்டார்கள். அடுத்த நாள்களில் வேறு அலுவலகங்களுக்கு நேர்முகத் தேர்விருக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தேன்.//

எதை மறந்தாலும் இதை மறக்காதீங்க
வேலை இல்லாம வந்துட்டு
சோம பானம் சுறா பானம் தேவைதானா?

நட்புடன் ஜமால் said...

\\RAMYA said...

//
நல்ல வேளை உயிருக்கு பயப்படும் படி ஏதும் இல்லன்னு தமிழ் பட டாக்டர் மாதிரி சொன்னான், எனக்கும் கொலை பழியிலே இருந்து விடு பட்ட சந்தோசம்.

//

ஏதாவது குண்டக்க மண்டக்க
ஆகி இருந்தா களிதான்
பதில் சொல்லாம சொல்லி தப்பிச்சீங்க\\

தெரிஞ்சா அண்ணன் சொல்லியிருப்பார்ல (பருத்திவீரன்)

நட்புடன் ஜமால் said...

\\ RAMYA said...

//
என்னை துவைத்தத்தில் சோர்வு ஆகி உற்சாக பானம் அருந்த ஆரம்பித்தார்கள், அதிலே என்னையும் ஊறுகாயாய் சேர்த்து கொண்டார்கள். அடுத்த நாள்களில் வேறு அலுவலகங்களுக்கு நேர்முகத் தேர்விருக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தேன்.//

எதை மறந்தாலும் இதை மறக்காதீங்க
வேலை இல்லாம வந்துட்டு
சோம பானம் சுறா பானம் தேவைதானா?\\

அது என்ன தோழி சுறா பானம்

RAMYA said...

//
அடுத்த இரு மாதங்களில் நான் கற்று கொண்ட பாடம்
//

சொல்லித் தரும் போது
அதான் படிக்கும் போது
எதையும் படிக்கறது இல்லே
வேலைக்கு வர இடத்திலே
எல்லாம் கத்துக்கறது
இது நியாயமா

நட்புடன் ஜமால் said...

\\ RAMYA said...

interview க்கு போயி வேலைக்கு போன்னு சொல்லி
காசு கொடுத்து அனுப்பினா இந்த மாத்ரி
வேலை எல்லாம் செஞ்சீங்களா ???
அது சரி\\

அது சரி உங்களுக்கும் வந்துடுச்சா

அது சரி

நட்புடன் ஜமால் said...

\\AMYA said...

//
அடுத்த இரு மாதங்களில் நான் கற்று கொண்ட பாடம்
//

சொல்லித் தரும் போது
அதான் படிக்கும் போது
எதையும் படிக்கறது இல்லே
வேலைக்கு வர இடத்திலே
எல்லாம் கத்துக்கறது
இது நியாயமா\\

வந்த இடத்துல கத்துக்கறது தானே வேலையே

அ.மு.செய்யது said...

// RAMYA said...

சொல்லித் தரும் போது
அதான் படிக்கும் போது
எதையும் படிக்கறது இல்லே
வேலைக்கு வர இடத்திலே
எல்லாம் கத்துக்கறது
இது நியாயமா
//

நீங்க‌ சொல்லித் த‌ரும் போதா..டீச்ச‌ர்..

நட்புடன் ஜமால் said...

\\ அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
leg-ஜென் ஜுரி நான் தானா
//

நீங்க‌ளும் இங்கிலிபிசு க‌த்துகிரீங்க‌ளா..\\

ஆமாங்க்ன்னா

RAMYA said...

//
"நீங்க போகலாம், நாங்க சீக்கிரம் ௬ப்பிடுகிறோம்" ன்னு சொன்னா "உனக்கு வேலை இல்லன்னு" அர்த்தம்.
//

பேந்த பேந்த முழிச்சி
தப்பு தப்பா பதில் சொன்னா
வேறே என்னா சொல்லுவாங்க
பிம்பிளிக்கி பிளாக்கின்னா
சொல்லுவங்கா ஏதோ
இதோட விட்டாங்களே
தப்பிச்சொமேன்னு
சந்தோஷப்படுங்கப்பா

நட்புடன் ஜமால் said...

ஏதோ ஒரு டீச்சர் சொல்லி தரும் போது

நட்புடன் ஜமால் said...

\\RAMYA said...

//
"நீங்க போகலாம், நாங்க சீக்கிரம் ௬ப்பிடுகிறோம்" ன்னு சொன்னா "உனக்கு வேலை இல்லன்னு" அர்த்தம்.
//

பேந்த பேந்த முழிச்சி
தப்பு தப்பா பதில் சொன்னா
வேறே என்னா சொல்லுவாங்க
பிம்பிளிக்கி பிளாக்கின்னா
சொல்லுவங்கா ஏதோ
இதோட விட்டாங்களே
தப்பிச்சொமேன்னு
சந்தோஷப்படுங்கப்பா\\

மாமா பிஸ்கோத்து

நட்புடன் ஜமால் said...

யாருப்பா 50 அடிக்க போறது|

நட்புடன் ஜமால் said...

யாருப்பா 50 அடிக்க போறது|

நட்புடன் ஜமால் said...

யாருப்பா 50 அடிக்க போறது|

அ.மு.செய்யது said...

50

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\ RAMYA said...

//
என்னை துவைத்தத்தில் சோர்வு ஆகி உற்சாக பானம் அருந்த ஆரம்பித்தார்கள், அதிலே என்னையும் ஊறுகாயாய் சேர்த்து கொண்டார்கள். அடுத்த நாள்களில் வேறு அலுவலகங்களுக்கு நேர்முகத் தேர்விருக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தேன்.//

எதை மறந்தாலும் இதை மறக்காதீங்க
வேலை இல்லாம வந்துட்டு
சோம பானம் சுறா பானம் தேவைதானா?\\

அது என்ன தோழி சுறா பானம்

//

ரைமிங்கா இருக்கட்டுமேன்னு சொல்லிட்டேன்.

அதை விட்டுருங்க கண்டுக்காதீங்க நண்பா

நட்புடன் ஜமால் said...

ஹையா அடிச்சாச்சு

வர்ட்டா

அ.மு.செய்யது said...

50 யாரு ?? யாரு ??

நட்புடன் ஜமால் said...

ரூம் - ஜென் ஜுரி நாந்தாங்கோ

நட்புடன் ஜமால் said...

மக்கா வாரேன் காலை சந்திப்போம்

சிந்திப்போம்.

அ.மு.செய்யது said...

ரூம் நா ??? இது என்ன புதுசா இருக்கே....லெக் செஞ்சுரி ஒகே..

RAMYA said...

எனக்கும் தூக்கம் வருது
நாளைக்கு சந்திப்போம்!!

பழமைபேசி said...

பொன்னு பாக்கப் போற இடத்துல, 'போங்க, தகவல் சொல்லி அனுப்பறோம்'ன்னு சொல்லி உங்களை அலைய விட்டதையும் பதிவாப் போடுங்க தளபதி!

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

ரூம் நா ??? இது என்ன புதுசா இருக்கே....லெக் செஞ்சுரி ஒகே..\\

ரூம் = அரை

பிரியிதா

நட்புடன் ஜமால் said...

\\பழமைபேசி said...

பொன்னு பாக்கப் போற இடத்துல, 'போங்க, தகவல் சொல்லி அனுப்பறோம்'ன்னு சொல்லி உங்களை அலைய விட்டதையும் பதிவாப் போடுங்க தளபதி!\\

அட அது வேறையா.

அந்த நேர் முக தேர்வுல என்ன பதில் சொன்னீங்க

சில பஸ் சொல்ல முடியாது

வேறு இன்னா சொன்னீங்க

ஸ்ரீதர்கண்ணன் said...

எங்கிருந்தாலும் கடை முதலாளி உடனே வரவும்....

ஸ்ரீதர்கண்ணன் said...

பொன்னு பாக்கப் போற இடத்துல, 'போங்க, தகவல் சொல்லி அனுப்பறோம்'ன்னு சொல்லி உங்களை அலைய விட்டதையும் பதிவாப் போடுங்க தளபதி!

ரிப்பீட்டு

குடுகுடுப்பை said...

அதுக்குதான் இண்டர்விவ் அட்டெண்ட் பண்ணக்கூடாது.

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

பொன்னு பாக்கப் போற இடத்துல, 'போங்க, தகவல் சொல்லி அனுப்பறோம்'ன்னு சொல்லி உங்களை அலைய விட்டதையும் பதிவாப் போடுங்க தளபதி!//

அது பெரிய கதைண்ணே, அதிரடிக்காட்சிகள் நிறைந்தது

முரளிகண்ணன் said...

:-)))))))))))))))))))))))

ஆஹா ஜெகஜால கில்லாடியா இருப்பீங்க போலிருக்கே

இராகவன் நைஜிரியா said...

// கல்லூரி முடிச்ச உடனே எல்லாரையும் போல சென்னைக்கு பெட்டியை கட்டிக் கிட்டு வந்தேன். //

கல்லூரி முடிச்ச உடனே... என்னாது கல்லூரி முடிச்சீங்களா இல்ல கல்லூரியை முடிச்சீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// முதல் கேள்வியிலே உண்மை வெளி வந்துவிட்டதேன்னு கொஞ்சம் வருத்தம் தான், //

ஆஹா முதல் நேர்முகத்தேர்வு,
முதல் கேள்வி,
முதல் கேள்வி கேட்கும் நபர்
முதல் கம்பெனி

இப்படி நிறைய முதல் இருக்கிற இடத்தில உண்மை வெளிவந்தா வருத்தப்படத்தான் வேண்டும்

இராகவன் நைஜிரியா said...

// "நீங்க கேட்டது எனக்கு புரியலை சார்" ன்னு சொன்னேன் //

உண்மையைச் சொன்னீங்கன்னு பாராட்டல !! -:)

இராகவன் நைஜிரியா said...

// ."சுவிட்ச் போட்டா ஓடும் சார்" //

கரெக்டாதானே சொல்லியிருக்கீங்க...

இதுக்கு போய் வாட் அப்படின்னு கேட்டாறா...

ரொம்ப தப்பு

இராகவன் நைஜிரியா said...

// என் பதிலுக்கு என்ன பதில் சொல்லன்னு அவருக்கு தெரியலை, அமைதியா மேசையிலே இருந்த தண்ணியை எடுத்து குடிச்சாரு //

அப்படின்னா என்ன பண்றதுன்னு தெரியல அப்படின்னா தண்ணி குடிக்கணும்...

இராகவன் நைஜிரியா said...

// இளநிலை மின்னணு பொறியாளர் அதாவது விளக்கமா சொல்லனுமுனா Electronics and communication engineering படிச்ச எல்லோருக்கும் தெரியும் Digital signal processing எவ்வளவு கஷ்டமுன்னு //

கரெக்ட்தானே...

படிச்சவங்களுத்தான் தெரியும் எவ்வளவு கஷ்டம் அப்படின்னு..

படிக்காதவங்களுக்கு எப்படி தெரியும் அது கஷ்டமா இல்லை என்று

S.R.ராஜசேகரன் said...

இதுக்குதான் இண்டேர்விக்கு போகும்போது என்னை மாதிரி "பிட்டு" கொண்டு போயிருக்கனும்

S.R.ராஜசேகரன் said...

நாளைக்கு வந்து என்னுடைய கருத்தை சொல்கிறேன்

Divya said...

'Fan' question ku answer panina piragum.......DSP la irunthu question ketathu avaroda thappu, so avarukku BP egiranathu pathy ellam worry panikatheenga:))

\\அடுத்த இரு மாதங்களில் நான் கற்று கொண்ட பாடம்.
"நீங்க போகலாம், நாங்க சீக்கிரம் ௬ப்பிடுகிறோம்" ன்னு சொன்னா "உனக்கு வேலை இல்லன்னு" அர்த்தம். \\

ponnu paarkka poitu.....purapadurapo, veetuku poi kalanthu pesitu thagaval solraomnu solra style, ithuvum:))

தாரணி பிரியா said...

அய்யா சாமி சிரிச்சு சிரிச்சு கண்ணு நிறைய தண்ணிங்க.

Mahesh said...

இம்புட்டு அறிவாளியா நீரு? :)))))

வேத்தியன் said...

உங்களை இன்டர்வியு பண்ணவருக்கு நல்ல நேரம்ன்னு நினைக்கிறேன்...
3 கேள்வியோட விட்டதால தப்பிச்சாரு.
இன்னும் 2 கேள்வி எக்ஸ்ட்ராவா கேட்டிருந்தாரு, ஆள் ஸ்பாட்லேயே மேல போயிருப்பாரு...
:-)

புதியவன் said...

//ஒரு கேள்விக்கு நல்ல முறையிலே பதில் சொன்னதுக்கு எவ்வளவு பெரிய தண்டனை ன்னு மனசுல நினைச்சுகிட்டு//

இதுக்கு மேல சிரிக்க முடியல சாமி...

T.V.Radhakrishnan said...

:-))))))))))))

RAMASUBRAMANIA SHARMA said...

Very intresting....The panel officer supposed to be a good person...Thats why God saved him...Good Comedy...

harish said...

I dont believe your Story. I think its your karpanai. Didnt fell like enterertaining either

S.R.ராஜசேகரன் said...

\\\டக்குன்னு புளியங்குடி
சொல்ல வேண்டியதது தானே
இதுக்கு பேய் முழி முளிப்ப்பங்க\\


டக்குன்னு சொன்னா பயந்திருவாங்க .ஏன்னா எங்க ஊரு ரெம்ப டேரறு

S.R.ராஜசேகரன் said...

\\உங்களுக்கு பரிச்சயமான சென்னை நண்பனுடன்\\


யாரு மாப்பிள்ளே அந்த அப்பாவி ???

S.R.ராஜசேகரன் said...

\\வேர் ஆர் யு புட் ஆப்?\\

அட மாப்பிள்ளே இதுக்கு உனக்கு அர்த்தம் தெரியலியா .கடைசியா நீ எங்க "ஆப்" அடிச்சன்னு கேட்டு இருக்காரு

S.R.ராஜசேகரன் said...

"சுவிட்ச் போட்டா ஓடும் சார்"


அடடா இதுக்குமா உனக்கு அர்த்தம் தெரியல "சுவிட்ச் போட்டா சுத்தும் "

S.R.ராஜசேகரன் said...

\\அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பித்தார்\\\அந்த மனுஷனுக்கு அவ்ளோ நம்பிக்கை

S.R.ராஜசேகரன் said...

\\\ஒரு புது முயற்சியா "சிலபஸ்(Syllabus) ல இல்லன்னு" சொல்லிபுட்டேன்.\\\இத கேட்டும் அந்த மனுஷனுக்கு ஈரம் வரலன்னா , நீ அப்பவே வெளிய வந்திருக்கணும்

Nilavum Ammavum said...

இப்போ நீங்க எத்தனை பேரை நேர்முக தேர்வு செய்யுறேங்க?

இதே தான் சொல்லி அனுப்புறேங்களா?

S.R.ராஜசேகரன் said...

\\ஒரு வழியா வேலை கிடைச்ச சந்தோசம்\\


ஆனாலும் உனக்கு ரெம்ப தைரியம் தான்

S.R.ராஜசேகரன் said...

\\என்னை துவைத்தத்தில் சோர்வு ஆகி உற்சாக பானம் அருந்த ஆரம்பித்தார்கள்\\

அடப்பாவிகளா நீங்க நல்லா இருப்பிவிகளா

S.R.ராஜசேகரன் said...

\\படிக்காதவங்களுக்கு எப்படி தெரியும் அது கஷ்டமா இல்லை என்று\\\


நாடாம தீர்ப்ப மாத்தி சொல்லு .என்னையும் சேர்ர்த்து நக்கல் பண்ற மாதிரியே இருக்கு

S.R.ராஜசேகரன் said...

\\\கல்லூரி முடிச்ச உடனே... என்னாது கல்லூரி முடிச்சீங்களா இல்ல கல்லூரியை முடிச்சீங்களா?\\அட்ரா சக்கை இது பாய்ண்ட்டு .மாப்பிள இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்

S.R.ராஜசேகரன் said...

\\\அட...நம்ம ஜாதிக்காரரா நீங்க...சொல்லவேயில்ல\\


அடடே oc,bc,mbc,sc, மாதிரி ece ஒரு க்ருப் ஆரம்பிச்சிட்டாங்களா

வில்லன் said...

வேர் ஆர் யு புட் ஆப்? ன்னு ஒரு கேள்வியை கேட்டு புட்டாரு

புட் ஆப் நா எடுத்து போடுன்னு அர்த்தம். கொஞ்சம் எதையாவது எடுத்து போட்டுருக்கல்ம்ள. தப்பு பன்னிடிங்கலே தலைவா. இருந்தாலும் நல்லதுக்கு தான். இலன்ன அநியாயமா விப்ரோ ஒரு நல்ல ரீசோர்ச இளந்துருக்கும். எல்லாம் நன்மைக்கே அவனுக்கு குடுத்து வைக்கல என்ன பண்ண.

சரி வாங்க!!! இத காரணமா வச்சு சேர்ந்து ஒரு ரவுண்டு போடலாம்.

வில்லன் said...

பான்(fan) எப்படி சுத்துது?

இப்படி ஒரு கஷ்டமான கேள்வியை எதிர் பார்க்காத மாதிரி நடிக்க வேண்டிய கடமை, வேற வழி அவரு என்ன கேட்டாலும் பதில் சொல்லத் தெரியாதுன்னு எனக்கு தானே தெரியும்,பயங்கரமா யோசிக்கிற மாதிரி யோசனை பண்ணி.

"சுவிட்ச் போட்டா ஓடும் சார்"


கவுண்ட மணி மாதிரி சரியா தான சொன்னிங்க. அவருக்கு புரியல என்ன பண்ண. என்ன தான் டெக்னாலஜின்னு சொன்னாலும் சுவிட்ச் போடாம எந்த பேன்ஆவது ஓடுமா?

S.R.ராஜசேகரன் said...

\\\என்ன தான் டெக்னாலஜின்னு சொன்னாலும் சுவிட்ச் போடாம எந்த பேன்ஆவது ஓடுமா?\\\


ஓடுமே எங்க பாட்டி தலைல உள்ள பேன் சுவிட்ச் போடாம ஓடும்

S.R.ராஜசேகரன் said...

98

S.R.ராஜசேகரன் said...

99

S.R.ராஜசேகரன் said...

100

அப்ப வரட்டுமா மாப்பு
(எங்க யாராச்சும் கேட்டுராதிங்க)

ஸ்ரீதர்கண்ணன் said...

ஓடுமே எங்க பாட்டி தலைல உள்ள பேன் சுவிட்ச் போடாம ஓடும்

Superu

ஹேமா said...

நசரேயன் நான் 102 ஆவதா வந்துட்டேன்.

ஹேமா said...

//பான்(fஅன்) எப்படி சுத்துது?
"சுவிட்ச் போட்டா ஓடும் சார்"
நான் சொன்னது சரியா கேட்கலைன்னு நினைச்சுகிட்டு, ரெம்ப சத்தமா "சுவிட்ச் போட்டா ஓடும்" ன்னு மறுபடியும் சொன்னேன்.

நான் சரியாத்தான் பதில் சொல்லி இருக்கேன் எனக்கு ஒரே சந்தோசம்.//

இப்பிடி சொன்ன உங்களை...துவைச்சதோட மாட்டும் விட்டாங்களே.யப்பா....!

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

PoornimaSaran said...

//ரெம்ப சத்தமா "சுவிட்ச் போட்டா ஓடும்" ன்னு மறுபடியும் சொன்னேன்.

நான் சரியாத்தான் பதில் சொல்லி இருக்கேன் எனக்கு ஒரே சந்தோசம்.//


அட! அட!! அட!!! நெம்ப புத்திசாலி தான் நீங்க!!!!

Aero said...

///கல்லூரி முடிச்ச உடனே எல்லாரையும் போல சென்னைக்கு பெட்டியை கட்டிக் கிட்டு வந்தேன்////

dei unmaya sollu....colleage mudichi one year puliangudi la irunthu rowdy thanam pannitu..appuram tha pona....

Oracle nu etho course thenkasi la vera padichiyada....thenkasi ku poniyo illa Parasakthi Colleage munnadi irunthiyo yaruku theriyum...

inga comment panna vendiyatha...antha blog lo pottutene..

அன்புமணி said...

எப்படி இதெல்லாம்... அதுசரி...இப்ப எங்க வேலையில இருக்கீங்க? அதைப்பத்தி ஒரு பதிவு எழுதலாமில்ல...

பிரபு said...

//
அடுத்த இரு மாதங்களில் நான் கற்று கொண்ட பாடம்.


"நீங்க போகலாம், நாங்க சீக்கிரம் ௬ப்பிடுகிறோம்" ன்னு சொன்னா "உனக்கு வேலை இல்லன்னு" அர்த்தம்.
//
நீங்க ரொம்ப லேட்

நல்ல நகைச்சுவையான பதிவு

ASSOCIATE said...

எனக்கு நடந்தது, என் நண்பர்களுக்கு நடந்தது , படித்து முடித்தவுடன் இன்டெர்வியு
செய்பவர்களை இப்படி செய்யாமல் இவ்வளவு உயர்ந்த பதவிக்கு வர முடியுமா என்ன?
நல்ல பதிவால் பழைய எண்ணங்களை மனதில் கொண்டு வந்து விட்டீர்கள்!!!!