வெள்ளைக்காரிக்கே வெட்கம்
எனது முதல் வெளிநாட்டு பயணம் டொரோண்டோ(இதைப் பத்தி பின்னால் விபரமாக இன்னொரு பதிவு வரும்),அலுவலகத்திலே இருந்து போய் இருந்தேன், ஒரு வருஷம் செய்ய வேண்டிய வேலையை நாலு மாசத்திலே முடிச்சு தருவோம்ன்னு எங்காளுங்க சொல்லிட்டாங்க, நாங்க செய்யுற வேலைக்கு உதவியா எங்களுக்கு மூனு பேரு வியாபார வாடிக்கையாளர்கள்(பிசினஸ் யூசெரஸ்), ஒரு வெள்ளைக்காரன்,வெள்ளை காரி, ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கா பெண்மணி, எல்லோருக்கும் வயசு 30 முதல் 35 இருக்கும்.
தமிழ் படத்துல குத்துப் பாட்டுக்கு தான் அந்த மாதிரி உடைகளை பார்க்கமுடியும், அவங்க அதை சாதாரணமாய் அலுவலகத்திற்கு போட்டுக்கிட்டு வருவாங்க, முதல் வாரம் பட்டிக்காட்டுகாரன் மிட்டாய் கடையை பார்த்தா மாதிரி பார்த்து கொண்டு இருந்தேன்.ரெண்டாவது வாரத்திலே இருந்து எங்க வேலையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம், ஆரம்பத்திலே நடந்தோம், வேகமாக நடந்தோம், ஓடினோம், வேலையை ஒரு வழியாக கொத்தி குதறி முடித்தும் விட்டோம்
வெள்ளையப்பன்,கருப்பம்மா, வெள்ளையம்மா முனு பேரும் சேர்ந்து நாங்க எல்லாம் மாடு மாதிரி வேலை பார்த்து கொடுத்ததிலே ரெம்ப சந்தோசம், அதனாலே எங்களுக்கு விருந்து கொடுத்தாங்க, நான், ஆந்திர பையன், எங்க மேனேஜர் முனு பேரும் போனேம், எங்க ஊருல சில பாட்டிங்க பீடி அடிச்சு பாத்து இருக்கேன், ஆனா யாரும் தண்ணி அடிச்சு பார்த்தது இல்லை
கருப்பம்மாவும், வெள்ளையம்மாவும் தண்ணிய மண்டு மண்டுன்னு மண்டுன வேகத்தை பார்த்த எனக்கு என்ன பண்ணன்னு தெரியலை, வேடிக்கை பார்த்த வேலைக்காவதுன்னு நானும் களத்திலே இறங்கிட்டேன்,நான் ஒரு பீர் அடிச்சு முடிக்கு முன்னாடி அவங்க ரெண்டு பேரும் நாலு பீர் அடிச்சி முடிச்சு விட்டாங்க.ரெண்டு மணி நேரம் நல்லா குடிச்சோம், பல உலக விசயங்களை பேசினார்கள், சும்மாவே அவங்க பேசுற இங்கிலிபிசு எனக்கு புரியாது, அதுவும் போதையிலே ரெம்ப சுத்தம்.தலைவர் ரஜினி மாதிரி எஸ்..நோ..யாயா அதை தவிர வேற எதையும் பேசலை, அதிகமா கேள்வி கேட்டாங்கன்னா பீர் பாட்டிலை வாயை விட்டு எடுக்கவே மாட்டேன்
விடை பெறும் போது வெள்ளையம்மா கண்ணத்துல, கருத்தம்மா கண்ணத்தை வச்சி, ரெண்டு பேரும் எதிர் எதிர் திசையிலே இச்சி..இச்சி முத்தம். இப்படி ஒரு முத்தத்தை கமல்ஹாசன் எந்த படத்திலேயும் பண்ணலியேன்னு யோசனை வேற எனக்கு. அடுத்ததா நின்ன எங்க மேனேஜர் வேற கண்ணத்தை கொடுத்து ஒன்னு வாங்கி கிட்டாரு. வரிசையிலே அடுத்ததா நான்
என்னையை பார்த்து ஹாய் நசரேயன் ன்னு சொல்லி முடிக்கலை அதுக்குள்ளே அவங்களுக்கு பேச முடியலை, எப்படி முடியும் வாயோடு வாய் வச்சா, காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி, கமல்ஹாசன் மேல பாரத்தை போட்டுட்டு கண்ணை முடி கிட்டு ஒரே இச்சி..இச்சி அவங்க வாயிலே மூச்சு விடமுடியாத படி.
இதை எல்லாம் பார்த்து அரண்டு போன எங்க மேனேஜர் கையிலே வச்சு இருந்த பீர் பாட்டிலை கிழே போட்டுடாரு.நான் சத்தம் கேட்டு கண்ணை முழிச்சு பார்த்தா!! என் முன்னாடி கருப்பம்மா, நான் வெள்ளையம்மான்னு நினைச்சி இவ்வளவு நேரமும் உம்மா கொடுத்தது அவங்களுக்கு தான்
இதை எல்லாம் பார்த்து கிட்டு இருத்த வெள்ளையம்மா ஒரே ஓட்டமா ரெஸ்ட் ரூம்க்கு ஓடுறாங்க, அவங்க வாயை பொத்தி கிட்டு, உள்ளே போய் ஒரே வாந்தி, சத்தம் எங்களுக்கு கேட்குது
நான் ஒழுங்காத்தான் பல் விளக்கிட்டு போய் இருந்தேன், அப்படி இருந்தும், நான் இன்னும் அவங்களுக்கு உம்மா கொடுக்கவே இல்லை யோசனை வேற எனக்கு, ஆந்திரா பையன் பக்கத்திலே வந்து
"ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்ன்னான்"
நான் "என்னடா சொல்லுற"
"கருப்பம்மாவுக்கு காதலன் கிடைச்சுட்டான், வெள்ளையம்மாவுக்கு புள்ளைக்கு அப்பா கிடைச்சுட்டான்."
கேட்டதும் அடிச்ச போதை எல்லாம் இறங்கி போச்சி. எங்க மேனேஜர் பேய் அறஞ்ச சந்திரமுகி வடிவேலு மாதிரி நின்னுகிட்டு இருந்தாரு
வெள்ளையம்மா வந்தி எடுத்து முடிச்சி வெளியே வந்தாங்க, நான் ரெண்டு பேரையும் பார்த்தேன், ரெண்டு பேருக்கும் ஒரு வெட்கம் தாங்க முடியலை, அப்பத்தான் தெரிஞ்சது இவங்களுக்கு ௬ட வெட்கம் வருமுன்னு.இந்த களேபரத்திலேயும்(பழமைபேசி??) ரெம்ப அமைதியா இருந்தார் வெள்ளையப்பன்,நாங்க ஆள் ஆளுக்கு என்ன நடக்கும் இனிமேலன்னு நினைச்சுக் கிட்டு இருந்த போது, ஏன் எல்லாரும் எழவு விழுந்த மாதிரி இருக்கீங்க, நேரம் ஆச்சு வீட்டுக்கு போகலாம்ன்னு சொன்ன உடனே எங்களுக்கும் கொஞ்சம் சுதாரிப்பு வந்தது
அதுக்குள்ளையும் எங்க மேனேஜர்ரும் கொஞ்சம் தெளிவு ஆகிட்டாரு, நான் ரெம்பவே தெளிவு ஆகிட்டேன், ஆந்திரா பையன் தண்ணி அடிக்கலை அதனாலே அவன் நல்ல தெளிவு, மறுபடியும் எல்லோரும் விடை பெற ஆரமித்தார்கள், இவ்வளவு நடந்தும் வெள்ளையம்மா, வெள்ளையப்பனுக்கு கண்ணத்துல கண்ணம் வச்சு உம்மா? கொடுத்தாங்க, என்னை பார்த்தவுடனே ரெம்ப உசார் ஆகி கை எடுத்து கும்முடு போட்டாங்க.
ஆந்திர பையன் "என்னை வாழ வைத்த தெய்வம் நீங்கன்னு சொல்லுறா?" ன்னு சொல்லி பீதியை கிளப்பினான். எங்க மேனேஜர் என்னிடம் முகம் கொடுத்து எதும் பேசவில்லை, ஒரு வேளை அவருக்கும் உம்மா கொடுப்பனோன்னு பயந்துட்டாரோ என்னவோ!.எல்லாரும் வீட்டுக்கு போய்ட்டோம்
அடுத்து ஒரு ரெண்டு வாரத்துக்கு எங்க மேனேஜர் என் ௬ட பேசவே இல்லை, அதற்குள் என் வேலை முடிந்து விட்டது நானும் ஊருக்கு திரும்பி வந்து விட்டேன், வந்து ஒரு மாசம் கழித்து எங்க மேனேஜர் ரிடம் இருந்து ஒரு மின்-அஞ்சல் வந்தது பயம் கலந்த நடுக்கத்துடன் திறந்து பார்த்தால் "அலுவலகத்திலே தூங்காம வேலையை பாரு, கனடா விசா எடுக்க டாக்குமென்ட்ஸ் அனுப்பி வை" ன்னு எழுதி இருந்தார்
54 கருத்துக்கள்:
அப்புரமா வரேன்
ஹாஹா.... சூப்பர்.. 'காஞ்ச மாடு' ஒண்ணு எனக்குத் தெரியுது.... போய் பாத்துட்டு வர்றேன்... :-)))
சென்னையிலேயே இந்த வேலை ஆரம்பிச்சாச்சா.
மிஸஸ் நசரேயன்,இந்த ஆள் சரி இல்லை.
:-)))))))))))))) sema ravusu..
இஃகி...இஃகி...இஃகி..
// வேடிக்கை பார்த்த வேலைக்காவதுன்னு நானும் களத்திலே இறங்கிட்டேன் //
அதுசரி எத்துனை நேரம் தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பது...
ஐ..மீன்... பீர் குடிப்பதை...!!!
அபாரம்...
ஆனா, கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி பண்ணுங்க...இன்னும் நல்லா இருக்கும்.
அடப்பாவி!!!!!!
நானும் அப்புறமா வரேன்.ஏகப்பட்ட வேல
ஒரே டமாசு. நல்லா எழுதியிருக்கீங்க.
//வெள்ளைக்காரிக்கே வெட்கம்// ?
(நகைச்சுவைப் பதிவுன்றதால உங்க racism தை ஒண்ணும் சொல்லலை :-)
//என்னையை பார்த்து ஹாய் நசரேயன் ன்னு சொல்லி முடிக்கலை அதுக்குள்ளே அவங்களுக்கு பேச முடியலை, எப்படி முடியும் வாயோடு வாய் வச்சா, காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி, கமல்ஹாசன் மேல பாரத்தை போட்டுட்டு கண்ணை முடி கிட்டு ஒரே இச்சி..இச்சி அவங்க வாயிலே மூச்சு விடமுடியாத படி.//
முக்கியமான வேலைகளுக்கு மத்தியீலும் என்னோட தங்கமணிக்கு போன் போட்டு உங்க தங்கமணிகிட்ட இத பத்தி வத்தி வைக்க சொல்லிட்டேன்.
வீட்டுல அநேகமா வெளக்குமாறு ரெடியா இருக்கும். நைட் வெளிலதான் படுகோனும் போல. குளுரு அதிகமா இருந்தா போற வழில ஒரு ப்ளங்கெட் வாங்கிட்டு போய்டுங்க.
// பழமைபேசி said...
அபாரம்...
ஆனா, கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி பண்ணுங்க...இன்னும் நல்லா இருக்கும்.//
இவரு யாருயா எப்பபாத்தாலும் எழுத்துப் பிழை அது இதுன்னு நொய் நொய்னுட்டு. படிச்சமா என்ஜாய் பண்ணோமா அடிவாங்கி கொடுதோமான்னு இல்லாம.
/*// பழமைபேசி said...
அபாரம்...
ஆனா, கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி பண்ணுங்க...இன்னும் நல்லா இருக்கும்.//
இவரு யாருயா எப்பபாத்தாலும் எழுத்துப் பிழை அது இதுன்னு நொய் நொய்னுட்டு. படிச்சமா என்ஜாய் பண்ணோமா அடிவாங்கி கொடுதோமான்னு இல்லாம./*
அண்ணன் நல்லதுக்குத் தான் சொல்லுறாரு தலைவரே
//நான் ஒழுங்காத்தான் பல் விளக்கிட்டு போய் இருந்தேன், அப்படி இருந்தும், நான் இன்னும் அவங்களுக்கு உம்மா கொடுக்கவே இல்லை யோசனை வேற எனக்கு, ஆந்திரா பையன் பக்கத்திலே வந்து
"ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்ன்னான்"
நான் "என்னடா சொல்லுற"
"கருப்பம்மாவுக்கு காதலன் கிடைச்சுட்டான், வெள்ளையம்மாவுக்கு புள்ளைக்கு அப்பா கிடைச்சுட்டான்."//
சொல்லவே இல்லயே. எப்ப நீங்க தெய்வம் (தியாகி) ஆனிங்க?
ஆமா இப்ப அந்த வெள்ளையம்மாவும் கருப்பம்மாவும் எங்க!!!! எப்படி!!!! இருகாங்க. எதாவது மின்அஞ்சல் இல்ல கடித போக்குவரத்து இன்னும் இருக்கா ;)).
//"கருப்பம்மாவுக்கு காதலன் கிடைச்சுட்டான், வெள்ளையம்மாவுக்கு புள்ளைக்கு அப்பா கிடைச்சுட்டான்."//
பையன் இப்ப எப்படி இருக்கான் என்ன படிக்கான் சார்.
//நான் ஒழுங்காத்தான் பல் விளக்கிட்டு போய் இருந்தேன்//
அப்ப ஒழுங்கா ரெகுலரா பல் தேக்க மாடிங்களா? என்னய்யா கொளப்புரிறு. வெவரமா சொல்லும்.
நசரேயன் said...
/*// பழமைபேசி said...
அபாரம்...
ஆனா, கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி பண்ணுங்க...இன்னும் நல்லா இருக்கும்.//
இவரு யாருயா எப்பபாத்தாலும் எழுத்துப் பிழை அது இதுன்னு நொய் நொய்னுட்டு. படிச்சமா என்ஜாய் பண்ணோமா அடிவாங்கி கொடுதோமான்னு இல்லாம./*
அண்ணன் நல்லதுக்குத் தான் சொல்லுறாரு தலைவரே//
எல்லாம் ஒரு கலாய்ப்புதான். அப்பப்ப இருகோம்னு காட்ட சௌன்ட் கொடுக்கணும்ல;))
அண்ணாச்சி பழமைபேசி, கோவ பட்டுராதிய
:-)))))))))))
//அதிகமா கேள்வி கேட்டாங்கன்னா பீர் பாட்டிலை வாயை விட்டு எடுக்கவே மாட்டேன் //
ரசித்தேன்
மொத அனுபவமே இப்பிடியா? பின்னால என்னெல்லாம் நடந்துதோ? கொலசாமி 'கருப்ப'ராயனுக்கே வெளிச்சம்.
Haiyo haiyo...ithukkuthan etha pannalum atha "plan" panni pannanumnu solrathu!
//அதிகமா கேள்வி கேட்டாங்கன்னா பீர் பாட்டிலை வாயை விட்டு எடுக்கவே மாட்டேன் //
ஹா ஹா ஹா ஹா சூப்பரு :-))
நசரேயன் விவகாரமான ஆளா இருப்பீங்க போல :-))
haa...haa...haa,,
:-))
//தலைவர் ரஜினி மாதிரி எஸ்..நோ..யாயா அதை தவிர வேற எதையும் பேசலை, அதிகமா கேள்வி கேட்டாங்கன்னா பீர் பாட்டிலை வாயை விட்டு எடுக்கவே மாட்டேன்//
Nice யா...
//எனது முதல் வெளிநாட்டு பயணம் டொரோண்டோ(இதைப் பத்தி பின்னால் விபரமாக இன்னொரு பதிவு வரும்),//
அதை சொல்லுங்க முதல்ல
//கருப்பம்மாவுக்கு காதலன் கிடைச்சுட்டான்,//
இப்ப அந்தம்மா எந்த ஊர்ல இருக்காங்க, நல்லாத்தானே இருக்காங்க :)
:-)))
//"ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்ன்னான்"
நான் "என்னடா சொல்லுற"
"கருப்பம்மாவுக்கு காதலன் கிடைச்சுட்டான், வெள்ளையம்மாவுக்கு புள்ளைக்கு அப்பா கிடைச்சுட்டான்."//
ஹா...ஹா...ஹா...
செம காமெடி...நல்லா சிரிச்சேன்...
இச்சென முத்தம். இது கதையல்ல நிஜம் அப்படின்னுபெயரிட்டிருக்கலாம்.
நல்லாயிருக்கு
வாழ்த்துக்கள்
//வெள்ளையப்பன்,கருப்பம்மா, வெள்ளையம்மா முனு பேரும் சேர்ந்து நாங்க எல்லாம் மாடு மாதிரி வேலை பார்த்து கொடுத்ததிலே ரெம்ப சந்தோசம், //
பெயர்ப் பொருத்தம் நல்லாயிருக்குதே:)
//அதிகமா கேள்வி கேட்டாங்கன்னா பீர் பாட்டிலை வாயை விட்டு எடுக்கவே மாட்டேன் //
இஃகி!இஃகி!நல்ல டெக்னிக்கா இருக்குதே:)
இந்தப் பதிவுக்கு முன்னால் எனது மசாலா தோசையும் குஜராத் குஜிலிகளும் வெறும் ஜு ஜுப்பி:)
Father of Foreign Country aayiteengala..!!
//வில்லன் said...
நசரேயன் said...
/*// பழமைபேசி said...
அபாரம்...//
அண்ணாச்சி பழமைபேசி, கோவ பட்டுராதிய
//
வீட்ல வாங்கின தாக்கத்துல, நீங்க எதோ சிறூ சொல்லுச் சொன்னா, அதுக்கும் தளபதி விடமாட்டீங்காரு... இஃகிஃகி!
//
தமிழ் படத்துல குத்து பாட்டுக்கு தான் அந்த மாதிரி உடைகளை பார்க்கமுடியும், அவங்க அதை சாதாரணமாய் அலுவலகத்திற்கு போட்டுக்கிட்டு வருவாங்க, முதல் வாரம் பட்டிக்காட்டுகாரன் மிட்டாய் கடையை பார்த்தா மாதிரி பார்த்து கொண்டு இருந்தேன்.
//
போனதே அதுக்குதானே. வேலை இருக்கோ இல்லையோ
நல்ல வேடிக்கை பாக்க போன மாதிரிதான் தெரியுது.
ஹையோ ஹையோ நல்ல வேடிக்கைப்ப இது
.//
தலைவர் ரஜினி மாதிரி எஸ்..நோ..யாயா அதை தவிர வேற எதையும் பேசலை, அதிகமா கேள்வி கேட்டாங்கன்னா பீர் பாட்டிலை வாயை விட்டு எடுக்கவே மாட்டேன்
//
அட இங்கே பாருய்யா சூப்பர் ஐடியாவை கொன்னுட்டீங்க போங்க
//
அடுத்து ஒரு ரெண்டு வாரத்துக்கு எங்க மேனேஜர் என் ௬ட பேசவே இல்லை, அதற்குள் என் வேலை முடிந்து விட்டது நானும் ஊருக்கு திரும்பி வந்து விட்டேன், வந்து ஒரு மாசம் கழித்து எங்க மேனேஜர் ரிடம் இருந்து ஒரு மின்-அஞ்சல் வந்தது பயம் கலந்த நடுக்கத்துடன் திறந்து பார்த்தால் "அலுவலகத்திலே தூங்காம வேலையை பாரு, கனடா விசா எடுக்க டாக்குமென்ட்ஸ் அனுப்பி வை" ன்னு எழுதி இருந்தார்
//
ரொம்ப போங்குதான் எல்லாத்தையும் செய்திட்டு
உடனே கனவுன்னு ஒரு கதை வேறே
இதே நாங்களும் நம்பிட்டோமில்லே !!
States-la ithellam sagajam illaya...Ippa Namma oorukkae vanthuruchu....Why should we still exaggirate the happenings in states....We have more romantic examples in our parties...because of the western culture coming thru IT INDUSTRIES, PROFESSIONALS, AND CORPORATE COMPANIES.....WE ARE BOUND TO DO LOTS OF ACTIVITIES KNOWINGLY OR UNKNOWINGLY....NOTHING WRONG IN IT, IF IT IS INSIDE THE LIMIT...
Y.P.
யோ யோ யோ என்ன தைரியம்யா உனக்கு, ஒரு வெள்ளகாரிக்கு முத்தம் கொடுத்திருப்ப
நீ உடனே தங்கச்சி போன் நம்பரை சொல்லு மவனே உனக்கு இனிமே திண்ணைதாண்டி
\\\எனது முதல் வெளிநாட்டு பயணம் டொரோண்டோ(இதைப் பத்தி பின்னால் விபரமாக இன்னொரு பதிவு வரும்)\\\
வேண்டாம் இதோட நிறுத்திக்க .கண்டதெல்லாம் சொல்லி வயதேரிச்சல்லை கிளப்பாத
\\\ரெண்டு மணி நேரம் நல்லா குடிச்சோம், "பல உலக விசயங்களை பேசினார்கள்"\\\
ஆகா என்னமா புலுகுறான் பாருங்க
\\\கண்ணை முழிச்சு பார்த்தா!! என் முன்னாடி கருப்பம்மா, நான் வெள்ளையம்மான்னு நினைச்சி இவ்வளவு நேரமும் உம்மா கொடுத்தது அவங்களுக்கு தான்\\\
வெள்ளையம்மாவை கடவுள் காப்பாத்திட்டார்
\\\வெள்ளையம்மாவுக்கு புள்ளைக்கு அப்பா கிடைச்சுட்டான்\\\
எத்தினவது அப்பான்னு கேட்டியா .ஏன்னா எண்ணிக்கை மாறிடக்கூடாது
இடி விழுந்த இருளாண்டி- ன்கிர பேரை மாத்திட்டு 'முத்தம் கொடுத்த முத்தாண்டி'- ன்னு பேரை மாத்திக்க
\\We have more romantic examples in our parties...because of the western culture coming thru IT INDUSTRIES\\\
இன்னும் எங்க ஊரு (புளியங்குடி) மாறலன்னு நினைக்கிறேன்
//S.R.ராஜசேகரன் said...
இன்னும் எங்க ஊரு (புளியங்குடி) மாறலன்னு நினைக்கிறேன்
//
ஓ, அப்பிடியா இராசா?
அண்ணாச்சி ஊருக்கு டிக்கெட் எடுத்திட்டீங்களா?
அண்ணாச்சி ஊருக்கு டிக்கெட் எடுத்திட்டீங்களா?
50...............
அதெல்லாம் சரி, அந்த வெள்ளையம்மா அட்ரஸ் தரமுடியுமா தலைவரே? வேற ஒண்னும் இல்ல, இப்ப அவங்க இந்திய கலாச்சாரத்த பின்பற்றி வராங்களா இல்ல அதே சேம்(சேம் சேம் பப்பி சேம்) கல்ச்சரான்னு கேட்கணும்.
கருப்பம்மாவின் கடைசி முத்தம்ன்னு ஒரு கத ரெடி பண்ணுங்க. வேறே யாரு நீங்க தான் கருப்பு...ச்..ச்..சீ...கதாநாயகன்.
நன்றாக இருந்தது. டோரண்டோவை பத்தி எழுதுங்க.
மகேசு அண்ணன் பதிவு போட்டதின் விளைவு, இதுதான் கடைசிப் பின்னூட்டம் அடுத்த பின்னூட்டம் போடும் வரை. கண்டிப்பா, இனி ஒரு வாரத்துக்கு பதிவு கிடையாது, போதுமா? போதுமா??!
கருத்துக்களை பதிவு செய்த அனைவருக்கும் கோடன கோடி நன்றி
sariuana nakkalu da....
Post a Comment