Thursday, January 8, 2009

ஈழ பிரச்சனையில் குளிர்காயும் இந்திய அரசியல்

அண்ணன் அண்ணன் போறாருன்னு சொல்லியே காலத்தை ஒட்டும் இந்திய/தமிழக அரசியல்வாதிகள், ஒரு பிரச்சனையை கையாளுவதில் கை தேர்ந்த கில்லாடிகள் நம்ம ஊரு அரசியல் வாதிகள்.நீச்சல் அடிச்சி போய் இருந்தாலே இந்நேரம் இலங்கை போய் சேர்ந்து இருப்பார் பிரணாப் முகர்ஜி.


அவரு போறதுக்குள்ளே அவரை பிடிச்சா எங்களிடம் ஒப்படைக்கணுமுன்னு ஒருத்தர் பேட்டியெல்லாம் கொடுக்கிறாரு.அவர் என்னை புளியங்காய் அடிச்சுகிட்டு இருக்காரா பிடிக்க.


நினைச்ச நேரம் மாமியாரு வீடு மாதிரி போக முடியாதுன்னு இன்னொருத்தர் சொல்லுறாரு, ஐயா கழக பொறுப்புக்குத்தான் குடும்ப அட்டையிலே பேரு வேணும், நியாயத்தை கேட்க்கவுமா?


பிரதமர் எப்படி போக சொல்லுவாரு, பிரான்சுல சீக்கியருக்கு தலை கவசம் அணிய அனுமதி கொடுக்கனும்முன்னு சொல்லுவாரு, இலங்கையிலே தமிழர்களின் தலையவே ஒருத்தன் எடுத்து கிட்டு இருக்கான், அவனை நிப்பாட்ட சொல்ல மாட்டாரு.


இவங்க தலைமையிலே தான் ௬ட்டணி அமையனுமுன்னு ஒத்தை கால்லு நிக்காரு மருத்துவர் ஐயா, என்னவோ தமிழ் மக்கள் தலை எழுத்தே அவங்க கையில இருக்க மாதிரி.அவங்களோட ஒரே நோக்கம் தமிழகத்திலே நீங்க எது வேணுமுனாலும் பேசலாம் அந்த ஒன்னை தவிர, இது மேலிடத்து உத்தரவா இல்லை மேல போனவரோட உத்தரவான்னு தெரியலை


விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு ராஜினமா கடிதம் எல்லாம் வாங்கி குப்பையிலே போட்டாச்சு, போங்கோ போங்கோ ன்னு கடிதம் எழுதுவதை கடமையா செய்கிறோம்


புலி வருது .. புலி வங்க புலி வருதுன்னு எவ்வளவு நாள் ஏமாத்துவீங்க, அதுக்குள்ளையும் அங்க ஒருத்தன் தமிழ் இனத்தையே வேரோடு அழிச்சுருவான், அணிசேரா கொள்கை பயன் படுகிற ஒரு இடம் தமிழ் ஈழ பிரச்சினையிலே தான்.


கடந்த காலத்திலே நீங்க எல்லாம் கையையும் வாயையும் கட்டிக்கிட்டு சும்மா இருந்திருந்தால், இந்நேரம் அவர்களோட கனவுகள் நினைவு ஆகி இருக்கும் என்பது உண்மை


நீங்க எல்லாம் அரசியல்வாதிகள் தான், அதுக்காக எல்லா விஷயத்திலேயும் உங்கள் அரசியல் சாணக்கிய தனத்தை காட்டுனா எப்படி?


எது எப்படி நடந்தாலும் தான் உட்கார்ந்து இருக்கிற நாற்காலிக்கு எந்த வித பாதகம் வரக்கூடாதுன்னு நினைக்கிற உங்களை நம்பி வழி மேல் விழி வச்சு காத்து இருக்கிற எம் இனத்தவனுக்கு ஆறுதல் சொல்லக்கூடமுடியலை.


அட போங்கையா நீங்களும் உங்க அரசியலும்


42 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

கடந்த காலத்திலே நீங்க எல்லாம் கையையும் வாயையும் கட்டிக்கிட்டு சும்மா இருந்திருந்தால், இந்நேரம் அவர்களோட கனவுகள் நினைவு ஆகி இருக்கும் என்பது உண்மை//

அரசியல்வாதிகளை விடுங்கள்,ஆனால் இந்தியா தலையிட்டுதான் தீர்வு காணமுடியும்.

வில்லன் said...

இதை நான் வன்மையா கண்டிகறேன். ஒரு பிரதமர கொன்ன அமைப்புக்கு மாம் நாடு துணை போகவே கூடாது. ஏன்னா அது நாம ஊட்டி வளர்த்த கடா நம்ம மார்பிலேயே பாயுது. என்னதான் பாம்புக்கு பல ஊத்தி வளத்தாலும் அது தன் கொந்த காட்டிடும்னு சொன்னது சரிதான். திருந்தாத ஜென்மங்கள்.

Anonymous said...

எதிர்வரும் தேர்தலில் காங்கிரசை தோற்கடிப்பதன் மூலம் 7கோடி தமிழர்களும் தமது எதிர்ப்பை காட்டலாம், கூட்டு சேர்பவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுக்கலாம்.

வில்லன் said...

ஐய நான் தான் 2வது 3வது

சீ போங்க said...

ராசா நீ கதகூட (அதுவும் இவ்ளோ நல்லா) எழுதுவியா. சொல்லவே இல்லயே. இருக்கட்டும் இருக்கட்டும்

பழமைபேசி said...

வில்லன்ங்றது யாரு? குடுகுடுப்பையாரா அல்லது தளபதியா?? எதுக்கு இப்பிடி???

வில்லன் said...

//வில்லன்ங்றது யாரு? குடுகுடுப்பையாரா அல்லது தளபதியா?? எதுக்கு இப்பிடி???//

வில்லன்ங்றது வலை பதிவாளர் சங்கத்துக்கு வில்லன். நசறேயனுக்கு பரம்பரை வில்லன். என்னா 3 1/2வருஷம் நசறேயனுக்கு பக்கத்து வீட்டுக்காரன். இப்ப CAல குப்பை கொட்டுறவரு. விளக்கம் போதுமா பழமைபேசி

Anonymous said...

வெறுப்பா இருக்கு...

நசரேயன் said...

/* குடுகுடுப்பை said...
கடந்த காலத்திலே நீங்க எல்லாம் கையையும் வாயையும் கட்டிக்கிட்டு சும்மா இருந்திருந்தால், இந்நேரம் அவர்களோட கனவுகள் நினைவு ஆகி இருக்கும் என்பது உண்மை//

அரசியல்வாதிகளை விடுங்கள்,ஆனால் இந்தியா தலையிட்டுதான் தீர்வு காணமுடியும்.
*/
இந்தியா தலையிடனும் அதை நான் மறுக்கலை, கல்யாண வீட்டுக்கு ௬ப்பிட்டா எளவு வீட்டுக்கு தான் போவாங்க போல

வில்லன் said...

குழப்படிகளை தவிர்க்க என்னோட சொந்த Loginல பின்னுட்டம் போட ஆரம்பிட்சுடேன்

T.V.Radhakrishnan said...

நல்ல பதிவு...பாராட்டுகள்

Mahesh said...

வர வர நல்ல நல்ல சீரீசான பதிவுக போடறீங்க... வாழ்க !!

நசரேயன் said...

/*
Anonymous said...
எதிர்வரும் தேர்தலில் காங்கிரசை தோற்கடிப்பதன் மூலம் 7கோடி தமிழர்களும் தமது எதிர்ப்பை காட்டலாம், கூட்டு சேர்பவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுக்கலாம்

*/
என் விருப்பமும் அதுதான்

நசரேயன் said...

/*
Thooya said...
வெறுப்பா இருக்கு...
*/
நடக்கிறது அப்படித்தான் இருக்கு

நசரேயன் said...

/*
T.V.Radhakrishnan said...
நல்ல பதிவு...பாராட்டுகள்
*/
நன்றி ஐயா

நசரேயன் said...

/*
Mahesh said...
வர வர நல்ல நல்ல சீரீசான பதிவுக போடறீங்க... வாழ்க !!
*/
ஒரு மாறுதலுக்கு இந்த பதிவு தேவை இருக்கு

நசரேயன் said...

/*
பழமைபேசி said...
வில்லன்ங்றது யாரு? குடுகுடுப்பையாரா அல்லது தளபதியா?? எதுக்கு இப்பிடி???

*/
ஐயாவுக்கு இப்ப வில்லன் யாருன்னு தெரியுதா?

KaveriGanesh said...

அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......


அன்புடன்

காவேரி கணேஷ்

kaveriganesh.blogspot.com

அத்திரி said...

//அட போங்கையா நீங்களும் உங்க அரசியலும்//

இதுதான் சரியான பாயிண்ட் அண்ணாச்சி

ராஜ நடராஜன் said...

//நீச்சல் அடிச்சி போய் இருந்தாலே இந்நேரம் இலங்கை போய் சேர்ந்து இருப்பார் பிரணாப் முகர்ஜி.//

சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.

Anonymous said...

நல்ல பதிவு...பாராட்டுகள்

நசரேயன் said...

/* அத்திரி said...
//அட போங்கையா நீங்களும் உங்க அரசியலும்//

இதுதான் சரியான பாயிண்ட் அண்ணாச்சி*/
வாங்க அத்திரி,கருத்துக்கு நன்றி

நசரேயன் said...

/*
//நீச்சல் அடிச்சி போய் இருந்தாலே இந்நேரம் இலங்கை போய் சேர்ந்து இருப்பார் பிரணாப் முகர்ஜி.//

சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.
*/
உண்மைதான்

நசரேயன் said...

/* கடையம் ஆனந்த் said...
நல்ல பதிவு...பாராட்டுகள்
*/
நன்றி கடையம் ஆனந்த்

நசரேயன் said...

/*

வில்லன் said...
இதை நான் வன்மையா கண்டிகறேன். ஒரு பிரதமர கொன்ன அமைப்புக்கு மாம் நாடு துணை போகவே கூடாது. ஏன்னா அது நாம ஊட்டி வளர்த்த கடா நம்ம மார்பிலேயே பாயுது. என்னதான் பாம்புக்கு பல ஊத்தி வளத்தாலும் அது தன் கொந்த காட்டிடும்னு சொன்னது சரிதான். திருந்தாத ஜென்மங்கள்.


வில்லன் said...
ஐய நான் தான் 2வது 3வது
சீ போங்க said...
ராசா நீ கதகூட (அதுவும் இவ்ளோ நல்லா) எழுதுவியா. சொல்லவே இல்லயே. இருக்கட்டும் இருக்கட்டும்
*/
தொடர்ந்து ஆதரவு தரும் வில்லன் அவர்களுக்கு நன்றி, தலைவரே நன்றி சொல்லியாச்சு போதுமா?

RAMYA said...

பதிவு நல்லா இருக்கு நசரேயன்

இதில் இந்தியாவின் பங்கு அதிகம் வேண்டும் இது என் தனிப்பட்ட கருத்து

RAMYA said...

தாமதத்திற்கு மன்னிக்கவும்
better never than late???

தாரணி பிரியா said...

//RAMYA said...
பதிவு நல்லா இருக்கு நசரேயன்

இதில் இந்தியாவின் பங்கு அதிகம் வேண்டும் இது என் தனிப்பட்ட கருத்து
//

ரம்யாவோட கருத்துதான் என் கருத்தும்

மெல்போர்ன் கமல் said...

நண்பரே! நீங்கள் கூறும் கருத்துகள் நியாய பூர்வமானவை... நீதி ஒரு நாள் வெல்லும். தொடருங்கள்.

karunanithy said...

when the incident happen, before the election. he is normal person.
If they kill manmohan ur comments got value Ms nasareyan,

S.R.ராஜசேகரன் said...

\\அட போங்கையா நீங்களும் உங்க அரசியலும்\\எப்படித்தான் வெக்கம் இல்லாமல் பல்ல பல்ல காமிச்சிகிட்டு பொழப்ப ஒட்டுரான்களோ

S.R.ராஜசேகரன் said...

இதுல காங்கிரஸ் காரனுக இருக்கானுகளே இவங்கதான் என்னமோ நாட்ட காப்பாத்த பொறந்தவங்க மாதிரி இத வச்சி பொழப்பு ஓட்ட பாக்கிறாங்க
.

PoornimaSaran said...

அட போங்கையா நீங்களும் உங்க அரசியலும்..

PoornimaSaran said...

நாங்க வந்திட்டோம் இல்ல....

நசரேயன் said...

/*RAMYA said...
பதிவு நல்லா இருக்கு நசரேயன்

இதில் இந்தியாவின் பங்கு அதிகம் வேண்டும் இது என் தனிப்பட்ட கருத்து

*/
உண்மைதான் ரம்யா
/*
January 10, 2009 3:52:00 AM EST
RAMYA said...
தாமதத்திற்கு மன்னிக்கவும்
better never than late???
*/
லேட்டா வந்தாலும் latest ta வந்துடீங்க

நசரேயன் said...

/*S.R.ராஜசேகரன் said...
\\அட போங்கையா நீங்களும் உங்க அரசியலும்\\எப்படித்தான் வெக்கம் இல்லாமல் பல்ல பல்ல காமிச்சிகிட்டு பொழப்ப ஒட்டுரான்களோ

January 10, 2009 6:01:00 PM EST


S.R.ராஜசேகரன் said...
இதுல காங்கிரஸ் காரனுக இருக்கானுகளே இவங்கதான் என்னமோ நாட்ட காப்பாத்த பொறந்தவங்க மாதிரி இத வச்சி பொழப்பு ஓட்ட பாக்கிறாங்க
*/
உண்மைதான் மாப்பிள்ளை

நசரேயன் said...

/*
தாரணி பிரியா said...
//RAMYA said...
பதிவு நல்லா இருக்கு நசரேயன்

இதில் இந்தியாவின் பங்கு அதிகம் வேண்டும் இது என் தனிப்பட்ட கருத்து
//

ரம்யாவோட கருத்துதான் என் கருத்தும்

*/
நன்றி தாரணி பிரியா

நசரேயன் said...

/*
மெல்போர்ன் கமல் said...
நண்பரே! நீங்கள் கூறும் கருத்துகள் நியாய பூர்வமானவை... நீதி ஒரு நாள் வெல்லும். தொடருங்கள்.
*/
கண்டிப்பாக நீதி வெல்லும் ஒருநாள்

நசரேயன் said...

/*PoornimaSaran said...
அட போங்கையா நீங்களும் உங்க அரசியலும்..

January 12, 2009 1:59:00 AM EST


PoornimaSaran said...
நாங்க வந்திட்டோம் இல்ல....
*/
வாங்க PoornimaSaran

Anonymous said...

குளிர்காய்ந்தாலும் பராவாயில்லை....... நெருப்பையுமல்லே மூட்டினம்

Anonymous said...

திர்வரும் சொற்ப காலங்களில் மாபெரும் மனிதப்பேரவலம் நிகழவிருக்கின்றது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படவிருக்கின்றார்கள். இது சுனாமியை விட பன்மடங்கு மோசமானதாக இருகும். இன்று வரை இலங்கைப் படைகள் தாம் பிடித்துவிட்டதாக கூறப்பட்ட பிரதேசங்கள் குறித்து இராணுவக் கண்ணோட்டத்துடன் அணுகிக்கொண்டிருக்கின்றனர். இலங்கை படைகள் ஒவ்வொரு பிரதேசங்களும் பிடித்தவுடன் வெளிவிடும் வரைபடங்கள் ஊடாக இராணுவத்தின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றத��
�. தமிழ் மக்களும் அவ்வாறுதான் பார்த்துக்கொண்டிருக்கின்றர��
�. ஆனால் மக்கள் அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் வழித்து ஒரு சிறுவட்டத்துள் நகர்த்தப்பட்டுள்ளனர். இந்த சிறு வட்டத்துள் தான் இனி யுத்தம் நடக்கவிருக்கின்றது. இந்த வட்டத்துள் இனி விழும் ஒவ்வொரு குண்டும் பல நூறு உயிர்களை காவுகொள்ளப்போகின்றது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எவரும் விதிவிலக்கின்றி சிதறி சின்னபின்னமாகப் போகின்றார்கள். இதுவரை காணாத கோர தாண்டவம் இனி அரங்கேற இருக்கின்றது.

யுத்தம் முடிவுக்கு வருவதையே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. இதனால் இனிமேல் நடக்கவிருக்கும் மனிதப்பேரவலம் குறித்து முதலில் சர்வதேசம் அலட்டிக்கொள்ளப்போவதில்லை. எல்லாம் முடிந்தபின்னர் கண்டன அறிக்கைகள் விடலாம் அல்லது இரணுவம் பெற்ற வெற்றிகளில் அது மறைந்து போகலாம். யுத்தம் முடிவுக்கு வந்த கதையே இனி பேசப்படலாம்.

சுமார் ஒருலட்சம் மக்கள் யுத்தம் நடக்கவிருக்கும் பிரதேசத்தில் அகப்பட்டு இருப்பதாக இலங்கை அரசு பிரச்சராம் செய்கின்றது. அகப்பட்டு இருப்பது மூன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள். இனி நடக்கவிருக்கும் யுத்தத்தில் குறைந்தது முன்று லட்சம் மக்கள் பலியாவார்கள் என்பதே இலங்கை அரசின் கணக்கு. அவ்வாறு நடப்பதற்குரிய சந்தர்ப்பங்களே அதிகம்.

இப்போது தமிழர்வசம் இருக்கும் மக்களால் நிரம்பி வழியும் மிகச் சிறு பிரதேசத்தில் இருந்து மாபெரும் எதிர்ப்பு தாக்குதல் நடக்கும். அலையாய் படைகள் கிழம்பும். ஸ்டாலின் கிராட் போல் ஒரு பெரும் யுத்தம் நடக்கும் என்றெல்லாம் கணக்கு போட்டபடி தமிழ் மக்கள் வழிநடத்தப்படுகின்றனர். இந்தக் கணக்குகளை தமிழ் மக்கள் போடுவதை விட பல மடங்கு அதிகமாக இலங்கை படைகள் மற்றும் அதை வழிநடத்தும் சர்வதேச இராணுவ ஆலோசகர்கள் போட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதும் உண்மை. எந்த யுத்தம் எப்படி நடந்தாலும் எந்தவித எதிர்பார்ப்புக்கும் அப்பால் மக்கள் இங்கே அழிக்கப்படப்போகின்றார்கள் என்பதே உண்மை. ஈழத்தமிழர் வரலாற்றல் என்றுமில்லாதவாறு மனிதப்பேரவலம் ஏற்படப்போகின்றது.

எமது உறவுகளுக்காக இறுதியாக தெருவில் இறங்கி போராட வேண்டிய காலகட்டம் இது. இன்றய காலகட்டத்தில் யுத்தம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் இல்லாவிடில் என்னுமொருநாள் வீதியில் இறங்கி மகிந்தாவுக்கும் பென்சேகாவுக்கும் தண்டனை வாங்கி கொடுப்பது குறித்து போராடுவதில் எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை.

இராணுவம் புலிகள் அவர்களது இராணுவ நடவடிக்கைகள் என்பனவற்றில் தமிழ் மக்கள் சிக்குப்படாமல் கொல்லப்படப்போகும் மக்களை கவனத்தில் எடுப்பது அவசியமானது. இந்த அவலம் நடக்கப்போகின்றது என்று தெரிந்தும் தமிழர்கள் பாரமுகமாக இருந்தால் அது கொலைக்கான அனுமதியாகவே அமையும். இந்த மக்களை நோக்கி சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அனுப்பப் படுதல் அவசியமானது. அதற்கான கோரிக்கைகள் போராட்டங்கள் அவசியமானது. தமிழன் சக தமிழன் சாகும் தருணத்தில் காப்பாற்ற இது தான் கடைசி சந்தர்ப்பம்.

இலங்கையின் கிழக்கில் பல தமிழ் மக்கள் தினமும் கொல்லப்படுகின்றனர். கடந்த வாரம் மட்டும் யாழ்பாணத்தில் எழு சடலங்கள் கரை ஒதுங்கிஉள்ளன. இலங்கை ராணுவம் பிடித்து செல்லும் மக்கள் கொல்லப்பட்டு கடலில் வீசப்படுவதாக வந்த செய்தி கரை ஒதுங்கும் சடலங்களினூடாக உண்மை ஆகின்றது. இப்போது வன்னியில் சிக்குப்பட்டுள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றாலும் நிச்சயம் கொல்லப்படுவார்கள். புலிகள் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்த இந்த மக்களை கொல்வது அரசின் பிரதான தெரிவாகவே இருக்கும். கடந்த காலத்தில் சிங்கள கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிய போது கிளர்ச்சியாளர்களின் குடும்பங்கள் உறவினர்கள் அனைவரையும் கொன்றொழித்தது அவர்கள் தேர்வாக இருந்தது. இப்போது யுத்த பூமியில் சிக்குப்பட்டுள்ள மக்களுக்கு மரணம் ஒன்றே எவ்வகையிலும் முடிவாக உள்ளது. உலகத் தமிழர்கள் இந்த மக்களை காப்பாற்றும் பொருட்டு யுத்தத்தை நிறுத்த உடனடியாக குரல் கொடுக்க வேண்டிய இறுதிக் கட்டம் இது.

நசரேயன் said...

/*கவின் said...
குளிர்காய்ந்தாலும் பராவாயில்லை....... நெருப்பையுமல்லே மூட்டினம்
*/
உண்மைதான் கவின்