Thursday, February 5, 2009

ஈழப் பிரச்சனையில் அரசியல் ஆஸ்கார் யாருக்கு?

தமிழன்த்தலைவர் தன் மானத்தலைவர் என்று தன்னை அடையாளம் கட்டி கொண்டுஇருக்கும் அன்பின் தலைவருக்கு, இந்திய ரயில் தடம் புரளும் நேரத்தை வேண்டுமானாலும் எழுதில் கண்டு பிடிக்கலாம், ஆனால் உங்கள் நாக்கின் தடம் எப்படி, எப்போது புரளும் என்பது தமிழ் அன்னைக்கும் தெரியாது.ஈழ பிரச்சனையில் உங்கள் நாவின் ருத்திர தாண்டவம் உங்களை

தமிழ் இனத் தலைவரா?
குலத்தை கெடுக்கும் கோடரிக் காம்பா!

என்ற சிந்தனையை தூண்டுகிறது

கழகப்பணி,கட்சிப்பணி இவைகளில் எல்லாம் தன்னிறைவு அடைந்த நீங்கள் குடும்ப பணிகளில் தீவிரமாக ஈடு படுவதிலே இருந்து, ஒரு நல்ல குடும்பத் தலைவன் என்பதை உணர்த்தி உள்ளீர்கள்.நீங்கள் உறுவாக்கிய நடிகர்களை விட நல்ல சிறப்பாக நடிக்க முடியும் என்பதையும் நிகழ்கால நாடகங்கள் நல்ல முறையில் வெளிப்படுத்துகின்றன.

உங்கள் வார்த்தைகளில் பொன் மொழி உதிராதா என்று காத்திருந்த எங்களுக்கு,எம் இன மக்களுக்கும்

நான் என்றால் உதடுகள் ஒட்டாது
நாம் குடும்பம் என்றால் உதடுகள் ஒட்டும்

என்ற புது மொழியை ௬றி உள்ளீர்கள்.பகுத்தறிவை மூடி விட்டு நீங்கள் பகிர்ந்து அளிக்கும் அறிவே அறிவு என இருந்த முகத்தில் கரி பூசிய நீங்கள், எங்கள் முதுகில் குத்தும் முன் உங்கள் ஆசான் பெரியார் ௬றிய பகுத்தறிவை திறக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை.

ஐயா,உங்களோடு தோள் கொடுத்து நிற்கும் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமான கோஸ்டிகள் வைத்து இருக்கும் நாட்டைக்காக்கும் நல்லவர்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஒரு வசனத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இன்னும் 2000 வருஷம் காலத்தாலும் அவர்கள் வசனம் மாறப்போவதில்லை.
அவர்களிடம் இருந்து ஆட்சியை பறித்து மீண்டும் மீண்டும் உங்களை அரியணையில் ஏற்றி வைத்தும், நீங்கள் அவர்களுடன் இணைந்து உதிர்த்த பொன்மொழி தான்

"அரசியலில் நிரந்தர நம்பனும், இல்லை எதிரியும் இல்லை"

இப்படி நீங்கள் சிரிக்கும் பொது சிரித்தோம், அழும் போது அழுதோம், இப்போது நாங்கள் மரண ஓலமிட்டு அழுகிறோம் அது உங்களுக்கு குழாய் அடிச் சண்டையாக இருக்கிறது.

தமிழனாக பிறந்த உங்களுக்கு உணடர்வுகள் செத்துப்போன நிலையில் நானும் ஒரு தமிழச்சி தான் என்று தமிழ் இன துரோக அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் அம்மையாருக்கு அவர் நடத்தும்/ஆளும் கட்சியை தோற்றுவித்தவர் உயிரோடு இருந்தால் இவரை காட்சியில் இருந்து எப்போதோ தூக்கி எறிந்து இருப்பார், அவர் இந்நேரம் நெடுந்தொடர்களில் அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டு இருப்பார்.

தமிழக அரசியல் தலைவர்களை தரம் கெட்ட முறையில் வசை பாடும் போது நீங்க என்னவோ உகாண்டா அதிபர் போல தனக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நீங்க நடித்த நடிப்பு அபாரம்

இவ்வளவு சிறப்பாக நடிக்க தெரிந்த உங்களுக்கெல்லாம் திரைத்துறையின் விருதுகளை கொடுத்தால் அந்த விருதுக்குத்தான் அவமானம், அதனாலே உங்கள் எல்லோருக்கும் அரசியல் ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.


36 கருத்துக்கள்:

பழமைபேசி said...

Thalapathi vaazhka!

S.R.Rajasekaran said...
This comment has been removed by the author.
S.R.Rajasekaran said...

நான் தான் செகண்டா

S.R.Rajasekaran said...

வாங்க பழமைபேசி

S.R.Rajasekaran said...

\\நான் என்றால் உதடுகள் ஒட்டாது
நாம் குடும்பம் என்றால் உதடுகள் ஒட்டும்\\கண்டிப்பா அவருக்கு அவர் குடும்பந்தான் பெருசு .தமிழ் என்பது சும்மா ஊறுகாய் மாதிரி

S.R.Rajasekaran said...

\\தமிழ் இனத் தலைவரா?
குலத்தை கெடுக்கும் கோடரிக் காம்பா\\


தமிழ் இனத்தை பிளக்க வந்திருக்கும் கோடரி காம்பு

S.R.Rajasekaran said...

\\\கழகப்பணி\\\


கழகப்பணி என்பதை விட குடும்பபணி என்பதே முக்கியம்

இராகவன் நைஜிரியா said...

என்னத்த சொல்லி, என்னத்த செஞ்சு...

ஹ்ம்...

இராகவன் நைஜிரியா said...

தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சுங்க...

ராஜ நடராஜன் said...

கலைஞருக்கே ஆஸ்கர் என்ற முன் முடிவோட வந்தா நீங்க அதுக்கு முந்தி இந்தா பிடி!இந்தா பிடின்னு அவருக்கே எல்லாத்தையும் கொடுத்திட்டீங்க!

எல்லாரும் கலைஞரையே காய்ச்சுவதால் சந்துல சிந்து பாடுவதற்கு ஜெயலலிதாவிற்கும் சந்தர்ப்பம் கொடுத்து விட்டு கலைஞரைக் கோபிக்கும் உரிமை கூட இல்லாத கால கட்டத்திற்கு தமிழ்நாடு போகும் ஆபத்தும் வருங்கால தேர்தல் மூலம் உள்ளது.தமிழர்களின் நிலை இருதலைக் கொள்ளி எறும்புதான்.

நல்லதோ கெட்டதோ ஒரு புது முயற்சியாக திருமாவளவனை முன்னிறுத்தி,ராமதாஸ்,வை.கோ,நெடுமாறன் கூட்டணி உருவாகும் சாத்தியம் அமையுமானால் தமிழகத்தின் மாற்றங்களுக்கு முன் படியாக அமையும்.குறுகிய காலம்,இடம் பகிர்வு,அதனால் ஏற்படும் உட்பூசல்,பொருளாதாரப் பின்ணனி போன்ற காரணிகள் சாதகமாக இல்லாமல் இருந்தாலும் மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு என்ற அருமையான அஸ்திரம் சாதகமில்லா காரணிகளைப் பின் தள்ளி விடும்.

தி.மு.க,அ.தி.மு.க,காங்கிரஸ்,பி.ஜே.பி களுக்கு மாற்றுக் களம் அமைய அருமையான தருணம்.சந்தர்ப்பங்களை கோட்டை விட்டு விட்டால் பேட்டை ரவுடிகள் தி.மு.க,அ.தி.மு.க விடமே வழக்கம் போல் குப்பை கொட்ட வேண்டியதுதான் சமுதாய சிந்தனை கொண்ட,தன்னலமில்லாத மாற்றுத் தலைமைகள் அமையும் வரை.

திருமா,ராமதாஸ்,வை.கோ யோக்கியமா என கேள்வி வைப்பவர்களுக்கு என்னதான் பதிவர்கள் சோ பற்றி விமர்சனம் வைத்தாலும் அவரது சில விமர்சனங்கள் பாராட்டுக்குரியது.

உதாரணமாக சோ சொன்ன ஒரு கொலைகாரன்,கைதி,ஜேப்படி திருடன் மூவரில் யாருக்கு ஓட்டுப் போடலாமுன்னு யோசித்தால் ஜேப்படி திருடனே பரவாயில்லைங்கிற மாதிரியான அரசியல் சூழலில் ஜேப்படிகாரர்களுக்காவது வாக்களிக்கலாமென்ற பார்வைதான்.

பதிவாகப் போடுவதற்கு வைத்திருந்த எண்ணங்களை இங்கே பின்னூட்டமாக பதிவு செய்கிறேன்.

கவின் said...

//தமிழக அரசியல் தலைவர்களை தரம் கெட்ட முறையில் வசை பாடும் போது நீங்க என்னவோ உகாண்டா அதிபர் போல தனக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நீங்க நடித்த நடிப்பு அபாரம்//
அற்புதம்....

கவின் said...

சிறந்த கண்டுபிடிப்பிற்கான... நேபல் பரிசை விட்டுட்டிங்களே..... பொதுகுழு கூடி ஈழம்தொடர்பாக.. மத்திய அரசின் நிலைப்பாடு காணது என்று கண்டுபிடித்ததற்கு......

கவின் said...

// இராகவன் நைஜிரியா said...
என்னத்த சொல்லி, என்னத்த செஞ்சு...

ஹ்ம்...
// இதை நானும் வழிமொழிறனுங்க...

S.R.Rajasekaran said...

ஒரு வழிய ஒட்டு போட்டாச்சி

"அரசியலில் நிரந்தர நம்பனும், இல்லை எதிரியும் இல்லை"


ஏன்னா எங்களுக்கு வெக்கம், மானம், சூடு, சொரணை, ஏதும் கிடையாது

S.R.Rajasekaran said...

\\அதனாலே உங்கள் எல்லோருக்கும் அரசியல் ஆஸ்கார் விருது கொடுக்கலாம்\\


அதுக்கு மேல எதுவும் விருது இருந்தா கொடுங்க

S.R.Rajasekaran said...

தமிழ் இனத்தை காக்க ஒரு தமிழன் இருந்தான்னு நினைச்சேன் ஆனா அவனும் ஒரு அரசியல் வாதி ன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் ....?

அடத்தூ ஈன பிறவிகளே

S.R.Rajasekaran said...

\\\தமிழக அரசியல் தலைவர்களை தரம் கெட்ட முறையில் வசை பாடும் போது நீங்க என்னவோ உகாண்டா அதிபர் போல தனக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நீங்க நடித்த நடிப்பு அபாரம்\\\


எங்க ஊழல எப்படி மறைக்கிறது .உன் பேச்சை கேட்டுட்டு தமிழ் தான் என் உயிர் அப்படின்னு பாட்டு பாடினா நாங்க தெருவுல நிக்க வேண்டியதான்

S.R.Rajasekaran said...

\\இப்போது நாங்கள் மரண ஓலமிட்டு அழுகிறோம் அது உங்களுக்கு குழாய் அடிச் சண்டையாக இருக்கிறது.\\
அட ஒரு ஆயரம் பேரு செத்தாதான் நாங்க சவுண்ட் குடுத்தா ஒரு இது இருக்கும் .நாப்பது அம்பது பேரு செத்தா எங்க கட்சிக்கே மரியாதை இல்ல

S.R.Rajasekaran said...

\\கழகப்பணி,கட்சிப்பணி இவைகளில் எல்லாம் தன்னிறைவு அடைந்த நீங்கள்\\\இனிமேல் சுருட்டுரதுக்கு ஒன்னும் இல்ல

S.R.Rajasekaran said...

பெரியார் ௬றிய பகுத்தறிவை திறக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை.


ஏம்பா கூட்டணி நல்லா போய்கிட்டு இருக்கும் பொது அவர பத்தி பேசி மூட் அவுட் ஆக்கிர

S.R.Rajasekaran said...

\\நானும் ஒரு தமிழச்சி தான் என்று தமிழ் இன துரோக அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் அம்மையாருக்கு\\


தப்பு அது தமிழ் கட்சி அப்படிங்கிற பேரோட இருக்குது .அதுவும் போக லூசு தனமா எதாச்சும் சொல்லுற ஆளுகளை நாம கணக்கிலே எடுத்துக்க பிடாது .

அறிக்கை விட்டே பொழப்பு நடத்தும் சாமி குருப்ப்ள உள்ளவங்கள கிண்டல் பண்ணினா ,அவங்களே பெரிய ஆளா நினைசிக்குவாங்க

S.R.Rajasekaran said...

அம்மா :விடுதலை புலிகள் என்னை கொலை செய்துவிடுவார்கள்

(அம்மா இப்போ தமிழகம் முழுவதும் அவங்க பேச்சுதான் இருக்குது)

உடனே பேட்டியை மாற்றி எழுது :விடுதலை புலிகள் தமிழ் இனத்தை காக்க பிறந்த வர்கள் .


மேடைலே கூத்து கட்டினவளுக்கெல்லாம் என்ன தெரியும் தமிழ் உயிர் பற்றி

S.R.Rajasekaran said...

கடைசியா ஆஸ்கர் விருதுக்கு முதலில் பரிந்தரை செயப்படும் நபர் :தங்க தாமரை ,தமிழகத்தின் விடிவெள்ளி ,மத மாற்ற தடைச்சட்டம் கொண்டுவந்த மேரி மாதா அம்மா செல்வி அவர்களுக்கு முன்னுரிமை

இரண்டாவதாக தர்மம் தலை காக்கும் என்று கூட்டணி தர்மத்தையே கதியென்று காக்கும் அய்யா அவர்களுக்கு இரண்டாவது முன்னுரிமை

S.R.Rajasekaran said...

ஆனால் உங்கள் நாக்கின் தடம் எப்படி, எப்போது புரளும் என்பது தமிழ் அன்னைக்கும் தெரியாதுஏய் அது யாரு தமிழ் அன்னை .தூக்கு அவளை குண்டர் சட்டத்தில் .நாளபின்ன நமக்கு பொட்டியா வந்துரகூடாது இல்லியா

Mahesh said...

ஹய்யோ ஹய்யோ... அந்தாளு கிட்டயெல்லாம் போய் கேள்வி கேட்டுக்கிட்டு... போன வாரந்தான் பாவம் அவரோட பாராட்டு விழாவுல 3 1/2 மணி நேரம் தமிழர் தாக்கப்படறாங்களேங்கற வேதனையோட உக்காந்து தனக்கு அளிக்கிற பாராட்டை ஏத்துகிட்டாரு. அம்புட்டு நல்லவரு. அவரைப் போயி...

ராவணன் said...

ஆஸ்கார் எதற்கு?கோமாளி அரசியல்வாதியாக நடித்ததற்கா?

அ.மு.செய்யது said...

//இவ்வளவு சிறப்பாக நடிக்க தெரிந்த உங்களுக்கெல்லாம் திரைத்துறையின் விருதுகளை கொடுத்தால் அந்த விருதுக்குத்தான் அவமானம், அதனாலே உங்கள் எல்லோருக்கும் அரசியல் ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.
//

சரியாகச் சொன்னீர்கள்..

அ.மு.செய்யது said...

செவுட்டுல அடிச்ச மாதிரி இருந்துச்சு..

Subbu said...

என்னமோப்பா. இவனுங்கல திருத்த முடியாது :((

விஜய் said...

கலைஞரை வைந்தது போதுமே. பாவம் அவர் என்ன செய்வார். கொள்கைக்கும் பதவிக்கும் வாரிசுகளின் சுகத்திற்கு நடுவிலும் அகப்பட்டுக் கொண்டு முழி பிதுங்க உட்கார முடியாமல் முதுகுவலியால் அவதி என்று ஓய்வெடுக்கப் போய்விட்டார்.

எனக்கு இவரைப் பார்க்கையில் திருதராஷ்டிரன் தான் ஞாபகத்துக்கு வருகிறார். அவராவது பிறவிக் குருடு. இவர், கண்ணைக் கட்டிக் கொண்டு குருடன் போலாகிவிட்டார்.

So let us stop bashing Karunanidhi :-)

கடையம் ஆனந்த் said...

:-)

கிரி said...

சலித்து விட்டது :-(

பாண்டியன் said...

கருநாக நிதியின் இன்றைய அறிக்கை யும் நமது பார்வையும்...

//ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும், தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கூட்டி அந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைத் துறந்திட தி.மு.க. தவிர வேறு கட்சிகள் முன்வராத நிலையில் அந்த தீர்மானம் கிடப்பிலே போடப்பட்டது.//
ஆமாம் தாங்கள் பதவி விலகி இருந்த்தால் பதவி ஆசை உள்ள கட்சிகள் எவை என தமிழக மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கலாம் அல்லவா?ஏன் செய்யவில்லை..


//அடுத்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு நடைபெற்ற "மனிதச் சங்கிலி'' நிகழ்ச்சியை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும் புறக்கணித்தே விட்டன//
எப்படி தலைவா காங்கிரஸ் கம்முனாட்டிகள் பத்தி நாசூக்கா தவிர்கிறீர்கள்?

//நமது வேண்டுகோளின் படி இந்திய மத்திய அரசு, எடுத்த முயற்சிகளால் ஐ.நா. மன்றம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் என அந்த அறிவிப்புகளை//
தூத்தேறி இதுதான் அடுத்தவன் பெத்ததை எனக்கு பிறந்தது என்று சொல்வதா?ஈழ தமிழர்கள் அவனவன் கடும் குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் ஐ.நா சபை முன்பும் பிற நாடுகளின் தூதரங்கள் முன்பும் போராடியதால் வந்தது.. இவ்வாறான அறிவிப்புகள்

//அதே நேரத்தில் போற்றத்தக்க அளவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன.//

சோனியா புடவைக்குள் பா.சி ஒளிந்திருந்தாலும் ஒரு தமிழராக கிஞ்சித்தேனும் உணர்வு வந்து சொல்லிருப்பார்.. ஆனால் சிறிது நேரத்திலே பேட்டி அளிக்கும் குள்ள புஷ்கான் பிராணாப்பு உயிர்பலி இல்லாமல் சண்டை போட வேண்டுமாம்! அப்பவும் அவன் போரை நிறுத்த சொல்லவில்லை? இதற்கு உமது வக்காலத்து வேறு?

//இந்திய மத்திய அரசும் வேடிக்கை பார்க்கவில்லை என்ற நிலை உணர்ந்து விரைவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும், இந்தப் பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை//
வேடிக்கை தான் நாங்கள் பார்த்தோமே! தாம்பரத்தில் இருந்த்து சிங்கள ராணுவத்தை பெங்களூர் சென்று தமிழரை கொல்ல பயிற்சி பெற்றதை! ஆமாம் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை ...அதாவது வழக்கம் போல கேனை தமிழர்களா... மறுபடியும் காங்கிரசுக்கு வாக்களிக்க சொல்லுகிறீர்கள்!இதெல்லாம் ஒரு பொழப்பு ..உங்கள் அன்னை சோனியா பாதுகாப்பாக சென்னைக்கு பிரசாரத்திற்கு வருவாரா? தமிழக மக்கள் கொதித்து போய் உள்ளார்கள் .. தூத்தேறி..

அன்புமணி said...

மூத்தவருங்கிறதால அவருக்கு முதல்ல கொடுத்திடலாம். ஆனா வரிசையில எல்லாரும் நிக்கிறாங்கப்பா...ம்... என்னத்த சொல்ல...

Tharuthalai said...

எதிரிக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று துரோகிக்கு துணை போகக் கூடாது.
கயவன் கருணானிதி - துரோகி
வப்பாட்டி ஜெயலலிதா - எதிரி

இதுல சந்துல சிந்து பாடுற சோமாறிகள், கொட்டைதாங்கிகள் தொல்லை வேற

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)

சந்தனமுல்லை said...

//இவ்வளவு சிறப்பாக நடிக்க தெரிந்த உங்களுக்கெல்லாம் திரைத்துறையின் விருதுகளை கொடுத்தால் அந்த விருதுக்குத்தான் அவமானம், அதனாலே உங்கள் எல்லோருக்கும் அரசியல் ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.//

:-)) நல்ல முடிவு!