Thursday, January 8, 2009

அம்மா

அந்த காலை நேரத்திலே சேகர் வீடு பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது, அனைவரும் சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டு இருந்தனர்.வீட்டின் அழைப்பு மணி அடித்தது, உள்ளிருந்து சேகர் மாமியார் வந்து எட்டி பார்த்து விட்டு சென்று விட்டாள், அவள் சென்று சில நேரம் கழித்து மீண்டும் மணி ஒலித்தது, சேகர் மாடி படியிலே இருந்து இறங்கி வந்தான், வெளியிலே நின்று கொண்டு வாசலை நோக்கி கொண்டு இருந்தவளை கண்டான்.

வேகமா வாசலுக்கு ஓடி கதவை திறந்து "அம்மா, நீங்க எப்ப வந்தீங்க"

"நான் அப்பவே வந்துட்டேன்"

"சம்மந்தி அம்மா உன்கிட்ட சொல்லலியா?"

"சம்மந்தியம்மா எப்படி சொல்லுவாங்க நீங்க வந்ததை" என்று மனதில் நினைத்து கொண்டு.

ஆமா சொன்னாங்க..சொன்னங்க

"ஏன் ராசா ஒரு கடிதாசு ௬ட நேரம் கிடைக்கலையா, நானும் எவ்வளவு கடிதாசி போடுறது, நாம் பாண்டி வாத்தியாரு உன் புள்ளை பதிலே போட மாட்டேங்க ன்னு அடிக்கடி உன்னை குறை சொல்ல ஆரமிச்சுட்டாரு, அதனாலே நானும் அவரை கடிதாசி எழுத சொல்லுறது இல்லை"

"வேலை கொஞ்சம் அதிகம் கடிதம் எழுத நேரம் கிடைக்க வில்லை , சரி அதை விடு நீ எப்படி இருக்க"

"நல்லா இருக்கன் ஐயா, மருமக புள்ளைய எங்க பாத்து ரெம்ப நாள் ஆச்சு"

"அவ நல்லா இருக்க, நீ இந்த நாற்காலியிலே உக்காரு, நான் போய் ௬ட்டிட்டு வாரேன்"

என ௬றிவிட்டு மாடிக்கு ஓடினான், அங்கே தலை சீவி கொண்டு இருந்த அவன் மனைவியை பார்த்து,

"மிருதுளா எங்க அம்மா வந்து இருக்காங்க"

"வந்தா அதுக்கு நான் என்ன செய்ய"

"என்ன இப்படி பேசுற உன்னை பார்க்கணும் ரெம்ப ஆசை படுறாங்க"

"இப்ப என்னால வர முடியாது, நானே என் நெக்லஸ் காணுமுன்னு தேடிக்கிட்டு இருக்கேன், நீங்க அம்மா, ஆட்டு குட்டின்னு"

இதற்க்கு மேல் அவளிடம் பேசி பலன் இல்லை என்பதை உணர்ந்து, வசதி உள்ள வீட்டிலே வசதி இல்லாதவன் பெண் எடுத்தால் என்ன ஆகும் என்பதை நேரடியாக அனுபவித்து வரும் சேகருக்கு அவள் பதில் ஒன்றும் ஆச்சரியம் தரவில்லை

தான் படிக்கா விட்டாலும் தன் பிள்ளை படிக்க நல்ல முறையில் வாழ வேண்டும் என ஆசை பட்ட ஒரு ஏழை தாயின் கனவு நிறை வேறியது,கனவுகளே இல்லாமல் இன்றும் அவள் அதே நிலையில் தான் இருக்கிறாள்.

கிழே இறங்கிய சேகர் தன் தாய் செருப்புகளை வைத்திருக்கும் இடத்தில் நிற்பதை கண்டான்.

"ஏன் இங்க வந்து நிக்கிற, உன்னை நாற்காலியிலே தானே உக்கார சொன்னேன்"

"சம்பந்தி அம்மா வந்து, நாற்காலியை துடைக்க போறேன்னு எடுத்து போய்ட்டாங்க, வீடை சுத்தம் பண்ணுரதாலே என்னை இங்க நிக்க சொல்லிட்டாங்க "

"மருமக புள்ள எங்க ராசா"

"அம்மா அவ குளிச்சுகிட்டு இருக்கா"
"சின்ன அம்மா அப்பவே குளிச்சு தயார் ஆகிட்டாங்க" என வேலைகாரியின் பதில் இவன் கேட்காமலே வந்தது.

நிலைமையை புரிந்து கொண்ட சேகரின் தாய்

"அதானாலே என்ன அவ மெதுவா வரட்டும்"

"என்னங்க கொஞ்சம் மேல வாரீங்களா"
என் மாடியில் இருந்து வந்த மிருதுளாவின் குரலை கேட்டு, தன் தாயிடம் அனுமதியை பெறாமல் மாடிக்கு விரைந்தான்

"என்ன நீங்க கிளம்பலையா, அம்மா வந்து இதோட மூனு தடவை கேட்டு போயாச்சு, உங்க அம்மா போயாச்சா?"

"இப்பதானே வந்தாங்க"

"சரி..சரி சீக்கிரம் அனுப்பிச்சிட்டு வாங்க, நான் அதுக்கு அப்புறம் தான் கிழே வர முடியும்"

என்ன செய்வது என்று தெரியாமல் கிழே வந்த சேகர், தன் அம்மாவை காண முடியவில்லை, மீண்டும் நாற்காலி அதே இடத்தில் இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கண்ணில் யாரும் தென் படாததால் வேலை காரியிடம் மெதுவாக விபரத்தை கேட்டான்.

"ஐயா நீங்க மேல போன உடனே பெரிய அம்மா வந்தாங்க, உங்க அம்மாவிடம் எதோ பேசினாங்க, என்ன பேசினாங்கன்னு எனக்கு தெரியலை, அவங்க உடனே போய்ட்டாங்க,அவங்க போற அவசரத்திலே இந்த பையையும் விட்டுட்டு போய்ட்டாங்க "

பையை வாங்கி திறந்து பார்த்த போது தனக்காக பிடித்த முறுக்கும், இனிப்பு வகைகளும் இருந்தது.வீதியில் வந்து எட்டிப்பார்த்தான், வெறிச்சோடி கிடந்தது.


மாமனார் வீட்டில் வசதியாக வாழும் பணக்கார அடிமையே அவன், உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலையில் வாழ்க்கை தரம் வளமாக இருந்தாலும் வாழும் தரம் ௬ ண்டில் அடைபட்ட பறவை போல தான். மறுபடியும் வீட்டிற்குள் வைத்தபோது அனைவரும் வெளியே கிளம்ப தாயராகி விட்டனர்.
காரில் வெளியே செல்லும் போது தூரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தன் தாய் தனியே நிற்பதையும், அவள் தன் ஊருக்கு செல்லும் திசையின் எதிர் திசையில் பேருந்துக்காகவும் காத்து நிற்ப்பதையும் கண்டான்.

பார்த்தவன் மனம் கசந்தது, தன்னை அறியாமலே இரு சொட்டு கண்ணீர் கைகளில் விழுந்தது, கை குட்டையை எடுத்து கொண்டு முகத்தை துடைத்து கொண்டு சிலையாய் அமர்ந்தான்.


19 கருத்துக்கள்:

பழமைபேசி said...

Very nice!

கிரி said...

நசரேயன் நல்லா எழுதி இருக்கீங்க..

அம்மா என்றாலே உருகிடுவேன்..இதை போல கதைகள் மனதை அழுத்துகிறது

குடுகுடுப்பை said...

அனுபவமா? புனைவா?

நசரேயன் said...

/* பழமைபேசி said...
Very nice!
*/

மெய்யாலுமா?


/* கிரி said...
நசரேயன் நல்லா எழுதி இருக்கீங்க..

அம்மா என்றாலே உருகிடுவேன்..இதை போல கதைகள் மனதை அழுத்துகிறது
*/
நன்றி கிரி

/* குடுகுடுப்பை said...
அனுபவமா? புனைவா?
*/
எல்லாம் கனவு தல

கபீஷ் said...

நல்லா இருக்கு! !

Anonymous said...

ரொம்ப நல்ல இருந்திச்சு. என்ன ஒரே நல்ல நெறைய பதிவு. ஆபீஸ்ல வேல ஏதும் இல்லையா? இல்ல ஏதாவது லீவ் எடுத்துட்டு வேற எங்கயாவது இருந்து எழுதுரிங்களா? ஏன்னா வீட்டுல 144 தடை உத்தரவுன்னு கேள்விபட்டேன். உண்மையா

Anonymous said...

///* கிரி said...
நசரேயன் நல்லா எழுதி இருக்கீங்க..

அம்மா என்றாலே உருகிடுவேன்..இதை போல கதைகள் மனதை அழுத்துகிறது
*/
நன்றி கிரி

/* குடுகுடுப்பை said...
அனுபவமா? புனைவா?
*/
எல்லாம் கனவு தல//

இல்ல இல்ல எல்லாமே வீட்டுல நடக்குறதுக்கு எதிர்மாறா எழுதி ஒரு கதை ஆக்கிட்டாரு. நல்ல புள்ள பொலைசுக்கும் எப்படியும்.

Divya said...

உருக்கமான கதை,மனது கணமானது கதையை படித்து முடிக்கையில்:((


எழுத்து நடை மிகவும் அருமை:)

நசரேயன் said...

/*
கபீஷ் said...
நல்லா இருக்கு! !

*/

நன்றி கபீஷ்

/*
வில்லன் said...
ரொம்ப நல்ல இருந்திச்சு. என்ன ஒரே நல்ல நெறைய பதிவு. ஆபீஸ்ல வேல ஏதும் இல்லையா? இல்ல ஏதாவது லீவ் எடுத்துட்டு வேற எங்கயாவது இருந்து எழுதுரிங்களா? ஏன்னா வீட்டுல 144 தடை உத்தரவுன்னு கேள்விபட்டேன். உண்மையா
*/
உண்மைதான் தலைவரே, எல்லாம் அலுவலக வேலைதான்

நசரேயன் said...

/*
Divya said...
உருக்கமான கதை,மனது கணமானது கதையை படித்து முடிக்கையில்:((


எழுத்து நடை மிகவும் அருமை:)
*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திவ்யா

Anonymous said...

// Divya said...
உருக்கமான கதை,மனது கணமானது கதையை படித்து முடிக்கையில்:((


எழுத்து நடை மிகவும் அருமை:)//


எழுத்து நடைன்னா என்ன. எழுதிக்கிட்டே நடக்குறதா

விளக்கம் தேவை

பழமைபேசி said...

//வில்லன் said...

எழுத்து நடைன்னா என்ன. எழுதிக்கிட்டே நடக்குறதா

விளக்கம் தேவை
//


அஃகஃக்ஃஃகா!

நசரேயன் said...

/* வில்லன் said...
// Divya said...
உருக்கமான கதை,மனது கணமானது கதையை படித்து முடிக்கையில்:((


எழுத்து நடை மிகவும் அருமை:)//


எழுத்து நடைன்னா என்ன. எழுதிக்கிட்டே நடக்குறதா

விளக்கம் தேவை
*/
இது என்ன தூத்துக்குடி நக்கலா

RAMYA said...

நசரேயன் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க நீங்கள் கூறி இருப்பது போல் நிறைய இந்த சமுதாயத்தில் நடந்து கொண்டு தான் உள்ளது
அந்த அம்மாவை நினைக்கையில் மனது மிகவும் கனத்து விட்டது

ஏன் அதற்கும் மேலாக போய்
கண்களில் நீர் வந்து விட்டது

நசரேயன் said...

/* RAMYA said...
நசரேயன் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க நீங்கள் கூறி இருப்பது போல் நிறைய இந்த சமுதாயத்தில் நடந்து கொண்டு தான் உள்ளது
அந்த அம்மாவை நினைக்கையில் மனது மிகவும் கனத்து விட்டது

ஏன் அதற்கும் மேலாக போய்
கண்களில் நீர் வந்து விட்டது
*/
வாங்க ரம்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jebastin said...

The mom was standing opposite direction of her hometown. Perhaps she would go somewhere else and return to her home after SOME DAYS and tell her neighbour that she lived in her son's home sophisticated....

is my understanding write?

nice narration!

Aero said...

nalla iruku da...

நசரேயன் said...

/*Jebastin said...
The mom was standing opposite direction of her hometown. Perhaps she would go somewhere else and return to her home after SOME DAYS and tell her neighbour that she lived in her son's home sophisticated....

is my understanding write?

nice narration!
*/
ஆமா அப்படித்தான்

நசரேயன் said...

/* Aero said...
nalla iruku da...
*/
நன்றி