Monday, June 28, 2010

கரடி மலையில் நீச்சல்


அந்த காலத்திலேயே நான் சின்ன பையனா இருக்கும் போது பள்ளி௬டம் விட்டா எங்களோட பொழுது போக்கே நீச்சல் தான், ஊரிலே இருக்கிற எல்லா கிணறு, குளம்,குட்டைகளிலே குளிப்பது தான் வேலை,நீச்ச போட்டியிலே கலந்து கொண்டு பரிசு வாங்கும் அளவுக்கு திறமை இல்லைனாலும், எந்த தண்ணியானாலும் நீந்தி கடந்து விடுவேன்.

கடல் நீச்சல், குளத்து நீச்சல் மற்றும் கிணத்து நீச்சல் அடிச்சி பழகிய எனக்கு பல வருடங்களாக நீச்சல் அடிக்க வாய்ப்பே கிடைக்கலை, நீச்சல் அப்படின்னு 
ஒண்ணு இருக்கிறதையே மறந்து போயிட்டேன்.இவ்வளவு நாளும் குளிரிலே கஷ்டப்பட்டாலும், வெயில்  அடிக்கும் போதாவது எங்கையாவது நீந்தி குளிக்க 
இடம் கிடைக்குமா என்ற ஒரு ஏக்கம்.அதைவிட பெரிய வருத்தம், தண்ணியிலே(குடி தண்ணீர் மட்டுமே) மிதக்கவும் முடியலைன்னு.  

என்னோட நீச்சல் திறமைகளை விவரிக்கும் போதே, எனக்கு நீச்சல் சொல்லி கொடுக்க வேண்டும் என்று கத்துக்குட்டி தம்பி ஒருவர் என்னிடம் சொல்லி வைத்து இருந்தார். கல்லூரியிலே பல சக நண்பர்களுக்கு நீச்சல் சொல்லி 
கொடுத்த அனுவத்திலே நானும் சரி என்று சொன்னேன்.

இப்படி கஷ்டமான காலத்திலேயே சில நண்பர்கள் சேர்ந்து கரடி மலை என்ற பியர் மௌண்டன்(bear mountain) போகலாம்  என்று முடிவு எடுத்தோம்.அங்கே கரடி எல்லாம் இருக்குமா என்று விசாரித்தப்ப "நாங்க எல்லாம் கறுப்பு கரடி ௬டத்தான் போறோமுன்னு சொல்லிட்டாங்க, அதற்கு பின் கரடியைப்  பத்தியே பேசலை. 

காடு, மலைகளை எல்லாம் கடந்து கரடி மலைக்கு போகலை, நல்ல தார் சாலையிலே சென்றோம். நாங்கள் போனவுடனே கொண்டு போன கட்டு சோறுகளையெல்லாம் எடுத்து வைத்தேன், மக்கள் வெள்ளம் நீச்சல் குளத்திலே இருந்து வந்தும், போய் கொண்டும் இருந்தார்கள். 

என் ௬ட வந்த கத்துக்குட்டி இப்பவோ போகணும் என்று அடம் பிடிக்க நான் அவரை சமாதானப்  படுத்தி விட்டு கொண்டு சென்ற கட்டு சோற்றை எல்லாம் முடித்து விட்டு நீச்சல் குளத்தை நோக்கி நடந்தோம். நீச்சல் குளம் அருகிலே சென்றோம், நீச்சல் குளமே வெறுமையாய் இருந்தது. 

அருகில் இருந்த கத்து குட்டி 

"அண்ணா, நீங்க குளிக்க வருகிறதை யாரோ தெரிஞ்சி கிட்டு, இங்கே இருந்த வெள்ளையம்மா, வெள்ளைப்பன் கிட்ட எல்லாம் சொல்லிட்டாங்களோ?" 

"உனக்கு நீச்சல் சொல்லிகொடுக்கிறேன்னு சொன்ன எனக்கு இன்னும் 
வேணும்" ன்னு சொல்லி கிட்டே நீச்சல் குளத்தை நோக்கி நடந்தோம்.

அங்கே  நின்று கொண்டு இருந்த வெள்ளைப்பன், 

"அல்லோ.. இங்கே குளிக்க முடியாது" (பால அண்ணன் கிட்ட இங்கிலிபிசு கத்து கிட்டு இருப்பாரு போல தெரியுது)

"ஏன்"

"ஏன்னா, இங்கே மின்சாரம் இல்லை"

"அண்ணே, எங்க ஊரு குளத்து தண்ணியை எல்லாம் நீங்க பார்த்தது கிடையாது, அதிலே எல்லாம் நான் குளித்து இருக்கேன், இதெல்லாம் 
என்னைய ஒண்ணும் செய்யாது"

"அப்ப, நீ உங்க ஊரிலே போய் குளிச்சிக்கோ" ன்னு சொல்லி என்னை திரும்பி 
போக சொல்லி விட்டார்.

நானும் சோகத்திலே  வந்து அருகிலே இருந்த ஏரிப் பக்கம் உட்கார்ந்து, இவ்வளவு தண்ணி இருந்தும் குளிக்க முடியலையே என்கிற வருத்தத்தோட, வாடி வதங்கிப் போன முகத்தோட இருந்தேன். அப்ப கத்துக்குட்டி தம்பி 

"அண்ணே ரெம்ப வெயில நினையாதீங்க கறுத்துப் போவீங்கன்னு, உடம்பிலே கொஞ்சம் நஞ்சம் இருக்கிற கறுப்பு காணப் போககுடாதுன்னு நல்லா எண்ணமா? இல்லை என் கறுப்பு நிறம் மேல பொறமையான்னு தெரியாம 
யோசித்துகிட்டே ஏரிகரையிலே நடந்தோம்.

அருகிலே ௬டைப் பந்து விளையாடி கொண்டு இருந்த கறுப்பு அண்ணாச்சி பையன் சுமார் பதினைந்து வயது இருக்கும், பந்தை தவற விட, அது வேகமா உருண்டு ஏரிக்கரை தடுப்பு பலகை தாண்டி ஏரி உள்ளே விழுந்து விட்டது. வேகமா வந்த அவனும் பந்தின் பின்னால் ஏரியிலே விழுந்து விட்டான்.   

விழுந்த உடனே பந்தை எடுப்பாருன்னு நானும் பார்த்தேன், அதுக்கு பதிலே அவரு கையை காலை உதைத்துகிட்டு தண்ணீரிலே உதை பந்து விளையாடினார், உடனே அருகிலே இருந்த கத்துக்குட்டி தம்பி

"அண்ணே, இவன் துள்ளுறதைப் பார்த்தா, நீச்சல் தெரியாத மாதிரியே இருக்கு, நானும் உள்ளே விழுந்தா அவனை மாதிரி தான் செய்வேன்"

"அப்படியான்னு" சொல்லிட்டு விழுந்த பையனிடம் "உனக்கு நீச்சல் தெரியுமா?" ன்னு கேட்டேன். 

அவன் எனக்கு பதில் சொல்லாம மறுபடியும் முங்கி எழுந்தான். ஆனா மேல வந்து காப்பாத்துங்க.. காப்பாத்துங்கன்னு கத்தினான். 

உடனே நான் போட்டு இருந்த குளிர் கண் கண்ணாடியை கழட்டி விட்டு தண்ணீரிலே குதித்தேன், இங்கே ஒரு விவரம் சொல்லணும், தண்ணியிலே விழுந்தவங்களை காப்பாத்தும் போது அவங்களுக்கு முன்னால குதிக்கக் ௬டாது, ஏன்னா அவங்க  உங்க கழுத்தை பிடித்து அமுக்கி விட்டால் ரெண்டு பேருக்கும் சங்குதான், நான் அவரின்  பக்க வாட்டிலே குதித்து பின்னால் இருந்து அவரோட சட்டையைப் பிடித்து கரை ஓரமாக கொண்டு வந்தேன்,  மேல இருந்த சில நபர்கள் அவனை கரையிலே தூக்கி விட்டார்கள், நானும் மேல வந்தேன். 
அதற்குள்ளே கொஞ்சம் ௬ட்டம் ௬டி விட்டார்கள், என்னோட வீட்டு எஜமானி யம்மாவும் வந்து, எல்லோரும் விவரம் விசாரித்து கொண்டு இருக்கும் போது 

"உங்க அலைபேசியை எங்கே?"  

அது ஒரு அலைபேசி ன்னு சொன்னாலும், செங்கல் மாதிரி இருக்கும், போனதிலே எனக்கு சந்தோசம், இருந்தாலும்  விடலை 

"நான் ஆசையா வாங்கி கொடுத்த செங்கல்" அடுத்த வினாடியே மறுபடியும் ஏரிக்குள்ளே குதித்து  முங்கு நீச்சல் அடித்து தேடி கண்டு பிடிச்சி எடுத்து 
விட்டுத்தான் கரைக்கு வந்தேன்.

காப்பாத்தின ஆள் போயிட்டாரு, ஆனா காப்பாத்தின அலைபேசி வேலை செய்யலை, எனக்கு ரெம்ப சந்தோசம் புது அலைபேசி கிடைக்கும்னு, ஆனா நடந்து என்ன 

வீட்டுக்கு வந்த முதல் வேலையா, அலைபேசியை மின்சார முடி உலர்த்திலே காய வைத்து மீண்டும் அடுப்பிலே சோத்து பானை மேல வச்சி, ரெண்டு நாள் கழிச்சி, என் பழைய செங்கல் எனக்கே வந்து விட்டது. நீச்சல் குளத்திலே குளிக்க முடியலைன்னே வருத்தம் இருந்தாலும், குளத்திலே குதித்து ஆளைக் 
கரைசேர்த்த மகிழ்ச்சி இன்னும் இருக்கு.இடுகையிலே கருத்து சொல்லாம முடிக்க ௬டாதாம், 
அதனாலே எல்லோரும் நீச்சல் படிங்க

குறிப்பு : சம்பவம் நடந்த இடம் கீழே உள்ளது
20 கருத்துக்கள்:

கே.ஆர்.பி.செந்தில் said...

பொதுசேவை செய்யும்போது இதெல்லாம் சகஜம் அண்ணே..
இருந்தாலும் ஒரு உயிரைக் காப்பற்றியதற்க்கு பாராட்டுக்கள்....

ராமலக்ஷ்மி said...

//அந்த காலத்திலேயே நான் சின்ன பையனா இருக்கும் போது //

இப்படி ஆரம்பிக்காதவர்களே இருக்க முடியாது:)!

பெரிய செயலை செய்து விட்டு தன்னடக்கமாய் செங்கலைப் பற்றிப் கவலைப் பட்டிருக்கீங்க.

//இடுகையிலே கருத்து சொல்லாம முடிக்க ௬டாதாம்//

அதானே:))!

Anonymous said...

அமரிக்காவில் நீச்சல் தெரியாமல் இருக்கும் நபர்களை வாழ வைத்து கொண்டு இருக்கும் அண்ணன் நசரேயன் வாழ்க....அவர் புகழ் ஓங்குக....

அண்ணிகிட்ட சொல்லி ஒரு iphone4 வாங்கிக்கோங்க....

//ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப தான் உங்க கடை பக்கம் வர முடிஞ்சது.....//

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Nasareyan

வானம்பாடிகள் said...

தூங்கிட்டே தட்டச்சினதா அண்ணாச்சி:). அழகான படம். அருமையான கதை. செங்கல்லு புகைப்படம் போட்டிருக்கலாம்.

Chitra said...

////அழகான படம். அருமையான கதை. செங்கல்லு புகைப்படம் போட்டிருக்கலாம்.///

..... அதானே.... படம் எங்கே?
moral of the story - நல்லா இருக்குது. :-)

ஹேமா said...

//காப்பாத்தின ஆள் போயிட்டாரு, ஆனா காப்பாத்தின அலைபேசி வேலை செய்யலை//

ஆள் போய்ட்டாரா !

கருப்பு அண்ணாச்சி வாழ்க.
அவர் செங்கல் வாழ்க.

படம் பசுமையா அழகா இருக்கு.
ஏன் உங்க தலையை மட்டும் காட்டியிருக்கீங்க !

பா.ராஜாராம் said...

வேலைக்கு கிளம்பும் நேரம். வந்து வாசித்து, பின் பின்னூட்டம்.

(இதுக்கு ஒரு பின்னூட்டமாயா என்பீர்) :-)

Anonymous said...

இன்சூரன்ஸ் இல்லியா தளபதி

ராஜ நடராஜன் said...

செங்கல்லுன்னா அது நோக்கியா 9600வா இருக்கும்!

ஒரு முறை நான் கரையில கடல அம்மணி கடல்ல கடக்கல கரை.கூட குளிச்ச பெண்மணிகளால் கடல்ல கரை இழுத்தாங்க.நீச்சல் தெரிந்தும் வாங்கி கட்டிகிட்டேன்.

மாதேவி said...

படம் அருமை.

அமைதிச்சாரல் said...

ஒரு உயிரை காப்பாத்தினதுக்கு முதல்ல பாராட்டுக்கள். அதான் செங்கலைத்தேடுற சாக்குல உள்நீச்சல், வெளிநீச்சல், முங்குநீச்சல் எல்லாம் அடிச்சு குளிச்சாச்சே... அப்றம் ஏன் வருத்தப்படுறீங்க :-))))))))

வானம்பாடிகள் said...

/ராஜ நடராஜன் said...
செங்கல்லுன்னா அது நோக்கியா 9600வா இருக்கும்!

ஒரு முறை நான் கரையில கடல அம்மணி கடல்ல கடக்கல கரை.கூட குளிச்ச பெண்மணிகளால் கடல்ல கரை இழுத்தாங்க.நீச்சல் தெரிந்தும் வாங்கி கட்டிகிட்டேன்.//

அண்ணாச்சி எஃபெக்டு. அண்ணனுக்கும் என்னமோ ஆயிருச்சி. அண்ணோவ் என்னாது இது கடல, கடல்ல கடக்கல கரை.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா,... புகைப்படம் நல்லாயிருக்கு

Vidhoosh(விதூஷ்) said...

:) ivlo nallavaraa nasar neenga...

illa kathaiyave maaththitteengala..? anthaalu unga kooda pesinappuramthaan thanneela kuthichchathaa pechchu adipaduthe???

(inniku en kadaiyil paarathiyaar kavithaithaa... ungalaala kumma mudiyaathe.... ye..ye..ye..)

அத்திரி said...

அண்ணே உங்க ஊர் சிந்தாமணி குளத்துல நீச்சல் அடிச்சிருக்கீங்களா

பா.ராஜாராம் said...

சுட்ட செங்கல் என்பார்களே அது இதுதானோ நசர்? :-))

ILA(@)இளா said...

பெரிய விசயம் பண்ணிருக்கீங்க. நன்றி!

அப்பாவி தங்கமணி said...

//அந்த காலத்திலேயே நான் சின்ன பையனா இருக்கும் போது //

சுதந்தரத்துக்கு முன்னா பின்னா? வரலாறு கரெக்ட்ஆ தெரிஞ்சுக்கணும் பாருங்க... அதான் கேட்டேன்.... (ஹி ஹி ஹி)

வில்லன் said...

இந்த கதையெல்லாம் வேண்டாம் நாங்களும் கரடி மலைக்கு போயிருக்கோம்... கரடி கூட எல்லாம் கட்டி புரண்டு விளையாண்டுருக்கோம்.... படத்த பாத்தா எதோ எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்குற கோலத்துல எடுத்தாப்புல இருக்கு... அமெரிக்காவுல எங்கய்யா வேப்பமரம் இருக்கு... புளுகினாலும் பொருந்த புளுகனும்....