Wednesday, November 11, 2009

நெப்போலியன் மேல சத்தியம்

என்னடா எந்நாளும் இல்லா திருநாளா, இன்னைக்கி ரெம்ப அலப்பறையா இருக்கே,ஆயிரம் மீனுக்கு வலை வீசி இருக்கேன்னு சொன்னே மீன் ஏதும் சிக்கி இருக்கா?

ஒண்ணு இல்ல மச்சான் இல்ல ரெண்டு வந்து இருக்கு, அதுவும் வடக்கூர்காரிங்க.

நம்மை எல்லாம் நாயா விட கேவலமா பாப்பாங்க, அவங்க எல்லாம், அது உனக்கு நம்பவே முடியலையே.

நீங்க இந்த விஷயத்திலே என்னை நம்ப மாட்டீங்கன்னு தெரியும் அதனால்தான் அவங்க அனுப்பிய ஈமெயில பிரிண்ட் பண்ணி எடுத்திட்டு வந்து இருக்கேன்.

எங்க குடு பார்க்கலாமுனு (ராம்நாடும், புது கோட்டையும் ஓடிவராங்க)

டேய் ராம்நாடு மெயில் பார்த்தா உண்மைனு தான் தெரியுது, அனுப்புனர் விலாசம் எல்லாம் சரியாத்தான் இருக்கு.

ஆமா எட்டப்பா, அதுவும் ஆபீஸ் ஐ.டி யிலே இருந்து வந்து இருக்கு.

டேய் கருப்பா எனக்கு ஒரு சந்தேகம், காதல் கடிதாசி எழுதுறவங்க எதுக்கு ஆபீஸ் ஐ.டி யிலே அனுப்பனும்.

எட்டப்பனுக்கு எப்போதுமே சந்தேகம் தான், என் அழகிலே மயங்கி, காதல் வெறியிலே எழுதி இருப்பாங்க.ஈமெயில் பார்த்த நிமிசத்திலே இருந்து என் ஈரக் கொலையெல்லாம் நடுங்குது.

பார்த்துடா, காதல் கை ௬டி வரும் முன்னே நீ காலாவதி ஆகிவிடாதே.

டேய் நீ மாநிறமா இருந்தும் உனக்கு உங்க ஊரு தண்ணி இல்லா காடு மாதிரி, உன் காதல் நிலம் வரண்ட பூமியா இருக்கிறதாலே என்னைப் பார்த்து பொறாமை படாதே.

எல்லாம் என் நேரம்டா இதை எல்லாம் கேட்கணுமுன்னு என் தலை எழுத்து.

டேய் ராம்நாடு அமைதியா இரு, கருப்பா இப்ப என்ன முடிவு எடுத்து இருக்கே, உனக்கு ரெண்டு துண்டு விழுந்து இருக்கு, எதையாவது ஒண்ணு எடுத்துட்டு, ஒண்ணை விடு ஆத்தேட போட்டும்.

ஆமாடா, ஒருத்தி வாழ்க்கை தான் வீணாப் போறதை எங்களால பார்த்து சகித்து கொள்ள முடியும்.

டேய் துண்டு வாங்கினவன் நான், நீங்க ரெண்டு பேரும் வாயிலே இனாமா வருதுன்னு அள்ளிப் போடுறீங்க, வாங்க தெரிந்த எனக்கு எப்படி எடுக்கணுமுன்னு தெரியும், நீங்க கொஞ்சம் அடங்குங்க.

அப்ப ரெட்டை தோணியிலே போகணுமுன்னு முடிவே பண்ணிட்டியா?

நான் அழகா இருக்கிறதாலே, அளவுக்கு அதிகமா துண்டு விழுந்தாலே, எல்லாத்தையும் கள்ளத்தோணியிலே ௬ட்டிட்டு போற அளவுக்கு பேராசைக்காரன் இல்லை, நீங்க ரெண்டு பெரும் ஈமெயில் பார்த்தீங்க, அதை இன்னும் படிக்கலை, நான் இது வரைக்கும் ஐநூறு தடவை படித்து விட்டேன். இப்ப ஐநூத்தி ஒண்ணாவது தடவையா உங்களுக்காக,மாப்பிளைகளா அவங்க பேரு எல்லாம் உங்க வாயிலே நுழையாது, அதனாலே காதலி ஒண்ணு, காதலி ரெண்டு.

காதலி ஒண்ணு:
என் கண்கள் எப்போதுமே உன்னைத் தேடும், அது உன்னோட கவர்ச்சியா இருக்குமோன்னு நினைப்பேன், ஆனா இப்ப என்னோட இதயமும் உன்னைத் தேடுது, இது காதலா இருக்குமோன்னு நினைக்கிறேன், நினைவலைகளை வானலைகளாக மாற்ற சந்திக்க விரும்புகிறேன், சனிக்கிழமை காலை 11 மணிக்கி லால் பார்க்கிற்கு வரவும்.
உங்கள் அன்புள்ள,

(பெயர் பாதுகாப்பு காரணம் கருதி குறிப்பிட வில்லை)

காதலி ரெண்டு:
மும்பையிலே இல்லாதது என்ன இங்கே இருக்கிறது என் வேலையை தவிர என்று பல ஆயிரம் முறை யோசித்து இருக்கிறேன். விருப்பம் இல்லாமல் வந்தேன், இப்போது உங்களை விரும்புவதற்காகவே வருகிறேன், உங்கள் விருப்பம் அறிய விண்ணை நோக்கி காத்து இருப்பேன் லால் பார்க்கிலே சனிக்கிழமை மதியம் மூன்று மணிக்கு

அன்புடன்,
(மேல சொன்னதுதான் இங்கேயும்)

கருப்பா நெஞ்சை பிழிஞ்சிடாங்க, எனக்கு ஒரு சந்தேகம் ஈமெயில்ல அவங்க பேரு இருக்கு, ஆனா உனக்கு எழுதுதற்குன்னு அத்தாட்சியா உன் பேரை போடலை.

ஒருவேளை புருஷன் பேரை சொல்லக்௬டாதுன்னு விட்டு
இருப்பாங்களோ

அடி செருப்பால, ஆடே அறுக்கலை அதுக்குள்ளே தலைக்கு பறக்கியோ.

எனக்கும் ஒரு சந்தேகம், அவளுங்க இங்கிலீஷ்ல எழுதி இருக்காளுங்க, அதை எப்படி கிட்டத்தட்ட தமிழாக்கம் பண்ணின.

டேய் என் ஆங்கில அறிவைப் பத்தி என்ன நினைக்குறீங்க.

அடச்சீ.. உண்மைய சொல்லு மூதேவி.

சென்னைகாரனுக்கு அனுப்பி தமிழாக்கம் பண்ணினேன்.

டேய் கடைசியிலே ரெண்டு மூனு வரிக்கு இன்னும் சரியா தமிழாக்கம் பண்ணலியே.

அது அவனுக்கே தெரியலைன்னு சொல்லிட்டான், ஆனா ஒண்ணும் பயப் படுற மாதிரி எழுதலைன்னு சொல்லிட்டான்.

சென்னைகாரனுக்கே தெரியலைன்னா வடக்கூர் காரிங்க எல்லாம் இங்கிலீஷ் புலி தான் போல.

சனிக்கிழமை போறேன், சந்திக்கிறேன், அப்புறமா முடிவு எடுப்பேன். ரெண்டிலே எது அளவுக்கு அதிகமா என் மேல பைத்தியமா இருக்கோ, அதுக்கு வாய்ப்பு கொடுத்திட்டு.

இன்னும் ஒண்ணை !!!!!!!!!!! இன்னும் ஒண்ணை !!!! (இருவரும் சேர்ந்து)

டேய் நான் இன்னும் முடிக்கலை. கொஞ்ச நாள் கழிச்சி தான் முடிவு எடுப்பேன் ரெண்டாவதை என்ன பண்ணலாமுன்னு.

அப்ப நானும் உன் ௬ட வாரேன்.

காதல் பூமியிலே கந்தக காட்டுக்கு என்னடா வேலை?

மச்சான், நீ கழட்டி விட நினைச்சதுகிட்டே எனக்கு ஒரு அறிமுகம் கொடு, உன் பேரை சொல்லி நானும் கொஞ்சம் முயற்சி செய்யுவேன். நீ வேண்டாமுன்னு சொல்லும் போது நான் துண்டை போட்டுறேன்.

அடத்தூ ....இந்த பொழைப்புக்கு நீ எல்லாம் நாண்டுகிட்டு நின்னு சாகலாம்.

கொஞ்சம் கருணை காட்டுடா.. ரெம்ப பசியா இருக்கேன்

சரி..சரி வந்து தொலை, ஆனா என் பக்கத்திலே நீ வரவே ௬டாது

நீ என்ன சொன்னாலும் கேட்டுகிறேன்.

அப்ப நான் என்ன செய்ய???

எட்டப்பா ரெண்டு தானே இருக்கு, வச்சிட்டா வஞ்சகம் பண்ணுறேன், அடுத்த முறை மாட்டிச்சினா சொல்லுறேன்.பாவம் ராம் நாடு பொழைச்சி போகட்டும்.

அப்ப அடுத்த முறை இன்னும் கொஞ்சம் நல்ல பிகரா தேத்து.

ராம், எதுக்கும் சனிக்கிழமை நீ குளிக்காம வா, என்னை விட நீ கொஞ்சம் அழகு குறைவா இருக்கணும், நீ என்ன என்ன பண்ணனுமுன்னு இதிலே தெளிவா எழுதி இருக்கேன். ஒழுங்கா படி, பரிச்சசைக்கு படிச்ச மாதிரி படிக்க ௬டாது.

எப்படி இப்படி?

முசப் பிடிக்கிற நாய்க்கு மூஞ்சை பார்த்தா தெரியாது(மணி அண்ணே?). அதான் முன் எச்சரிக்கையா தயார் பண்ணினேன்.

நீ ஒரு காதல் குரு மச்சான்.

(சனிக்கிழமை காலை)

டேய் ராம்நாடு கருப்பனை காணும், உன்னை விட்டுட்டு ஓடிப் போய்ட்டானா?

இல்லடா கோயிலுக்கு போய் இருக்கான், ரெண்டு பேரு பேரிலையும் அர்ச்சனை பண்ண.

அவன் அலும்பு தாங்கலைடா, அவன் ஆட்டத்தை நிப்பாட்டுடா.

சென்னைக்கரனையும் வரச்சொல்லி இருக்கான், சாயந்திரம் பெரிய விருந்தே இருக்கு.இதோ காதல் மன்னன் வந்துட்டான்

ராம்நாடு சீக்கிரம் வாடா, போய் காதல் இன்டெர்வியு போகலாம், சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கா?

ஒ..எல்லாம் இருக்கு

எட்டப்பா சென்னைக்காரன் வருவான், அவனை இருக்க சொல்லு, அவனுக்கும், உனக்கும் அடுத்த முறை உசார் பண்ணும் போது பாத்துக்கலாம்.

(சனிக்கிழமை மாலை 7 மணி)

எட்டப்பா என்னடா இன்னும் கருப்பனையும், ராம்னாடையும் காணும்.
உசார் பண்ணி ஹிந்தி படம் பாக்க போய்ட்டாங்களா? அதுக்கு வாய்ப்பே இல்லை.


(ராம், கருப்பன் இருவரும் வருகிறார்கள்)


என்னடா ஆச்சி ராம்.

மெட்ராஸ் மச்சான், இன்னைக்கு எதோ தப்பித்தே பெரிய விஷயம் தான், கால் கடுக்க நின்னதுதான் மிச்சம், அவளுக வரவே இல்லை, ஒரு ஆறுமணிக்கு காதல் மன்னன் அவங்களுக்கு போன் போட்டான். என்ன திட்டு திட்டுறாங்க, ஒருத்தி என்னடான்னா நீ என்னை காதலிகிறேன்னு சொன்னதுக்கு தற்கொலை பண்ணுவேன்னு மிரட்டுறா, இன்னொருத்தி உன் மேல மான நஷ்ட ஈடு வழக்கு போடுவேன்னு சொல்லுற, இது ரெண்டும் தான் எனக்கு புரிஞ்சது, அப்புறம்மா இந்தியிலேயும் கொஞ்சம் காய்ச்சினாங்க, கடைசியிலே ரெண்டு பேருமே இனிமேல ஆபீஸ்க்கு வரவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க.

அப்படியா,நான் கும்பிட்ட தெய்வம் கை விடலை. தெய்வம் இருக்குடா.

எட்டப்பா நானே கொலை வெறி கோபத்திலே இருக்கேன்.

விடு மாப்பிள காதல்ங்கிறது புளிரசம் வைக்கிற மாதிரி, அது எல்லோருக்கும் வருமான்னு சொல்லமுடியாது.இப்போதைக்கு இவ்வளவு தான். இன்னொரு விளக்கம் இரவு 9 மணிக்கு

(இரவு 9 மணிக்கு,காதல் களை இழந்து சொகக்களையுடன் இருந்தவனிடம், சென்னை நண்பன்)

மாப்ள உனக்கு SMTP பத்தி தெரியுமா?

நானே எவன் இடையிலே புகுந்து ஆட்டைய கலைச்சான்னு யோசித்து கிட்டு இருக்கேன், நீ வேற SMTP, HMT ன்னு வாட்ச் கடை பேரை சொல்லுற.

டேய், நீ பார்க்கிற ஈமெயில் SMTP protocal வழியாத்தான் வேலை செய்யுது, அதிலே SMTP Client க்கு நீயே ப்ரோக்ராம் எழுதலாம், அதை வச்சி யாரோட from அட்ரஸ் போட்டு மெயில் அனுப்பலாம். நான் என் ப்ரோஜெக்ட்க்கு பயன் படுத்துகிறேன்.

என்னடா மச்சான் சொல்லுறா, அப்ப இதை எல்லாம் செய்த குள்ள கருப்பு ஆடு நீதானா?

நான் இல்ல நாங்க,யோசனை என்னோடது, மற்ற வேலைகளை எல்லாம், எட்டப்பனும், ராம்னாடும் பாத்து கிட்டாங்க.அவங்க தான் சொன்னாங்க நீ காதலி கிடைக்கணுமுன்னு கோயில்.. கோயிலா தேடி அலையுறன்னு, அதான் உனக்கு ஒரு காதல் பாடம் எடுத்தோம், இந்த உலகத்திலே காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை. அது ஒரு நிகழ்வு, அதற்காக உன் வாழ்கையை தியாகம் பண்ணக்கூடாது, கோயில் குளத்தை சுத்துறை விட்டுட்டு உங்க அம்மா கால்ல விழு அவங்களே ஒரு நல்ல பெண் பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க.

டேய் எல்லா வில்லத்தனத்தையும் பண்ணிட்டு கடைசியிலே நாயகன் மாதிரி அறிவுரையா?

உன்னை மாதிரி என்னாலே காதலி வாங்கி கொடுக்க முடியலை, அதான் அறிவுரை கொடுத்தேன்.

நீ சொன்னது என்னவோ உண்மைதான், நாளைக்கு மறுபடியும் அவங்களுக்கு போன் பண்ணி

மறுபடியுமா!!!!!!!!!!!!

மன்னிப்பு கேட்டுட்டு, இனிமேல நானும் துண்டை குப்பையிலே எறிந்து விட்டு என் பொழைப்பை பார்கிறேன், இது இந்த நெப்போலியன் மேல சத்தியம்.


23 கருத்துக்கள்:

vasu balaji said...

எங்கள பார்த்த எப்புடீ தெரியுது:((..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..நல்லாருக்கு

சந்தனமுல்லை said...

எப்படி இப்படி??
மெசேஜ்-லாம் சொல்றீங்க..பழைய படம் ஏதாவது பார்த்த எஃபெக்டா?!!

/அது ஒரு நிகழ்வு, அதற்காக உன் வாழ்கையை தியாகம் பண்ணக்கூடாது, கோயில் குளத்தை சுத்துறை விட்டுட்டு உங்க அம்மா கால்ல விழு அவங்களே ஒரு நல்ல பெண் பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க./

avvvv

velji said...

technical twist நல்லாத்தான் இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு

அப்துல்மாலிக் said...

ஒரு குறும்படம் பார்த்த திருப்தி...

SMTP யை இதற்கு பயன்படுத்திய விதம் சூப்பர்

உங்க அறிவுரைய கேட்டு உங்க நண்பன் திருந்திட்டதா சொல்றது அப்பட்டமான காது சுத்தல்.. ஹெ ஹெ

எம்.எம்.அப்துல்லா said...

:))))

ரவி said...

voted. good post ya

அத்திரி said...

ஓகே அண்ணாச்சி

ஹேமா said...

ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் இடையில என்ன நடக்குது நசர்.
நல்லாத் தூங்குவீங்களா அதுவும் இல்லியா !

RAMYA said...

நசரேயன்! ஏதாவது சினிமா எடுக்கற உத்தேசம் இருக்கிறதா!!

உங்க எழுத்து என்னை அப்படி சந்தேகப்படுத்த வச்சிடிச்சு. நல்லா கதை சொல்லி இருக்கீங். ....

துண்டை மட்டும் விட்டுடாதீங்க. நீங்க ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சா என்னா கலர் துண்டு போட்டுபீங்க? :)

RAMYA said...

//
நான் இல்ல நாங்க,யோசனை என்னோடது, மற்ற வேலைகளை எல்லாம், எட்டப்பனும், ராம்னாடும் பாத்து கிட்டாங்க.அவங்க தான் சொன்னாங்க நீ காதலி கிடைக்கணுமுன்னு கோயில்.. கோயிலா தேடி அலையுறன்னு, அதான் உனக்கு ஒரு காதல் பாடம் எடுத்தோம், இந்த உலகத்திலே காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை. அது ஒரு நிகழ்வு, அதற்காக உன் வாழ்கையை தியாகம் பண்ணக்கூடாது, கோயில் குளத்தை சுத்துறை விட்டுட்டு உங்க அம்மா கால்ல விழு அவங்களே ஒரு நல்ல பெண் பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க.
//

ம்ம்ம்ம் அறிவுரை எல்லாம் பலமா இருக்குது.

அந்த நண்பர் கேட்டுகிட்டாரா :) இல்லே ஆட்டோ அனுப்பினாரா:)

RAMYA said...

//
டேய் எல்லா வில்லத்தனத்தையும் பண்ணிட்டு கடைசியிலே நாயகன் மாதிரி அறிவுரையா?
//

இது ரொம்ப நல்ல கேள்வி! பக்கத்துலே நின்னிருந்தா அவ்வ்வ்வ்வ்வ்....

RAMYA said...

//
உன்னை மாதிரி என்னாலே காதலி வாங்கி கொடுக்க முடியலை, அதான் அறிவுரை கொடுத்தேன்.
//

அது சரி :)

RAMYA said...

//
நீ சொன்னது என்னவோ உண்மைதான், நாளைக்கு மறுபடியும் அவங்களுக்கு போன் பண்ணி

மறுபடியுமா!!!!!!!!!!!!
//

அதானே :)

RAMYA said...

//
மன்னிப்பு கேட்டுட்டு, இனிமேல நானும் துண்டை குப்பையிலே எறிந்து விட்டு என் பொழைப்பை பார்கிறேன், இது இந்த நெப்போலியன் மேல சத்தியம்.
//

இது நல்ல பிள்ளைக்கு அடையாளம். ம்ம்ம்.. சத்தியம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு :)

இடுகை நல்லா இருக்கு, வழக்கப்படி நகைச்சுவைதான் கதை முழுவதும் ட்ராவல் பண்ணி இருக்கு :)

Unknown said...

அருமைங்க..

Anonymous said...

//எப்படி இப்படி??
மெசேஜ்-லாம் சொல்றீங்க..பழைய படம் ஏதாவது பார்த்த எஃபெக்டா?!! //

ரிப்பீட்டு

முகவை மைந்தன் said...

கலக்கல் புனைவு. பின்னிருக்க மச்சி! வாக்குப் போட்டாச்சு;-)

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை:))!

CS. Mohan Kumar said...

சில இடங்கள் சிரிப்பை வரவழைத்தது. உதாரணமாய்

//ஒருவேளை புருஷன் பேரை சொல்லக்௬டாதுன்னு விட்டு
இருப்பாங்களோ//

அளவு சுருக்கி இருக்கலாம். மேலும் நாடகம் போல் சில இடங்களில் வருவதை தவிர்த்திருக்கலாம்.

வாழ்த்துக்கள்
*******
இந்த எளியவனும் கதை போட்டியில் கலந்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/

சிங்கக்குட்டி said...

தலைப்பை பார்த்தவுடன் "அமெரிக்காவில் பீர்" குடித்த பதிவு போல இருக்கும் என்று நினைத்துதான் வந்தேன் ஆனாலும் நல்லாருக்கு.

பெசொவி said...

//விடு மாப்பிள காதல்ங்கிறது புளிரசம் வைக்கிற மாதிரி, அது எல்லோருக்கும் வருமான்னு சொல்லமுடியாது.இப்போதைக்கு இவ்வளவு தான்.//

என்ன தத்துவம்பா...... கலக்கிட்டீங்க, முடிவு எதிர்பாராதது.

வில்லன் said...

//இது இந்த நெப்போலியன் மேல சத்தியம்.//

நெப்போலியன் மேல சத்தியம்நா தண்ணில எழுதுற மாதிரில்லா!!!!!!!!!!!!!!!!!!!!!!