ஹாய்
ஒ.. ஹே.. எப்படி இருக்க
ம்ம்.. எதோ சொல்லனுமுன்னு சொன்ன.
எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை, நம்ம வாத்தியார் digital signal processing எடுக்கிற மாதிரி ஒண்ணுமே புரியலை.
அது எப்படி புரியும் அவரு இங்கிலீஷ் ல பாடம் எடுக்கிறாரு.
நான் அவரை பத்தி சொல்லலை, நம்ம ரெண்டு பேரை பத்தி சொல்லுறேன்.
சொல்ல என்ன இருக்கு, நீ மாப்பிள்ளை பெஞ்ச், நான் மச்சினிச்சி பெஞ்சி, இதை தவிர வேற என்ன இருக்கு.
ஹேய் இன்னைக்கு நீ தலைக்கு குளிச்சியோ
இது என்ன கேள்வி, நான் தினமும் தான் தலைக்கு குளிக்கிறேன்.
இல்லை நீ தலைக்கு குளிச்சி ஒரு மாசம் ஆச்சி.போன மாதம் ஆறாம் தேதி அது சனிக்கிழமை.
ஷ்ஷ்ஷ்... மெதுவா பேசு.. ஊரை ௬ட்டி சொல்லுவா போல இருக்கு, ஆமா ரெம்ப நாளைக்கு அப்புறம் தலைக்கு குளிச்சேன். இதை எல்லாம் எப்படி கணக்கு பண்ணுவ.
குளிச்ச தலைக்கு பின்னல் போட மாட்ட, கொஞ்சம் அழகா தெரிவ, ஆனா குளிகலைனா அழகை ௬ட்டனுமுன்னு மூஞ்சியிலே அரை இன்ச்சிக்கு மேக் அப் இருக்கும்.
நீ கணக்கிலே 200/200 மார்க் வாங்கினாயா?
எப்படி சரியா சொன்ன?
எல்லாம் கணக்கு தான், ஆக நீ என்னைய கணக்கு பண்ணுற
உண்மைதான், எனக்கு ஏன் அப்படி உன் மேல அக்கறையா இருக்கனுமுன்னு தெரியலை, உன்௬ட பேசணும், உன்கிட்ட எதுவுமே ஒளிவு மறைவு இருக்க ௬டாதுன்னு.
என்னை மன்னிச்சுடு, உனக்கு இப்படி எண்ணம் வர காரணமா இருந்த குளியலை இனிமேல நிறுத்திடுறேன்.
நீ கொஞ்சம் நேரம் தாமதமா வந்தா உனக்கு என்னவோ, எதோ ஆகிட்டு நெஞ்சம் துடிக்குது, நீ வீடு போகும் போது உன்௬டவே வரணுமுன்னு நினைக்கிறேன். நீ கல்லூரி வரைலைன்னா ஆளுனருக்கு போன் போட்டு உன்னை காணவில்லைன்னு புகார் கொடுக்கணும் போல தோணுது.
ஏன் முதல்வர், பிரதமரை எல்லாம் விட்டுட்ட.
நம்ம இந்தியாவிலே வேலை வெட்டி இல்லாம உசத்தி சம்பளம் வாங்குகிற வங்களில் அவங்களும் ஒருத்தர்,சரி.. சரி பேச்சை மாத்தாதே. எனக்கு ஏன் இப்படி நினைக்க தோணுது.
இப்போதைக்கு என் கிட்ட பதில் இல்லை, ரெண்டு வாரம் கழிச்சி சொல்லவா?
இப்பக்௬ட பாரு உனக்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்து இருக்க சொல்லுது.
அதிகம் ரெண்டு வாரம் போதும், எங்க மாமா மனநல மருத்துவர், அவட்ட உன் பிரச்னையை சொல்லி கேட்கிறேன்.
என் மனநிலையை தீர்த்து வைக்கும் மருத்துவர், நீ இருக்கும் போது உன் மாமன் வளுக்கையன் கிட்ட என் போகணும்.
நீ என்னைய காதலிக்கிறாயா?
உன்னையே பத்தி நினச்சி, உன் ௬ட பேசனுமுன்னு நினச்சா, அது காதல்னு நீ எப்படி முடிவு பண்ணலாம், என்னோட நண்பர்கள் ௬டேயும் நான் இப்படித்தான் பேசுறேன், காதலுக்கும், நட்புக்கும் உள்ள வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத உன்னோட பழகிறதே தப்பு, சந்கேதப்பட்டு நீ பார்க்கிற பார்வை எல்லாம் சங்கத்திலே முடியும்.
நான் சனிக்கிழமை குளிச்சதை கணக்கு எடுத்தவன், எங்க மாமா வளுக்கையன்னு சொன்னது, போகும் போதும் வரும் போதும் நாய் குட்டி மாதிரி கூடவே வரணுமுன்னு நினைக்கிறதை என்னனு சொல்ல, பாசம்னு சொல்லனும்மா, விருப்பமுனு சொல்லனுமா?
அன்றைக்கு எதேர்ச்சையா உன்னை கோவில்ல பார்த்தேன், நீ போன வண்டியிலே பின்னாடி செஞ்சிலுவை சங்க குறியீட்டை போட்டு மனநல மருத்துவருன்னு போட்டு இருந்தது, அந்த ஆளைப் பார்த்தாலே உங்க மாமா மாதிரி இருந்தார். குளியல் விஷயம் நான் பள்ளிகுடம் படிக்கும் போதே இருக்கு.
இப்ப நீ என்னதான் சொல்ல வார?
ஒரு நட்பு பாத்திரத்திலே நஞ்சை கலந்திட்டே.
...............
.............
(மேலே நடந்த சம்பவத்திற்கு பின் ஒரு மணி நேரம் கழித்து )
என்னடி எப்பவுமே அவன் கிட்ட பேசிட்டு வந்தா மூஞ்சி, வாய் எல்லாம் சிவந்து பெங்களூர் தக்காளி மாதிரி வருவ, காவிரி தண்ணி வராம காஞ்சி போன நெல் நாத்து மாதிரி வார.நீ துண்டு போடுறதை சொல்லுறதுக்கு முன்னே அவன் துண்டு போட்டுட்டானா?
அவன் என் கழுத்திலே துண்டு போட்டுட்டான். காதல் பல்ஸ் பார்க்கலாமுன்னு, கொஞ்சம் விட்டு பிடிக்கலாமுன்னு நினைச்சா என் பல்லை பிடிங்கிட்டான்.
ஆமா நீ காதல் பல் டாக்டர், அவன் காதல் பல் நோயாளி, நீ அவனுக்கு பல்ஸ் பார்த்து உன் பல்லை உடைச்சி கிட்ட
அவன் என்னை பறக்க வெட்டி மாதிரி பார்க்கும் போது, என்னைப் பார்க்க வரும் போது, இருக்கிறதிலே நல்ல பேன்ட், சட்டையை ஓசியிலே போட்டுட்டு வரும் போது, கிளி காதல் பாட்டு பாட வருதுன்னு நினச்சேன், இப்படி கடைய காலி பண்ணிட்டு போவான்னு நினைக்கவே இல்லை.
கடைசியிலே என்னதான் சொன்னான்.அந்த கட்டையிலே போற பய
ஹேய் அவனுக்கு சென்னை, அங்கே கட்டை எல்லாம் கிடைக்காது, அதனாலே எரிப்பாங்கன்னு நினைக்கிறேன்.
அடியே.. இது ரெம்ப முக்கியம்.. விசயத்துக்கு வா
"இனிமேல நான் உன்௬ட பேசினா என் நாக்கை அறுத்து நடு சந்தியிலே போட்டுடுவேன், இனிமேல நீ யாரோ நான் யாரோ" ன்னு சொல்லிட்டு போய்ட்டான்
அவன் பேசுறது உனக்கு மட்டும் தான் புரியும், உன்௬ட பேசலைன்னா, அவன் நாக்கை அறுத்து காக்கைக்கு போட வேண்டியதான்.
சரி விடு ஒரு சனியன் விட்டு ஒழிந்ததுன்னு நினைச்சி தலைய முழுகு.
(அடுத்த அரைமணி நேரத்தில்)
என்னடா மாப்ள எப்போதும் திருட்டு விட கோழி தின்னவன் மாதிரி இருப்ப சூப்பி போட்ட பனங்கொட்டை மாதிரி இருக்க
எல்லாத்துக்கும் அவ தான் காரணம், ஒரு மனுஷன் எத்தனை தடவை இலை மறைவா சொல்லுறது,அவ எதுவுமே தெரியாத மாதிரி மங்குனி மாதிரி இருக்கா,எவ்வளவு தடவை தான் இதயத்தை திறந்து காட்டுறது, ஒண்ணுமே புரியாத மாதிரி பேசினா அவ என்னை காதலிக்கலைன்னு தானே அர்த்தம்.
எனக்கே இப்பத்தான் தெரியும் நீ அவளைக் காதலிக்கிறன்னு, அப்படி என்ன தான் சொன்னா?
ஒண்ணுமே சொல்லலை
அதனாலே
நல்லா திட்டுபிட்டு வந்தேன், இனிமேல உன் மூஞ்சிலே முழிக்க மாட்டேன்.
டேய் அவ தினமும் நம்ம வகுப்புத்தான் வருவா, அவ மூஞ்சிலே முழிக்காமல் முதுகிலே மூழிப்பியோ, துண்டு போட நாயா பேயா அலைய வேண்டியது, கிடைக்கலைன்னு அலைந்த கோபத்தை எல்லாம் காட்டி திட்ட வேண்டியது.
மாப்ள, நான் என்னை அவ காதலிக்கலைன்னு திட்டலை, நான் அவளை காதலிக்கிறன்னொன்னு சந்தேகப் பட்டத்துக்கு திட்டிவிட்டு வந்தேன்.
என்ன மாப்ள ஒரு தடவை இதயத்தை பிச்சி அள்ளி வெளியே எடுத்து போட வேண்டியதானே, ரெண்டிலே ஒரு முடிவாது தெரிஞ்சு இருக்கும்.
டேய் இல்லைன்னு சொல்லுமுன்னு வேண்டாமுன்னு சொல்லிடனும், தோல்வி நிச்சயமுன்னு தெரிஞ்சா ஆட்டைய கலைச்சிடனும்
டேய் கேட்கதுக்கு ரெண்டு காது பக்கத்திலே இருக்கு என்பதற்காக இப்படி எல்லாம் பேசி என்னை கொல்லப்புடாது.கிழே விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டலைன்னு சொல்லுற
ஆமா .. ஆமா
டேய் நான் இன்னைக்கு தண்ணி அடிக்க காரணமே இல்லாம திண்டாடிக்கிட்டு இருந்தேன், கடவுளாப் பார்த்து ஒரு நல்ல காரணம் கொடுத்திட்டாரு. வா மாப்ள போகலாம். ஒரு முக்கிய மான விஷயம், தண்ணி அடிச்ச உடனே அவளை நினைச்சி நீ அழல்லாம் கூடாது.
கண்டிப்பா, சும்மா போறோம். போதையிலே வாறோம்.
20 கருத்துக்கள்:
டெரரா இருக்குது ரெண்டு பக்கமும் :)
்ம்ம்ம்ம் ஒரே பேச்சா இருக்கு
ஹிஹி...சங்கக்காலத்து காதலெல்லாம் பக்கத்துலே வர முடியாது போல இருக்கே!! :))
நல்ல துடிப்பு:))!
ங்கொக்காமக்க..... ஒரே தமாசு.
எப்படி இப்படியெல்லாம் கோக்கு மாக்கா திங்க் பண்றீங்க!
ஏப்பு. போதைக்கு முன்னாடியே இப்புடி பேசிட்டு போதை வேறயா. :))
காதலையே நோக வச்சிட்டு காதல் துடிப்புன்னு வேற.இப்பிடியே தலைக்குக் குளிக்காமயா இருக்கீங்க.
அதான் இங்க வரைக்கும் வாசம் வருது !இதில தண்ணியடியுமா !
தண்ணியடிக்க ஒரு சாக்கு.... ஹ்ம்ம்??
அருமை,நச்ரேயன்.
சத்தியமாக இப்படி ஒரு இயல்பான காதலை என்னால் படைக்க முடியாது.
என்னமோ ஏதோன்னு பார்த்தா கடைசியா தீர்த்தவாரிக்குத்தானா?
மீண்டும் வருகிறேன்!
பிரிச்சு மேஞ்சிடீங்க....! படிச்சி முடிச்சதும் ஒரு குவார்டர் அடிக்கணும் போல தோணுதே...! அபிராமி........அபிராமி.....
காதல் கதையை புரிஞ்சுக்குரதுக்கு முன்னமே பிரிச்சிட்டீங்களே :(
டயலாக் டெலிவரி சூப்பர்!
காதலைப் பத்தி ஒரு சகாப்தமே படிச்சி முடிச்ச மாத்ரி மூச்சு வாங்குது :)
நவீன சாண்டில்யன் அப்படீன்னு பேசிகிட்டாங்க அது நீங்கதானா சொல்லவே இல்லே :)
நல்லாயிருக்குது
குளிக்க பிரச்சினையா... இல்ல குடிக்க பிரச்சினையா தல.
//என் கழுத்திலே துண்டு போட்டுட்டான்//
//கண்டிப்பா, சும்மா போறோம். போதையிலே வாறோம்.//
ஹ ஹ ஹ ஹா...
சும்மா பட்டய கிளப்புது!
//என்னை மன்னிச்சுடு, உனக்கு இப்படி எண்ணம் வர காரணமா இருந்த குளியலை இனிமேல நிறுத்திடுறேன்.///
நசரேயாயாயாயாயா........,
இப்படியொரு முடிவெடுத்து "ப்ளாக்"ஸ நாரடிக்க வேணாம் சாமி. யோவ். வயிறு வலிகுதுய்யா சிரிச்சி சிரிச்சி....!
நல்லாயிரு ராசா. ஓசியில ....வைத்தியம் செய்யிறதனால!
அருமை, நல்ல துடிப்பு
//கண்டிப்பா, சும்மா போறோம். போதையிலே வாறோம்.//
கண்டிப்பா, நாங்களும் எப்போதும் போல சும்மா படிக்கிறோம்..... திருட்டு விட (வெட) கோழி தின்னவன் மாதிரி திமிரா போறோம்.
Post a Comment