Sunday, November 1, 2009

வேட்டைக்காரன் விமர்சனம்

குருவி, வில்லு ஆகிய இமாலய வெற்றி படங்களுக்கு அடுத்து விஜய் நடித்து வெளி வந்து இருக்கும் படம் தான் வேட்டைக்காரன்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வேட்டைக்கரனை விட பலமடங்கு வேகம், விறுவிறுப்பு,காதல்,சண்டை, குத்து பாட்டு என படத்திலே இல்லாத அம்சங்களே இல்லை. முன்னுரையை முக்காடு போட்டு மூடி விட்டு விமர்சனத்துக்கு சிகப்பு கம்பளம் விரிச்சி வைச்சி போகலாம்.வழக்கம் போல விஜய் கல்லூரி மாணவனாகவோ,கார் மெக்கானிக்,தொழில் அதிபர் அப்படி ஏதாவது பாத்திரத்திலே நடித்து இருப்பாருன்னு நினைத்தால் அது நான் பொறுப்பு கிடையாது.படத்திலே அவரு வேலை என்னனு கண்டு பிடிப்பதே கஷ்டம், அதற்குள் படம் முடிந்து விடும், ஆனா இன்னும் விமர்சனம் முடியலை.

விஜய் வேலை தேடி அலுவலகம், அலுவலகமா போவாரு, எல்லா நேர்முகத்தேர்விலே வெற்றியும் பெறுவார் ஆனா எந்த வேலையும் சேர மாட்டார், இப்படித்தான் கதை ஆரம்பிக்குது, படத்தோட கதாநாயகியையும் ஒரு அலுவலகத்திலே சந்திக்கிறார், விஜயை அவங்க தான் வேலைக்கு இன்டெர்விவ் பண்ணுறாங்க, அவரோட பதில் சொல்லுற அழகையும், அவரோட அழகையும் பார்த்து ஒரு 50 சதவீதம் காதல் வந்து விடுகிறது.

மிச்சம் இருக்கிற 50 சதவீதக்கு ஒரு காட்சி இருக்கு, அவரும், கதாநாயகியும் இன்னொரு இன்டெர்விவுல சந்திக்கிறாங்க, கதாநாயகிக்கு வேலை கிடைக்கணுமுன்னு அந்த நேர்முகத் தேர்விலே தோல்வி அடைந்து விடுகிறார், அவரோட நல்ல குணத்தை பார்த்து அடுத்த ஐம்பதுவும் ஒட்டி 100 ஆகி விடுகிறது. ஆக காதலி கிடைச்சாச்சி இனிமேல கதை கிடைக்கணும், எப்படின்னு அடுத்த பத்திய படிங்கவருமான வரி துறை அலுவலத்திலே ஒருவரும், பத்திர அலுவலகத்திலே வேலைபார்க்கும் ஒரு தம்பதியினருக்கு பலவேறு கோணங்களில் பிரச்சனை வருகிறது, அந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கும் இரு முக்கிய புள்ளிகள் கொடுக்கும் தொல்லைகளை சமாளிக்க தம்பதிகள் இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள், அதாவது ஏற்கனவே பனிப்போர் நடந்து கொண்டு இருக்கும் இரண்டு பேருக்குள் சண்டை வரவழைத்து நிரந்தர எதிரி ஆக்கி விடுகிறார்கள்.இவ்வளவு கொலை வெறி பிரச்சனைகளுக்கு நடுவிலே கதா நாயகனை எங்கே என்று வலை வீசி தேடுறவங்களுக்கு இப்போதைக்கு பதில் இல்லை, பின்னாடி வருது.


சண்டைக்காரங்க ரெண்டு பேருகிட்டயும் கோழி மூட்டி விட்டுகிட்டு இருந்த தம்பதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியமா எதிரிகள் ரெண்டு பெரும் இணைந்து குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். எதிரிகள் ரெண்டும் பேரும் சம்பந்தியாக இணைய முடிவு எடுக்கிறாங்க. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தம்பதிகளுக்கு ரெண்டு பேரையும் ஏமாத்தி ஜெயில்ல தள்ளி விடுறாங்க.இன்னும் காதாநாயகன் வரலியேன்னு இருக்கையோட நுனிக்கு வந்தவங்க அடுத்த பத்தியை படிங்க


மேல நடந்த சம்பவங்களும், விஜயோட காதல் காட்சிகளும் மாறி மாறி படத்திலே வரும், ஆனா விமர்சனத்திலே அப்படி சொல்லமுடியுமா, விஜய் சிறையிலே இருக்கும் தம்பதிகளை சிறையிலே சந்தித்து விஜய் சொல்லுவாரு நீங்க உங்க யோசனைப்படி நடந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும், இந்த யோசனை எல்லாம் கொடுத்தது நான் தான், தப்பு பண்ணிட்டேனு சொல்லுறாரு.

உடனே எல்லோரும் இது எப்படி கதாநாயகனோட யோசனைன்னு பேசிக்கொண்டு இருக்கும் போது இடைவேளை "வெற்றி மாறன் இனி வேட்டைக்காரன்". இது குத்து வசனம் இல்லை.

(
டீ, காபி குடிக்க போறவங்க போயிட்டு வாங்க)

தமிழ் கதாநாயகர்களுக்கு இருக்கும் வழக்கமான பொறுப்புதான் விஜய்க்கு இடைவேளைக்கு அப்புறம் கொடுக்கப் பட்டு இருந்தாலும், இரண்டாவது பாதிலே கதை போகும் போக்கிலே எல்லாமே புதுசாய் இருக்கும், சிறையிலே இருக்கும் தம்பதிகளை வெளியே கொண்டு வரவேணும், வில்லன்களை வைத்தே அதையும் செய்ய வேண்டும் என்பது கதையின் கட்டாயம்.அதை வித்தியாச மான முறையிலே கில்லி, போக்கரியை விட வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்து இருப்பதால் இது பழைய இரண்டு படங்களின் சாதனையை முறியடிக்கும்

வில்லன்கள் இருவரும் இணையும் திருமணத்தை தடுத்து நிறுத்த மணப்பெண்ணை கடத்தி விடுகிறார், திருமணமும் நின்று விடுகிறது.கடத்திய பெண்ணை வைத்தே இரண்டு வில்லன்களையும் மீண்டும் வேறு பிரிக்கிறார், அடுத்துதடுத்து நடக்கும் மின்னல் வேக திருப்பங்களால், அது என்னன்னு விலா வரியா சொல்லமுடியா விட்டாலும், கடத்தப் பட்ட கதாநாயகியோட ஒரு பாட்டு முடிஞ்சு போகுது என்பதை சொல்ல முடியும், கடத்தப் பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பதால்,கதையிலே ஒரு காதநாயகியை கழட்டி விட சந்தர்ப்பம் இருக்கிறது, இப்போது கடத்தப் பட்ட நாயகிக்கு கல்யாணம் முடிக்கும் பொறுப்பும் விஜய் மீது விழுகிறது.

ஆக வில்லன்களின் சதியை முறியடித்து கடத்திய பெண்ணை காதலனுடன் சேர்த்து வைத்து, வில்லன்கள் இருவரையும் தம்பதிகள் இருக்கும் சிறையிலே தள்ளி அவர்களை விடுவிப்பதோடு கதை முடிகிறது.இந்த தம்பதிகள் விஜய்க்கு என்ன வேணுமுன்னு தெரியாதவங்க வெள்ளி திரையிலே காண்க விடை கிடைக்கும். இடைவேளைக்கு அப்புறம் படம் இவ்வளவு சீக்கிரமா முடிந்து விட்டதுன்னு யாரவது நினைத்தால் படத்தோட வேகம் அப்படி.படம் முடிஞ்ச வேகத்திலே விமர்சனமும் முடியுது, முடிக்கும் முன்னாடி ஒரு குத்து வசனம்


வெறுங்கையோடு வந்தாலும் இந்த வேட்டைக்காரன் வெறுமையா போகமாட்டான்.


10 கருத்துக்கள்:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வேட்டைக்காரன் இலவச விளம்பரம் தல..,

முகவை மைந்தன் said...

//முன்னுரையை முக்காடு போட்டு மூடி விட்டு//

//படத்திலே அவரு வேலை என்னனு கண்டு பிடிப்பதே கஷ்டம், அதற்குள் படம் முடிந்து விடும்//

//ஆக காதலி கிடைச்சாச்சி இனிமேல கதை கிடைக்கணும்//

//இவ்வளவு கொலை வெறி பிரச்சனைகளுக்கு நடுவிலே கதா நாயகனை எங்கே என்று வலை வீசி தேடுறவங்களுக்கு இப்போதைக்கு பதில் இல்லை, பின்னாடி வருது.//

//"வெற்றி மாறன் இனி வேட்டைக்காரன்". இது குத்து வசனம் இல்லை.//

//(டீ, காபி குடிக்க போறவங்க போயிட்டு வாங்க)//

// அடுத்துதடுத்து நடக்கும் மின்னல் வேக திருப்பங்களால், அது என்னன்னு விலா வரியா சொல்லமுடியா விட்டாலும், கடத்தப் பட்ட கதாநாயகியோட ஒரு பாட்டு முடிஞ்சு போகுது என்பதை சொல்ல முடியும்//

வி(ழுந்து) வி(ழுந்து) சி(ரிச்சேன்)!

குத்து வசனம் நல்லா இல்லை.

Anonymous said...

அப்பா... சனிபகவான் இவ்வளு கொடுமை பண்றாருன்னு , ரொம்ப கஷ்டமா இருந்தது....நீங்க சொல்லறத பாத்த , இந்த படத்தை பார்த்தா , அந்த கொடுமை எல்லாம் ஒண்ணுமில்லன்னு தோனுது ....

சந்தனமுல்லை said...

/விஜய் வேலை தேடி அலுவலகம், அலுவலகமா போவாரு, எல்லா நேர்முகத்தேர்விலே வெற்றியும் பெறுவார் ஆனா எந்த வேலையும் சேர மாட்டார், இப்படித்தான் கதை ஆரம்பிக்குது,/

avvvvv!

ஹேமா said...

படம் பாக்கலாமா வேணாமான்னு சொல்லாம விட்டா எப்பிடி !

கோவி.கண்ணன் said...

//படம் பாக்கலாமா வேணாமான்னு சொல்லாம விட்டா எப்பிடி !//

அதானே !
:)

Unknown said...

ரொம்ப டெரர்ரா இருக்கு..(படத்த சொல்லலிங்க உங்க விமர்சனத்த சொன்னேன்..)

அத்திரி said...

அமேரிக்காவுக்கு ஆட்டோ அனுப்பட்டுமா?

Karuthu Kandhasamy said...

aaga namma varungala mudhalvar romba kaaichittarunnu sollunga

வில்லன் said...

ரொம்ப சந்தோசம்.. எப்படியும் இந்த படமும் கண்டிப்பா ஊத்திக்கும் விஜய்க்கு.... வல்ல நசரேயன்.....

நசரேயன் விமர்சனம் எழுதின எந்த படமும் ஓடினதா சரித்திரம் இல்லை.... அப்படி ஓடினா எல்லாருக்கும் என் சார்பா இனிப்பு வழங்குகிறேன் நான் என் சொந்த செலவுல.....