தள தளத்த தமிழும், கவர்ச்சி இந்தியும்
உலகத்திலே ரெண்டாவதாக அதிக அளவிலே பேசப்படும் மொழி(அப்படித்தான் சொல்லுதாங்க), இந்தியாவிலே அதிக மக்கள் பேசப்படும் மொழி, இந்திய தேசிய மொழி(?) இத்தனை பெருமையுடை மொழி இந்தி மொழி, இப்பேர்ப் பட்ட மொழியை படிக்க முடியாமல் படிக்க முடியாமல் இழந்ததை எண்ணிக்கையை கணக்கிட்டு சொல்லும் அளவுக்கு திறமையுள்ள கணினி இன்றளவும் கண்டு பிடிக்கப் படவில்லை. இப்பேற்பட்ட அறிய மொழியை படிக்காமல் அழிந்து போன ஒரு ஆத்மாவின் கதை, இதை படித்து விட்டு உங்கள் கண்களிலே தாரை தாரையா கண்ணீர் வந்தா அது உலகத் தரம் வாய்ந்த இந்திக்கே சமர்ப்பணம்.
நான் கல்லூரி படித்து கொண்டு இருந்தேன், அப்பத்தான் இந்தி மொழி யைப் பத்தி நிறைய கேள்வி பட்டேன், அதற்கு முன்னாடி எல்லாம் எங்க ஊரிலே மும்பை வரைக்கும் போய் தாக்கரே குடும்பத்தோட தடி அடியை தாங்க முடியாமல் திரும்ப ஓடி வந்தவர்களின் முடி வெட்டும் கடைகளிலே மீசை இல்லாமல் வைத்திருக்கும் புகைப் படங்களிலே மட்டுமே பார்த்து இருக்கிறேன்.
அதற்கு அப்புறமா அவன் எங்கே போனாலும், என்னை ௬ப்பிடுறதே இல்லை.அதோட போச்சு ஹிந்தி படிப்பு, ஒரு வழியா ரெம்ப கஷ்டப்பட்டு முன்னாடி பின்னாடி இருந்தவர்களை பார்த்து தேர்வு எழுதி வகுப்பிலே கடைசியிலே இருந்தாலும் இருந்தாலும் முதல் வகுப்பிலே தேர்ச்சி அடைந்தேன். கல்லூரி நண்பன் சென்னைக்காரன் துண்டு போட்டு உசார் பண்ணிய எங்கள் வகுப்பு தோழியோட இந்திப் படம் பார்க்க திருச்சி போவான்,சும்மாதானே இருக்கேன்னு என்னை துணைக்கு ௬ப்பிடமாட்டான், நானே போய் இலவசமா இணைஞ்சுக்குவேன், அவனும் வேற வழி இல்லாம என்னை ஒரு நாள் ௬ப்பிட்டு போனான்.
படம் போட்ட ஒரு மணி நேரத்திலே வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டு வெளியே வந்து, அவன் ஆளை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு என்னிடம்
"கிறுக்கு பெயலே கொஞ்சமாவது அறிவு இருக்கா, நானே நம்ம ஆளுங்க ௬ட்டம் குறைவா வருமுன்னு, ஹிந்தி படம் பார்க்க வந்து கடலை போடனுமுனா, நீ ஏன்டா லோட லோட ன்னு நச்சரிச்சு கிட்டு இருக்க"
"மச்சான், அவங்க படத்திலே வாயை திறந்த மூட மாட்டங்குறாங்க, அப்படி என்னதான் அம்புட்டு நீளமா பேசுவாங்கன்னு தெரியாம மண்டை குழம்பி விட்டது"
படிப்பு முடிந்து ரெண்டு வருஷம் சென்னை சாலைகளை அளந்து விட்டுசொல்லாம கொள்ளாம பெங்களூர்க்கு ஓடி வந்தேன் , ரெம்ப ஊரை சுத்தாமவேலையும் கிடைத்தது . ரெம்ப நாள் மறந்து போய் இருந்த ஹிந்தி மறுபடியும் பரிச்சயம் ஆனது, காரணம் புதுசா கம்பெனிக்கு வடக்கூர் பெண்ணாலே, அவங்க சேர்ந்த புதிசிலே அவளுக்கு தனியா பொட்டி தட்ட கணனி இல்லாததாலே நாங்க ரெண்டு பெரும் ஒரு பொட்டிய பகிர்ந்து கிட்டோம்.
இங்கே ஒரு உண்மையை சொல்லவேண்டிய கட்டாயம், சத்தியமா அவளுக்குநான் துண்டு போடலை, காரணம் அவ அளவு கடந்த அழகா இருந்ததாள்.சுமாரா இருந்தாலே என்னைப் பார்த்து சிலுத்துகிட்டு போவாங்க, அதனாலே சீ..சீ இந்த துண்டு புளிக்குமுனு விட்டுட்டேன்.
அலுவலக வேலை விசயங்களை பத்தி உரையாடும் போது என்ன சொல்ல வாறேன்னு நான் பேசின அரைகுறை இங்கிலிபிசு அவளுக்கு புரியலை, அவ பேசின முழு இங்கிலிபிசு எனக்கு புரியலை.வெறுத்து போன அவள் ஒரு நாள் "நீ ஏன் இந்தி படிக்க ௬டாதுன்னு, எங்க அப்பா மராட்டி, ஆனா இந்தி வாத்தியாரு, நானும் ஒரு குட்டி வாத்தியார் தான்னு சொன்னா"
அம்புட்டு அழகா இருக்கவகிட்ட முடியாதுன்னு சொல்ல மனசு வரலை, இந்தியோட சேர்த்து காதல் பாடமும் வராதன்னு நப்பு ஆசையிலேயும், ஒரு பாடத்திலே ரெண்டு பரிச்சையிலே தேர்வு அடைவோம் என்ற நம்பிக்கையிலும், சம்மதம் சொன்னேன்.
ஒருவாரம்,ரெண்டு வாரம், மூனு வாரம் போச்சி நான் "நமஸ்தே" யை தாண்டலை, "அவ என்ன மச்சான் எப்படி இருக்கன்னு" நமிதா அக்கா மாதிரி டமில் பேச ஆரமிச்சிட்டா.
ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தமிழ் பாட்டு போட்டு காட்டினேன், மின்னலே வசீகரா பாட்டை கேட்டுட்டு, பாடல் ரெம்ப நல்லா இருக்குன்னு சொன்னா , அதையே சாக்கா வச்சி பிரண்ட்ஸ் படம் பார்க்க ௬ட்டிட்டு போனேன், வடிவேலு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சவா, தமிழ் நாட்டிலே எவ்வளவோ திறமைகள் இருக்கு, எனக்கெல்லாம் தெரியாம போச்சி, நான் இது நாள் வரைக்கும் சூரியன் உதிக்கிறதும், மறையறதும் மும்பையிலே தான்ன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்.
பூனை கண்ணை மூடி கிட்டு பால் குடிச்சா, உலகமே இருட்டுன்னு நினைக்குமாம் என்ற பழமொழி ஞாபகம் வந்தாலும், அரை மணி நேரமா இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்ல ன்னு யோசித்து முடியாம விட்டுட்டேன்.
அதன் பின் நிறைய தமிழ் வார்த்தைகள் சொல்லி கொடுத்தேன்.ஒரு நாள் என்னோட பெயருக்கு என்ன அர்த்தமுன்னு கேட்டா
"ரெம்ப அழகானவன்னு" சொன்னேன்.அப்படியே பேய் அறைந்த மாதிரி ஆகிட்டா, அடுத்த ரெண்டு நாள் அலுவலகம் வரலை, என் அழகை பார்த்து மயங்கி விழுந்து விட்டாளோன்னு நினைச்சேன், ரெண்டு நாள் கழிச்சி வந்தவகிட்ட "என்னாச்சி" ன்னு கேட்டேன்.
மாரடைப்பு வருகிற மாதிரி ஒரு தகவலை தந்தா, என்னாலே எப்படி அதிர்ச்சியை தாங்க முடியும்.அவளோட அழகை ௬ட அவ கிட்ட பேசவே இல்லை அதற்கு அப்புறம்.இப்படி நாங்க பாடம் படிச்சி கிட்டு இருக்கும் போதே அமெரிக்க பொருளாதாரம் சரிய எங்க பாடத்திலே மண்ணை அள்ளி போட்டுட்டாங்க, அடுத்த வாரத்திலே ஒரு நாள் எங்க டமேஜெர் ௬ப்பிட்டாரு என்ன நடந்ததுன்னு அடுத்த மொக்கையிலே பார்க்கலாம்.
பொறுப்பு அறிவித்தல் : (உபயம் வால்பையன்) இந்த கதையை சம்பந்தம் உள்ளவர்கள் படித்தால், இது கற்பனை என கொள்க

29 கருத்துக்கள்:
Present nasareyan
//ரெம்ப அழகானவன்னு" சொன்னேன்.அப்படியே பேய் அறைந்த மாதிரி ஆகிட்டா, //
ஏன் இந்தக்கொலைவெறி
//இந்தியாவிலே அதிக மக்கள் பேசப்படும் மொழி, இந்திய தேசிய மொழி(?) இத்தனை பெருமையுடை மொழி இந்தி மொழி, //
இந்தியாவில் அதிக மக்கள் பேசப்படும் மொழி தெலுங்கு என நினைக்கின்றேன்.
//
அதற்கு முன்னாடி எல்லாம் எங்க ஊரிலே மும்பை வரைக்கும் போய் தாக்கரே குடும்பத்தோட தடி அடியை தாங்க முடியாமல் திரும்ப ஓடி வந்தவர்களின் முடி வெட்டும் கடைகளிலே மீசை இல்லாமல் வைத்திருக்கும் புகைப் படங்களிலே மட்டுமே பார்த்து இருக்கிறேன்.
//
ROTFL :0))))
//சுமாரா இருந்தாலே என்னைப் பார்த்து சிலுத்துகிட்டு போவாங்க, அதனாலே சீ..சீ இந்த துண்டு புளிக்குமுனு விட்டுட்டேன்.//
அட இந்த நசர் (நரி)துண்டுக்கே தொங்கிப் பாக்காமப் போச்சா !
(உபயம் வால்பையன்) வாலு இதெல்லாமா பண்றார் !
அருமையா வந்திருக்கு வாத்யாரே. நகைச்சுவை துள்ளி விளையாடுது.
LOL!!
செம சூப்பர்!! :))) டிஸ்கி..சான்சே இல்ல! நக்கலும் நையாண்டியும்...
/சுமாரா இருந்தாலே என்னைப் பார்த்து சிலுத்துகிட்டு போவாங்க, அதனாலே சீ..சீ இந்த துண்டு புளிக்குமுனு விட்டுட்டேன்./
ஆனாலும் நீங்க ரொம்ப நல்லலலலவர் பாஸ்!! :))))
யப்பா சாமி. காலைல எவ்வளவுதான் சிரிக்கிறது
cat closing eyesu
drink milku
on itself thinku
world becamu daarkku...
--vidhya
நசரேயன் எப்படியிருக்கீங்க!எப்படித்தான் இத்தனை குறும்புகள் உங்களுக்கு தேறுதோ:)
யார் சொன்னது உலகத்தில் இரண்டாவதாக கூடுதலாக பேசப்படும் மொழி இந்தி என்று.
மண்டரின் சீன மொழி முதலாவது. அதன் பின்பு ஆங்கிலம் ஸ்பானிஷ் அரபிக் மொழிகள் வருகின்றன.
இந்தியாவில் கூட இந்தியோடு மொழி ரீதியாக நெருக்கம் உள்ள ஆனால் இந்தியில்லாத மொழிகள் உருது ராஜஸ்தானி சந்தாலி போஜ்புரி போன்ற மொழிகளை எல்லாம் சேர்த்து வேண்டுமென்றே இந்தி பேசுவோரின் எண்ணிக்கையை கூடுதலாக சுத்துமாத்து செய்து காட்டுகிறார்கள் இதெல்லாம் இந்தியாவின் மற்ற மொழி பேசுவோரை முழுவதாக ஒருமைப்பாட்டின் பேரை சொல்லி வசப்படுத்தி அடிமைகள் ஆக்குவதற்கான சதிதான் .
ஒரு மொழி உலக மொழியாவது எத்தனை பேர் அதனைப் பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்ததல்ல ,அந்த மொழியின் ஆளுமையையும் அதிகாரத்தையும் பொறுத்தது .
வெறுமனே எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டால் பெரும்பாலான உலக மக்கள் ஆங்கிலத்தை கற்க மாட்டார்கள் ,மண்டரின் சீன மொழியைத்தான் கற்பார்கள் .
ஞானசேகரன் சொன்னமாதிரி இந்தியாவில் அதிகமாகப் பேசப்படும் மொழி தெலுங்கு அல்ல ,
முதலில் இந்தி --
ஆனால் இந்திய ஆதிக்க சக்திகள் சொல்வதுபோல் நாற்பது கோடி அல்ல ,இருபது கோடிதான் ,இரண்டாவது வங்காள மொழி ,அதன்பின்புதான் மூன்றாவதாக தெலுங்கு .பின்பு மராத்தி ,ஐந்தாவதாக தமிழ் மொழி .
//
/சுமாரா இருந்தாலே என்னைப் பார்த்து சிலுத்துகிட்டு போவாங்க, அதனாலே சீ..சீ இந்த துண்டு புளிக்குமுனு விட்டுட்டேன்./
ஆனாலும் நீங்க ரொம்ப நல்லலலலவர் பாஸ்!! :P//
Yea Sare!!!!!
//ஒரு நாள் என்னோட பெயருக்கு என்ன அர்த்தமுன்னு கேட்டா
"ரெம்ப அழகானவன்னு" சொன்னேன்.அப்படியே பேய் அறைந்த மாதிரி ஆகிட்டா,//
இந்த இடத்துல இது கற்பனை இல்லைங்கிற உண்மை வெளி வந்துருச்சு!
முடியலே நர்சிம்...
கலக்கல் எழுத்துநடை
//என் அழகை பார்த்து மயங்கி விழுந்து விட்டாளோன்னு நினைச்சேன்,//
ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே.... நாய் சேகர் ஞாபகம் வருதே....
இதெல்லாம் முன்ன புனைவில் வகைப்படுத்தினாங்க..இப்ப
சம்பந்தபட்டவங்களுக்குமட்டும் பொறுப்பா
அறிவிச்சிடறீங்களா.. நடத்துங்க..நல்லா இருந்தா சரி:)
நடை கலக்கல் மச்சான்..
இப்போவாச்சும் இந்தி கத்துகிட்டாச்சா..
நல்ல காமெடி.. :-))
////அபுஅஃப்ஸர் said...
முடியலே நர்சிம்...
கலக்கல் எழுத்துநடை
November 19, 2009 7:04:00 AM EST ///
இது உங்கள் பதிவை விட காமெடியா இருக்குங்க.. :))
யப்பா இந்தக்கதையில வரது நான் இல்லைப்பா.
சம்பந்தம் உள்ளவர்தான் எழுதியே இருக்காருன்னு ஒரு பட்சி சொல்லுதே பாஸ்
சூப்பரு அருள் அருமையாய் சொன்னீங்க..! வழிமொழிகிறேன் அருள்...!
நிற்க.
மச்சி எனக்கும் இதே கஷ்டம் தான் ஹைதராபாத்ல....விடுவோமா, ஹிந்தியை விட தெலுங்கு சுலபமா கத்துக்க முடிஞ்சிது .....அதனால தெலுங்கு பேசியே காலத்த ஒட்டிட்டோம்ல :-)
பதிவு அருமைங்க....படிக்கும் போதே ஒரு உற்சாகம்...!
நல்லாய்த்தான் எழுதிறிங்க
//
"ரெம்ப அழகானவன்னு" சொன்னேன்.அப்படியே பேய் அறைந்த மாதிரி ஆகிட்டா, அடுத்த ரெண்டு நாள் அலுவலகம் வரலை, என் அழகை பார்த்து மயங்கி விழுந்து விட்டாளோன்னு நினைச்சேன், ரெண்டு நாள் கழிச்சி வந்தவகிட்ட "என்னாச்சி" ன்னு கேட்டேன்.
//
ஹையோ! ஹையோ! சிரிப்பு தாங்க முடியல!
சந்துலே சிந்து பாடுற நீங்க.. ம்ம்ம்.. ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லே.
ஆரம்பம் முதல் முடிவுவரை விறுவிருப்பா இருந்திச்சி. அந்த துண்டை மட்டும் விட்டுடாதீங்க:)
அதுதான் உங்க கட்சிக் கொடியா மாறினாலும் ஆச்சர்யம் இல்லே...:-)
//
சுமாரா இருந்தாலே என்னைப் பார்த்து சிலுத்துகிட்டு போவாங்க, அதனாலே சீ..சீ இந்த துண்டு புளிக்குமுனு விட்டுட்டேன்.
//
இப்படி வெள்ளையா ஒத்துகிட்ட மாதிரி இருக்கு:-)
நீங்க அவ்வளவு நல்லவரா :-)
செம காமெடி போங்க, சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது மருந்து வாங்க எங்களுக்கு எல்லாம் காசு அனுப்பிவையுங்க :-)
//சீ..சீ இந்த துண்டு புளிக்குமுனு விட்டுட்டேன்//
ஹ ஹ ஹ சூப்பர்.
/"ரெம்ப அழகானவன்னு" சொன்னேன்.அப்படியே பேய் அறைந்த மாதிரி ஆகிட்டா, அடுத்த ரெண்டு நாள் அலுவலகம் வரலை//
ரெம்ப அழகானவன்னு மட்டும் தான் சொன்னிங்களா இல்ல வேற எதாவது பண்ணிடிங்களா????????????
பூனை கண்ணை மூடி கிட்டு பால் குடிச்சா, உலகமே இருட்டுன்னு நினைக்குற மாதிரி!!!!!!!!!!!!!
//அதையே சாக்கா வச்சி பிரண்ட்ஸ் படம் பார்க்க ௬ட்டிட்டு போனேன்//.
ஏன் ஹிந்தி படம் பாக்க கூட்டிட்டு போயிருக்கலாம்ல.... கூட்டம் கொறைவா இருந்துருக்கும்ல........ என்ன நான் சொல்லுறது.....
உலகத்திலே ரெண்டாவதாக அதிக அளவிலே பேசப்படும் மொழி(அப்படித்தான் சொல்லுதாங்க), இந்தியாவிலே அதிக மக்கள்பேசப்படும் மொழி, இந்திய தேசிய மொழி(?) இத்தனை பெருமையுடை மொழி இந்தி மொழி, இப்பேர்ப் பட்ட மொழியை படிக்கமுடியாமல் படிக்க முடியாமல் இழந்ததை எண்ணிக்கையை கணக்கிட்டு சொல்லும் அளவுக்கு திறமையுள்ள கணினிஇன்றளவும் கண்டு பிடிக்கப் படவில்லை. இப்பேற்பட்ட அறிய மொழியை படிக்காமல் அழிந்து போன ஒரு ஆத்மாவின் கதை.
உன் குத்தமா என் குத்தமா ...
யாரை சொல்லி நானும் அழ
சிகப்பு கருப்பு வேட்டிகளோட புள்ளைக பேரனுக எல்லாம் அடுத்து இந்திலே படம் பாத் கர்த்தா ஹாய்...
Post a Comment