Sunday, November 8, 2009

பதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்!!

தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்படி இருக்கும் என் அயராத பணிகளுக்கு கிடையிடையே இல்லாத மூளையை கசக்கி பிழிந்து வெள்ளாவியிலே வைத்து துவைத்த போது எழுந்தது தான் இந்த காவிய கதை, இது பல விருதுகளை பெற்று ஆஸ்கார் உட்பட தயாரித்தவர் துண்டை போடும் அளவுக்கு வந்தால் அந்த பெருமை இதை எழுதிய எழுத்தாளரை (???) யல்ல பதிவர்களையே சேரும் என்பதை மிக்க பணிவன்போடு தெரிவித்து கொள்கிறேன்.முன்னுரையோட பேரை சொல்லி ஒரு பாராவுக்கு தேத்தியாச்சி, முன்னுரை முக்கியமல்ல கதையே முக்கியமுன்னு நினைக்கிறவங்க கிழே போகலாம்.



கதையின் ஆரம்பத்திலே கதாநாயகன் கல்லூரி வாலிபன் துண்டு போட அலைந்து திரிந்து, நொந்து, மனம் கசந்து இனிமேல துண்டு போட வழியே இல்லாத படி எல்லா கதவுகளும் அடைபட, அவன் நொந்த சோகத்தை கேட்க யாருமே இல்லாத நிலையிலே, அவன் எண்ண குமுறல்களை வெளிப்படுத்த நாதி இல்லாமல் அலைந்த போது பதிவுலகம் பற்றி ஒரு அறிமுகம் கிடைக்கிறது.


மெரீனா கடற்கரையிலே சுண்டல் வாங்கி திங்கும் போது ஒரு ௬ட்டம் கடைப் பக்கம் ஆட்கள் வரத்து குறைந்து விட்டது என தீவிர விவாதம் நடத்தி கொண்டு இருக்கையிலே, வியாபார ௬ட்டம் என நினைத்து விழுந்து அடித்து ஓடும் முன் அவன் சுண்டல் கிழே விழுந்து விட விதியும் அவனை பதிவுலத்திலே தள்ளுகிறது.


இந்த புதிய கதைகளுக்கு நாயகன் கருவாலி மாதிரி இருந்தாலும் நாயகி கனகச்சிதமா இருந்தாதான் மக்கள் ஆதரவு பெருகும் என் பதிலே கதையாசிரியர் உறுதியா இருந்த படியாலே நாயகியோட அறிமுக காட்சியிலே பாட்டு கிடையாது, ஆனா நாயகி புல்லு கட்டு, நெல் நாத்து கட்டு, இப்படி சீட்டு கட்டுகளை தவிர பல கட்டுகளை தலையிலே சுமந்து கொண்டு செல்கிற மாதிரி அறிமுகப் படுத்துகிறோம். ஒரு புறத்திலே இப்படி மாடாய் உழைப்பதை காட்டியதுமே தாய் குலங்கள் பேராதரவு கிடைத்து கிட்ட பேரு மூச்சி, மறுபுறத்திலே பி.எ படித்து விட்டு வேலை கிடைக்காகமல் செந்த உழைப்பிலே சம்பாதிப்பதற்காக வேலை செய்கிறாள், அவள் நேரம் கிடைக்கும் போது இணைய தளத்திலே ஒரு கடை யை ஆரம்பித்து வியாபாரம் செய்கிறாள்.


இப்படி காதாநாயகியை புல்லு கட்டு தூக்க வைத்து விட்டானே என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக ஓசி டிக்கெட் கிடைக்கும்.கதாநாயகன் கதாநாயகி அறிமுகம் முடிஞ்சாலும் கதைக்கு இன்னும் கரு கிடைக்கலைனு கவலை வேண்டாம், ரெண்டு பெரும் அறிமுகம் இவரு அவங்க கடையிலே பொய் கருத்து சொல்ல, இவங்களும் சொல்ல கருத்து பரி மாற்றம் நடிக்கிறது, இன்னும் காதலை பரி மாறவில்லை.


இவர்களை தவிர்த்து நாம அன்றாடம் பார்க்கிற கருத்து பரிமாற்றம், எதிர்கருத்து, எதிர் பதிவு என பல விசயங்கள் அடங்கும், இந்த மாதிரி ஒரு சம்பவத்திலே கதையின் நாயகன் பதிவுலத்திலே பழுத்த பழமாக இருந்த ஒருவரின் கருத்தை கன்னா பின்னானு விமர்சிக்க பதிவுலகப் படை அவரை இடுகைகளால் கொலை வெறி தாக்குதல் நடத்துகின்றனர். இதை பார்த்த நாயகி அவனைப் பார்த்து பரிதாப் படுகிறாள். இந்த உலகத்திலே காதல் அழகிலே மயங்கி வரலாம், பரிதாப் பட்டு அனுதாப அலை காதல் வலையாக மாறலாம், இந்த கதையின் காதல் ரெண்டாவது வகை.


அவருக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி விடுறாங்க, ஒரு பெண் எப்படி அனுப்பலாமுன்னு யாரவது கேள்வி கேட்டா, அவங்களுக்கும் ஓசி டிக்கெட் அனுப்பி வைக்கப்படும், இப்படி தன்மேல கொலை வெறி தாக்குதல் நடந்தாலும், இப்படி ஒரு உறவு கிடைத்ததாலே அதை எல்லாம் தூசி மாதிரி தட்டி விட்டு விட்டார், பதிவுலகம் விட்டு ஓடி விடுவான்னு நினச்சவங்களுக்கு கல்தா கொடுத்து விட்டு தன்னோட வித்தியாசமா எழுத்துக்காளாலே மீண்டும் வெற்றி பவனி வருகிறார், அதுவரைக்கும் காத்து வாங்கிய கடை அதற்க்கு அப்புறம் என்ன எழுதினாலும் சூடான இடுக்கைக்கு போய்விடும்.


இதற்குகிடையே நாயகியும், நாயகனும் காதலுக்கு முந்திய நிலையான குழம்பிய நிலை அல்லது மரை கழண்ட நிலைக்கு போய் விடுகிறார்கள். அவன் சொல்லுவானு இவளும், இவள் சொல்லுவான்னு அவளும் நினைத்தே ரெண்டு பாட்டை தேத்தி விடுறாங்க.


ரெண்டு பெரும் சந்திகிறதா முடிவு எடுக்கிறாங்க, இடமும் தேதியும் குறித்து விடுகிறார்கள், பதிவர் சந்திப்புகளுக்கிடையே இப்படி ஒரு ரகசிய சந்திப்பு நடைபெறுகிறது, ரெண்டு பெரும் குறித்த இடத்திலே சந்திக்கவும் செய்கிறார்கள். மறுபடிம் பாட்டா என்று கொலை வெறி கோபத்தில் இருந்தவர்கள் நிம்மதி அடைகிறார்கள், ஏன்னா அங்கே பாட்டு இல்லை, சண்டை நடக்கிறது. நாயகி அவனை திட்ட ஆரம்பித்தவள் நிறுத்தவே இல்லை. கடைசியிலே என் கடைப் பக்கம் வராதே நானும் நீ இருக்கும் திசையிலே எட்டிக் ௬ட பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டு போய்விடுகிறாள். இங்கே கண்டிப்பா இடைவேளை.


இப்படி சொல்லாம வந்த காதல் சொல்லிட்டு போகுதேன்னு கவலையா இருந்தாலும், என்ன நடந்தது என்று கண்டு பிடித்து நிரபராதி என நிருபிக்க வேண்டிய கட்டாயம், கதாநாயகி இவனை திட்டி விட்டு போகும் போது, அவன் முகத்திலே காகித கட்டுக்களை எரிந்து விட்டு செல்கிறார்கள். அதை எல்லாம் எடுத்துப் பார்த்தால் கதாநாயகி பற்றி உரையாடியிலே பேசியவைகள் நாயகியை தரக்குறைவாகவும், மேலும் பல மலையாளப் பட சிந்தனைகளையும் தன் நண்பர்களுக்கு பகிர்ந்தத்தின் அத்தாட்சிகள் இவைகள்




இதைஎல்லாம் அவன் செய்யவில்லை என இதை படிக்கிற ஒண்ணு ரெண்டு பேருக்கு மட்டுமே தெரிந்த விஷயத்தை ஊருக்கு வெளிப்படுத்த வேண்டும் ஆதாரத்துடன் இதை முடிப்பதே இரண்டாம் பாதியின் வேலை, இதற்கான ஆராட்சியில் நாயகன் நுழைந்து அனானிகளையும், கடை இல்லாமல் பெயரில் வருபர்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கிறார்.இப்படிப்பட்ட அனுபவத்திலே பாதிக்கப் பட்ட ரெண்டு மூன்று பேரை சந்தித்து அவன் நிலையை விளக்கி ௬றி அவர்களின் உதவியால் ஒரு விரிவான புலன் அறிக்கை தயார் செய்தது விடுகிறார்.


இதற்கிடையே ஒரு புதிய பெண் பதிவர் தன்னோட விபரப் பட்டியிலே அவங்களோட அழகான படத்தையும் மேலும் வசிகரிக்கும் எழுத்தையும் பார்த்து புதிதாக உருவாகிய வங்க புயல போல பதிவு உலகத்திலே வீசி கொண்டு இருக்கிறார்கள். இவங்க நாயகனோட நண்பி ஆகி விடுகிறார்கள், அது எப்படின்னு கதையிலே விபரமாக வரும், அவர்களுக்கும் கொஞ்ச நாள் கழித்து இப்படி மர்ம கடிதங்கள் வருகிறது, வரும் ஐ.டி களை வைத்தும் அவர்களை மின் அஞ்சல் நேரம் வைத்து அவர்கள் எந்த நாட்டிலே இருக்கிறார்கள் என்பதை முதலிலே கண்டு பிடிக்கிறார்கள்.


இருவரின் பின்னூட்டங்களை வைத்து நாயகி ஒரு உண்மைக்கு வந்து விடுகிறாள். சோகபாட்டு எல்லாம் இல்லை சாமி இங்கே, ஆக முகமுடிகளின் நாடு கண்டு பிடித்து விட்டாச்சி, அவர்களோட இருப்பிடம் கண்டு பிடிக்க வேண்டும், ஐ.பி ட்ரசெர் உட்பட பல மென் பொருட்களை வைத்தும். முக முடிகளின் ஐ.டி யை ஹக் செய்ய ஆர்.எஸ்.எ(RSA),ஆர்.சி6(RC6) இப்படி பல அல்கோரிதங்களை படுத்தி உண்மையை உடைக்கிறார்.


அவங்களை தேடி பிடிச்சி அடிச்சி உதைச்சி, உண்மையை வெளி உலகிற்கு கொண்டு வருகிறார். இவ்வளவு வேலை செய்யலைன்னா யாரும் கதாநாயன்னு எப்படி சொல்ல முடியும். உண்மை வந்து விட்டது, மறுபடியும் காதலியை பார்க்க போகிறார், இதற்குள் பல பேர் நாயகியை தொடர்பு கொண்டு உண்மையை சொல்லி விட்டார்கள், இருந்தாலும் நாயகிக்கு கோபம் போகலை ஏன்னா ஏற்கனவே நாயகன் சைடு துண்டு போட்டு இருக்கிறார் என்பதாலே, நாயகியை சந்திக்கும் நாயகன், அந்த அழகான பெண் மூலம் பதிவு எழுவது நான் தான் என்ற உண்மையும் நிருபிக்கிறார். ஆக எல்லா பிரச்சனையும் முடிந்து பதிவு வுலகமே திரண்டு வந்து இவங்களோட திருமணத்தை வாழ்த்துகிறது. எல்லோரும் சந்தோசமா வந்து அடுத்த நாள் இணைய தளத்தை திறந்தால் மீண்டும் அதே மாதிரி தரக்குறைவான இடுக்கைகள், பார்த்து விட்டு எல்லோரும் அதிர்ச்சியிலே உறைய வும் ஊட்டிக்கு தேனிலவு சென்ற கல்யாண தம்பதிகள் முத்தம் கொடுக்கவும் .. தொடருமுன்னு போட்டு படம் சுபம்.


28 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//இந்த மாதிரி ஒரு சம்பவத்திலே கதையின் நாயகன் பதிவுலத்திலே பழுத்த பழமாக இருந்த ஒருவரின் கருத்தை கன்னா பின்னானு விமர்சிக்க பதிவுலகப் படை அவரை இடுகைகளால் கொலை வெறி தாக்குதல் நடத்துகின்றனர். இதை பார்த்த நாயகி அவனைப் பார்த்து பரிதாப் படுகிறாள். //

காதல் தீ(ப்)பற்றும் இடம் அருமை.
:)

Vidhoosh said...

??? !!!!

அடேடே, அடாடா...அட அட..

--வித்யா

Prabhu said...

யப்பா, செம கதை. உண்மையிலயே ஆண்டாண்டு காலமா பல மொழிகளில இப்படித்தான் ஓட்டிட்டுக் இருக்கானுங்க!

அ.மு.செய்யது said...

//அது எப்படின்னு கதையிலே விபரமாக வரும், அவர்களுக்கும் கொஞ்ச நாள் கழித்து இப்படி மர்ம கடிதங்கள் வருகிறது, //

அதை வாசக சுதந்திரத்துக்கே விட்ட உங்க எழுத்தாளுமையை நினைத்தால்
அப்படியே நெகிழுதுங்க..!!!!

சந்தனமுல்லை said...

ஸ்ஸ்ஸ்....யப்ப்பா!! :))

அப்துல்மாலிக் said...

இதுலேர்ந்து என்னா தெரியுதுனா பதிவே என் உலகம், பதிவுலகம்தான் என் வாழ்க்கை அப்படினு வாழ்ந்துக்கிட்டு இருக்கீங்க தல‌

கலக்கல் சிந்தனை, ரசிச்சேன் முழுதும்

அண்ணன் வணங்காமுடி said...

//கதையின் ஆரம்பத்திலே கதாநாயகன் கல்லூரி வாலிபன் துண்டு போட//

லோ பட்ஜெட் படம் போல...

அண்ணன் வணங்காமுடி said...

கதாநாயகிக்காவது நிறைய துணி வணங்கும் எண்ணத்தில் கதாசிரியர் இருக்கிறாரா. இல்லை அவருக்கும் ஒரு துண்டு தானா.

ஹேமா said...

//என் அயராத பணிகளுக்கு கிடையிடையே இல்லாத மூளையை கசக்கி பிழிந்து வெள்ளாவியிலே வைத்து துவைத்த போது எழுந்தது தான் இந்த காவிய கதை..//

அட...அட.அநியாயத்துக்கு....!

வில்லன் said...

//நாயகன் கருவாலி மாதிரி இருந்தாலும்//

இருந்தாலும் இந்த மாதிரியெல்லாம் அண்ணன் குடுகுடுப்பய (கதா நாயகன், தியாக செம்மல்.... நாங்க (வில்லன்) துண்ட போட்டவங்களுக்கு வாழ்வு கொடுக்குற வள்ளலார்) சைக்கிள் கேப்புல நக்கல் பண்ண கூடாது..........

வில்லன் said...

//ஆனா நாயகி புல்லு கட்டு, நெல் நாத்து கட்டு, இப்படி சீட்டு கட்டுகளை தவிர பல கட்டுகளை தலையிலே சுமந்து கொண்டு செல்கிற மாதிரி அறிமுகப் படுத்துகிறோம்.//

இப்படி கதாநாயகிய காட்டனும்னா ரவிக்கை இல்லாத சேலையோட தான் கட்டனும். ஒரு மலையாள படம் பாத்த எபெக்ட் இருக்குமே (அண்ணன் குடு குடுப்பைக்கு வேலையே இருக்காதே எல்லாம் என் தல மேலயா....... அட கடவுளே......

வில்லன் said...

/இருவரின் பின்னூட்டங்களை வைத்து நாயகி ஒரு உண்மைக்கு வந்து விடுகிறாள். சோகபாட்டு எல்லாம் இல்லை சாமி இங்கே, ஆக முகமுடிகளின் நாடு கண்டு பிடித்து விட்டாச்சி, அவர்களோட இருப்பிடம் கண்டு பிடிக்க வேண்டும், ஐ.பி ட்ரசெர் உட்பட பல மென் பொருட்களை வைத்தும். முக முடிகளின் ஐ.டி யை ஹக் செய்ய ஆர்.எஸ்.எ(RSA),ஆர்.சி6(RC6) இப்படி பல அல்கோரிதங்களை படுத்தி உண்மையை உடைக்கிறார்.//

யோவ் என்ன பெரிய தங்கர்பச்சன்னு நெனப்பா..... எதோ கிராமத்துல ஆரம்பிச்சு பெரிய ஹைடெக் வேலையெல்லாம் காமிக்க. ஒழுங்கா நமக்கு தெரிஞ்ச துண்டு போடுறத பத்தி எழுதும். வீனா என்னோட கோல வெறிய தூண்டாதீரும்......போட்டு தள்ளிருவேன்.... வண்டில எப்போதும் அருவா இருக்கு தெரியும்ல.

வில்லன் said...

/தொடருமுன்னு போட்டு படம் சுபம். ///

இந்த இத்து போன கதைக்கு ரெண்டாம் பாகம் வேறயா.....அடி செருப்பால.......

சென்ஷி said...

நல்லாருக்குங்க :)

Vidhoosh said...

ஒரு தொடர் பதிவுக்கு வருமாறு உங்களை அழைக்கிறேன்.

--வித்யா

ஆ.ஞானசேகரன் said...

///என் அயராத பணிகளுக்கு கிடையிடையே இல்லாத மூளையை கசக்கி பிழிந்து வெள்ளாவியிலே வைத்து துவைத்த போது எழுந்தது தான் இந்த காவிய கதை, இது பல விருதுகளை பெற்று ஆஸ்கார் உட்பட தயாரித்தவர் துண்டை போடும் அளவுக்கு வந்தால் அந்த பெருமை இதை எழுதிய எழுத்தாளரை ///

நல்லாயிருக்கு

RAMYA said...

//
இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்படி இருக்கும் என் அயராத பணிகளுக்கு கிடையிடையே இல்லாத மூளையை கசக்கி பிழிந்து வெள்ளாவியிலே வைத்து துவைத்த போது எழுந்தது தான் இந்த காவிய கதை, இது பல விருதுகளை பெற்று ஆஸ்கார் உட்பட தயாரித்தவர் துண்டை போடும் அளவுக்கு வந்தால் அந்த பெருமை இதை எழுதிய எழுத்தாளரை (???) யல்ல பதிவர்களையே சேரும் என்பதை மிக்க பணிவன்போடு தெரிவித்து கொள்கிறேன்
//

ஆஹா ஆஹா உங்க நல்ல என்னாத்திற்கு ஒரு சல்யுட்!
ஆரம்பமே அசத்தலா...

RAMYA said...

//
இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்படி இருக்கும் என் அயராத பணிகளுக்கு கிடையிடையே இல்லாத மூளையை கசக்கி பிழிந்து வெள்ளாவியிலே வைத்து துவைத்த போது எழுந்தது தான் இந்த காவிய கதை, இது பல விருதுகளை பெற்று ஆஸ்கார் உட்பட தயாரித்தவர் துண்டை போடும் அளவுக்கு வந்தால் அந்த பெருமை இதை எழுதிய எழுத்தாளரை (???) யல்ல பதிவர்களையே சேரும் என்பதை மிக்க பணிவன்போடு தெரிவித்து கொள்கிறேன்
//

ஆஹா ஆஹா உங்க நல்ல என்னாத்திற்கு ஒரு சல்யுட்!
ஆரம்பமே அசத்தலா...

RAMYA said...

//
கதையின் ஆரம்பத்திலே கதாநாயகன் கல்லூரி வாலிபன் துண்டு போட அலைந்து திரிந்து, நொந்து, மனம் கசந்து இனிமேல துண்டு போட வழியே இல்லாத படி எல்லா கதவுகளும் அடைபட, அவன் நொந்த சோகத்தை கேட்க யாருமே இல்லாத நிலையிலே, அவன் எண்ண குமுறல்களை வெளிப்படுத்த நாதி இல்லாமல் அலைந்த போது பதிவுலகம் பற்றி ஒரு அறிமுகம் கிடைக்கிறது.
//

நொந்தவங்க கதை கேட்கத்தானே நாங்க இருக்கோம்!

எதை விட்டாலும் அந்த துண்டை மட்டும் விட்டுடாதீங்க :)

RAMYA said...

//
வியாபார ௬ட்டம் என நினைத்து விழுந்து அடித்து ஓடும் முன் அவன் சுண்டல் கிழே விழுந்து விட விதியும் அவனை பதிவுலத்திலே தள்ளுகிறது.
//

ஆஹா! என்ன ஒரு டர்னிங் பாயிண்ட்:)

RAMYA said...

//
இந்த புதிய கதைகளுக்கு நாயகன் கருவாலி மாதிரி இருந்தாலும் நாயகி கனகச்சிதமா இருந்தாதான் மக்கள் ஆதரவு பெருகும் என் பதிலே கதையாசிரியர் உறுதியா இருந்த படியாலே நாயகியோட அறிமுக காட்சியிலே பாட்டு கிடையாது,
//

ஐயோ! பாவம் இதெல்லாம் நெம்ப அநியாயம் ஒரு குத்துப் பாட்டாவது வச்சிருக்கலாம் :)

RAMYA said...

//
ஆனா நாயகி புல்லு கட்டு, நெல் நாத்து கட்டு, இப்படி சீட்டு கட்டுகளை தவிர பல கட்டுகளை தலையிலே சுமந்து கொண்டு செல்கிற மாதிரி அறிமுகப் படுத்துகிறோம். ஒரு புறத்திலே இப்படி மாடாய் உழைப்பதை காட்டியதுமே தாய் குலங்கள் பேராதரவு கிடைத்து கிட்ட பேரு மூச்சி,
//

பாத்து சூட்டிங் முடியறதுக்குள்ளே புல்லு கட்டை மாடு மேஞ்சிடப் போவுது :))

அப்புறம் கதாநாயகி மட்டும் தனியா நிப்பாங்க :)

RAMYA said...

//
மறுபுறத்திலே பி.எ படித்து விட்டு வேலை கிடைக்காகமல் செந்த உழைப்பிலே சம்பாதிப்பதற்காக வேலை செய்கிறாள், அவள் நேரம் கிடைக்கும் போது இணைய தளத்திலே ஒரு கடை யை ஆரம்பித்து வியாபாரம் செய்கிறாள்.
//

அது சரி ரொம்ப உருக்கமா சொல்லி இருக்கீங்க:((

RAMYA said...

//
ரெண்டு பெரும் அறிமுகம் இவரு அவங்க கடையிலே பொய் கருத்து சொல்ல, இவங்களும் சொல்ல கருத்து பரி மாற்றம் நடிக்கிறது, இன்னும் காதலை பரி மாறவில்லை.
//

ஹையோ! ஹையோ! உண்மையான படம் பாக்குறது போலவே இருக்கு:)

RAMYA said...

//
இவர்களை தவிர்த்து நாம அன்றாடம் பார்க்கிற கருத்து பரிமாற்றம், எதிர்கருத்து, எதிர் பதிவு என பல விசயங்கள் அடங்கும்
//

நம்ம வாலுவையா சொல்றீங்க
இல்லையா ஆமாவா!!

RAMYA said...

//
ரெண்டு பெரும் சந்திகிறதா முடிவு எடுக்கிறாங்க, இடமும் தேதியும் குறித்து விடுகிறார்கள், பதிவர் சந்திப்புகளுக்கிடையே இப்படி ஒரு ரகசிய சந்திப்பு நடைபெறுகிறது,
//

ம்ம்ம்... ஒண்ணும் சொல்லிக்கறமாதிரி இல்லே
கண்டிப்பா ஆட்டோதான் :))

RAMYA said...

//
நாயகி அவனை திட்ட ஆரம்பித்தவள் நிறுத்தவே இல்லை
//

எதுக்கு நிறுத்தனும்! பதிவை படிக்காம
பின்னூட்டத்தை படிச்சி பின்னூட்டம் போட்டிருப்பாரு!

அதுனாலேதான் கதாநாயகிக்கு ஒரே கோவமா வந்திருக்கும் :)

RAMYA said...

ஐயோ! என்னாங்க நான் ஏதோ படிச்சுகிட்டே வந்தேனா??

கடைசியிலே இப்படி கதையை வேறே கோணத்துலே நகர்த்தி லாவகமா பிரச்சனைகளை கையாண்டு எப்படியோ சச்சரவை முடிச்சி கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க.

இந்த கதையிலே இருந்து நீங்க பெரிய லெவெல்ல வருவீங்கன்னு தெரியுது..

நல்லா எழுதி இருக்கீங்க :-)