Tuesday, October 21, 2008

தமிழ் ஈழம் - மத்திய அரசுக்கு கேள்வி

பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரித்து வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக காரணமாக இருந்த மத்திய அரசே?தனி நாடு அந்தஸ்து வேண்டி போரடி கொண்டிருக்கும் திபெத் மக்களின் தலைவர் தாலாய்லாமாவிற்கு அடைகலம் கொடுத்து, அந்த போராளிகளை எல்லாம் தீவிர வாதிகள் என்று அங்கிகாரம் செய்ய பட்ட சீனா அரசை எதிர்த்து ஐ.நா சபையில் திபெத் தனி நாடாக அங்கிகரிக்க மண்டியிட்டு கெஞ்சுவதையே தொழிலாக கொண்டிருக்கும் மத்திய அரசே?

எங்கேயா இருக்கிற தீவில் குஜராத் இனத்தலைவனுக்கு ராணுவ ஆட்சியால் பிரச்சனை மரணவோலம் எழுப்பிய மத்திய அரசே?


தமிழ் ஈழ பிரச்சனையில் அது அவர்களின் உள்நாட்டு பிரச்சனை, அதில் தலை இட உரிமை இல்லை என்றால், மேற் கூறிய பிரச்சனைகள் எல்லாம் இந்திய உள்நாட்டு பிரச்சனைகளா?அடுத்தவர்களுக்கு ஓடி ஓடி போய் உதவி செய்யும் உங்கள் அண்டை நாட்டு பாசம் தமிழ் ஈழ பிரச்சனையில் எங்கே போய் விட்டது?


இலங்கை ஒன்னும் செவ்வாய் கிரகத்தில் இல்லை.
அடுத்த இனத்திற்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் அக்கரை களில் ஒரு விழுக்காடு வைத்தாலும் என்றோ என் சகோதர்கள் சுதந்திர காற்றை சுவாசித்து இருப்பார்கள் .
தமிழ் இனத்தை வேரோடு அழிப்பேன் என்று மார்தட்டி கொக்கரித்தது கொண்டிருக்கும் சிங்கள இனத்தீவிரவதகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?இந்திரா காந்தியை கொலை செய்த சீக்கிய இனத்தை நாட்டை விட்டு ஒதுக்கி வைத்து விட்டீர்களா?


அந்த இனத்தை சேர்ந்த ஒருவரை பிரதம மந்திரியக்கியால்லவா அழகு பார்க்கிறோம் .


அனைத்து விஷயங்களிலும் முன்னுக்கு பின் முரண்பாடுகளோடு இருக்கும் நீங்கள் தமிழர்களின் விசயத்தில் உங்கள் தார்மீக கொள்கைகளை முன் வைப்பது துளி அளவிலும் நியாயம் இல்லை
சீக்கியரை மன்னித்து மனிதமானத்தோடு பழகும் நீங்கள், தமிழ் ஈழ விசயத்தில் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?


நாட்டில் பஞ்சம்,பசி,பட்டினி, வேலை இல்லா திண்டாட்டாம் அறவே இல்லாமல் பாலும் தேனும் ஓடுவதாக நினைத்துக்கொண்டு தெற்கு ஆசிய பிரதியத்தில் ஒரு எகாதித்திய சக்தியாக விளங்க இலங்கைக்கு ஆய்தம் வழங்குகிறோம் என்று சொல்ல்வதிலே வெட்கமாக இல்லை


நீங்கள் செய்வதை எல்லாம் கண் மூடிதனமாக ஆதரிக்கும் தமிழ் இன காங்கிரஸ் தலைவர்களே, நீங்கள் விடுதலை புலிகளை வெறுக்கவில்லை, தமிழ் ஈழ இன மக்களையே வெறுக்கிறீர்கள், சிங்களன் தீவிரவாதி என்று அனைத்து தமிழ் இனத்தையல்லவா கொன்று குவிக்கிறான். நீங்கள் எல்லாம் குலத்தை அழிக்கும் கோடரி காம்புகள்எட்டும் தூரத்தில் இருந்தாலும் எங்கள் கைகளை கட்டிவிட்ட இந்திய தாயே தமிழ் இனம் காக்க வழிகொடு இல்லையேல் விடை கொடு எங்களுக்கு நாங்கள் தருகிறோம் என் இன மக்களுக்கு அமைதி காற்றை.


தமிழ் நாடு இந்திய தாயின் கீழ் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ தமிழ் ஈழம் கண்டிருப்போம்.


32 கருத்துக்கள்:

தமிழன் said...

எட்டும் தூரத்தில் இருந்தாலும் எங்கள் கைகளை கட்டிவிட்ட இந்திய தாயே தமிழ் இனம் காக்க வழிகொடு இல்லையேல் விடை கொடு எங்களுக்கு நாங்கள் தருகிறோம் என் இன மக்களுக்கு அமைதி காற்றை.தமிழ் நாடு இந்திய தாயின் கீழ் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ தமிழ் ஈழம் கண்டிருப்போம்.//////////////////////////////////////////////////////////////////////
இப்படி நினைக்க வைத்ததே இந்திய அரசாங்கத்திற்கு அவமானம் உங்களுக்கு தோன்றிய இந்த எண்ணம் அனைவருக்கும் பரவாமல் தடுக்கவேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமை.

குடுகுடுப்பை said...
This comment has been removed by the author.
குடுகுடுப்பை said...

//அடுத்தவர்களுக்கு ஓடி ஓடி போய் உதவி செய்யும் உங்கள் அண்டை நாட்டு பாசம் தமிழ் ஈழ பிரச்சனையில் எங்கே போய் விட்டது?//

இதனை தமிழக காங்கிரஸ் கட்சி காரர்கள் தலைமையிடம் கேட்பார்கள் என நம்புவோம்.

மத்திய அரசு இனியும் பொறுக்காமல் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும், அல்லது சு.சாமி சொன்னது போல் இலங்கை மாநிலததையாவது உருவாக்குங்கள்.

பாக்யா... said...

கேள்விகள், கருத்துக்கள் அருமை நண்பா.. எவன் தடுத்தாலும் ஏன் இந்தியாவே தடுத்தாலும்... தமிழ் தேசம் பிறக்கும்.. தமிழீழம் மலரும்...

வாக்காளன் said...

காங்கிரஸ் ஞானசேகரன் உளறிக்கொட்டியுள்ளான் இந்த வார ஜூ வி யில்.. அற்பன்..
மானங்கெட்ட தமிழக காங்கிரஸ்காரர்கள் வெட்ங்கெட்டு தமிழர்களிடம் ஓட்டு பிச்சை கேட்டு வருவார்கள்.. தமிழகத்தில் ஈழத்தை ஆதரிக்காத ஒரு காங்கிரஸ்காரன் கூட ஜெயிக்க கூடாது..

நசரேயன் said...

/*மத்திய அரசு இனியும் பொறுக்காமல் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும், அல்லது சு.சாமி சொன்னது போல் இலங்கை மாநிலததையாவது உருவாக்குங்கள்.*/
இலங்கை மாநிலம் நல்ல யோசனை. அடுத்து வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் சேர்க்க வேண்டும்

Anonymous said...

கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் உண்மையான காரணங்கள் இவைதான்!
பார்த்தசாரதி
இலங்கை தமிழர்படும் இன்னல்களை நினைத்து தான் நிம்மதியும் இல்லாமல், நித்திரையும் இல்லாமல் தவிப்பதாக தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி சமீபத்தில் கூறியிருந்தார். அவரது இந்த கூற்றை பார்க்கும்போது, இந்த தள்ளாத வயதிலும் எவ்வளவு சாதுரியமாக அவரால் நடிக்க முடிகிறது என்ற வியப்புதான் ஏற்படுகின்றது. ஆனால் இலங்கை தமிழருக்காக கருணாநிதி நிம்மதியையும் நித்திரையையும் இழப்பதானால், அதனை அவர் எப்போதோ இழந்திருக்க வேண்டும். அதுவும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒரு பங்காளியாக இருக்கும் கருணாநிதிக்கு, நாலரை ஆண்டுகளாக வராத இலங்கை தமிழர் மீதான பாசம், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அந்த இரண்டரை ஆண்டுகளாக வராத அக்கறை, இப்பொழுது திடீரென பொத்துக்கொண்டு வந்தது ஏன் என்ற கேள்வியை தமிழக மக்கள் கேட்பதில் தவறேதும் இல்லை.
ஏறத்தாள கடந்த கால் நூற்றாண்டாக புலிகள் செய்துவந்த படுகொலைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருப்பது அல்லது அவர்களுடன் ஊடல்பாணியில் சரசம் விடுவது, கருணாநிதியின் அரசியல் நாகரீகத்தில் அல்லது ராஜதந்திரத்தில் ஒன்று. எனவே அதைவிட்டுவிடுவோம். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் மீது இப்பொழுது திடீரென சீறிப்பாயும் கருணாநிதி, இவ்வளவு காலமும் ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் என கேட்கும் உரிமை நமக்குண்டு. இலங்கை இராணுவம் கிழக்கு மாகாணத்தில் சம்பூரை கைப்பற்றியபோது,வாகரையை கைப்பற்றியபோது, குடும்பிமலையை கைப்பற்றியபோது, கொக்கட்டிச்சோலையை கைப்பற்றியபோது,திருகோணமலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது, வடக்கில் மன்னாரை விடுதலை செய்தபோது, துணுக்காயை கைப்பற்றி முறிகண்டிவரை முன்னேறியபோது, நிம்மதியையும் நித்திரையையும் இழக்காத கருணாநிதி, இப்பொழுது பிரபாகரனின் கடைசி இருப்பிடமான கிளிநொச்சியும் முல்லைத்தீவும் பறிபோகும் நிலையில், விழித்துக்கொண்டு வீராவேசம் கொள்வதற்கு காரணம் என்ன?
மேற்குறிப்பிட்ட இடங்களிலெல்லாம் இராணுவ நடவடிக்கையின்போது இலங்கைத்தமிழர்கள் கொல்லப்படவில்லையா? அல்லது அந்தப்பகுதிகளில் வாழ்பவர்கள் எல்லாம் இலங்கைத்தமிழர்கள் இல்லையா? அல்லது இப்போதைய வீராவேசத்துக்கு ஏதாவது சொந்த சுயநலம் காரணமாக இருக்கின்றதா என தமிழகத்தின் இதர அரசியல்வாதிகளும் அரசியல் விமர்சகர்களும் பத்திரிகையாளர்களும் ஆராய்வதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில் கருணாநிதியின் அரசியல் குள்ளத்தனம் அவ்வகையானது. ஆனால் தமிழகத்தின் விடயமறிந்த அரசியல் விற்பன்னர்களின் கருத்துப்படி, கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் பிரதான காரணம் வேறு இரண்டு முக்கிய விடயங்களாகும். ஓன்று, அவரது வருங்கால அரசியல் கூட்டணி சம்பந்தமானது. மற்றது, தமிழ்நாட்டின் அனைத்துதுறை மக்களையும் கடுமையாக பாதிக்கும் மின்சாரவெட்டு சம்பந்தமானது. இந்த மின்சாரவெட்டு கிராமப்புறங்களில் எட்டுமணிநேரம் அமுலாக்கப்படுவதினால், விவசாயம்,மாணவர்களின் கல்வி, சிறுதொழிற்துறை என சகல மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பொதுவாகவே கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கை வைத்திருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மேலும் செல்வாக்கை பெற்றுவிடுமோ என கருணாநிதி அஞ்சுகிறார். இது அவரது நிம்மதி மற்றும் நித்திரையின்மைக்கு ஒரு காரணம். ஆனால் இதையும்விட அவரை வாட்டிவதைப்பது தி.மு.க. தலைமையிலான அவரது அரசியல் கூட்டணியில் ஏற்பட்ட உடைவுதான்.
கடந்த தமிழக மாநில தேர்தலில் தி.மு.க. ஒரு மகா கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. அ.தி.மு.கவையும் ம.தி;மு.கவையும் தவிர, மிகுதி அனைத்து கட்சிகளும் தி.மு.க. தலைமையிலான அக்கூட்டணியில் இடம் பெற்றன. அப்படி இருந்தபோதும் கருணாநிதியால் ஏனைய கூட்டணிகட்சிகளின் உதவியுடன் ஒரு சிறுபான்மை அரசையே அமைக்கமுடிந்தது. 243 பேர் அங்கத்துவம் கொண்ட தமிழக சட்டசபையில், தி.மு.கவுக்கு வெறுமனே 96 ஆசனங்களே கிடைத்தன. தி.மு.கவுக்கு ஏற்பட்ட இந்த தோல்வியை கண்டு,அன்றே கருணாநிதிக்கு நிம்மதி போய்விட்டது. அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. மேற்கொண்ட அரச ஊழியர்கள், தொழிலாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் மீதான அடக்குமுறை காரணமாகவேஅ.தி.மு.கவுடன் அதிருப்தியுற்றிருந்த அரசியல்கட்சிகளை இணைத்து, தி.மு.கவால் இந்த மகாகூட்டணியை உருவாக்க முடிந்தபோதிலும்,அதற்கு மக்கள் எதிர்பார்த்த ஆதரவை வழங்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டின. மக்களுக்கு அ.தி.மு.க. மீது அதிருப்தி இருந்தபோதிலும்,தி.மு.கவுக்கு வாக்களிக்காததிற்கு கருணாநிதி உருவாக்கி வந்த குடும்ப அரசியலே பிரதான காரணம். அண்ணாதுரை,நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், சத்தியவாணிமுத்து போன்றோரால் பல தியாகங்களின் ஊடாக உருவாக்கிய தி.மு.கவை, கருணாநிதி தனது குள்ள தந்திரங்களின் மூலம் இதனது குடும்ப சொத்தாக மாற்றியபின்னர், சாதாரண தி.மு.க. உறுப்பினர்களுக்கு கட்சி மீதான பற்றுதல் விட்டுப்போய் நீண்டநாட்களாகிவிட்டன. இப்பொழுது கட்சியுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள், அரசபதவிகளுக்காகவும் அரசாங்க கொந்தராத்துக்களுக்காகவும், வேறு பிற சலுகைகளுக்காகவும் வந்து சேர்ந்தவர்களே. கட்சியில் எத்தனையோ சிரேஸ்ட உறுப்பினர்கள் இருக்க, தனது மகன் ஸ்டாலினை தனக்குப்பின் அடுத்த முதலமைச்சராக்க கருணாநிதி திட்டமிட்டு வேலை செய்து வருகின்றார். அத்துடன் தனது மகள் கனிமொழியை ராஐயசபா உறுப்பினராக்கியதுடன், அவரை மத்திய மத்திய அமைச்சரவையிலும் சேர்க்க முயன்று வருகின்றார். (ஆனால் கனிமொழியின் தயாரும்,கருணாநிதியின் மூன்றாவது மனைவியுமான ராசாத்தி அம்மாள், தனது மகளை கருணாநிதிக்குப்பின் முதலமைச்சராக்க வேண்டும் என வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு பெண்ணை நிறுத்துவது கூடுதலான பயனைக்கொடுக்கும் என கருணாநிதிக்கு நெருக்கமான சிலரும் ஆலோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கெனவே தயாநிதி மாறன் விவகாரத்தால் சீர்குலைந்திருக்கும் குடும்ப விவகாரம், இதனால் மேலும் சிக்கலுக்குள் உள்ளாகிவிடுமோ என்ற கவலையும் கருணாநிதியைப் பீடித்துள்ளது என விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர்)
இத்தகைய ஒரு சூழலில்,தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே அவருக்கு தினமும் தொந்தரவு கொடுத்துவந்த,ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியை கருணாநிதியே வெளியேற்றிவிட்டார். ‘இங்கில்லாவிட்டால் அங்கு’என்பது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் எழுதப்படாத விதி என்பதால், ராமதாஸ் அடுத்த தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பார் என்பது நிச்சயம். இந்த சூழ்நிலையில் கருணாநிதிக்கு மேலும் ஒரு துரதிஸ்டம் நிகழ்ந்துவிட்டது. அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுஆயுத ஒப்பந்த விவகாரத்தால், இடதுசாரி கட்சிகள் மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியபோது, கருணாநிதி அவ்வாறு செய்யாமல் அதை ஆதரித்து வாக்களித்து இடதுசாரிகளின் வெறுப்பை தேடிக்கொண்டுவிட்டார். அதனால் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் (சி.பி.ஐ.(எம்),சி.பி.ஐ.) தமிழ்நாட்டில் இனிமேல் தி.மு.கவுடனான கூட்டணி இல்லையென்று அறிவித்துவிட்டன. எனவே அவ்விருகட்சிகளும் கூட அடுத்த தேர்தலின்போது,அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது பெரும்பாலும் நிச்சயமாகிவிட்டது. அதை உறுதிசெய்வதுபோல ஒக்டோபர் 2ந் திகதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)இலங்கை தமிழர் பிரச்சினையை ஒட்டி ஏற்பாடு செய்த உண்ணாவிரதத்துக்கு தி.மு.க. அழைக்கப்படாததுடன், அ.தி.மு.கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் தாக்கத்தால் கவலைக்குள்ளான கருணாநிதி, ஒரு பத்திரிகை அறிக்கை மூலம் வெளிப்படையாகவே தனது கவலையை தெரியப்படுத்தியிருந்தார். அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்து உரையாடியுமிருந்தார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் உறவினரான தா.பாண்டியன், சென்ற தேர்தலின்போதே அ.தி.மு.கவுடன் கூட்டுச்சேரும் முயற்சியில் ஈடுபட்டவர் என்பது தமிழக அரசியல் வட்டாரங்கள் நன்கு அறிந்த ஒரு விடயம். இதனால் கருணாநிதியின் நிம்மதியும் நித்திரையும் மேலும் குலைவதற்கு இதுவும் ஒரு காரணம்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜயகாந்,தனது கட்சி யாருடனும் கூட்டுச்சேராது என்று அடிக்கடி சொல்லி வந்தாலும், (கருணாநிதி அவரது முதலாவது எதிரியாக இருப்பதால்) கடைசி நேரத்தில் ஜெயலலிதாவுடன் சேரக்கூடும் என்ற பயம் கருணாநிதிக்கு உண்டு. பெரும் செல்வாக்கு எதுவும் இல்லாவிட்டாலும்,திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் வெற்றிக்காற்று எந்தப்பக்கம் வீசுகின்றது என்று பார்த்து, அ.தி.மு.க. பக்கம் சேர்ந்துவிடுவார். பணத்துக்காக புலிகளுக்கு சார்பாக தீவிரமாக குலைத்துவந்தாலும், திருமாவளவன் அரசியல் இலாபத்துக்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர தயங்கப்போவதில்லை. ஏற்கனவே கடந்த தேர்தலின் போது,அ.தி.மு.க. அணியில் நின்று தேர்தலில் வென்றபின்னரே, சுயலாபம் கருதி திருமாவளவன் தி.மு.க. அணிக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை இவ்வாறு போனால் தி.மு.கவையும் காங்கிரசையும் தவிர்ந்த ஏனைய அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய மகா கூட்டணியாக அ.தி.மு.க. கூட்டணி அமைவதுடன், அடுத்த தமிழக அரசாங்கம் ஜெயலலிதா தலைமையில் அமையும் என்பதும் திண்ணம். இந்த தலையிடி நிலைமைதான் கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் பிரதான காரணம். உண்மையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) தன்னை உண்ணாவிரதத்துக்கு அழைக்கவில்லை என்றதும்தான், கருணாநிதிக்கு இலங்கை தமிழர்மீது திடீர் அக்கறை பிறந்தது. அதனால் சென்னை மாங்கொல்லையில் கூட்டம்போட்டு,தான் இலங்கை தமிழர்; பிரச்சினையில் அக்கறையுடன் இருப்பதாக காட்ட முயன்றார். அப்பொழுதும் அவருக்கு திருப்தி வரவில்லை. கூட்டணிக் கட்சிகள் தன்னுடன்தான் இருக்கின்றன என காட்டவேண்டுமே என எண்ணினார். அதற்காக சர்வகட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதில் அவரது முன்னைய கூட்டணி கட்சிகளான பா.ம.க.,இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் என்பன கலந்துகொண்டது அவருக்கு சற்று மகிழ்ச்சியேயாயினும், அவர்கள் தொடர்ந்தும் கூட்டணியில் இருப்பார்களா என்ற சந்தேகமும் அவரது மனதை அரித்துக்கொண்டே இருக்கின்றது. அதனால் இரு வாரங்களுக்குள் இலங்கையில் மத்திய அரசாங்கம் தலையிட்டு இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தாவிட்டால், தமிழக எம்.பிக்கள் இருவாரங்களுக்குள் பதவி விலகுவார்களென எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரசை விட்டு விலகவும் தயங்கமாட்டேன் என்றவொரு செய்தியை இடதுசாரிகளுக்கு தெரிவித்து, அவர்கள் அ..தி.மு.க. பக்கம் போகாமல் பார்த்துக்கொள்வது கருணாநிதியின் தந்திரமாகும்.
அத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.(எம்)) தமிழ் மாநில செயலாளர் என்.வரதராசன் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மகன் ஸ்டாலினையும் மகள் கனிமொழியையும் நேரடியாக அனுப்பி நலம் விசாரித்து வரச்செய்தார் அத்துடன் தேவையேற்பட்டால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியை மையமாக வைத்து நாடாளாவிய ரீதியில் உருவாக்க முயலும் மூன்றாவது அணியில் கூட, தான் இணையக்கூடும் என்ற சைகைகளையும் கருணாநிதி இடதுசாரிகளுக்கு காட்டிவருகின்றார். அதனால்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேருவதில் வெளிப்படையாக கோடிட்டுக் காட்டுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சற்று அடக்கி வாசிக்கிறது. அதற்கு காரணம் கருணாநிதி மூன்றாவது அணிக்கு தற்செயலாக வரக்கூடிய சூழல் உருவானால், அதை ஏன் கெடுப்பான் என்ற எண்ணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உண்டு. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள கூட்டணிக் குழப்பங்களால் நிம்மதியும் நித்திரையும் இழந்துள்ள கருணாநிதி, தன்னுடைய முன்னைய கூட்டணி கட்சிகளை தொடர்ந்தும் தன்னுடன் வைத்திருக்கும் ஒரு உத்தியாகவே, அடுத்ததாக இலங்கை தமிழர் பிரச்சினையை வைத்து மனித சங்கிலி போராட்டம் ஒன்றுக்கு ஒக்டோபர் 21ந் திகதி அழைப்பு விடுத்துள்ளார். (சென்னையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மனித சங்கிலி போராட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.) இப்போதைக்கு வேறு எந்தப்பிரச்சினையை வைத்து அவர்; கூட்டணி கட்சிகளை அழைத்தாலும், அவர்கள் முன்வரப்போவதில்லை என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆனால் தமிழகத்திலுள்ள் ஏறத்தாள எல்லாக்கட்சிகளும் இலங்கைத்தமிழர் பிரச்சினையை தூக்கிப்பிடித்திருப்பதால், அடுத்த தேர்தல்வரை கூட்டணி கட்சிகளை தன்பிடிக்குள் வைத்திருப்பதற்காக, இலங்கை தமிழர் பிரச்சினையை தொடர்ந்தும் ஒரு ஆயுதமாக பாவிப்பதே அவரது திட்டமாகும். இலங்கை தமிழர் படும் இன்னல்களால்தான், நிம்மதியையும் நித்திரையையும் தான் இழந்திருப்பதாக கருணாநிதி வெளியே சொல்லிக்கொண்டாலும், தன்னுடையதும் தனது குடும்ப வாரிசுகளினதும் அரசியல் எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வே அவரது அனைத்து அவலங்களுக்கும் அடிப்படைக் காரணங்களாகும். ஆனால் கருணாநிதி கையாளும் எந்தவிதமான தந்திரோபாயங்களும், அடுத்த தேர்தலில் அவரைக் காப்பாற்றி நிம்மதியையும் நித்திரையையும் கொடுக்கக்கூடிய சூழல் தமிழகத்தில் இல்லையென்பதே அங்குள்ள உண்மையான நிலவரமாகும்.
http://www.thenee.com/html/221008-2.html

நசரேயன் said...

/*
எட்டும் தூரத்தில் இருந்தாலும் எங்கள் கைகளை கட்டிவிட்ட இந்திய தாயே தமிழ் இனம் காக்க வழிகொடு இல்லையேல் விடை கொடு எங்களுக்கு நாங்கள் தருகிறோம் என் இன மக்களுக்கு அமைதி காற்றை.தமிழ் நாடு இந்திய தாயின் கீழ் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ தமிழ் ஈழம் கண்டிருப்போம்.//////////////////////////////////////////////////////////////////////
இப்படி நினைக்க வைத்ததே இந்திய அரசாங்கத்திற்கு அவமானம் உங்களுக்கு தோன்றிய இந்த எண்ணம் அனைவருக்கும் பரவாமல் தடுக்கவேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமை.


*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தீலிபன்

நசரேயன் said...

/*
காங்கிரஸ் ஞானசேகரன் உளறிக்கொட்டியுள்ளான் இந்த வார ஜூ வி யில்.. அற்பன்..
மானங்கெட்ட தமிழக காங்கிரஸ்காரர்கள் வெட்ங்கெட்டு தமிழர்களிடம் ஓட்டு பிச்சை கேட்டு வருவார்கள்.. தமிழகத்தில் ஈழத்தை ஆதரிக்காத ஒரு காங்கிரஸ்காரன் கூட ஜெயிக்க கூடாது..


*/
உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் வாக்காளன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நசரேயன் said...

/*
கேள்விகள், கருத்துக்கள் அருமை நண்பா.. எவன் தடுத்தாலும் ஏன் இந்தியாவே தடுத்தாலும்... தமிழ் தேசம் பிறக்கும்.. தமிழீழம் மலரும்...


*/

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குலமங்கலம் பாக்யா...

Anonymous said...

//காங்கிரஸ் ஞானசேகரன் உளறிக்கொட்டியுள்ளான்//

முதலில் ஜெயலலிதாவின் வாயை அடைய்த்தால்...
காங்கிரஸ் வாயை தானாக மூடும் ...

http://pakkilook.blogspot.com/2008/10/blog-post_23.html

அது சரி said...

//
தமிழ் நாடு இந்திய தாயின் கீழ் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ தமிழ் ஈழம் கண்டிருப்போம்.
//

ந‌ச‌ரேய‌ன்,

உங்க‌ளின் அனைத்து கேள்விக‌ளுக்கும் ப‌தில் உங்க‌ளின் ப‌திவின் க‌டைசி வ‌ரியிலேயே உள்ள‌து..

ஈழ‌ப் பிர‌ச்சினையில், இந்திய‌ அர‌சு சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் ஆயுத‌ம் கொடுப்ப‌த‌ன் முத‌ல்/முக்கிய‌ கார‌ண‌மே, த‌மிழ் நாடும் ஒரு கால‌த்தில் த‌னி நாடாக‌ முய‌ற்சிக்கும் என்ப‌தே..

ச‌ரித்திர‌த்தை புர‌ட்டி பார்த்தால், த‌னி நாடு வேண்டும் என்ற‌ கோரிக்கை முத‌ன் முத‌லில் இந்தியாவின் எந்த‌ ப‌குதியில் இருந்து வ‌ந்த‌து? காஷ்மீர் அல்ல‌, ப‌ஞ்சாப் அல்ல‌. சுத‌ந்திர‌த்திற்கு முன்பே, த‌னி நாடு வேண்டும் என்று கேட்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் தான்..

தி.க‌., தி.மு.க‌வின் மிக‌ அடிப்ப‌டையான‌ கொள்கை (The Principle of Foundation) ஆட்சிக்கு வ‌ருவ‌த‌ல்ல‌. த‌னித் த‌மிழ்னாடு என்ப‌தே.

"அடைந்தால் திராவிட‌ நாடு, இல்லையேல் சுடுகாடு" என்ப‌து தான் தி.க‌./ தி.மு.க‌ வின் மிக‌ முக்கிய‌மான‌ முழ‌க்க‌ம்..

1950/1960 க‌ளில், நேரு இந்தியை இந்தியாவெங்கும் திணிக்க‌ முற்ப‌ட்ட‌ போது, முற்றிலும் எதிர்த்த‌ ஒரே மாநில‌ம் த‌மிழ் நாடு தான். வேறு எந்த‌ மாநில‌மும் ந‌ம் அள‌வு எதிர்க்க‌வில்லை..

இன்றைக்கும் இந்திய‌ அர‌சின் மேல் ம‌ட்ட‌ அர‌சிய‌ல்வாதிக‌ள்/அதிகாரிக‌ள், குறிப்பாக‌ உள் துறை, பாதுகாப்பு அதிகாரிக‌ள் ம‌ட்ட‌த்தில் த‌மிழ்னாட்டு அர‌சிய‌ல் ஒரு வித‌ அச்ச‌த்துட‌னே க‌வ‌னிக்க‌ப்படுகிற‌து..

எத்த‌னை முய‌ற்சித்தும் காங்கிர‌ஸ், க‌ம்யூனிஸ்ட், பா.ஜ‌.க‌. போன்ற‌ தேசீய‌ க‌ட்சிக‌ள் த‌மிழ் நாட்டில் பெரிய‌ அள‌வில் வேரூன்ற‌ முடிய‌வில்லை. தி.மு.க‌ அதை விட்டால் அ.தி.மு.க‌ அதுவும் இல்லாவிட்டால் தே.மு.தி.க‌ என்ப‌து தான் த‌மிழ‌ர்க‌ளின் நிலைப்பாடாக‌ உள்ள‌தே த‌விர‌, தேசீய‌ க‌ட்சிக‌ளை அவ‌ர்க‌ள் சீண்டுவ‌தாக‌ தெரிய‌வில்லை..

இன்றைக்கும் இந்தியாவில் இந்தி நுழைய‌ முடியாத‌ இட‌ம் த‌மிழ்னாடே. வேறு எந்த‌ மாநில‌த்திலும் இந்த‌ நிலை இல்லை..

உண்மையை சொன்னால், த‌மிழ் நாட்டை நினைத்தால், ப‌ல‌ருக்கு வ‌யிறு க‌ல‌ங்குவ‌தாக‌ தெரிகிற‌து..

இதில் த‌மிழ் ஈழ‌ம் அமைந்தால், அது இங்குள்ள‌வ‌ர்க‌ளுக்கு ஒரு மிக‌ப்பெரிய‌ ஊக்கியாக‌ அமைய‌க்கூடும் என்ற‌ கார‌ண‌த்தினாலேயே இந்திய‌ அர‌சு சிங்க‌ள‌ர்க‌ளுக்கு ஆயுத‌ம் வ‌ழ‌ங்குவ‌தில் தீவிர‌மாக‌ இருக்கிற‌து..

இத‌ற்கு முடிவு என்ன‌? என‌க்கு தெரிய‌வில்லை!

நசரேயன் said...

/*
உண்மையை சொன்னால், த‌மிழ் நாட்டை நினைத்தால், ப‌ல‌ருக்கு வ‌யிறு க‌ல‌ங்குவ‌தாக‌ தெரிகிற‌து..

இதில் த‌மிழ் ஈழ‌ம் அமைந்தால், அது இங்குள்ள‌வ‌ர்க‌ளுக்கு ஒரு மிக‌ப்பெரிய‌ ஊக்கியாக‌ அமைய‌க்கூடும் என்ற‌ கார‌ண‌த்தினாலேயே இந்திய‌ அர‌சு சிங்க‌ள‌ர்க‌ளுக்கு ஆயுத‌ம் வ‌ழ‌ங்குவ‌தில் தீவிர‌மாக‌ இருக்கிற‌து..
*/
முற்றிலும் மறுக்க முடியாத உண்மை அது சரி

நசரேயன் said...

//காங்கிரஸ் ஞானசேகரன் உளறிக்கொட்டியுள்ளான்//

முதலில் ஜெயலலிதாவின் வாயை அடைய்த்தால்...
காங்கிரஸ் வாயை தானாக மூடும் ...

http://pakkilook.blogspot.com/2008/10/blog-post_23.html

வருகைக்கு நன்றி
பக்கி லுக்

உங்கள் கருத்தை நானும் வழி மொழிகிறேன்

Unknown said...

//அடுத்தவர்களுக்கு ஓடி ஓடி போய் உதவி செய்யும் உங்கள் அண்டை நாட்டு பாசம் தமிழ் ஈழ பிரச்சனையில் எங்கே போய் விட்டது?

இலங்கை ஒன்னும் செவ்வாய் கிரகத்தில் இல்லை.

தமிழ் இனத்தை வேரோடு அழிப்பேன் என்று மார்தட்டி கொக்கரித்தது கொண்டிருக்கும் சிங்கள இனத்தீவிரவதகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?//

Nasareyan,

The only answer is LTTE. Till Prabahran and LTTE are there you can not expect any kind of help from India. India is never going believe Prabahran and his coolies.

You might say now we are asking for support of eelam people. But Rameshwaram meeting exposed eelam people are Prabaharan are not different people. This means supporting eelam people is equal to suppoorting LTTE. Support to eelam people will only help LTTE in establishing is basement which is otherwise going to be destroyed soon.

Also you can not just ignore congress and AIDMK party in TN They have support of 20% and 30% party cadres respectively. which comes to 50%


//இந்திரா காந்தியை கொலை செய்த சீக்கிய இனத்தை நாட்டை விட்டு ஒதுக்கி வைத்து விட்டீர்களா?அந்த இனத்தை சேர்ந்த ஒருவரை பிரதம மந்திரியக்கியால்லவா அழகு பார்க்கிறோம் //

How can you compare both killings.? Indira gandhi killers were hanged to death. Moreover all the accused in Indira killers werer trailed in court. But what happened to the first accused In Rajiv killing.? How can you expct India to support for the accused to became King.?. Did Manmohan sing invloved in plot of killing Indira gandhi.?

Please answer

நசரேயன் said...

/*The only answer is LTTE. Till Prabahran and LTTE are there you can not expect any kind of help from India. India is never going believe Prabahran and his coolies.*/

இலங்கை தமிழினம் என்பது பிரபாகரன் ஒருவன் அல்ல, நாங்கள் கேட்பது எல்லாம் அங்கு உள்ள மக்களின் பாதுகாப்புக்கு என்ன பதில்?
சிங்களிகள் விடுதலை புலிகளை மனதில் கொண்டு அங்கு வாழும் தமிழர்களை எல்லாம் அழிப்பது என்ன நியாயம்?
அவர் ஒருவருக்காக ஒட்டு மொத்த தமிழினம் அழிய வேண்டுமா?

/*
You might say now we are asking for support of eelam people. But Rameshwaram meeting exposed eelam people are Prabaharan are not different people. This means supporting eelam people is equal to suppoorting LTTE. Support to eelam people will only help LTTE in establishing is basement which is otherwise going to be destroyed soon.

*/
இலங்கை தமிழர்கள் அனைவரும் விடுதலை புலிகள் என்றால், தமிழ் ஈழம் எப்போதோ வந்திருக்கும்

/*

How can you compare both killings.? Indira gandhi killers were hanged to death. Moreover all the accused in Indira killers werer trailed in court. But what happened to the first accused In Rajiv killing.? How can you expct India to support for the accused to became King.?. Did Manmohan sing invloved in plot of killing Indira gandhi.?

*/
அன்னை இந்திராவை கொன்றவர்கள், கோவிலுக்கு நேர்ந்து விட்ட காளைகள் போல, அந்த கொலைக்கு சதித்திட்டம் தீட்டியது அவர்கள் கிடையாது, இன்னும் ஆழமாக போனால் அவர்களுக்கு பணம் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் இருந்து அனுப்பட்டது, இங்குள்ள சில குருத்துவாரங்களில் அவர்களின் புகை படத்தை இன்றும் நீங்கள் காணலாம். எய்தவன் ஒருவன், அவர்கள் அம்புகள்.

கதை அப்படி இருக்க ராஜிவ் காந்தியை கொன்றவர்களுக்கு ஏன் அவர்கள் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்தார்கள்?
இதை நீங்கள் மனிதாபிமானம் மானம் என்று சொன்னால், நாங்கள் கேட்பதும் மனிதாபிமானமே


மேற் சொன்னவைகள் உங்களை திருப்தியாக வில்லை என்றால் திரும்ப வாருங்கள்

பழமைபேசி said...

தமிழனை அரசியலுக்குள் ஆழ்த்தி சுகம் காணும் இந்திய, இலங்கை அரசுகளே,
அவனும் மனிதன்தான்.

Unknown said...

//இலங்கை தமிழினம் என்பது பிரபாகரன் ஒருவன் அல்ல, நாங்கள் கேட்பது எல்லாம் அங்கு உள்ள மக்களின் பாதுகாப்புக்கு என்ன பதில்?
சிங்களிகள் விடுதலை புலிகளை மனதில் கொண்டு அங்கு வாழும் தமிழர்களை எல்லாம் அழிப்பது என்ன நியாயம்?
அவர் ஒருவருக்காக ஒட்டு மொத்த தமிழினம் அழிய வேண்டுமா?//

If that's the case why all the eelam tamils can not revolt against Prabahran and handover him to India. The people who help/support/ and be with criminals are also criminals only.

Tell me if the war stops now. Who is going to take advantage of that.? Prabahran will utlise the time to regain his strength. So let us wait for some more time till Srilankan army finish of him, the let us think about helping eelam tamils

அன்னை இந்திராவை கொன்றவர்கள், கோவிலுக்கு நேர்ந்து விட்ட காளைகள் போல

Please read the testimonies of the killers, and the judgement of killing to understand it better.

//கதை அப்படி இருக்க ராஜிவ் காந்தியை கொன்றவர்களுக்கு ஏன் அவர்கள் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்தார்கள்? //

First of all Nalini is an Indian citizen who was pregnanant and her child would be a orphan if she is no more. I agree that Its humane gesture

But how can you compare that eelam tamils. We should know the difference between helping a wounded cat and wounded tiger. Nobody will put the snake going in the wall in thier pockets. How you agree.

Anonymous said...

சகோதரர்கள் எமக்காக பேசுவது மனதிற்கு மிகவும் நிம்மதியை தருகின்றது...மிக்க நன்றி

நசரேயன் said...

/*
தமிழனை அரசியலுக்குள் ஆழ்த்தி சுகம் காணும் இந்திய, இலங்கை அரசுகளே,
அவனும் மனிதன்தான்.
*/
வங்க பழமைபேசி அப்படி விவரமா சொல்லுங்க

நசரேயன் said...

/*
சகோதரர்கள் எமக்காக பேசுவது மனதிற்கு மிகவும் நிம்மதியை தருகின்றது...மிக்க நன்றி


*/
அதெல்ல நீங்க சொல்லனுமுன்னு அவசியம் இல்லை

பழமைபேசி said...

//வங்க பழமைபேசி அப்படி விவரமா சொல்லுங்க//

வங்க தேசத்தவன் இல்ல, தமிழ்நாட்டு பழமைபேசி தான் நானு. :-0)

நசரேயன் said...

/*
//வங்க பழமைபேசி அப்படி விவரமா சொல்லுங்க//

வங்க தேசத்தவன் இல்ல, தமிழ்நாட்டு பழமைபேசி தான் நானு. :-0)


*/
மன்னிச்சு கோங்க பழமைபேசி.. எதோ வழக்கம் போல தப்பு நடந்து விட்டது, இனிமேல வராம பாத்துகிரன்.

நசரேயன் said...

/*First of all Nalini is an Indian citizen who was pregnanant and her child would be a orphan if she is no more. I agree that Its humane gesture
*/
ஒ..இந்திய குடிமகன் யாரை வேண்டுமானாலும் கொல்லாமா?
இது எனக்கு தெரியாம போச்சு.

/*
But how can you compare that eelam tamils. We should know the difference between helping a wounded cat and wounded tiger. Nobody will put the snake going in the wall in thier pockets. How you agree.
*/
ஈழம் தமிழர்களும் இந்திய தமிழர்களும் தமிழர்களே

/*
Tell me if the war stops now. Who is going to take advantage of that.? Prabahran will utlise the time to regain his strength. So let us wait for some more time till Srilankan army finish of him, the let us think about helping eelam tamils

*/
காமெடி கிமெடி பண்ணலியே?

கயல்விழி said...

இந்தியா அப்படியே அச்சு அசலாக அமரிக்காவின் க்ளோன் என்பதற்கு இந்த இலங்கைப்பிரச்சினை நல்ல உதாரணம். புரியக்கூடியவர்களுக்கு நிச்சயம் புரியும்.

நசரேயன் said...

/*
இந்தியா அப்படியே அச்சு அசலாக அமரிக்காவின் க்ளோன் என்பதற்கு இந்த இலங்கைப்பிரச்சினை நல்ல உதாரணம். புரியக்கூடியவர்களுக்கு நிச்சயம் புரியும்.
*/

கயல் நீங்க சொல்லுவது 1000 சதவிதம் உண்மை

T.V.ராதாகிருஷ்ணன் said...

நசரேயன்..மிகவும் அருமையான பதிவு....வார்த்தைக்கு வார்த்தை உண்மை..பாராட்டுகள்.

நசரேயன் said...

/*நசரேயன்..மிகவும் அருமையான பதிவு....வார்த்தைக்கு வார்த்தை உண்மை..பாராட்டுகள். */
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

மனதின் ஓசை said...

IF LTTE is not there the brutal killings of SL government would not have known to outside world.. It is because of LTTE only still tamilians are there. otherwise the whole race would ahve been wiped out..

நசரேயன் said...

/*
IF LTTE is not there the brutal killings of SL government would not have known to outside world.. It is because of LTTE only still tamilians are there. otherwise the whole race would ahve been wiped out..
*/
வாங்க மனதின் ஓசை.
உங்கள் கருத்தை முழுவதும் உண்மை

S.R.Rajasekaran said...

ஐயா தமிழக அரசியல் வாதிகளே (அட தூ இவனுகளுக்கு அடைமொழி வேற )எதுலதான் அரசியல் பண்ணனும்னு ஒரு வெவஸ்தயே இல்லையா!

மனித நேயதொட மனிதர்களை பாருங்க

அம்மா (அதுதாங்க செல்வி!)என்னடான்ன ஈழ தமிழர் எல்லாரும் விடுதலை புலி மாதிர்யும் அவங்கள பத்தி பேசுறவங்க எல்லாரும் தேச தொரோகி மாதிரிஉம் பேசுது(எது எப்படியோ மைனாரிட்டி தி மூ க அரசு பதவி விலகி A D M K பதவிக்கு வந்தா போதும்)

இது பரவாஇல்ல காப்டன்:- உண்ணாவிரத-துல கலந்துட்டு வந்து இதெல்லாம் அரசியல் ஸ்டண்ட் அப்படின்னு காமடி பண்ணுகிறார்

எது எப்படியோ முதலில் மனிதனாய் மாறுங்கள் பின்பு மனிதனை பாருங்கள்

நசரேயன் said...

வாங்க S.R.ராஜசேகரன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி