Tuesday, October 7, 2008

சரக்கு தீர்ந்து போச்சு - பாகம் 2

கதைகள் தான் தொடர் பாகங்கள் வரணுமுன்னு எந்த விதியும் இல்லை, இந்த விதியும் அதற்குள் அடங்கும்.

சரக்கு தீர்ந்து போச்சு பாகம் ஒன்னுல பெரியய்யா மருத்துவரை பத்தி பேச வேண்டிய சூழ்நிலை இப்ப நான் பேசபோறது சின்னையா மருத்துவரை பத்தி என்னடா எழுத ஏதும் இல்லாததால ஊருக்கு இளிச்ச வாயன் பிள்ளையார் கோவில் ஆண்டி மாதிரி பெருசையும் சிருசையும் பதியே எழுதுறானே யாரும் வருத்தபடாதீங்க.சரக்கு தீர தீர எல்லாரும் வரிசையா வருவாங்க.

பேச வேண்டிய விஷயம் என்னன்னா சின்னையா ஓரின சேர்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி கொடுக்கணுமுன்னு கொடி கட்டி செங்கோட்டையில நிக்காரு. சின்னயாவுக்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வருது, நல்ல வேலையா தந்தி அடிக்க சொல்லி எதிர்ப்பை சொல்லலை. ஆனா அவரு சொல்லுறது தப்பு இல்லை.அவரு சொல்லுறது ஒன்னும் உலகத்துல நடக்காதது இல்ல, நாம ஊருலயே இதை விட கேவலமான கூத்து நடக்குது. எப்படின்னு கெட்ட கிழ போங்கோ இல்லனா மேல போகலாம் .

மழை பெய்யலைனு கழுதைக்கும் நாய்க்கும் கல்யாணம், காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம், கழுதைக்கும் மனுசனுக்கும் கல்யாணம்னு கலப்பு திருமணம் பண்ணுறோம், ஐயா சதியை காக்க பிறந்த சிங்கங்கள குறிச்சுகொங்க இதுதான் உண்மையான கலப்பு திருமணம்.

ஐயா அணியில இருக்கிற காடு வெட்டி, மர வெட்டி,மண் வெட்டி எல்லாம் கையை வச்சு கிட்டு சும்மா இருந்தாலே மழை தன்னாலே வரும்.

பெண்களுக்கு செவ்வா தோஷம், நாக்குல தோஷம், மூக்குல தோஷம் இப்படி பல தோசத்தை சொல்லி தென்னை மரத்தை வச்சி தாலி கட்டுறது, வாழை மரத்தை வச்சு தாலி கட்டுறது. இப்படி பல சீர்திருத்த சேவை செய்றோம்.

கீழ் தட்டு மக்களுக்கு மட்டும்மா இப்படி, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட வாழைமரம் தான் முத்த புருஷன், பச்சன் ரெண்டாவது புருசன்னு பேச்சு.தேசிய ஒருமை பாட்டுக்கு இதை விட ஒரு நல்ல உதாரணம் இருக்க முடியாது.

நம்ம ஊரு சாமியார்கள் யாகம்னு பேரை சொல்லி நாலு ஐந்து கன்னி பெண்களை பூமிக்கு அடியில ஒரு மாசம் வரை பூஜை எல்லாம் பண்ணுவாங்க, தனியா போன அருள் கெடைக்காது, குட்டிங்களோட போன தான் பிச்சுகிட்டு கொடுகிரமாதிரி.

இந்த விஷயம் எல்லாம் செய்தி தாள்ல கொட்ட எழுத்துல வருது, நாமளும் ரசிச்சு படிக்கோம். இதைஎல்லாம் அங்கிகரிக்க நாம ஓரின சேர்க்கையும் அங்கிகரிச்சு ஆகணும். சின்னையாவும் அதை தான் சொல்லுறாரு. விழ்ப்புணர்வு இல்லமா எய்ட்ஸ் நோய் ஓரின சேர்க்கையால இலவசமாக வருதுன்னு சொல்லுறாரு, அது எப்படின்னு எனக்கு தெரியலை நான் மருத்துவம் படிகலை. ஒரு வேலை அடுத்த முறை சரக்கு தீர்ந்தால் அவரு பதில் சொல்லுவாரோ என்னவோ

மாட்டுக்கும் மனுசனுக்கும் கல்யாணம்னா மழை வரும், மன்சனுக்கும் மனுசனுக்கும் கல்யாணம்னா வர்ர மழை பகிஸ்தானுக்கா ஓடிப்போகும். இதை எல்லாம் பேசுரதாலே அனுமதி கெடைச்ச நாந்தான் முதல்ல போய் கல்யாணத்துக்கு மனு கொடுப்பேன்னு யாரும் நினைச்சு புடதீங்க.

மூட நம்பிக்கையை மூலதனமா வச்சு நாம் அடிக்கும் கும்மி களை தடுக்க சட்டம் இல்லாத போது, இதை எப்படி சட்டத்தால தடுக்க முடியும்.


14 கருத்துக்கள்:

http://urupudaathathu.blogspot.com/ said...

:-))

http://urupudaathathu.blogspot.com/ said...

நமக்கு இதுக்கு எல்லாம் கருத்து சொல்ற அளவுக்கு மூளை நஹி ..
அதனால தான்..

குடுகுடுப்பை said...

இந்த ஸ்டாக் மார்க்கெட் சரிவை நிறுத்த எதாவது எதுனா கல்யாணம் இருக்கா

குடுகுடுப்பை said...

//
உருப்புடாதது_அணிமா said
நமக்கு இதுக்கு எல்லாம் கருத்து சொல்ற அளவுக்கு மூளை நஹி ..
அதனால தான்..//
அதுக்குதான் என் பதிவை படிக்க சொல்றேன். ரொம்ப நாளா ஆளக் கானோம்

நசரேயன் said...

/*நமக்கு இதுக்கு எல்லாம் கருத்து சொல்ற அளவுக்கு மூளை நஹி ..
அதனால தான்..*/
நீங்க வந்ததே கருத்து சொன்ன மாதிரித்தான் :)

நசரேயன் said...

/*இந்த ஸ்டாக் மார்க்கெட் சரிவை நிறுத்த எதாவது எதுனா கல்யாணம் இருக்கா*/

வாஸ்து பிரகாரம் எல்லாரும் கடையை மாத்தனும். ஒரு வேலை ஆண் சிங்கத்துக்கும் மனுசனுக்கும் கல்யாணம் நடந்த மார்க்கெட் ஏறும் :)

கயல்விழி said...

நல்ல கட்டுரை நசரேயன். உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். கலாச்சாரக்காவலர்கள் இன்னும் உங்கள் கட்டுரையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

//உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட வாழைமரம் தான் முத்த புருஷன், பச்சன் ரெண்டாவது புருசன்னு பேச்சு.//

LOL

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))))))))))

நசரேயன் said...

/*நல்ல கட்டுரை நசரேயன். உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். கலாச்சாரக்காவலர்கள் இன்னும் உங்கள் கட்டுரையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

//உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட வாழைமரம் தான் முத்த புருஷன், பச்சன் ரெண்டாவது புருசன்னு பேச்சு.//

LOL/*
முதல் வருகைக்கும் கருதக்களுக்கும் நன்றி கயல்விழி

நசரேயன் said...

/*:):):)*/
நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா

Anonymous said...

வாழை மரத்துக்கும் மனுசனுக்கும் கல்யாணம் பண்ணுறதுக்கு பேசாம எதோ ரெண்டாவது மூன்றாவது கல்யாணம் பண்ணி வாட்சா எதோ 2 or 3 நாலாவது சந்தோசமா இருக்கலாமே. கொஞ்சம் யோசிங்க அய்யா.

குடுகுடுப்பை உங்க Blog லிங்க் அனுப்புங்க கொஞ்சம் Review பண்ணீ கமெண்ட் எழுதறேனே.

Anonymous said...

உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட வாழைமரம் தான் முத்த புருஷன். என்ன நான் முத்த புருசனா இருக்க மாட்டேனு சொன்னேனா. ஒருவனும் சொல்லவே இல்லயே என்கிட்டே. எல்லாம் என் நேரம் (Bad Luck) .

நசரேயன் said...

/*வாழை மரத்துக்கும் மனுசனுக்கும் கல்யாணம் பண்ணுறதுக்கு பேசாம எதோ ரெண்டாவது மூன்றாவது கல்யாணம் பண்ணி வாட்சா எதோ 2 or 3 நாலாவது சந்தோசமா இருக்கலாமே. கொஞ்சம் யோசிங்க அய்யா.

குடுகுடுப்பை உங்க Blog லிங்க் அனுப்புங்க கொஞ்சம் Review பண்ணீ கமெண்ட் எழுதறேனே.
*/
அப்படி சொல்லுங்க வில்லன், நீங்க வில்லன் இல்லை கதாநாயகன்
குடுகுபையரை இங்கே பாக்கலாம்
http://kudukuduppai.blogspot.com/

நசரேயன் said...

/*உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட வாழைமரம் தான் முத்த புருஷன். என்ன நான் முத்த புருசனா இருக்க மாட்டேனு சொன்னேனா. ஒருவனும் சொல்லவே இல்லயே என்கிட்டே. எல்லாம் என் நேரம் (Bad Luck) .
*/
எனக்கும் சொல்லவே இல்லை :)