Thursday, October 2, 2008

சரக்கு தீர்ந்து போச்சு

டாஸ்மாக் கடையிலே சரக்கு தீர்ந்து போகலை சாமிகளா, இந்தியாவிலே இருக்க(இருந்தா) ஜீவ நதியிலே கூட தண்ணி தீர்ந்து போகலாம், நம்ம காவேரி அம்மா கூட தண்ணி வத்தி மண்ணோடு மண்ணாகலாம், தமிழகத்தின் ஜீவ நதியாகிய டாஸ்மாக்குல தண்ணி பஞ்சம் வராது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.


அப்புறமா எதுக்குடா வெண்ணை தலைப்பு "சரக்கு தீந்து போச்சு" ன்னு இருக்குனு நீ கேட்டாலும் கேட்காட்டாலும் சொல்லவேண்டியது என் கடமை. எழுதி எழுதி சரக்கு தீந்து போச்சுங்க. யோசிச்சப்ப சமிப காலமா மருத்துவர் ஐயா மது ஒழிப்பு போராட்டனு பொழுது விடிஞ்சு பொழுது போன அறிக்கை விடுறாரு.

ஐயா சொல்லுறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா அவரு சொல்லுறதை எல்லாம் தண்ணியை போட்டாதான் கை தட்டனுமுனு தோனுது.

அதாகபட்டதாவது குடி மகனா பாத்து குடியை நிருத்தா விட்டால் குடியை ஒழிக்க முடியாதுங்க, திருடனா பாத்து திருந்தாட்டா திருட்டை ஒழிக்க முடியாதது மாதிரி.

ஐயா தமிழ் நாட்டுல மட்டும் மதுவை ஒழித்தால் என்னை மாதிரி குடி மகன்களை தடுக்க முடியாது, குடிகனுமுனு முடிவு எடுத்தா வட தமிழ் நாடு மக்கள் திருப்பதியிலும், மேற்கு தமிழ் நாடு மக்கள் பெங்களுரிலும், தென் மேற்கு தமிழ் நாடு பாலக்காட்டிலும், தென் தமிழ் நாடு மக்கள் திருவனந்தபுரத்திலும் போய் குடிப்பாங்க.

கிழக்கு தமிழ் நாட்டு வழி இல்லன்னு யாரும் நினைக்க கூ டாது, அவங்க கள்ள தோணி ஏறி இலங்கை வட கிழக்கு மாகாணம் போய் குடிப்பாங்க.ஆக ஒரு குடி மகன் குடிக்கணுமுன்னு முடிவெடுத்தா எப்படியும் குடிப்பன் ஐயா.


இப்படி உண்ணாம தின்னாம சேத்து வச்ச பணத்தை பக்கத்து நாடுகளுக்கு மன்னிக்கவும் பக்கத்து மாநிலங்களுக்கு போறதுக்கு எப்படி கலைஞர் ஐயா சம்மதிபாரு.வாயை கட்டி வயதை கட்டி சம்பாதித்த பணத்தை கண்ட ஊரு பயக கொண்டு போக விடமுடியுமா?


அதையும் மீறி அவரு டாஸ்மாக்கை மூடினால் நம்ம ஒரு குசேல போலீஸ் எல்லாம் குபேரன் ஆகிடுவாங்க. ஐயா நீங்க குஜராத்துல மது விலக்கு இருக்குன்னு சொல்லுறீங்க, அது பூரண மதுவிலக்கு அல்ல அங்க பட்டை சாராய விற்பனை பட்டையை கிளப்புதுங்க சாமி.

மின்சார தட்டுப்பாடு,உர தட்டுபாடு, மளிகை சமான் தட்டு பாடு இப்படி தட்டு பாடு தறிகெட்டு ஓடிகிட்டு இருக்க நம்ம தமிழ் மண்ணுல இது ஒன்னாவது தட்டுபாடு இல்லாம கிடக்குன்னு நீங்க அவரு வீட்டுக்கு பொய் வாழ்த்தனும்.

நாங்க குடிச்சாலும் குடிக்காட்டியும் குடி கெட்டுபோகும், உங்களால குடி கேட்டலும் எங்களால குடி கெடகூடாது, ஏன்னா நாங்க யாரு குடியையும் கெடுகிறது இல்ல.

நீங்க குடி குடின்னு பேசுரதாலே குடிக்காதவன் கூட குடியை பத்தி யோசிக்க ஆரமிகிறான், குடியை விட்டு விட்டு ஒரு நல்ல குடிமகனை எப்படி உருவாக்கலாமுன்னு நம்ம கலாம் பாணியிலே யோசித்தால் ஒரு வேலை பலன் தரலாம்


11 கருத்துக்கள்:

Robin said...

அரசுக்கு உண்மையிலேயே மதுவை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் 99% ஒழித்து விட முடியும். மதுக்கடைகளை மூடுவதுமட்டுமின்றி மதுபானக் கம்பெனிகளும் மூடப்படவேண்டும். கள்ளச்சாராயத்தை திறமையான நிர்வாகத்தால் பெருமளவு ஒழிக்க முடியும். தேவை; திறமையான, நேர்மையான நிர்வாகம்.

உருப்புடாதது_அணிமா said...

என்னது சரக்கு தீர்ந்து போச்சா???

(அதிர்ச்சியுடன்)

உருப்புடாதது_அணிமா said...

பாண்டிச்சேரியில முதல்ல மதுவ ஒழிக்கட்டும்.. அத பத்தி ஐயா பேச மாட்டாரு??
இவரு பேச்ச வெச்சு ஒரு பதிவா??

T.V.Radhakrishnan said...

நாங்க குடிச்சாலும் குடிக்காட்டியும் குடி கெட்டுபோகும்,

;-)))))

குடுகுடுப்பை said...

ஏன் மதுவை ஒழிக்கனும், எனக்கு ஒன்னும் புரியல.ஒருவேளை நம்ம சரக்கை பிரபலப்படுத்த மறைமுக ஏற்பாடோ.

என்னைக் கேட்டால் கள்ளுக்கடையும் திறக்க சொல்வேன்.

குடிப்பது அவனவன் இஷ்டம்.அது ஒன்றும் அயோக்கியத்தனமல்ல.

நசரேயன் said...

/*அரசுக்கு உண்மையிலேயே மதுவை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் 99% ஒழித்து விட முடியும். மதுக்கடைகளை மூடுவதுமட்டுமின்றி மதுபானக் கம்பெனிகளும் மூடப்படவேண்டும். கள்ளச்சாராயத்தை திறமையான நிர்வாகத்தால் பெருமளவு ஒழிக்க முடியும். தேவை; திறமையான, நேர்மையான நிர்வாகம்.
*/
ஐயா திறமையான நிர்வாகம் நம்ம நாட்டுல எங்க இருக்கே தெரியலை?

நசரேயன் said...

/*பாண்டிச்சேரியில முதல்ல மதுவ ஒழிக்கட்டும்.. அத பத்தி ஐயா பேச மாட்டாரு??
இவரு பேச்ச வெச்சு ஒரு பதிவா??
*/
வருகைக்கு நன்றி ஐயா..
அட ஆமாமில்ல.. பாண்டிச்சேரியை மறந்து போச்சு, அவரு கட்சி எப்படியும் ஆட்சியை பிடிக்கும்னு கனவு கண்டாரு

நசரேயன் said...

/*
நாங்க குடிச்சாலும் குடிக்காட்டியும் குடி கெட்டுபோகும்,

;-)))))
*/
நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா

நசரேயன் said...

/*என்னைக் கேட்டால் கள்ளுக்கடையும் திறக்க சொல்வேன்.

குடிப்பது அவனவன் இஷ்டம்.அது ஒன்றும் அயோக்கியத்தனமல்ல.*/
அப்படி சொல்லுங்க குடுகுடுப்பையாரே

Dinakaran said...

என்னை கேட்டா கள்ளுக் கடையும் தெறக்க வேணும். அட்லீஸ்ட் நம்ம பனைஎறிங்க வாழ்க்கை நல்ல இருக்கும். மேலும் கல்லு ஒடம்புக்கு நல்லது பிராந்திய விட.

நசரேயன் said...

/*

என்னை கேட்டா கள்ளுக் கடையும் தெறக்க வேணும். அட்லீஸ்ட் நம்ம பனைஎறிங்க வாழ்க்கை நல்ல இருக்கும். மேலும் கல்லு ஒடம்புக்கு நல்லது பிராந்திய விட.

*/
அதுக்கு தான் இந்த ஏற்ப்பாடு