Wednesday, October 15, 2008

காதல் பச்சோந்தி - இறுதி பகுதி

முதல் பாகம்

மாலினியை எதிர் பார்க்காதவனாய் " ஏய் நீ எப்ப வந்த?" பதில் சொல்லுமுன் களைப்பினால் அவளை கடந்து உள்ளே சென்றான்

கிரணை கண்ட மகிழ்சியில் சோக அலை கரையை கடந்து சந்தோஷ அலை தாண்டவமாடியது.காலையில் இருந்து நடந்தவற்றை விரிவாக ரகுராம் சொல்ல, அவனுக்கு மாலினி மீது கோபம் கத்தரி வெயில் போல ஏறியது.

"மாலினி என்ன இதெல்லாம் உளறல், நான் எதோ உன்னை காதலிப்பதாக போன மாதம் மின் அஞ்சல் அனுப்பியதாகவும்,அதற்க்கு நீ நேற்று சம்மதம் தெரிவிச்சு பதில் அனுப்பியதாகவும் உன்
பதில் தெரியாம விபரித்த முடிவு எடுத்து விட்டதாகவும் நீயே ஒரு கற்பனை பண்ணி, உன்னோட அதிக பிரசங்கி தனத்தால என் மானமே போச்சு .நம்மோட நட்பை பிரிக்கணும்னு யாரோ நான்
அனுப்புவது போல அனுப்பி இருக்கலாம், நான் உன்னை காதலித்தால் உன்னிடம் நேரிலே சொல்லி இருப்பேன். "

அவன் கேள்விகளை விட கேட்ட விதம் மாலினியை பதில் பேச விடாமல் மவுனப்படுதியது, அவளுகுள்ளகவே ஒரு குற்ற உணர்வு தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு விட்டதாக. நடந்த தவறுக்கு முழு பொறுப்பு ஏற்றும், இந்த சூழ்நிலையில் நடந்தவற்றை பேசி மீண்டும் அவமானப்பட விருப்பு இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள்.


அன்றாட வாழ்வில் நடக்கும் விசயங்களை செய்தி தாள்களின் வழியாக படிக்கிறோம், தொலைக்காட்சி வழியாக பார்க்கிறோம், காதலுக்காக தற்கொலைகள் எவ்வளவு நடகின்றன, நிலைமை இப்படி இருக்கும் போது மாலினி செய்ததை முற்றிலும் தவறு என்று சொல்லமுடியாது.


இந்த நிலையிலே கிரணுடன் பேசாமல் இருப்பதே நல்லது என் கருதி எல்லோரும் படுக்கைக்கு தயார் ஆகினார்கள். கிரண் அவனுடைய அறைக்கு சென்றான். சென்றவன் தூக்கம் வாராமல் நினைவுகளை அசை போட ஆரமித்தான்.


மாலினியுடன் நட்புரிமை பாராட்டினாலும் கடந்த ஒரு வருடமாக அவளை ஒரு தலையாக காதலித்து வந்தான், நட்பு அதற்க்கு மிக பெரிய தடையாக இருந்தது. மாலியின் நினைவுகள் அவன் தூக்கத்தை கொள்ளை கொண்டு போனது. நட்பிற்கு மூடு விழா நடத்தி காதலுக்கு அஸ்திவாரமிட மின் அஞ்சல் தட்டினான்.

எப்படியும் பதில் கிடைக்கும் என்ற எதிபார்ப்பு இருந்தது. அனுப்பிய முதல் வாரத்தில் பதிலும் அழைப்பும் வராததால், தவறு செய்து விட்டதக்க நினைத்தான்.அடுத்த வாரத்தில் அவன் எதிர்ப்பார்ப்பு அவள் மீது எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.நெடுநாள் பழகிய விஷயம் அரவோடு நின்று விட்டதால் மனம் வெற்றிடம் ஆனது, இந்த நேரத்தில் தன் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் உமா தன்னை ஒரு வருடமாக காதலிப்பதாக தன் காதலை சொன்னாள். அவன் மனதின் வெற்றிடத்தை அடைக்க அவளை ஏற்றுகொண்டான்.


புது காதல் ஆரமித்த ஐந்தாம் நாளில் மாலினியிடம் இருந்து பதில் மின் அஞ்சல் வந்தது.கடிதம் வரும் வரை காதல் வாகனம் தடை இல்லாமல் இருந்தது.கடிதம் வந்ததும் இருவரையும் ஒப்பிட்டு பார்த்து முடிவில் மாலினியே உயர்ந்தவள் என்று முடிவுக்கு வந்தவனாய், உமாவை இன்று சந்தித்து தனது வீட்டில் வேறு இடத்தில் பெண் பார்த்து ட்டதாகவும்,இனிமேல் நாம் பேசவோ பழகுவதோ நல்லதல்ல அவளை காலையில் இருந்து சமாதான படுத்தி விட்டு வருவதற்குள் இவ்வளவும் நடந்து விட்டது.

நாளையில் இருந்து மாலினி தான் உலகம் என்று நினைத்து வந்தவன் அவளின் செய்கைகளினால் வெறுப்பின் எல்லைக்கே சென்றான் .அவள் மீது இருந்த காதல் அளவை விட வெறுப்பின் அளவு அதிகமானது . அப்போது அவன் நினைத்தது அவரப்பட்டு விட்டு உமாவிடம் பொய் சொல்லி விட்டோமே.மீண்டும் நாளை காலையில் அவளை சந்தித்து உண்மையை சொல்லவேண்டும்.


தற்போது இருவரையும் ஒப்பிடும் பொது உமாவே உயர்வாக தோன்றியது. விருப்பமானதில் சிறந்ததை தேர்ந்து எடுக்கும் விதி ஆடைகளுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும் போல, யோசித்த படியே தூங்கிபோனான்.


மனிதன் மனது குரங்கு என்று இதை வைத்து சொன்னார்களோ என்னவோ. மேற்கண்ட காரணங்களினால் அவளிடம் கோபத்தில் வாய்க்கு வந்த பொய்யை சொல்லி இருப்பான் என்பது புரிந்தது.
கதவு தட்டும் சத்தம் கேட்டு கண்ணை திறக்க முடியாமல் இருந்தாலும், இடை விடாது தட்டும் ஓசையினால் கண் முழித்து கதவை திறந்தான்.

வெளியில் ரகுராம் அவர் பின்னால் காவல் துறை அதிகாரிகள்.


"அப்பா நான் தான் வீட்டுக்கு திரும்பிட்டேனு அவங்களுக்கு தகவல் கொடுக்கலையா?" கொட்டாவி விட்டு கொண்டே கேட்டான்.


காவல் துறை அதிகாரிகள் ஒருவர் "நாங்க உங்களை கைது செய்ய வந்து இருக்கிறோம்"


"கைது பண்ணுற அளவுக்கு நான்.." முடிக்கு முன்.


ஒரு பெண்ணோட தற்கொலைக்கு நீங்க காரணம், நீங்க அவள் காதலை ஏற்க மறுத்ததனால் அவள் தன்னை தானே மாய்த்துகொண்டாள்.

அப்பா என்ன சொல்லுறாங்க?

இங்கே என்ன நடக்குது ?

எனக்கே புரியலைடா?

ஐயா அந்த பொண்ணு பேரு என்னங்க?

ஏட்டையா செத்து போன பொண்ணு பேரு என்ன? உமாவோ மகேஸ்வரியோ, தம்பி நீ கிளம்பு, நீங்க காலையிலே காவல் நிலையத்தில் வங்க. கிரண்அழைத்து செல்லப்பட்டான்.


இவனை போன்ற பச்சோந்தி காதலர்களை நீதி தேவதை நிச்சயம் தண்டிப்பாள் என்ற நம்பிக்கையில் நாமும் விடை பெறுவோம்.


12 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

என்னமோ போங்க,யாரு தற்கொலை பண்ணிக்கபோறாங்க அப்படிங்கறத நல்லா யோசிக்க வெச்சிட்டீங்க.

ஆனா ஏன் ரெண்டு பேரு காதலையும் ஏத்துக்கிட்டு போலிஸ் ஸ்டேசனாண்ட ரெண்டு கல்யாணம் கட்டிருக்கலாமே.:)

நசரேயன் said...

/*என்னமோ போங்க,யாரு தற்கொலை பண்ணிக்கபோறாங்க அப்படிங்கறத நல்லா யோசிக்க வெச்சிட்டீங்க.

ஆனா ஏன் ரெண்டு பேரு காதலையும் ஏத்துக்கிட்டு போலிஸ் ஸ்டேசனாண்ட ரெண்டு கல்யாணம் கட்டிருக்கலாமே.:)
*/


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இதை படமா எடுத்தால் உங்க
முடிவை வச்சுடுடலாம் :):)

குடுகுடுப்பை said...

அப்ப நாந்தான் ஹீரோ.

நசரேயன் said...

வருகைக்கு நன்றி வருங்கால முதல்வர்
முழு நீள படம் எடுக்கும் போது நிச்சயமா சொல்லி அனுப்புறேங்க.:)

Anonymous said...

தமிழ் சினிமா உருப்படியா இருக்கது புடிகலையா

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னது அப்போ நான் ஹீரோ இல்லியா ??
( அதிர்ச்சியுடன் )

நசரேயன் said...

/*தமிழ் சினிமா உருப்படியா இருக்கது புடிகலையா*/

வாங்க அனானி,
தமிழ் சினிமாவுக்கு நான் வரலைங்கோ

நசரேயன் said...

/*என்னது அப்போ நான் ஹீரோ இல்லியா ??
( அதிர்ச்சியுடன் )*/
என்ன அப்படி சொல்லி புட்டீங்க, நீங்க இல்லாம படமா?
நமக்கு கதை பஞ்சம் வந்தாலும் வரும், காதாநாயகன் பஞ்சம் வரவே வராது :):)

குடுகுடுப்பை said...

//வருகைக்கு நன்றி வருங்கால முதல்வர்
முழு நீள படம் எடுக்கும் போது நிச்சயமா சொல்லி அனுப்புறேங்க.:)//

அப்படி எடுத்தா சொல்லாமேயே நாங்க ஆஜர்.:) எதுக்கும் ஏழெட்டு கதாநாயகி ஏற்பாடு பண்ணுங்க

நசரேயன் said...

உத்தரவு ஐயா,
மும்பையில ஒரு மாதம் முகாமிட்டு புது முகங்களை இறக்குமதி பண்ணிவிடலாம். படத்தில் பாட்டும் சண்டையும் தான் :):)

Anonymous said...

first off nala irunthuthu...second off nalla illapa.....

exspecially climax sari illa pa...

enda oru time oru nalla love story sollu da...

munnadi kalla kadhal...ippo pachonthi kadhal....
inne enna kadhalo....

நசரேயன் said...

/*first off nala irunthuthu...second off nalla illapa.....


exspecially climax sari illa pa...

enda oru time oru nalla love story sollu da...

munnadi kalla kadhal...ippo pachonthi kadhal....
inne enna kadhalo....
*/

சினிமா படத்துல தான் முக்கோண காதல் வருமா?
எங்க கதையிலும் வருமில்ல..
அடுத்த கதை காதல் இல்லாத கதையா வரும் என் நம்புவோமாக