காதல் பச்சோந்தி
நீ உன் சம்மதத்தை அவன்கிட்ட சொல்லிடியா?
ரெண்டு நாளைக்கு முன்னாடி மின் அஞ்சல் அனுப்பிவிட்டேன் என்னோட சம்மதமும் தெரிவிச்சு, ஊருக்கு அவனை பார்க்க டெல்லி யில இருந்து வாரதாகவும் சொன்னேன்.
"இப்பதானே எனக்கு எல்லாம் புரியுது,கடந்த ஒரு மாசமா கிரண் ஒழுங்கா சாப்பிடுறது இல்ல, எப்போதும் அவன் ரூம்ல லைட் எரிஞ்சு கிட்டே இருக்கும்,நீ தான் காரணமா?"
அவருக்கு பதிலாக ஒரு வெட்கம் கலந்த புன்னகை."அங்கிள் கிரண் எங்கே? நான் டெல்லி யில இருந்து தொடர்பு கொண்டேன் இங்க வந்தும் ௬ட, அவன் கைபேசி எண் தொடர்பில் இல்லன்னு சொல்லுது ."
"காலையிலே அவசரமா கிளம்பி போனான், இப்ப வந்திடுவான், நீ அவன் ரூம் மேல இருக்கு, அங்க பொய் ஓய்வு எடு,நானும் உங்க அப்பாவும் வெளியில போய்ட்டு வாரோம்."
அவருக்கு தலை ஆட்டிவிட்டு மாலினி கிரண் அறைக்கு போகிறாள், அவனது கணினி முன் உட்கார்ந்து யாஹூ இணைய தளத்திருக்கு செல்கிறாள்.
கிரனோட பெயரும், கடவுசொல்லும் அதிலே சேமித்து இருந்ததினாலே, அது அவனது இன்பாக்ஸ் தானாக சென்றது. தற்செயலாக அவன் இன்பாக்ஸ் நோட்டம் விட்ட மாலினி, அவள் கிரணுக்கு எழுதிய அனுப்பிய மின் அஞ்சல் இன்னும் வாசிக்க படவில்லை என்பதை காட்டியது.
கண்ணோட்ட பார்வையில் தட்டுப்பட்ட காகிதத்தை எடுத்து படித்தால் "இன்று கடைசி" .அவள் கைபேசியில் இருந்து கிரணை தொடர்பு கொண்டாள் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்தில் இல்லை".
காடுதீயை போல பதட்டம் அவளை பற்றி கொண்டது, மாடியை விட்டு வேகமாக கிழே இறங்கி
"அங்கிள்!!! ... அங்கிள்!!!.." சற்று தயக்கத்துடன்
"நான் என்னோட சம்மதம் தெரிவிச்சு அனுபிய மின் அஞ்சல் இன்னும் கிரண் பார்க்கவில்லை, இந்த கடிதம் அவன் டேபிள் ல இருந்தது, எனக்கு எதோ தப்பு நடக்கபோறது மாதிரி தெரியுது. கிரண் எங்கே போயிருக்கிறான், போகும் போது ஏதாவது சொல்லிவிட்டு போனானா? "
"மாலினி தேவை இல்லாமல் நீ பதட்டபடுற, அமைதியா இரு, கிரண் இப்ப வந்திடுவான்."
"அப்பா நடக்கிறதை பார்த்தல் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு, நீங்களும் மாமாவும் கிரண் கைபேசியில் அழையுங்கள் "
இருவருக்கும் மாலினிக்கு கிடைத்த பதில் தான் .ரகுராம் லேசான பதற்டத்துடன் யோசிக்க ஆரமித்தார்
அவரின் அமைதியை பாத்து மாலினி, யோசிக்க நேரம் இல்லை,உடனே காவல் துறைக்கு போகலாம்.
காவல் துறையா!!!
"எனக்கு உள்மனசு சொல்லுது எதோ தப்பு நடக்க போகுதுன்னு, அதனாலே பின் விளைவுகளை பத்தி யோசிக்காம காவல் துறைக்கு தகவல் கொடுங்க."
முதலில் மறுத்தாலும் ஒருவழியாக மாலினியின் யோசனையை ஏற்று காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு,அவர்களும் வந்து விசாரணை முடிக்கி விடப்பட்டது.
காவல் துறை கைபேசி கம்பெனியை தொடர்பு கொண்ட பொது கடைசியாக அவன் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்னில் இருந்தது தெரிய வந்தது.
தாம்பரம் பகுதிகளில் எந்த சம்பவமும் நடக்க வில்லை மேலும் இன்று ஒரு புகாரும் வரவில்லை.
சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிரணின் புகைப்படம் அனுப்பப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.அவனை யாரும் கடத்தி இருக்கலாமோ என்று கோணத்திலும் அவன் வேலை பார்க்கும் அலுவலக நண்பர்கள், தெரிந்த நண்பர்கள் அனைவரிடமும் விசாரணை நடந்தது. யாரும் அவனை இன்று காலையில் இருந்து பார்க்க வில்லை என்பதையே சொன்னார்கள் .
கிரணுக்கு நடந்தது என்னவென்று தெரியாமல் வீட்டில் அனைவரும் கலக்கத்தில் எதோ விபரிதம் நடத்து விட்டதாகவே எண்ணினார்கள்.அக்கம் பக்கம் உள்ளவர்கள் துக்கம் விசாரித்துவிட்டு சென்ற வண்ணம் இருந்தனர்.இரவு 10 மணி ஆகியும் ஒரு தகவலும் இல்லை. வந்தவர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.முதல் கட்ட விசாரணையை முடித்து கொண்டு காவல் துறையினரும் கிளம்பினர்
கடிகாரம் 11 மணி அடிக்கும் போது ரகுராம் வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.யாரோ கதவை தட்டுகிற சத்தம் கேட்டு ரகுராம், கிரணை பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லி அலுத்துப்போனவர் மாலினியை கதவை திறக்க சொன்னார்.
தற்கொலை செய்து இறந்திருக்க கூடும் என அனைவரின் யூகம் பொய் ஆகும் படி கிரண் வாசலின் நின்று கொண்டிருந்தான்.
கதவை திறந்ததும் அவள் கண்ட காட்சியை நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. யாரை தேடி அலைந்து திரிந்தார்களோ அவன் செத்து பிழைத்தவன் போல முன்னால் நின்று கொண்டிருந்தான்.
தொடரும் ..
3 கருத்துக்கள்:
கதை நல்லா இருக்கு, ஆனா என்னோட அதிகமா எழுத்துப்பிழை இருக்கு இது எனக்கு பெருத்த அவமானம்.
தகவலுக்கு நன்றி ஓரளவுக்கு திருத்தி விட்டேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment