Monday, May 3, 2010

மொக்கை கவிதைகள்

அன்பே என் இதயம் 

சுருங்கி விரிவது 
நான் உன்னை சுமந்து 
செல்வதால் 
அவள் என்னிடம் 
இதயம் நின்று விட்டால்
உன்னை 
நான்கு பேர்
சுமந்து செல்வார்கள்.
*********************************************************************************

வானவில் எவ்வளவு அழகாய்
இருக்கிறது அன்பே உன்னைபோலவே 
ஓவ்வொரு நிறத்திலும் 
லட்ச ரூபாய்க்கு உடைகள்
வாங்கி  கொடுத்தால் 
இன்னும் அழகாய் இருப்பேன் 
மனதுக்குள் 
கிட்னியை விற்கவோ, வீட்டை விற்கவோ

**********************************************************************************


காதலனே 
மூடிய என் 
முகத்தை திறக்க
இவ்வளவு நாளா?
என்ன செய்ய அன்பே 
தங்கமணி 
இப்பத்தானே ஊருக்கு போனா 

**************************************************************************************************************

மொட்டுக்களைப் புன்னகைத்தேன் 
இதழ் விரித்தது 
உன்னைப் பார்த்து புன்னகைத்தேன் 
 நீயோ
வரவேண்டி இடத்துக்கு தான் 
வந்து இருக்கிறாய் என்றாய் 

**************************************************************************************************************

அன்பே உன்னை 
காதலித்ததாலே 
ஆயுள் கைதியான் 
என்னை திருமணம் செய்தால் 
நீ 
மரண தண்டனை கைதியாவாய் 


26 கருத்துக்கள்:

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Nasareyan

ஹேமா said...

என்ன கொடுமை ந...ச...ரே....யா !

ராமலக்ஷ்மி said...

:)!

எல் கே said...

:):)

Unknown said...

தாங்க முடியல சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

தமிழ் மதுரம் said...

பின்னிட்டீங்கள் போங்கோ... நன்னாயிருக்கு.

goma said...

மொக்கை கவிதைகள் சக்கை போடு போடுது .......

vasu balaji said...

/அன்பே என் இதயம்
சுருங்கி விரிவது நான் உன்னை சுமந்து செல்வதால் அவள் என்னிடம்
இதயம் நின்று விட்டால்
உன்னை நான்கு பேர்
சுமந்து செல்வார்கள்./

அட அட!அவளை மறந்தா பிணம்தான்னு எவ்வளவு அருமையா சொல்லி இருக்கீங்க அண்ணாச்சி! அபாரம்.

/வானவில் எவ்வளவு அழகாய்
இருக்கிறது அன்பே உன்னைபோலவே ஓவ்வொரு நிறத்திலும் லட்ச ரூபாய்க்கு உடைகள்
வாங்கி கொடுத்தால் இன்னும் அழகாய் இருப்பேன் மனதுக்குள் கிட்னியை விற்கவோ, வீட்டை விற்கவோ/


ஓஓ. எவ்வளவு அழகான ஜோடி. ஒருவரை ஒருவர் எள்ளல் செய்து கொண்டு!

/மூடிய என் முகத்தை திறக்க
இவ்வளவு நாளா?என்ன செய்ய அன்பே தங்கமணி இப்பத்தானே ஊருக்கு போனா /

யாரு தங்கமணி? நாத்தனாரா?

/மொட்டுக்களைப் புன்னகைத்தேன் இதழ் விரித்தது உன்னைப் பார்த்து புன்னகைத்தேன் நீயோவரவேண்டிய இடத்துக்கு தான் வந்து இருக்கிறாய் என்றாய் /

லவ்சு பல்டாக்டராம்யா!

/அன்பே உன்னை
காதலித்ததாலே ஆயுள் கைதியான் என்னை திருமணம் செய்தால் நீ மரண தண்டனை கைதியாவாய் /

இதுதான் டாப் அண்ணாச்சி. சாவர வரைக்கும் உன்னைப் பிரியமாட்டேன்னு எடுத்துகிட்டாலும் சரி, அப்பீல்லயே ஆயுசு முழுக்கும் கழிக்கணும்னு சொன்னதா எடுத்தாலும் சரி.

ஆக கவுஜையிலதான் துண்டு போட்டு வெற்றிகரமா காதலனாக முடிஞ்சது. இது புரியாம எல்லாரும் பின்னூட்டத்துல கிண்டல் பண்றாங்க. அவ்வ்வ்வ்வ்வ்:)))

Chitra said...

அன்பே உன்னை
காதலித்ததாலே
ஆயுள் கைதியான்
என்னை திருமணம் செய்தால்
நீ
மரண தண்டனை கைதியாவாய்


....... Alright!

ஈரோடு கதிர் said...

அருமை

மிக அருமை

சூப்பர்

பின்னீட்டீங்க

கலக்கல்

மகிழ்ச்சி

நெகிழ்ச்சி

Anonymous said...

அன்பே உன்னை
காதலித்ததாலே
ஆயுள் கைதியான்
என்னை திருமணம் செய்தால்
நீ
மரண தண்டனை கைதியாவாய் //

சத்தியமாய் சொல்கிறேன் இது ஏற்கனவே பல முறை பலபேரால் பிரசுரிக்கப்பட்டது...
இதை சொந்தச் சரக்குப் போல போடாமல் , படித்ததில் பிடித்தது என்று போட்டால் நல்லாருக்கும் தல

Unknown said...

அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள் :))

கலகலப்ரியா said...

அருமை அருமை... காதலுக்கு மொக்கையென்று புதுப் பரிமாணம் கொடுத்த நீர் வாழ்க..

க.பாலாசி said...

//என்ன செய்ய அன்பே
தங்கமணி இப்பத்தானே ஊருக்கு போனா //

ஓ.... அதான் இவ்ளோ குஷியா!!!

ரைட்டு....

சந்தனமுல்லை said...

அடுத்த தளத்துக்கு லிஃப்ட் புடிச்சு போன நசரேயன் வாழ்க வாழ்க!! :-))

சந்தனமுல்லை said...

/என்ன செய்ய அன்பே தங்கமணி இப்பத்தானே ஊருக்கு போனா /

அவ்வ்வ்வ்..

சந்தனமுல்லை said...

முதல் கவிதையே டெரரா இருக்கே..இனிமேல் நசரேயன் "டெரர்" கவிஞர் நசரேயன் என்று அழைக்கப்படுவார்! :-))

INDIA 2121 said...

KAVITHAI KAVITHAI
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN

Paleo God said...

தங்கச்சியா நாய் கட்சிட்சிப்பா!!

:))

vasu balaji said...

பின்னூட்டம் பொட்டிக்குள்ளதான் போடுறம். பாதி பின்னூட்டம் காணாம போகுதே! ஹி ஹி. இடுகைல பிழை வரலாம். கோடிங்ல வந்தா என்ன பண்ண? பாருங்ணோவ்:))

அப்துல்மாலிக் said...

கவிஜ கவிஜ‌

உள் அர்த்தம் ரசித்தேன்

சாந்தி மாரியப்பன் said...

வெறுமனே கவிதைகள்ன்னே தலைப்பு கொடுத்திருக்கலாம். மொக்கைன்னு நாங்க பின்னூட்டம் போடுவோமில்ல :-))))

Anonymous said...

ஏன் இப்படி?? :)

Unknown said...

சகலகலா வல்லவர் நசர்! :)

prince said...

அதான் சொல்ல வேண்டியது எல்லோரும் சொல்லிபுட்டாங்களே நாம என்னத்த சொல்ல!!

ராஜ நடராஜன் said...

யாரது:)