Thursday, May 13, 2010

அமெரிக்காவிலே அனாதை பையைப் பார்த்தால்!!



விழிப்புணர்வுன்னு வந்திட்டா எங்க குடும்பமே சொன்ன சொல் தவற மாட்டோம். காந்தி கள்ளு குடிக்கக் ௬டாதுன்னு சொன்னதிலே இருந்து எங்க அப்பா கள்ளே குடிக்கிறதில்லை சாராயம் மட்டும் தான், எங்க அப்பா என்கிட்டே சாராயம் குடிக்க ௬டாதுன்னு சொன்னதிலே இருந்து நான் சாராயமே குடிக்கிறதில்லை,கலர், கலரா இருக்கிற தண்ணியைத் தான் குடித்தேன். இப்பக்௬ட தண்ணீர் தினம் விழிப்புணர்வு இடுகைகளைப் பார்த்து தண்ணியே கலந்து குடிக்கிறதில்லை, அப்படியே குடிக்கிறேன்.

இப்படி ஒரு விழிப்புணர்வு குடும்பத்திலே பிறந்த நான் , அமெரிக்கா வந்த உடனே வீட்டிலே இருந்து அலுவலத்திற்கு பூமி அடியிலே ஓடுற ரயிலிலே பயணம் செய்வேன்.

நம்ம அண்ணாச்சிமார்கள் வண்டியை கொண்டு வந்து இடிச்சி நியூயார்க் ரெட்டை  இரும்பு கோபுரத்தை உடைச்சதிலே இருந்து பாதுகாப்பு காரணங்களைக் காட்டி விழிப்புணர்வு செய்திகளை அறிவிப்பார்கள்.

"நாங்க எங்க கண்ணை வச்சி பார்க்கிறோம், நீங்களும் உங்க கண்ணை வச்சி பாருங்க"

"அனாதையா இருக்கிற பை படத்தை போட்டு, செய்தியிலே வந்த உடனே சொல்லாதீங்க, பார்த்த உடனே சொல்லுங்க"

"எதாவது அனாதையா பைகளை பார்த்த உடனே காவல் துறைக்கு தகவல் கொடுக்கவும்"

ரெண்டு நிமிசத்துக்கு ஒருதடவை செய்தியிலே அறிவிச்சிகிட்டு இருப்பாங்க,நான் வந்து சேர்ந்த ரெண்டே நாள்ல வரிகளையெல்லாம் மனப்பாடம் பாடம் பண்ணிட்டேன்.

நண்பனிடம் மனப்பாடம் பண்ணியதை சொல்லிக்காட்டினேன், டேய் அவன் பாதுகாப்புக்கு பத்தி பேசினா, நீ பன்னி கறியைப் பத்தி பேசுற மாதிரி சொல்லுற, அவனிடமே ஒரு தாள்ல எழுதி கொடுக்க சொல்லி நல்லா கடம் அடிச்சி ஏத்தி வச்சிகிட்டேன். இங்கிலிபிசு புரிஞ்சி படிச்சி இருந்தா, நான் இந்நேரம் செவ்வாய்கிரகம் போய் இருப்பேனே. வந்த விசயத்துக்கு வாரேன்.

ஒரு நாள் இப்படித்தான் ஒன்பது மணிக்கு போக வேண்டிய அலுவலகத்துக்கு பதினோரு மணிக்கு மின்சார ரயில் நிலையம் சென்று ரயிலுக்காக காத்து கொண்டு இருந்தேன்.

விழிப்புணர்வு குடும்பம் என்பதாலே சுத்தி அக்கம் பக்கம் பார்த்தேன், அனாதையா இருந்த பை கண்ணிலே பட்டுவிட்டது, ஒரு ரெண்டு நிமிஷம் அப்படியே கவனிச்சேன், யாரும் பையை எடுத்த மாதிரி தெரியலை,மனசுக்குள்ளே இங்கேயும் வச்சிட்டாங்க போல, இன்னைக்கு மங்களம் பாடிருவாங்களோ யோசிக்கும் போதே, அவங்க விழிப்புணர்வு விளம்பரம் வந்தது உடனே அதிலே இருந்த எண்ணை குறித்து கொண்டு,
இங்கே எது நடந்தாலும் அமெரிக்க தலைப்பு செய்தியிலே நாளைக்கு என்னோட பேருதான் வரும் என்ற கற்பனையோடு, பக்கத்திலே இருந்த தொலைபேசியை எடுத்தேன், மறுமுனையிலே வெள்ளையம்மா எடுத்து

"ஹலோ ஜென்டில்மேன், என்ன விசயமா பேசுறீங்க"

 என்னது ஜென்டில்மேனா, நான் அங்கே எல்லாம் போறதில்லைன்னு மனசிலே நினைசிகிட்டு, "இங்கே ஆள் இல்லாத பை ஒன்று அனாதையா இருக்கு, பத்து நிமிசமா யாருமே எடுக்கலை"

அப்படி சொன்னது தான் தாமதம், என்கிட்டே எந்த இடத்திலே இருக்கேன்னு ௬ட கேட்கலை, நீங்க அப்படியே நில்லுங்க, நான் பேசுறதை பக்கத்திலே இருந்து கேட்ட வெள்ளையம்மா, வெள்ளையப்பன், கருப்பையன், கருப்பம்மா எல்லாம் அடிச்சி பிடிச்சி ஓடியே போய்ட்டாங்க. எல்லோரும் ஓடுறாங்களே வாக்கு கொடுத்த விழிப்புணர்வு குடும்ப மகன் அப்படியே நின்னேன், மண்டைப் போட்டா நாளைக்கு செய்திதாளிலே  என் முகத்தை தான் தேடிகிட்டு இருப்பாங்கன்னு அப்படியே நின்றேன்.

இதற்கிடையே காவல் துறை அந்த பகுதியை எல்லாம் மக்கள் வர முடியாத படி தடுத்து விட்டார்கள், நான் இருந்த நிலையத்துக்கு மேல வானுர்தி எல்லாம் வந்து வட்டம் போடுற சத்தம் எனக்கே கேட்டது, காவல் துறையினர் படிகளிலே இறங்கி என்னை பார்த்து வந்து கொண்டு இருந்தார்கள், அவர்கள் வரும் முன்னே உயர் தூக்கியிலே இருந்து வந்த கருப்பு அண்ணாச்சி, அனாதையா இருந்த பையை எடுத்தார்.நான் வேகமா அவரிடம் போய்
"அல்லோ, அந்த பையை எடுக்காதீங்க" அவரு அதையெலாம் காதிலே வாங்கலை, நான் அவரிடம் இருந்து பையை பிடுங்க முயற்சி செய்தேன். அதற்குள் காவல் துறையும் வந்து,

"ரெண்டு பெரும் பையை கீழே வைத்து விட்டு, கையை மேல தூக்குங்கள்" இன்றைக்கு துப்பாக்கியிலே தான் சாவு போலன்னு நினைச்சிகிட்டு கையை மேல உயர்த்தினேன்.ஆனால் அண்ணாச்சி அவங்க சொன்னதை எல்லாம் கேட்காம

"யாரை பார்த்து என்னடா சொல்லுறீங்க, நான் யாருன்னு தெரியுமா?"

"நீ யாரா இருந்தாலும் நான் சொன்னதை செய்"  தெலுங்கு பட தலைப்பு மாதிரி காவல் அதிகாரி சொன்னாரு.

"ரயில் புறப்பட செய்ய வேண்டிய சாவி, இந்த பையிலே தான் இருக்கு, நான் இப்ப வண்டியை எடுக்கலைனா, எவனுமே வண்டியை எடுக்க முடியாது, எப்படி வசதி?"

"நீ யாரு?"

"நான் தான் ரயிலோட நடத்துனர், இது என்னோட பை, வயறு சரி இல்லைன்னு அவசரமா ஓய்வு அறைக்கு போயிட்டு வருங்குள்ளேயும், இந்த கருவாலி நாட்டோட அடிவயத்தையே கலங்க வைத்து இருக்கான்"

அண்ணாச்சி அப்படி சொன்ன உடனே எல்லோரும் உனக்கு எல்லாம் எவன்யா விசா கொடுத்து இங்கே ௬ட்டிட்டு வந்தான் அப்படிங்கிற மாதிரி என்னைப் பார்த்தாங்க,நான் கையை ரெண்டையும் கட்டிக்கிட்டு மன்னிச்சிடுங்க, பிழையாப் போச்சி"

நடத்துனர் பையை எடுத்திட்டு போகும் போது இருந்த காவல் அதிகாரிகளிடம் இவனை நல்லா சோதனை செய்யுங்க, ஒருவேளை எங்கேயாவது வச்சிட்டு திசை திருப்ப நாடகம் ஆடி இருக்கலாமுன்னு போற வாக்கிலே காதிலே போட்டுட்டு போயிட்டாரு, உடனே என்னையப் பிடிச்சி துருவி, துருவி, தேங்காயை துருவுற மாதிரி விசாரிச்சி, அன்னைக்கு முழுசும் அலுவலகத்துக்கு போக முடியாம ஆகிப் போச்சி, என்னோட பெயரையும் அமெரிக்க உளவுத்துறைக்கும் சொல்லி அவங்களும் குறிச்சி வச்சிகிட்டாங்க.  இப்ப எல்லாம் நான் எங்கே போனாலும் என்னையை மட்டும் தனியா ௬ப்பிட்டு போய் விசாரணை பண்ணித்தான் அனுப்புவாங்க,ஆனா இன்னும் விழிப்புணர்வை கை விடலை, குடும்ப மானத்தை இன்றைய தேதி வரைக்கும் காப்பாத்திகிட்டு இருக்கேன்.



29 கருத்துக்கள்:

தமிழ் மதுரம் said...

ஐ.. நான் தான் முதலாவது பார்வையாளன்... மிகுதி விமர்சனங்கள் விரைவில்

தமிழ் மதுரம் said...

அனுபவங்கள் ஒவ்வொன்றும் தானே எம் வாழ்க்கையின் படிக்கல். நல்லா நொந்து போயிட்டீங்கள்.

கபீஷ் said...

க்யா ஃபேமிலி, குர் குரே ஃபேமிலி:-))))

நசரேயன் said...

நன்றி கமல், இதெல்லாம் அரசியல்ல சாகசம்

//
க்யா ஃபேமிலி, குர் குரே ஃபேமிலி:-))))
//

ம்ம்ம் .. கும்மி குடும்பம்..ஆமா அது யாரு க்யா?

கபீஷ் said...

//ஆமா அது யாரு க்யா//

உங்க வளவளத்தா:)))))

ராமலக்ஷ்மி said...

//
"ரயில் புறப்பட செய்ய வேண்டிய சாவி, இந்த பையிலே தான் இருக்கு, நான் இப்ப வண்டியை எடுக்கலைனா, எவனுமே வண்டியை எடுக்க முடியாது, எப்படி வசதி?"//

சர்தான்:))!

goma said...

விழிப்புணர்வுன்னா விழிப்புணர்வு அப்படி ஒரு விழிப்புணர்வு!!!!!

நெற்றிக்கண் விழிப்புணர்வு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓவர் விழிப்புணர்வு

மங்குனி அமைச்சர் said...

டோகோமோ , நல்லா பல்பு வாங்கியிருகிக்க , வாழ்த்துக்கள்

Vidhoosh said...

நீங்க யாருன்னு எனக்கு தெரியாது என்பதை சொல்லிகிறேன்.

வளவளத்தாளை எங்கண்ணே காணும்?

Unknown said...

//இங்கிலிபிசு புரிஞ்சி படிச்சி இருந்தா, நான் இந்நேரம் செவ்வாய்கிரகம் போய் இருப்பேனே. வந்த விசயத்துக்கு வாரேன்//

யாராவது இவருக்கு இங்கிலிபிசு பிரியிற மாதிரி சொல்லிக் குடுங்களேன்.. நாமெல்லாம் பிழைச்சுக்கலாம்.. ;))

vasu balaji said...

அண்ணாச்சி. அந்த விழிப்புணர்ச்சிய கொஞ்சம் இடுகைமேல உடுங்க அண்ணாச்சி. துண்டு போட்டீங்க சரி. வார்த்தையெல்லாம் துண்டு துண்டா போட்டா எப்புடி. அவ்வ்வ்வ்.:))

malar said...

நகைச்சுவை நல்ல இருக்கு.

இதில் ஒரு நகைச்சுவை என்னான்னா நகைச்சுவைன்னு தலைபை பார்காமலே முழுதும் படிதிருக்கேன்..

எல் கே said...

nalla commedythan

ஹேமா said...

இதுக்குத்தான் சொல்றது இந்த நாளையில நல்லது செய்யவும் போகக்கூடாதெண்டு !

பாவம் நசர் நீங்க!

ISR Selvakumar said...

வெறும் ஜோக் எழுதாமல் நிஜ சம்பவங்களை நையாண்டி பாணியில் எழுதுபவர்கள் குறைவு. நீங்கள் நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதி அசத்துங்கள்!

ராஜ நடராஜன் said...

//கள்ளே குடிக்கிறதில்லை சாராயம் மட்டும் தான்,//

இன்னும் துவங்கவேயில்லை அதுக்குள்ள பஞ்சா:)

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம் .. கும்மி குடும்பம்..ஆமா அது யாரு க்யா?//

இதுக்குத்தான் நேத்து கடைல அந்த ஆர்ப்பாட்டமா:)

பா.ராஜாராம் said...

:-))

இடுகையின் வலதுபுறம், எழுத்து மறையுது பாஸ். கொஞ்சம் கவனியுங்களேன்.

அனுமானத்தில் வாசிக்க வேண்டியது இருக்கு நசர்.

அந்த பக்கம் எத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் போச்சோன்னு கவலையா இருக்கு. :-)

ராஜ நடராஜன் said...

இப்பவெல்லாம் யாரு பதிவு படிக்கிறா?ஸ்பெல் எங்க மாட்டும்ன்னுதான் நிறைய பேர் அலையறாங்க.பாதிக் கிணறு வரைக்கும் கண்ணுல மாட்டுல.

ராஜ நடராஜன் said...

//விழிப்புணர்வு குடுப்பம்//

சிக்கிடுச்சு

Radhakrishnan said...

ஹா ஹா! நன்று. அக்கம் பக்கம் விசாரிக்கிற வழக்கம் இல்லையா.

சாந்தி மாரியப்பன் said...

விழிப்புணர்வு குடுப்பம் -குடும்பம்

உயர் தூக்கி இருந்து -தூக்கியில் இருந்து

ஒரு வேலை -வேளை.

ஏதோ என்னால் ஆனது :-)))).

உடம்பு சரியில்லையா நசரேயன். எழுத்துப்பிழை கொஞ்சமா இருக்கு. உங்க வளவளத்தாளை சீக்கிரம் வரச்சொல்லுங்க :-))))))))

நசரேயன் said...

கபீஷ்:
//ஆமா அது யாரு க்யா//

//உங்க வளவளத்தா:)))))//



யாரு அது ?



நன்றி ராமலக்ஷ்மி அக்கா :- சம்பவம் நடந்தது உண்மை தான், ஆனா எனக்கு இல்லை



நன்றி goma அக்கா :- இதுக்கெல்லாம் எதாவது விருது கொடுப்பாங்களா?



நன்றி முத்துலெட்சுமி அக்கா :- கண்டிப்பா ஓவர் விழிப்புணர்வுதான்



நன்றி மங்குனி அமைச்சர் :- அப்படியே வாங்கிக்கிறேன் உங்க வாழ்த்தை சொன்னேன்.



நன்றி Vidhoosh(விதூஷ்) :வாய்ப்பே இல்லை, ஜீப்ல ஏறிட்டா தப்பிக்க முடியாது அக்கா/பெரியம்மா/சித்தி/பாட்டி/பூட்டி



நன்றி முகிலன் : யோவ் அனுப்பிய ஆட்டோவிலே எதாவது மிச்சம் இருக்கா ?



நன்றி வானம்பாடிகள் : வாழ்க்கையே துண்டு தானே அண்ணே, அடுத்த இடுகை பாத்திரம் வானம்பாடிகள்



நன்றி malar : எதோ என்னால முடிஞ்சது



நன்றி LK



நன்றி ஹேமா :- உங்களுக்கு தெரியுது ஊருக்கு தெரியலையே



நன்றி r.selvakkumar



நன்றி ராஜ நடராஜன் :- எழுத்துப்பிழை இல்லைனா பாராட்ட வேண்டாம், எதிரிகள் அதிகமா இருக்காங்க, கபீஷ்க்கு கும்மி அடிக்கலைனா தூக்கம் வராதாம்.



நன்றி பா.ராஜாராம் அண்ணே :- இடம், வலம் போனதை பிடிச்சி போட்டுட்டேன். எழுத்துப் பிழை இல்லாம இடுக்கை போட்டா மழை வரும்



நன்றி V.Radhakrishnan



நன்றி அமைதிச்சாரல் :- நீங்களுமா களத்திலே

Unknown said...

Super sir neenga :)

Thenammai Lakshmanan said...

நல்ல விழிப்புணர்வு.. ஹஹஹ ஜெண்டில் மேன்..

vasu balaji said...

/நன்றி வானம்பாடிகள் : வாழ்க்கையே துண்டு தானே அண்ணே, அடுத்த இடுகை பாத்திரம் வானம்பாடிகள்//

:)). அண்ணாச்சி!!! என்னமாச்சும் எழுதுங்க. ஆனா வானம்பாடிய வாணாம்போடின்னு தட்டச்சிட்டு பிழைன்னா ஆட்டோ வராது அல் கொய்தா வரும். சொல்லிபுட்டேன்:))

சந்தனமுல்லை said...

:-)))))

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

உலக வலைப்பதிவு வரலாற்றில் முதல் முறையாக,இதை சொல்ல மறந்துட்டேன்.எந்த வலைப்பதிவனும் 13 ப்ளாக் வச்சுக்கிட்டது இல்லை.இவை என் பிளாக்குகள்.அவசியம் வரவும்.
TAMIL VASAM ,
hardybodywindymi... ,
இந்தியன் பொலிட்டிகல் க்ளோசப் ,
நிர்வாண உண்மைகள் ,
PAURUSHAM
INDIAN POLITICAL CLOSEUP
The Blog
వాణీ పుత్రుని వాణి
Woman voice
kamasuthra
The Tiger
kavithai365
C.K.THE TIGER
Focus on Tomorrows
Two Legends
அனுபவ ஜோதிடம்