Wednesday, April 28, 2010

கனடிய தமிழ்

125 parkway forest drive,don mills அப்படின்னு விலாசத்தோட டொரோண்டோ விலே இறங்கி குடியேற்ற துறையை கடந்து வெளியே வந்தேன், பெங்களூர், சென்னையையும் தவிர வேறு ஊருக்கு செல்லாத நான் வெளிநாட்டுக்கு வந்து இறங்கியதும் அடி வயறு கொஞ்சம் கலங்கி தான் போச்சி, விமானத்திலே குடிச்ச வெளி நாட்டு சரக்கு தான் காரணமோன்னு யோசித்து கிட்டு நிற்கும் போது 


"தம்பி நீங்கோ எங்கே போகணுமுன்னு"  மீசை இல்லாத  நண்பர் ஒருவர் என்னிடம் தமிழிலே என்னிடம் பேசினார்.நான் ௬ட வடக்கூர் காரரா இருப்பார் போல, ஆனா அவங்க எல்லாம் தமிழ் தெரிஞ்சாலும் தமிழ் நாகி ன்னு சொல்லுவாங்களேன்னு யோசித்து கொண்டு இருக்கும் போதே "எங்கே போகணும்" னு கேட்டார், நான் விலாசத்தை காட்டி டான் மில்ஸ் போகணும், அது எங்க இருக்குன்னு தெரியலை, அலுவலகத்திலே டொரோண்டோ வரைக்கும் தான் பயணச் சீட்டு எடுத்து கொடுத்தாங்க ன்னு சொன்னேன்.  

இங்கே பக்கத்திலே தான் இருக்கு, நான் உங்களை டாக்ஸி யிலே ௬ட்டிட்டு போறேன்னு சொன்னாரு, நான் உடனே "நீங்க எந்த ஊரு?"   


நான் யாழ்பாணம் ன்னு சொன்னாரு, இலங்கை தமிழர்களை பத்தி கேள்விப்பட்டு இருக்கேன், ஆனா இப்பத்தான் முதல்ல ஒரு இலங்கை தமிழரை சந்தித்தேன். மனசுக்குள்ளே ரெம்ப சந்தோசமாக இருந்தாலும், "டேய் மாப்ள அங்கே, ஆம்பளைங்களை மட்டும் கட்டி கிட்டி பிடிச்கிறாதே, உன்னையை வேற மாதிரி ஆளு"ன்னு நினைச்சுடுவாங்க ன்னு சொன்னது ஞாபகம் வந்ததாலே நான் ரெண்டு கையையும் எடுத்து வணக்கம் போட்டுட்டு பெட்டியை தூக்கிட்டு அவரு பின்னாடி போனேன்.

காரிலே ஏறி உட்கார்ந்து ஒரு பத்து நிமிசத்துக்கு விடாம பேசிகிட்டே வந்தேன், எல்லாம் கேட்டு முடிச்சிட்டு "நீங்க சொன்னது ஒண்ணுமே விளங்கலை" ன்னு சொல்லி புட்டாரு, கொஞ்சம் நிறுத்தி நிறுத்தி பேசுங்கன்னு சொன்னாரு, அதற்கு அப்புறமா அவரு ஒரு ராகத்திலே, நான் ஒரு ராகத்திலே தமிழ் பேசி, ஒவ்வொரு வாக்கியம் முடிஞ்ச உடனே "விளங்குதா", "விளங்குதா" ன்னு ரெண்டு பேரும் மாறி மாறி கேட்டு ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தேன்.வீட்டை அடைந்து எனது உடமைகளை எல்லாம் நான் தங்கப் போகும் அறை வரைக்கும் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றார்.

அடுத்த நாளிலே இருந்து அலுவலகத்திலே ஆணி பிடுங்கும் வேலையை ஆரம்பித்தேன், முதல் நாள் நுழையும் போதே  அலுவலகத்திலே வேலை பார்த்த பாதுகாப்பு  காவலர் என்னைப் பார்த்து "எப்படி இருக்கீங்க தம்பி" ன்னு கேட்டார். ௬ட வந்த மனவாடு என்னை விட கருப்பா இருந்தாலும் அவருக்கு தமிழ் தெரியாதுன்னு எப்படி கண்டு பிடிச்சாருன்னு தெரியலை.

எங்கே போனாலும் தமிழன்னு கண்டு பிடிச்சிடுறாங்கன்னு இங்கே இருக்கிற கருப்பு அண்ணாச்சி மாதிரி முடியை பல வழிகளிலே மாத்தி, மீசை எடுத்து பார்த்தேன் ஒண்ணும் தேறலை. இதற்கிடையே அலுவலத்திலே முதல் நாள் சந்தித்த இலங்கை நண்பரும், நானும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம், நிறைய கதைக்க ஆரம்பித்தோம்.

நான் தம் அடிக்க போகும் போது சும்மாவே ௬ட வருகிறாரேன்னு அவருக்கு புகைக்க கத்து கொடுத்தேன், கொஞ்ச நாள்ல வட்டமா, சதுரமா எல்லாம் புகையை விட்டு எனக்கு காட்டினர், அதே மாதிரிதான் சரக்கும், பீர் அடிக்க சொல்லி கொடுத்தேன், எனக்கு அவரு ஹாட் அடிக்க சொல்லி கொடுத்தாரு, இப்படி உலக மகா நல்ல பழக்க வழக்கங்களை எல்லாம் கத்துகிட்டோம்.

ஒரு ஆறு மாசம் நாங்கள் இருவரும் டொரோண்டோவை சுத்தினோம். இடைப் பட்ட காலத்திலேயே ஊரிலே பெண் பார்க்க என்னோட புகைப்படம் அனுப்பி இருந்தேன், அவங்க எல்லாம் என்னோட புகைப் படம் பார்த்து விட்டு எங்க ஊரு திசைக்கே தலை வச்சி படுக்கிறதில்லை  என கேள்விப்பட்டு வேற வழி இல்லாம ஊருக்கு போக வேண்டிய நிலைமை.அலுவலகத்திலே சொல்லி இரண்டு மாதத்திலே ஊருக்கு செல்ல வேண்டும் என்று உறுதியானது.

நான் ரெண்டு மாசத்திலே ஊருக்கு போறன்னு சொன்னதும், அலுவலகத்திலே வேலை பார்த்த பாதுகாப்பு  காவலர் நண்பருக்கு கவலையாய்ப் போய்விட்டது, என்ன விசயமா ஊருக்கு போறீங்க, நான் பொண்ணு பார்க்க ஊருக்கு போறேன்னு சொன்னேன். இவ்வளவு தானே கவலைய விடுங்க, நான் உங்களுக்கு டொரோண்டோ தமிழ் பெண்ணை பார்த்து கட்டி வைக்கிறேன்னு சொன்னாரு.ஓசியிலே கனடா குடியுரிமை வாங்கி நிரந்தரமா இங்கேயே தங்கலாம் என்று ஒரு முடிவு எடுத்து நானும் சரின்னு சொன்னேன்.

அடுத்த வாரத்திலே ஆசிய மக்கள் அதிகமா இருக்கிற ஸ்கார்பொரோவுக்கு என்னை அழைத்து சென்றார்.சென்னையை தாண்டி விட்டாலே தமிழையும் அங்கேயே விட்டுட்டு போற என்னைப் போன்ற தமிழ்வாதிகளுக்கு எல்லாம் கண்கொள்ளா காட்சி தான், கண்டம் விட்டு கண்டம் வந்து தமிழிலே "பூம்புகார் மளிகை கடை" என்று தமிழிலே விளம்பர பலககைகள் பார்க்கும் போது,பார்க்கும் போது சந்தோசமா இருந்தாலும், கொஞ்சம் பொறாமையாவும் இருந்தது, இலங்கை தமிழர்களிடம் தமிழ் மொழி மேல இருக்கிற நம்பிக்கை, தைரியத்திலே பாதி அளவு ௬ட இல்லை, அவர்களோட தன் நம்பிக்கையைப் பார்த்து தான் எனக்கே தமிழில் எழுதும் ஆர்வம் வந்தது(மேல இருக்கிற ரெண்டு வரி எழுத்துப் பிழை இல்லாம இருக்கு, இடுகைக்கு அதான் கணக்கு, வேற இடத்திலே இருக்கிறதை சுட்டி காட்டினால் ஆட்டத்திலே சேத்துக்க மாட்டேன்)

அதோட நிற்காம, ஒருத்தர் தமிழர் என்று தெரிந்தால்  தமிழிலே மட்டுமே தான் பேசுவது என்று முடிவு எடுத்தேன், இங்கிலிபிசுல சரியாப் பேச வராது என்பதை எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டிய இருக்கு பாருங்க.

பெண் வீட்டிலே காத்து இருந்தேன்... காத்து கிட்டே இருந்தேன் பெண் வருகிற மாதிரி தெரியலை, என்னை அழைத்து சென்ற நண்பர் "போக்கு வரத்து நெரிசலிலே மாட்டிகிடாங்களாம், இப்ப வந்திடுவாங்கன்னு சொன்னாரு, சொல்லி ரெண்டு மணி நேரம் கழித்து மீண்டும் அதே பதில் சொன்னார், நேரம் ரெம்ப அதிகமாகி விட்ட படியினால் வேற வழி இல்லாம வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். மறு நாள் அலுவலகம் வந்து விட்டு முதல் வேலையாக அவரிடம் விசாரித்தேன், தம்பி பிழையாப் போச்சி, அந்த பெண் போக்குவரத்து நெரிசலிலே இருந்தது, விமான நிலையம் போக, அவ நேத்தே விமானம் பிடிச்சி யாழ்ப்பாணமே போய்ட்டா,என்னோட புகைப் படத்தை காட்டி இருப்பாரோன்னு ஒரு சந்தேகம் இருந்தாலும் கேட்கலை, சரி விடுங்க தம்பி, அந்த பெண்ணுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் நாம என்ன செய்ய, ஆனா அவரு மனசிலே எங்க ஊரு பெண் தப்பிவிட்டதுன்னு நினைத்து இருப்பார்.

சரி அடுத்த பெண் யெங் தெருவிலே இந்த வார இறுதியிலே நடக்கிற தெற்கு ஆசிய கலைவிழாவுக்கு வந்து பார்க்க சொல்லி இருக்காங்க, மரண அடி விழுந்தாலும் முயற்சியை தளர விடாம ஓடுற நான், அவரு சொல்லி முடிக்கும் முன் தலையை ஆட்டினேன், அண்ணா என்னோட புகைப்படம் மட்டும் கொடுக்க வேண்டாம், என்னோட அழகை நேரிலே காட்டி அதிர்ச்சி கொடுக்கணுமுன்னு சொன்னேன்.நான் கடைசியிலே சொன்னதை எல்லாம் காதிலே வாங்காம அவரு வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

வார இறுதியிலே அங்கே சென்றேன், அங்கே வடக்கூர் இசை குழு ஒன்று கச்சேரி ஹிந்தி பாட்டுகளை போட்டு எல்லோரிடமும் கை தட்டு வாங்கி கொண்டு இருந்தார்கள், அவங்க ஆட்டம் முடிஞ்ச உடனே நம்ம ஊரு, சத்தியமா தமிழ் நாட்டு காரங்க இல்லை, இலங்கை தமிழர்களின் இசை கச்சேரி ஆரம்பித்தது, மன்மத ராசா பாட்டு வெளி வந்து தமிழ் நாட்டை கலக்கி கொண்டு இருந்த நேரம், முதல் பாட்டு அந்த பாட்டுதான், பாட்டோட இசையை கேட்டதும் வேடிக்கை பார்க்க வந்த வெள்ளையம்மா, வெள்ளையப்பன், கருப்பம்மா, கருப்பையன் எல்லாரும் ஆட்டம் போட ஆரம்பித்தார்கள்.

ஆட்டம் பாட்டு எல்லாம் முடிந்து திரும்பி பார்த்தால் நண்பரை காணவில்லை,அவரோட அலைப் பேசியை தொடர்பு கொண்டேன், அது நேராக குரலஞ்சலுக்கு சென்றது.ரெண்டு மணி நேரம் தேடிட்டு வீட்டுக்கு வந்தேன்.அடுத்த நாள் காலை சந்தித்து விவரம் கேட்டா, நீ தான் மாப்பிள்ளை என்று உன்னை காட்டுற வரைக்கும் நல்லா இருந்தா, உன்னையப் பார்த்த உடனே சி.என் டவர்க்கு போய் தற்கொலை பண்ணுவேன்னு சொல்லிட்டு போய்ட்டா, அவ கையிலே காலிலே விழுந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியிலே விமான நிலையம் போய் எதோ ஒரு விமானத்திலே ஏறி எங்கோ போய்ட்டா,நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன், இனிமேல உங்களுக்கு பெண் பார்த்தது போதுமுன்னு.அதோட பெண் பார்க்கிற வேலையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு ஊருக்கு போக ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

ஊருக்கு திரும்பி செல்லும் நாளும் வந்தது, அவர் என்னை விமான நிலையம் வரை வந்து வழி அனுப்ப வந்தார்,இவ்வளவு நாளா நாம சுத்தி இருக்கோம்,உங்களோட புகைப்படம் ஒண்ணை தாருங்கள் என்று சொன்னார். பாசத்திலேயும் உங்களை மிஞ்ச முடியாது போல ன்னு நினைச்சி கிட்டு கொடுத்தேன், வாங்கிட்டு என்னை வழி அனுப்பிவிட்டு நான் பயணச்சீட்டு வாங்கிட்டு உள்ளே செல்லும் போது, பிற்காலத்திலே கனடாவிலே ஆட்குறைப்பு செய்ய நினைத்தால் என்கிட்டே நல்ல திட்டம் இருக்கு ன்னு சொன்னார், என்ன திட்டம் அதுன்னு கேட்டேன்.

"உங்க புகைப்படத்தை காட்டி எல்லோரையும் நாடு கடத்தி விடுவேன்" ன்னு சொன்னார், அதற்கு பதில் சொல்லி என்னோட புகைப்படத்தை திருப்பி வாங்க முடியாத வளையத்துக்கு சென்று விட்டதால், விமான வாயிற் கதவை நோக்கி சென்று கொண்டு இருந்தேன்.


22 கருத்துக்கள்:

பா.ராஜாராம் said...

:-)))

excelent நசரேயன்!

நானே(!) சில எழுத்துப் பிழைகளை கண்டுபிடிச்சேன்.அடைப்புக் குறியை பார்த்ததும்,purpose-ஆன பாவியை மன்னிக்கிறேன். :-)

வித்யா,

நாளை பின்னூட்டம் பார்க்கிறேன். :-)

Unknown said...

//அடுத்த வாரத்திலே ஆசிய மக்கள் அதிகமா இருக்கிற ஸ்கார்பொரோவுக்கு என்னை அழைத்து சென்றார்.சென்னையை
<> தாண்டி விட்டாலே தமிழையும் அங்கேயே விட்டுட்டு
<>
போற என்னைப் போன்ற தமிழ்வாதிகளுக்கு எல்லாம் கண்கொள்ளா
<>
காட்சி தான், கண்டம் விட்டு கண்டம் வந்து தமிழிலே "பூம்புகார் மளிகை கடை" என்று தமிழிலே விளம்பர பலககைகள் பார்க்கும் போது,பார்க்கும் போது சந்தோசமா இருந்தாலும், கொஞ்சம் பொறாமையாவும் இருந்தது, இலங்கை
<>
தமிழர்களிடம் தமிழ் மொழி மேல இருக்கிற நம்பிக்கை, தைரியத்திலே பாதி அளவு ௬ட இல்லை, அவர்களோட தன் நம்பிக்கையைப் (இதை சேத்து எழுதனும்) பார்த்து தான் எனக்கே தமிழில் எழுதும் ஆர்வம் வந்த//

ரெண்டு வரி எழுத்துப் பிழையில்லாம இருக்காம்ல.. நாங்க யாரு..

சாந்தி மாரியப்பன் said...

கவிதைக்கு பொய் அழகு

நசரேயனுக்கு எழுத்துப்பிழை அழகு.

சூபர்ப். நடத்துங்க :-)))))

பனித்துளி சங்கர் said...

//////காரிலே ஏறி உட்கார்ந்து ஒரு பத்து நிமிசத்துக்கு விடாம பேசிகிட்டே வந்தேன், எல்லாம் கேட்டு முடிச்சிட்டு "நீங்க சொன்னது ஒண்ணுமே விளங்கலை" ன்னு சொல்லி புட்டாரு,//////

ஏலே மக்கா இது என்னால சின்னபுள்ளத்தனாமாவுல இருக்கு !

மிகவும் ரசிக்கும் வகையில் சொல்லி இருக்கீங்க பகிர்வுக்கு நன்றி !

எல் கே said...

nalla iruku

Chitra said...

//////காரிலே ஏறி உட்கார்ந்து ஒரு பத்து நிமிசத்துக்கு விடாம பேசிகிட்டே வந்தேன், எல்லாம் கேட்டு முடிச்சிட்டு "நீங்க சொன்னது ஒண்ணுமே விளங்கலை" ன்னு சொல்லி புட்டாரு,//////


..... ha,ha,ha,ha,ha..... super comment!

Vidhoosh said...

அது சரி.

//அடி வயறு கொஞ்சம் கலங்கி // பிளேன்ல அப்படி வகை தொகை இல்லாம மொக்கினா.. கடைசி சீட்லேந்து "தூக்கி தூக்கி போடுது"ன்னு சொல்லிட்டு ரூம்புகிட்ட சீட்ட மத்தின போதே தெரிஞ்சுச்சு...

//ஒவ்வொரு வாக்கியம் முடிஞ்ச உடனே "விளங்குதா", "விளங்குதா" ன்னு ////

வெளங்கிடும்.... போங்கோ...

//"எப்படி இருக்கீங்க தம்பி" ன்னு கேட்டார். //

பிளேன்ல வந்ததுல காது அடைச்சிகிட்டிருக்கும்...
இன்னுமா அப்டியே நம்பிட்டு இருக்கீங்கள்.. அது உங்களைப் பாத்து கேட்கலங்க... "இந்தாளோட" எப்படி இருக்கீங்க தம்பி அப்டீன்னு மனவாடுவ பாத்துதான் கேட்டார்...

///என்னோட புகைப் படம் //
அய்... அய்... அந்தூரு பொண்ணுக 'பேயடிச்சாமாதிரியே' அது நெகடிவ்னு சொல்லிக்கிட்டு திரியராளுக.. பாவம்... சீக்கிரம் வந்து எல்லாருக்கும் வாழ்வு கொடுங்க.

// தமிழையும் அங்கேயே விட்டுட்டு போற என்னைப் //
நாங்கல்லாம் வாய் நெறையா தமிழ்தான்... வயசாயிருச்சு இல்ல, பல்லு வேற இல்லையா.. தஸ்புஸ்ஸுன்னு எல்லா பாஷையையுமே தமிழ்லையே பேசுவோம்.. வெளங்குச்சா...

//"உங்க புகைப்படத்தை காட்டி எல்லோரையும் நாடு கடத்தி விடுவேன்"//
நீங்க உடனே சொல்லி இருக்கணும்... "அதெல்லாம் நடக்காது... நானே personal-லா foreign tripன்னு சொல்லிட்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மாறி மாறி போயிட்டே இருப்பேன்.. அப்போ அவங்க மிரண்டு போயி இங்கேதான வருவாங்க... அப்போ என்ன செய்வீங்க அப்போ என்ன செய்வீங்க ... அப்டீன்னு நம்ம வினு சக்கரவர்த்தி மாதிரி டான்ஸ் ஆட வேண்டியதுதான...

ரெண்டு ரெண்டு வருஷம் படிக்கிராமதிரியே நடிச்சா இப்டித்தான்... பத்தலை.. :))

ராஜ நடராஜன் said...

//நான் தம் அடிக்க போகும் போது சும்மாவே ௬ட வருகிறாரேன்னு அவருக்கு புகைக்க கத்து கொடுத்தேன், கொஞ்ச நாள்ல வட்டமா, சதுரமா எல்லாம் புகையை விட்டு எனக்கு காட்டினர்,//

வட்ட வட்டமா புகை விடுற ஆளுகளைப் பார்த்திருக்கிறேன்.அது என்ன சதுரம்?குருவை மிஞ்சின சிஷ்யானா இருப்பார் போல இருக்குதே:)

ராஜ நடராஜன் said...

//அது நேராக குரலஞ்சலுக்கு சென்றது//

குரலஞ்சல் தமிழ் நல்லாயிருக்கே!

சந்தனமுல்லை said...

/நான் தம் அடிக்க போகும் போது சும்மாவே ௬ட வருகிறாரேன்னு அவருக்கு புகைக்க கத்து கொடுத்தேன், கொஞ்ச நாள்ல வட்டமா, சதுரமா எல்லாம் புகையை விட்டு எனக்கு காட்டினர், /

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சந்தனமுல்லை said...

/அவங்க எல்லாம் என்னோட புகைப் படம் பார்த்து விட்டு எங்க ஊரு திசைக்கே தலை வச்சி படுக்கிறதில்லை என கேள்விப்பட்டு/

ஹிஹி

சந்தனமுல்லை said...

/ந்த பெண் போக்குவரத்து நெரிசலிலே இருந்தது, விமான நிலையம் போக, அவ நேத்தே விமானம் பிடிச்சி யாழ்ப்பாணமே போய்ட்டா,/

:-)))))

சந்தனமுல்லை said...

:-))) உங்க புகைப்படம் ஒன்னு பார்சல்ல்ல்ல்!

Anonymous said...

//அமைதிச்சாரல் said...

கவிதைக்கு பொய் அழகு

நசரேயனுக்கு எழுத்துப்பிழை அழகு.//

ரிப்பீட்டேய்

நட்புடன் ஜமால் said...

ரொம்ப செண்டி பதிவுகளா வருதே என்னாச்சி

நல்லா தானே இருக்கீங்க நஸர் ...

க.பாலாசி said...

ஒருவழியா எல்லாபழக்கத்தையும் அவருக்கு கத்துக்கொடுத்திட்டீங்க... ரைட்டு... நம்மளோட பண்பாடாச்சே...

:-))

கண்ணகி said...

ஏங்க இப்புடி....

ஹேமா said...

//கொஞ்ச நாள்ல வட்டமா, சதுரமா எல்லாம் புகையை விட்டு எனக்கு காட்டினர்,//

அட அட..என்ன ஒரு நல்ல மனசு.நசர் இப்பிடித்தான் இருக்கவேணும்.வாழ்க்கையை சந்தோஷமாக்க்கிட்டே போகவேணும்.

குரலஞ்சல் அழகுதமிழ் !

Radhakrishnan said...

பெண் பார்க்கும் படலம் அருமை.

ராமலக்ஷ்மி said...

அருமை:))))!

SUFFIX said...

//"நீங்க சொன்னது ஒண்ணுமே விளங்கலை"//

பேசும்போதும் அப்படித்தானுங்களா::)))

SUFFIX said...

நல்லா கதைச்சிருக்கீங்க..