என் கவுஜைக்கு மொக்கை என்று பெயர் வை
அன்பே
நான் பேசும்
மவுன மொழிகளை
புரிந்து கொள்ளும்
நீ
என் குரல் மொழி
புரியாது தவிப்பது ஏன்?
ஏன்னா
எனக்கு
டமில் தெரியாது
**************************************************************************************************************
தோட்டத்து மலர்களை
உன் ௬ந்தலில் படர்த்தி
மலர்களின்
பிறவிப்பயனை
அடைய வைக்க முடியவில்லையே
என்று ஏங்குகிறதே
என் மனம்,
ஏன்
தோட்டக்காரன்
இன்னும் ஊருக்கு
செல்லவில்லையா ?
***********************************************************************************************************
ரயிலுக்கு காத்து இருந்து
ஏற்று கொள்கிறாய்
மழைக்கு காத்து இருந்து
குடையை ஏற்று கொள்கிறாய்
வெயிலுக்கு காத்து இருந்து
நிழலை ஏற்று கொள்கிறாய்
என்னை மட்டும் காக்க
வைத்து விட்டு
இன்னும் ஏற்கவில்லையே!!
என்ன செய்ய அன்பே !!!
நீ
காத்திருப்பதோ கல்லறையிலே
******************************************************************************************************
நொடிக்கொரு முறை
கடிகாரம் பார்த்தேன்
நொடிக்குள் யுகங்கள்
ஒளிந்து கொண்டு இருந்தது
உன் நினைவிலே
என்னை
மறக்கும் நான்
இன்று
காந்தி ஜெயந்தி
என்பதையும்
மறந்து போனேன்.
**************************************************************************************************************
உன் வாசல் கதவை
தட்டினேன்
வீடு காலி இருக்கிறது
என்றாய்
உன் இதய கதவை
தட்டினேன்
அரங்கம் நிறைந்து விட்டது
என்கிறாயே
********************************************************************************************************
35 கருத்துக்கள்:
உன் வாசல் கதவை
தட்டினேன்
வீடு காலி இருக்கிறது
என்றாய்
உன் இதய கதவை
தட்டினேன்
அரங்கம் நிறைந்து விட்டது
என்கிறாயே
***********
....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... கவுஜ..... கவுஜ..... ஒத்துக்கிட்டோம்....
//....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... கவுஜ..... கவுஜ..... ஒத்துக்கிட்டோம்....
//
அப்ப நானும் ரவுடி தானா ?
முதலாவதுதான் சூப்பர் நசர் !
//முதலாவதுதான் சூப்பர் நசர் ! //
உள்குத்து நல்லாவே இருக்கு
//"என் கவுஜைக்கு மொக்கை என்று பெயர் வை"//
பெயர் வைக்காட்டியும் அது மொக்கை தான். டிஃபால்ட் செட்டிங்க்ஸ்:)))
//
பெயர் வைக்காட்டியும் அது மொக்கை தான். டிஃபால்ட் செட்டிங்க்ஸ்:)))
//
அல்லோ...... கவிஞர்கள் வருத்தப் பாடுவாங்கன்னு தலைப்பிலே மொக்கையை வைத்து இருக்கேன்.
அட...நசர் என்ன நீங்க உண்மை சொன்னாலும் ஒத்துக்கிறீங்க இல்ல !
//உன் நினைவிலே
என்னை
மறக்கும் நான்
இன்று
காந்தி ஜெயந்தி
என்பதையும்
மறந்து போனேன்.//
ஏன்?.. அன்னிக்கும் ஃபுல் மப்பா!! :-)))))
last one nalla irukuk. but koncham mokkaithan thala
யோவ் என்ன நடக்கு இங்கே, வடக்கூர் காரிகிட்ட தமிழ் பேசதேன்னா கேக்க்றீலா
துண்டுக்கு வேலை வந்திட்டோ:))
//நீ
காத்திருப்பதோ கல்லறையிலே//
ஹா...ஹா.... மொக்கையேதான்.....
உன் வாசல் கதவை
தட்டினேன்
வீடு காலி இருக்கிறது
என்றாய்
உன் இதய கதவை
தட்டினேன்
அரங்கம் நிறைந்து விட்டது
என்கிறாயே
இப்படியா ஹவுஸ் ஃபுல்லான வீடா பார்த்துத் தட்டுவீங்க.....
நாங்க சொல்ல வேண்டியதையும் நீங்க்ளே சொல்லிட்டா...அவ்வ்வ்!
பைதிவே இனிமேதானா பேர் வைக்கனும்..ஹிஹி
/ஏன்னா
எனக்கு
டமில் தெரியாது/
இதுவல்லவோ தமிழ் கவிதை!!! :-)
டமில் கவிஜக்குரிய அத்தனை டகுதிகளும் இருப்பதால்...ஹிஹி.. இந்த மொக்கைக்கு கவிஜ என்று பெயர் வைத்துவிட்டோம்..:)))
/நீ
காத்திருப்பதோ கல்லறையிலே/
ஈஸ் திஸ் கால்ட் பி.ந கவுஜ?
ஒரு டெரர் ஃப்லீங் கிடைக்குதே!
கலாய் ப்பு தலை ப்பு:)
மொத்த கவிதைகளிலும் புதைந்திருக்கிற குறியீடுகளை தலைப்பாக வைத்து வெளியிடாமலிருந்திருந்தால் ஆகச்சிறந்த நீங்கள் வைக்கச்சொன்ன பெயராகவே ஆகியிருக்க வேண்டிய கவிதைகள் இவைகள். போகட்டும், அதிகப்படியான படிம வெளிப்பாடுகளை கொள்ளாது அடுத்த பெயர் வைத்தலுக்கு அழைப்பீர்களாக!
மேலும், உரிமை எடுத்துக்கொண்டு அடுத்த கவிதைகளை கீழ் வரும் தலைப்பில் எழுதுமாறு வேண்டுகிறேன்.
“ஓஷோ குப்புடு”
(சலோமிய கவிதைகளில் படிம வெளிப்பாடுகள் கனிமங்களைப்போலவே புதைந்திருக்கும்)
:)))
கவுஜ நல்லாவே இல்லைன்னு சொல்லமாட்டேன்.,சூப்பரோ சூப்பர்.
டெம்ப்ளேட்டில ஏதோ கோளாறு இருக்கு. வார்த்தைகள் எல்லாம் கண்ணாமூச்சி விளையாடுது.
கவிதையை பற்றி அடுத்து வரும் பின்னூட்டங்களில் காண்க...
//புரியாது தவிப்பது ஏன்?//
வடக்கூர்காரிய முதல்ல அந்த இயர் போனை ஆன் பண்ணச் சொல்லுங்க..
//உன் ௬ந்தலில் படர்த்தி///
வழுக்கைத் தலைக்கு எதுக்குன்னா கலர் நேச்சுரல்ஸ்..
//வெயிலுக்கு காத்து இருந்து
நிழலை ஏற்று கொள்கிறாய்///
நிலவுக்கு காத்திருந்து
அமாவாசையை ஏற்கிறாய்
குயிலுக்கு காத்திருந்து
காகத்தை கரையச் சொல்கிறாய்
////இன்னும் ஏற்கவில்லையே!!
என்ன செய்ய அன்பே !!!///
கவுஜ எழுதிக் கொடுத்தீங்களோ??
//இன்று
காந்தி ஜெயந்தி//
ஏன்? ஷட்டருக்கு அடி வழியா குனிஞ்சு போகமுடியாதளவுக்கு அப்டி என்ன கஷ்டம்?
//வீடு காலி ///
வீட்டைக் காலி பண்ணதே நீங்கதான்னு பேசிக்கிறாங்க.. அப்டீங்களா?
வீ வான்ட் வளவளத்தா...
வீ வான்ட் வளவளத்தா...
வீ வான்ட் வளவளத்தா...
வீ வான்ட் வளவளத்தா...
வீ வான்ட் வளவளத்தா...
சில நேரங்களில் மொத்த குவியலாய் சேர்ந்து போனால் குப்பைகள் கூட கோபுரங்கள் போல காட்சி அளிப்பது உண்டு. உங்கள் கவிதைகள் மொக்கைகள் அல்ல என தனியாகவா சொல்ல வேண்டும். அனைத்தும் அருமை.
அனைத்து கவிதைகளும் சாரி கவுஜைகளும் அருமை.
இப்படியெல்லாம் கவுஜ போட்டா நாங்கெல்லாம் அழுதுருவோம் ஆமா
தளபதி,
என்னாதிது? உள்ளபடியே, சிறப்பான கவிதைகளை எழுதிட்டீங்களே? சபாசு!
/தளபதி,
என்னாதிது? உள்ளபடியே, சிறப்பான கவிதைகளை எழுதிட்டீங்களே? சபாசு!//
அப்பிடியே !!!
உங்கள் கவுஜைக்கு மொக்கை என்று பெயர் வைத்தால், உங்கள் மொக்கைக்கு என்ன என்று பெயர் வைப்பது
//
அன்பே
நான் பேசும்
மவுன மொழிகளை
புரிந்து கொள்ளும்
நீ
என் குரல் மொழி
புரியாது தவிப்பது ஏன்?
ஏன்னா
எனக்கு
டமில் தெரியாது
//
வடக்கூர்காரங்களுக்கு துண்டு போட்டா இப்படித் தான் ஆகும் வோய்...தெக்கூருக்கு போடும்..
நல்ல கவிதைகள் ஸாரி மொக்கைகள் :)
Post a Comment