வளவளத்தாவின் காதல்
நான் கணக்கிலே புலி, எங்க வகுப்பிலே முதல் மாணவன், முதல் மாணவன் வரிசையிலும் சரி, படிப்பிலும் சரி, ரெண்டு தடவை முதல் மாணவன்னு எழுதி இருக்கேன் நல்ல படிக்கணும், என முன்னாடி கணக்கிலே யாரும் தப்பு பண்ணினா எனக்கு கெட்ட கோபம் வரும், தமிழை தப்பு தப்பா எழுதினா சீத்தலை சாத்தனாருக்கு கோபம் வருகிற மாதிரி, நல்ல வேளை அவரு எல்லாம் உசிரோட இல்லை, இருந்தா என கையை ஓடிச்சி இருப்பாரு.
வளவளவத்தா எங்க வகுப்பிலே மச்சினிச்சி பெஞ்சு, வாத்தியாரு பாடம் நடத்தி கிட்டு இருக்கும், வள வள ன்னு பேசிகிட்டே இருப்பாள், அப்படி என்ன உலக மஹா விஷயம் பேசுவாளோ, தூங்குற நேரம் தவிர மற்ற நேரம் வாய் அசைஞ்சி கிட்டே இருக்கும்.
நான் பெண்களட பேசுவதற்கு ரெம்ப ௬ச்சப் படுவேன், அதனாலே அவகிட்டன்னு இல்லை, யாரிடமும் பேசவதும் இல்லை, பேசனுமுன்னு ஆசைப் பட்டதும் இல்லை, ஒரு நாள் இப்படித்தான் வகுப்பில் இருந்த இன்னொரு சக தோழி
"சைன் 30 யும், சைன் 30 யும் பெருக்கினா என்னடி வரும் ?" என்று கேள்வி கேட்டவளிடம் வளவளத்தா
"சத்தியமா நம்ம வகுப்பிலே இருக்கிற குப்பையோ, இல்லை உன் மனசிலே இருக்கிற குப்பையே வராது" ன்னு சொன்னாள். நான் கணக்கு சாத்தனார் என்பதாலே எனக்கு வந்த கோபத்திலே
"பக்கி,பக்கி தெரியலைனா கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியதானே" ன்னு சொல்லிட்டு 0.97620649 வரும் ன்னு சொன்னேன்.
யாரைப் பார்த்து பக்கின்னு சொன்னே பக்கிபயலே ன்னு ஆரம்பித்து ஒரு அரைமணி நேரமா விடாம என்னை திட்டினா, திட்டி முடிச்சதும், நான் சொன்னேன் பேசிப் பேசியே களைத்து போய் இருப்ப, இந்த கொஞ்சம் தண்ணி குடி ன்னு பாட்டிலை கையிலே கொடுத்தேன்.பாட்டிலை வாங்கிவிட்டு,அவளையை அறியாமலே அவளுக்கு சிரிப்பு, முதல் முதல்ல அவளை முகத்திற்கு முகம் பார்க்கிறேன், இவ்வளவு நாளா அறுவை அரசியா தெரிஞ்ச அவ எனக்கு அழகுக்கு அரசியா தெரிஞ்சா, நான் மனசிலே நினைத்தது அவளுக்கு தெரிந்து இருக்குமோ என்னவோ, என்னைப் பார்த்து வெட்கத்திலே தரையிலே கோலம் போட ஆரம்பித்தாள்.
அடுத்த நாளிலே இருந்து வளவளத்தா என்னைப் பார்க்கும் போது அமைதியின் சிகரம் ஆகிவிடுவாள், அவளோட பார்வைக்கு ஆயிரம் அர்த்தம் தெரிந்தது எனக்கு, வகுப்பிலே முதல் வரிசையிலே இருந்த நான் அவளை சரியாப் பார்க்க முடியலைன்னு, கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து நான் மாப்பிள்ளை பெஞ்சுக்கு போயிட்டேன். நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து வெட்கப் பட்டுக்கிட்டு காலாலே போட்ட கோலத்திலே நான் இருந்த இடத்திலே ஒரு அடியும், அவ இருந்த இடத்திலே அரை அடியும் பள்ளம் விழுந்தது.
என் ௬ட படிக்கிறவங்க எல்லாம் வளவளத்தாவுக்கும் எனக்கும் வேதியல் நல்லா இருக்கு, கணித பிரிவிலே இருந்து கிட்டு சொன்னாங்க, காதலுக்கும், வேதியலுக்கும் என்ன சம்பந்தமுன்னு தெரியலை.
இப்படி அடி அடியா பள்ளம் தோண்டி அவளோட அடி மனசிலே இருக்கலாமுன்னு யோசித்தே காலத்தை ஓட்டினேன், இருந்தாலும் நாங்க பார்வையிலே காலத்தை கடத்துவது நல்லது இல்லைன்னு யோசித்து, என்னை பார்த்து ரெம்ப ௬ச்சப் படுறான்னு, நானே ஒரு காதல் கடிதம் எழுதி வகுப்புக்கு போனேன்.
கல்லூரி வகுப்பு முடிஞ்சதும் மாலையிலே வளவளத்தவிடம்
"கொஞ்சம் தனியா வாரியா?"
"ஒ தாராளமா, என்ன விஷயம்?"
"நாம ரெண்டு பேரும் ரெம்ப நாளா பார்த்துகிட்டே இருக்கோம், அதனாலே பார்த்து போதும், இனிமேல பேச ஆரம்பிப்போம்"
"உன்னையை மனசிலே நினைச்சி நான் எழுதிய காதல் கடிதம், படிச்சிப் பாரு?"
"நானும் உனக்கு ஒண்ணு கொடுக்கணும்"
முத நாளே முத்தம் கிடைக்கப் போகுதுன்னு நானும் ஆரவமா கிட்ட போனேன், அவ ஒரு காகித உரையைக் கொடுத்தாள். பிரித்துப் பார்த்த உடனே வந்த கோபத்திலே
"நான் இருக்கும் போது எப்படி, உனக்கு இன்னொரு மாப்பிள்ளைப் பார்க்கலாம், உங்க வீட்டிலே சொன்னியா நம்ம காதல் விஷயத்தை, நீ ஒன்னும் கவலைப் படாதே, இந்த கல்யாணம் நடக்காது, நடக்க விடமாட்டேன்"
"அல்லோ கொடுத்த காசுக்கு மேல ௬வுயிரியே என்ன விஷயம், நான் என்னோட திருமண அழைப்பிதழைக் கொடுத்தேன், உன்னைக் காதலிக்கிறேன் சொன்னேனா?"
"என்ன வளவளா சொல்லுற, நீ என்னைப் பார்த்து கோலம் போட்ட பார்வைக்கு என்ன அர்த்தம்"
"என்னையப் பக்கி சொன்ன உன்னை பழி வாங்கத்தான், நீ என்னவோ கணக்கு சீத்தனார் ன்னு பெருமை அடிச்சிகிட்டு அலையுவியே, இப்ப உன் நிலைமையைப் பாரு, முதல் மாணவனா இருந்து உன்னை பார்த்து, நீயெல்லாம் ஒரு மாணவனான்னு சொல்லுற அளவுக்கு வந்துவிட்டது"
"என்னோட மாப்பிள்ளை யாருன்னு பார்த்தாயா?"
"ம்ம்.. பார்த்தேன் எதோ ஐரோப்பாவிலே வேலை செய்கிறார் ன்னு போட்டு இருக்கு, என்னைய பழி வாங்க உனக்கு வேற யோசனையே கிடைக்கலையா"
"அந்த அளவுக்கு அறிவு இருந்தா, நான் ஏன் உன் கூடப் படிக்கிறேன்"
"அடியே வளவளத்தா, இப்ப சொல்லுறேன் கேட்டுக்கோ, உன் புருஷன் உன் தொல்லை தாங்காம உன்னையை விட்டுட்டு ஓடிபோய்டுவான், என்னை கவுத்துக்கு நீ போற விமானம் கவுந்து கடலோட போய்டுவா .... இப்படியே ஒரு அரைமணி நேரமா திட்டி விட்டு, இதெல்லாம் நடக்கலைன்னா என் பெற மாத்தி வச்சிக்கிறேன்"
"என்னன்னு?"
"பக்கின்னு?"
"இப்பவே அப்படித்தானே இருக்க, வேற ஏதாவது நல்ல பேரா யோசித்து வை, வரட்டா?"
ம்ம் கொடுக்க மறந்துட்டேன், ரெம்ப பேசி களைப்பா இருப்ப, இந்த பாட்டிலே தண்ணியைக் குடி, அவளிடம் இருந்து வாங்கிய எனக்கு, என்னை அறியாமலே சிரிப்பு வந்தது.
22 கருத்துக்கள்:
//தமிழை தப்பு தப்பா எழுதினா சீத்தலை சாத்தனாருக்கு கோபம் வருகிற மாதிரி, நல்ல வேளை அவரு எல்லாம் உசிரோட இல்லை, இருந்தா என கையை ஓடிச்சி இருப்பாரு. //
கைய மட்டுமா ஒடச்சிருப்பாரு?
//என் ௬ட படிக்கிறவங்க எல்லாம் வளவளத்தாவுக்கும் எனக்கும் வேதியல் நல்லா இருக்கு, கணித பிரிவிலே இருந்து கிட்டு சொன்னாங்க, காதலுக்கும், வேதியலுக்கும் என்ன சம்பந்தமுன்னு தெரியலை.//
காதலுக்கும் நமக்குமே என்னா சம்மந்தம்னு தெரியல. அப்புறம் எங்கருந்து காதலுக்கும் வேதியலுக்கும் சம்மந்தத்தைக் கண்டுபிடிக்கிறது?
//நான் பெண்களட பேசுவதற்கு ரெம்ப ௬ச்சைப் படுவேன், அதனாலே அவகிட்டன்னு இல்லை, யாரிடமுன் பேசவதும் இல்லை, பேசனுமுன்னு ஆசைப் பட்டதும் இல்லை,//
எவ்வளவு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு.. சாமீ சீத்தலைச் சாத்தனாரே.....காப்பாத்துப்பா..
பக்கி + வளவளத்தா = பழிக்கு பழி ...... அட, அட, அட....... எப்படியெல்லாம் யோசிச்சு காதல் கதை எழுதுறீங்க...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
ஓடிச்சி -ஒடிச்சி.
பெண்களட -பெண்கள்ட்ட
இந்த கொஞ்சம் - இந்தா கொஞ்சம்
அவளையை -அவளை
வேதியல் -வேதியியல்
கவுத்துக்கு- கவுத்துட்டு
பெற -பேர
பாட்டிலே -பாட்டில்லே
ஐயா சீத்தலைச்சாத்தனாரே எங்கே ஐயா இருக்கீங்க... வந்து காப்பாத்துங்க :-)))
என்ன ஒரு தெய்வீகக் காதலைய்யா உங்க காதல்
சூப்பர் கல கல! :))
எப்படிலாம் யோசிக்கறீங்க
காதல் சூப்பர்
என்னதான் எழுத்துப் பிழை தப்பாதுன்னு திருத்தி திருத்தி படிச்சாலும் உணர்ச்சி வசப்பட்டு கமல் மாதிரி வார்த்தைய முழுங்கி முழுங்கி எழுதுனாலும் சீத்தலைச் சாத்தனாரை சீத்தனார்னு சொல்றது நெம்ப ஓவரு அண்ணாச்சி!.
/நீ என்னவோ கணக்கு சீத்தனார்/
கொஞ்ச நாளா வில்லனக் காணாம ஒரு மார்க்கமாத்தான் ஆயிட்டீரு.
முன்னல்லாம் கவுஜ பதிவுன்னா அட்டண்டென்ஸ் போட்டுக்குறேன்னு போவீரு. இப்பல்லாம் கவுஜல தான் கும்மி. மொக்க கவுஜ போடுறீரு. அப்பப்ப பல்ப் வாங்குற லவ்ஸ் இடுகை வேற! என்னாச்சி! துண்டுக்கு வேலை வந்திருச்சா?
வல்லவனுக்கு வல்லவி, வில்லனுக்கு வில்லியும் உண்டுன்னு விளங்கிருக்குமே.....ஹ...ஹா...ஹா....
நசர் அதென்ன "அல்லோ"ன்னு அடிக்கடி வருது உங்க பதிவில ?
//இப்படி அடி அடியா பள்ளம் தோண்டி அவளோட அடி மனசிலே இருக்கலாமுன்னு யோசித்தே காலத்தை ஓட்டினேன்..//
பார்த்த பார்வையில் பள்ளமானதோ உள்ளம்.என்ன ஒரு கற்பனை !
நசர் நீங்க தப்பு தப்பாவே தமிழ் எழுதுங்க.அதான் அழகு.
அதான் "நசர்".
வளவளத்தா திரும்ப ஆஜரா :)
எல்லாருக்கும் பொறாமை. அதான் எழுத்துப்பிழை கண்டுபிடிக்கறாங்க :)
//"பக்கி,பக்கி////
ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இந்த வார்த்தைய நியாபக படுதிடிங்க , எனக்கு ரொம்ப புடுச்ச கேசுவல் வார்த்தை
ரொம்ப நாளைக்குப் பொறவு நல்ல பதிவு. (இதை உங்களால மறுக்க முடியும்னா, எதை மறுப்பீங்க? மறுத்தா ஏதாவது ஒன்னு போயிரும்)
கவிஜ மொக்கை மட்டும்தான் கண்ணுல சரியா தெரியுது.வளவளத்தா எல்லை தாண்டுற மாதிரி தெரியுது.பார்டர் போட்ட சேலை கட்ட சொல்லுங்க:)புரியுதா?
//நசர் அதென்ன "அல்லோ"ன்னு அடிக்கடி வருது உங்க பதிவில ?//
பாலாண்ணா!நசரு சார்பா ஹேமாவுக்கு ஒரு அல்லோ சொல்லுங்க:)
//அப்படி என்ன உலக மஹா விஷயம் பேசுவாளோ, தூங்குற நேரம் தவிர மற்ற நேரம் வாய் அசைஞ்சி கிட்டே இருக்கும்.//
ஹா...ஹா...
ஆஹா.. அருமை.. வாங்க வாங்க என்று வளவளத்தாளை வரவேற்கிறேன்.
/இப்படி அடி அடியா பள்ளம் தோண்டி அவளோட அடி மனசிலே இருக்கலாமுன்னு யோசித்தே காலத்தை ஓட்டினேன்///
:)) சூப்பர்
:-))
Post a Comment