Tuesday, March 23, 2010

செருப்படி விழும்

"செருப்படி விழும் இனிமேல என் பின்னாடி சுத்திகிட்டு அலைஞ்சன்னா?" அது தான் நான் முதல்ல அவனை பார்த்து பேசின வார்த்தை 


"இந்தா... நல்லா புது செருப்பா போட்டுட்டு வரும் போது அடி, இப்ப நீ போட்டு இருக்கிற செருப்பை நடுத் தெருவிலே விட்டுட்டு  போனா நாய் ௬ட மோந்து பார்க்காது, ஒரு கால் செருப்பு உயரமாகவும், இன்னொன்னு குட்டையாவும் இருக்கு, உங்க அப்பனை புது செருப்பு வாங்கி கொடுக்க சொல்லு, அப்புறமா வந்து என்னை அடி" 


அப்படி சொன்னதும் எனக்கு என்ன செய்யன்னு தெரியலை, என்னை அறியாமலே சிரிப்பு தான் வந்தது.


அவன் யாருன்னு சொல்ல வேண்டிய கட்டாயம் நிலை, ஒரு ஆம்புளை பையனை செருப்பை கழட்டி அடிப்பேன்னு சொன்னதுக்கு ஆண்கள் சங்கம் கடைஅடைப்பு, மூக்கு உடைப்புன்னு போராட்டம் நடத்தக் ௬டாது என்ற தொலை நோக்கு பார்வையிலே நான் விவரத்தை சொல்லுறேன்.எங்க ஊரு புளியங்குடியில இருந்து பேருந்திலே தினமும் எங்க ௬ட வருவான், நான் குற்றாலம் மகளிர் கல்லூரியிலே படித்து கொண்டு இருந்த நேரம், அவன் எங்கே போகிறான்,எதற்கு பேருந்திலே வருகிறான் என்று எல்லாம் எனக்கு தெரியாது.கொஞ்ச நாளைக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது அவன் என்னையை பார்க்கத்தான் வருகிறான்னு,வார கழுதை சும்மா பாத்துட்டு போறதை விட்டுட்டு பேருந்திலே போற வார எல்லோரிடமும் என் ஆளு .. என் ஆளு சொல்லி வச்சி இருக்கான், என்னிடம் எல்லோரும் நீ அவன் ஆளா .. நீ அவ ஆளா ன்னு கேட்டு ஒரே நச்சு.நானும் கொலை வெறி கோவத்தை எல்லாம் அடக்கி கிட்டு அமைதியாதான் இருந்தேன்.


ஒரு நாள் என்னோட தலை முடியை பேருந்திலே நான் உட்கார்ந்து இருந்த கம்பி கவ்வி விட்டது என்பதற்காக,கோபத்திலே அந்த இருக்கையையே பேர்த்து எடுத்து வெளியே போட்டுட்டான்,அடுத்த நாள் விவரம் தெரிஞ்சி எனக்கு வந்த கோபத்திலே தான் அப்படி திட்டினேன்,என்னோட சொந்த தலை முடியா இருந்தா ௬ட பரவா இல்லை, அது சவரி  முடி. 

அடுத்த நாள் வரமாட்டான்னு நினைச்சேன், ஆனா வந்துட்டான், பேருந்து கடையநல்லூர் பக்கம் போகும் போது, பேருந்தை காவல் துறை அதிகாரிகள் நிறுத்தி, உள்ளே இருந்த அவனை இழுத்து வண்டிக்குள்ளே அள்ளி போட்டுட்டு போய்ட்டாங்க.என் ௬ட படிக்கிற புள்ளைகள் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள்.நான் புகார் கொடுத்த மாதிரி.


அப்பத்தான் பேருந்து நடத்துனர் சொன்னார் "அரசாங்க பேருந்து, அவங்க அப்பன் வீட்டு சொத்துன்னா நினைச்சாங்க" நான் செய்ய வேண்டிய வேலையை அரசாங்கம் செய்து விட்டதுன்னு நிம்மதியானேன்.அந்த வருஷம் எங்க ஊரிலே மழையே இல்லை,இப்படிப்பட்ட அரை லூசு பையன் இருக்கிற இடத்திலே எல்லாம், நான் வர மாட்டேன்னு சொல்லி மழை கொல்லத்துக்கு கிழக்கே வரலை, எங்களோட பகுதி விவசாயிகள் எல்லாம் தவியா தவிச்சி போனாங்க


மூணு மாதம் கழிச்சி வெளியே வந்தான், சிறையிலே நல்லா நோண்டி நொங்கு எடுத்து இருப்பாங்க போல, கல் காளை மாதிரி உள்ளே போன அவன், தேவாங்கு மாதிரி ஆகி கொஞ்சம் நொண்டிகிட்டு  தான் வந்தான். 


திரும்பி வந்தவன் முன்னே மாதி இல்லாம என்கிட்டே பேச ஆரம்பித்தான், நானும் ஆரம்பித்தேன், இருவரும் பேசினோம், பேசினோம், இணைபிரியாமல் பேசினோம். அந்த வருஷம் எல்லாம் எங்க ஊரிலே விவசாயிகள் எல்லாம் கனமழையிலே நினைஞ்சி போய்ட்டாங்க,மழை விட்டாலும் எங்க பேச்சி மழை விடலை,பேசி முடக்கும் முன்னே என்னோட எங்க கல்லூரி படிப்பும் முடிஞ்சி போச்சி, படிப்பு முடிஞ்ச உடனே எனக்கு பேசி முடிச்சிட்டாங்க.என்ன செய்ய தெரியாம இருந்த நிலையிலே அவன் எங்க அப்பாவை வந்து பார்த்து பேச வந்தான் 


அவன்கிட்ட எங்க அப்பா "மதமா இருந்தா சுலபமா மாறிடலாம், ஆனா சாதியை எப்படி மாத்துறதுன்னு கேட்டாரு?"

"கும்பிடுற சாமியை மாத்தினா ஏத்துகிற மக்கள், இருக்கிற சாதிய மாத்துனா ஏத்துக்க மாட்டாங்களா?" பதில் கேள்வி கேட்டான்.

 ரெண்டு பேரும் நிறைய பேசினாங்க, ஆனா முடிவிலே நாங்க நினைச்சது நடக்கலை.  அதற்கு பின் நானும் அவனை பார்க்கலை.

கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி எனக்கு பார்த்து இருந்த மாப்பிள்ளை வீட்டு காரங்க ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தாங்க, அதிலே அவன் என்னை காதலிப்பதாகவும், எங்களை சேர்த்து வையுங்கள் என்று எழுதப் பட்ட கடிதம்.கல்யாண ௬ட்டம் கடிதத்தோட போனது.

அன்று வந்த அதே கடிதம் எங்களுக்கு பதினைந்து முறை வாசித்து காட்டப்பட்டது, எந்த ஒரு முறையும் யாரும் கடிதத்திலே இருக்கும் பையனை திருமணம் செய்து வையுங்கன்னு சொல்லலை, என் அப்பாவும் நினைக்கலை.

இந்த கடிதங்களை எல்லாம் காதலியை கை பிடிக்க முடியலை என்கிற ஆதங்கத்திலே எழுதியதாக நினைத்து அவனை அறிணையாக மாற்ற முயற்சிகள் நடந்தன, விஷயம் விபரீதம் ஆகும் முன்னே நானே சொன்னேன், அனைத்தையும் எழுதியது நான் தான், அது உண்மைதான் நானே எழுதியது தான், காதலன் கிடைக்க வேண்டும் என்று எண்ணத்திலே எழுதப் பட்டது, அதற்கு பின் எனக்கு திருமண மாப்பிள்ளைகளும் வரலை, நானும் கடிதம் எழுதலை.

இனிமேல கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லைன்னு தெரிஞ்சதும் எனக்கு வேலை தேட அனுமதி கிடைத்தது, ஊரை விட்டு வேலை தேடி வெளியூர் வந்தேன், அவனும் பின்னாடி வந்தான்.இடைவெளி விட்ட பேச்சுக்கள் மீண்டும் தொடர்ந்தது.ஊரை விட்டு வந்துவிட்டோம், எங்க வாழ்கையை தீர்மானிக்கும் உரிமை எங்க கையிலே இருந்தாலும், நாங்க ரெண்டு பேரும் திருமணம் செய்ய முயற்சி செய்யலை,நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருந்தா பத்தோட பதினோன்னா ஒரு மூலையிலே எங்க வாழ்க்கை ஓடி கொண்டு இருந்து இருக்கும். 


கடந்த இருபத்தி ஐந்து வருடமா சாதி விட்டு சாதி மாற சட்டம் வேண்டும் என போரடுறதினாலே எங்களை இந்த உலகம் அடையாளம் காணுது, இன்றைக்கு இந்தியாவிலே மிகப் பெரிய பத்திரிக்கையாகிய நீங்களும் என்னை சந்தித்து பேட்டி எடுக்குறீங்க, நாங்க ரெண்டு பேரும் காதலர்களாகவே செத்தாலும் வருங்காலத்திலே வரும் என்னைப் போன்ற சந்ததிகள் வாழ்வு வளம் பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை.நாங்க எங்க பயணத்தை முடித்தாலும், எங்களுக்கு பின்னால் யாராவது தொடர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 


39 கருத்துக்கள்:

வானம்பாடிகள் said...

யே யப்பா! என்னமா ஒரு பெரிய விசயத்த சிரிக்க சிரிக்க சொல்லிப்புட்டீரு. சபாசு. ஆனாலும் சொல்லாம இருக்க முடியல. புளியங்குடியிலன்னு எழுதரத புளியங்குயிலன்னு எழுதினா கண்டுக்காம எப்புடி போறது:)

கலகலப்ரியா said...

அட... ஜாதிய ஒழிக்க முடியாதுன்னு தெரிஞ்சுடுத்து... இப்டி சட்டம் கொண்டு வந்தா நல்லாதான் இருக்கும் அப்பு... நடத்துங்க.... கனவில் தென்பட்டதுன்னு நல்லாதான்யா வைக்கிறாய்ங்க பேரு... செருப்படி விழும் வேற பயமுறுத்துது.. நமக்கெதுக்குபா... ஒரு பாடு ஜோலி உண்டு.. அப்ப வரட்டே...

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு நசரேயன்.

பழமைபேசி said...

தளபதி வாழ்க!

வில்லன் said...

அடடா தலைப்பை பாத்தாலே புல்லரிக்குதுப்பா..... யாருக்கு செருப்படி விழும்.... எதுக்காக செருப்படி விழும்..... கண்டிப்பாக வலைபதிவர்கள் யாருக்கும் செருப்படி இல்லன்னு நம்பறேன்.........அப்படி நடந்துருந்தா நான் பொறுப்பல்ல...........

வில்லன் said...

அடடா தப்பி தவறி இவரு கடைக்கு வந்தா செருப்படி தான் கெடைக்கும் போல..... நமக்கேன் வீண் வம்பு/அடி...... பேசாம நம்ம வேற கடை பக்கம் போயி மொக்கைய போட வேண்டியதுதான்.... இருக்கவே இருக்காரு!!!!! என்னதான் சொன்னாலும் கோபமே பாடாத ஆளு நம்ம குடுகுடுப்பை அண்ணாச்சி......அவரு கடை பக்கம் ஒதுங்கிற வேண்டியது தான்..... ஏற்கனவே சும்மா "எதிர் கவுஜ" மட்டும் போடுறதால அவரு கடை ஈயாடுது...... நம்மளாவது போயி அங்க மொக்கைய போடுவோம்....

வில்லன் said...

'விவேகம் என்னும் வெள்ளி முளைத்து, சாதி, மதப்பித்து என்ற சனி தொலைந்தால் தான், சமத்துவம் என்ற ஞாயிறு பிறக்கும்'ங்கிற முதல்வரின் பொன்மொழிதான் ஞாபகத்துக்கு வருது...

வில்லன் said...

// பழமைபேசி said...
தளபதி வாழ்க!//


நக்கீரரே பாத்து....வாழ்கன்னு சொன்னா செருப்படி விழும்....ஜாக்கிரதை....

வில்லன் said...

/// வானம்பாடிகள் said...

யே யப்பா! என்னமா ஒரு பெரிய விசயத்த சிரிக்க சிரிக்க சொல்லிப்புட்டீரு. சபாசு. ஆனாலும் சொல்லாம இருக்க முடியல. புளியங்குடியிலன்னு எழுதரத புளியங்குயிலன்னு எழுதினா கண்டுக்காம எப்புடி போறது:)//

தண்டனையா ஒரு செருப்படி கொடுங்க யாரு வேண்டாம்னு சொன்னா..... மீறி பேசினா செருப்படி விழும்..... ஹி ஹி ஹி

வில்லன் said...

மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது.... கொஞ்சம் செருப்படி கொடுத்தா தான் போடும்....

வில்லன் said...

//அவன் என்னையை பார்க்கத்தான் வருகிறான்னு,வார கழுதை சும்மா பாத்துட்டு போறதை விட்டுட்டு பேருந்திலே போற வார எல்லோரிடமும் என் ஆளு .. என் ஆளு சொல்லி வச்சி இருக்கான், என்னிடம் எல்லோரும் நீ அவன் ஆளா .. நீ அவ ஆளா ன்னு கேட்டு ஒரே நச்சு.//

என்னது கேக்கவே அசிங்கமா இருக்கு..... ஆம்பளைய பாத்து என்னோட ஆளா?????? .....கருமம்.....கேக்கவே கன்றாவியா இருக்கு.....அதுவும் புளியங்குடியிலயா???? அட ராமா........ இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ?????????

வில்லன் said...

//கல் காளை மாதிரி உள்ளே போன அவன், தேவாங்கு மாதிரி ஆகி கொஞ்சம் நொண்டிகிட்டு தான் வந்தான்//

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..........

வில்லன் said...

/நாங்க எங்க பயணத்தை முடித்தாலும், எங்களுக்கு பின்னால் யாராவது தொடர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. //

எந்த பயணத்தை????? ....அந்த பேருந்து பயணத்தையா இல்ல அந்த கள்ள காதல் பயணத்தையா??????

வில்லன் said...

//நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருந்தா பத்தோட பதினோன்னா ஒரு மூலையிலே எங்க வாழ்க்கை ஓடி கொண்டு இருந்து இருக்கும். //

அட நாதாரி பசங்களா...... அதுக்காக கல்யாணமே பண்ணாம சாவுற வரை சல்சாவ...... ரொம்பதான் போங்க.......

ஓடி போயி "சல்சா" மட்டும் பண்ணிக்கலாமா
இல்ல சல்சா மட்டும் பண்ணிக்கிட்டு ஜாலி பண்ணலாமா??????

பிரியமுடன்...வசந்த் said...

//,என்னோட சொந்த தலை முடியா இருந்தா ௬ட பரவா இல்லை, அது சவரி முடி. //

பார்யா அவளுக்கு எம்புட்டு நக்கலுன்னு...

// எங்களுக்கு பின்னால் யாராவது தொடர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. //

தொடர்ந்திடுவோம்....

நசரு சிரிப்பு காதல் கருத்து நல்லாருக்கு சாரே....

பழமைபேசி said...

கும்மியடிச்சுட்டுப் போன வில்லன் அண்ணாச்சியும் வாழ்க!

நட்புடன் ஜமால் said...

வழமையான நடை அக்கறையோடு

தாராபுரத்தான் said...

சிரிக்கவும்,சிந்திக்கவும்,கணிணீர் சிந்தவும் செய்யும் பதிவு்.பாராட்டுக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

அன்புடன் அருணா said...

ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க!

Chitra said...

கடந்த இருபத்தி ஐந்து வருடமா சாதி விட்டு சாதி மாற சட்டம் வேண்டும் என போரடுறதினாலே எங்களை இந்த உலகம் அடையாளம் காணுது,
.......... அடையாளம் காண்பது சரி. சேர்ந்து வாழ வைக்க வேண்டும்.
நல்ல நகைச்சுவையுடன், அசத்தலா கதை இருக்கு.

Anonymous said...

கதை அருமை. ஆனால் நீளம் தான் கொஞ்சம் அதிகம்.

ஈரோடு கதிர் said...

அருமை, சுவாரஸ்யம்

க.பாலாசி said...

அந்த பையன் கொஞ்சமே கொஞ்சம் என்னை மாதிரியே இருக்கான்....

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

சிரிப்பு கதைன்னு நினச்சா, சீரியஸா இருக்கு..

Anonymous said...

நீங்க எழுதியிருக்கறது நிஜம். மதம் மாறியும் சாதியை பின்பற்றும் மக்களை பாத்திருக்கேன்.

மங்குனி அமைச்சர் said...

என் கனவில் தென்பட்டது சார் தூங்க போகும்போது ஹெல்மெட் போட்டு தூங்குங்க , கனவில அடி விழுந்தாலும் கொஞ்சம் சேப்டியா இருக்கும்.

கதை சுப்பர் சார்

V.Radhakrishnan said...

ஓஹோ, ஏதாவது ஒரு சாக்கு சொல்லிட்டு இருக்க வேண்டியது, தைரியம் இல்லாத மனிதர்களை பற்றிய கதை மிகவும் அருமை, மன்னிக்கவும் கனவு மிகவும் அருமை.

கண்மணி/kanmani said...

தலைப்புக்கு பயந்தே பின்னூட்டம் போடனுமோ:)))))))))))))

"உழவன்" "Uzhavan" said...

அற்புதம்

கண்மணி/kanmani said...

//என்னோட சொந்த தலை முடியா இருந்தா ௬ட பரவா இல்லை, அது சவரி முடி. //


:)))))))))))

ராஜ நடராஜன் said...

செருப்படி விழும்ன்னு தெரிஞ்சும் எத்தனை பேர் க்யூலன்னு பாருங்க:)

ஆமா!மதம் விட்டு மதம் மாதிரி சாதி விட்டு சாதி திட்டம் நல்லாயிருக்குதே!

நெல்லூரு,ஒசுரூ,பாலக்காடு தாண்டினாவே சாதிப் பய புள்ள காணம போயுடுறான்.அதிலும் நம்ம மாதிரி தண்ணி,இல்ல கடலு கண்டம் தாண்டிட்டா இன்னும் சுத்தம்!

அக்பர் said...

நல்லாயிருக்கு நசரேயன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

முடிச்ச விதம் அருமை.. வருங்காலத்தில் நிஜமாக நடக்க வேண்டும்:-)))

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

//"கும்பிடுற சாமியை மாத்தினா ஏத்துகிற மக்கள், இருக்கிற சாதிய மாத்துனா ஏத்துக்க மாட்டாங்களா?"//

நல்ல கேள்வி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்குங்க ..நசரேயன்.

வில்லன் said...

//மங்குனி அமைச்சர் said...
என் கனவில் தென்பட்டது சார் தூங்க போகும்போது ஹெல்மெட் போட்டு தூங்குங்க , கனவில அடி விழுந்தாலும் கொஞ்சம் சேப்டியா இருக்கும்.

கதை சுப்பர் சார்///

யாரப்பா அது 23 ஆம் புலிகேசி படம் போட்ட மங்குனி அமைச்சர்.... பாக்கவே காமடியா இருக்கு......உங்கள வச்சு யாரும் காமெடி கீமெடி பண்ணலையே இதுவரை..... பண்ணா சொல்லுங்க தல போட்டு தள்ளிருவோம்.....

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் . அதற்காக பதிவிற்கு இப்படியெல்லாம் தலைப்பை வைத்து எங்களை பயமுறுத்தாதீங்க ஆமா !.

அருமை .
பகிர்வுக்கு நன்றி !

கயல் said...

அடடா! இன்னமுமா? அப்ப இது தாத்தா பாட்டி கதையா? சூப்பரு அண்ணாச்சி! வெளுத்து வாங்கிட்டீங்க...