Wednesday, March 17, 2010

அழகுப் பெண்களும், அமெரிக்க மாப்பிள்ளைகளும்


"கருப்பா என் ஆளுக்கு அடுத்த மாசம் நிச்சயதார்த்தமாம், மாப்பிள்ளை அமெரிக்காவாம்"

இப்படி ஒரு பதிலை கேட்டத்தும் எனக்கு மருந்து கடைதான் ஞாபகம் வந்தது, அவன் என்ன நினைச்சி இதை சொன்னான்னு தெரியலை, ஆனா  நான் மனசிலே  இன்னைக்கு ஓசி சரக்கு கிடைக்க வழி செய்த அவன் காதலிக்கு நன்றி சொன்னேன்.காதல் தோல்வியை கண்டுக்காம விட்டா நான் நினைச்சது கிடைக்காம போயிடுமுன்னு, அவனோட மனசிலே நல்ல உரம் போட்டு மருந்து கடைக்கு போற அளவுக்கு தேத்திட்டேன், கடைக்கு போற வரைக்கும் அவனை அட்டை பூச்சா ஒட்டிக்கிட்டேன்.


இரவு எட்டு மணிக்கா போனோம், புலம்பலோட கட்டிங் போட ஆரம்பித்தோம், அவனுக்கு துக்கம் தொண்டை அடைத்தது, எனக்கு சந்தோசம் தொண்டை வரைக்கும். சந்தோசத்திலே அமெரிக்க மாப்பிள்ளைகளை

"மச்சான், இப்படி ஒண்ணு ரெண்டு நல்லா இருக்கிற பொண்ணுங்களையெல்லாம் அமெரிக்காகாரங்க உசார் பண்ணிட்டு போய்ட்டா, நாம  என்னடா பண்ணா?அவன் வந்து பொண்ணு கேட்டா இவங்க அப்பனுக்கு எங்கடா புத்தி போச்சி"

"நீ வேற அமெரிக்கா ன்னு சொன்னா ஒண்ணுக்கு ஒண்ணு இலவசமுன்னு ௬ட சொல்லுவாங்க போல"

"காலம் அப்படி இருக்கு, அமெரிக்காவிலே இருந்து பேய் பிடிச்சி வந்தாலும் நடு வீட்டிலே நாட்டியம் ஆடச் சொல்லி வேடிக்கை பார்ப்பாங்க"

"என்னையை ஏமாத்திட்டு அமெரிக்கா போற அவளுக்கு பாடம் காட்டுறேன்"


"ஆமா நாமளும் அமெரிக்காவிலே இருக்கிற நம்ம ஊரு புள்ளைகளை கல்யாணம் செய்யலாம்"

என்ன நினைத்து அந்த கேள்வியை கேட்டேன்னு தெரியலை, எனக்கு தெரிந்த வரையிலே அமெரிக்காவிலே இருக்கிற ஆண்கள் தான், அழகா இருந்து  படிச்சி முடிச்சது, படிச்சிகிட்டு இருக்கிறவங்களை கால் கட்டு போட்டு ௬ட்டிட்டு போறாங்க,ஆனா எந்த ஒரு அமெரிக்க இந்திய பெண்ணாவது என்னை மாதிரி அழகான பையனுக்கு வாழ்வு கொடுத்ததா நான் கேள்விபட்டதே இல்லை.

"நானும் அமெரிக்கா போய் அவ முகத்திலே கண்டிப்பா  கரியை பூசனும்"

"மாப்ள நானும் வாரேன்,போகும் போது நம்ம பாய் கடையிலே சொல்லி ரெண்டு கிலோ மரக்கரி எடுத்துட்டு போவோம்"

"நான் ஒரு லட்சிய பயணத்துக்கு போறேன், நீ எதுக்குடா வாற?"

"மச்சான் யாரிடமும் சொல்லாதே, என் ஆளையும் சிங்கப்பூர் காரன் கவ்விகிட்டு போகப் போறான்"

"யாருடா அது?"

"யார்டயும் சொல்லாதே மாப்ள, நம்ம கம்ப்யூட்டர் சயின்ஸ் குயில்"

"டேய்.. அவளுக்கு நீ இப்படி நினைச்சிகிட்டு இருக்கன்னு தெரிஞ்சா கண்டிப்பா தற்க்கொலை பண்ணிக்குவா?"

"என் மேல அம்புட்டு காதலா?"

"நீ எல்லாம் நினைக்கிற அளவுக்கு, அவ நிலைமை ரெம்ப தாழ்ந்து விட்டதே என்கிற அவமானத்திலே"

"எவ்வளவு குடிச்சாலும் இந்த விசயத்திலே ரெம்ப விவரமா இரு, உண்மைய சொல்லனுமுனா, அமெரிக்காவிலே தொடை ஆட்டம் நல்லா இருக்குமாமே, படத்திலே எல்லாம் பார்த்து இருக்கிறேன், நேரிலே பார்க்கணும் மச்சான்"

"த்து ..த்து ..த்து ..த்து .."


"உன் லட்சியம் உனக்கு பெருசு, என் லட்சியம் எனக்கு பெருசு"

சரக்கை காலி பண்ணிட்டு ரெண்டு பேரும் அடுத்த நாள் சாயங்காலம் வரை தூங்கினோம்.அடுத்த வாரத்திலே இருந்து அமெரிக்கா போற வழிகளை தேடினோம்.கிடைத்த தகவலின் படி நண்பன் சொன்னான்


" கருப்பா GRE,டோபெல் எழுதி தேர்ச்சி பெற்றால்  நாம அமெரிக்கா போகலாம்"

"அதுக்கு முன்னாடி அரியர் எழுதி தேர்ச்சி பெறனும்டா, உனக்கு 20, எனக்கு 18  இருக்கு"


அது நாள் வரைக்கும் படிக்காத நாங்க ரெண்டு பேரும் கொலை வெறி படிப்பை ஆரம்பித்து அடுத்த ஒரு வருடத்திலே எல்லா அரியர்களையும்  முடித்து விட்டோம்.வருசக்கணக்கா படிக்காம இருந்து உலக படிப்பு படித்த  ரெண்டு பேரும் ரெம்ப களைப்பு மற்றும்  கடுப்பு ஆகி  GRE,டோபெல் முயற்சியை கை விட்டோம், இந்த இடைப்பட்ட கால கட்டத்திலே அவன் முன்னாள் காதலி அமெரிக்கா போய் பல மாதங்கள் ஆகிவிட்டது.அதற்குள்  கணனி துறையலிலே ஆணி பிடிங்கினா அகில உலகத்தையும் ஓசியிலே சுத்தலாமுன்னு கேள்வி பட்டு நாங்க ரெண்டு பேரும் கடை கடையா போய் விண்ணப்பங்கள் விநியோகித்தோம்.


அலுவலக வாசலிலே நின்று கொண்டு டீ குடிக்க யாரு வந்தாலும், தீப்பொறியா போய் விசாரிப்போம் வேலை ஏதும் இருக்கான்னு,
எங்களோட இடைவிடாத விண்ணப்ப மழையிலே நினைந்து போன அலுவலகங்கள் எங்களுக்கு வேலை கிடைத்த உடனே தான் நிம்மதி அடைந்தார்கள்.ஓசியிலே பீடி குடிச்சிக்கிட்டு இருந்த ரெண்டு பேரும் வெண்குழல் வாங்க ஆரம்பித்தோம்.


அவனுக்கு காதலி முகத்திலே கரி பூசனும், எனக்கு தொடை ஆட்டத்தை நேரிலே பார்க்கணும்,  இந்த இரண்டு லட்சிய பறவைகளும், இடைவிடா உழைப்பிலும், கூகிள் ஆண்டவர் தயவிலும் வளர்ந்தது, வளர்ந்த பின் அமெரிக்கா படத்தை பையிலே வச்சி சுத்தி கிட்டு இருந்த நாங்க ரெண்டு பேரும், அமெரிக்க மண்ணையே அள்ளி பையிலே போடும் வாய்ப்பு கிடைத்தது.ஒரு இனிய மாலை பொழுதினிலே நாங்க இருவரும் அமெரிக்கா செல்ல விமானம் ஏறி நியூயார்க் வந்து சேர்ந்தோம்.

அடுத்த ரெண்டு நாள்ல  நான் என்னோட தேடலை ஆரம்பித்தேன், அவன் தேடினது கிடைக்கலை, நான் தேடினது உடனே கிடைத்து, நியூயார்க்ல மூலைக்கு  மூலை இப்படி நிறைய கடைகள் இருக்கு. ஒரு கடைய பிடிச்சி உள்ளே போனோம்.


உள்ளே போய் கொஞ்ச நேரத்திலே எங்களுக்கு என்ன நடக்குதுன்னு புரியலை, கம்பியிலே ஆம்பளைங்க உடற்பயிற்சி செய்து கிட்டு இருந்தாங்க.

"மச்சான், நம்ம பார்த்த படத்திலே வெள்ளையம்மாவா இருந்தாங்க, இங்கே வெள்ளையப்பனா இருக்காங்க"

"டேய் விளம்பர பலகையை நல்லா பாத்தியா?"

"ஆமா, மச்சான் guy கிளப் ன்னு தான் எழுதி இருந்தது"

"எ  யில எவனோ பாதிய ஆட்டையைப் போட்டுட்டான் போல, அதான் எ, யு ஆகி இருக்கு"

"இவனுக கம்பியிலே தொங்குவதை பார்கவா நூறு டாலர் கொடுத்தோம், வாடா மச்சான் ஓடிப்போகலாம்"

வெளியே ஓடத் தயார் ஆனா எங்களிடம் கிளப் ஆளுங்க ஒரு பேப்பர் கொடுத்து எங்க உபசரிப்பு எப்படி இருந்ததுன்னு நீங்க பதில் எழுதி கொடுத்தா ஓசியிலே ஒரு பீர் கொடுப்போமுனு சொன்னாங்க, பினாயிலை  பீர் பாட்டில  அடைச்சி இருந்தாலே குடிக்கிற ரெண்டு பேரும் தலை தெறிக்க ஓடி வந்து விட்டோம்.

அந்த கோர சம்பவத்திற்கு அப்புறமா அக்கம் பக்கம் விசாரித்தால் தொடை ஆட்டத்துக்கு "ஜென்டில்மேன்ஸ்  கிளப்" ன்னு பெயராம், தொடை ஆட்டம் போட்டா "ஜென்டில்மேன்", அப்ப மத்தவங்க எல்லாம் "ஆர்டினரிமேன்?". கொஞ்ச நாளைக்கு அதை பத்தியே பேசலை, நண்பனோட லட்சியத்துக்கு நானும் பாடு பட ஆரம்பித்தேன்.

வந்து ஆறு மாசமாச்சி இன்னும் நண்பனோட லட்சியம் நிறைவேறலைன்னு புலம்புவான், ஒரு நாள் நான் கோபத்திலே

"மச்சான், முதல்ல இதயத்தை மாத்தினவா, கிட்னியை மாத்தினவான்னு, இப்படி முத காதல், முதல் முத்தமுன்னு தமிழ் பட கதாநாயகன் மாதிரி வசனம் பேசிகிட்டே இருந்தா, அடுத்த காதல் எப்படி கிடைக்கும், அவளை தேடி அலைந்த நேரத்துக்கு, நடன விடுதிக்கு போய் ஓசியிலே ஒரு பீர் வாங்கி கொடுத்து இருந்தால், இன்னைக்கு விரலுக்கு ஒண்ணை தேத்தி இருக்கலாம். நடந்ததை நினைச்சி கவலைப் பட்டுகிட்டு நடக்கப் போற நல்லதை விட்டுறாதே"

என்னைய பார்த்து முறைச்சவனை சரக்கு அடிக்கும் போது மன்னிப்பு கேட்டுட்டு சமாதானம் ஆகிட்டேன்.ரெண்டு மாதத்துக்கு பின்  நியூஜெர்சி யிலே "எடிசன்" என்ற நகருக்கு எங்க ௬ட படிச்ச இன்னொரு தறுதலையை பார்க்க சென்றோம், எடிசன் நகரின் பேரை எல்லாம் இனிமேல காந்தி நகர்ன்னு மாத்தாலாம், அவ்வளவு இந்தியர்கள்.புது  நண்பன் கமரா வாங்கி நல்லா புகைப்படம் எடுத்து விட்டு, அதை கணனியிலே ஏற்றி விட்டு   திரும்பக் கொடுக்க "வால் மார்ட்" க்கு போனோம்.

கடையை சுத்தி பார்த்துகிட்டு வரும் போது என்னோட பெயரை சொல்லி யாரோ ௬ப்பிட்டாங்க, திரும்பி பார்த்தால் நண்பனோட முன்னாள் காதலி ஸ்டராலர்ல குழந்தையோட அடையாளம் கண்டு பிடிக்கவே ரெம்ப நேரமாச்சி, சந்தோசத்திலே நண்பனிடம் சொல்ல
திரும்பிப் பார்த்தேன். பின்னால் கொஞ்ச தூரத்திலே இருந்து எனக்கு சமிக்கை செய்தான், நான் இங்கே இருப்பதாக சொல்ல வேண்டாம் என்று, நானும் அவனுடன் இருப்பதாக சொல்லவில்லை. நாங்கள் இருவரும் நலம் விசாரித்து கொண்டோம், அடுத்த வாரம் தன்னோட மகன் பிறந்த நாள் இருப்பதாகவும், கண்டிப்பாக வர வேண்டும் என்று சொன்னாள். நானும் வருகிறேன் என்று தலை ஆட்டிவிட்டு கிளம்பினேன், கடையிலே இருந்து வீட்டுக்கு வரும் போது நண்பனிடம் கேட்டேன்.

"ஆளைப் பார்க்கும் வரை உலக மகா ரௌவுடி மாதிரி சத்தம் போட்ட, அவளைப் பார்த்த உடனே புல் தடுக்கி பயில்வான் மாதிரி ஆகிட்ட"

"படிக்கிறப்ப எவ்வளவு அழகா இருந்தா, இப்ப என்னவோ அவளைப் பார்க்கவே முடியலை, இது வரைக்கும் அவளோட அழகான முகம் மட்டுமே எனக்கு ஞாபகம் இருந்தது, அந்த வசீகர முகத்தை பார்த்தவன், இப்ப இருக்கிற உருமாற்றத்திலே என்னோட காதல் எல்லாம் கடல் கடந்து போய்விட்டது.ஏன்டா அவளைப் பார்த்தேன்னு யோசிக்கிறேன்"

எனக்கு உடனே சரக்கு ஞாபகம் வந்தது "மச்சான், நம்ம ஊரு சகிலா பேருல ஒரு சரக்கு இருக்காம், இன்னைக்கு அது வாங்கலாம்"

"அது டகிலாடா"

"அது என்ன எழவு லாவோ"

"இல்லை மச்சான், இனிமேல சரக்கு அடிக்க மாட்டேன்"

"டேய். கதையிலே வில்லன்கள் தானே திருந்துவாங்க, நாம ரெண்டு பேரும் காதாநாயகர்கள்"

"இந்த மாசம் தண்ணீர் சிக்கன மாதம், அதனாலே குடிக்கிற பச்சை தண்ணியை தவிர வேற எல்லா தண்ணியையும் விடப் போறேன்"

"மச்சான்.. உன்னோட முன்னாள் காதலியை சந்திக்க முடியாத சோகம் எல்லாம் யோசித்து பாருடா ஒரு நிமிஷம்"   அப்படியே பேசிக்கொண்டு இருந்த என்னை சட்டை செய்யாமல் போய் கொண்டு இருந்தான்.

இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை.

45 கருத்துக்கள்:

Anonymous said...

//இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை.//

தண்ணீர் விழிப்புணர்வு தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே :)
நல்ல காமெடியா இருந்தது

sriram said...

கலக்கல், தொடர்ந்து எழுதுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Karuppu said...

ரொம்ப நல்லா இருக்கு....
உங்க blogs படிச்சதுக்கு அப்புறம், கொஞ்ச நேரம் நானா ஆபீஸ்ல சிரிச்சுகிட்டு இருப்பேன்...

நல்லவன்,
சிங்கை கருப்பு...

கமல் said...

இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை//


கவித்திட்டீங்களே தலை... நல்லாயிருக்கு.

முகிலன் said...

//ரொம்ப நல்லா இருக்கு....
உங்க blogs படிச்சதுக்கு அப்புறம், கொஞ்ச நேரம் நானா ஆபீஸ்ல சிரிச்சுகிட்டு இருப்பேன்...//

பாத்து தம்பி, அப்புறம் பைத்தியம்னு நெனச்சிரப் போறாய்ங்க. அப்பிடி மட்டும் நினைச்சிட்டா அப்புறம் ப்ளாக் எழுதத்தான் வரணும்..

முகிலன் said...

//கடைக்கு போற அளவுக்கு தேத்திட்டேன், கடைக்கு போற வரைக்கும் அவனை அட்டை பூச்சா ஒட்டிக்கிட்டேன்.//

அதான நம்ம கொசு கடிச்சிடிச்சிடான்னு சொல்றவிங்களயே சோகத்த ஏத்திவிட்டு குவாட்டர் தேத்துரவிங்க. காதல் கடிச்சிருச்சின்னா சும்மா விட்ருவோமா?

சந்தனமுல்லை said...

காந்தி நகர்...:)))

/இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை./

ஹிஹி..நம்பிட்டோம்ம்!! :))

சந்தனமுல்லை said...

/" கருப்பா GRE,டோபெல் எழுதி தேர்ச்சி பெற்றால் நாம அமெரிக்கா போகலாம்"

"அதுக்கு முன்னாடி அரியர் எழுதி தேர்ச்சி பெறனும்டா, உனக்கு 20, எனக்கு 18 அரியர் இருக்கு"/

:)))) ROTFL post!

நட்புடன் ஜமால் said...

கடைசி வரி

நல்ல காரியம்

இதையே தொடருங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

வானம்பாடிகள் said...

/இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை./

பாவி மனுசன் என்னமா புளுவறாரு. பிழையாவது பரவால்ல ட்ரேட்மார்க்னு விடலாம், கண்ட இடத்துல எண்டர் தட்டி, மப்புல இடுகைய போட்டுட்டு அலம்பல பாரு.

ஆமாம். அந்த நண்பர் யாருன்னு சொல்லவே இல்லையே!

Chitra said...

இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை.

............ கண்டிப்பா நம்பித்தான் ஆகணுமா...?

க.பாலாசி said...

என்னாது தண்ணியடிக்கிறதில்லையா.... இது என்ன...இந்த நாட்டுக்கு வந்த சோதனை....

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

:-D))

ராஜ நடராஜன் said...

பாய் கடையில மரக்கறிதானே இருக்கும்:)

ராஜ நடராஜன் said...

நேத்து உடுப்பில உட்கார்ந்து ரவா தோசை துன்னுற போது ஒரு பையனும் ஒரு மூக்கு முழி பொண்ணுமா வந்தாங்க.பொண்ணு கதவ திறந்த உடனே மனசுல நினைச்சது அழகான பொண்ணுக எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகிப் போகுது:)

ராஜ நடராஜன் said...

ஜெண்டில்மேன்:)நம்ம கடை தண்ணிய குடிச்சீங்களா?

பா.ராஜாராம் said...

:-)))

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சுயசரிதைய இப்படியும் எழுதலாமா..??

:)))

வில்லன் said...

அண்ணாச்சி குடுகுடுப்பை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் (19 மார்ச்) வாழ்த்துக்கள்.....

பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும்......வில்லன்....

dhanalakshmi said...

Karuppu said...
//ரொம்ப நல்லா இருக்கு....
உங்க blogs படிச்சதுக்கு அப்புறம், கொஞ்ச நேரம் நானா ஆபீஸ்ல சிரிச்சுகிட்டு இருப்பேன்...//

என்ன சிங்கை கருப்பு! எதாவது கொசுபத்தி சுருள் சுத்துவீங்கலோ சிரிகிறாளவுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழ் பிரியன் said...

கலக்கல் பாஸ்!

வில்லன் said...

//"டேய். கதையிலே வில்லன்கள் தானே திருந்துவாங்க, நாம ரெண்டு பேரும் காதாநாயகர்கள்"//

வில்லன்கள் என்னைக்குமே திருந்த மாட்டோம்.... திருந்துனாப்புல நடிச்சு "ஆட்டைய" போட்டுட்டு போய்டுவோம்........ஒன்னுக்கு ரெண்டு கதாநாயகன்க இருகிங்க.....அப்புறம் என்ன???? நாங்க தின்னுட்டு போடுற "கூந்தலா" பாத்து நக்கிட்டு வசமா மாட்டிகுங்க.....நாங்க ஜாலியா அடுத்த "நொங்க" தேடி போயிடுறோம்.........

வில்லன் said...

// முகிலன் said...


//ரொம்ப நல்லா இருக்கு....
உங்க blogs படிச்சதுக்கு அப்புறம், கொஞ்ச நேரம் நானா ஆபீஸ்ல சிரிச்சுகிட்டு இருப்பேன்...//

பாத்து தம்பி, அப்புறம் பைத்தியம்னு நெனச்சிரப் போறாய்ங்க. அப்பிடி மட்டும் நினைச்சிட்டா அப்புறம் ப்ளாக் எழுதத்தான் வரணும்..///

blogs எழுதுறதுக்கு பதிலா எங்கள தற்கொலை பண்ணிக்க சொல்லலாம்...... எதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல தல....

வில்லன் said...

//வானம்பாடிகள் said...


ஆமாம். அந்த நண்பர் யாருன்னு சொல்லவே இல்லையே!//

கண்டிப்பா நான் இல்லைப்பா...... குடுகுடுப்பைய இருந்தாலும் இருக்கலாம்..... யாருக்கு தெரியும் எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னு........

வில்லன் said...

//இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை.//

குடிக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்......

வில்லன் said...

// ராஜ நடராஜன் said...


நேத்து உடுப்பில உட்கார்ந்து ரவா தோசை துன்னுற போது ஒரு பையனும் ஒரு மூக்கு முழி பொண்ணுமா வந்தாங்க.பொண்ணு கதவ திறந்த உடனே மனசுல நினைச்சது அழகான பொண்ணுக எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகிப் போகுது:)//
நீங்களும் கொஞ்சம் இம்போர்ட் பண்ணி பாக்கலாம்ல......பல கொழந்தைங்க மறு வாழ்வு (step father) பெற வாய்ப்புகள் கெடைக்கும்.......

வில்லன் said...

//"ஆளைப் பார்க்கும் வரை உலக மகா ரௌவுடி மாதிரி சத்தம் போட்ட, அவளைப் பார்த்த உடனே புல் தடுக்கி பயில்வான் மாதிரி ஆகிட்ட"//

யானைக்கும் கூட அடி சறுக்கும்.....

வில்லன் said...

//sriram said...


கலக்கல், தொடர்ந்து எழுதுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
இது யாரு பாஸ்டன் ஸ்ரீராம்..... இதெல்லாம் நல்லா இல்லை......

அப்படின்னா நாங்க என்ன "டல்லஸ்" வில்லன் "டல்லஸ்" குடுகுடுப்பையா?? நசர் என்ன ஜெர்சிசிட்டி நசரேயனா? விளக்கம் தேவை....

வில்லன் said...

/ நட்புடன் ஜமால் said...


கடைசி வரி
நல்ல காரியம்
இதையே தொடருங்க///
இத படிசுட்டு நெறைய பேரு "தண்ணி" அடிக்குறதே விட்டுட்டாங்க...... அதனால ஜெர்சி சிட்டி சாராயக்கடைகாரங்க நசர் மேல நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட போறாங்க.....

அரங்கப்பெருமாள் said...

அந்தக் கிளப்போட அட்ரஸ் இருந்தா கொஞ்சம்.....

Porkodi (பொற்கொடி) said...

////sriram said...


கலக்கல், தொடர்ந்து எழுதுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
இது யாரு பாஸ்டன் ஸ்ரீராம்..... இதெல்லாம் நல்லா இல்லை......

அப்படின்னா நாங்க என்ன "டல்லஸ்" வில்லன் "டல்லஸ்" குடுகுடுப்பையா?? நசர் என்ன ஜெர்சிசிட்டி நசரேயனா? விளக்கம் தேவை....//


:)))) sirippu villaina saar neenga? :)

arumaiyana kadhai (kadhai thaanee?) nasareyan avargale!

பித்தனின் வாக்கு said...

// இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை. //
உங்க தங்கமணி மாதிரி நாங்களும் அப்புராணிங்க. நம்புறேன். நீங்க சொல்றதை நம்புறேன்.. சார் நான் ஒரு நகைச்சுவை பதிவு போட்டுள்ளேன். அதில் உங்க பெயரையும் போட்டூள்ளேன். தயவு செய்து கோவிக்காமல் படித்து சிரிக்கவும். நன்றி.

கண்ணகி said...

சுயசரிதம் நல்லாருக்கு...:}...:}

Veliyoorkaran said...

சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments

RAMYA said...

//
" கருப்பா GRE,டோபெல் எழுதி தேர்ச்சி பெற்றால் நாம அமெரிக்கா போகலாம்"

"அதுக்கு முன்னாடி அரியர் எழுதி தேர்ச்சி பெறனும்டா, உனக்கு 20, எனக்கு 18 அரியர் இருக்கு"
//

இங்கே அஸ்திவாரமே ஆட்டம் கண்டிருக்கு இதுலே இதுவேறேயான்னு வெள்ளையப்பா கேக்குறாரு :)

RAMYA said...

//
இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை.
//

இதெல்லாம் சொல்லனுமா ஏன்னா, எழுத்தைப் பார்த்தே புரிஞ்சிகிட்டோமில்லே:)

RAMYA said...

//
"டேய். கதையிலே வில்லன்கள் தானே திருந்துவாங்க, நாம ரெண்டு பேரும் காதாநாயகர்கள்"
//

அது சரி இதெல்லாம் வேறேயா? எப்படியோ கதாநாயகனா மாறினா சரி :-)

RAMYA said...

அப்புறம் நசரேயன் இப்போ எல்லாம் உங்க கனவு ரொம்ப அருமையா இருக்கு. தொடர்ந்து நிறைய தூங்கி, அதிகமா கனவு கண்டு அதை இடுகையா போட வாழ்த்துக்கள் :-)

ராஜ நடராஜன் said...

பொண்ணும்,மாப்பிள்ளையும் நகராமக் கூட மூணு வலம் வருகிறார்களே?எப்படி

SUFFIX said...

//உனக்கு 20, எனக்கு 18 இருக்கு// ஹா..ஹா :)

sriram said...

//இது யாரு பாஸ்டன் ஸ்ரீராம்..... இதெல்லாம் நல்லா இல்லை......

அப்படின்னா நாங்க என்ன "டல்லஸ்" வில்லன் "டல்லஸ்" குடுகுடுப்பையா?? நசர் என்ன ஜெர்சிசிட்டி நசரேயனா? விளக்கம் தேவை...//

அன்பின் நசரேயன், நீங்க வெளையாட்டுக்கு சொன்னீங்களா இல்ல சீரியஸா சொன்னீங்களான்னு தெரியல-

என் பேர் ஸ்ரீராம், வசிப்பது பாஸ்டனில். புனைப்பெயர் வச்சிக்கிற அளவுக்கெல்லாம் எனக்கு தகுதி கிடையாது, என்னோட பேர் ரொம்ப common (நான் ஒரு common man). அதனால ஒரு அடையாளத்துக்கு “பாஸ்டன் ஸ்ரீராம்”, இது ஒரு குத்தமா?
LA ராம், பாஸ்டன் பாலா, ஹாலிவுட் பாலா, சிங்கை நாதன் இவங்களையெல்லாம் இந்த கேள்வியை கேட்டீங்களா? என்னை மட்டும் ஏன்? அவ்வ்வ்வ்வ்வ் :);)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நசரேயன் said...

//இது யாரு பாஸ்டன் ஸ்ரீராம்..... இதெல்லாம் நல்லா இல்லை......

அப்படின்னா நாங்க என்ன "டல்லஸ்" வில்லன் "டல்லஸ்" குடுகுடுப்பையா?? நசர் என்ன ஜெர்சிசிட்டி நசரேயனா? விளக்கம் தேவை...//

அன்பின் நசரேயன், நீங்க வெளையாட்டுக்கு சொன்னீங்களா இல்ல சீரியஸா சொன்னீங்களான்னு தெரியல-

என் பேர் ஸ்ரீராம், வசிப்பது பாஸ்டனில். புனைப்பெயர் வச்சிக்கிற அளவுக்கெல்லாம் எனக்கு தகுதி கிடையாது, என்னோட பேர் ரொம்ப common (நான் ஒரு common man). அதனால ஒரு அடையாளத்துக்கு “பாஸ்டன் ஸ்ரீராம்”, இது ஒரு குத்தமா?
LA ராம், பாஸ்டன் பாலா, ஹாலிவுட் பாலா, சிங்கை நாதன் இவங்களையெல்லாம் இந்த கேள்வியை கேட்டீங்களா? என்னை மட்டும் ஏன்? அவ்வ்வ்வ்வ்வ் :);)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

March 24, 2010 8:40:00 AM EDT//

தலைவா .. வில்லன்ங்கிறது என்னோட நண்பர், அவரு நாலைந்து கடைகளிலே இப்படித்தான் கும்மி அடிப்பார், அந்த வகையிலே எழுதப்பட்டது தான் இந்த பின்னூட்டம், மத்தபடி அது உங்க மனசை காயப் படுத்தி இருந்தா நான் மன்னிப்பு கேட்டுகிறேன்

sriram said...

அன்பின் நசரேயன்
தவறு என் மீதுதான், கேட்டது நீங்கன்னு தப்பா நெனச்சிட்டேன், நான் காயப்படவில்லை, இதுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு, லூஸ்ல விடுங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்