Tuesday, March 9, 2010

கணித்துறை அலப்பறைகள்

பொருளாதாரசரிவிலே இருந்து விழுந்த நிறுவனங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தேறிக்கொண்டு வருகின்ற நிலையிலே,இவ்வளவு நாளா அலுவலகத்திலே மனித வள மேம்பாட்டு துறையின் சுறுசுறுப்பு ஆட்டம் கொஞ்சம் சூடு குறைய ஆரம்பித்தது.அலுவலகத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்தவிட்ட தொழிலாளர்களையும், ஐந்து வருடத்திற்கு முன் கொடுத்த அனுபவ சான்றிதழை சரி பார்த்ததிலே நீங்க ஏமாத்தி இருப்பதாக தெரிய வந்தது என்று சொல்லி அவர்களுக்கு கல்தா கொடுத்தார்கள், இப்படி இந்திய புலனாய்வு துறை வேலை, துப்பு கேட்டு தூக்கி எறியும் வேலை கலகல வென நடந்து கொண்டு இருந்த காலம். இப்போது மீண்டும் சந்தை நிலவரம் தலை தூக்க ஆரம்பித்ததும்  கடு கடுன்னு இருந்த முகத்திலே இப்ப மெல்லிய சிரிப்பு இழையோட தூக்கி எறிஞ்சவங்களைஎல்லாம் துண்டு போட்டு தேடி மீண்டும் வேலையிலே சேருங்கள் என்று அன்புக்குரல் கொடுத்து கொண்டு இருந்தார்கள். 


நானும் அவங்க பட்டியல்ல இருந்தாலும் நான் பிடிங்கி கொண்டு இருந்த ஆணிக்கு அமெரிக்க துரைமார்கள் மூலமா  கல்லா நல்லா கட்டி கொண்டு இருந்ததாலே நான் தப்பித்தேன், இப்போது நிலைமை சரியாகி விட்ட நிலையிலே வேண்டா வெறுப்பாக பல்லை கடித்து கொண்டு இருந்த சக பயணிகள் விட்டா போதும் என ஒரே ஓட்டமாக அலுவலகத்தை விட்டு காவிரி வெள்ளம் போல வெளியே போய் கொண்டு இருந்தார்கள், முன்னாடி ஆள் அதிகம் வேலை குறைவு, இப்ப வேலை அதிகம் ஆள் குறைவு, ஆனா இந்த ரெண்டு நிலையிலும் அலுவலக நிகர லாபம் குறையலை.லயல்டிக்கு டகால்டி காட்டி டாட்டா காட்டிவிட்டு நிறைய பேர் வெளியே நல்ல சம்பளம் கிடைத்த வேலைக்கு சென்று விட்டார்கள். அதனாலே மீண்டும் ஆள் எடுப்புக்கு மனிதவளம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருந்தார்கள், ஆணியே பிடுங்காம ஆணிவேரா இருக்கிற ஒரு துறை இதுதான். 


நான் வழக்கம் போல தாமதமா வர ஆரம்பித்த காலம், முன்னாடி எல்லாம் அலுவலக அடையாள அட்டையை முகத்திலே ஒட்டிகிட்டு திரிந்த காலம் போய் அலுவலகம் நுழைந்த உடனே அடையாள அட்டையை சட்டை பைக்குள் மறைத்து வைத்து விட்டு உயர் தூக்கி இயந்திரத்தின் முன்னே காத்து கொண்டு இருந்தேன். கதவு திறந்தது உள்ளே சென்றேன்.


அதற்குள் வெளியே இருந்து ஒரு குரல் "காத்து இருங்கள் நானும் வருகிறேன்" என்றதை கேட்டு கதவின் குறுக்கே கையை நீட்டினேன், அதற்குள் குரலுக்கு சொந்தக்காரியும் வந்து சேர்ந்தாள்.நான் வேலை இல்லாம திரிந்த நேரத்திலே உடம்பிலே வியர்வை நாற்றம் எட்டு ஊருக்கு அடிக்கும், இப்ப எல்லாம் பாதி குளியல் நறுமண தைலத்தில் தான்.சில சமயங்களிலே வாசனை திரவியத்தை வைத்தே குளியலை முடித்து விடுவேன். அவள் உள்ளே வந்ததும் ஒரு வாசனை குடலை பிரட்டி கிட்டு வந்தது, சரக்கு அடிக்காமலே வாந்தி எடுப்பது போல ஒரு உணர்வு, என் சட்டையை முகர்ந்து பார்த்தேன், தைல வாசனை நல்லாவே இருந்தது, அவளைப் பார்த்தேன்,அவளோட தலை முடியிலே இருந்து தான் வந்து இருக்க வேண்டும்,விளக்கெண்ணையா இருக்கலாம் என நினைத்தேன்.விளக்கெண்ணை வாசத்திலே அவளை என்னால சரியா கவனிக்க முடியலை, எப்படா எட்டாவது மாடி வரும் என்று காத்து கொண்டு இருந்தேன்.வந்த உடனே முத ஆளா ஓட்டம் எடுத்தேன்.


அலுவலத்திற்குள் ஒன்பது மணிக்குள் நுழைந்தாலும் இருக்கைக்கு செல்லும் போது குறைந்த பட்சம் மணி 11 ஆகும், உலக கதை எல்லாம் பேசி விட்டு, நண்பர்களுடன் விளக்கெண்ணை கதை எல்லாம் சொல்லி முடிச்சிட்டு,ஓசியிலே மீண்டும் கொடுக்க ஆரம்பித்த டீ யிலே நாலு டீ குடித்து விட்டு எனது இருக்கைக்கு சென்றேன்.கடா வெட்ட பூசாரியை காணாம ஆடுகள் எல்லாம் முழிச்சிகிட்டு இருக்கிற மாதிரி எல்லோரும் என்னை எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தார்கள், அவங்க பார்த்த பார்வையிலே எங்கே என் வேலைக்கு கல்தா கொடுத்து விட்டார்களோ என்று நினைத்தேன்.  என்னை பார்த்து திட்ட மேலாளர் 


"உனக்காகத்தான் எல்லோரும் காத்து கொண்டு இருக்கிறோம்"


நான் கால் வச்ச நேரம் திட்டத்துக்கு சங்கு ஊதிட்டாங்களோன்னு பயத்திலே 

"என்ன விஷயம்?"

"நம்ம திட்ட குழு  உறுப்பினர்களோட அறிமுகம் இருக்கு, அது முடிச்ச உடனே ஆன்சைட் கோ ஆர்டினட்டர் ௬ட பேசணும்"

ஆன்சைட் கோ ஆர்டினட்டர்  பெயரை கேட்டாலே இந்தியாவிலே வேலை செய்யும் உறுப்பினர்களுக்கு கோபம் தான் வரும்,மென்பொருள் துறை  வாடிக்கைக்காரர்கள் எல்லாம் சாமி மாதிரி, ஆனா இவரு பூசாரி மாதிரி, இவரு சொல்லுறதை தான் நாங்க கேட்கணும், இவரோட வேலை என்னன்னா, சாமி பன்னிகுட்டி பக்கடா சாப்பிடுற மாதிரி கொடுன்னு சொன்னா, அதை நம்மகிட்ட விளக்கி சொல்லி குறைந்த பட்சம் ஒரு கழுதையையாவது செய்து முடிக்க வைக்கவேண்டியது இவரோட கடமை.


நான் சொன்னதை நீ செய்யலை, நீ எங்களுக்கு சரியா சொல்லைலைன்னு ஆன்சைட், ஆப்ஷோர் ரெண்டு கும்பலும் கொலைவெறி குற்ற சாட்டுக்களை அள்ளிப் போட்டுக்கிட்டு இருப்பாங்க.அதனாலே என்னவோ எனக்கு அந்த பேரை கேட்டாலே கொஞ்சம் கோபம் வரும், எங்களுக்கு எல்லாம் மீட்டர் ரூபாயிலே ஓடுது, அவருக்கு மீட்டர் டாலர்ல ஓடுது.

இம்புட்டு நேரமா உலக கதை பேசிகிட்டு இருக்கியே, நீ என்னடா வேலைபன்னுற நீங்க கேட்க மாட்டீங்க, அதனாலே நானே சொல்லுறேன்.நான் தான் இந்த திட்டத்துக்கு நிர்மாணிப்பவர்(architect).

கேள்விகேட்ட திட்ட மேலாளர்கிட்ட நான் இன்னும் பதிலே சொல்லலைன்னு ஞாபகம் வரவே, அவரிடம் நான் இன்னும் திட்ட உறுபினர்களை சந்திக்கலைன்னு சொன்னேன்.அவரு என்னிடம் முதல்ல அறிமுகப் படுத்தினார், எங்க டீம்ல ஐந்தாவது ஆளா விளக்கெண்ணை அழகியும் இருக்கிறாள்ன்னு எனக்கும் அப்பத்தான் தெரியும். 

ஆன்சைட் கோ ஆர்டினட்டர் முகத்தை முன்ன பின்ன பார்த்தது கிடையாது, அதனாலே எங்க ப்ராஜெக்ட் டமேஜெர் எங்களிடம் அலுவலக மென்பொருள்ல இருந்து அவரோட புகைப் படத்தை காட்டி கொண்டு இருந்தார், நானும் பார்த்து வைத்து கொண்டேன் பிற்காலத்திலே பயன்படும் என்று, ஆனா என்னோடு சேர்ந்து எங்க டீம்ல இன்னொரு ஆள் தீவிரமாக அந்த புகைப் படத்தை பார்த்து கொண்டு இருந்தது எனக்கு தெரிய வாய்ப்பு இல்லை, அதற்குள் தொலைபேசி மணியும் அடித்தது.

(அலப்பறைகள் தொடரும்)  


23 கருத்துக்கள்:

பழமைபேசி said...

விளக்கெண்ணய் படம், பழைய படமா இருக்கக் கடவது!

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...
This comment has been removed by the author.
முகிலன் said...

நடக்கட்டும் நடக்கடும்

வானம்பாடிகள் said...

அடங்கொன்னியா. தொடரும் வேறயா? நடத்தும்! இதும் துண்டுலதான் போய் நிக்கும்னு தோணுது

பிரியமுடன்...வசந்த் said...

//நான் பிடிங்கி கொண்டு இருந்த ஆணிக்கு அமெரிக்க துரைமார்கள் மூலமா கல்லா நல்லா கட்டி கொண்டு இருந்ததாலே நான் தப்பித்தேன்//

கல்லா நல்லாவா?
நல்லா கல்லாவா?

எப்பிடியோ நல்லா இருந்தாச்செரி...

Chitra said...

அலுவலத்திற்குள் ஒன்பது மணிக்குள் நுழைந்தாலும் இருக்கைக்கு செல்லும் போது குறைந்த பட்சம் மணி 11 ஆகும், உலக கதை எல்லாம் பேசி விட்டு, நண்பர்களுடன் விளக்கெண்ணை கதை எல்லாம் சொல்லி முடிச்சிட்டு,ஓசியிலே மீண்டும் கொடுக்க ஆரம்பித்த டீ யிலே நாலு டீ குடித்து விட்டு எனது இருக்கைக்கு சென்றேன்.


.........architect வேலை நல்லா இருக்கு.

நட்புடன் ஜமால் said...

அலப்பறை கலக்கல் துவக்கம்

நடத்துங்க ...

அரங்கப்பெருமாள் said...

//அதை நம்மகிட்ட விளக்கி சொல்லி குறைந்த பட்சம் ஒரு கழுதையையாவது செய்து முடிக்க வைக்கவேண்டியது இவரோட கடமை.//

- என்னண்ணே இப்பிடிச் சிலாக்கிறீங்க.நாங்கதானே வாடிக்கையாள்ருக்கு சொம்புத் தூக்கி,இந்தியாவுல இருக்கவ்ங்கிட்டச் சொன்னா,அவங்க உடனே, எங்க அண்ணோட கொளுந்தியோட மாமியாரோடப் பேத்திக்கு சடங்கு சுத்துறாங்க, அங்க போவனும் அப்பிடின்னு ஒரு காரண்ம் சொல்லவேண்டியது.நாம இத வாடிக்கையாளர் கிட்ட சொல்லமுடியாம, மறுபடி வெள்ளத்தொரைக்கு கால் அமுக்கணும். அட...கிட்டத்தட்ட ரஞ்சிதா மாதிரி வச்சுக்குங்களேன்.

சாமியாருக்கும் கால் அமுக்கணும்,பத்திரிக்கைக்களுக்கும் பதில் சொல்லணும்.இது போக கேமராவுல நடிக்கணும்.

அட போங்கப்பா...

அமைதிச்சாரல் said...

//விளக்கெண்ணை வாசத்திலே அவளை என்னால சரியா கவனிக்க முடியலை,//

இதுதான் உண்மையிலேயே ஃபீலிங்க்ஸ்ல எழுதினமாதிரி இருக்கு :-)))).

டக்கால்டி said...

தொடருங்கள்...
நல்ல ஆர்வமாகப் போகிறது கதை..
ஆமா இது உண்மை சம்பவமா? இல்லை வெறும் கதை தானா?

க.பாலாசி said...

ஆமா... அந்த வௌக்கெண்ண ஃபிகர் எப்டி??

Vidhoosh said...

ஏன். அந்த வெள்ளை அழகி எல்லாம் வரதில்லையா..

பிரியாணி திங்காதேன்னு சொன்னா கேட்டாத்தானே...

ஆராய்வு said...

மிகவும் சுவையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

நடத்துங்க..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. அருமை நண்பரே !! தொடருங்கள்.

Dr.P.Kandaswamy said...

//அவளோட தலை முடியிலே இருந்து தான் வந்து இருக்க வேண்டும்,விளக்கெண்ணையா இருக்கலாம்//

அடுத்த தடவை நல்லா மோந்து பாத்துடுங்க. வேப்பெண்ணையா இருக்கப்போகுது

ராஜ நடராஜன் said...

// உயர் தூக்கி இயந்திரத்தின் முன்னே காத்து கொண்டு இருந்தேன். கதவு திறந்தது உள்ளே சென்றேன்//

உயர் தூக்கி இயந்திரம்!அழகான மொழியாக்கம்!விளம்பரப்படுத்த வேண்டும்.

ராஜ நடராஜன் said...

//அவளோட தலை முடியிலே இருந்து தான் வந்து இருக்க வேண்டும்,விளக்கெண்ணையா இருக்கலாம் என நினைத்தேன்.விளக்கெண்ணை வாசத்திலே அவளை என்னால சரியா கவனிக்க முடியலை//

ஆமணக்கு கொட்டைய சேர்த்து வறுத்து இடிச்சு எடுக்கிற விளக்கெண்ணெய்க்கு அப்படி ஒரு மணம் இருக்குதுங்க தல.அக்கா தேச்சது வேப்பெண்ண மாதிரி வேற ஏதாவதா இருக்கும்:)

ராஜ நடராஜன் said...

வாட்ச்மேன் துரத்துறான்.நான் அப்புறமா திரும்ப வாரேன்.

வில்லன் said...

//ஆனா என்னோடு சேர்ந்து எங்க டீம்ல இன்னொரு ஆள் தீவிரமாக அந்த புகைப் படத்தை பார்த்து கொண்டு இருந்தது எனக்கு தெரிய வாய்ப்பு இல்லை//

யாரு அப்படி பாத்தது......உங்க ஊரு அந்த வெளக்கெண்ணை "பக்கியா".........இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல..... அழுதுருவேன்.....

வில்லன் said...

/ க.பாலாசி said...


ஆமா... அந்த வௌக்கெண்ண ஃபிகர் எப்டி??//
ஏன்.... தலைக்கு போட்டியா நீறு துண்டு போடவா???? அவரே எதோ அவரு ரேஞ்சுக்கு ஒரு வத்தலோ தொத்தலோ பாது துண்டு போட்டுட்டு இருக்காரு...... அவரு பொளப்புல மண்ணள்ளி போட்டுராதீரும்....

தலையோட வழியே தனி வழி........ நல்ல பிகர பாத்தா நெறைய "காம்பெடிசன்" அதுக்கு பதிலா போட்டியே இல்லாம "சப்ப" பிகரா பாது ஒனுக்கு ரெண்டா நகட்டிட்டு போய்டலாம்னு.........

செந்தழல் ரவி said...

super.................