Thursday, March 4, 2010

காவி பற்றி பதிவர்கள் கருத்து என்ன?

குடுகுடுப்பை : 
 அச்சச்ச்சோ அரே துண்டு  பாய் .. நிம்மல் அச்சா.. அச்சா சொல்லுறான். கவுஜையா சொல்லுங்க.. நான் எதிர் கவுஜ போடுறேன், ஆனா கருத்துக்கெல்லாம் எதிர் கருத்து சொல்லி பழக்கம் இல்லை.


வானம்பாடிகள் :
காவியமா.. நெஞ்சின் ஓவியமா(எல்லோரும்: வயசுக்கு ஏத்த
பாட்டு).


நான் இப்படித்தான் ஒண்ணு எழுதிபோட்டு அப்புறமா கடைய சாத்திட்டேன்.


ஈரோடு கதிர் :
காவியைப் பத்தி பேசும் அதிகாரத்தை யாரு கொடுத்தது, உடைத்து எரியுங்க(அது சரி: இன்னும் நட்சத்திர வாரம் முடிஞ்சது ஞாபகம் இல்லை போல இருக்கு).



பழமைபேசி:
காவியம், காப்பியம், ஓவியம், செப்புயம், இலக்கணம், இலக்கியம் இவைகளைப் பற்றி தமிழிலே கேளுங்க பதில் சொல்லுறேன்.



முகிலன் :
இதுல பேச என்ன இருக்கு, அவன் பேச்சை கேளு, இவன் பேச்சை கேளுன்னு சொல்லுறதுக்கு முன்னாடி, பொண்ட்டாட்டி பேச்சை கேளுங்க.





வால்பையன் :
காவித்துணி, வெள்ளைத்துணி, பச்சைத்துணி எல்லாம் ஒண்ணு தான், போலிகளை நம்பாதீர்கள்.



பா.ரா :
காகத்தை பார்த்து காக்கா என்றேன்
வியந்து பார்த்து விட்டு சொன்னது
விகடகவி.. விகடகவி 





ஜெரி ஈசானந்தா:
ஆனந்தா பவா.. ஈசானந்தா பவா.


ஷங்கர் :
தொடர் கதையா இருந்தா சொல்லுங்க பாகம்.. பாகம் மா எழுதுறேன்.

அத்தரி :
அண்ணாச்சி.. வீட்டிலே ஊருக்கு போய் இருக்காங்க, வந்த உடனே கேட்டு சொல்லட்டுமா.
க.பாலாஜி :
முத்தல்ல  என்னோட விபரப்பட்டையிலே இருக்கிற படத்தை பார்த்து விட்டு வந்து கேளுங்க.. பதில் சொல்லுறேன்.

வில்லன் :
யோவ் பிரச்சனை ஆரமிக்கும் முன்னே என்கிட்டே கேட்டு இருந்தா, அருவா கம்போட வந்து இருப்பேன்,எல்லாம் கடைய கட்டுன அப்புறமா வந்து கணக்கு கேட்டா.
 அதுசரி :
விவகாரம் பத்திய எல்லா இணைப்பையும் கொடுங்க, பார்த்து விட்டு தனியா இடுகை போடுறேன்.

ராஜ நடராஜன்:
நான் துண்டு போட்டுகிறேன்ன்னு  பின்னூட்டத்திலே ஆரம்பித்து வைத்தேன், அதை நீங்க எப்படி எப்படி எல்லாமோ பயன் படுத்திகிட்டீங்க, அதனாலே நான் பேசுறதுக்கு காப்புரிமை வாங்கி வச்சிக்கிட்டு வந்து கருத்து சொல்லுறேன்.

நசரேயன் :
காவிய ரெண்டா மடிங்க, வெள்ளையும் ரெண்டா மடிங்க, பக்கத்திலே பக்கத்திலே வையுங்க,பச்சையும் ரெண்டா மடிங்க, வெள்ளைக்கு கீழே வையுங்க, ஒரு சக்கரத்தை போட்டு 24
கால் போடுங்க, போட்ட வுடனே சக்கரத்தை வெள்ளையிலே வையங்க.

(பின்புலத்திலே ஜனகன மனகன என்று பாடல் ஓட எல்லோரும் எழுந்துவிட) 

ஆக என்ன ஒரு தேசபக்தி


(எல்லோரும்: எந்திரிச்சது பாட்டுக்கு இல்லை, உன்னை அடிக்க ஓடிரு.. ஓடிரு)
 


39 கருத்துக்கள்:

Chitra said...

jai ho!

பழமைபேசி said...

//ஈரோடு கதிர் :
காவியைப் பத்தி பேசும் அதிகாரத்தை யாரு கொடுத்தது, உடைத்து எரியுங்க(அது சரி: இன்னும் நட்சத்திர வாரம் முடிஞ்சது ஞாபகம் இல்லை போல இருக்கு).//

அஃகஃகா!

மாப்பு! பாருங்க, மக்கள் நம்ம சல்லடத்தை உருவுறதுலதான் இருக்காய்ங்க.....

சாந்தி மாரியப்பன் said...

வந்தே மாதரம்.

Anonymous said...

சினிமா முடிஞ்சிருச்சின்னா வீட்டில போயி தூங்கனும்

தெருவில நின்னு சத்தம் போடக்கூடாதுங்க.

Unknown said...

நான் சொன்னா யாரு கேக்குறா??

ராஜ நடராஜன் said...

நசரேண்ணா!கடை கடையா காவிக் கதை கேட்டு கேட்டு இப்ப மணி காலை 1.00.நகைச்சுவைய எப்பவும் தேடுற கெட்ட பழக்கத்துல உங்ககிட்ட வந்து இப்ப மாட்டிகிட்டேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்:)

Anonymous said...

//முகிலன் :
இதுல பேச என்ன இருக்கு, அவன் பேச்சை கேளு, இவன் பேச்சை கேளுன்னு சொல்லுறதுக்கு முன்னாடி, பொண்ட்டாட்டி பேச்சை கேளுங்க.

//

இதை மட்டும் தங்கமணிகள் சார்பா பரிந்துரைக்கிறேன்.

vasu balaji said...

/வானம்பாடிகள் :
காவியமா.. நெஞ்சின் ஓவியமா(எல்லோரும்: வயசுக்கு ஏத்த பட்டு).


நான் இப்படித்தான் ஒண்ணு எழுதிபோட்டு அப்புறமா கடைய சாத்திட்டேன்./

அதென்ன பட்டு. வேணும்னு தான பிழை போட்டீரு. நான் தூக்கினா மாப்பு புடிச்சி பஸ்ல ஏத்தி விட்டாரே பார்க்கல?

பழமைபேசி said...

//நான் தூக்கினா மாப்பு புடிச்சி பஸ்ல ஏத்தி விட்டாரே பார்க்கல?

March 4, 2010 5:11:00 PM EST//

.... Publish பொத்தானை அமுக்குறதுக்கு முன்னாடி, நெம்ப கவனமா இருக்கணும் போல.... இஃகிஃகி!

பாலாண்ணே, நான் shared தட்டினேன்... அது buzzலயும் ஏறிடுச்சு போல.... sorry about that!

நசரேயன் said...

//வானம்பாடிகள் said...

/வானம்பாடிகள் :
காவியமா.. நெஞ்சின் ஓவியமா(எல்லோரும்: வயசுக்கு ஏத்த பட்டு).


நான் இப்படித்தான் ஒண்ணு எழுதிபோட்டு அப்புறமா கடைய சாத்திட்டேன்./

அதென்ன பட்டு. வேணும்னு தான பிழை போட்டீரு. நான் தூக்கினா மாப்பு புடிச்சி பஸ்ல ஏத்தி விட்டாரே பார்க்கல?
//

நல்லாத்தான் இருந்தது .. எடுத்து இருக்க வேண்டாம்,கலவரம் ஒய்ந்த உடனே வெளியிட வேண்டும்

கலகலப்ரியா said...

உங்க காவிப்பல்லுக்கு ஏதாவது வழி பாருங்க... அப்டின்னு குடுகுடுப்பையார் சொல்லச் சொன்னாரு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

கதவைத் திற
காற்றுவரும் என்றவன்
கதவைத் திறக்க
பூதம் வந்தது

Vidhoosh said...

///சக்கரத்தை வெள்ளையிலே வையங்க.////

அண்ணா... எப்டிங்க.... முடீல சாமீ..
:))

சந்தனமுல்லை said...

செம செம!! :-))) அதிலும் நம்ம குடுகுடுப்பையார் பதில் அபாரம்..அப்புறம் முகிலன் - :-)) பாராவையும் விட்டு வைக்கவில்லையா நீங்க!!

சந்தனமுல்லை said...

ஆனா, நீங்க மட்டும் இவ்ளோ தெளிவா இருக்கீங்களே..முத்திப் போன் தேசபக்தியோட..:-))))

சந்தனமுல்லை said...

/கலப்ரியா said...

உங்க காவிப்பல்லுக்கு ஏதாவது வழி பாருங்க... அப்டின்னு குடுகுடுப்பையார் சொல்லச் சொன்னாரு.../

அவ்வ்வ்....நசரேயனுக்கு டேமேஜா...! :-)

Unknown said...

பாலா சார் நான் ரீடர்ல படிச்சேன். நல்லாத்தான இருந்திச்சி..

அப்புறம் பழமையண்ணாவ நான் ஃபாலோ பண்ணல போல இருக்கே??

ப்ரியமுடன் வசந்த் said...

// அதுசரி :
விவகாரம் பத்திய எல்லா இணைப்பையும் கொடுங்க, பார்த்து விட்டு தனியா இடுகை போடுறேன்.
//

அவ்வ்வ்வ்வ்வ்

நிதின் இடுகையெல்லாம் படுச்சுட்டு மண்டை காய்ஞ்சு கெடக்குதாம்....

ப்ரியமுடன் வசந்த் said...

//ஷங்கர் :
தொடர் கதையா இருந்தா சொல்லுங்க பாகம்.. பாகம் மா எழுதுறேன். //

அதான் சரி

க.பாலாசி said...

என்னோட போட்டோவ பாத்து யாருமே ஒத்துக்க மாட்டுறாங்கங்க... என்ன பண்றது...

பா.ரா..கவிதை... ம்ம்ம்... பின்னல்....

Paleo God said...

ஆஹா ரெண்டு நாள் ஊருக்கு போனா நம்ம கருத்த நாமளே படிக்கனும் போல அவ்வ்வ்வ்வ்வ்...:))

தேவன் மாயம் said...

என்னமா யோசிக்கிறீங்க!!!

வால்பையன் said...

//வால்பையன் :
காவித்துணி, வெள்ளைத்துணி, பச்சைத்துணி எல்லாம் ஒண்ணு தான், போலிகளை நம்பாதீர்கள்.//


எந்த கலர் துணியோ இதுக்கு மைனஸ் ஓட்டு போட்டிருக்கு!
ஊர் உருப்பட்டா மாதிரி தான்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமையான கருத்துகள்!

Jerry Eshananda said...

உருட்டுங்கப்பு,நல்லா உருட்டுங்க,

Jerry Eshananda said...

இப்பவெல்லாம் "காவி துணியில சாயம் ரொம்ப போகுது" சீக்கிரம் வெளுத்துருது.

ரோஸ்விக் said...

நடக்கட்டும்ணே... நடக்கட்டும்... நானும் பாத்துகிட்டு தான் இருக்கேன்... நக்கலே நாக்கிலே வச்சிக்கிட்டு உங்க தலைமையில ஒரு குருப்பு இயங்குது... நடக்கட்டும்ணே...

நல்லா இருக்கு அண்ணா :-))

RAMYA said...

நசரேயன் அருமையான கற்பனை, ஓ இது கற்பனை இல்லை கனவு சரிதானே ?

நல்லா எழுதி இருக்கீங்க :)

அப்புறம் டெம்ப்ளேட் சூப்பர் :))

RAMYA said...

//
குடுகுடுப்பை :
அச்சச்ச்சோ அரே துண்டு பாய் .. நிம்மல் அச்சா.. அச்சா சொல்லுறான். கவுஜையா சொல்லுங்க.. நான் எதிர் கவுஜ போடுறேன், ஆனா கருத்துக்கெல்லாம் எதிர் கருத்து சொல்லி பழக்கம் இல்லை.
//

சூப்பர் குடுகுடுப்பை இப்படிதான் பேசுவாரோ? நக்கல் அதிகம் நசரேயன் உங்களுக்கு :)

RAMYA said...

//
வானம்பாடிகள் :
காவியமா.. நெஞ்சின் ஓவியமா(எல்லோரும்: வயசுக்கு ஏத்த பாட்டு).
//

இதுலே ஏதோ உள்குத்து இருக்குறமாதிரி தெரியுதே ஆமாதானே :)

RAMYA said...

//
ஈரோடு கதிர் :
காவியைப் பத்தி பேசும் அதிகாரத்தை யாரு கொடுத்தது, உடைத்து எரியுங்க(அது சரி: இன்னும் நட்சத்திர வாரம் முடிஞ்சது ஞாபகம் இல்லை போல இருக்கு).
//

அம்புட்டு பேரையும் வம்புக்கு இழுத்திருக்கீங்க :)

எல்லாரும் சேர்ந்தா என்னா ஆவும் :)

RAMYA said...

//
பழமைபேசி:
காவியம், காப்பியம், ஓவியம், செப்புயம், இலக்கணம், இலக்கியம் இவைகளைப் பற்றி தமிழிலே கேளுங்க பதில் சொல்லுறேன்.
//

பழமைபேசி அண்ணா ஒரு மார்க்கமா தலைப்பு கொடுத்திருக்காரு போல:-)

சிக்கிநீங்களா நசரேயன்:-)

RAMYA said...

//
பா.ரா :
காகத்தை பார்த்து காக்கா என்றேன்
வியந்து பார்த்து விட்டு சொன்னது
விகடகவி.. விகடகவி
//

இது சூப்பர் கற்பனை!

RAMYA said...

//
நசரேயன் :
காவிய ரெண்டா மடிங்க, வெள்ளையும் ரெண்டா மடிங்க, பக்கத்திலே பக்கத்திலே வையுங்க,பச்சையும் ரெண்டா மடிங்க, வெள்ளைக்கு கீழே வையுங்க, ஒரு சக்கரத்தை போட்டு 24 கால் போடுங்க, போட்ட வுடனே சக்கரத்தை வெள்ளையிலே வையங்க.
//

ச்ச்சே! எப்படி நசரேயன் இப்படி எல்லாம் :-)

RAMYA said...

காவியிலேயும் உங்க தேச பக்தியை நினைச்சு என் கண்கள் பனித்தன இதயம் கனத்தது :(

அடேங்கப்பா! ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லே! இல்லே! இல்லே!

வில்லன் said...

/ஜெரி ஈசானந்தா://
மொதல்ல பேர மாத்துங்கப்பா...... இவரென்ன நித்தியானந்தாவோட சிசியரான்னு?????? புடிச்சு உள்ள போட்டுற போறாங்க????? பாத்து...

வில்லன் said...

////முகிலன் :
இதுல பேச என்ன இருக்கு, அவன் பேச்சை கேளு, இவன் பேச்சை கேளுன்னு சொல்லுறதுக்கு முன்னாடி, பொண்ட்டாட்டி பேச்சை கேளுங்க.//

இப்படி பொண்ணுங்க பேச்சை கேட்டுத்தான சாமியார் இந்த கதில கெடக்கார்..... நசரேயன் என்னமோ பெங்களொரு போயி சாமியார் பொறுப்ப ஏத்துக்க போறதா செய்தி அடிபடுது..... உண்மையா?

வில்லன் said...

/ கலகலப்ரியா said...


உங்க காவிப்பல்லுக்கு ஏதாவது வழி பாருங்க... அப்டின்னு குடுகுடுப்பையார் சொல்லச் சொன்னாரு...//
நசறேயனுக்கு உடையும் காவி, பல்லும் காவி, மனசும் காவி.... விட்ட அடுத்த "நித்தியானந்தரா" உருவேடுதுற போறாரு!!!!!!

வில்லன் said...

// T.V.ராதாகிருஷ்ணன் said...
கதவைத் திற
காற்றுவரும் என்றவன்
கதவைத் திறக்க
பூதம் வந்தது///

நித்தியானந்தா மேல என்ன தப்புன்னேன்????????? பல்லுள்ளவன் பக்கடா திங்கறான்... நீங்க ஏன்பா பொறாமபடுரிங்க.......
கதவ தெறந்தா காத்து மட்டும் இல்ல நடிகை கூட வரலாம்.... யாரு யாருக்கு என்ன அதிஷ்டமோ அதுக்கேதாபுல தான் வரும்...