சங்கத்து சிங்கம்
சங்கத்து பிரச்னையைப் பத்தி பேசலைனா சங்கத்திலே சேத்துக்க மாட்டாங்களோன்னு ரூம் போடாம யோசித்தேன், விடையும் கிடைக்கலை, வீட்டிலே செய்த வடையும் கிடைக்கலை, ஆனா ஒரு (எ)அருமையான கதை கிடைத்து இருக்கு, கண்டிப்பா ஆயிரம் நாள் ஓடும்.
கதையோட கோழி முட்டை கருவே சங்கம் அமையுமா, அமையாதான்னு கடைசி வரைக்கும் படிக்கிறவங்க(பார்க்கிறவங்க) இருக்கை நுனிக்கு வந்து கீழே விழுற மாதிரி கதை. நான் பல வருசமா யூத் மாதிரி நடிச்சிகிட்டு இருக்கிறதாலே இந்த கதையும் இளமை, அழகு, காதல், கொலைவெறி, கும்மிவெறி போன்ற அட்டகாசங்கள் நிறைந்த திரைப் படம்(?).
கதையின் ஆரம்பத்திலே நாயகனும், நாயகியும் கல்லூரியிலே படிகிறார்கள்.நாயகியை பார்கிறான், வழக்கம் போல காதல் குளத்திலே விழுந்து விடுகிறான், அவன் விழுந்த உடன் தான் தெரிகிறது, அது குளமல்ல கடல் என்று, குளம்னு நினைச்சிகிட்டே ரெண்டு காதல் கனவுப் பாட்டு முடியுது, அது கடல்னு தெரிஞ்ச உடனே ஒரு சோகப் பாட்டு, படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திலே மூணு பாட்டை முடித்த இயக்குனருக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அரைமணி நேரத்திற்கு அப்புறமா கதை ஓட்டம் என்ன செய்யன்னு யோசிக்கும் போது உதிர்த்த யோசனை, நாயகியோட அப்பா ஒரு வலைப்பதிவு எழுத்தாளர். வேலை வெட்டி இல்லாமா எழுத ஆரம்பித்தவர் ஒரு பெரிய இணைய எழுத்தாளர் ஆகி இருக்கிறார். காதலியை தேத்துறது பெரிய விஷயம் இல்லை, அவங்க அப்பாவை உசார் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டும், என்ற தமிழ் பட மரபுப்படி இந்தக் கதையிலேயும் நாயகியும், தன்னோட அப்பாவோட முழு சம்மதம் வேண்டுமுன்னு துண்டு போட்டு சொல்ல, காதலிக்கும் போது நாய்க்குட்டி மாதிரி காதலி சொல்லுறதை கேட்கும் காதல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் நாயகனும் சரி என்று சொல்லி விடுகிறார்.காதலனுக்கு வேற வழி இல்லை, கை வசம் இருப்பதோ ஒன்று, அவன் என்ன செய்வான் பாவம்(?).அங்கிட்டு ஒரு குத்து வசனம் சொல்லுறாரு "ரெண்டு மூணு காதலி தேத்தி வச்சிகோங்க, அப்பத்தான் ஒண்ணு போனாலும், இன்னொன்னு ௬ட சுத்தலாம்"
நாயகன் பதிவுலகிலே காலடி எடுத்து வைக்கிறார், பதிவுலகம் வந்து ஒரு மாசம் ஆனாலும் என்னநடக்குதுன்னே புரியலை, எழுத்தும் புரியலை, எழுதவும் தெரியலை, அவரு காதலி கிட்ட கேட்குறாரு, அவங்க பார்த்து விட்டு கொலை வெறி கோபத்திலே " உன்னை தமிழ் கடைப் பக்கம் போன்னா, நீ வடக்கூர் கடைப்பக்கம் போனா, அவங்க சிலேபியும், முறுக்கும் எப்படி உனக்கு புரியும்". அதற்கு பின் தமிழ் கடைகளை தேடி பிடிச்சி களத்திலே இறங்குகிறார்.இவ்வளவு நேரமா ஊர் மேய்ந்த கதை, கதையோட கோழி முட்டை கருவுக்கு இப்பத்தான் வருது,ஆனா இன்னும் இடைவேளை விடலை, அதனாலே அமைதி காக்கவும்.
பதிவுலகம் வந்த நாயகன், நாயகியோட அப்பா தான் பெரிய ரவுடின்னு தெரிஞ்சுக்கிறார், நிஜத்திலே இல்லை எழுத்திலே ரவுடி, அவரு பதிவர்கள் சங்கம் அமைக்கனுமுன்னு முயற்சிகள் எடுக்கிறார். (சங்கம்ன்னு பேரு வந்து இருக்கு, அதனாலே கவனமாக வாசிக்கவும்)எழுதுற ஆயிரம் பேரும் ஆயிரத்தி ஐநூரு திசையிலே இருப்பதால், சங்கத்துக்கு சொந்த செலவிலே நாயகியோட அப்பா வாங்கின செம்பையும், நாற்காலியும் பத்தி, நாநூறு விதமா கருத்து சொல்லி நாயகியோட அப்பாவுக்கு எதிர் சொம்பு அடிச்சி, ஆப்பு அடித்து உட்கார வைத்து விட்டார்கள்.பதிவர்களைஎல்லாம் ஒன்று சேர்த்து தன்னோட வருங்கால மாமனாரை நாற்காலியிலே உட்கார வைப்பேன் என்று சபதம் போடுவதோடு இடைவேளை
நாயகன் போனவுடனே, உள்ளூர் நாயகிக்கு பசலை நோய் வந்து, ஊசி மணி, பாசி மணி விற்கும் கலையைப் படிக்க ஆவுஸ்திரேலியாவுக்கு நாயகன் பின்னால் வருகிறாள்.அங்கே இருக்கும் பதிவர்களை எல்லாம் சந்தித்து சங்கத்திற்கான சங்கை நல்லா விளக்கி சொல்லி விட்டு அனைவரின் சம்மதம் பெற்று அங்கே படிப்பு முடியும் முன், அமெரிக்காவுக்கு நாயகன் தையல் கலை கற்கவும், நாயகி பேன், பொடுகுகளை தலையிலே இருந்து எடுப்பது எப்படி என்று படிக்கவும் வருகிறார்கள்.
அங்கே இருக்கும் துண்டு, ஜக்கம்மா, பிதற்றல், மனிஷ் பதிவர்களை சந்தித்து மீண்டும் சங்கத்து சங்கை கொடுத்து விளக்கி அவர்களின் சம்மதம் வாங்கி விட்டு,அமெரிக்க படிப்பு முடியும் முன்னே பிரித்தானியாவுக்கு ஆடு வெட்டும் கலையை படிக்க நாயகனும், கோழி வெட்டும் கலையைப் படிக்க நாயகியும் விண்ணபித்து செல்கிறார்கள். விமானத்திலே போகும் போது ஒரு கனவு பாட்டு போட்டு, கொலை வெறியோடு இருக்கும் ரசிகர்களை சாந்தப் படுத்த முயற்சி செய்கிறார்கள்.
பிரித்தானியாவிலே வந்த வேலை முடிந்ததும், ஐரோப்பாவுக்கு ஆணி பிடுங்கும் கலையை கற்க நாயகனும், நாயகியும் சேர்ந்து விண்ணப்பிக்கும் போது படம் முடிய இன்னும் பத்து நிமிசமே இருக்கு என்று தெரிய வர, மேற் படிப்பை ரத்து செய்தது விட்டு சென்னைக்கு வருகிறார்கள், வந்த உடனே சங்க௬ட்டம் என்று தகவல் கிடைக்க நேராக சொம்பையும், நாற்காலியையும் எடுத்து கொண்டு ௬ட்டம் நடைபெறும் அறைக்கு செல்கிறார்கள்.
என்ன எதுன்னு கேட்டகாம இன்னொருவர் வைத்து இருந்த ஒலி பெருக்கியை வாங்கி
28 கருத்துக்கள்:
//நேராக சொம்பையும், நாற்காலியையும் எடுத்து கொண்டு ௬ட்டம் நடைபெறும் அறைக்கு செல்கிறார்கள்//
ஆலமரம் மிஸ்ஸிங்... ஒய்???? :-)
//
அமைதிச்சாரல் said...
//நேராக சொம்பையும், நாற்காலியையும் எடுத்து கொண்டு ௬ட்டம் நடைபெறும் அறைக்கு செல்கிறார்கள்//
ஆலமரம் மிஸ்ஸிங்... ஒய்???? :-)
April 1, 2010 2:54:00 PM EDT
//
கதையிலே கடைசியா உங்க கதைக்கு இணைப்பு கொடுக்கலாமுன்னு நினைச்சேன், அப்புறமா விட்டுட்டேன்
போன மாசம் நித்யானன்தவை காய்ச்சி எடுத்துட்டோம்.
இந்த மாசம் சங்கம்.
சங்கம் டாபிக் நித்த்யானந்த டாபிக்க விட சூடு pudikkum போல .
அகோ, தளபதி.... உங்க கதையிலயாவது சில புள்ளப்பூச்சிங்க வந்து போறாய்ங்க...
போசுடன் பயணத்துல இருக்குற ஒருத்தருக்கு தெரிஞ்சா நெம்ப சந்தோசப்படுவாரு....இஃகிஃகி!!
//கதையிலே கடைசியா உங்க கதைக்கு இணைப்பு கொடுக்கலாமுன்னு நினைச்சேன், அப்புறமா விட்டுட்டேன்//
இதுக்கு :-)) இப்படியா!!
அல்லது :-(( இப்படியா..
தெரியலியேப்பா....
"தாய்மார்களே, பெரியோர்களே ஆறுகள் சங்கமிக்கும் போது ஓசைவரும், நீர் சுழல் வரும்,அதிலே ஆபத்துக்கள் நிறைய இருக்கும், அதற்காக ஆறுகள் வேண்டாமுன்னு சொல்லமுடியுமா?
அதே மாதிரி தான், நாலு பேரு ௬டுகிற இடத்திலே சலசலப்பு வரும், சண்டை வரும், அதற்காக ௬ட்டம் ௬டாம இருக்க முடியுமா?"
..... எப்படிங்க? Empire ஸ்டேட் பில்டிங் மேல நின்னு யோசிச்சீங்களா?
கிழிஞ்சது... இந்தப் படத்த பார்க்க வந்ததுக்கு மிச்சம் மீதி ஏதாவது இருந்தா நானும் கிழிச்சுக்கறேன்.. முடியலடா சாமீ...
ஊரு பக்கம் எப்ப வரீரு:)). சங்கத்து மீட்டிங்க விட குழப்பமால்லா இருக்கு முட்டைக்கரு. அடிச்சி ஆம்லட் போட்டுட்டீரு. என்ன நடந்துச்சின்னே புரியல:))
:-)))
அய்யா சாமீ முடியலப்பா முடியல
//போசுடன் பயணத்துல இருக்குற ஒருத்தருக்கு தெரிஞ்சா நெம்ப சந்தோசப்படுவாரு....இஃகிஃகி!!
//
அதுயாரு போசு? அவரு கூட யாரு பயணம் செய்யறாங்க?
:))
கதையில புல்டோசர விட்டு ஏத்த........நல்ல ஆளு வேணுமே..
தமிழ்ப்படம்னு ஒன்னு கொஞ்சநாளைக்கு முன்னாடி ஓடுச்சு... மறுபடியும் இப்ப பாக்குறேன்....
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://thalaivan.com/
Hello
You can put our logo and voting button on your blogspot and get more visitors
http://thalaivan.com/
// முகிலன் said...
அய்யா சாமீ முடியலப்பா முடியல//
நீங்கள் சங்கத்தில் சேர்ந்தால் மருத்துவ காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.
:)
//நாயகியோட அப்பா ஒரு வலைப்பதிவு எழுத்தாளர். வேலை வெட்டி இல்லாமா எழுத ஆரம்பித்தவர் ஒரு பெரிய இணைய எழுத்தாளர் ஆகி இருக்கிறார். //
நேரா இங்க வந்துட்டேன்:)))))
+1 ஓட்டு.
டைப் செய்யும்போது எடிட் விண்டோவில் வைத்தே டைப் செய்யவும். கம்போஸ் விண்டோவில் வைத்து அடித்தால் தேவையற்ற லைன் ஸ்பேஸ் வருகிறது ஒவ்வொரு பாராவுக்கு இடையிலும்.
வகைகளை ஒரு லுக்கு விட்டா கற்பனைதான் முன்னுக்கு நிற்குது.ஆனா சங்கத்துக்கு சிங்கம் அதுல சேராதே!
:))!
ROTFL post!! வரிக்கு வரி சிரிப்புதான்..:))
செம டைமிங் போஸ்ட்....எப்படி..தானா வருதா...ரூம் போடாம யோசிக்கணும் இல்ல..:))
//இந்த கேள்வியை கேட்டதும் எல்லோரும் கை தட்டுறாங்க திரையிலே, இதோட படம் முடியலை, ஆனாலும் தியேட்டர்ல யாருமே இல்லை, படத்திலே கை தான் தட்டுனாங்க, ஆனா பார்க்கிறவங்க எல்லாம், நாற்காலியை தட்டி எடுத்து படம் ஓடுகிற திரையை கிழிச்சி தொங்க விட்டுட்டாங்க. அதோட படமும், விமர்சனமும் முடியுது.//
கவலைபடாதிங்க தல....... பட விளம்பரத்துக்கு சூட்டிங் டைம் நம்ம முதல்வர் ஐயாவ வரசொல்லி பப்ளிசிட்டி பண்ணிருவோம்... அப்படியும் கண்டிப்பா ஊத்திக்கும்னு நம்பினா....நம்ம முதல்வர் ஐயா கிட்ட சொல்லி வரிவிலக்கு வாங்கிருவோம்......... எதாவது அமெரிக்க இன்சூரன்ஸ் கம்பெனில சொல்லி நஷ்ட ஈடு வாங்கிருவோம்.......துணிஞ்சவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மேதை.......நீங்க அடிச்சு பட்டய கெளப்புங்க....... எதாவது நட்டம்னா உடனே அண்ணாச்சி குடுகுடுபைக்கு போன போட்டு நாய் பத்திர ஊழல் போல இன்னொரு ஊழலுக்கு ரெடி பண்ணிருவோம்....
//
பழமைபேசி said...
போசுடன் பயணத்துல இருக்குற ஒருத்தருக்கு தெரிஞ்சா நெம்ப சந்தோசப்படுவாரு....இஃகிஃகி!!//
யாரந்த போசு???????????????????????? எங்க பயனாம் போறாரு இந்த எகோனோமி ஊத்தி மூடி கெடக்குற நேரத்துல.....
வேலை வெட்டி இல்லாம
இப்பதான் எழுத வந்திருக்கேன்
உங்க கிட்ட உதவி இயக்குநரா சேர ரொம்பப் பேரு தவங்கெடக்குறாங்க சாமியோவ்!
எப்பா சாமி தாங்க முடியல.
உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post a Comment