Monday, October 12, 2009

அமெரிக்காவுக்கு ஆபத்து

ஒரு நாள் அலுவலகத்திலே அளவு கடந்த ஆணிகளுக்கு கிடையே என்னோட முன்னாள் வீட்டு எஜமானிடம் இருந்து போன் வந்தது,அவருடை அழைப்பை பாத்தவுடனே முன்ன பின்ன முகம் தெரியாத ஆளை வீட்டு முன் பணம் வேண்டும் என்பதற்காக என் கல்லூரி நண்பன் என்று ஒரு டாக்டரை வீட்டை கை மாத்தி விட்டு முன் பணம் வாங்கி விட்டேன்,அவன் ஏதும் கம்பியை நீட்டி விட்டானா என யோசித்து கொண்டே எடுத்தேன், எதிர் முனையிலே

ஹலோ நான் போன வாரம் தண்ணி வரலைன்னு சரி பண்ண ஒரு ஆள் அனுப்பினேனே வந்தானா?

இப்படி எதிர் பாராத கேள்வியை எப்படி எதிர் கொள்வது என்று ஒரு பெரிய கலக்கம் ஏன்னா நான் ஆங்கில புலி, அவரு ஆங்கில சிறுத்தை,அவரு பேசுறது எனக்கு கொஞ்சம் புரியும் நான் பேசுறது அவருக்கு சுத்தமா புரியாது, அதனாலே அவங்க தங்கமணிதான் என்கிட்டே பேசுவாங்க, நான் சொல்லுறது புரியலைனாலும் சொல்லுகிற ஒன்றிரண்டு வார்த்தைகளை வைத்து நான் என்ன சொல்ல வாரேன்னு புரிஞ்சுக்குவாங்க,இப்படி நான் யோசித்து கொண்டு இருக்கும் போதே ரெண்டு தடவை ஹலோ.. ஹலோ என்று கேள்வி வந்து விட்டது.

ஐயா வணக்கம், நான் உங்க முன்னாள் வாடைகைகாரர், நான் உங்க வீட்டை காலி செய்து விட்டேன்.உங்களுக்கு போன் பண்ணியது உங்களுடைய இந்நாள் வாடகைகாரர்.

என்னது வீட்டை காலி செய்து விட்டாயா, என் என்கிட்டே சொல்லவே இல்லை.

நான் வீடு காலி பண்ணி ஆறு மாசம் ஆச்சின்னு சொல்லி புரிய வைக்கனுமே, நான் சொன்னேன் "ஐயா நான் உங்க வீட்டை காலி செய்து ஆறு மாசம் ஆகி விட்டது"

என்ன ஆறு மாசம் ஆச்சா!!!! அப்புறம் வீட்டு வாடகை எல்லாம் யாரு கொடுக்கா?

"
உங்க வீட்டிலே தங்கி இருக்கிற என நண்பன் டாக்டர்" அவரு பேரு ௬ட எனக்கு மறந்து போச்சி, அதனாலே நண்பனோட நிறுத்திக்கிட்டேன்.

நீ எப்படி என்கிட்டே சொல்லாம போன? உனக்கு எப்படி முன் பணம் கிடைத்தது?

ஐயா நான் வீட்டை காலி பண்ணினது உங்க தங்கமணிக்கு தெரியும் அவங்க தான் முன்பண செக் அனுப்பி வச்சாங்க.

தங்கமணிக்கு தெரியுமா!!! வழக்கம் போல என்கிட்டே சொல்லவே இல்லை

உங்களுக்கு நல்ல தெரியும் நான் வீட்டை காலி பண்ணினது, நீங்க உங்க வீட்டம்மா இருந்தா போனை கொடுங்க, அவங்க கிட்ட நான் பேசுறேன்.

காலி பண்ணி ஆறு மாசம் ஆச்சுன்னா, அப்புறம் எப்படி என் வீட்டிலே இருக்கிற பிரச்சனை உனக்கு தெரியும்.

மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கு வந்த மாமனிதனை என்ன செய்யன்னு தெரியாம முழித்தேன், என்னை எப்போதுமே இவரிடம் இருந்து காப்பாற்றுகிற காவல் தெய்வம் அவங்க தங்கமணி வீட்டிலே அவங்களை எங்கேன்னு தெரியலை.



உங்க வீட்டிலே புதிதாய் தங்கி இருக்கிறவர்தான் வீட்டிலே தண்ணி வரலைன்னு போன் பண்ணி இருப்பாரு, நீங்க அவரோட நம்பர்க்கு தொடர்பு கொள்ளுங்க

நீ எதுக்கு போன் பண்ணினே என வீட்டிலே தண்ணி வரலைன்னு




மனுஷன் ஒரு முடிவோட தான் இருக்காரு, அவரு போன்க்கு நான் ஊருகாய் ஆகிட்டேன். இனிமேல இவர்ட்ட பேச முடியாதுன்னு நினைச்சி.
"உங்க தங்கமணிக்கிட்ட தயவு செய்து போன் கொடுங்க"




"தண்ணி பிரச்சினையிலே தான் அவ இன்னும் எந்திரிக்க முடியாம இருக்கா, நீ என்கிட்டே தான் பேச முடியும், நீ கொஞ்சம் புரியும் படியா ஆங்கிலத்திலே சொல்லு"


இவ்வளவு நேரமும் நான் ஆங்கிலத்திலே தான் பேசிகிட்டு இருந்தேன்னு அவருக்கு தெரிஞ்சதா தெரியலையான்னு எனக்கு தெரியலை, அலுவலகமா இருந்தாலே என் தங்கமணியை உதவிக்கு ௬ப்பிட முடியவில்லை,இதுக்கு மேல விளக்கமா தமிழ்ல தான் சொல்ல முடியும், இது வரைக்கும் கொடுத்த விளக்கத்திற்க்கே அரை மணி நேரம் ஆகிவிட்டது, என்ன செய்வதுன்னு தீவிர சிந்தனை செய்தேன்.

இவரிடம் அதிகமா பேசி ஆங்கில அறிவை தக்கவைக்க முடியாதுன்னு முடிவோட சுருக்கமா பேச ஆரம்பித்தேன்.


அவரிடம் "என் பெயர் நசரேயன், உங்க பேரு"


அவரு " என் பேரு ஜோ"


மறுபடி நான் "உங்க வீட்டு வாடைக்காரர் பெயர்"


அவரு "டாக்டர் ராஜ்"


"நீங்க யாரிடம் பேசுறீங்க"


"அப்ப நீ டாக்டர் ராஜ் இல்லை"


இதை புரிய வைக்கத்தான் நான் அரைமணி நேரமா போராடிட்டு இருக்கிறேன், இப்ப உங்க சந்தேகம் தீர்ந்து விட்டதா, நான் போன் வைக்கிறேன்.


"எங்க வீட்டை பத்தி உனக்கு என்ன சந்தேகம்.?"


ஆர்வ கேளாரிலே ரெண்டு வரிக்கு மேல பேசினதினாலே,அவரு கொடுத்த தண்டனை தான் இது என்பதை புரிய எனக்கு நேரம் எடுக்கவில்லை.

நான் உடனே "நன்றி.. நன்றி.. நன்றி" காலிலே விழாத குறையாக சொன்னேன்


உடனே அவரும் "நன்றி",அவரு தொடர்பை துண்டிக்கும் முன் "உங்களை மாதிரி ஆள்களினால் அமெரிக்காவுக்கு பெரிய ஆபத்து காத்து இருக்கு, அமெரிக்கா வை கடவுள் காப்பாத்தட்டுமுனு சொல்லிட்டு வைத்து விட்டார்"


நான் மனசிலே உன்னிடம் இருந்து என்னை காப்பாத்திய கடவுள் அமெரிக்கா வையும் காப்பாத்துவாரு, இந்த மாதிரி ஆளுங்களுடைய வரலாறு தெரியாதவர்கள் இங்கே சொடுகவும்




21 கருத்துக்கள்:

ஷங்கி said...

மெல்லிய நகைச்சுவையுடன் அருமையாக இருக்கிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு நண்பா பட் உங்களோட இடுகைல எப்பவும் இருக்குற ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்

vasu balaji said...

பண்ணுற அழிம்ப பண்ணிப்போட்டு லொள்ளு வேற.

வால்பையன் said...

ரொம்ப ஈஸிங்க,
வாய்ல கூலாங்கல் வச்சிருக்குற மாதிரி வாயைவே திறக்காம ஆங்கிலம் பேசுங்க! அது தான் அமெரிக்கன் ஆங்கிலம்!

Prabhu said...

கேவலப் பட்ட்வனுங்க மூளையும் கிடையது, அவனுங்க மொழியே தெரியாது, இவனுங்கள்லாம் எப்ப்டிதான் வல்லரசா இருக்கானுங்களோ! நம்ம ஆளுங்கதான் இவனுங்கள உசத்தி பாக்குறானுங்க. யு.கே.ல துப்புறதா கேள்வி!

சந்தனமுல்லை said...

:)))))

கடைசிலே லாஜிக்கலா பேசினீங்க பாருங்க...அங்கேதான் நீங்க நிக்கறீங்க!! :))

ஹேமா said...

//உடனே அவரும் "நன்றி",அவரு தொடர்பை துண்டிக்கும் முன் "உங்களை மாதிரி ஆள்களினால் அமெரிக்காவுக்கு பெரிய ஆபத்து காத்து இருக்கு, அமெரிக்கா வை கடவுள் காப்பாத்தட்டுமுனு சொல்லிட்டு வைத்து விட்டார்"//

இப்பத்தான் சரியான கண்டுபிடிப்பு அமெரிக்காவில !

Prabhu said...

அவங்க படம் பாத்து இப்படி ஆயிட்டாங்க! காக்கா எச்சம் போட்டா கூட அமெரிக்காக்கு ஆபத்து காக்கா குண்டு போடுது மிஸ்டர் பிரசிடெண்ட்னு கெளம்பிருவாங்க! இவய்ங்க எப்பவுமே இப்படித் தான் பாஸ்!

அமுதா கிருஷ்ணா said...

ஆங்கில புலி,ஆங்கில சிறுத்தை.. நல்லா இருக்கு...

SUFFIX said...

:)ம்ம்ம்..

தமிழ் நாடன் said...

அருமையான(!??) அனுபவம!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

கிரி said...

நசரேயன் செம காமெடி போங்க... ஹா ஹா ஹா

ஷண்முகப்ரியன் said...

ஹா!ஹா!ஹா!

உங்களை வைத்து உங்களை விட இனி யாராலும் காமெடி பண்ண முடியாது நச்ரேயன்!

சூப்பர் சிரிப்பு!

ILA (a) இளா said...

சீக்கிரமே 30 நாட்களில் இங்கிலீசு படிப்பதெப்படின்னு புஸ்தகம் வாங்கி... படிக்கச் சொல்லுங்க உங்க முன்னாள் வீட்டுக்காரரை.. உங்க இங்கிலீசுதான் டெல்லி வரைக்கும் பேசுதே

அப்துல்மாலிக் said...

முழுதும் ரசிச்சேன் தல‌

இப்படியெல்லம் தலைப்பு போட்டு எஃப்.பி.ஐ க்கு தகவல் போகிடப்போதுது

Anonymous said...

:) நல்ல நகைச்சுவை

சிங்கக்குட்டி said...

//உங்களை மாதிரி ஆள்களினால் அமெரிக்காவுக்கு பெரிய ஆபத்து காத்து இருக்கு//

ஹ ஹ ஹ....சூப்பர் பதிவு.

ஹேமா said...

நாசர்,நசர்,ரேயன்,உங்க பேரைச் சுருக்கிப் பாக்கிறேன் எப்பிடி நல்லாருக்கும்ன்னு.

ரேயன்,இனிய மனம் நிறைந்த தீபஒளி வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

அங்கையுமா ஆபத்து?இங்க நான் அரபி பேசுறேன்.நீங்க இங்கிலிபீசு.வித்தியாசம் ஒண்ணுமில்லை:)

ராஜ நடராஜன் said...

ச்சின்னப்பையன் வார்டுல ரமேஷ்ன்னு ஒருத்தர் 46ஆம் வார்டுக்குப் போறதுக்குப் பதிலா 64வது வார்டு வந்துட்டு செஞ்ச அலும்பு நினைப்பு வந்ததால திரும்ப வந்துட்டுப் போறேன்:)