Friday, October 23, 2009

மருத்துவ தெய்வங்கள்

கதவை திறக்கும் சத்தம் கேட்டு அருகே இருந்து கடையிலே அங்கே இருந்து காபி குடித்து கொண்டு இருந்த அனைவரும் காதை பொத்தக்௬ட நேரம் இல்லாமல் இரைச்சல் களுக்கு மத்தியிலே இருந்தனர், அதற்கும் மருத்துவ மனையின் கதவுகள் திறந்து விட வும், தொலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.எடுத்தவர் உடனே, மறுமுனையிலே கேள்வி கேட்கும் முன்

மாப்பிள்ளை ஊரிலே மழை எப்படி?


இங்கே நல்ல மழை, இன்னும் ரெண்டு நாள் பெய்தால் நல்லா களை கட்டும்.


எங்க ஊரிலே மழையே இல்லை, மண்டை காயுது
போன வருஷம் உனக்கு நல்ல மழை, நல்ல வருமானம் வந்தது, எனக்கு
காத்து வாங்கினது, இந்த வருஷம் உனக்கு போல.டேய் வயத்து எரிச்சலை கிளப்பாதே, சரி.. வை அப்புறம் பேசலாம், யாரே கடைக்கு வார மாதிரி இருக்கு.வணக்கம் டாக்டர்.. கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.நீயா !!, நான் வேற யாரோ வராங்கனு நினைச்சேன்.காலையிலே வந்து ஆஸ்பத்திரியை திறந்துவைனா, நான் வந்து திறந்து உனக்கு வரவேற்ப்பு கொடுக்க வேண்டிய இருக்கு.மன்னிச்சிடுங்க மருத்துவர் ஐயா, இனிமேல இந்த மாதிரி நடக்காம பாத்துகிறேன்.
நீங்க வயத்த வலிக்கு கொடுத்த மாத்திரை இன்னும் வயத்து போக்காகவே இருக்கு, ஐயா விவசாயம் மேல உள்ள அக்கறை எனக்கு பெருமையா இருக்கு.


விவசாயத்துக்கு நிலம் இருந்தா தானே, அதை பத்தி கவலைப்பட

அப்புறம் எதுக்கு சாமி,மழை எப்படி.. மழை எப்படின்னு விசாரிக்கிறீங்களே

இது தொழில் ரகசியம் யாருக்கும் சொல்லக் ௬டாது .

கல்யாணம் முடிஞ்ச நாள்ல இருந்து இந்த காதிலே வாங்கி அடுத்த காதிலே விட்டுடுவேன்.

அதாவது மழை நல்லா பெய்தால் வீட்டிலே இருக்கிற பெருசுகளுக்கும்,சிருசுகளுக்கும் காய்ச்சல், சலதோசம், தலைவலி, உடம்பு வலி ன்னு பல சோதனைகள் வரும், ஆஸ்பத்திரிக்கு மக்கள் ௬ட்டம் வரும்.என்ன தான் அரசாங்கம் ஓசியிலே படிக்க வைத்தாலும், எங்க பொழப்பு ஓட நாங்களும் கல்லா கட்டனுமுல்லா

மழையை நம்பி விவசாயம் மட்டுமல்ல, மருத்துவமும் நடக்குதுன்னு இப்பத்தான் தெரிஞ்சு கிட்டேன், ஊட்டி, கொடைக்கானல்ன்னு எதாவது இடம் பார்த்து கடையை மாத்தலாம்.

அங்கே போனா நான் திறந்த ஆஸ்பத்திரியிலே நானே படுத்துக்குவேன்.நம்ம ஊரிலே என்னதான் அதி நவீன மருத்துவம் தெரிஞ்சாலும்,எங்க பேருக்கு முன்னாலே அரை மைல் தூரம் வரைக்கும் பட்ட படிப்பு போட்டாலும், கை ராசிக்காரன்னு பேரு வாங்கலைனா, கால் காசுக்கு பிரயோசம் இல்லை.

புரிஞ்சது டாக்டர், அவங்க வேதனையும் சோதனையும் உங்க கல்லாவை நல்லா கட்டும்.

இதைஎல்லாம் நீ மனசுக்குள்ளே வச்சுகோனும், சபையிலே சொல்லக் ௬டாது.

நான் எப்படி சொல்லுவேன் என் பிழைப்பே உங்களை நம்மித்தானே இருக்கு.

டாக்டர் யாரே உங்களை தேடி வாரங்க.

யாருன்னு பார்த்து உள்ளே அனுப்பு.

(வெளியே வந்ததும், அங்கே நின்ற பெரியவரும்,நடுத்துற வாலிபரும், அந்த வாலிபர் மருத்துவ உதவியாரளரிடம்)

தம்பி டாக்டர் இருக்காங்களா?

ஆமா இருக்காங்க, என்ன விஷயமா வந்தீங்க?

எங்க தாத்தாவுக்கு ரெண்டு நாளா காய்ச்சல், அதுதான் டாக்டரை பார்க்க வந்தேன்.

உள்ளேதான் இருக்காரு நீங்க போய் பார்க்கலாம்.

(டாக்டர் அறையிலே)

உங்க தாத்தாவுக்கு உடம்புக்கு இனிமேல ஒன்னும் செய்யாது, இந்த ஊசி காய்ச்சலை எல்லாம் காணாம அடித்துவிடும்.

ரெம்ப நன்றிங்க, நீங்க தான் என் தெய்வம், ஐயா உங்க பீஸ்.

வெளியே என் உதவியாளர் இருப்பார், அங்கே கொடுங்க?

அடுத்து எப்ப வரணும்?

நீங்க வர வேண்டாம், நானே சாயங்காலம் வந்து பார்க்கிறேன் .

(மீண்டும் மருத்துவர் அறையிலே)

டாக்டர் அவங்க கிட்ட வாங்கின பீஸ் இதோ பிடிங்க.

(வாங்கி கொண்டு) இந்தா இந்த மருந்தை குப்பையிலே போடு, அந்த
தாத்தாவுக்கு போட்ட ஊசி மருந்து மிச்சம்.

டாக்டர்..டாக்டர்.

என்ன.. என்ன

டாக்டர் நீங்க அவருக்கு பிளையக்சிலீன் கொடுப்பதற்கு பதிலா கொலையக்சலீன் கொடுத்துட்டீங்க.


அப்படியா.. சரி விடு.. ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீ எதுக்கும் அவங்க வீட்டுக்கு போய், ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை பார்த்து எனக்கு என்ன நடக்குதுன்னு விவரம் சொல்லு


சரிங்க அப்படியே ஆகட்டும்


(ஒரு மணி நேரம் கழித்து)
ஐயா, இங்கே இருந்து போய் படுத்தவரு இன்னும் எந்திக்கலை, கொலையக்சலீன் ஆளை காலி பண்ணிடும் போல.

அக்கம் பக்கத்திலே விசாரிச்சியா?

ஆமா, அவங்க எல்லாம் உங்களை குறை சொல்லுற மாதிரி தெரியலை.


(அடுத்த ஒரு மணி நேரத்திலே)


ஐயா, மூச்சி பேச்சி இல்லாம இருந்த கிழவரு, இப்ப மான் மாதிரி துள்ளி குதிக்கிறாரு.அக்கம் பக்கத்திலே விசாரிச்சேன், மண்டைய போட வேண்டியவரை மாப்பிள்ளை மாதிரி ஆக்கி விட்டாரே டாக்டர் ன்னு சொல்லுறாங்க

(அடுத்த மூனு மணி நேரம் கழித்து)
என்னாச்சி இவ்வளவு நேரம்?
கிழவருக்கு காரியம் பண்ணிட்டு வாரேன். அவரு மேல போய்ட்டாரு, ஆனா உங்களை யாரும் குறை சொல்லலை, அவரு நல்லா இருந்த உடனே மீன் கேட்டு இருக்காரு, மீன் முள் மாட்டி இறந்துட்டாராம்.
அப்படியா, சரி நானும் துக்கம் அனுசரிச்சி,கடையை அடைக்கலாம்.

(ஒரு மாதம் கழித்து)

முதியோர் நல மருத்துவர் என்ற விளம்பர பலகை முன், கை பேசியிலே "டேய் இனிமேல நான் மழையை பத்தி கவலைப் படப் போறதில்லை, நான் கை ராசிக்காரன் காப்பாத்துறதுல இல்லை, ஆளை காலி பண்ணுறதிலே


12 கருத்துக்கள்:

ILA (a) இளா said...

பதிவ படிச்சுட்டு வந்து மீதி...

vasu balaji said...

இவ்வளவு இவ்வளவு இவ்வளவு ஆகாது:))

ஆ.ஞானசேகரன் said...

இது தொழில் ரகசியம் யாருக்கும் சொல்லக் ௬டாது .

Robin said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

hi..hi..hi...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஏதோ நினைவுகள்.., மனதிலே..., பறக்குதே...,

RAMYA said...

நல்லா இருந்திச்சு நசரேயன்!

புதுமையான மருந்துதான் கண்டுபிடிச்சி இருக்கீங்க
வாழ்த்துக்கள்!

பாவம் தாத்தா :((

ஹேமா said...

நசர்,இண்ணிக்கு வெள்ளிக்கிழமை.நான் மௌன விரதம்.ஒண்ணும் சொல்லாமப் போறேன்.வரட்டா !

சந்தனமுல்லை said...

//மழை நல்லா பெய்தால் வீட்டிலே இருக்கிற பெருசுகளுக்கும்,சிருசுகளுக்கும் காய்ச்சல், சலதோசம், தலைவலி, உடம்பு வலி ன்னு பல சோதனைகள் வரும், ஆஸ்பத்திரிக்கு மக்கள் ௬ட்டம் வரும்//

அவ்வ்வ்வ்!!

Jerry Eshananda said...

ரசித்தேன்.

கிரி said...

நசரேயன் தாமத நட்சத்திர வாழ்த்துக்கள் :-)

மாதேவி said...

"டேய் இனிமேல நான் மழையை பத்தி கவலைப் படப் போறதில்லை, நான் கை ராசிக்காரன் காப்பாத்துறதுல இல்லை, ஆளை காலி பண்ணுறதிலே"ஆஹா !