அமெரிக்கா வருபவர்களுக்கு எச்சரிக்கை
சமிபத்திலே புதுசா ஒரு வீட்டுக்கு குடி போனோம்,
அவங்க வீட்டிலேயும் என் வீடு மாதிரி அவங்க வீட்டு அம்மாதான் வீட்டு ஓனர், அதனாலே வீட்டுக்கு முன் பணம் எல்லாம் அவங்ககிட்டத்தான் கொடுத்தேன்.
ஒரு நாள் பேய்மழை பெய்தது, அதிலே வீட்டு சுவரிலே இருந்த மின்சார கம்பிகளை கொண்டு சொல்லும் குழாய் அறுந்து பக்கத்து சுவரிலே முட்டி கொண்டு இருந்தது.பக்கத்து வீட்டுக்காரர் என்கிட்டே சொன்னாரு, இந்த விஷயத்தை நான் எங்க வீட்டு எஜமானுக்கு சொல்லுறேன், அவர் வந்து சரி பண்ணுவாருன்னு சொன்னேன்.
உடனே போன் போட்டேன், வீட்டு ஓனரோட வீட்டுக்காரர் போன் எடுத்தாரு. அறிமுகப்படலத்தை சட்டு புட்டுன்னு முடிச்சு
"சுவரில் இருக்கிற மின்சார கம்பிகளை கொண்டு சொல்லும் குழாயிலே அடிச்சு இருந்த ஆணி பிடிங்கி வந்து பக்கத்து வீட்டு சுவருல முட்டி நிக்கது. "
நான் சொல்லுற வரைக்கும் ரெம்ப அமைதியா கேட்டுகிட்டு இருந்தவரு சொல்லி முடிச்ச உடனே
"பக்கத்து வீட்டுக்காரன் எதுக்கு என் சுவத்துல ஆணி அடிக்குறான்."
நான், "அவன் ஆணி அடிக்கலை, நம்ம ஆணி பிடிங்கி,குழாய் அவன் சுவருல முட்டி நிக்கி"
அவரு அதுக்கு "போலீஸ் வந்து சரிபண்ணுவாங்க"
நான் "போலீஸ் எதுக்கு நாம் வீட்டுல வந்து ஆணி அடிப்பாங்க"
அவரு "ரோட்டுல மின்சாரக்கம்பி அறுந்து விழுந்தா அவங்க தான் வருவாங்க"
நான் "இல்லை,அது நம்ம வீட்டுல ....
அவரு ....
நான் ....
அவரு ...
இப்படியே ஒரு அரை மணி நேரம் மல்லுக்கட்டிப்பார்த்தேன் ஒன்னும் முடியலை.நான் இவ்வளவு நேரம் இங்கிலீஷ் பேசினதை பார்த்து
"அம்மா, அப்பா இங்கிலீஷ் பேசுதாங்க!!!..இங்கிலீஷ் பேசுதாங்க!!!!"
எனக்கு பொறுமை தாங்க முடியலை, கடைசியிலே ஒரு குண்டை தூக்கி போட்டு பிட்டாரு
"யாரவது நல்ல இங்கிலீஷ் தெரிஞ்சவன்கிட்ட போனை கொடுன்னு"
என் புகழ் உலகம் பூரா பரவி இருக்கு போலன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு
பக்கத்து வீட்டுல இருந்த மலையாள நண்பர் வீட்டுக்கு போய் போனை கொடுத்தேன். அவரு இங்கிலீஷ்ல நம்ம பழைமைபேசி மாதிரி பின்னி படல் எடுக்கிறவரு.
அவருகிட்ட போய் அவரை ௬ட்டிட்டு வந்து அறுந்த குழாயை காட்டி இந்த பிரச்னையை சொல்லி போன் ல இருக்கவரிடம் விளக்கி சொல்லுங்கன்னு சொன்னேன்.
"இவ்வளவு தானே" போனை கொடுன்னு வாங்கினவரு பேச ஆரம்பிச்சாரு.
வீட்டுல பால் இல்லை வாங்கன்னுமுன்னு ஒரு அவசர உத்தரவு வரவும் அவருக்கு சாடை கட்டிவிட்டு நான் போய்விட்டேன்.
நான் பால் வாங்கி கொடுத்து காப்பி எல்லாம் குடித்து முடித்து விட்டு மலையாள நண்பர் வீட்டுக்கு சென்றேன்,அவரு என்னை பார்த்து கொலை வெறி கோபத்திலே முறைத்து கொண்டு இருந்தார்.
நான் எதார்த்தமா "என்ன ரெம்ப டென்ஷன் ஆகா இருக்கீங்க, வீட்டுல தகராறா?"
"என் மேல ஏதாவது கோபமுன்னா என்னை நேரிலே திட்டுங்க, அதுக்காக கண்டவன்கிட்ட எல்லாம் போன் கொடுத்து என்னை அவமானப்படுத்த வேண்டாம்,அவனுக்கு விளக்கம் சொல்லியே என் உயிர் போய்விட்டது."
"அப்படி என்னதான் சொன்னாரு?"
"மகா கேவலாமா இங்கிலீஷ் பேசுற அவன் சொல்லுகிறான், நீங்க கொஞ்சம் இங்கிலீஷ் இம்ப்ரோவ் பண்ணனும்ன்னு,
முட்டாப்பய..முட்டாப்பய.."
நான் மனசுக்குள்ளே "இங்கிலிஷ் புலியவே, இடிச்ச புளி ஆக்கிபிட்டானே" . எனக்கும் அப்போதுதான் புரிந்தது அவனுக்கு உண்மையிலே இங்கிலீஷ் நல்லா பேச வராதுன்னு.
அவரோட தங்க்ஸ் "அவரு கோபத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு, நீங்க இவரை விட நல்ல இங்கிலீஷ் பேசுறீங்கன்னு வேற சொல்லிவிட்டார்"
அப்படி சொல்லி எரியுற தீயிலே எண்ணெய் உத்தி விட்டுட்டாங்க.
அதுக்கு மேல அங்க நின்ன என்னை கும்மிடுவான்னு நான் போனை வாங்கிட்டு வீட்டுக்கு போய்விட்டேன், அப்புறமா முதலாளி அம்மா போன் பண்ணி விபரத்தை கேட்டு நான் ஆள் அனுப்புறேன் சொல்லி முடிச்சாங்க
ஊரிலே அமெரிக்கா வரைபடத்தை தலையிலே வச்சு படுக்கிறதும், அமெரிக்கா நடை உச்சரிப்பு வரனும்முன்னு ௬லாங்கல்லை உடைச்சு வாயிலே போடுறதும், நாக்கிலே மிளகாய் தேய்க்கிறதும், சுண்ணாம்பு தடவுவதும் பழக்கப்படுத்துறோம்.
எவ்வளவு பேருக்கு தெரியும் இங்கேயும் ஆங்கிலமே தெரியாம அனேகம் பேர் இருக்கிறார்கள் என்று
76 கருத்துக்கள்:
useful post. why it is labelled as mokkai?
ஆஹா....
முழுசா படிச்சிட்டு வரேன்
நீங்க டக்குன்னு - "இன் 1932, விஜய் ஹசாரே டோல்ட் விஜய் மெர்ச்சண்ட்..." அப்படின்னு ஆரம்பிச்சி ஒரு கதை சொல்லியிருக்கணும்..." ... ஹிஹி.....
அய்யோ பாவம்...
இப்படி எல்லாமா மாட்டிகிட்டு முழிப்பீங்க...
எல்லாம் நல்லபடியா முடிஞ்சு.. சுபம் போட்டத படிச்சப்புறம் தான் மனசே சரியாச்சு...
// சமிபத்திலே புதுசா ஒரு வீட்டுக்கு குடி போனேம், //
அப்படிங்களா...
பால் காய்ச்சி குடிச்சீங்களா?
// அவங்க வீட்டிலேயும் என் வீடு மாதிரி அவங்க வீட்டு அம்மாதான் வீட்டு ஓனர், //
எல்லார் வீட்லயேயும் அதுதாங்க...
என்னமோ உங்க வீட்ல மட்டும்தான் அப்படின்னு நினைக்காதீங்க
// ஒரு நாள் பேய்மழை பெய்தது, //
கைல வேப்பிலை எல்லாம் வச்சு இருந்தீங்களா?
//அவங்க வீட்டிலேயும் என் வீடு மாதிரி அவங்க வீட்டு அம்மாதான் வீட்டு ஓனர்,//
இருக்கட்டும்...இருக்கட்டும்.
// அதிலே வீட்டு சுவரிலே இருந்த மின்சார கம்பிகளை கொண்டு சொல்லும் குழாய் அறுந்து பக்கத்து சுவரிலே முட்டி கொண்டு இருந்தது. //
இது என்னங்க புரியாதங்களா இருக்காங்க..
சுவர் அப்படின்னு பக்கத்தில் இருப்பதால், அதுல தான் போய் முட்டிகிட்டு நிக்கும்.. அத ஒரு கம்ப்ளையண்டா சொல்லலாமா?
// "பக்கத்து வீட்டுக்காரன் எதுக்கு என் சுவத்துல ஆணி அடிக்குறான்." //
அதான ஆபீஸில அடிக்கிற ஆணி பத்தாதா... இங்க வந்து வேற எதுக்கு அடிக்கின்றாரு
// அவரு அதுக்கு "போலீஸ் வந்து சரிபண்ணுவாங்க" //
நல்ல வேல ராணுவம் வந்து சரி பண்ணுவாங்கன்னு சொல்லாம விட்டாரே...
//நான், "அவன் ஆணி அடிக்கலை, நம்ம ஆணி பிடிங்கி,குழாய் அவன் சுவருல முட்டி நிக்கி"//
அப்பா....டி என்னா...... ஒரு விளக்கம்.பாராட்டணும்.
// "அம்மா, அப்பா இங்கிலீஷ் பேசுதாங்க!!!..இங்கிலீஷ் பேசுதாங்க!!!!"
//
இதுக்குத்தான் சின்ன குழந்தைகளை வச்சுகிட்டு பேசக்கூடாது அப்படின்னு சொல்றது...
பாருங்க குழந்த எவ்வளவு பயந்து போச்சு அப்படின்னு
// இப்படியே ஒரு அரை மணி நேரம் மல்லுக்கட்டிப்பார்த்தேன் ஒன்னும் முடியலை.நான் இவ்வளவு நேரம் இங்கிலீஷ் பேசினதை பார்த்து //
நீங்க மல்லுக்கட்டி பார்த்து முடியல அப்படின்ன உடனே, மல்லுவ கூப்பிட்டு பேசச் சொல்லிட்டீங்க..
// நான் எதார்த்தமா "என்ன ரெம்ப டென்ஷன் ஆகா இருக்கீங்க, வீட்டுல தகராறா?" //
ஆமாம்.. ரொம்ப ரொம்ப எதார்த்தம் தான்...
இதுக்கு பேரு எதார்த்தம் இல்ல.. எகத்தாளம்
இராகவன் இண்ணைக்கு நம்ம நசர் சாருக்கு இரத்தம் வரணும்.
விடாதீங்க.நேத்து ராத்திரி என் கவிதையையை இரத்தம் வர கடிச்சுத் துப்பிட்டார்.(நீங்க எல்லாம் நல்லா குறட்டை விடுறீங்களாம்.
வரமாட்டீங்கன்னு தைரியம்.)
///இங்கேயும் ஆங்கிலமே தெரியாம அனேகம் பேர் இருக்கிறார்கள் ///
:-)))))))))
// நான் மனசுக்குள்ளே "இங்கிலிஷ் புலியவே, இடிச்ச புளி ஆக்கிபிட்டானே" .//
புலிக்கே கிலி பிடிக்க வச்சுட்டாரே...
// "இவ்வளவு தானே" போனை கொடுன்னு வாங்கினவரு பேச ஆரம்பிச்சாரு. //
அவரு மேல எதாவது கோபம் அப்படின்னா நீங்க செஞ்சது சரிதான்
//"என் மேல ஏதாவது கோபமுன்னா என்னை நேரிலே திட்டுங்க, அதுக்காக கண்டவன்கிட்ட எல்லாம் போன் கொடுத்து என்னை அவமானப்படுத்த வேண்டாம்,அவனுக்கு விளக்கம் சொல்லியே என் உயிர் போய்விட்டது."//
நல்லா வேணும்.பத்தாது.
// அவரோட தங்க்ஸ் "அவரு கோபத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு, நீங்க இவரை விட நல்ல இங்கிலீஷ் பேசுறீங்கன்னு வேற சொல்லிவிட்டார்" //
அதானே... தமிழே நமக்கு தகராறு...
இதுல இங்லிபீசு வேறயா என்ன
அட்றா அட்றா. இந்த ஊருல இங்கிலீசு பேசிட்டாலும்.. அழியாத கோலங்கள்ல சேர்த்திருக்கேன். செம நெத்திஅடி
சரி , ஆணிய புடிங்கிட்டீங்களா?(அடிச்சிட்டீங்களா?)
// அதுக்கு மேல அங்க நின்ன என்னை கும்மிடுவான்னு நான் போனை வாங்கிட்டு வீட்டுக்கு போய்விட்டேன், //
நல்ல காரியம் பண்ணீங்க...
தலை தப்பிச்சது தம்புரான் புண்ணியம் அப்படின்னு ஒடிட்டீங்களா?
//"மகா கேவலாமா இங்கிலீஷ் பேசுற அவன் சொல்லுகிறான், நீங்க கொஞ்சம் இங்கிலீஷ் இம்ப்ரோவ் பண்ணனும்ன்னு,
முட்டாப்பய..முட்டாப்பய.."//
சரியா கண்டு பிடிச்சுத்தான் திட்டியிருப்பானோ!
நசரேயன்,கடைசில ஆணி அடிச்சாங்களா...இல்லாட்டி அறைஞ்சாங்களா...!
//"அம்மா, அப்பா இங்கிலீஷ் பேசுதாங்க!!!..இங்கிலீஷ் பேசுதாங்க!!!!"//
LOL!!
//என் புகழ் உலகம் பூரா பரவி இருக்கு போலன்னு //
ஆஹா!!
//எவ்வளவு பேருக்கு தெரியும் இங்கேயும் ஆங்கிலமே தெரியாம அனேகம் பேர் இருக்கிறார்கள் என்று//
ஓ..:-)))))
ஹையா... 25வது பின்னூட்டம் நமதுதான்..
இது மாதிரி யாரும் இல்லாத டீக்கடையிலதான் நம்மால முடியுது...
ஹா...ஹா......ஹா....
யாரும் இல்லாம் எவ்வளவு நேரம்தான் இங்க கும்மி அடிக்கிறது..
நான் கிளம்பறேன்...
அவங்க வீட்டிலேயும் என் வீடு மாதிரி அவங்க வீட்டு அம்மாதான் வீட்டு ஓனர்,
:))))
ஹி..ஹி...ஹீ...
// சமிபத்திலே புதுசா ஒரு வீட்டுக்கு குடி போனேம், //
எங்களை கூப்பிடவே இல்லையே??
//
சமிபத்திலே புதுசா ஒரு வீட்டுக்கு குடி போனேம்,
அவங்க வீட்டிலேயும் என் வீடு மாதிரி அவங்க வீட்டு அம்மாதான் வீட்டு ஓனர், அதனாலே வீட்டுக்கு முன் பணம் எல்லாம் அவங்ககிட்டத்தான் கொடுத்தேன்.
//
அட கடைசியிலே இப்படி உண்மையை போட்டு உடைச்சிட்டீங்களே!!
//
"சுவரில் இருக்கிற மின்சார கம்பிகளை கொண்டு சொல்லும் குழாயிலே அடிச்சு இருந்த ஆணி பிடிங்கி வந்து பக்கத்து வீட்டு சுவருல முட்டி நிக்கது. "
நான் சொல்லுற வரைக்கும் ரெம்ப அமைதியா கேட்டுகிட்டு இருந்தவரு சொல்லி முடிச்ச உடனே
//
அங்கேயும் ஆணியா
அட பாவமே!!
நீங்க ரொம்ப பாவம்..
அட கடைசியிலே இப்படி உண்மையை போட்டு உடைச்சிட்டீங்களே!!
//
"அம்மா, அப்பா இங்கிலீஷ் பேசுதாங்க!!!..இங்கிலீஷ் பேசுதாங்க!!!!"
//
அட சமத்து பாப்பாவா இருக்கே
அப்பாவை பற்றி எவ்வளவு பெருமை???
படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு
//வீட்டுல பால் இல்லை வாங்கன்னுமுன்னு ஒரு அவசர உத்தரவு வரவும் அவருக்கு சாடை கட்டிவிட்டு நான் போய்விட்டேன்.
நான் பால் வாங்கி கொடுத்து காப்பி எல்லாம் குடித்து முடித்து விட்டு மலையாள நண்பர் வீட்டுக்கு சென்றேன்,அவரு என்னை பார்த்து கொலை வெறி கோபத்திலே முறைத்து கொண்டு இருந்தார்.
//
பாவம் நெல்லை புயல்
உங்களுக்கு இவ்வளவு
சோதனையா ??
//ஊரிலே அமெரிக்கா வரைபடத்தை தலையிலே வச்சு படுக்கிறதும், அமெரிக்கா நடை உச்சரிப்பு வரனும்முன்னு ௬லங்கல்லை உடைச்சு வாயிலே போடுறதும், நாக்கிலே மிளகாய் தேய்க்கிறதும், சுண்ணாம்பு தடவுவதும் பழக்கப்படுத்துறோம்
//
ரத்த ஆறு பெருக்கெடுத்தது ஓடப் போகுது!!
//
எவ்வளவு பேருக்கு தெரியும் இங்கேயும் ஆங்கிலமே தெரியாம அனேகம் பேர் இருக்கிறார்கள் என்று
//
அதுதான் ரொம்ப சோகம் நசரேயன்
எப்படித்தான் சமாளிக்கறாங்களோ!!!
ஹ் ஹ ஹி ஹி ......
அதுக்கு தானே நான் இன்னும் சான்ஸ் கிடைச்சும்..... அமெரிக்காக்கு நான் வருல...
"எவ்வளவு பேருக்கு தெரியும் இங்கேயும் ஆங்கிலமே தெரியாம அனேகம் பேர் இருக்கிறார்கள் என்று"
என்னக்கு தெரியும்....
கால் சென்டர் ல வேல பார்க்குற நண்பன் சொல்லிருக்கான்
தளபதி, உங்க பதிவு களவு போயிடுச்சி.... இஃகிஃகி!
இராகவன் நைஜிரியா said...
// "அம்மா, அப்பா இங்கிலீஷ் பேசுதாங்க!!!..இங்கிலீஷ் பேசுதாங்க!!!!"
//
இதுக்குத்தான் சின்ன குழந்தைகளை வச்சுகிட்டு பேசக்கூடாது அப்படின்னு சொல்றது...
பாருங்க குழந்த எவ்வளவு பயந்து போச்சு அப்படின்னு ///
இஃகி இஃகி இஃகி
//அமெரிக்கா வருபவர்களுக்கு எச்சரிக்கை//
என்ன இப்படி ஷாக் கொடுக்குறீங்க...
யோவ் உங்க வீட்டு ஓனர் அமெரிக்கன் இல்லையா!!!!!!!!!!!!!!!! எகிப்தியன். என்ன போங்க நீங்க!!!!!!!!!!!!!!. எகிப்தியன் நம்மள விட மட்டமா இங்கிலீஷ் பேசுவாங்க. நீங்க ஹிந்தில பேசி பத்துருக்க்கலாம்ள. ஏன்னா அவங்களுக்கு ஊருது தெரியும். ஊருது க்ளோஸ் டு ஹிந்தி. ஹி ஹி ஹி
இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை, “You can't find more idiots in the rest of the World, than what you can see in the USA".
//ஊரிலே அமெரிக்கா வரைபடத்தை தலையிலே வச்சு படுக்கிறதும், அமெரிக்கா நடை உச்சரிப்பு வரனும்முன்னு ௬லங்கல்லை உடைச்சு வாயிலே போடுறதும், நாக்கிலே மிளகாய் தேய்க்கிறதும், சுண்ணாம்பு தடவுவதும் பழக்கப்படுத்துறோம்.//
அப்டியா உங்க ஊர்ல பன்ரீங்க...எங்க ஊர்ல லாம் கால் சென்டர் ல சேத்து விடுவோம்.
வந்ததும் வந்துட்டேன்...
ஒரு 50 போட்டுடறேனே...
ஹையா...ஆஃப் செஞ்சுரி..50
//விஜய் said...
இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை, “You can't find more idiots in the rest of the World, than what you can see in the USA".
//
ஹா..ஹா..உண்மை..உண்மை...
//யாரவது நல்ல இங்கிலீஷ் தெரிஞ்சவன்கிட்ட போனை கொடுன்னு"//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
why blood same blood
//ஊரிலே அமெரிக்கா வரைபடத்தை தலையிலே வச்சு படுக்கிறதும், அமெரிக்கா நடை உச்சரிப்பு வரனும்முன்னு ௬லங்கல்லை உடைச்சு வாயிலே போடுறதும், நாக்கிலே மிளகாய் தேய்க்கிறதும், சுண்ணாம்பு தடவுவதும் பழக்கப்படுத்துறோம்//
:-)))
உங்க மலையாள நண்பர் கரன்ட்டுக்கு "கோரன்ட்டு" னு சொல்லிட்டாரா ஹி ஹி ஹி
// அவரோட தங்க்ஸ் "அவரு கோபத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு, நீங்க இவரை விட நல்ல இங்கிலீஷ் பேசுறீங்கன்னு வேற சொல்லிவிட்டார்" //
அதாங்க சேட்டனுக்கு இம்புட்டு கோபம்.
:)))))
//அம்மா, அப்பா இங்கிலீஷ் பேசுதாங்க!!!..இங்கிலீஷ் பேசுதாங்க!//
உங்க இங்கிலிஷ அப்பிடியே போட்டு இருந்திருந்த இன்னும் நல்லா இருந்திருக்கும் இல்ல!!
//நீங்க இவரை விட நல்ல இங்கிலீஷ் பேசுறீங்கன்னு வேற சொல்லிவிட்டார்"
//
நம்ம மகிழ்ச்சிக்கு அளவில்லாம இருந்திருக்குமே :)
:)))
ROTFL
//ஊரிலே அமெரிக்கா வரைபடத்தை தலையிலே வச்சு படுக்கிறதும், அமெரிக்கா நடை உச்சரிப்பு வரனும்முன்னு ௬லங்கல்லை உடைச்சு வாயிலே போடுறதும், நாக்கிலே மிளகாய் தேய்க்கிறதும், சுண்ணாம்பு தடவுவதும் பழக்கப்படுத்துறோம்.//
இப்படியெல்லாம்கூட நடக்குதா என்ன?
இந்தப் பின்னூட்டம் நேற்றே போட வேண்டியது.இன்னொரு கணினில இகலப்பை இல்லாததால் தாமதம்.
அதென்ன பழமை,நீங்க எல்லாரும் கூட்டா சேர்ந்து பயப்படுத்துறீங்க.
60......
அப்பா...டி யருமேயில்லை.
//ராஜ நடராஜன் said...
அதென்ன பழமை,நீங்க எல்லாரும் கூட்டா சேர்ந்து பயப்படுத்துறீங்க.
//
நாங்க இங்க லோல்படுறதை நீங்களும் தெரிஞ்சிக்கணும் இல்ல?! அதான்!
தளபதி, வெளில வாங்க...ச்சும்மா பதிவைப் போட்டுட்டு அங்க பாலத்துக்கடியில மாந்தப் போயிடுறதா?
\\
"அம்மா, அப்பா இங்கிலீஷ் பேசுதாங்க!!!..இங்கிலீஷ் பேசுதாங்க!!!!"\\
ROTFL:))
\\\ஊரிலே அமெரிக்கா வரைபடத்தை தலையிலே வச்சு படுக்கிறதும், அமெரிக்கா நடை உச்சரிப்பு வரனும்முன்னு ....\\\
அப்படி போடு ராசா .எனக்கும் கூட கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி அமெரிக்கா,ஆப்கானிஸ்தான் ன்னு கனவுல வந்துச்சி .இப்ப எல்லாத்தையும் மூட்ட கட்டி வச்சிட்டேன்
\\நான் சொல்லுற வரைக்கும் ரெம்ப அமைதியா கேட்டுகிட்டு இருந்தவரு\\\
ரெம்ப பொறுமைசாலியா இருப்பாரு போல
"அம்மா, அப்பா இங்கிலீஷ் பேசுதாங்க!!!..இங்கிலீஷ் பேசுதாங்க!!!!
என்ன இருந்தாலும் புளியங்குடி குசும்பு இருக்குமில்ல
\\தளபதி, வெளில வாங்க...ச்சும்மா பதிவைப் போட்டுட்டு அங்க பாலத்துக்கடியில மாந்தப் போயிடுறதா\\\
ஒரு மனுசன சிந்திக்க விடமாட்டிங்களே
\\யாரவது நல்ல இங்கிலீஷ் தெரிஞ்சவன்கிட்ட போனை கொடுன்னு\\
அப்படியே எனக்கு கான்பிரன்ஸ் குடுதிருந்தன்னா அந்த ஆளு ஜென்மத்துக்கும் இங்கிலீஷ் நெனச்சிகூட பாக்கமாட்டாரு
\\"யாரவது நல்ல இங்கிலீஷ் தெரிஞ்சவன்கிட்ட போனை கொடுன்னு\\
ச்சே ரெம்ப கேவலபடுதிட்டாரே மாப்பிள்ளே
\\அவருக்கு சாடை கட்டிவிட்டு நான் போய்விட்டேன்.\\
தப்பிச்சோம் போலசோம்ன்னு
"யாரவது நல்ல இங்கிலீஷ் தெரிஞ்சவன்கிட்ட போனை கொடுன்னு"
என் புகழ் உலகம் பூரா பரவி இருக்கு போலன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு\\\
அதுசரி அந்த ஆளு எதிர்பாத்தமாதிரி குரல்(voice) உன்கிட்ட இல்ல .
ஒரு வெள்ளையம்மாவோ,கருப்பாயோ சொல்லி இருந்தா டக்குன்னு புரிஞ்சிருக்கும்
\\அப்படி சொல்லி எரியுற தீயிலே எண்ணெய் உத்தி விட்டுட்டாங்க\\\
ஓமகுண்டம் வளக்கவா
kalatta nalla iruku.....
ஹா... ரொம்ப பயனுள்ள் பதிவு நானும் கூட தப்பாத்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
என் புகழ் உலகம் பூரா பரவி இருக்கு
இப்ப வரைக்கும் பரவல.. இனிமே பரவும்.... ஹி ஹி//
நீங்க இவரை விட நல்ல இங்கிலீஷ் பேசுறீங்கன்னு வேற சொல்லிவிட்டார்"
ஹாஹா... இதுதான் உண்மையிலேயே பயங்கரமான ஜோக்.....
இந்த பதிவுக்கு என் ஓட்டும் உண்டு!!!!
ரகளை தான் போங்க.. ஆணியே புடுங்க வேண்டாம்....
முற்றிலும் உண்மை....
Post a Comment