Monday, October 19, 2009

ஒரு தலை காதல்

அடியே என் புத்தகத்திலே ஒரு காதல் கடிதம் இருக்கு, அது யாருக்கு எழுதி இருக்கே?, உன் மனசை களவாண்டுட்டு போன கள்ளப்பய யாரு?

கள்ளப்பய இல்லை கள்ளி

என்னது கள்ளியா?

ஆமா அவ ஒரு பொண்ணு தான்

அடியே உனக்கு எல்லாம் கள்ளிப் பால் கொடுத்திருக்கணும்.

இதுக்கே இப்படி சொன்னா எப்படி, அந்த கள்ளி யாருன்னு தெரிஞ்சா?

யாரு அந்த அரை லூசு?

நீயே தான், என் உள்ளம் கவர்ந்த கள்ளி, நான் உன்னைத் தான் காதலிக்கிறேன்.

அடி செருப்பால கழுதை, என்ன வார்த்தை சொல்லுற, நீ சொல்லுறதை கேட்டாலே வாந்தி வருது.

அதுக்குள்ளேயும் வாந்தியா!!!

உன் விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லை .

இது விளையாட்டு இல்லை, வினைதான், உன்னோட அன்பு, இரக்க குணம்,பராமரிப்பு எல்லாம் பார்த்து உன் மேல ஒரு ஈர்ப்பு வந்தது, அதற்கு ரெம்ப நாள் விடை தெரியாமல் இருந்தேன், இப்பத்தான் விடை கிடைத்தது, அது காதல்னு

என்னவோ வடை கிடைச்ச மாதிரி சொல்லுற , உன்னை எல்லாம் பிஞ்ச தொடப்பம் எடுத்து அடிக்கணும்.

உன் கையாலே அடியேன், அதை விட சுகமான விஷயம் வேறு ஏதும் இல்லை.

உனக்கு கிறுக்கு பிடிச்சி போச்சு.

காதல் கிறுக்கு இது, இப்பத்தான் நம்ம ஊரிலே ஓரின சேர்க்கையப் பத்தி பேச ஆரம்பித்து இருக்கிறார்கள், இவங்க கரை சேர இன்னும் ஒரு நூறு வருசமாவது ஆகும், அதனாலே நாம அமெரிக்காவிற்கு போகலாம்.

அடியே அமெரிக்கான்னா அவுத்து போட்டு ஆடுறதும், ஆம்பளையும் ஆம்பளையும், பொம்பளையும், பொம்பளையும் கல்யாணம் முடிகிறது தானா எல்லோருக்கும் தெரியும், அவங்ககிட்டேயும் நிறைய நல்ல குணங்கள் இருக்கு, அதெல்லாம் உனக்கு தெரியலையா, சட்ட திட்டங்களுக்கு கட்டுபடுறது,அடுத்தவங்களை மதிக்கிறது, இப்படி பல விசயங்கள் இருக்கு.செய்யுற வேலைக்கு கையூட்டு வாங்காம இருப்பது

அதையேதான் நானும் சொன்னேன்,அங்கே போய் சட்டப்படி நாம நடப்போமுன்னு

அறிவு கெட்டவளே எனக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருக்கானு உனக்கு நல்லாத்தெரியும்.


ஒருத்தன் ரெண்டு பேரையோ , ஒருத்தி ரெண்டு பேரையோ காதலிப்பதும், கல்யாணம் முடிப்பதும் தான் தப்பு, ஒருத்தி ஒருவனையும், ஒருத்தியையும் காதலிப்பதோ கல்யாணம் முடிப்பதோ தப்புன்னு சொல்ல நம்ம ஊரிலே சட்டமே கிடையாது.நீ அவனையும் கட்டிக்கோ, என்னையும் கட்டிக்கோ, அவனுக்கு நீ பொண்டாட்டி, எனக்கு புருஷன்.


அடிக்கடி இந்தி படம் பார்க்காதேன்னு சொன்னா கேட்டியா?


இது இந்தி படத்தாலே வந்த வினையல்லை, என் இதயத்தாலே வந்த வினை, என் இதயத்துடிப்பை கேளு அது உன் பேரை மட்டுமே சொல்லும்.


அப்படியெல்லாம் சொல்லி இருந்தா உனக்கு சங்கு ஊதி பல வருஷம் ஆகி இருக்கும், சும்மா இருக்கிற இதயத்தை எதுக்கு பரண்டி பேன் பார்க்க.


என் காதலோட வலி தெரியலை. நீ மட்டும் இன்னைக்கு ஒரு முடிவு சொல்லலை என் முடிவு மரணத்தின் பிடியிலே கொடுத்திடுவேன், இது என் தெய்வீக காதல் மேல சத்தியம்.

உன்னையை புதைக்கணுமா, எரிக்கனுமான்னு சொல்லிட்டு சாவு.

"படம் எடுக்கிறதை நிப்பாட்டு, இல்லைனா இங்கே கொலை விழும். "
இப்படி காதாநாயகன் கோபத்திலே கத்தினதும் எல்லாம் நின்று விட்டது, இப்படிபட்ட இருளடைந்த சூழ்நிலையை சமாளிக்க ஒளிப்பதிவாளர் "டைரக்டர் நசரேயன் இன்னும் கட் சொல்லலை ஹீரோ, அவரு சொல்லட்டும்,நீங்க சொல்லுற வேகத்திலே ஆளையே கட் பண்ணப்போற மாதிரி இருக்கு" . உடனே நசரேயன்

"கதாநாயகரே
, இன்னும் உங்க அறிமுகம் இந்த காட்சியிலே வரலை"

இதைத்தானே கடந்த மூனு மாசமா சொல்லிக்கிட்டு இருக்கே, நானும் இப்ப வரும், அப்ப வருமுன்னு காவேரி தண்ணி மாதிரி காத்து கிட்டு இருக்கேன் , இன்னைக்கு ஒரு முடிவு தெரியனும் கதையிலே நான் இருக்கேனா இல்லையா?

ஐயா கதை உங்களை சுத்தியே தான் வருது, அதனாலே தான் நீங்க கதாநாயகன்,இந்த காட்சியிலே ௬ட பாருங்க, கதாநாயகி உங்களை தான் காதலிக்கிறதா சொல்லுறாங்க,கதையோட கருவே நீங்க தான்.

ஒ...அதனாலே தான் இன்னும் என் மூஞ்சியே காட்டலையோ?, இனிமேல என்னால பொறுமையா இருக்க முடியாது, நான் இந்த கட்சியிலே வந்தே ஆகணும், காதாநாயகி என்னை காதலிகிறேன்னு சொன்னதும் ஒரு குத்து பாட்டு போட்டே ஆகணும், இந்த காட்சி முடிஞ்சதும் இன்னொருத்திக்கு கனவு வரணும், அங்கேயும் ஒரு காதல் பாட்டு. இதுக்கு சம்மதமுனா நான் படத்திலே நடிக்கிறேன். இல்ல இப்பவே வணக்கம் போட்டுட்டு வீட்டுக்கு போறேன்.

"ஏலே இங்கே என்னவே பிரச்சனை"ன்னு ஒரு குரல் வந்த திசையை நோக்கி யாரும் பார்க்கவில்லை, அது தயாரிப்பாளர்னு எல்லோருக்கும் தெரியும், எல்லோருடைய முகத்திலேயும் சந்தோசம் பிரகாசமா இருந்தது, இன்னைக்கு கண்டிப்பா பேட்டா காசு கிடைக்கும் என்கிற நம்பிக்கையிலே.

வீட்டுக்கு புறப்பட்ட கதாநாயகன் வேகமா தயாரிப்பாளர்ட்ட போய் "அண்ணாச்சி டைரக்டர் நசரேயன் பொம்பளையும், பொம்பளையும் காதலிக்கிற மாதிரி சொல்லுறாரு, நான் ஆம்பளையும் பொம்பளையும் காதலிக்கிறது மாதிரி சொல்லுறேன்.

"எதுக்குவே உமக்கு வடக்கூர்கார பெயலுவ மாதிரி புத்தி கூறு கெட்டுப் போகுது, நம்ம ஹீரோ சொல்லுறதை கேளும்."

"
அண்ணாச்சி கதைஈஈஈஈஈ "

"
யோவ் விளக்கெண்ணை நான் போட்ட காசை பத்தியே கவலைப் படலே, நீ என்னவோ, உன்னாலே முடியலைன்னா சொல்லு"

அண்ணாச்சி உங்க பேச்சுக்கு மறு பேச்சு இல்லை, இப்பவே கதையை மாத்திடுறேன், இந்த காட்சியிலே முத வார பொம்பளைக்கு பதிலா ஆம்பளைய போட்டுடலாம்,ரெண்டாவது வாய் அசைச்சவா, அப்படியே அசைக்கட்டும்

ஏன் அவ ஊமையா படத்திலே?

அண்ணாச்சி அவ பாம்பேகாரி,அவ காட்சியோட கடைசியிலே வாய் அசைத்து முடிச்சிட்டு பூச்சி மருந்து வாங்கி குடிச்சி காதல் தோல்வியிலே தற்கொலை பண்ணி சாகிறமாதிரி முடிச்சிடலாம்.

அப்ப என் குத்து பாட்டு என்னாச்சி?

அண்ணாச்சி இப்படி சோகம் நெஞ்ச பிடிச்சிகிட்டு இருக்கையிலே, பாட்டு வச்சா நல்லா இருக்காது, நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.

கதாநாயகரே, டைரக்டர் சொல்லுறதும் சரிதான், தியேட்டர்ஜனங்க ஏங்கி ஏங்கி அழும் போது பாட்டு வச்சா எழவு வீட்டிலே குத்தாட்டம் மாதிரி இருக்கும்.

அண்ணாச்சி சோறு தண்ணி இல்லாம கதாநாயகி கைய பிடிக்கணுமுன்னு கடுந்தவத்திலே காத்து கிடக்கிறேன்.பெரியவங்க நீங்க எதாவது பாத்து செய்யுங்க.எழுத்திலே காதாநாயகன்னு போடலைனாலும் பரவாயில்லை, இந்த குத்தாட்டதிலேயாவது கதாநாயகனா இருந்திட்டு போறேன்.

உன்னை பார்த்த ரெம்ப பாவமா இருக்கு, டைரக்டர் அவ செத்த உடனே ஆவி கனவு காண்கிற மாதிரி ஒரு காதல் பாட்டு வை, உலகத்திலே ஆவி டுயட் பாடுற மாதிரி உள்ள ஒரே படம் நம்ம படம்.பாட்டு முடிஞ்ச உடனே
"
வாழும் வரை கிடைக்காதது , வாழ்ந்த பின் கிடைத்தது" ன்னு போட்டு படத்தை முடித்து விடலாம்

நீங்க சொன்னா சரிதான், உங்களோட அடுத்த படத்துக்கு கதை ஆசிரியர் தேவை இல்லை


35 கருத்துக்கள்:

ILA (a) இளா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

Anonymous said...

வாழ்த்துக்கள் நசரேயன்

குடுகுடுப்ப said...

வாழ்த்துகள்.

vasu balaji said...

வாழ்த்துகள் நசரேயன்.

ஆ.ஞானசேகரன் said...

அய்ய்ய்ய்... நட்சத்திர வாழ்த்துகள் நண்பரே

ராமலக்ஷ்மி said...

ஆகா, நட்சத்திரமாக நசரேயன்!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!

கதை அருமை:)!

சென்ஷி said...

:)

வாழ்த்துகள் நசரேயன்!

SUFFIX said...

:)கல கல கல!!

முகவை மைந்தன் said...

வாழ்த்துகள் மச்சி. மகிழ்ச்சியா இருக்கு.

வால்பையன் said...

டைரக்டர் நசரேயன் வாழ்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

ஹேமா said...

ஹாய் நசர்,குத்துப்பாட்டுக்குக் காரணமே தேவையில்லை,அது போடலாம்.நட்சத்திரமாய் ஜொலிக்க வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்...! தொடரட்டும் உங்கள் பணி...!

ராஜ நடராஜன் said...

ஒரு தல க்கி வாழ்த்துக்கள்.

(உங்களுக்கெல்லாம் இப்பத்தான் சீட்டு கிடைச்சதா?அது சரி!)

கார்த்திகைப் பாண்டியன் said...

டைர(டக்கருக்கு) வாழ்த்துகள்..

goma said...

நட்சத்திரங்கள் எல்லாம் கூடிக் கும்மி அடிக்குது....உங்களுக்கு பாராட்டு பாட.

Prabhu said...

பொண்ணுங்க லவ் சீன் ஜூப்பரு!

"உழவன்" "Uzhavan" said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

பழமைபேசி said...

விண்மீனுக்கு வாழ்த்துகள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

நல்லாயிருக்கு தல‌
முழுதும் ரசிச்சேன்

நட்சத்திர வாழ்த்துக்கள்

வினோத் கெளதம் said...

தல வாழ்த்துக்கள் நட்சத்திரம் ஆனதற்கு..

JesusJoseph said...

நல்ல இருக்கு
சிங்கம் கிளம்பிடுச்சே.............

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் நசரேயன்...

தமிழன்-கறுப்பி... said...

:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நசரேயன்

ரவி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நசரேயன் !!!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தோம்ல ?

ஷங்கி said...

தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்

மனதின் ஓசை said...

மச்சி,

டைரக்டர் ஆகிட்ட போல :)வாழ்த்துக்கள் :)

geethappriyan said...

நட்சத்திர வாழ்த்துகள் நசரேயன்

Prathap Kumar S. said...

நல்லாருக்க நசரேயன்...

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்... நான் லேட்டாத்தான் வருவேன்.

Anonymous said...

கல்யாணம் முடிகிறது தானா எல்லோருக்கும் தெரியும், அவங்ககிட்டேயும் நிறைய நல்ல குணங்கள் இருக்கு, அதெல்லாம் உனக்கு தெரியலையா, சட்ட திட்டங்களுக்கு கட்டுபடுறது,அடுத்தவங்களை மதிக்கிறது, இப்படி பல விசயங்கள் இருக்கு.செய்யுற வேலைக்கு கையூட்டு வாங்காம இருப்பது
ஆஹா...சந்தடி சாக்கில் சில உண்மைகளையும் உறைத்திருகிறீர்.

நல்ல மனிதர்தான்...உங்களைப்போயி......

Anonymous said...

yohh..nasraiyaa.. you r the hero today in many's dreams

வில்லன் said...

அப்ப என்னோட வில்லன் ரோல் என்ன ஆச்சு.... எதாவது ரேப்பிங் சீன் உண்டா இல்லையா....ஆவிய ரேப் பண்ணுற மாதிரின்னாலும் எனக்கு OK

ஜோதிஜி said...

என்னடா இந்தாளு ஹாலிபாலிக்கு பிறகு நம்ம பங்காளி போலவே எழுதிகிட்டு இருக்காருன்னு உங்க மேலே ஒரு பெரிய காதலே கொண்டுருந்தேன். ஆனால் இந்த நட்சத்திரவாரத்தில் இத்தனை தெளிவா நிதானமா மொத்தத்தில் ரொம்ப சீரியஸ் ஆ

ஆச்சரியம் தான்.