Monday, October 19, 2009

மனித வள மேம்பாட்டு துறை

இந்தியாவிலே மனிதவள மேம்பட்டுதுறை இருக்கிறதா என்கிற சந்தேகம் இருக்கும், ஆனா மென்பொருள் துறையிலே அலுவலகத்தின் நடுநாயகமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம், அவங்க இல்லைனா அலுவலக நிர்வாகமே ஆட்டம் கண்டு விடும்.


இப்படிப்பட்ட இமாலய சவால்களை கொண்ட துறை பணிக்கு சொல்ல தேவை என்ன, நாக்கை நாலு திசையிலே வளைத்து இங்கிலிபிசு குத்தால அருவி மாதிரி தடை இல்லாம பேசத்தெரியனும், அவங்க பேச்சை கேட்கும் போது வெள்ளைக்கார துரையும், துரைச்சியும் இவங்களுக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லாதமாதிரி இருக்கும். இங்கிலிபிசை யாருக்குமே புரியாத மாதிரி பேசிட்டா அந்த துறையோட மேலாளர் பதவி கண்டிப்பா கிடைக்கும்.

நம்ம அரசாங்கத்திலே 33 சதவீத இட ஒதுக்கீடு உறுதியா இருக்கோ இல்லையானு தெரியாது, ஆனா இந்த துறையிலே அழகான பெண்கள் 70௦ சதவீதக்கு மேல, ஏன் இந்த துறைக்கு அதிகமா பெண்களை தேர்ந்து எடுகிறாங்கனு பல வருசமா யோசித்ததிலே கிடைத்த மொக்கை தீர்வு தான் "ஆம்பளை மனசும் பொம்பளைக்கு தான் தெரியும்". அது மட்டுமில்லை அவங்களுக்கு இரக்கம், பாசம் இவைகள் எல்லாம் ஆண்களை விட ஒரு படி மேலன்னு எங்கேயோ படிச்ச ஞாபகம்.

இப்பேர்ப்பட்ட தெய்வீக குணங்கள் நிறைந்த அந்த துறையிலே யாருக்கும் நான் துண்டு போட்டதில்லை என்பதை துண்டை தாண்டி சத்தியம் பண்ணி சொல்லுவேன், போட்டாலும் எடுக்க மாட்டாங்க என்பது வேற விஷயம். சரி வழியிலே வந்த என் கதையை விட்டுட்டு வழக்காடுற கதைக்கு வருவோம்.அலுவலகத்தின் வேலைக்கு ஆள் எடுப்பு, அளவலகத்திலே களை எடுப்பு, அலுவலகவிதிகளை நிர்ணயம் செய்தல், அதாவது முதாலளிகளுக்கு நன்மை பெரும் விசயங்கள் மட்டுமே அதிலே இருக்கும்.


அவங்களுக்கென ஒரு பத்து உலகத்தரமான கேள்விகள், அது நீங்க எந்த அலுவலத்திருக்கு போனாலும் மாறாது.இந்த கேள்வியை தான் ஒருவர் அலுவலத்திலே சேரும்போது கேட்ப்பாங்க, இந்திய உளவுத்துறை ௬ட இந்த மாதிரி ஒருத்தரோட உளவியலை கேள்விகேட்டு சோதிக்க முடியாமான்னு ஒரு சந்தேகமே, ஆனா அவங்க கேட்கிற கேள்வியிலே நம்ம உள்ளத்திலே இருக்க்கிறது எல்லாம் குடலை பிச்சிகிட்டு வெளியே வந்துவிடும்.தொழில் நுட்ப கேள்விகளை விட எல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும் இவர்களில் கேள்விகள், அதிலே முக்கியமா என் உங்க அலுவலகத்தை விட்டு வாறீங்க, இந்த உலகத் தரம் கேள்விக்கு நாம சொல்லுற பதிலே நம்ம வரலாறை எடுத்து வாசப்படியிலே வைத்துவிடும்.நாங்க பெரிய இடம், எங்க அலுவலகம் ஆணியே இல்லாம ஆணி பிடுங்குவோம், அதனாலே உங்களுக்கு இவ்வளவு சம்பளம் தரமுடியாது, சம்பள விசயமே மாட்டு வியாபாரி மாதிரி போகும்,உள்ளூர் சந்தையிலே துண்டை போட்டு விலை பேசுவாங்க, ஆனா இங்கே குளுகுளு அறையிலே நாற்காலி போட்டு உக்கார்ந்து விலை பேசுவாங்க.சேரும் போதே எவ்வளவு பேரம் பேசி சந்தையிலே விலையை ௬ட்ட முடியுமோ அது சேருபபர்கள் திறமையை பொறுத்தது, அதை தவற விட்டுட்டா வானம் பார்த்த பூமி மாதிரி வருஷ வருஷம் நம்மளோட திறமையை நிருபித்து விட்டு எப்ப சம்பள உயர்வு வருமுன்னு இலவு காத்த கிளி மாதிரி இருக்கவேண்டிய வரும்.அலுவலகத்தோட வியாபாரம் நல்லா இருக்கிற வரைக்கும் எல்லோருக்கும் இருக்கிற இடமும் மாத செலவுக்கு சம்பளமும் வரும்.பத்திரிக்கைகள் உலக பொருளாதாரம் சரியும்னு ஒரு வரி செய்தி சொன்னாலே போதும் மென்துறை மனித வள மேம்பட்டுதுறை முன்னே இருந்ததை விட இரண்டு மடங்கு சுறுசுறு ஆக வேலை செய்யும் களை எடுப்பு வேலைகளை ஆரம்பித்து முதலாளி வளம் மேம்படுறதிலே மும்மரமாக வேலை செய்வார்கள்.பொருளாதார தேக்கத்தை காட்டி நீக்கப்படும் பொட்டி தட்டிகளுக்கு சாதகமான விதிமுறைகள் மீண்டும் எந்த காலத்திலேயும் உயிர்பிப்பதில்லை, அது கடலிலே விழுந்த கல்லை போல காணாம போய்விடும்


இவ்வளவு நல்ல மொக்கைக்கு கொடி பிடித்த நீ இப்ப சிகப்பு கொடிய பிடிச்சிட்டு எந்த கோட்டைய பிடிக்க போறன்னு யாரவது நினைத்தா, அதுக்கு என்னிடம் பதிலே இல்ல. மனித வள மேம்பாட்டுதுறை ஒரு தன்னிச்சையா இயங்க வேண்டிய பிரிவு, முதலாளிமார்கள் அமெரிக்க டாலர், யூரோ நோட்டுகளை கட்டு கட்டாக என்னும் போது இருக்கிற சந்தோசம், அந்த பணத்தின் கட்டுகள் எண்ணிக்கையிலே குறையும் போது, அது அவர்களில் வளர்ச்சியை கட்டுப்படுத்தாது,அவங்க சேர்த்து வைத்த பணம் கடல் மண்ணைப் போல அரித்து சொல்லாது, இந்தியாவுள்ளே இருக்கிற இமயமலை மலை மாதிரி உறுதியா இருக்கும் என்கிற நம்பிக்கையை ஊட்டி அந்த பெரிய பூனைகளுக்கு மணியை கட்டினால் துறை எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கும்.


15 கருத்துக்கள்:

பழமைபேசி said...

வட அமெரிக்க வலைஞர் தளபதி புறப்பட்டுட்டாரு.....

வாழ்க! வளர்க!!

அரசூரான் said...

நசரேயன், ஆட்ட (பலி கடா) வெட்டும்போது கழுத்துல மாலைய போட்டு வெட்டுவாங்களே அது மாதிரி மென்பொருள் துறையில் இது சாதா விசயமா போச்சி, ஹும் யாரவது மணி கட்டுனா மாலை போடுரது குறையும், அத விடுங்க... முடிந்த அளவு நீங்க துண்டு மேட்டர கவனிங்க பாஸ் :)

ஆ.ஞானசேகரன் said...

மொக்கை மாதுரி போயி... அப்படியே உண்மைகளை புட்டு புட்டு வச்சிபுட்ட தம்பி... பாராட்டுகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாராட்டுகள்

Mahesh said...

ஜூப்பரு !!

என்னண்ணே நம்மூட்டுப் பக்கம் ஆளைக் காணோம்????

தமிழ் நாடன் said...

உண்மையை புட்டு புட்டு வைச்சீட்டிங்க!
அப்புறம் சைக்கோ அனலசிஸ் அப்படின்னு ஒன்னு குடுப்பாங்க பாருங்க! நாம்ம என்ன மனநல மருத்துவர் கிட்ட வந்திருக்கமான்னு நினைக்கத்தோனும்.

துளசி கோபால் said...

நட்சத்திரமே,

இனிய வாழ்த்து(க்)கள்.

அறிமுகம் ரொம்பவே 'அடக்கமா' இருக்கேப்பா!!

தாரணி பிரியா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நசரேயன்

மனதின் ஓசை said...

மச்சி... நக்கலா சொன்னாதும் நருக்குன்னு தான் சொல்லி இருக்க.

தருமம் நியாயம் எல்லாம் செத்துபோச்சு.. யாரும் பார்க்குறது இல்ல... லாபம் நட்டம் மட்டும்தான்.

கார்த்திகைப் பாண்டியன் said...

கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..

சிங்கக்குட்டி said...

சூப்பர்..கலகலான பதிவு.

ஹேமா said...

இது நம்ம நசரோட பதிவா !
நம்பவே முடிலங்கோ !
இவ்வளவு அடக்கமா !

"உழவன்" "Uzhavan" said...

என்ன பண்ணுறது? நமக்கும் பொழப்பு ஓடனும்ல. சகிச்சுக்கிட்டே போய்கிட்டு இருக்கோம்

Anonymous said...

போட்டாலும் எடுக்க மாட்டாங்க என்பது வேற விஷயம்.

Anonymous said...

போட்டாலும் எடுக்க மாட்டாங்க என்பது வேற விஷயம்.