பேருந்திலே பச்சை அழகியுடன்
விடுமுறைக்கு ஊருக்கு போயிட்டு பெரும்பாலும் இரவு பேருந்திலே கல்லூரிக்கு திரும்ப வருவேன்,பேருந்திலே ஏறுவதுதான் தெரியும்,பக்கத்திலே யாரு இருந்தாலும் அவங்க மேல விழுந்து தூங்குவேன், அப்புறம்மா அவங்களாவே அடிச்சி எழுப்பி விடுவாங்க.கடைசி நிறுத்தம் வந்ததும் நடந்துனர் வந்து தட்டு எழுப்பி "தம்பி நீ இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது, இன்னும்மா உன் குறட்டை சத்தம் முடியலை" அப்படின்னு சொல்லி இறக்கி விடுவார்.நான் அழகு கிளி மாதிரி இருகிறதாலோ என்னவோ நிறைய நேரங்களில் என் பக்கத்திலே விட இருப்பதை நிற்பதே நலமுன்னு நிறைய பேர் நின்று கொண்டு தான் பயணம் செய்வாங்க.ஆனா நான் பேருந்துகளிலே அழகான இளம் பெண்கள் இருந்தா அந்த இருக்கை பக்கமோ, முடிந்தால் அவங்களுக்கு பக்கத்திலோ இருக்க முயற்சி செய்வேன்.
இப்படிதான் ஒருநாள் நான் பக்கத்திலே போய் உட்கார்ந்த இளம் பெண் மீது தோள் சாய்ந்து தூங்கி இருக்கணும், கொஞ்ச நேரத்திலே என்னை நாலு பேரு தட்டி எழுப்பினாங்க, என்ன ஏதுன்னு விவரம் கேட்கும் முன் என்னை புரட்டி எடுத்து பேருந்தை விட்டு இறக்கி விட்டுட்டாங்க, இறங்கும் போது அதாவது தள்ளி விடும் போது என்னை பார்த்து அந்த இளம் பெண் பயங்கர முறைப்பு. அவளுக்கு தெரியுமா நான் பஸ்ல மீட்டர் போடுற ஆள் இல்லைன்னு.
அதற்கு பின்பு தெரியாத்தனமா பெண்கள் யாரவது வந்து பக்கத்திலே இருந்தா நானே வலுக்கட்டாயமா அவங்க கிட்ட ரெண்டு வார்த்தை பேசி என்னை அறிமுகப்படித்திகுவேன்.பேசின முறைக்காக தெரியாத்தனமா கை கால் மேல பட்டுட்டா விஷயயத்தை அவங்களோட முடிச்சுகுவாங்க, விவாகாரம் வரைக்கும் போகாது.பேச்சு வளருவதை பொறுத்து துண்டை போடவா வேண்டாமா ன்னு முடிவு எடுப்பேன்.
அன்றைக்கு நள்ளிரவு, மதுரை பேருந்து நிலையத்திலே இருந்து திருச்சி பேருந்திலே பயணம் செய்து கொண்டு இருந்தேன். ஜன்னல் ஓரமா உட்கார்ந்து ஒரு நிமிஷம் காத்து வாங்கிட்டு கண்ணை மூடலாமுன்னு நினைச்சேன், பக்கத்திலே ஒரு பச்சை நிற சுடிதார் அணிந்த கல்லூரி பெண்ணான்னு தெரியலை, ஆனா எனக்கு அப்படித்தான் தோணிச்சி எனக்கு , பக்கத்திலே வந்து உட்கார்ந்து இருந்தாங்க.
அவங்க உடைக்கும், நிறத்திற்கும் அப்படி ஒரு ஈர்ப்பு, இது யாரை பார்த்தாலும் என் மனசிலே ஏற்படும் வாடிக்கையான நிகழ்வு என்றாலும் வழக்கத்திற்கு மாறாக என்னவோ ஒரு வித்தியாசம்,எப்படியாவது ஒரு ஹலோ சொல்ல பல வழிகளில் முயற்சி செஞ்சு பார்த்தேன் முடியலை, என்னை ஒரு பொருட்டாவே மதிக்கலை என் பக்கம் திரும்பவும் இல்லை. எங்க எங்கயோ பார்த்தா நான் இருக்கிற திசையை தவிர, என்னைய பார்த்தா ஒருவேளை என் அழகிலே மயங்கிடுவா என்கிற பயமா இருக்கும் என நினைச்சிகிட்டு இருக்கும் போதே தூங்கிட்டேன். கொஞ்ச நேரத்திலே விசும்பல் சத்தம் கேட்டு முழிப்பு வந்தது, ரெம்ப பக்கத்திலே இருந்து வந்தாலே உடனே முழிச்சுட்டேன், என் பக்கத்திலே இருந்த அந்த பெண் தான் அழுது கொண்டு இருந்தாள்.

உடனே சுத்தி இருந்த ௬ட்டம் என்னை நோட்டம் விட ஆரம்பித்தாங்க, இன்னைக்கு இலவசமா ஏழரையை ௬ட்டி விடுவாளோன்னு பயந்து, அவகிட்ட பேச ஆரம்பித்தேன்.
புண்ணியவதியே, பெரிய மனசு பண்ணு, நீ அழுறதை பார்க்கிற எல்லோரும், நான் எதோ தப்பு பண்ணி, அதுக்கு பயந்து அழுகிறாயோன்னு நினைக்கிறாங்க, அடிவாங்குற அளவுக்கு உடம்பிலே தெம்பு இல்லை, பேசி ஒரு முடிவு எடுப்போம்.
அப்பத்தான் என்னை பார்த்தாள் அழுகை எல்லாம் அரை மை தூரம் ஓடிப் போச்சி, பகல்லே என்னை கண்டுபிடிக்க டார்ச் லைட் வேணும், இருட்டிலே என்னை பார்த்து இடி விழுந்த மாதிரி அமைதி ஆகிவிட்டாள்.
கொஞ்ச நேரம் கழித்து வண்டி நின்றது டீ, காபி குடிக்க, நானும் கிளம்பினேன், போகும் முன்னே அவளிடம் கேட்டேன், "நான் எதாவது வாங்கி வரணுமானு". வேண்டாமுன்னு சொன்னாள். இருந்தாலும் என் மனசு கேட்கலை, அதுக்கு என்ன காரணமுன்னு நான் சொல்லி நீங்க தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
கொஞ்ச நேரம் கழித்து அவளே என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள், கொஞ்ச நேரம் பேசினோம், அதிலே அவள், எதற்காக எங்கே போகிறாள் என்பதை தெரிந்து கொண்டேன், அவசரப் பட்டு டீ காசை வீணாகிட்டேன்னு மனசிலே மாபெரும் சேகம் இருந்தாலும் வெளிக்காட்டலை.
கொஞ்ச நேரத்திலே அவள் முகத்திலே மகிழ்ச்சி ஆனந்த்த தாண்டவம் ஆடியது, என் ௬ட பேசினதாலே இல்லை, திருச்சி பக்கத்திலே வந்து விட்டது என்பதாலே, அவளுக்கும், அவளோட காதலனுக்கும் கல்யாணம் திருட்டு தனமா நடக்குது அடுத்த நாள்.
இந்த விஷயம் கேள்வி பட்டு உடனே நான் பேச்சை குறைத்து கொண்டேன், துண்டு போட வழி இல்லைன்னு உறுதியா தெரிஞ்சதாலே இந்த முடிவு.பல் இருக்கவன் பக்கடா திங்கான்னு மனசை சமாதான படுத்திகிட்டு நான் சொன்னேன்
நீங்க அழுதீங்கன்னு யாருமே நம்ப மாட்டாங்க இப்ப உங்களை பார்த்தா?
"நான் ஊரை விட்டு ஓடுறதை நினைத்து அழலை, உங்களை நினைத்துதான் அழுதேன்"
"எதுக்கு?"
"நான் உங்களோட பேருந்திலே இருக்கிறதை பார்த்து விட்டு போன எங்க ஊரு ஆளு, நாளைக்கு நான் உங்களோடதான் ஊரை விட்டு ஓடி போய்ட்டதா சொல்லுவான், அதற்கு பின் உங்களுக்கு நடக்கப் போறதை நினைச்சு பார்த்தேன், தன்னாலே அழுகை வந்து விட்டது. "
எனக்கு அப்பவே தலையிலே இடி விழுந்த மாதிரி இருந்தது.நான் பேய் அறைந்த மாதிரி ஆகிட்டேன், இதுவரைக்கும் கொஞ்சமா பேசின நான் எதுவுமே பேசலை. திருச்சி பேருந்து நிலையம் வந்தது, அவ முதல் ஆளா இறங்கி போய்ட்டா
போகும் முன்னே "உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியலை, உங்களை அண்ணனாவா,மாமாவா பார்கிறதா என்பது எங்க ஊருகாரன்களை பொறுத்தது,ஆனா ரெண்டிலே ஒன்றில் என் மனசிலே இடம் இருக்கு" ன்னு சொல்லிட்டு இறங்கி போய்ட்டா
அவளுக்கு மங்களம் பாடும் முன்னே எனக்கு மங்களம் பாடிடுவாங்களோன்னு பயத்திலே மத்திய பேருந்து நிலையத்திலே இறங்கி ஓட்டமும் நடையுமாக சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி போனேன்.
அதுக்கு பின் ரெண்டு மாசம் ரூமை விட்டு வெளியே வரலை, மதுரைக்கு வேறு வழியிலே சென்றேன் கொஞ்ச நாள், அப்புறம் பெண்கள் பக்கத்திலே வந்தா நானே எழுந்து வேற இடம் போவேன், அப்படியே வேற வழி இல்லை என்றால் என்னோட தூக்கத்தை தியாகம் செய்து நின்னு கிட்டே வருவேன்.

33 கருத்துக்கள்:
:) சரியான பாடம்தான் :)
ஏன் ? ஏன்? ஏன்? உங்களுக்கு மட்டும் அப்படி நடக்குது? சே. இந்தப் புள்ளைங்களே இப்படித்தான்யா. நல்ல வேளை, பொண்ணு வீட்டுல வந்து உங்களை குமுறாம விட்டுட்டாங்களே..
நட்சத்திர வார வாழ்த்துக்கள்
சில பொழுதுகளில் அளவுக்கு மிஞ்சிய கற்பனைகள் எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் இயல்பான கதை தான்.
//பகல்லே என்னை கண்டுபிடிக்க டார்ச் லைட் வேணும், இருட்டிலே என்னை பார்த்து இடி விழுந்த மாதிரி அமைதி ஆகிவிட்டாள்.//
கி கி கி கி... உண்மை இனிக்கத் தான் செய்யுது.. நான் என்னையச் சொன்னேன் :-)
//அதற்கு பின் உங்களுக்கு நடக்கப் போறதை நினைச்சு பார்த்தேன், //
ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க தல,,,,,
:)-
சுவாரசியமா கொண்டு போயிருக்கீங்க! நல்லாருக்கு.
கத சொல்ற சாக்கில அலம்பல் அதிகமா இருக்கே:)).
இந்தப் பொண்ணுக்களே இப்படிதான்!
//பேசின முறைக்காக தெரியாத்தனமா கை கால் மேல பட்டுட்டா விஷயயத்தை அவங்களோட முடிச்சுகுவாங்க, விவாகாரம் வரைக்கும் போகாது.பேச்சு வளருவதை பொறுத்து துண்டை போடவா வேண்டாமா ன்னு முடிவு எடுப்பேன்.//
நசரேயா...என்ன புத்திசாலித்தனம்.இன்னும் உங்களை விட்டு வச்சிருக்காங்களா !
நட்சத்திர வாழ்த்துக்கள்..
நல்லா இருக்கீங்க தானே? ;)
துண்டு போடுற எண்ணத்தில் மண்ணைப் போட்டிட்டாங்களே.. ;)
இனிய யதார்த்தமான கதை,நச்ரேயன்.
அட்டகாசம்.. கலக்கிடீங்க.. Back to form..;-)))
சுவையான கதையோட்டம். வாழ்த்துகள்.
:)))) கலக்குங்க!! நட்சத்திர வாழ்த்துகள்...
நம்ம ஊருல பஸ்சுல, ஆண்களுக்குப் பக்கத்தில வந்து பெண்களோ? இல்லை பெண்களுக்குப் பக்கத்துல ஆண்களோ வந்து சகஜமா உட்காரவா செய்யுறாங்க?
கதை அருமை
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
சுவாரஸ்யமான எழுத்து உங்களுக்கு சர்வ சாதாரணமாக வருகிறது. பாராட்டுக்கள்.
http://kgjawarlal.wordpress.com
பேருந்து பயணத்தில் உடன் வந்து பேசியதைப்போல் இயல்பான நடை.
அருமை!
//
விடுமுறைக்கு ஊருக்கு போயிட்டு பெரும்பாலும் இரவு பேருந்திலே கல்லூரிக்கு திரும்ப வருவேன்,பேருந்திலே ஏறுவதுதான் தெரியும்,பக்கத்திலே யாரு இருந்தாலும் அவங்க மேல விழுந்து தூங்குவேன்,
//
அது சரி இது ரொம்ப போங்கு ஆட்டமா இல்லே இருக்கு!
பாவம் பக்கத்துலே இருக்குறவங்க :)
//
அப்புறம்மா அவங்களாவே அடிச்சி எழுப்பி விடுவாங்க.கடைசி நிறுத்தம் வந்ததும் நடந்துனர் வந்து தட்டு எழுப்பி "தம்பி நீ இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது, இன்னும்மா உன் குறட்டை சத்தம் முடியலை" அப்படின்னு சொல்லி இறக்கி விடுவார்.
//
அடிச்சியா??? அது சரி :-)
//
நான் அழகு கிளி மாதிரி இருகிறதாலோ என்னவோ நிறைய நேரங்களில் என் பக்கத்திலே விட இருப்பதை நிற்பதே நலமுன்னு நிறைய பேர் நின்று கொண்டு தான் பயணம் செய்வாங்க.ஆனா நான் பேருந்துகளிலே அழகான இளம் பெண்கள் இருந்தா அந்த இருக்கை பக்கமோ, முடிந்தால் அவங்களுக்கு பக்கத்திலோ இருக்க முயற்சி செய்வேன்.
//
சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது போங்க:-)
//
அப்பத்தான் என்னை பார்த்தாள் அழுகை எல்லாம் அரை மை தூரம் ஓடிப் போச்சி, பகல்லே என்னை கண்டுபிடிக்க டார்ச் லைட் வேணும், இருட்டிலே என்னை பார்த்து இடி விழுந்த மாதிரி அமைதி ஆகிவிட்டாள்.
//
ஹையோ ஹையோ :))
//
"நான் உங்களோட பேருந்திலே இருக்கிறதை பார்த்து விட்டு போன எங்க ஊரு ஆளு, நாளைக்கு நான் உங்களோடதான் ஊரை விட்டு ஓடி போய்ட்டதா சொல்லுவான், அதற்கு பின் உங்களுக்கு நடக்கப் போறதை நினைச்சு பார்த்தேன், தன்னாலே அழுகை வந்து விட்டது. "
//
ஐயோ பாவம்! இப்படி போய் சிக்கிகிட்டீங்களே :-)
மொத்தத்திலே ரொம்ப அருமையா யோசிச்சு கனவு கண்டிருக்கீங்க :-)
நகைச்சுவை வரிக்கு வரி சூப்பர்!
//.. இலவசமா ஏழரையை ௬ட்டி விடுவாளோன்னு ..//
இந்த வரிய படிக்கும்போது என்னால சிரிப்பு தாங்க முடியலைங்க..
கதை ரெம்ப பச்சையா இருக்கு இருந்தாலும் நாளைக்கு வந்து கும்முறேன்
Really Super.
அடப்பாவி பேசித்தான் ஆளை மயக்குவ என்றுப்பார்த்தாள் எலுதியும் மயக்குவப்போல இருக்க...அய்யோ...உன் பிளாக் பக்கமே நம்ம ஆளைவிடப்படாதுப்பா.. என்ன மாயத்தை எங்கு வைத்திருப்பாயோ யாருக்கு தெரியும்.
//"நான் உங்களோட பேருந்திலே இருக்கிறதை பார்த்து விட்டு போன எங்க ஊரு ஆளு, நாளைக்கு நான் உங்களோடதான் ஊரை விட்டு ஓடி போய்ட்டதா சொல்லுவான், அதற்கு பின் உங்களுக்கு நடக்கப் போறதை நினைச்சு பார்த்தேன், தன்னாலே அழுகை வந்து விட்டது. "
எனக்கு அப்பவே தலையிலே இடி விழுந்த மாதிரி இருந்தது.நான் பேய் அறைந்த மாதிரி ஆகிட்டேன், இதுவரைக்கும் கொஞ்சமா பேசின நான் எதுவுமே பேசலை. திருச்சி பேருந்து நிலையம் வந்தது, அவ முதல் ஆளா இறங்கி போய்ட்டா
போகும் முன்னே "உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியலை, உங்களை அண்ணனாவா,மாமாவா பார்கிறதா என்பது எங்க ஊருகாரன்களை பொறுத்தது,ஆனா ரெண்டிலே ஒன்றில் என் மனசிலே இடம் இருக்கு" ன்னு சொல்லிட்டு இறங்கி போய்ட்டா
அவளுக்கு மங்களம் பாடும் முன்னே எனக்கு மங்களம் பாடிடுவாங்களோன்னு பயத்திலே மத்திய பேருந்து நிலையத்திலே இறங்கி ஓட்டமும் நடையுமாக சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி போனேன்.//
உங்கள் அனுபவத்தை வாசிக்க அழுகை வரவேமாட்டேனென்கிறது நசரேயா.
இப்பிடியொரு புண்ணியவதி ஆக்கிட்டுப் போட்டாளே.....
சாந்தி
மதுரைக்கு டில்லி, பாம்பே வழியா போவிங்களா தலைவரெ?
மிகவும் அருமை.
Post a Comment