ஆணழகன்
என்னை ஒரு அழகன்னு சொல்லுறதை விட அதிஷ்டசாலின்னு சொல்லுறதே ரெம்ப பிடிக்கும்.சின்ன வயசிலே இருந்து எனக்கு பிடிச்ச எல்லாமே நான் நினைக்கும் முன்னாலே நடந்தது.என்னோட அப்பா அம்மாவுக்கு என்னோட தேவைகள் என்னனு நான் சொல்லுறதுக்கு முன்னாலே செய்து கொடுப்பாங்க, படிப்பிலே என்னிடம் இருந்து முதல் இடத்தை பறிக்கனுமுன்னு எவ்வளவோ பேர் முயற்சி செய்து தோல்வி அடைந்தனர்.நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் எனக்கு அப்படி ஒரு உணர்வு வந்தது, என் ௬ட தோழி எனக்காக எழுதுதியது, காதலுக்கு முதல் அத்தியாயம் போட்டது
ரெண்டு வருஷம் அவளேதான் உலகம் என்று நினைத்தேன், காதல் தோணியிலே துண்டை போட்டு உலா வந்தாலும்,பக்கத்து தோணியிலே படிப்பையும் கை விடலை, நல்ல மதிப்பெண் பன்னிரெண்டாம் வகுப்பிலே, இந்த காதல் பறவைகள் கல்லூரிக்கு இரு வழிகளிலே சென்றோம்.பிரிந்த போது முதலில் அதிகம் பேசினோம், கொஞ்ச காலம் கழித்து கொஞ்சம் பேசினோம், பின்பு பேச்சை நிறுத்தினோம். அதன் பின் கொஞ்சம் பேச ஆரம்பித்தேன், பின் அதிகம் பேசினேன் கல்லூரியில் கிடைத்த புது காதலியிடன் பழையது கழண்டது என்பதைவிட கழட்டி விட்டேன் என்பதே சரியா இருக்கும்.
முதலில் அவள் தான் உலகம் என்றேன், இப்போது இவள் தான் உலகம் என்றேன்.கல்லூரி காதலுக்கும் பள்ளி காதலுக்கும் நிறைய வேறுபாடுகள் கண்டேன், இதை ரசித்தேன், முடிந்து போனதை வெறுத்தேன், காதல் களத்திலே கொஞ்ச காலத்திலேயே முதல் கல்லூரி காதலியை தனித்து விட்டேன், அவளை விட அழகாய் இன்னொருத்தி வந்ததால் என் அழகுக்கு அவளே சரி என்றது மனம் .
கல்லூரியிலே இரண்டு காதலோடு நின்றேன், அதற்குள் கல்லூரி முடிந்து விட்டதால், முடியும் போது கை வசம் இருந்த காதலி திருமணத்திற்கு வற்புறுத்தினாள். அவளை சம்மதிக்க வைத்தேன் இன்னொருவனை மணம் முடிக்க ,அவளின் காதல் அத்தியாயம் முடிந்தது,என் காதல் அத்தியாயம் மீண்டும் தொடர்ந்தது.
அழகும்,அறிவும் வளமாக இருந்த எனக்கு படிப்பு முடிந்ததும் வேலை என்னை தேடி வந்தது. வேலையிலே சேர்ந்தேன் .முன்னாள் காதல் அனுபவத்திலே காதலிகளை பிடிப்பது கஷ்டமாக தெரிய வில்லை, ஆனால் ஒன்றுக்கு மேற்ப்பட்ட காதலிகள் கிடைக்கும் போது அதை சமாளிப்பதே கஷ்டம் .
வேலையிலே ஒன்றில் ஆரம்பித்தேன், இரண்டு மூன்று என நான்கு வரை போனது காதலிகளின் எண்ணிக்கை கல்லூரிக்கு பின் .
கால ஓட்டத்திலே என் தாயும், தந்தையும் என்னை விட்டு சென்றனர், அதன் பின் நான் விடாமல் என்னையும் விடாமல் இருந்தது காதல் ஒன்றே. நான்கு காதலிகள் வைத்து இருக்கிறேன் என்ற கர்வத்திலே இருந்த நான். உண்மை வெளிப்பட்டபோது அது விஸ்வ
ரூபம் எடுத்து இருந்ததை எல்லாம் பறித்து கொண்டது. மீண்டும் தனித்து விடப்பட்டேன், இந்தமுறை என்னை தனித்து விட்டனர், காதலில் தன்னிறைவு அடைந்த நான் திருமணதிற்கு தயார் ஆனேன்.நாட்கள் சென்றன நானும் என் மண கனவும் அங்கேயே நின்றது.
ஒரு நாள் பச்சை விளக்கு இருக்கும் போது சாலையை கடக்கும் போது என் முன்னால் வண்டியை நிறுத்தி அதில் இருந்து இறங்கி வந்த ஓட்டுனர் எதோ பேசினார், அதற்குள் இன்னொரு குரல் "ஹலோ மிஸ்டர் சாரதி, மெதுவா கண்ணை திறங்க"
திறந்தேன், நான் இருப்பது மருத்துவ மனை, எழுந்த நொடியிலே அதிர்ச்சியா இருந்தாலும், மருத்துவரை பார்த்ததும் புரிந்து கொண்டேன், அவர் மனோதத்துவ நிபுணர், அவர் பெயர் மூர்த்தி, நான் இவ்வளவு நேரமும் என் ஆழ் நிலை மனதோடு இவரிடமே கதை சொல்லி கொண்டு இருந்து இருக்கிறேன். என் சட்டை பைய தடவி பார்த்தேன், அவரை சந்திப் பதற்காக நான் வாங்கி வைத்து இருந்த முன் பதிவு அட்டை இருப்பதை உணர்ந்தேன்.
டாக்டர் எனக்கு என் மனநிலையை சோதித்தீங்களா!!!
ம்ம்..உங்க மனசுக்கும் உடம்புக்கும் ஒண்ணும் பிரச்சனையே இல்லை.
அப்புறம் என் டாக்டர் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.
நான் கல்யாண தரகரா இருந்தா பதிலே சொல்லி இருப்பேன் உங்க மனசு குளிரும் படி, ஆனா மருத்துவர் என்பதாலே எனக்கு தெரிந்த உண்மையை சொல்லுறேன். உங்கள் கல்யாண தடைக்கு காரணம் உங்க வயசு
என்ன டாக்டர் சொல்லுறீங்க !!!
நீங்க இன்னும் கல்லூரியிலே, வேலை செய்யும் போது கிடைத்த காதலிகள் ஞாபகமாவே இருக்கீங்க, நீங்க காதல்ல தன்னிறைவு அடைந்து திருமணத்துக்கு தயார் ஆகும் போது உங்க வயசு நாப்பது, என்ன தான் உடம்பையும்,மனசையும் கட்டு கோப்பா வைத்து இருந்தாலும், வயசு ஆகும் போது உடல்ல நடக்கிற மாற்றங்களை தடுக்க முடியாது, உங்களுக்கு கால காலத்திலேயே கல்யாணம் ஆகி இருந்தால் இந்நேரம் உங்க மகனுக்கோ, மகளுக்கோ வரம் பார்க்க வேண்டிய நேரம், காதல்ல மூழ்கி இருந்த நீங்க கல்யாணத்தை தவற விட்டுடீங்க
(சிறிது மவுனத்திற்கு பின் மீண்டும்)
நீங்க வாலிப கட்டத்தை கடந்து முதியோர் கட்டத்திலே நடந்து கொண்டு இருக்குறீர்கள். உங்களுக்கு இன்னும் ஆணழகன்னு மனசிலே நினைப்பு இருப்பதாலே கல்யாணத்தை நினைத்து தீராத மன உளைச்சல் வந்து சில நேரங்களில் நீங்க என்ன பண்ணுறீங்கன்னு உங்களுக்கே தெரியலை, நீங்க வாலிப புள்ளை இல்லை ஒரு வயசாளி என்கிற உண்மையை ஏத்து கிட்டா எல்லாமே சரியாகிவிடும் .
அன்று சாலையிலே நடந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வந்தது, வண்டியை நிறுத்தி விட்டு என்னிடம் வந்த ஓட்டுனர்
"கிழ பாடு, அறிவு இல்லை, அதான் பச்சை லைட் எரியுதுல்ல, நீ பாட்டுக்கு உங்க அப்பன் வீட்டு ரோடு மாதிரி நடந்து வார, சாகனுமுனு நினைச்சா பின்னாடி தண்ணி லாரி வருது அதிலே விழு" என்று அவன் கோபமாக பேசிய அனைத்தும் உண்மை.
மருத்துவர் அறையை விட்டு வெளியே வந்ததும் இதயம் வெற்று இடமாக இருந்தது.என்னை ௬ட்டி கொண்டு வந்த அலுவலக நண்பன் வெளியே இல்லை, அருகே இருந்த பெஞ்சிலே அமர்ந்தேன் தூரத்திலே நடந்து வரும் உருவங்கள் எல்லாம் மங்கலாக தெரிந்தது, விரைவிலே ஒரு நல்ல கண் மருத்துவரை பார்க்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.
22 கருத்துக்கள்:
நல்லா இருக்கு கதை.
்ம்ம்ம்... நடக்கட்டும் நல்ல நடையுடன் கூடிய கதை வாழ்த்துகள்
நல்லா இருக்கு
தமிழ்மண விண்மீனானதற்கு வாழ்த்துகள்!
ஒளி வீசிக்கொண்டே நீந்துங்கள்!
அருமை!
நான் கூட பிரசாந்தோன்னு நினைச்சேன் !!!
அட!
ஹூம்.
நல்ல கதை
நல்ல வேளை நமக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சி தப்பித்தோம்!
கதையா...
தமிழ்மன ஸ்டாரா நீங்க??
எனக்கு தெரியாதே :))
சரி வாழ்த்துக்கள் நண்பரே!
கதை நல்லா இருந்திச்சு.
ஏனோ படித்து முடிச்சவுடன்
மனசு பாரமா போய்டிச்சு!
அவருக்கு கண்ணு வேறே தெரியல போல :((
ஆணழகா நசரேயா கலக்குறீங்க.
காதல் கனவா.காதலுக்கு வயசில்ல.மனசில எப்பவும் காதல் வரலாம்தானே !நல்லாருக்கு.
ஹூம் கதை நல்லா இருக்கு
கதை அருமை நசரேயன். வாழ்த்துக்கள்!
//அப்புறம் என் டாக்டர் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.//
ஹ ஹ ஹா, இது எல்லாமா அவுங்க படிப்பில் வருது :-)
மருத்துவர் அறையை விட்டு வெளியே வந்ததும் இதயம் வெற்று இடமாக இருந்தது.என்னை ௬ட்டி கொண்டு வந்த அலுவலக நண்பன் வெளியே இல்லை, அருகே இருந்த பெஞ்சிலே அமர்ந்தேன் தூரத்திலே நடந்து வரும் உருவங்கள் எல்லாம் மங்கலாக தெரிந்தது, விரைவிலே ஒரு நல்ல கண் மருத்துவரை பார்க்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.//
என்ன இப்புடி சோக கதை எழுதி இருக்கிறீர்கள்.
நல்ல இருந்தது.
நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com
அய்யா அழகரே
இப்ப நீங்க டமில் சென்மாவில ஹீரோவ நடிக்க போகலாம்
கதை நல்லருக்குங்க..
நட்சத்திர வாழ்த்துக்கள்.
கதை நன்றாக இருக்கிறது.
நல்லாதானே போய்க்கிட்டு இருந்துச்சு...
hay...don't lie..the hero was you only...
wat a pity... how is your life now
your legs,,,hands...ok... any help.. pl. feel free - touh in with me...def. i'll help you...
yours oneof the maajeee lovers
Post a Comment