Thursday, November 25, 2010

தற்குறிப்பேற்ற அணியும், சகுனமும்

பொறுப்பு அறிவித்தல் :
நல்ல நேரம்,கெட்ட நேரம் மற்றும் சகுனம் இவைகளிலே நம்பிக்கையுள்ளவர்கள் இந்த இடுகையை தவிர்ப்பது நலம்.


கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொல் அணிக்கு சொம்பு அடிச்சேன், மறுபடியும் ஒரு அணியோட அணியில்லாம வந்து இருக்கேன்.சும்மா அணியோட வந்தா நல்லா இருக்காதேன்னு கூடவே சகுனத்தையும் ௬ட்டிட்டு வந்து இருக்குறேன், அதுமட்டுமில்லாம கடையிலே ஆராய்ச்சி மணி அடிச்சி ரெம்ப நாள் ஆகிவிட்டது என்று யாருமே கேட்காததாலே சகுனத்தையும், தற்குறிப்பேற்ற அணியையும் வைத்து ஒரு சின்ன ஆராய்ட்சி.சரி இப்ப தற்குறிக்கு வருவோம். நான் வல்லவன், நல்லவன், இலக்கியவாதி, எழுத்தாளர் இப்படின்னு சுயமா சொம்பு அடிச்சா, அதுக்கு பேரு தற்பெருமை. என்னையப் பத்தி தெரியாதவங்க கிட்ட இப்படி சொம்பு அடிக்கலாம், என்னைய நல்லா தெரிஞ்சவங்க கிட்ட இப்படி சொம்பு அடிச்சா, அடிக்கிற சொம்பை பிடிங்கி மண்டையிலே ரெண்டு போடுவாங்க.

தற்குறிப்பேற்ற அணியும் கிட்டத்தட்ட இதே வகைதான்(?), சாதாரணமா நடக்கிற விஷயத்தை மசாலா தடவி, ரெண்டு குத்து பாட்டு போட்டு எழுதிட்டா அதுவே தற்குறிப்பேற்ற(?) அணியாகி விடுகிறது, அந்த வகையிலே பார்த்தா எழுத்தார்களின் எழுத்துகள் எல்லாமே தற்குறிப்பேற்ற அணி தான், சாயங்காலம் ஆறு மணி ஆச்சின்னா யாரு எந்த வழி போனாலும் சூரியன் மறைந்து விடும். மாசத்திலே வளர் பிறையும், தேய் பிறையும் வருவது வழக்கம்.

இந்த சாதாரண நிகழ்வை கவிஜர் என்ன சொல்லுவாருன்னா உன்னைய காணாம நான் மட்டுமல்ல நிலவும் தேயுதுன்னு வீட்டிலே இறைச்சி பிரியாணியும், மீன் வருவலும் சாப்பிட்டிட்டு சொல்லுவாரு,அவுக ஆள் வெளியே வரலைன்னா உலகமே இருட்டு ஆகிடும்,எனக்காக இல்ல, இந்த உலகத்துக்காகவாது நீ குளிக்காம வெளியே வா, இப்படி பல பொய் பாட்டுகளைப் பாடி, போட்ட துண்டை உறுதியாக்கி கொள்வாரு. இதையே சாதாரண வாழ்க்கையிலே ஒப்பிட்டு பார்த்தோமானால் நல்ல நேரம் காலை ஒன்பதிலே இருந்து பத்து மணி வரைக்கும் நாள் காட்டியிலே எழுதியதை பார்த்துவிட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் சகுனம் சரி இல்லை". என்று சொல்லி வீட்டுக்குள்ளே சென்று நல்ல நேரம் முடியும் வரை வீட்டுக்குள்ளே இருக்கிறோம்(?) .

இலக்கியத்திலே இருந்தும் ஒரு உதாரணம் சொல்லாம விட்டுட்டா நாளைக்கு இலக்கியவாதி பட்டம் கிடைக்காம போய்டும் என்று கொலை வெறியிலே சொல்லிக்கிறேன்.சிலப்பதிகாரத்திலே மாதவியோட குத்தாட்டம் போடப் போய், மஞ்ச துண்டு போட்டு மறுபடி கண்ணகிட்ட சரண் அடைந்து , உள்ளுரிலே பொழைக்க வழி இல்லாம கண்ணகியோட மதுரைக்கு புறப்பட்டு போறார். அவங்க மதுரை மாநகரம் நுழையும் முன்னே காற்றிலே மேலும்,கீழும் ஆடிய கொடி,இவர்களை வர வேண்டாம் என்று சொல்வதைபோல இருந்ததாக இளங்கோவடிகள் சொல்லுகிறார்.இப்ப இதையும் சகுனத்தையும் ஒன்று படுத்திப் பாருங்க, ரெண்டுமே சாதாரண நிகழ்வுதான். .

ஒரு நாளைக்கு 24 மணி நேரமா இருந்தாலும், இவங்க நல்ல நேரம் ஆரம்பிக்கிறது காலையிலே ஆறு மணியிலே இருந்து, அரை மணி நேரத்துக்கு ஒண்ணுன்னு பிரிச்சி, நாள் காட்டியிலே குறிச்சி வச்சிடுறாங்க.சாதரணமாக இருக்கிற நேரங்களை எல்லாம் நல்ல நேரம், கெட்ட நேரம், கிழக்க சூலம், மேற்கே சூலம்னு சொல்லி வச்சி இருக்காங்க.இதை எல்லாம் படிக்கிறவங்களும் உண்மைன்னு நம்பி,சென்னையிலே இருக்கிறவங்க கிழக்காம போன சகுனம் நல்லா இருக்கும்னுன்னு கள்ளத்தோணி ஏறி இலங்கை வரைக்கு போற அளவுக்கு இருக்கு.இதை எல்லாம் படிச்சி பின்பற்றுகிறவங்க பலன் பெறுறாங்களோ இல்லையோ,நல்ல நேரம்,கெட்ட நேரமுன்னு குறிச்சி, அதை நாள்காட்டியிலே போட்டு விற்கிறவங்க நல்லாவே கல்லா கட்டுறாங்க.

நல்ல நேரம், கெட்ட நேரம் இல்லன்னா பூமியே சுத்தாது என்ற அளவுக்கு ஆகி இருக்கு, இதையே நம்பி நம்ம ஆளுங்க பிறக்கும் குழந்தை சி செக்சன்னு(அதான் வயத்தை அறுத்து வெளியே எடுக்கிறது) தெரிஞ்ச உடனே, நல்ல நேரம் குறித்து கொடுக்கிற சாமியிடம் ஒரு நேரத்தை குறித்து கொடுக்க சொல்லி, இந்த நேரம், இந்த நிமிசத்திலே கத்திய வையுங்கன்னு மருத்துவரிடம் சொல்லிடுறாங்க, இப்படி நல்ல நேரத்திலே பிறந்தவங்க எல்லாம் ஒரு சி(கோடி), ரெண்டு சி ன்னு சம்பளம் வாங்குவாங்க, மத்தவங்க எல்லாம் ஒரு சென்ட் ரெண்டு சென்ட்கு சிங்கி அடிச்சிகிட்டு தெருவிலே இருப்பார்களாம்(?).இந்த நல்ல நேர ஆர்வத்திலே செத்தாலும் நல்ல நேரத்திலே சாவனும்னு நினைக்கிற அளவுக்கு ஆகிபோச்சி.

தற்குறிப்பேற்ற அணியிலே பார்த்த எல்லா உதாரணங்களும் சகுனத்துக்கும் பொருத்தமாக இருக்கிறது(?),ஆகவே சகுனம்,நல்ல நேரம்,கெட்ட நேரம் என்று சொல்வதெல்லாம் தற்குறிப்பேற்ற அணி என்று சொல்லி வாய்பளித்த அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.


45 கருத்துக்கள்:

Unknown said...

தலைப்புக்கு என்ன அர்த்தம் தளபதி. படிச்சு தான் புரிஞ்சிக்கினுமா?

பழமைபேசி said...

சேது அய்யா, சகுனம் பாக்குறவங்க அல்லாம் தற்குறிகள் அல்லன்னு சொல்லிச் சொல்றாரு தளபதி!

நசரேயன் said...

படிக்காமலும் புரியலாம் சேது

Unknown said...

தளபதி ரொம்ப பேஜாரா இருக்கு. சென்னையிலிருந்து கிழக்கே போனா இலங்கை வருமா? உங்கள நம்பி வெளிநாட்டுக்கு போற ஆசையில தோணி எறினோம்னு வெச்சுக்குங்க, நேரா கேரளாவுல இறக்கி விட்டுட்டு, இது தான் வெளிநாடு சொன்னீங்கனா என்ன பண்றது. அது என் தற்குறிப்பேற்ற அணியாப் போய்டும்.

நசரேயன் said...

//சகுனம் பாக்குறவங்க அல்லாம் தற்குறிகள் அல்லன்னு //

நீங்கதாண்ணே சரியா சொல்லி இருக்குகீங்க

Unknown said...

"சேது அய்யா, சகுனம் பாக்குறவங்க அல்லாம் தற்குறிகள் அல்லன்னு சொல்லிச் சொல்றாரு தளபதி!"

அடடா இது கூட எனக்குப் புரிய மாட்டேங்குதே!

நசரேயன் said...

கள்ளத்தோணியிலே எங்க ஊரு வரைக்கும் போகலாம்

Unknown said...

"கள்ளத்தோணியிலே எங்க ஊரு வரைக்கும் போகலாம்."

அப்பா கவலையேப் படாம தோணி ஏறலாம். ஏன்னா உங்க ஊர் பேரை நினச்சு உங்க காலேஜ் நண்பர்கள் உங்களை நினைச்சா மாதிரி, நானும் எறுவேனுங்க!

Unknown said...

தளபதி கூடவே ஒரு கவிதையை சேர்த்திருக்கலாமே!

Unknown said...

நல்லா எழுதறீங்க நீங்க. வாழ்த்துகள்.

பழமைபேசி said...

//மாதவியோட குத்தாட்டம் போடப் போய், மஞ்ச துண்டு போட்டு மறுபடி கண்ணகிட்ட சரண் அடைந்து//

இதுல யாரையும் குறிப்பிட்டுச் சொல்ற மாதர எனக்குத் தெரியலை...

நசரேயன் said...

//தளபதி கூடவே ஒரு கவிதையை சேர்த்திருக்கலாமே//

இப்படி எல்லாம் நேயர் விருப்பம் இருந்தா நாலு கவுஜ சேர்த்து இருப்பேனே ?

நசரேயன் said...

//இதுல யாரையும் குறிப்பிட்டுச் சொல்ற
மாதர எனக்குத் தெரியலை..//

அதாவது வஞ்சி புகழ்ச்சி அணி இல்லைன்னு சொல்லுறீங்களா ?

பழமைபேசி said...

//ஒரு நாளைக்கு 24 மணி நேரமா இருந்தாலும்//

அதெப்படிச் சொல்றீங்க இவ்வளவு சரியா??

பழமைபேசி said...

//அதாவது வஞ்சி புகழ்ச்சி அணி இல்லைன்னு சொல்லுறீங்களா ?
//

வஞ்சி நாட்டான் புகழுக்கு மயங்குறவன் அல்ல!!!

நசரேயன் said...

//அதெப்படிச் சொல்றீங்க இவ்வளவு
சரியா?? //

சகுனம் பார்த்தேன்

நசரேயன் said...

//வஞ்சி நாட்டான் புகழுக்கு மயங்குறவன் அல்ல!!//

பாண்டினாட்டன் புகழவே மாட்டன்

பழமைபேசி said...

// நசரேயன் said...
//வஞ்சி நாட்டான் புகழுக்கு மயங்குறவன் அல்ல!!//

பாண்டினாட்டன் புகழவே மாட்டன்
//

கஞ்சனுகன்னு சொல்றீக தளபதி... பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!!!

நசரேயன் said...

//கஞ்சனுகன்னு சொல்றீக தளபதி... பின்விளைவுகளுக்கு நான்
பொறுப்பல்ல!!! //

யார் தான் பொறுப்பு எடுக்க ?

பழமைபேசி said...

//நசரேயன் said...
//கஞ்சனுகன்னு சொல்றீக தளபதி... பின்விளைவுகளுக்கு நான்
பொறுப்பல்ல!!! //

யார் தான் பொறுப்பு எடுக்க ?
//

வேற யாரு? முதல் பின்னூட்டம் போட்டவுகதான்!!

Unknown said...

"வேற யாரு? முதல் பின்னூட்டம் போட்டவுகதான்!!"

அய்யய்யோ! ஏனுங்க இப்பிடி கொலைவெறி.

R. Gopi said...

நாங்களும் கொஞ்சம் எழுதி இருக்கோம்ல தற்குறிப்பேற்ற அணியைப் பயன்படுத்தி.

காலை ஒன்பது மணியானாலும் சூரியன் வருவதில்லை. ஏன் இப்படி என்று கேட்டதற்கு அவள்தான் இங்கே இல்லையே. பிறகு நான் எப்போது வந்தால்தான் என்ன என்ற அங்கலாய்ப்பான பதில் சூரியனிடமிருந்து.

வார இறுதியில் ரயில் சேவைகள் சரியாக இல்லை. நீ என்ன பெரிய மகாராஜாவோ என்று அவை என்னைக் கேட்கின்றன. பிரிட்டிஷ் ராஜ்ஜியம் அல்லவா, மகாராணிகளுக்குத்தான் முதலிடம் இங்கே. நீ வந்தால் எல்லாம் ஒருவேளை ஒழுங்காக இயங்குமோ. நிச்சயமாக. உன்னை சுமக்க ரயில்களுக்கும் ஆசை இருக்காதா பின்னே.

நேற்று காபி கப் தவறிக் கீழே விழுந்தது. கப் விழுந்த சத்தத்தின் ஊடே ஒரு நாளைக்கு மூன்று டோசுக்கு மேல் கிடையாது என்ற உன் கட்டளைக்குப் பயந்து வேண்டும் என்றே தவறி விழுந்து விட்டதோ. உடைந்த கப்பின் முகத்தில் அரசனைக் காப்பாற்றத் தன் உயிரைத் தியாகம் செய்யும் மெயக்காப்பாளனின் பெருமிதம்.

புத்தகக் கடையில் ஒரு புத்தகம் எடுக்க, அடுக்கில் இருந்து வேறு சில புத்தகங்கள் கீழே விழுந்தன. எங்களையும் ஊருக்கு எடுத்து செல்லேன் என்று பார்வையாலேயே அவை கெஞ்சின. உன் கடைக்கண் பார்வை பட சரஸ்வதியும் ஏங்குகிறாள்.

a said...

என்னமோ நடக்குது.......... நான் பொறவு வாரேன்.........

பழமைபேசி said...

//Sethu said...
"வேற யாரு? முதல் பின்னூட்டம் போட்டவுகதான்!!"

அய்யய்யோ! ஏனுங்க இப்பிடி கொலைவெறி.
//

தளபதியோட இலக்கணப்படி சகுனம் சரியில்லாமையும் ஒரு காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன்... நீங்க என்ன நினைக்கிறீங்க??

R. Gopi said...

எதுக்கும் இதை ஒரு தபா படிச்சுடுங்க

http://ramamoorthygopi.blogspot.com/2010/11/blog-post.html

Unknown said...

"தளபதியோட இலக்கணப்படி சகுனம் சரியில்லாமையும் ஒரு காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன்... நீங்க என்ன நினைக்கிறீங்க??"

நானு அதே நினைக்கேன். இன்னிக்கே வரேனுங்க. நாளை பார்ப்போம்.

நசரேயன் said...

//நாங்களும் கொஞ்சம் எழுதி இருக்கோம்ல தற்குறிப்பேற்ற அணியைப் பயன்படுத்தி.

காலை ஒன்பது மணியானாலும் சூரியன் வருவதில்லை. ஏன் இப்படி என்று கேட்டதற்கு அவள்தான் இங்கே இல்லையே. பிறகு நான் எப்போது வந்தால்தான் என்ன என்ற அங்கலாய்ப்பான பதில் சூரியனிடமிருந்து.

வார இறுதியில் ரயில் சேவைகள் சரியாக இல்லை. நீ என்ன பெரிய மகாராஜாவோ என்று அவை என்னைக் கேட்கின்றன. பிரிட்டிஷ் ராஜ்ஜியம் அல்லவா, மகாராணிகளுக்குத்தான் முதலிடம் இங்கே. நீ வந்தால் எல்லாம் ஒருவேளை ஒழுங்காக இயங்குமோ. நிச்சயமாக. உன்னை சுமக்க ரயில்களுக்கும் ஆசை இருக்காதா பின்னே.

நேற்று காபி கப் தவறிக் கீழே விழுந்தது. கப் விழுந்த சத்தத்தின் ஊடே ஒரு நாளைக்கு மூன்று டோசுக்கு மேல் கிடையாது என்ற உன் கட்டளைக்குப் பயந்து வேண்டும் என்றே தவறி விழுந்து விட்டதோ. உடைந்த கப்பின் முகத்தில் அரசனைக் காப்பாற்றத் தன் உயிரைத் தியாகம் செய்யும் மெயக்காப்பாளனின் பெருமிதம்.

புத்தகக் கடையில் ஒரு புத்தகம் எடுக்க, அடுக்கில் இருந்து வேறு சில புத்தகங்கள் கீழே விழுந்தன. எங்களையும் ஊருக்கு எடுத்து செல்லேன் என்று பார்வையாலேயே அவை கெஞ்சின. உன் கடைக்கண் பார்வை பட சரஸ்வதியும் ஏங்குகிறாள்.
//

கோபி, பல உதாரணங்களைப் போட்டு பட்டைய கிளப்புறீங்க

Unknown said...

கோபி! கலக்குறீங்க!

வருண் said...

சகுனம் பத்தித் தெரியும். த கு பே அணிபத்தி தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இலக்கியச் சேவைக்கு நன்றி..

இதுக்கு பின்னூட்டம் டைப் அடிக்கும் போது டப் டப் என்று கணினியில் சத்தம் வந்தது.. இடுகையை நானும் படித்தேன், அதற்காக கை தட்டுகிறேன் என்றது.. இதுதான் தற்குறிபேற்ற அணியா? :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//. அவங்க மதுரை மாநகரம் நுழையும் முன்னே காற்றிலே மேலும்,கீழும் ஆடிய கொடி,இவர்களை வர வேண்டாம் என்று சொல்வதைபோல இருந்ததாக இளங்கோவடிகள் சொல்லுகிறார்.//

இது பத்தாங் கிளாசு தமிழ் புஸ்தவத்துல இருந்து காப்பியடிச்சதுன்னு பக்கத்துல ஒருத்தர் சொல்லுறாரு.. உண்மையா?
:))

Thenammai Lakshmanan said...

//மாதவியோட குத்தாட்டம் போடப் போய், மஞ்ச துண்டு போட்டு மறுபடி கண்ணகிட்ட சரண் அடைந்து//

இது நல்லா இருக்கு நசர்.. கலகமா., கழகமா., எங்காவது ஆட்டோ வந்துரப் போகுது..:))

ஹாஹாஹா ஒரு இடுகையில் இத்தனை வஞ்சப் புகழ்ச்சிகளா;;))

Chitra said...

தற்குறிப்பேற்ற அணியிலே பார்த்த எல்லா உதாரணங்களும் சகுனத்துக்கும் பொருத்தமாக இருக்கிறது(?),ஆகவே சகுனம்,நல்ல நேரம்,கெட்ட நேரம் என்று சொல்வதெல்லாம் தற்குறிப்பேற்ற அணி என்று சொல்லி வாய்பளித்த அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.


....... எல்லோரும் ஜோரா ஒரு வாட்டி கை தட்டுங்க!

R. Gopi said...

\\எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
இலக்கியச் சேவைக்கு நன்றி..

இதுக்கு பின்னூட்டம் டைப் அடிக்கும் போது டப் டப் என்று கணினியில் சத்தம் வந்தது.. இடுகையை நானும் படித்தேன், அதற்காக கை தட்டுகிறேன் என்றது.. இதுதான் தற்குறிபேற்ற அணியா? :)\\

அதேதான்!

ஜோதிஜி said...

இதைப் படிக்கிறவங்களுக்கு ரத்தக் கொதிப்பு வரலாம், இதயம் நிக்கலாம், இருந்தாலும் நிர்வாகம் எதையும் பற்றி கவலைப் படாது.மருந்தும் வாங்கி தராது, ஏன்னா நிர்வாகமே திவால்.

R. Gopi said...

நசரேயனின் தற்குறிப்பேற்ற அணி விளக்கம் அருமை அப்படின்னு சொன்னால் அது தன்மை நவிற்சி அணி.

நசரேயன் விளக்கம் கொடுத்ததாலேயே தற்குறிப்பேற்ற அணி மேலும் அழகு பெற்றுவிட்டது (அணிக்கு அணி சேர்ந்துவிட்டது) என்று சொன்னால் அது உயர்வு நவிற்சி அணி.

உஸ்ஸ் அப்பா, ஒரு சோடா ப்ளீஸ்.

இதுக்குப் பேர்தான் கும்முறதோ # டவுட்டு

vasu balaji said...

அது எப்படியோ. நல்ல சகுனத்தில எழுதியிருக்கீரு. ஆணி அதிகமாயிருக்கு. தப்பிச்சீரு. :))

Unknown said...

சகுனம் சரியில்லன்னு நெனக்கிறேன்...( யாருக்குன்னல்லாம் கேக்கபுடாது)

ஈரோடு கதிர் said...

பின்னூட்டம் போட இது நல்ல நேரமா!

ஹேமா said...

உங்க பதிவுக்கு வரப்பவே போன் மணியடிச்சிச்சு.வெளில ஐஸ் கொட்டத் தொடங்குது.
ரேடியோவிலயும் நல்லதொரு சந்தோஷமான பாட்டு.நல்ல சகுனம்தான் நசர் !

அஹ‌ம‌து இர்ஷாத் said...

அட‌டா பூனை குறுக்கே போச்சே..

'பரிவை' சே.குமார் said...

//மாதவியோட குத்தாட்டம் போடப் போய், மஞ்ச துண்டு போட்டு மறுபடி கண்ணகிட்ட சரண் அடைந்து//

இது நல்லா இருக்கு.

தலைப்புக்கு என்ன அர்த்தம்????

"உழவன்" "Uzhavan" said...

//இருக்கும்னுன்னு கள்ளத்தோணி ஏறி இலங்கை வரைக்கு போற அளவுக்கு இருக்கு//
 
சூப்பரா சொன்னீங்க :-)

சிங்கக்குட்டி said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், தலைப்பே கண்ணை கட்டுதே?

கொங்கு நாடோடி said...

"பிறக்கும் குழந்தை சி செக்சன்னு(அதான் வயத்தை அறுத்து வெளியே எடுக்கிறது) தெரிஞ்ச உடனே, நல்ல நேரம் குறித்து கொடுக்கிற சாமியிடம் ஒரு நேரத்தை குறித்து கொடுக்க சொல்லி, இந்த நேரம், இந்த நிமிசத்திலே கத்திய வையுங்கன்னு மருத்துவரிடம் சொல்லிடுறாங்க, இப்படி நல்ல நேரத்திலே பிறந்தவங்க எல்லாம் ஒரு சி(கோடி), ரெண்டு சி ன்னு சம்பளம் வாங்குவாங்க, மத்தவங்க எல்லாம் ஒரு சென்ட் ரெண்டு சென்ட்கு சிங்கி அடிச்சிகிட்டு தெருவிலே இருப்பார்களாம்(?)" ஹஹஹஅஹஹாஹ்

இந்த கொடுமை என்னைக்கு போகும்னு தெரியலே... என்னக்கு ரெண்டும் சி செக்சன் தான், ஆனா, நம்ப சொல்லர நேரத்துக்கு கத்திய விகே இதுஎன்ன இந்தியவா? அவங்க சொன்ன தேதிலே அவங்களுக்கு இஷ்டப்பட்ட நேரதுலேதான் பண்ணினாங்க, இந்தியாலே இருகரே பெருசுக இன்னும் பொலம்புதுகோ. கொடுமையிலும் கொடுமை, எங்க அப்பாக்கு இரண்டு வாரத்துக்கு முன்னாடி இடுப்பு பந்து மற்று அறுவை சிகிச்சை பண்ணினாக, நல்லநாள்னு டாக்டர் சொன்ன தேதிக்கு முன்னாடியே வீட்டுக்கு போயிட்டாரு. --எல்லாம் கொடுமை சார்.