புதுமைப்பெண்
பொறுப்பு அறிவித்தல்:
இடுகையிலே உள்ள சம்பவங்களும், நிகழ்வுகளும் உலகமஹா மொக்கை கற்பனையே என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன், பூலோகம், சந்திர மண்டலம், மற்றும் செவ்வாய் கிரகத்திலே உள்ள யாரையும் குறிப்பிடுவன இல்லை
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு
என்று கேட்டதால்
முதுநிலை பட்டம் படித்து
வாயு அடுப்பிலே சமைத்து
கட்டு கட்டாக அடுக்கி
இணையத்திலே இணைத்து
பொங்கி பலரும் பயன் பெற
பெருமை சேர்க்கிறேன் பெண்மைக்கு
இப்படி ஒரு கவுஜையை நான் எழுதி இருந்தா எனக்கு இன்னையிலே இருந்து வீட்டு சாப்பாடு கிடைக்காது, இந்த கவுஜையை எழுதிய புண்ணியாவான் யாரோன்னு நினைச்சி இந்த கதையின் நாயகி கொலைவெறி கோபத்திலே இருந்தபோது, அவளுடைய உரையாடியிலே இருந்து அழைப்பு வருகிறது.
"ஹலோ எப்படி இருக்கீங்க" சத்தத்தை கேட்டவுடனே பதிலுக்கு "இருக்கேன்"
"என்ன ஆங்கிரியா, நீங்க செஞ்ச ஜாங்கிரி சாப்பிட்டீங்களா ?"
"நீ வேறப்பா ஒருத்தன் எழுதின கவுஜையப் பார்த்து கொலைவெறியிலே இருக்கேன், நீ வேற ஜாங்கிரி பண்ணச்சொல்லுற?"
"ஜாங்கிரின்னதும் எனக்கு ஞாபகம் வந்திரிச்சி, நீங்க போன வாரம் போட்ட சமையல் குறிப்பு படம் சரியா இல்லையே,செய்ய ட்ரை பண்ணி சோ சோகமாகிட்டேன்"
"என்ன அப்படியா, இப்ப நீ ஏதும் வேலையிலே பிஸியா?"
"எப்போதுமே வெட்டிதான்"
"அப்படியே வெப் காம் ஆன் பண்ணு, நான் உனக்கு லைவ் டெமோ காட்டுறேன்"
"ஒ.. ரியலியாவா , நீங்க சோ ஸ்வீட்"
"கொஞ்சம் இரு உயர்லெஸ் கன்னேட் பண்ணுறேன், என்கிட்டே ஐ பைவ் பிராசசர் வச்சி இருக்கேன், ஹை ஸ்பீட் நெட் இருக்கு"
"இருக்கட்டும், அடுப்ப ஆன் பண்ணுங்க"
"இதோ ஒரு நொடியிலே பண்ணுறேன்"
"சமையல் குறிப்பு ஐட்டம்ஸ் ரெடியா?"
"இருக்கு, நீங்க டெமோக்கு ரெடியா?"
"ஹே முக்கியாமா கருவேப்பிலை, நல்லா பச்சையா இருக்கணும்"
"வேப்பிலை மாதிரி நல்லாவே பச்சையா இருக்கு?"
"சரி, ஒரு நிமிஷம் வெயிட், நானும் எல்லாத்தையும் வெட்டிக்கிறேன், நீயும் வெட்டு"
சரி (அடுத்த ஐந்து நிமிடத்திலே)
"வெப்காம்ல கிட்சன் சட்டி தெரியுதா?"
"சரியா தெரியலையே"
"என்ன செய்ய என் வீட்டிலே டூ மெகா பிக்சல்ஸ் தான் இருக்கு, அதான் கொஞ்சம் மங்கலாவே தெரியும், எதுக்கும் நீ உன்னோட பவர் கிளாஸ் போடு, நல்லா தெரியும்"
"ஓகே.. ஓகே.. இப்ப கொஞ்சம் நல்லா தெரியுது"
"இரு அடுப்புக்கு உள்ளே கணனியை எடுத்திட்டு போறேன்"
"இது ஒன்னும் லப்டாப் பொறியல் இல்லையே ?"
"இல்லப்பா, இன் பில்ட் வெப் காம், அதான் உள்ளே எடுத்திட்டு போறேன்"
"எண்ணெய் கொதிக்கிறது தெரியுதா?"
"ஒ.. நல்லா தெரியுது"
"இப்ப வெட்டி வச்ச வெங்காயம் போடு"
"போட்டுட்டேன்"
"கொஞ்சம் நேரம் நல்லா கிளறி விடு"
"உங்க சேவையோ சேவை..வாழ்க சமையல் கலை, வளர்க உங்க குறிப்புகள்"
"கூல் .. கூல் .. அடுப்பு சூடா இருக்கு, வெங்காயம் அங்க எப்படி இருக்கு?"
"தக தகன்னு இருக்கு"
"உங்க அடுப்பு ரெம்ப ஸ்பீட் போல இருக்கே"
"ஆமா நாலு அடுப்பு ஒரே செட்டுல, முன்னால உள்ள ரெண்டு அடுப்பு முன்ணூறு டிகிரி, பின்னாடி உள்ளது ஐணூறு டிகிரி"
"தட் இஸ் ஆவ்சம், சரி இப்ப கருவேப்பிலைய போடு"
"போட்டுட்டேன், கமகம ஸ்மெல்.. டூ குட்"
"எல்லாம் என்னோட கை குறிப்பு பக்குவம் தான்"
"நல்ல பாரு என் எண்ணெய் சட்டியை,இதே நிறத்திலே அங்க இருக்கா?"
"அல்மோஸ்ட் இருக்கு"
"சரி அடுப்பை அமைத்து அம்புட்டுதான்"
"சோ நைஸ், இதுக்கு என்ன தலைப்புப்பா கொடுத்தீங்க?"
"தாளிப்பது எப்படி"
"அருமையான தலைப்பு"
"இன்னொன்னு சொல்ல மறந்திட்டேன், நீங்க போன போன வாரம் போட்ட, ரொட்டிக்கு சீனி தக்காளி தொக்கு தடவுவது எப்படி ரெம்ப நல்லா இருந்தது, தலைப்புக்கு ஹட்ஸ் ஆப், தமிழ்ல வொன்டர் புல்லா பேரு வைக்கீங்க"
"அது ப்ளட்ல இருக்கு"
"இன்னொரு வாசகர் விண்ணப்பம்"
"நோ பீல், நோ ஷை, சொல்லுப்பா?"
"அவிச்ச முட்டைக்கு தோல் எடுப்பது எப்படின்னு விரைவிலே குறிப்பு எழுதனும்முன்னு கேட்டுகிறேன்"
"அதை எழுதனுமுன்னு நினைச்சி இருந்தப்ப ஒரு கவுஜ கண்ணிலே பட்டு மூடு போச்சி"
"அப்படி என்ன தான் எழுதி இருக்கான்"
"நாம எல்லாம் பெரிய படிப்பு எல்லாம் படிச்சிட்டு இன்னும் சமையல் கலையத்தான் பிரபலப் படுத்துறோம்னு சொல்லி இருக்கான்"
"என்ன சொன்னீங்க?"
"நாம இன்னும் சமயகட்டை விட்டு வெளியே வரலையாம்"
"அவனை எல்லாம் பூரி கட்டையால ரெண்டு தட்டு தட்டனும்"
"நானும் யாரு என்னன்னு விசாரிச்சிகிட்டு இருக்கேன், தகவல் கிடைச்சா சொல்லி அனுப்புறேன்"
நீங்களும் தகவல் கிடைச்சா கொஞ்சம் சொல்லுவீங்களா?
30 கருத்துக்கள்:
வாழ்க உமது பணி.
வெங்காயம் உறிப்பது எப்படிங்றத கொஞ்சம் சொல்லித்தர முடியுமா?
//தலைப்புக்கு ஹட்ஸ் ஆப், தமிழ்ல வொன்டர் புல்லா பேரு வைக்கீங்க"//
பாவி மனுஷா:)))))
/"அவனை எல்லாம் பூரி கட்டையால ரெண்டு தட்டு தட்டனும்"/
அடி பெலமோ. அதான் பஸ்ல இணையத்துல காணமோ?
கவுஜ நிஜமா நல்லாதாங்கீது:))
ரொம்ப நாளா ஆளையே காணோம்?
திடீர்ன்னு டவுட்...உங்க பதிவுதானா..இல்லே விஜய்டீவி சமையலான்னு...
உங்க எதிரிகால (நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்!!) திட்டமெல்லாம் புல்லரிக்க வைக்குது...
லாப்டாப் பொரியல் :))
செமையா இருக்குங்க.. அப்படியே கொஞ்சம் தண்ணி சுடப் பண்ணறது எப்பிடின்னு அடுத்த இடுகைல லைவ் டெமோ காட்டும். நொம்ப ஹெல்பிங்கா இருக்கும்.
வாவ் அருமையான சமையல் குறிப்புங்கோ!!!
கை கழுவுறது எப்புடீன்னு(ஒங்கள இல்ல)ஒரு போஸ்ட்டு போட்டீங்கன்னா நல்லாருக்கும்!(கை!)
என்னாச்சு...?
//"ஒ.. ரியலியாவா , நீங்க சோ ஸ்வீட்"//
சோ!ஸ்வீட் அல்ல.அவர் நைட்ரஜன் ஆக்ஸைடு.
அப்பாடா!பள்ளியில் விஞ்ஞானம் படிச்சதின் ஒரே புண்ணியம்:)
//"தட் இஸ் ஆவ்சம், சரி இப்ப கருவேப்பிலைய போடு"//
இந்த ஆவ்சம்...ஜார்ஜ் புஷ் ஈராக் மேல குண்டு போட்டு சந்தோசப்பட்டுகிட்ட ஆ!சம் தானே?
//"தாளிப்பது எப்படி"//
எப்படியோ எல்.கே.ஜி பாஸ் பாஸ்!
நசர்...வர வர முன்னேற்றம் தெரியுது உங்க பதிவில !
என்னமாதிரி புத்திசாலிகளுக்கு மட்டும் புரியிறாப்பிலே நீங்க ரொம்ப நல்லா பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் சாடையா எழுதக் கத்துக்கிட்டீக! நீங்க சொல்ற மாதிரித்தான் இன்னைக்கு உலகம் போய்க்கிட்டு இருக்கு! :)
காணொளிப் பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். (சீக்கிரம் பதிவை போட்டாச்சு போல, என்ன பயமா?)
இதுல எதோ இருக்கு?!
//பழமைபேசி said...
இதுல எதோ இருக்கு?//
கோள் மூட்டி விடறதே உங்க பொழப்பா போச்சு பழமை. பாவம் நசரேயன் மனசுல எதுவும் இல்லாம ஒரு கலைப்படைப்பை எழுதியிருக்கார். அது பொறுக்கலையா
//"அவிச்ச முட்டைக்கு தோல் எடுப்பது எப்படின்னு விரைவிலே குறிப்பு எழுதனும்முன்னு கேட்டுகிறேன்"//
இங்கன ஒரு டவுட்டு: நாட்டுகோழி முட்டையா? இல்லை லகான் கோழி முட்டையா?
நடக்கட்டும்.........
நல்ல பணி....வாழ்த்துக்கள் அய்யா....
//பூலோகம், சந்திர மண்டலம், மற்றும் செவ்வாய் கிரகத்திலே உள்ள யாரையும் குறிப்பிடுவன இல்லை//
அப்ப, மெய் நிகர் உலகான பதிவுலகத்துல இருக்கற ஒருத்தங்கள குறிப்பிடுதா? :))
சிரிக்க முடியலை போங்க... உள்ள வெளிய குத்தெல்லாம் இல்லையே...
கவுஜ எழுதுனது ஹோட்டல்காரரோ? யாவாரம் பாதிக்குது போல!! :-)))))))
நல்ல சமையல் குறிப்பு
:))
:-)
அடடே புளியங்குடி வாசம் வருதே...
கலக்கல்...
அடுப்பு பத்த வைப்பது எப்படீன்னு ஒரு வகுப்பு எடுக்க முடியுமா :-))))
எனக்கு தகவல் தெரியும்... சொன்னா அங்க விழும்..சோ மீ எஸ்கேப்... ஹா ஹா... சூப்பர் போஸ்ட்...
இந்த கலாய்ச்சல் எல்லாம் இருக்கட்டும்... நீங்க சமையல் ப்ளாக் பக்கம் போறதில்லைன்னு உங்க கவிதை மேல சத்தியம் பண்ணுங்க பாக்கலாம்... ஹா ஹா ஹா
சமையல் ப்ளாக்னு ஒண்ணு இருக்கறதால தான் நெறய பேரு வீட்டுல சாப்பாடே கிடைக்குது... (நான் என்னை சொல்லல...) இப்படி கலாய்ச்சா சமையல் ப்ளாக் எதுவும் உங்க ப்ரௌசெர்ல ஓபன் ஆக கூடாதுன்னு சாபம் போட்ருவோம் ஆமா...
Post a Comment