சுய மதிப்பீட்டு திட்டம்
வாழ்கையிலே தோல்வி அடைந்து விட்டால் கவலை அதிகமா இருக்கும்,கவலைப் பட்டா மட்டும் வெற்றி காலை சுத்தி கபடியா விளையாடும், எனக்கும் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை,என்னோட கவலை எல்லாம் இப்படி கற்பனை குதிரை ஆகுமுன்னு தெரிஞ்சா, நீங்க ஏன் கடைப்பக்கம் கால் வைக்குறீங்க, கொஞ்சம் நஞ்சம் இருந்த நகத்திலே இருந்த மிச்சம் மீதத்தையும் கடிச்சி துப்பிட்டு பெருசுகளின் அழைப்புக்கு பல்லை எலும்பு துண்டாய் கடிச்சிக்கிட்டு காத்து இருந்தேன்.
அறையின் கதவை திறந்து மனித வளம் எட்டிப் பார்த்து, என்னோட பேரை சொல்லி உள்ளே அழைத்தது. உள்ளே அழைத்த மனித வள மகராசியுடன், இன்னும் மூன்று பெருசுகள் அவர்களிடமும் என்னோட பெயரை சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன்.மரியாதையா என்னை நாற்காலியிலே உட்காரச் சொன்னார்கள்.நானும் அதிதீவிரமாக சிந்திப்பது போல சிந்தித்துக்கொண்டு இருந்தாலும், கடை காத்தாடுது,வியாபாரம் ரெம்ப குறைவாப் போச்சே, சரியா மொய் வைக்க முடியவில்லையே என்று சிந்தித்து கொண்டு இருந்தேன்.
"நாம எல்லாம் எதுக்கு ௬டி இருக்கோம்னு தெரியும், நம்ம அலுவலகத்திலே தயாராகும் சரக்கு, திட்டப்பணி ஆரம்பித்து ஒரு வருட காலம் ஆகியும் இன்னும் வெளிநாடு போய் சேரலை, சரக்குக்கு தேவையான எல்லா மூலப் பொருட்கள் இருந்தும், சரக்குக்கு நிர்ணயம் செய்த ஆட்கள் இருந்தும் இன்னும் பட்டுவாடா செய்யப்படலை,இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை பத்தி விசாரிக்க நாம எல்லோரும் ௬டி இருக்கிறோம்" என்று மனித வள மகராசி சொன்னாங்க,மனித வளத்தோட சேர்ந்து ௬ட இருந்த பெருசுகளும் அவர்கள் பங்குக்கும் கேள்விகளை அள்ளிப் போட்டனர். கேள்விகளின் வரிசை பின் வருவன
"சரக்கு இன்னும் தயார் ஆகலை, ஆனா சரக்கு தயாரிக்க வேலை செய்த எல்லோரும், அருமையாக வேலை செய்தது இருக்கிறார்கள் என்று நீங்கள் சான்றிதழ் கொடுத்து இருக்கீங்க?" இதை கேட்டது பெருசு மணி
"உங்களுக்கு கீழே வேலைபார்த்த எல்லோருக்கும், சுய மதிப்பீட்டு அளவு மிகவும் அதிகம் என்று ஆமோத்தித்து இருக்குறீர்கள்?" இதை கேட்டது பெருசு பால்.
"சக தொழிலாளிகள் அனைவரும் திறமைசாலிகள் என்று சொல்லி இருக்குறீர்கள்,எல்லோரும் ஒரே மாதிரியா வேலை செய்யுறாங்கன்னு நீங்க சொல்லுறது ஐந்து விரலும் ஒண்ணா இருக்கிறது என்று சொல்வதைப் போல இருக்கு" இதை கேட்டது
மாஸ்கோ.
வயசாகி போனதாலே ஞாபக மறதி வியாதி கேள்விகளை மறக்கடிக்க ௬டும் என்று கேள்விகளை குறித்து வைத்து கொண்டேன்.நான் மகளிருக்கு முன்னுரிமை என்ற தார்மீக கொள்கையிலே இருப்பதாலே, மகராசி கேள்வியை சட்டை செய்யாமல், பெருசுகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தேன்.இந்த கதையை ஒரு வருசத்துக்கு முன்னாடி கொண்டு போக வேண்டிய இருக்கு, கொஞ்சம் பொறுத்துக்கோங்க.
"அன்புக்குரிய சக தோழர்களே,தோழிகளே நாம இந்த சரக்கை தயாரிக்க ஆரம்பிக்குமுன்னே,மிக முக்கிய வேலையாக ஓன்று செய்ய விரும்புகிறேன்,ஒரு தாளை யும்,பேனாவையும் எடுத்து கவுஜ எழுதுங்க, அப்படின்னு சொல்லலை. உங்களோட மனசாட்சிப் படி உங்களோட பலம்,பலகீனம் ரெண்டையும் எழுதுங்க"
செய்யப்போற வேலைக்கும், இந்த கேள்விக்கும் என்ன சம்பதம் என்று இடை மரித்தார்
மாஸ்கோ.
ஐயா நான் இன்னும் எடுத்துக்காட்டு சொல்லி முடிக்கலை, கொஞ்சம் அமைதியா இருங்க என்று சொல்லிவிட்டு கதைக்கு போனேன்.
அடுத்த அரைமணி நேரத்திலே அனைவரும் எழுதிய தாள்களை வாங்கிகொண்டேன். அடுத்த ஒரு மாதத்திற்கு அவர்களின் வேலையை கண்காணித்து மீண்டும் சுய மதிப்பீட்டு திட்ட சந்திப்பு நடத்தினேன். அப்போது அவர்கள் முன்னே எழுதிகொடுத்த பலம், பலகீனம் ,மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை நான் ஆராய்ந்து உருவாக்கிய திட்ட உறுபினர்களின் பலம், பலகீனம் ரெண்டையும் வைத்து புள்ளி விவரங்களை ஒப்புமை செய்ததேன்.இந்த இரண்டையும் இணைத்து மறுபடி ஒரு மாதிரியை உருவாக்கினேன். ஒவ்வொரு உறுப்பினரின் பலம், பலகீனம் ரெண்டையும் வைத்து அவர்களிடம் பேசினேன்.அவர்களின் பலகீனத்தை மாற்ற அவர்களையே ஒரு திட்டம் தயாரிக்க சொன்னேன்.
"நீங்க இன்னும் சரக்கை பத்தி பேசவே இல்லை என்று இடைமறித்தார்" பால்.அதற்கு பதில் சொல்லுற மனநிலையிலே நான் இல்லாததாலே, மறுபடியும் எடுத்துக்காட்டுக்கு போயிட்டேன்.
"அடுத்த ஆறுமாதத்துக்கு அவர்களின் சுய சீர்த்திருத்த திட்டத்தை பயன்படுத்தி, அவர்களின் வலுகுறைந்த இடைவெளிகளை நிரப்பி அதைப் பூர்த்தி செய்தேன்.எட்டாவது மாதத்திலே இருந்து அனைவரும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாக மாறிவிட்டது என்று சொல்லி, "மணி,பால், மாஸ்கோ உங்களோட கேள்விகளுக்கு நான் சொன்னதிலே இருந்து விடை கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன், மாஸ்கோ ஐந்து விரல் ஒண்ணா இல்லைனாலும், ஒவ்வொரு விரலுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு"
"௬ட வேலை செய்யுற தொழிலாளர்களை காப்பற்றுகிறேன்னு சொல்லி உங்களுக்கு குழியை நீங்களே தோண்டுறீங்க,எல்லோரையும் சமமான தட்டிலே வைப்பது எவ்வளவு ஆபத்து என்று உங்களுக்கு தெரியலை,ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட குறைகளை சொல்லி கொஞ்சம் மட்டம் தட்டினாத்தான், அவங்களின் திறமைகள் வெளிப்பட்டுகிட்டே இருக்கும்,அவங்களோட பலகீனம்,நம்ம பலன் என்ற அடிப்படை விதி தெரியாம இருக்குகீங்க" என்று மறுபடியும் மாஸ்கோ கேள்வி கேட்டது.
"ஐயா குறைகள் இல்லாத திட்டம் எதுமே இல்லை இந்த உலகத்திலே இருந்து இருந்தா நமக்கு இங்க வேலையே இருக்காது, நான் செயல் படுத்திய திட்டம் என்னோட சுய சிந்தனைகள், சரக்கு தயார் ஆகலைன்னு கவலைப் படுற நீங்க, இதுவரைக்கும் வந்த சரக்கின் வடிவம் எந்த சேதமும்,சேதாரமும் இல்லாம இருக்கு என்பதும் உங்களுக்கு
தெரியும்,எவ்வளவு நாளைக்கு தட்டி தட்டி வேலை வாங்குவீங்க, கொஞ்சம் தட்டிக்கொடுத்து வேலை வாங்க பழகுங்க,நீ ஒழுங்கா வேலை செய்யலைன்னு வருட கடைசியிலே சொல்லும் முன்னே, முதல்ல இருந்து, அவனை வைத்தே அவன் குறைகளை சரி செய்ய வைக்கலாம்"
உடனே மணி "எல்லோருக்கும் ஒரே மதிப்பீடு இருந்தா, அலுவலக்கத்திலே வேலைய வச்சி எப்படி மேல் சாதி, கீழ் சாதின்னு பிரிக்க முடியும்?"
"நீங்க வேலைக்கு ஆள் எடுக்கும் போதே கடைபிடிக்கணும்,திறமை இல்லாத ஆள்களை வேலைக்கு எடுக்க மாட்டோம் என்று,அப்படி வேலை செய்யத்தெரியாதவனை எடுத்த நண்பரையே கேட்ட்கனும் இந்த கேள்வியை?, இந்த சுய மதிப்பீட்டு திட்டம் மேலுக்கும்,கீழுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் "
"இம்புட்டு கும்மி அடிக்கிற நீங்க ஏன் இன்னும் சரக்கு தயார் இல்லைன்னு காரணம் சொல்லவே இல்ல?" மகராசி கொக்கியப் போட்டது.
"வியாபார போட்டியிலே சரக்கை நாளைக்கு தருவோம் என்று வாடிக்கையாளர்களிடம் பொய் வாக்குறுதி கொடுத்து வாங்கி விடுகிறோம். வாங்கிட்டு அதை கடைநிலை
ஊழியர்களிடம் கொடுத்து நாளைக்கு சரக்கை தயாரா இருக்கணும் சொல்லிடுறீங்க, மயிலிறகு மென்மையா இருக்குன்னு அளவுக்கு அதிகமா வண்டியிலே ஏத்துனதுதான் சரக்கு தாமதத்துக்கு காரணம் என்று வழக்கம் போல வாய்பளித்த அனைவருக்கும் நன்றி" ன்னு சொல்லிட்டேன்.இதோட பஞ்சாயத்து முடிய, இது ஆராய்ச்சி இடுகை இல்லை.
வாடிக்கையாளரிடம் சொல்லுங்க இன்னும் மூணு மாசத்திலே சரக்கு தயாரா இருக்கும்.
"மூணு மாசமா" என்று பெருசுகள் அனைவரும் கேள்வியை கேட்க.
"பொய்ய சொல்லி வாங்கும் போது இதை யோசித்து இருக்கணும், நாளைக்கே தாரேன்னு சொல்லிட்டு கொடுக்காம இருக்கிறதுக்கும், நாலு நாளிலே தாரேன்னு சொல்லி ரெண்டு நாள் கழித்து கொடுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு"
பெருசுகள் யோசனையிலே ஆழ்ந்து விட்டனர்,எனக்கு கேட்காத மாதிரி என்னவோ பேசினாங்க, பேசி முடிச்சிட்டு என்னைய கொஞ்சம் வெளியே இருக்க சொல்லிட்டாங்க.அரைமணி நேரம் கழித்து மீண்டும் மனிதவள மகராசி என்னை அழைத்தது. உள்ளே போனேன்.மாஸ்கோ மட்டுமே பேசினார்.
"நாங்க உங்களுக்கு மூணு மாசம் அவகாசம் தருகிறோம்,ஆனா இந்த மூணு மாசத்துக்குள்ளே சரக்கு தயாரா இருக்கணும், அப்படி இல்லேன்னா என்ன நடக்குமுன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த மறுவாய்ப்பை தவற விட்டுடாதீங்க."
பதில் சொல்லாம வெளியே வந்தேன்
மூணு மாதத்துக்கு பிறகு என்ன நடந்ததுன்னு,சுய மதிப்பீட்டு திட்டம் என்ன ஆச்சின்னு மூணு மாசம் கழித்து சொல்கிறேன்.
21 கருத்துக்கள்:
பிழையில்லாம எழுதணும்தான். அதுக்காவ இப்படி ப்ரூஃப் பார்த்து பார்த்து 15 நாளைக்கு ஒரு இடுகை போட்டா, இடுகையை கூட உங்க கம்பேனி ஆளுங்கதான் எழுதித் தர சொல்றீங்களான்னு ஒரு சந்தேகம் உண்டாகுது.:))
சரக்கு சரக்குன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே... இன்னும் மூணு மாசம் வேணுமா?... அது சரி... அடுத்த பதிவு மூணு மாசத்துக்கு அப்புறம்தானோ...?
"பொய்ய சொல்லி வாங்கும் போது இதை யோசித்து இருக்கணும், நாளைக்கே தாரேன்னு சொல்லிட்டு கொடுக்காம இருக்கிறதுக்கும், நாலு நாளிலே தாரேன்னு சொல்லி ரெண்டு நாள் கழித்து கொடுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு"
......தத்துவமப்பா.......! கலக்கல்!
மரியாதையா என்னை நாற்காலியிலே உட்காரச் சொன்னார்கள்.நானும் அதிதீவிரமாக சிந்திப்பது போல சிந்தித்துக்கொண்டு இருந்தாலும், கடை காத்தாடுது,வியாபாரம் ரெம்ப குறைவாப் போச்சே, சரியா மொய் வைக்க முடியவில்லையே என்று சிந்தித்து கொண்டு இருந்தேன்.
so sad :((
"சரக்கு இன்னும் தயார் ஆகலை, ஆனா சரக்கு தயாரிக்க வேலை செய்த எல்லோரும், அருமையாக வேலை செய்தது இருக்கிறார்கள் என்று நீங்கள் சான்றிதழ் கொடுத்து இருக்கீங்க?" இதை கேட்டது பெருசு மணி
சரக்கா???
/இதை கேட்டது பெருசு மணி/
பழமையவா இப்படி சொல்லுதீரு:))
புரியலை..ஆனா, கொஞ்சமா புரியுது..
இருங்க நசர்.ஏதோ உருப்படியாச் சொன்னமாதிரியும் இருக்கு.ஆறுதலா திரும்பவும் வந்து வாசிக்கிறேன் !
ம்ம்ம்... நசரேயன் நீங்களும் என்னைய மாதிரி எழுதவே இல்லையா எல்லாரும் சொல்றாங்க...
சரக்கு எப்ப எல்லாருக்கும் தரப்போறீங்கன்னு என் நண்பர்கள் கேட்டாங்க:)
Self realisation is the best, it gives self confident and also which are the weak areas to be developed.
Nee unnayarinthaal., nee unnai arinthaal ulagathil poraadalaam..!.
ஏன் தளபதி, சுய மதிப்பீடு போடச் சொல்லி, இன்னும் மொளகா (மிளகாய் - பழமையாருக்கு மட்டும்) அரைக்க வழி சொல்லிக் கொடுக்கறீங்களா?
அட நல்ல உருப்படியான ப்திவா இருக்கே........வாழ்த்துக்கள்.
கலக்கல் :))
Thalapathi : Suya mathipeedu ....... mmmmm
நல்ல இடுகை நசர்
இடுகையின் பெரும்பாலான இடத்தை சரக்கே ஆக்ரமித்திருக்கிறதி இந்த இடுகை எழுதும்போது சரக்கடித்திருந்தீர்களா?
கொஞ்சூண்டு புரியறா மாதிரியும் இருக்கு, ஒண்ணுமே புரியாத மாதிரியும் இருக்கு, விளக்கவுரை தனியா போடுவீங்களா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//மூணு மாதத்துக்கு பிறகு என்ன நடந்ததுன்னு,சுய மதிப்பீட்டு திட்டம் என்ன ஆச்சின்னு மூணு மாசம் கழித்து சொல்கிறேன்.//
என்னய்யா எழுத்தாளன்/மென்பொருள் கட்டுமானன்.. கடைசி வரி இப்படி இருக்க வேணாமா?
-->மூணு மாதத்துக்கு பிறகு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்க மறுபடியும் முதல்ல இருந்து படிங்க--<
சரக்கு இன்னும் தயார் ஆகலை, ஆனா சரக்கு தயாரிக்க வேலை செய்த எல்லோரும், அருமையாக வேலை செய்தது இருக்கிறார்கள் என்று நீங்கள் சான்றிதழ் கொடுத்து இருக்கீங்க?
உங்க திட்டம் நல்லாயிருக்குங்க.. சுய மதிப்பீடு.. சுய சீர்திருத்தம்.. ம்ம்.. கண்டிப்பா வெற்றி பெறணும்..
என்ன தான் மேய்ப்பவர் பாத்துப் பாத்து மேய்ச்சாலும் நாங்களெல்லாம் எங்களுக்குப் புடிச்ச அளவுக்குத் தான் மேய்வோம் :) வேலை நல்லபடியா செய்யனும்ன்ற துடிப்பு உள்ள இருந்து வரணும்..
நானும் எனக்குப் போட்டுப் பாக்கப் பாக்கறேன்..
ஸ்ப்பா...வழக் நசரேயன் மிஸ்ஸிங்..ஒரே சீரியஸ் சரக்கா இருக்கு...LOL :))
ப்யங்கர கூதல்....
Post a Comment