அமெரிக்காவில் இந்திய தூதரகமும், நம்மவர்களும்
இது ஒரு ஜனகனமன இடுகை, தாய் மண்ணை அள்ளி பையிலே போட்டு இருக்கிறவங்க எல்லாம், கொஞ்சம் நெத்தியிலே பூசிக்கோங்க, கோவத்திலே கணணியிலே அள்ளி எறியவேண்டாம் என அன்போட கேட்டுக்கொள்கிறேன்.
அதாகபட்டதாவது அலுவலகத்திலே வெள்ளையம்மா(?), வெள்ளையப்பன் ௬ட இங்க இருக்கிற கருப்பு அண்ணாச்சி மாதிரி இங்கலிபிசு புரியாம பேசி அலப்பறையை கொடுத்துக்கிட்டு இருந்தாலும், ஊருக்கு போகும் போது காலாவதியான கடவுச்சீட்டை கொண்டு போனா கல்லை கொண்டு எறிந்துவிடுவாங்க என தெரிந்து கொண்டு இந்திய தூதரகத்திடம் நேரிலே சென்று புது கடவுச்சீட்டு வாங்க சென்றேன்.
காலையிலே ஒன்பது மணிக்கு இருக்கனுமுன்னு சொன்னாலும், நான் வழக்கம் போல பதினோரு மணிக்கு போனேன், இந்திய தூதரகமுன்னு ரெம்ப சுலபமா கண்டு பிடிச்சிட்டேன், மக்கள் வெள்ளம் மலைபோல ஒரு வரிசையே இல்லாம நின்னாங்க, வரிசை இங்கே இருக்கு என்ற குறியிட்ட இடத்திலே அனைத்து கணித உருவங்களையும் உள்ளடக்கி நின்ற ௬ட்டத்திலே நானும் நுழைந்தேன், கொஞ்ச நேரத்திலே வரிசையிலே நின்றவர்களிடம் வரிசை எங்கே இருந்து ஆரம்பிக்கிறது என்று தெரியாமல் கையை நீட்டியவர்களுக்கு எல்லாம் தூதரக நுழைவு அனுமதி சீட்டை வழங்கினார் அதிகாரி ஒருவர். வாங்கி விட்டு உள்ளே சென்றேன்.
வெளியே நாங்கள் வாங்கின அனுமதி சீட்டு எண் திரையிலே வரும்,நாம் கையிலே இருக்கும் எண் வரும் போது, நம்மோட விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு அதிகாரியை சந்திக்க வேண்டும். திரையிலே வரும் எண் வரிசை முறைப்படியே அலுவலக அதிகாரிகள் விண்ணப்பதார்களை சந்தித்தாலும், அதிகாரிகளின் கவுன்ட்டர் முன்னே எந்திரன் படத்துக்கு சீட்டு வாங்குவது போல ஒரு பெரிய ௬ட்டம், திரையிலே எண் வந்த நபர், இவர்களிடம் தள்ளு பட்டு கவுன்ட்டரை அடைய குறைந்த பட்சம் பத்து நிமிஷமாவது ஆகும். அது என்னனு தெரியலை நம்மவர்கள் எல்லாம், அமெரிக்காவிலே மற்ற இடங்களுக்கு செல்லும் போது வரிசை முறைய கண்ணியமாக கடைபிடிப்பார்கள், இந்தியான்னு பேரைக் கேட்டதும் எல்லாத்தையும் காத்திலே போட்டு விட்டு சந்தைக்கடை போல பாவிப்பார்கள்.
வெளியே நாங்கள் வாங்கின அனுமதி சீட்டு எண் திரையிலே வரும்,நாம் கையிலே இருக்கும் எண் வரும் போது, நம்மோட விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு அதிகாரியை சந்திக்க வேண்டும். திரையிலே வரும் எண் வரிசை முறைப்படியே அலுவலக அதிகாரிகள் விண்ணப்பதார்களை சந்தித்தாலும், அதிகாரிகளின் கவுன்ட்டர் முன்னே எந்திரன் படத்துக்கு சீட்டு வாங்குவது போல ஒரு பெரிய ௬ட்டம், திரையிலே எண் வந்த நபர், இவர்களிடம் தள்ளு பட்டு கவுன்ட்டரை அடைய குறைந்த பட்சம் பத்து நிமிஷமாவது ஆகும். அது என்னனு தெரியலை நம்மவர்கள் எல்லாம், அமெரிக்காவிலே மற்ற இடங்களுக்கு செல்லும் போது வரிசை முறைய கண்ணியமாக கடைபிடிப்பார்கள், இந்தியான்னு பேரைக் கேட்டதும் எல்லாத்தையும் காத்திலே போட்டு விட்டு சந்தைக்கடை போல பாவிப்பார்கள்.
நான் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகன் என்பதாலே, அருகிலே இருந்த முதியோருக்கு ஒதுக்கப் பட்ட இடத்திலே அமர்ந்தேன், பக்கத்திலே தானியங்கி குளிர்பான இயந்திரம் இருந்தது, அதிலே வந்து காசைப் போட்டு கால் மணி நேரம் காத்திருந்த ஒருவர் இயந்திரம் வேலை செய்யவில்லை என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றார்.அடுத்தடுத்து வந்த நபர்கள் குளிர்பானம் எடுக்கும் முயற்சியிலே படுதோல்வி அடைந்து, இந்திய தூதரகம், அவங்க பாட்டி, தாத்தா எல்லாத்தையும் குறை சொல்லிட்டு போய்ட்டாங்க, நான் தாய் நாட்டிலே இல்லைனாலும், இப்படி வார்த்தைகளை கேட்டு கொதித்து, கொண்டு சென்ற தாள்களிலே ஒன்றை எடுத்து பேனாவை தேடும் முன்னே, அருகிலே இருந்த இன்னொரு நபர், இயந்திரம் வேலை செய்யவில்லை என்று தாளிலே எழுதி ஓட்டிவிட்டு சென்றார்.நோபல் பரிசு வாங்க வேண்டிய ஒரு கலைஞன் அமைதியா அவரைப் பார்த்து சிரித்தேன்,அவரு என்னைப் பார்த்து ஜெய் ஹிந்த் ன்னு சொல்ல, நான் ஜெய் டமில் ன்னு சொன்னேன்.பக்கத்திலே இருந்த மனவாடு ஜெய் தெலுங்கானான்னு சொன்னாரு.
அடுத்த ரெண்டு நிமிசத்திலே ஒருத்தர், நீங்க சரியில்லை என்று தூதரக அதிகாரிகளை பற்றி குறை சொல்லிக்கொண்டு இருந்தார், அவரு போட்ட சத்தத்திலே ஒரு ௬ட்டம் ௬டி அவரோட பிரச்சனையைப் பேச ஆரம்பித்தார்கள், அவங்க அம்மாவோட கடவுச்சீட்டு காலாவதியாகி விட்டதாம், அதை விசாரிச்சப்ப அதிகாரிகள் சரியா விளக்கம் கொடுக்கலையாம் ரெம்ப வருத்தப் பட்டு புலம்பிக்கிட்டு இருந்தாரு, சரிங்க இப்பத்தான வந்துட்டீங்க, பெருமையா வாங்கிட்டு போங்கன்னு சமாதனம் செய்தார்கள், அவரு சொன்ன பதிலிலே, நான் அந்த இடத்தை விட்டே வந்து விட்டேன், அவங்க அம்மா விமான நிலையத்திலே இருப்பதாகவும்,அவங்க அம்மா பயணிக்க இருந்த விமானம் இன்னும் மூணு மணிநேரத்திலே கிளம்பனுமாம்,அவங்களோட கடவுச்சீட்டு காலாவதியானது விமானநிலையத்திலே தான் அவங்களுக்கு தெரியுமாம்.
அமெரிக்கா வந்து ஆணி பிடுங்கி போணி பண்ணுறவங்க, கடவுசீட்டுக்கு கடவுளுக்கு கொடுக்கிற மரியாதை கொடுத்து, அது காலாவதி ஆக இன்னும் குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் இருக்கவேண்டும் என்று சரிபார்த்து, அமெரிக்க தூதரகம் செல்லும் முன்னே கோயில் கோயிலா ஏறி பூசை பண்ணி வந்தவங்க, இந்தியாவுக்கு போற மாதிரி இருந்தா இவ்வளவு அலட்சியம் எதற்கு வேண்டும், நம்மளோட அடிப்படை பொறுப்புகளை செய்யாத நிலையிலே இந்தியாவை குறை சொல்லி பயன் என்ன?
இப்படி கொலைவெறி யோசனையோட இருந்த நேரம், இன்னொருத்தர் அதிகாரியிடம் வாக்கு வாதம் பண்ணிக்கொண்டு இருந்தார், அவருக்கு ஒரு கையெழுத்து வேண்டுமாம், அதை உடனே முடித்துகொடுக்க வேண்டும் என்று சொன்னார், அலுவலக அதிகாரி அவரிடம், காலையிலே விண்ணப்பங்களை வாங்கிவிட்டு மாலையிலே தான் பட்டுவாடா செய்வோம் என்று பதில் சொன்னார். ஒரு கையெழுத்துக்கு நாலு மணி நேரம் காத்து இருக்கனுமா என்று சலிப்போடு சண்டையைப் போட்டார்.
அமெரிக்க தூதரகமா இருந்தா இப்படி எல்லாம் அதிகாரிகளிடம் பேசுவோமா, அவரு வணக்கமே சொல்லலைனாலும்,அவருக்கு காலை,மாலை, இரவு என்று பல்வேறு வணக்கங்களை வைத்து விட்டு, அவங்க தாத்தா, பாட்டி, முப்பாட்டன் வரை எப்படி இருக்காங்கன்னு விசாரிப்போம், அவரு விண்ணப்பத்தை சரி பார்க்க பத்து மணி நேரம் ஆனாலும், இப்பத்தான் பால் குடிச்சி முடிச்ச பாப்பா மாதிரி அமைதியின் திருவுருவமா நிப்போம்.
இழுத்துக்கிட்டு இருக்கிற மனுஷனுக்கு மருத்துவர் எழுதிகொடுத்த மருந்து சீட்டை மருந்து கடையிலே கொடுக்கும் போது,அவர் ரெம்ப சாந்தமா அரைமணி நேரம் கழித்து வாங்கன்னு சொல்லுவாரு, சாகுறதுக்கு முன்னாடியாவது கொடுங்கன்னு சொல்லிட்டு பொறுமையாய் காத்து இருப்போம், காத்திருப்பும், பொறுமையும் தலையாய கடமையா இருக்கிற இடத்திலே, இந்திய தூதரகம் என்ற உடனே காலிலே வெந்நீர் விட்டது போல, பொறுமை இழந்து பொங்கி எழ வேண்டிய அவசியம் என்ன?
நினைச்சதுக்கெல்லாம் நாட்டை குறை சொல்லும் முன், நம்முடைய ஒரு சில குறைகளையும் களைந்தால் நமக்கும், நாட்டுக்கும் நல்லதுதானே, இவ்வளவு சொன்ன நான் அவங்க கேட்ட புகைப்பட அளவு இல்லாமால், நான் வேறு ஒரு அளவு புகைப்படம் கொடுத்தேன், இருந்தாலும் எனக்கு புது கடவுச்சீட்டு கொடுத்தார்கள், என்னோட விண்ணப்பத்தையும் நிராகரித்து இருந்தால் நானும் இந்தியாவை திட்டி இருப்பேனோ?!!!
33 கருத்துக்கள்:
உண்மைதான் நசர். நம் கடமைகளை செய்யாமல் உரிமைகளை மட்டும் எதிர்பார்க்கிறோம்
//
நான் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகன் என்பதாலே, அருகிலே இருந்த முதியோருக்கு ஒதுக்கப் பட்ட இடத்திலே அமர்ந்தேன்,
//
அருமைய்யா..........
//
கடவுசீட்டுக்கு கடவுளுக்கு கொடுக்கிற மரியாதை கொடுத்து, அது காலாவதி ஆக இன்னும் குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் இருக்கவேண்டும் என்று சரிபார்த்து
//
தள : அது அஞ்சு வருசம் இல்ல.....
//
இப்பத்தான் பால் குடிச்சி முடிச்ச பாப்பா மாதிரி அமைதியின் திருவுருவமா நிப்போம்.
//
அனுபவம் பேசுது....... என்னயும் சேத்துதான் ........
என்னோட விண்ணப்பத்தையும் நிராகரித்து இருந்தால் நானும் இந்தியாவை திட்டி இருப்பேனோ?!!! //
சத்திய சோதனைன்னா இப்பதான் அர்த்தம் புரிஞ்சிது! (ஜெய் சென்னை)
சத்திய சோதனைன்னா இப்பதான் அர்த்தம் புரிஞ்சிது! (ஜெய் கோடம்பாக்கம்)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
கடைசி பத்தி எதார்த்தம்..பகிர்வு நகைச்சுவை கலந்த உண்மைகளோடு..
நல்ல பகிர்வு.
//நினைச்சதுக்கெல்லாம் நாட்டை குறை சொல்லும் முன், நம்முடைய ஒரு சில குறைகளையும் களைந்தால் நமக்கும், நாட்டுக்கும் நல்லதுதானே//
ஆதங்கம் ரொம்ப சரி.
தாய் மண்ணே வணக்கம்:))
கடவுச்சீட்டு??? கடவுச்சீட்டு என்றால் என்ன? :-)
சத்தியாக்கு சோதனையா?? ஜெய் தாம்பரம்..கடவு சீட்டுன்னா??
உண்மைதான். அது நம்ப ரத்தத்தில் ஊறிடுச்சு போல :(
பாஸ்போர்ட் புதுப்பிக்க நேரில் வரச் சொல்கிறார்களா. இங்கே (இந்தோனேஷியாவில்) ஆன்லைனில் அப்ளை பண்ணி பணத்தையும் கட்டிட்டு டாக்குமெண்டுகளையும் பாஸ்போர்ட்டையும் கூரியரில் இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைத்தேன். இரண்டே வாரத்தில் வீடு தேடி பாஸ்போர்ட் வந்து விட்டது.
கடவுச்சீட்டு- பாஸ்போர்ட்
அதெப்படிங்க இவ்வளவு அலட்சியம்????
கடைசி நிமிசத்துலேயா கடவுச்சீட்டுக்கு உசுரு இருக்கா இல்லை காலாவதி ஆயிருச்சான்னு பார்ப்பாங்க!!!!
என்னமோ போங்க..... நம்மாட்களுக்கு இவ்வளோ அலட்சியம் கூடவே கூடாது...
\\அவங்களோட கடவுச்சீட்டு காலாவதியானது விமானநிலையத்திலே தான் அவங்களுக்கு தெரியுமாம். // :(
அடக்கொடுமையே..
நல்லாத்தான் கிளம்பராங்க..
\\அவங்களோட கடவுச்சீட்டு காலாவதியானது விமானநிலையத்திலே தான் அவங்களுக்கு தெரியுமாம். // :(
அடக்கொடுமையே..
நல்லாத்தான் கிளம்பராங்க..
நல்ல பகிர்வு.
கடைசி பத்தி எதார்த்தம்.
சத்திய சோதனைன்னா இப்பதான் அர்த்தம் புரிஞ்சிது!
ஜெய் நசரேயன் :))
இந்தியாவுடன் சமன்செய்து பார்த்தால் வெளிநாடுகளில் தூதரக அலுவலகம் கடவுசீட்டைப்பொறுத்த வரை சிறப்பாகவே செயல்படுகிறது என்று கூறலாம்.
அதே நேரத்தில் முதுகெலும்பில்லாத தன்மைக்கு ஆசிய தூதரகங்கள் அனைத்துமே ஒன்றோடு ஒன்று போட்டி போடக்கூடியவை.முக்கியமாக வளைகுடா நாடுகளைப் பொறுத்த வரை வீட்டில் வேலை செய்யும் பெண்கள் பற்றிய மனித உரிமை மீறல்களைக்கூட அரசு ரீதியாக குரல் கொடுக்காத so called beauracratic machines (அரசு யந்திரங்கள்).
இந்தியா வரும்போது விமானத்திலிருந்து இறங்கும் போது மாறும் மனோபாவம் அமெரிக்காவிலேயே கொடிகட்டிப்பறப்பது வருத்தமளிக்கிறது.
ஜெய் டமில் சொன்னவுடன் எத்தனைபேர் பேட்டை ராகம் பாடுறாங்கன்னு பாருங்க!
அதே வாழ்க தமிழ் சொல்லியிருந்தீங்கன்னா வார்த்தை மொத்த இடுகையில் காணமலே போயிருக்கும்.
பதிவுலக ஜெய் டமில் காப்பிரைட் உங்களுக்குத்தான்:)
//நினைச்சதுக்கெல்லாம் நாட்டை குறை சொல்லும் முன், நம்முடைய ஒரு சில குறைகளையும் களைந்தால் நமக்கும்//
அங்கங்கே குறைகள் தெளிக்கப்பட்டுதான் இருக்கிறது.
கடைசியாய் முடித்த வரி நிதர்சனம்
இவ்வளவு நடக்கிறதா உங்க ஊரில. ஒவ்வொரு வரியும்
சுள்ளென்று இருக்கிறது.
தூதரகப் பொறுமையைப் பாராட்ட வேண்டியதுதான். மிக நல்ல பதிவு.
//அவரு வணக்கமே சொல்லலைனாலும்,அவருக்கு காலை,மாலை, இரவு என்று பல்வேறு வணக்கங்களை வைத்து விட்டு, அவங்க தாத்தா, பாட்டி, முப்பாட்டன் வரை எப்படி இருக்காங்கன்னு விசாரிப்போம்,//
:)) சொல்ல வந்த விசயத்தை நகைச்சுவை கலந்து அழகாய் சொல்லி இருக்கீங்க!
இதுவரைக்கும் ஒவ்வொரு தடவையும் பாஸ்போர்ட், விசா சம்பந்தமா எது விண்ணப்பித்தாலும், DC அலுவலர்கள் என்னை திகைப்படையச் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு வெள்ளை தாளில், எனது அவசரத் தேவையை மரியாதையாக தெரிவித்தால், 4 or 5 தினங்களுக்குள் மெயிலில் அனுப்பி உள்ளனர். நம் விண்ணப்பம் மற்றும் ஆதாரம் சரியா இருக்கும் நேரத்தில், அவர்கள் செயல்பாடும் சிறப்பாக வந்து சேர்ந்துள்ளது.
என் அனுபவத்தில் நியூயார்க் இந்திய தூதரகம் மிகச்சரியான சேவை வழங்குகிறது. குறைகளுக்கு காரணம் நமது அணுகுமுறையே.
//நினைச்சதுக்கெல்லாம் நாட்டை குறை சொல்லும் முன், நம்முடைய ஒரு சில குறைகளையும் களைந்தால் நமக்கும், நாட்டுக்கும் நல்லதுதானே, ///
ரொம்ப அருமையான பதிவுங்க.. நீங்க சொன்ன ரொம்ப விஷயம் கரெக்ட்...தான்..
வெளிநாட்டில் இருக்கும் போது கடைபிடிக்கும் விதிமுறையை நம் இடத்திலும் கடைபிடித்தால் எவ்ளோ நல்லா இருக்கும்..!
//நினைச்சதுக்கெல்லாம் நாட்டை குறை சொல்லும் முன், நம்முடைய ஒரு சில குறைகளையும் களைந்தால் நமக்கும், நாட்டுக்கும் நல்லதுதானே//
ரொம்ப கரெக்ட்..
மாறும் ஒருநாள் இந்நிலை மாறும்... :-)
@kavisiva
இங்கேயும் ஆன்லைனில் அப்ப்ளிகேஷன் பில் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து டிடி அனுப்பினால் இரண்டுவாரத்தில் வீட்டுக்கு வந்துவிடும் பாஸ்போர்ட். தளபதி நியூ யார்க்கில் இருப்பதால் நேரில் போய் இருப்பார்.
கடவு சீட்டுனா பாஸ்போர்ட்டா!
நான் ஒண்ணு சொல்லுறேன் கேக்குறீகளா?
நீங்க அமெரிக்க குடிமகனான உடன் இந்திய குடிமகனை துறக்க ஒரு சான்றிதழ் வாங்கனும். என்னைக்கேட்டால் இந்த சான்றிதழ் எதுக்குனே தெரியலை. சரி, அதுக்கு $20 தான் ஃபீஸ்னு இருந்தது. ஜூன் 2010 வரை.
இப்போ திடீர்னு, அந்த ஃபீஸை $ 175 ஆக மாத்தி யுள்ளார்கள்!
இதெல்லாம் என்னங்க? சும்மா பகல் கொள்ளை?
$20 டாலர் எங்கேயிருக்கு $175 டாலர் எங்கேயிருக்கு? கூறுகெட்ட தனமா இல்லை? எல்லாரும் பண்ணுறானுகள்னு இவர்களும் ஆரம்பிச்சுட்டார்கள்!
அன்பு தீபாவளி வாழ்த்துகள்
Varun, you are complaining about the $175 fee when you surrender the indian passport. But do you know procedure to surrender US citizenship?. If you decide to surrender US citizenship it there is a waiting list (4-6 months) and also there is a exit tax (35% of you networth after 2 million)
///Covered Expatriates and Exit Tax Threshold
The Heroes Earnings Assistance and Relief Tax Act of 2008 (the HEART Act) and the U.S. Treasury Notice 2009-85 establish the following rules for US expatriates.
The law applies to US citizens who expatriate, as well as long-term US permanent residents who give up their green cards, which they have held for 8 of the last 15 years. Both categories are subject to immediate “exit tax” on unrealized gains on all their assets in the US and worldwide, including grantor trusts, as well as on any future gifts or bequests to US citizens and residents, if any.
You qualify for the covered expatriate and the related exit tax, if you meet any of the following criteria:
* you have a net worth of US$ 2 million or more;
* you have an average net U.S. income tax liability of greater than US$ 139,000 (thereafter indexed for inflation; $145,000 for people expatriating in 2009) for the five year period prior to expatriation; or
* you fail to certify that you have complied with all U.S. federal tax obligations for the preceding five years.
Herewith, all property subject to gift tax and all property, where you hold a use right, are included for purposes of the net worth test.
The exceptions are dual nationals from birth, who have not lived in the US for more than 10 years from the last 15, and persons younger than 18½ who have not lived in the US for more than 10 years.///
I am not THAT RICH, so, it is immaterial to me!
anony!
I am asking why all of a sudden $20 becomes $175 from june 2010? Could you offer an expln?
"பக்கத்திலே தானியங்கி குளிர்பான இயந்திரம் இருந்தது, அதிலே வந்து காசைப் போட்டு கால் மணி நேரம் காத்திருந்த ஒருவர் இயந்திரம் வேலை செய்யவில்லை என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றார்".
சமிபத்தில் வாஷிங்டன் இந்திய துதரகம் சென்றேன், என்னுடைய மகனுக்கு PIO கார்டு apply பண்ண. வரிசை எண் எடுக்கும் எந்திரம் எங்கே என்று 5 நிமிடம் தேடியபின் கிடைத்தது, அது உடைந்து ஒரு மூலையில்.
1 மைல் நடந்து சென்றதால் ஒரே வியர்வை, உள்ளே சென்றால் ஹீட்டர் ON பண்ணி எல்லோரையும் வருத்துகொண்டு இருந்தார்கள். தானியங்கி குளிர்பான இயந்திரம் இல்லை, தண்னிர் எந்திரத்தில் தண்னிர் இல்லை, உடைந்து இருந்தது. என்முறை வந்ததும் இந்த குறைகளை சொன்னேன், அந்த வடகூர்க்காரி எனக்கு இந்த கண்ணாடிக்கு அந்தபுரம் என்ன இருக்கிறது என்று தெரியாது என்று திமிருடன் சொன்னாள். போடி என்று மனதில் திட்டிவிட்டு வந்தேன்.
ஜெய் நாராயண்
Post a Comment