Sunday, November 7, 2010

முத்தயியல்

நான் ஆண்கள் கல்லூரியிலே படித்தாலும், எனக்கு ஒரு காதலி இருக்கிறாள்.௬ட படிக்கிற நண்பர்கள் எல்லாம் எனக்கு ரெண்டு காதலி இருக்கா, மூணு காதலி இருக்கான்னு சொல்வதை கேள்விப்பட்டு, நான் ஒண்ணை பிடிக்கவே நாய் படாத பாடு படுறேன், எப்படி ரெண்டு மூணுனு யோசித்தே என்னையும் துண்டு போட வைத்து விட்டார்கள். என்னோட காதலி மருத்துவம் படிக்கிறாள்,அதனாலவோ என்னவோ எனக்கு கல்லூரியிலே நல்ல பேரு, மருத்துவச்சிக்கு துண்டு போட்ட மாவீரன்னு பட்டம் எல்லாம் கொடுத்து இருக்காங்க, ஆனா உண்மையிலே என் காதலி எங்க ஊரிலே பீடி சுத்திகிட்டு இருக்கிறாள் ,காதல் புலிகளைப் பார்த்து சுடு போட இந்த பூனைக்கு ஆள் கிடைக்காதலே,காதல் ஏழைக்கு ஏத்த காதலி எள்ளுருண்டையா உள்ளுர்லே கொஞ்சம் வெள்ளையா இருந்த வளவளத்தாவுக்கு துண்டு போட்டேன், ஆரம்பத்திலே உலக வசவுகள் எல்லாம் வாங்கி ஒரு வழியா உசார் பண்ணிட்டேன். 

நண்பர்களிளிடையே ஒரு அந்தஸ்து இருக்க வேண்டும் என்பதற்காக, பீடி சுத்துற வளவளத்தாவை மருதுவச்சின்னு சொல்லி வச்சி இருந்தேன்,இந்த பொழப்புக்கு ரெண்டு கவுஜ எழுதி பொழைப்பை ஓட்டலாமுன்னு நீங்க நினைச்சாலும், எனக்கு நொங்கு நோகாம தின்னமுடியாதுன்னு யோசனை வருது.இப்படியெல்லாம் பொய் சொன்னாலும் நகரத்து பெண்கள் பின்னாடி எல்லாம் நாய் குட்டியா அலைந்து தேத்துற அளவுக்கு நான் அழகு கிடையாது. 

நான் கல்லூரி விடுமுறைக்கு வரும்போது நான் வளவளத்தாவை சந்திப்பேன், அவ பீடி சுத்தினதை கடையிலே கொடுத்து விட்டு வரும் போது அவளை சந்திப்பேன். இப்படி ஒரு நாள் முட்டு சந்திப்பிலே இரு காதல் பறவைகள் சந்திக்கும் போது, நொங்கு திங்க முடியலையே என்கிற வருத்தத்திலே 

"வளவளத்தா நம்ம காதல், நீ சுத்துற பீடியிலே இல்லாதா தூள் மாதிரி இருக்கு, உன் பீடியை குடிக்கிறவன்தான் உன்னைய திட்டு திட்டுறான், உன்னைய காதலிக்கிற நானும் உன்னைய திட்டனுமா?"

"காக்கா,தோட்டத்திலே கத்தரிக்கா பிடுங்க போனவகிட்ட காதல் கடிதாசி கொடுத்து காலிலே விழுந்து என்னை ஏத்துகோன்னு கெஞ்சி என் மனசை ஆட்டைய போட்டவன் நீ, உனக்கு இதுவே பெரிய விஷயம் "

"வளவள, கல்லூரியிலே முத்தயியல் படிச்சதிலே இருந்து, அதை சோதனை செய்யணுமுன்னு வாய் அரிக்குது"

"இந்த சுவத்திலே வாய வச்சி தேயி சரியாப்போகும்"

"நான் சொல்லுறது உன் உதட்டிலே வாய் வச்சி தேய்க்கிறது"

"கருவாய் ரெம்ப நீளுது இன்னைக்கு"

"வளவள முத்தயியல் பெரிய கடல், இருந்தாலும் ஒண்ணு ரெண்டாவது சோதனை செய்தத்தான், பரிட்சைக்கு நல்லது, உன் செல்ல காக்கா, பரிட்சையிலே தோல்வி அடைஞ்சா உன் அப்பன் எனக்கு பெண் கொடுப்பானா?"

"நீ தேர்ச்சி அடைஞ்சாலும் என்னைய உனக்கு கட்டி கொடுப்பான் என்பது சந்தேகமே, இருந்தாலும் பாவம் பச்சை புள்ள ஆசையா கேட்குது என்னன்னு சொல்லு"  ன்னு சொன்னதும் மூட்டு சந்திலே ஆள் நடமாட்டம் அதிகமா வந்துட்டாங்க, நான் ஓசி படம் காட்டுவேன்னு நினைச்சாங்களோ என்னவோ, உடனே அவளைப் போகச்சொல்லிவிட்டு நாளைக்கு சந்திக்கலாம் என்று அனுப்பிவிட்டேன், இரவு கனவிலே முத்தமா வந்தது, எப்படியும் நாளைக்கு நொங்கு திங்கலாமுன்னு படுத்து தூங்கிவிட்டேன், மறுநாள் மாலை மீண்டும் எங்கள் சந்திப்பு மூட்டு சந்திலே 

"காக்கா நீ முத்தமுன்னு சொன்னதும் நேத்து எனக்கு கனவே வரலை"

"அதான் நேரிலே சொல்லைப் போறேனே, அப்புறம் கனவு எதுக்கு, முத்தத்திலே ரெண்டு வகை ரெம்ப முக்கியம், அதுல ஒண்ணு மாட்டு முத்தம்?"

"மட்டு சாணிய அள்ளி மாத்தி மாத்தி முகத்திலே எறியணுமா?"

"இல்ல வளவள" 

"புரியுற மாதிரி சொல்லு?"

"மாடு எப்படி தண்ணி குடிக்கும்?" 

"நல்லா கழுத்தை நீட்டி தண்ணியை உறிஞ்சி மண்டும்"

"நாமளும் அதே மாதிரி தலைய நீட்டி, உதட்டோட உதட்டு வச்சி?"

"எச்சிய மண்டனுமா?"

"இல்ல பக்கி, நாக்கை நல்லா சுழட்டி சுழட்டி, உன் வாயிலே இருக்கிற எச்சை நானும், என் வாயிலே இருக்கிற எச்சையும், அடி பம்பிலே தண்ணி அடிக்கிற மாதிரி அடிக்கணும்,ரெம்ப வேகமா உரிய௬டாது, அப்புறம் குடல் வெளியே வந்து, கின்னஸ் புத்தகத்திலே இடம் கிடைக்கும்" 

"ஆக மாடு தண்ணி குடிக்கிற மாதிரி எச்சியை குடிச்சி,உன் பல்லை நானும், என் பல்லை நீயும் விளக்கத்துக்கு பேரு மாட்டு முத்தமா ?"

"தமிழ்ல மாட்டு முத்தம் ஆங்கிலத்திலே லிப்லாக்"

"அவ்வளவு தானா ?"

"இன்னொன்னு சுடுநாய் முத்தம், அதுக்கு நாம ரெண்டு பேரும் ஒத்தை காலிலே கொக்கு மாதிரி நிக்கணும்"

"நின்னு மறுபடியும் மாடு மாதிரி மண்டனுமா?"

"இல்ல உதட்டிலே வெள்ளை அடிக்கணும்"

"சுண்ணாம்பு அடி முத்தமுன்னு பேரு வைக்க வேண்டியதானே, அது என்ன சுடு நாய்?"

"வெளி நாட்டிலே எல்லாம் சுடு நாய் விக்குறவங்க, தெருவிலே இப்படித்தான் கொடுப்பாங்களாம், அங்க எல்லாம் இலவச முத்தக் கல்வி தெருவிலே கிடைக்குமாம், நம்ம ஊரிலே இன்னும் துரை மாதிரி வரலைன்னு பாடமா வச்சி இருக்காங்க"

"காக்கா இம்புட்டு வேலை செய்வதற்கு பதிலா நல்ல பற்பசை வாங்கி ரெண்டு பேரும் பல் விளக்கலாம்,உன் வாயிலே இருக்கிற கிருமியை எல்லாம் என் வாயிலே அள்ளிப்போட்டு இலவசமா நோய் இழுத்துவிடுற இந்த விளையாட்டு தேவையா?"

"அதையெல்லாம் பாடம் முடிஞ்ச உடனே யோசிக்கலாம், பரிசோதனையை ஆரமிக்கலாமா ?"

"நீ ஊருக்கு போயிட்டு அடுத்த தடவை வரும் போதுதான், அதுவரைக்கும் நீ சொன்னதை எல்லாம் நான் மனப்பாடம் பண்ணி வச்சி இருக்கேன்னு சொல்லிட்டு போய்ட்டா?" 

ஆட்டையப் போட வழி இல்லாமா, நானும் கல்லூரிக்கு போயிட்டேன், அடுத்த ரெண்டு மாதம் ஊருக்கு வர முடியலை, முத்தாக கனவு நனவு ஆகுமுன்னு திரும்பி வந்தேன், வளவளத்தா வீட்டு முன்னே பெரிய ௬ட்டம், நான் பக்கத்திலே போய் விசாரித்தேன், பதிலை கேட்டு என்னால பேச முடியலை, அன்று மாலையிலே முட்டு சந்திலே போன தடவை கொடுத்த தூள் இல்லாத கட்டை பீடியை குடித்துக்கொண்டு இருக்கும் போது, வளவளத்தா வந்தாள். 

"ஏய் காக்கான்னு சொல்லவந்தவ, என் பேரை சொன்னாள்.

"கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?"

"ம்ம், நான் என்ன செய்ய என்னைய தான் கட்டுவேன்னு ஒத்தை காலிலே நிக்காரு எங்க அமெரிக்க மச்சான், அங்க தொழில் அதிபரா இருக்காராம்,உனக்கு என்னைய மாதிரி பீடி சுத்துறவ  கிடைப்பா,ஆனா எனக்கு அமெரிக்க மாப்பிள்ளை கிடைப்பாரா?"

"நான் அமெரிக்கா போகவே மாட்டேன்னு முடிவே பண்ணிட்டியா?"

"நீ இப்பத்தான், மாட்டு தொட்டியிலே தண்ணி மண்ட படிசிகிட்டு இருக்க,நீ என்னைக்கு மாட்டுக்கு தீனி வச்சி, அது வளர்ந்து கண்ணு குட்டி போட்டு, சாணி அள்ளி போட்டு எப்ப வர, உன் ௬ட சேர்ந்து என்னை சாணி அள்ள சொல்லுறியா?, எங்க மச்சான் அங்க சுடு நாய் விக்காரு, இன்னும் ரெண்டு மாசத்திலே கல்யாணம்,பரிட்சை இருக்குன்னு சொல்லிட்டு ஊருபக்கம் வராதேன்னு சொல்லிட்டு போய்ட்டா"

கட்டபீடியை கசக்கி போட்டேன், மனசு கிழிஞ்சி போச்சி என்ன செய்யன்னு தெரியலை, வீட்டுக்கு வந்து வயறு முட்ட சாப்பிட்டேன், ஒரு பேனாவை எடுத்து கிறுக்குனேன் நினைச்சதை எல்லாம், காதல் போய் கவுஜை வந்துவிட்டது,காலங்கள் கடந்தது,நான் பெரிய கவுஞன் ஆகிட்டேன், ஆனா கவுஜைக்கு சொந்தக்காரி அமெரிக்காவிலே என்ன செய்யுறாளோ நினைப்புகள் அப்ப அப்ப வரும், வரும்போதெல்லாம் ௬டவே கவுஜையும் வரும், அமெரிக்காவிலே இருக்கிறவங்க யாராவது வளவளத்தாவை பார்த்தா நான் நல்லா இருக்கேன்னு சொல்லுவியளா?19 கருத்துக்கள்:

Unknown said...
This comment has been removed by the author.
Chitra said...

அமெரிக்காவிலே இருக்கிறவங்க யாராவது வளவளத்தாவை பார்த்தா நான் நல்லா இருக்கேன்னு சொல்லுவியளா?

......கண்டிப்பா சொல்றேன்!

a said...

நானும் சொல்லுறேன்.........

'பரிவை' சே.குமார் said...

Nalla irukku. aama ipadiththan kavujai ezhutha arampichchatha... chitra akka marakkama valavaththala parunga...

சைவகொத்துப்பரோட்டா said...

கதையின் நாயகியோட பேரு அம்சமா இருக்கே! இது (அனுபவக்)கதைதானே :))

அஹ‌ம‌து இர்ஷாத் said...

:))

ஹேமா said...

இந்த ஒரு மாசத்தில கொஞ்சமாச்சும் மாறியிருப்பீங்கன்னு நினைச்சு பதிவைப் பாத்து ஏமாந்திட்டேன் நசர் !

சந்தனமுல்லை said...

/"காக்கா,தோட்டத்திலே கத்தரிக்கா பிடுங்க போனவகிட்ட காதல் கடிதாசி கொடுத்து காலிலே விழுந்து என்னை ஏத்துகோன்னு கெஞ்சி என் மனசை ஆட்டைய போட்டவன் நீ, உனக்கு இதுவே பெரிய விஷயம் "/

:-))

இப்படி சோகக்கதையாகிடுச்சே....பவ்வ்வ்வ்வ்வ்

ILA (a) இளா said...

//அமெரிக்காவிலே இருக்கிறவங்க யாராவது வளவளத்தாவை பார்த்தா//
நாங்க ஏன்யா தனியா நடுராத்திரியில சுடுகாட்டுக்குப் போவனும்?

vasu balaji said...

போற போக்கப் பார்த்தா தினத்தந்தில சிந்துபாத் முடிஞ்சாலும் நீர் துண்டு போட்டு முடிக்கமாட்டீர் போல:)). மாட்டு முத்தம் மட்டும் ஆங்கிலத்துல ஒரு பதிவு போடும். அமெரிக்கால ஒன்னு இனி யாரும் நொங்கு திங்க மாட்டாங்க. இல்லின்னா உங்கள நொங்கெடுத்து ஓட்டி விட்றுவாய்ங்க. என்னா லொல்லு இது :)))

Anonymous said...

காக்கா வளவளத்தா கதை ஒரு காவியம்!

தலைப்பே கவுஜ சொல்லுதே.

R. Gopi said...

ஜோரா இருக்கு

வருண் said...

என்னங்க இது அநியாயம் முத்தம் பத்தி, முத்தவியல்ல இவ்ளோ ஆராச்சி செஞ்சிருக்கீக, ஆனால், 18+ ஒன்லி னு போடாமல் விட்டுட்டீக! கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க வேணாமா? :)

----------------

***அமெரிக்காவிலே இருக்கிறவங்க யாராவது வளவளத்தாவை பார்த்தா நான் நல்லா இருக்கேன்னு சொல்லுவியளா?***

அவகிட்ட சொன்னா, அவ, இன்னுமா நாசமாப்போகல "அந்த ஆளு" னு என்னை மொறைக்கிறா! :( கதையிலே பாதி மேட்டரை சொல்லல போல இருக்கு! அவ உங்களப் பத்தி என்னென்னமோ சொல்லி அழறாங்க! :( தப்பிச்சு வர பெருங்கஷ்டமாயிப் போயிடுச்சு> :)

சாந்தி மாரியப்பன் said...

காவியக்காதலில் இதுவும் ஒரு வகை.. நீங்க போட்ட துண்டை எல்லாம் சேத்துவெச்சிருந்தா ஒரு ஜவுளிக்கடலே உருவாகியிருக்குமோ :-)))))

ராஜ நடராஜன் said...

ம்ம்ம்!

(பதிவை இன்னும் படிக்கவேயில்லை:))

ராஜ நடராஜன் said...

//முத்தத்திலே ரெண்டு வகை ரெம்ப முக்கியம், அதுல ஒண்ணு மாட்டு முத்தம்?"//

ஆஹா!புதுக்கண்டு பிடிப்பு:)

Raja said...

பின்றீங்க ஜி

ILA (a) இளா said...

இது சீன் கதை எழுதி 18++++ போட்டிருக்கலாம்

Thenammai Lakshmanan said...

ஹீரோ ஹீரோயின் பேரு சூப்பர்.. வளவளத்தா., காக்கா.. இதுவரை இப்படி பேர் எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை..:))