Tuesday, August 3, 2010

கடிதம்

தலைப்பை பார்த்த உடனே இங்க பாருய்யா கால கொடுமைய, இவனுக்கும் வாசகர் கடிதம் வந்து இருக்கோன்னு நினைச்சிகிட்டு யாரவது வந்தா மன்னிக்கணும், இன்றைக்கு கடித ஆராய்ச்சி.


கடிதம்/அஞ்சல் என்பது பண்டை தமிழ் சொல்லா?, பண்டைய காலத்திலேயே புறாவை விட்டு தூது விட்டாங்க, ஓலை முலமாக கருத்து பரிமாற்றம் நடந்தது, வெள்ளைக்கார துரை மார்கள் நம்ம ஊரிலே இருந்த மன்னர்களுக்கு ஆப்பு அடிச்சி, துரைமார்களுக்கு நல்லா சொம்பு அடிக்க வைத்த நேரம்,சும்மாவே சொம்பு அடிச்சிகிட்டு இருக்குறாங்களே இவங்களுக்கு நல்லது பண்ணனுமுன்னு  இந்தியாவிலே தபால் நிலையம் என்று ஒரு திட்டம் கொண்டு வந்து, புறா, மான், மயில் இவங்களுக்கு எல்லாம் விடுதலை கொடுத்தாங்க(?), அதற்கு அப்புறமாத்தான் மக்கள் புறா, மான், மயில் கறி சாப்பிடுறதை விட்டுட்டு கோழி கறி சாப்பிட ஆரம்பித்தார்கள்(?).

         தமிழிலே மான் விடு தூது(?), மயில் விடு தூது(?), புறா விடு தூது(?) என்று இருந்த காரணத்தினாலோ என்னவோ மயில் தேசியப் பறவை ஆனது(?), மானை சுட்டா, நமக்கு சிறையிலே களி சுடுறாங்க.இன்னும் கொஞ்ச நாள்ல புறாவை சுட்டாலும், கம்பிக்கு பின்னால தள்ளி இரை போடுவாங்க.நல்ல வேளை கோழி விடு தூதுன்னு ஒண்ணும் இல்லை, இருந்து இருந்தா கோழி கறிக்கு சங்குதான். 

கடிதம் என்பது ஒருத்தரோட உணர்வை/கருத்தை பரிமாறுவது, அனுப்புனர் நீங்களா இருந்தாலும்,தன்னிலம் இல்லாமல் பொது நலன் கருதி நீங்க வேற யாரு பேரை போட்டுனாலும், அனுப்ப வேண்டியவருக்கு அனுப்பி விட்டீங்கன்னா, அவரும் அதை படிச்சிட்டு, விலாசத்திலே இருக்கிற நபருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுவார். நாமளும் ஒண்ணுமே தெரியாத மாதிரி நாம விலாசம் போட்டவர் வீட்டு முன்னாடி போய் சோதனை செய்தது கொள்ளலாம். 

அதாவது நாம் எழுவது  அனுப்புறவங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, ஆனா நாம் நினைச்சதை சொல்வது. இப்படித்தான் அந்த காலத்திலேயே நானும் எல்லோருக்கும் கடிதம் எழுதுவேன். கடிதத்தை நினைக்கும் போது ஒரு கவுஜ தன்னாலே வருது நான் என்ன செய்ய, கவுஜைப் படித்து விட்டு நீங்களும் என்னை தேடலாம் ஆட்டோவிலே 

என் அஞ்சலின்  
தாள்கள் மட்டுமில்லை   
என் பேனாவின் மை மட்டுமல்ல 
என் கையும் அல்லவா காலியானது
வாங்கின அடியிலே

கையை ஓடிச்ச அப்புறமா கடிதாசி போடா முடியுமா, உடனே கடிதத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, வானத்தைப் பார்த்து ஒரு கவுஞ்சரை கவுந்து விட்டார் இழப்பு உனக்கு தான் தமிழ், தெலுங்கு, மலையாள தாய்களேன்னு வேலை தேட ஆரம்பித்தேன்.

கணித்துறையிலே ஆணி பிடுங்க ஆரம்பிக்கும் முன்னே மின் அஞ்சல் முகவரி ஒன்று ஆரம்பித்து, அதை தினமும் பார்த்து கொள்வேன், யாரவது எனக்கு எதுவும் அனுப்பி இருக்காங்களான்னு, ஒண்ணுமே வரலைன்னா எனக்கு நானே ஒரு மின் அஞ்சல் எழுதி அனுப்பி விடுவேன், நண்பர்கள் யாரவது பேசினால் மச்சான் என் மின் அஞ்சல் முகவரிக்கு ஒரு மின் அஞ்சல் போடுடான்னு கெஞ்சி ஒன்னு அனுப்பி வைக்க சொல்லி இருக்கேன்.தப்பி தவறி யாரவது மின் அஞ்சலை எங்க இருந்தாவது forward பண்ணி இருந்தால், உடனே உலகத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன். வேலை கிடைத்ததும் பக்கத்திலே இருக்கிறவன்கிட்ட டீ குடிக்க போகணும் என்று கேட்கவும் மின் அஞ்சல் தான். அதற்கு பிறகு கடித தொடர்பு அறவே விட்டுப் போச்சி, பல வருடங்களுக்கு பிறகு கடிதம் அனுப்பும் வாய்ப்பு கிடைத்தது

    ஒரு முக்கியமான கோப்பை அனுப்ப வேண்டிய பொறுப்பு என் கிட்ட கொடுத்தாங்க, நானும் உடனே போய் பெடெக்ஸ் அலுவலகம் சென்று தேவையான படிவங்களைப் பூர்த்தி செய்தது, அங்கே இருந்த வெள்ளையம்மாவிடம் இது உலக மகா அவசரத்திலே போக வேண்டும் ஏதும் வழி இருக்கிறதா என்று கேட்டேன், அவங்களும் இருக்கிறது என்று சொல்லி, அந்த வகையைத் தேர்ந்து எடுத்து பணத்தைக் கட்டி விட்டு, அலுவலகம் வந்து சேர்த்தேன், வந்த அரை மணி நேரத்திலே, எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது, உங்களுக்கு ஒரு கடிதம் வந்து இருக்குன்னு, அப்ப எல்லாம் நான் கடை நடத்தலை, நடத்தி இருந்தா போய் வாங்கியே இருக்க மாட்டேன். எந்த கிறுக்கு பய இந்த நவீன காலத்திலேயே கடிதம் போடுறான்னு யோசித்து கிட்டே போனேன், கடிதத்தை பட்டுவாடா செய்பவர், என்னோட சொத்தை எழுதி வாங்குற மாதிரி என்னிடம் கை எழுத்து வாங்கிட்டு கடிதத்தை கொடுத்திட்டு போயிட்டாரு.

இந்த சம்பவம் நடந்த காலத்திலேயே நான் வாலிப புள்ளை,எனக்கு திருமணம் ஆகலை , நான் முன்னாடி போட்ட பல ஆயிரம் கடிதங்களுக்கு யாரோ ஒருத்தர் பதில் எழுதி விட்டார் என்று நினைத்து வேகமா திறந்து பார்த்தா, நான் அனுப்பிய கோப்புகள் எனக்கு அனுப்பி இருக்கு. கொலை வெறி கோபம் வந்தது, நேர வெள்ளையம்மாகிட்ட போனேன், நான் எப்போதுமே பெண்களிடம் கோபப் படமாட்டேன், அதுவும் கொஞ்சம் அழகா இருந்து விட்டால், அம்புட்டுதான், வாயிலே பல்லை தவிர வேற ஏதும் வராது, வெள்ளையம்மா கொஞ்சம் அழகா இருந்தாலும் நேர அவ கிட்ட போய் 

"என்ன வேலை பண்ணுறீங்க நீங்க, நான் அனுப்பிய கோப்பை எனக்கே திருப்பி அனுப்புறீங்க?"

 வெள்ளையம்மா உடனே "என்கிட்டே மனிச்சிக்கோ காக்க பயலே" ன்னு சொல்லிட்டு  என்னோட அஞ்சலை வாங்கி பார்த்து விட்டு 

"ஏய் எருவ மாடு, பெருநர் இடத்திலே இருக்கிறது யாரு பேரு?"

"என் பேரு?" 

"விலாசம்?"

"என்னோட அலுவலக் விலாசம்?"

"பின்ன உனக்கு அனுப்பாம, வேற யாருக்கு அனுப்புவா"

Sender,Receiver ன்னு சாதாரண ஆங்கிலம் எனக்கு புரியலை, ஏன்னா நான் இலக்கியவாதி, இலக்கிய ஆங்கிலம் தான் தெரியும், எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிய இருக்கு பாருங்க. இனிமேல கேள்வி கேட்ட என்னை கட்டை விளக்கு மாத்தை கொண்டு நாலு சாத்து சாத்துவா என்று கேள்வியே கேட்காம மறுபடி சரியான விலாசம் கொடுத்து விட்டு வந்தேன்.

 மின் அஞ்சல்ல ஆயிரம் வசதிகள் இருந்தாலும், அனுப்புனர்ல அடுத்தவன் பெயரைப் போட்டு அனுப்புற சுகம், மின் அஞ்சல்ல இல்லையேன்னு வருத்தமா இருக்கு,அதான் புலம்பிட்டு போகமுன்னு வந்தேன், மத்தபடி எல்லாம் நல்லா இருக்கு, இருந்தாலும் கொஞ்சம் வெயில் அதிகம் 


23 கருத்துக்கள்:

நாஞ்சில் பிரதாப் said...

ஆமா நசரேயன்... இப்பல்லாம் நம்ம ஒரிஜீனல் கையெழுத்து எப்படி இருக்கும்னே மறந்து போயிருச்சு...

Ananthi said...

////வேலை கிடைத்ததும் பக்கத்திலே இருக்கிறவன்கிட்ட டீ குடிக்க போகணும் என்று கேட்கவும் மின் அஞ்சல் தான்.///
ஹா ஹா..உண்மை தான், கம்ப்யூட்டர் வந்தாலும் வந்துச்சு... இப்பெல்லாம் யாரு லெட்டர் போடுறாங்க.. . :D :D

//Sender,Receiver ன்னு சாதாரண ஆங்கிலம் எனக்கு புரியலை, ஏன்னா நான் இலக்கியவாதி, இலக்கிய ஆங்கிலம் தான் தெரியும், எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிய இருக்கு பாருங்க///

ஹா ஹா.. முடியலங்க... செம அனுபவம் தான்.. :-))
ரசித்து படித்தேன்.. சூப்பர்...

வானம்பாடிகள் said...

தன்னிலம் இல்லாமல் பொது நலன் //

பினாமி பேருல கடிதம் மட்டுமில்லாம நிலத்தையும் ஆட்டய போட்டாச்சா:))

வானம்பாடிகள் said...

//அம்புட்டுதான், வாயிலே பல்லை தவிர வேற ஏதும் வராது,//

பொய் பொய். ஜொல்லு ஊத்துமே! டைகட்டினதே அதுக்குதானே.

வானம்பாடிகள் said...

/மின் அஞ்சலை//

இதாரு! மின்சார கண்ணா மாதிரி மின் அஞ்சலையா?

Chitra said...

மின் அஞ்சல்ல ஆயிரம் வசதிகள் இருந்தாலும், அனுப்புனர்ல அடுத்தவன் பெயரைப் போட்டு அனுப்புற சுகம், மின் அஞ்சல்ல இல்லையேன்னு வருத்தமா இருக்கு,அதான் புலம்பிட்டு போகமுன்னு வந்தேன், மத்தபடி எல்லாம் நல்லா இருக்கு, இருந்தாலும் கொஞ்சம் வெயில் அதிகம்

.....நிச்சயமாக, இது நீங்கள் எழுதின பதிவுதான். உங்கள் பெயரில் வேறு யாரும் எழுதல.... செம..... சிரிச்சு முடியல.

அமைதிச்சாரல் said...

//அனுப்புனர் நீங்களா இருந்தாலும்,தன்னிலம் இல்லாமல் பொது நலன் கருதி நீங்க வேற யாரு பேரை போட்டுனாலும், அனுப்ப வேண்டியவருக்கு அனுப்பி விட்டீங்கன்னா, அவரும் அதை படிச்சிட்டு, விலாசத்திலே இருக்கிற நபருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுவார். நாமளும் ஒண்ணுமே தெரியாத மாதிரி நாம விலாசம் போட்டவர் வீட்டு முன்னாடி போய் சோதனை செய்தது கொள்ளலாம்//

அப்பத்தானே கடிதம் கரெக்டா போய்ச்சேர்ந்துதான்னு தெரியும்.

Anonymous said...

கடைசீல சொன்னீங்க பாருங்க . வெயில் அதிகம்னு.
நீங்க சொல்லாமயே அப்படித்தான் இருக்கும்னு நான் நினைச்சேன் :)

சே.குமார் said...

//ஆமா நசரேயன்... இப்பல்லாம் நம்ம ஒரிஜீனல் கையெழுத்து எப்படி இருக்கும்னே மறந்து போயிருச்சு...//

Repeate Nanjil....

கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே இந்த லெட்டர்ணா... எழுத்துன்னு தெரியும்..
மற்றபடி முதல்வர் ஐயா எழுதும் கடிதம் பற்றி மட்டுமே தெரியும் ..
இங்கு புழுக்கம் அதிகம்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))

ஹேமா said...

கடித ஆராய்ச்சி யோசிச்சுப் பார்த்தால் மனசுக்குக் கவலையா இருக்கு.மணித்தியாலங்கள் தொலைபேசியில் கதைத்தாலும் ஒரு வரிக் கடிதத்தில் உள்ள பாசம் பதிவு சொல்ல முடியாதது !

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

அப்துல்மாலிக் said...

கூடிய விரையில் போஸ்ட்மேன் தேவையானு கவர்ண்மெண்ட் யோசிக்குதாம் :))))

இராமசாமி கண்ணண் said...

:)

கார்த்திகைப் பாண்டியன் said...

அவ்வ்வ்.. அண்ணே.. எதிரி நாட்டு சதி.. உங்க பதிவுக்கு ஓட்டு போட்டா வேர எங்கேயோ போவுது..

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஆமா நசர் பேனா பிடிச்சு எழுதியே வருஷக்கணக்கா ஆயிருச்சு..

அப்பாவி தங்கமணி said...

நான் வேணும்னா சம்பளத்துக்கு ஆள் போட்டு உங்களுக்கு ஈமெயில் மெயில் எல்லாம் அனுப்ப ஏற்பாடு செய்யறேன்.. ஏன் எப்படி எல்லாம்...? (ஜஸ்ட் கிட்டிங்... ) எப்படி இப்படி எல்லாம் மேட்டர் தேத்தரதுன்னு பேசாம நீங்க ஒரு கோச்சிங் கிளாஸ் எடுக்கலாம்... ஐ வில் join ...
(எல்லாம் சரிங்க... நான் கூப்பிட்ட தொடர் பதிவு ஏனுங்க சார் இன்னும் போடலைன்னு கேக்கலாம்னு தானுங்க வந்தேன்... இன்னும் பறவை முனியம்மா appointment கெடைக்கலையா... http://appavithangamani.blogspot.com/2010/07/blog-post_30.html)

நசரேயன் said...

அப்பாவி தங்கமணியாக்கா, விவரங்கள் தயார் ஆகிட்டு இருக்கு, விரைவிலே வெளிவரும். இன்னும் ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க

V.Radhakrishnan said...

:)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
ஏன்னா நான் இலக்கியவாதி, இலக்கிய ஆங்கிலம் தான் தெரியும்
//
தள : இது என்ன புதுசா இருக்கு....

ராமலக்ஷ்மி said...

இங்க பலரும் சொன்னதே. பேனாவில் எழுத வரவே மாட்டேன்கிறது எனக்கும்:(!

பதிவு சூப்பரு:)!