Sunday, August 15, 2010

வானம்பாடிகள்


பாலா அண்ணன் எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு என்பதாலையோ, அவரோட தலைமுடியிலே குருவி௬டு வச்ச மாதிரி வகுடு எடுத்து தலையை சீவி  இருப்பதாலோ அவரை எனக்கு பிடிக்காது, எனக்கும் அவருக்கும் பத்து வயசு வித்தியாசம் இருந்தாலும், எங்க ௬ட விளையாடும் போது எங்களுக்கு  சமமான நிலையிலே இருப்பார்.அவரு வயதைஒத்தவர்களிடம் பேசும் போதும், விளையாடும் போதும் அவங்களுக்கு ஒரு படி மேலையே
இருப்பாரு.இந்த ஒரு காரணத்திற்காகவே அவரை எனக்கு ரெம்ப பிடிக்கும்.


எனக்கு சின்ன வயசிலே கில்லி தண்டா, கோலி குண்டு, முத்து செதுக்கி(புளியங்கொட்டைகளை ஒரு வட்டத்தின் நடுவே வைத்து கல்லை சதுரமாக செதுக்கி அந்த வட்டதிற்குள்ளே இருக்கும் புளியங்கொட்டைகளை அடிப்பது).எல்லாம் விளையாட சொல்லிக்கொடுப்பார், இன்றைக்கு நீச்சலிலே ஒலிம்பிக் விளையாட்டிலே வாய்ப்பு கிடைத்து இருந்தால் பல தங்கப்பதக்கங்களை குட்டி சாக்கிலே அள்ளி வீட்டுக்கு கொண்டு வந்து இருப்பேன், அந்த அளவுக்கு கடப்பாரை நீச்சல், முங்கு நீச்சல், நிலா நீச்சல் இப்படி பலதரப்பட்ட வகைகளை எனக்கு சொல்லிக் கொடுத்தவர் பாலா அண்ணன்.

இன்றைக்கு கடையை திறந்து தமிழுக்கு சொம்பு அடிக்கிறதுக்கும் அவரு தான் காரணம், என்௬ட படிக்கிறவங்க எல்லாரும் கொத்தனார் வேலைக்கு போய் சம்பாதிக்குறாங்கன்னு நானும் படிப்பை விட்டு விட்டு வேலைக்கு போகலாமுன்னு நினைச்ச போது அவரு என்கிட்டே, தம்பி அண்ணன் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒழுங்கா படிக்காம சினிமா படம் பார்த்து தேர்விலே மட்டுமல்ல வாழ்க்கையிலும் தோல்வி அடைந்து விட்டேன்.

நான் பண்ணின தப்பை நீ பண்ணாதேன்னு அறிவுரை சொல்லி என்னை பள்ளிக்௬டம் வரைக்கும் கொண்டு வந்து விடுவாரு.அன்றைக்கு மட்டும் கொத்தனார் வேலைக்கு சென்று இருந்தால் நீங்கள் எல்லாம் எவ்வளவு நிம்மதியா இருந்து இருப்பீங்க, விதி யாரை விட்டது. என்னையப் பத்தி பேசியே சொல்லவந்ததை மறந்துட்டேன் பாருங்க.

பாலா அண்ணன் அவங்க வீட்டிலே கடைக்குட்டி, அவருக்கு இரண்டு அண்ணன்கள் உண்டு, அவரு அடிக்கடி வீட்டிலே அவங்க அண்ணன் மார்களிடம் திட்டு வாங்குவாரு, அவரு என்னைய மாதிரி சின்ன பசங்க ௬ட விளையாடுறார்னு, ஆனா அவரு அதை எல்லாம் கண்டுக்க மாட்டாரு, அவங்க அம்மாவுக்கு செல்லப் பிள்ளை அவரு. வேலை வெட்டி இல்லாம வீட்டை சுத்தி வாராருன்னு,அவங்க வீட்டிலே அவருக்கு தள்ளு வண்டி வாங்கி கொடுத்து பாத்திரம் வியாபாரம் பண்ண அனுப்பி விட்டாங்க.வார நாட்களிலே பாத்திர வியாபாரம் பண்ணினாலும் வார இறுதிகளிலே முக்கால் வாசி நேரம் எங்களுடன் செலவழிப்பார்.

அந்த காலகட்டங்களிலே எங்க ஊருக்கு இன்று இந்திய பாரம்பரிய விளையாட்டுகளுக்கு எல்லாம் சாவு மணி அடித்து ஊரை விட்டு அடித்து விரட்டிய கிரிக்கெட் விளையாட்டு அறிமுகப் படுத்தப்பட்டது,மட்டையையும் பந்தையும் எடுத்துக்கொண்டு வாலிப புள்ளைங்கள் எல்லாம் போன காலத்திலேயே, மட்டை வாங்க காசு இல்லாத காரணத்தினாலே எங்க விட்டு களி மட்டையை வைத்து எங்களுக்கு கிரிக்கெட் சொல்லி கொடுத்தார், அந்த மட்டையை உடைச்சதினாலே எங்க வீட்டிலே அதே மட்டையை வைத்து எனக்கு நாலு சாத்து விழுந்தது என்பது வேறு விஷயம்.இப்படியாக அழகாகவும் ஆர்ப்பாட்டமாகவும் சென்று கொண்டு இருந்த எங்கள் பயணம் திசை மாற ஆரம்பித்தது.

ஒரு நாள் பாலா அண்ணனை தேடி ஊரிலே உள்ள ஒரு பகுதியினர்  அலைகின்றதாக கேள்விபட்டேன், அந்த விஷயம் எங்க தெரு மக்களுக்கும் தெரிந்து அவர்களின் அவரை ஒரு புறமாக தேடினார்கள், இரண்டு கும்பல் கையிலேயும் அவர் சிக்கியதாக தெரியவில்லை, அதற்கு அப்புறமாக அவரை
ரெம்ப நாளாக காணவில்லை.

ஊரிலே இருந்தவர்கள் எல்லாம் அவரை தேடி அலைந்து களைத்து போய் அவரை மறந்தே விட்டார்கள், அவரோட அம்மாவைத்தவிர, சில சமயம் இரவு நேரங்களில் பாலாவின் அண்ணன் மார்கள் அவரின் அம்மாவை திட்டுவது மட்டும் காதிலே விழும், இருந்தாலும் என்ன காரணத்திற்கு அவர் வீட்டை விட்டு ஓடினார் என்று எனக்கு தெளிவாக விளங்கவில்லை.

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலா அண்ணன் பேச்சு ஊருக்குள்ளே அடிபட்டது அவனை தென்காசியிலே பார்த்தேன், ராஜபாளையத்திலே பார்த்தேன் என்று பிறர் சொல்ல கேள்விப்பட்பட்டேன், ஆனால் எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை, அவரு இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டதே மகிழ்ச்சி.

காலம் கடந்து நான் கல்லூரி செல்லும் நிலை வந்ததும், நானும் ஊரை விட்டு போனேன், அவரோட நினைவுகளோட, நான் கல்லூரியிலே இருக்கும் போது எதிர் பாராத அதிசயமாக பாலா அண்ணன் மீண்டும் வீட்டுக்கு வந்ததாகவும், வந்த இடத்திலே அவரது அண்ணன்மார்கள் அவரை அடித்து விரட்டி விட்டதாகவும் கேள்விபட்டேன், அவருக்கு பரிந்து பேசிய அவரோட அம்மாவுக்கும் அடி விழுந்தகாக கேள்விபட்டேன்.

பாலா அண்ணனின் நினைவிலேயும், விழுந்த அடியிலேயும் அவர்கள் அம்மா படுத்த படுக்கை ஆகிவிட்டார், அவங்க போடுகிற சத்தம் எங்க தெரு முனைவரைக்கும் கேட்கும், அதற்கு பின் அவர்களின் சத்தம் எங்க வீடு வரை௬ட கேட்கவில்லை, படுத்த படுக்கையான பாலா அண்ணனின் அம்மாவை கவனிக்க ஆள் இல்லாமல் அவர்கள் நிலைமை மேசமடைந்து எங்க பக்கத்து வீட்டை விட்டு மட்டுமல்ல இந்த உலகத்தை விட்டே போய் விட்டார்கள், நான் ஊருக்கு வந்து இருந்த சமயம் அந்த துயர சம்பவம் நடந்ததாலே,நான் இன்று பாலா அண்ணனை பார்த்து விடுவேன் என்று நம்பிக்கை இருந்தது.

எங்க ஊரிலே வயசானவங்க இறந்தால்,இருக்கும் வரை அவங்களுக்கு ஒரு வாய் கஞ்சி கொடுக்கலைனாலும், அவங்களுக்கு வெடிபோட்டு, மாலை,
மரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள், அதையேதான் பாலா அண்ணனின் அம்மாவிற்கு அவர் அண்ணன்மார்கள் செய்தார்கள். சர வெடிகளைப் போட்டு சந்தோசத்தை கொண்டாடும் நேரத்திலே பாலா அண்ணன் வந்தார், வந்தவர் வெடி போட்டவர்களை ஒரு பிடி பிடித்துவிட்டார்.

நீங்க எல்லாம் மனுசங்களா எங்க அம்மா செத்தது உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா, நாதாரி பசங்களா என்று சொல்லி விட்டு, சபையிலே சொல்லமுடியாத சில வார்த்தைகளை சொல்லியும் திட்டினார், அது என்ன என்று சொல்ல முடியாத காரணத்தினாலே உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன். அவரின் வருகை பலருக்கு அருவருப்பை தந்தாலும், ஊரிலே இருந்த பெரியவர்கள் அவர்களை சமாதனப் படுத்தி, அண்ணனின் தாயின்
இறுதி சடங்கு முடியும் வரை அமைதி காத்தார்கள்.

காரியம் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு வந்தனர், பலா அண்ணனும் வந்தார், அவர் வந்தவுடனே முனுமுனுப்பு ஆரம்பித்தது, முதலாக ஆரம்பித்தது பலா அண்ணனின் மூத்த அண்ணன்

"செத்து போன கிழட்டு கழுதையை மயக்கி, இருக்கிற சாதியை விட்டுட்டு கீழ் சாதி பெண்ணோட ஓடிப்போன ஓடுகாலி பய உன்  பேருல சொத்தைப் பூரா எழுதி வச்சிட்டு செத்து போய் இருக்கா"

"ஆனா ஒண்ணு, இந்த வீட்டிலே இருந்து ஒரு துரும்பை எடுத்தாலும் உன் கையை வெட்டிபுடுவேன்"   இது அவங்க சின்ன அண்ணன்.

ஊரு மக்கள் எல்லாம் இதை கேள்விப்பட்டு வாய் அடைத்து நின்னாலும், பாலா அண்ணன் நிதானமா.

"ஓடிப்போனவன், ஒரே அடியா போகாம திரும்பி வந்ததுக்கு ஒரே காரணம் நம்ம ஆத்தாதான், அவளே இல்லைன்னு ஆனதுக்கு அப்புறமா இந்த சொத்து எனக்கு கால் துசிக்கு சமம், என்னோட பங்கையும் சேத்து உங்க ரெண்டு பேருக்கும் நான் எழுதி வச்சிடுறேன்னு சொன்னதோட மட்டுமில்லாமல் அன்றே எழுதியும் கொடுத்து விட்டார், அவரு விடுதலைப் பாத்திரத்திலே கை எழுத்து போட்டு விட்டு கிளம்பும் போது சூரியன் மறையும் தருவாயிலே இருந்த ஒளி அவர் முகத்திலே பட்டு பொன்னிறமாய் மின்னியது.அன்று போன பாலா அண்ணனை இன்று வர நான் காணவில்லை, ஆனால் இன்றும் எனக்குள் வசிக்கிறார் தெய்வமாக.
26 கருத்துக்கள்:

முகிலன் said...

கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் சாரே?

முகிலன் said...

அய்யா ஓடி வாங்க, அம்மா ஓடி வாங்க.. எங்க தளபதி எழுத்துப் பிழையில்லாம ஒரு இடுகை போட்டுட்டாரு.. ஓடி வாங்க இந்த அதிசயத்தப் பாக்க வாங்க..

LK said...

@mukilan

neenga sonnatha repateren

Anonymous said...

@ mukilan

//காரியம் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு வந்தனர், பலா அண்ணனும் வந்தார், அவர் வந்தவுடனே முனுமுனுப்பு ஆரம்பித்தது, முதலாக ஆரம்பித்தது பலா அண்ணனின் மூத்த அண்ணன்

//

Find the spelling mistakes :)

நல்லவன் கருப்பு... said...

//முகிலன் said...
கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் சாரே?
//

ரிப்பீட்டுகிறேன் ....

//அவளே இல்லைன்னு ஆனதுக்கு அப்புறமா இந்த சொத்து எனக்கு கால் துசிக்கு சமம்,//
ஹி... ஹி... ஹி... இன்னொரு எழுத்துப்பிழை...

முகிலன் said...

அண்ணே உங்க பதிவைப் படிக்கிறதுக்குன்னே கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு வருவாய்ங்க போல

Anonymous said...

//இந்த ஒரு காரணத்திற்காகவே அவரை எனக்கு ரெம்ப பிடிக்கும்.//

//நான் கல்லூரியிலே இருக்கும் போது எதிர் பாரத அதிசயமாக //

நாங்கெல்லாம் தளபதி பதிவை ஒரு எழுத்து விடாம படிக்கிறொம். உங்களை மாதிரி மேலோட்டமா படிக்கறதில்லையாக்கும் :)

வானம்பாடிகள் said...

hi hi
//வார இறுதிகளிலே களிலே
எதிர் பாரத அதிசயமாக
மேசமடைந்து
முனுமுனுப்பு
ஆரம்பித்தது பலா அண்ணனின்
சமாதனப் படுத்தி,//

பிழையெல்லாம் ஒரு பக்கம். கதை நல்லாருக்கு.

//ரெம்ப, நெம்ப எல்லாம் பிழைல வராதுங்க சின்ன அம்மிணி//

நசரேயன் said...

பிழை கண்டு பிடிக்கிறவங்களுக்கு 1000 ரூபா பரிசு கிடைக்குமுன்னு அறிவிச்சி இருந்தா திவால் ஆகி இருப்பேனோ ?

நசரேயன் said...

அண்ணே நீங்க ஒருத்தரு தான் கதைக்கு கருத்து சொல்லி இருக்கீங்க

கே.ஆர்.பி.செந்தில் said...

எல்லா கிராமத்திலும் இது போலொரு கதை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

கதை நல்லாருக்கு. :)))

நட்புடன் ஜமால் said...

முத்து செதுக்கி - இது விளையாடியதுண்டு ஆனால் பெயர் புதிது


பாலா அண்ணனை பிடிக்காத மற்றும் பிடித்த காரணங்கள் - இரசனை.

rajasundararajan said...

முகிலன் said...
கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் சாரே?

இருக்கே: வானம்பாடி போல நிலபுலங்களை உதறி, வானின் வழி பாடுகிறாரே பாலா (வலைதள வழி கலை வளர்ப்பதைத்தான் சொல்லுகிறேன்).

ஒரு கலைஞனுக்கே உரிய வாழ்க்கையும் வீம்பும். அறியத் தந்ததற்கு நன்றி, நசரேயன்.

//அன்று போன பாலா அண்ணனை இன்று வர நான் காணவில்லை//

இன்று வரை சரி, இன்று என்ன தடை?

Chitra said...

முகிலன் said...

அய்யா ஓடி வாங்க, அம்மா ஓடி வாங்க.. எங்க தளபதி எழுத்துப் பிழையில்லாம ஒரு இடுகை போட்டுட்டாரு.. ஓடி வாங்க இந்த அதிசயத்தப் பாக்க வாங்க........ ஆமா...... ஆமா.... ஆமா.... எல்லோரும் கரகோஷம் எழுப்புங்கள்!

goma said...

ம் ம் ம் ம்

அப்துல்மாலிக் said...

கடைசி வரி முத்து படத்தின் ரெண்டாம் பாகமா

ஒரே டச்சிங்க்

Anonymous said...

ஆமா , வானம்பாடிகள் ஐயா மேல உங்களுக்கு என்ன கடுப்பு தளபதி. இப்படி புனைவெல்லாம் எழுதியிருக்கீங்க :)

க.பாலாசி said...

//அவரோட தலைமுடியிலே குருவி௬டு//

நல்லா பாத்தீங்களா?

கதை நல்லாதானிருக்கு.. கடைசியா டச்சிங்கும்...

சே.குமார் said...

//முகிலன் said...
கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் சாரே?
//

ரிப்பீட்டுகிறேன் ....

sakthi said...

மனதை நெகிழவைத்தது நசர் அண்ணா

கலகலப்ரியா said...

நல்லாருக்கு நசரேயன்...

கலகலப்ரியா said...

||வகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, சிறுகதை||

ஆறாம் வகுப்பில... மறக்க முடியாத நிகழ்ச்சிக்கு எழுதின கட்டுரையா நசரு... (அப்போதைக்கு இப்போ எழுத்துப்பிழை கம்மிதான்...)

அப்பாவி தங்கமணி said...

//இன்றைக்கு கடையை திறந்து தமிழுக்கு சொம்பு அடிக்கிறதுக்கும் அவரு தான் காரணம்//
இப்படி எல்லாம் பழிய அவர் மேல போட்டுட்டு தப்பிக்க முடியாது... (ஹா ஹா ஹா)

நெஜமாவே பெரிய மனசு தான் அந்த பாலா அண்ணனுக்கு

அமைதிச்சாரல் said...

என்னங்க பெரீய்ய்ய எழுத்துப்பிழை.. உங்க கதைக்கு முன்னால அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல.. நல்லாருக்குப்பா...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
பிழை கண்டு பிடிக்கிறவங்களுக்கு 1000 ரூபா பரிசு கிடைக்குமுன்னு அறிவிச்சி இருந்தா திவால் ஆகி இருப்பேனோ
//
வட போச்சே........